செவ்வாய் 01 2011

பொருப்பற்ற அரசு மருத்துவர்களும்,சிரத்தையற்ற அரசு மருத்துவ மாணவர்களும்

இந்தியாவில் தமிழ்நாட்டை வளர்ச்சி
அடைந்த முதல் மாநிலமாக்குவோம்
என்று ஆண்டவர்களும் ஆளுகின்ற
வர்களும் தவறாது கூறி வரும் நச்சு
பிரச்சாரம் போல், எமனிடமிருந்து
மீண்டுவந்த திருப்பதியில் சென்று
வேண்டிக்கிட்ட காணிக்கையை
துலாபாரமாக செலுத்திய தமிழகத்து
சூப்பர ஸ்டார் சொன்னது மாதிரி
 அந்த ஆண்டவனே வந்தாலும்
 தமிழகத்தை காப்பாற்ற முடியாது

அதுவும் இந்தியாவில் வாகன விபத்
தில் முதல் இடத்தை வகிக்கும்
தமிழகத்தில் வாகன விபத்தில்
சிக்குபவர்களை எந்த அரசு மருத்து
வர்களும் வாங்குற சம்பளத்திற்கு
பொறுப்புடனும் சிகிச்சை அளிக்க
மாட்டார்கள் படிக்கிற அரசு மருத்துவ
மாணவர்களும் சிரத்தையுடன்
பயில மாட்டார்கள் என்பதில்
எனக்கு ஏற்பட்ட அனுபவமே
சாட்சி.

முன்பொரு பதிவில் என் மரும
கன்.,என் உடன்பிறந்த அக்காளின்
மகன் டூவீலர் விபத்தில் சிக்கிய
தையும், அந்த விபத்துக்கு காரணம்
போக்குவரத்து விதியை மதித்து
பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும்
தீமையை பற்றி குறிப்பிட்டு இருந்
தேன். அந்த விபத்தில் சிக்கிய
என் மருமகனுக்கு அரசு ஜி.எச்
மருத்துவ மனையில் சிகிச்சை
அளித்த பொருப்பற்ற மருத்து
வர்களும். சிரத்தையற்ற அரசு
மருத்துவ மாணவர்களும்
சிகிச்சை அளித்த அநியாயத்தை
 உள்ளவாறே சொல்கிறேன்

14.5.11காலையில் விபத்து நடந்
தது. நடந்த இடத்தில் பெரும்
கூட்டமே கூடிவிட்டது. அருகில்
பஸ் நிலையம் இருந்ததாலும்
அரை மணிக்கு மேலாக போக்கு
வரத்து ஸ்தமபித்தது. எப்பவும்
போலவே போக்குவரத்து போலீசு
வேகமாக வராமல் வந்து ரோட்டில்
கோடு போட்டு படம் வரைந்து பின்
கள ஆய்வு மேற்க்கொண்டு கூடவே
போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது

விபத்தில் காயமடைந்த என் மருமகனை
வலியால் துடிக்கவிட்டு பிறகு 108 ஆம்பு
லென்ஸ் வண்டியில் ஏற்றி அரசு மருத்து
மனைக்கு செல்லப்பட்டது. போக்குவரத்து
விதியை மதிக்காமல் தான்மட்டுமே
வருவதாக நினைத்து அதி வேகமாக
 டூவீலரில் பற்ந்து வந்து வபத்தினை
ஏற்படுத்திய டாஸ்மாக்குடிமகன் லேசான
காயத்துடன் இருந்ததால் கட்டு போட்ட
மறுகனமே மருத்துவமனையிலிருந்து
சிட்டாக பறந்தோடிவிட்டார்.

மருமகனுக்கு வலது காலில் பலத்த
காயம்பட்டு எலும்பில் முறிவு ஏற்ப்
பட்டது. சிறிது காக்க வைக்கப்பட்டு
சிகிச்யைளிக்கப்பட்ட.து

ஒருமாதமாக உள் நோயாளியாக
இருக்க வைக்கப்பட்டு எலும்பு முறி
வு ஏற்ப்பட்ட எலும்பை ஒட்ட வைப்ப
தற்க்காக அறுவை சிகிச்சை செய்தனர்
மருமகனின் அப்பா அறுவை சிச்சைப்
பற்றி தெரிவித்தபோது அரசு மருத்துவ
மனையின் லட்சணம் பற்றி செவி வழி
யாக கேள்விப்பட்டாலும் வழிகாட்டு
வதற்கும் விபரம் தெரிந்து கொள்வதற்கு
போதிய வாய்ப்பும் பழக்க வழக்கங்கள்
இல்லாததால். தனியார் மருத்துவ மனை
யின் கொள்ளைக்கு என்னிடம் வசதி
இல்லததால் அரைகுறை மனத்துடனே
அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வேண்
டிய நிலமையாகிவிட்டது.

முதல் எக்ஸ்ரே படத்தில் எலும்பு முறிவு
ஏற்பட்டது .தெரிந்ததது. முதலில் எக்ஸ்
ரேபடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதை
எப்படிபார்த்து தெரிந்து கொள்வது என்பது
எனக்கோஎன் மச்சானுக்கோ தெரியவில்
லை..தெரிந்ததாகவோ காட்டிக்கொள்ள
வில்லை.பக்கதது பெட்டில் சிகிச்சை
பெருபவரை பார்க்க வந்தவரிடம் கேட்டு
தெரிந்து கொண்டோம். அவர்கள் கூறிய
படி பார்த்தால் தான் மூன்றுமுறை
அறுவை சிகிச்சை செய்தும் முதல்
முதலாக எடுத்த எக்ஸ்ரே படத்தைப்
போலவே எந்த மாற்றமின்றி இருந்
ததை கண்டுபிடித்தேன்.சிகிச்சை
அளித்த மருத்துவரிடம் கேட்டால்
நாள்நாளாக சரியாகும் என்றார்கள்

முதல் அறுவை சிகிச்சையில் மருத்
வம் பயிலும் மாணவர்களைவிட்டு
அறுவை சிகிச்சை செய்யவிட்டுள்ள
னர். முதல் சிகிச்சை தோல்வியென்று
இரண்டாவது சிகிச்சை செய்துள்ளனர்

முறிந்த எலும்பை ஒட்ட வைக்க அத
னுடன் பிளேட் அல்லது கம்பியை
வைப்பார்களாம். இவர்கள் அப்படி
எதுவும் செய்யாமல் புதிதான புதிய
வரவான் வளைத்தை வைத்து ள்ள
னர்.இதைப்பற்றி தெரியாத அறியாத
என் மருமகனிடமும் அவன் தந்தை
யிடமும்,இந்த வளைத்தை வைத்
தால் முறிந்த எலும்புகள் சீக்கிரம்
ஒட்டிக்கொள்ளும் என்று ஆசை
வார்தைகள் கூறி அந்த வளைத்
துக்குன்னு குறிப்பிட்ட பணத்தை
யும் பெற்றுள்ளனர்.

அவர்கள் செய்த மூன்று அறுவை
சிகிச்சைகளுக்கு்ம் தங்களுக்குகோ
நிர்வாகத்துக்கோ பாதிப்பு நேராத
வண்ணம் .அறுவைசிகிச்சையில்
ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு என்
மருமகனே பொருப்புஎன்று மரு
மகனிடமும் அவன்தந்தையிடமும்
ஒப்புதல் வாக்கு மூலம்கடிதம்
பெற்றுள்ளனர்.இது எப்படி இருக்
குது என்றால்.....................................

கட்டண சைக்கிள் காப்பக ஸ்சாண்
டில் நிறுத்தப்படும் சைக்கிள்கள்
காணாமல் போனாலோ,திருடு
போனாலோ சைக்கிள் நிர்வாகம்
பொருப்பல்ல என்கிற மாதிரியாக
இருக்கிறுது.அவர்கள் ஞாயப்படி
மூன்று அறுவை சிகிச்சையையும்
ஏனோ தானோ என்று பொருப்பற்ற
தனமாக செய்துள்ளனர். தவற்றை
சரி செய்யும் முயற்சியும் செய்யா
மல் தட்டிகழிப்பதிலே ஒவ்வொரு
மருத்துவரும் இருந்தனர்.

முதல் அறுவை சிகிச்சையில்
மருத்துவம் பயிலும் மாணவர்
களைவிட்டு அறுவை சிகிச்சை
செய்து தோல்வியில் முடிந்தது
எப்படி எனக்கு தெரிந்தது என்றால்
எலும்பு முறிவுக்கு(ஆர்த்தேர்)
பொருப்பான பெரிய்.....ய்....ய....ய
டாக்டரு...இவரு பேராசிரியராம்
இந்த பேராசீரியரு...இரண்டு
தடவை அறுவை சிகிச்சை செய்து
தோற்றுப்போன மாணவர்களை
கண்டித்தாராம். கண்டித்ததோடு
மூன்றாவது அறுவை சிகிச்சையை
மாணவர்களைவிட்டு செய்ய விடா
மல் தானே செய்தாராம்.இதை
மூன்றாவது அறுவை சிகிச்சைக்
காக அறுவை அரங்கில் இருந்த
போது என் மருமகன் முன் நடந்
தவை.

பேராசிரியரான இந்த பெரிய டாக்
டரும் மூன்றாவது அறுவை செய்
தும் சரியாக செய்யவில்லை. அய்ந்து
மாதங்கள் கழித்து சரி செய்யப்படாத
வலையம் மாட்டிய காலுடன் டிஸ்
சார்ச் செய்யப்பட்டு ஒருமாதம் கழித்
து வரச்சொன்னார்கள்.எனக்கு அந்த
மருத்துவர்கள் நம்பிக்கையில்லை
எடுத்த ஒவ்வொரு எக்ஸ்ரே படமும்
நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை

என்மருமகனும் அவனின் தந்தையும்
ஒருமாதம் கழித்துதான் பார்ப்போமே
என்று எனக்கு நம்பிக்கை ஊட்டினார்்
கள்.மருமகனுடன் சிகிச்சை பெற்ற
வர்கள் சிகிச்சை சரியில்லை என்று
தனியார் மருத்துமனைக்குசென்றதாக
கேள்விப்பட்டபோதும் எனக்கு உஷார்
தன்மை ஏற்ப்படவில்லை.


அரசு ஆஸ்பத்திரியில் வளையம் மாட்டியுள்ள கால்
சிகிச்சை.

ஒரு மாதம் கழித்து அரசு ஆஸ்பத்திரிக்கு
போயி எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது
ஏற்கனவே எடுத்த ஆறு எக்ஸ்ரே படத்
தில் இருப்பது போலவே எந்த மாற்றமும்
இல்லாமல் இருந்தது. நானும் உடன்
சென்றுதால், சிகிச்சை அளித்த டாக்டர்
ஒருவரிடம் சென்று காலில் மாட்டியுள்ள
வளையத்தை எப்பொ கழட்டுவிங்க என்று
கேட்டேன்.ஏழு,எட்டு மாதங்கள் ஆகும்.
என்றனர்வளையம் மாட்டும்போது
சொன்னமாதிரி ஆறு மாதங்களாகியும்
எலும்புகள் ஒன்று சேரவில்லையே
என்றேன்

கொஞ்சம் கொஞசமாகத்தான் சேரும்
என்றார்.இந்த மருத்துவர்களின் பேச்
சில் கொஞ்சம்கூட சுத்தம் என்பது
இல்லை. இருந்த மருத்துவர்களில்
யாரு டாக்டர்,யாரு மாணவன் என்று
என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை
எல்லோரும் ஒரே மாதிரியாக தெரிந்
தார்கள்

மருமகனிடம், உக்காந்து இருக்கிற
வர்களில் யாரு பெரிய டாக்டருனு
கேட்டேன். ஒருத்தரை சு ட்டி
காட்டினான்.அவரிடம் சென்று
கால்களில் வளையம் மிகவும் சிர
மாக இருக்கிறது கழட்டி விடுங்க
ளேன் என்றேன்

அவரோ எரிச்சலுடன் என்ன? சும்மா
சும்மா கேளவி கேட்டுகிட்டே இருக்கி
ங்க மாத்திரையை சாப்பிட்கிட்டே
வாங்க சரியா போகும் என்றார்

ஆறு மாசமா மாத்திரை சாப்பிட்டும்
சரியாகவில்லை என்றுதானே வளை
யத்தை கழட்டுங்கள் என்று சொல்கி
றேன்.அதற்கு பதில் சொல்லாமல்
மாத்திரை மாத்திரைன்னு சொல்லி
கிட்டு இருக்கீங்க என்றேன்

இங்கு சத்தம் போடக்கூடாது என்றார்
சரி,சத்தம் போடலே, வளையத்த எடு
ங்க.என்றேன் இன்னொரு மருத்துவர்
 மருமகனிடம் விபரத்தை கேட்டார்.
மருந்துகட்டும் இடத்திற்கு கூட்டிச்
சென்றுகாலில் துளையிட்ட கம்பிகளில்
மருந்தால் நனைத்த துணியை ஒவ்
வொருகம்பியைச் சுற்றி கட்டிவிட்டு
எப்போ வரச்சொன்னங்களோ அப்ப
வாங்க என்றுவிட்டு சென்றுவிட்டார்

1மணிக்கு மேல் ஆகிவிட்டது ஒருவர்
இருவர் மருத்துவர் மடடுமே இருந்தனர்
 தப்பாக அறுவை சிகிச்சை செய்தததோடு
அதை சரி செய்யாமல் ஏனோ தானோ
என்று பேசும் இவர்களை நம்மால்
ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள்
எது சொன்னாலும் போலீசு கேட்கும்
தப்பு செய்கிறவனை காக்கத்தானே
போலீசே இருக்கிறது.இவர்களிடம்
என்னதான் முறையிட்டாலும் கெஞ்சி
னாலும் இரக்கமற்ற பொருப்பற்றவர்
களாக இருப்பதை மற்ற முடியாது
என்று மனதில் பட்டது.

அன்று மாலையே எல்லா எக்ஸ்ரே
படத்தையும் எடுத்துக்கொண்டு தெரிந்
த நண்பர்களிடமும் தோழர்களிடமும்
காட்டி ஆலோசனை மற்றும் வழி காட்டல்
கேட்டேன். ஒரு தோழர் தன் வீட்டுக்கு
அருகிலுள்ள ஆர்ததோ கிளினிக் வைத்
துள்ளவரிடம் அழைத்துச் சென்றார்
அந்த மருத்துவரை பார்த்ததும் எனக்கு
ஆச்சரியமாகிவிட்டது.ஏனென்றால்
அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து
காலில் வளையம் மாட்டியது வரை
அந்த மருத்துவர்தான். அட,கொலை
காரா! என்று நினைத்து பீஸ் வாங்கி
கொ்ண்டாவது சரி செய்வார் என்ற
நம்பிக்கையில் அருகில் சென்றேன்

அந்த மருத்துவர்க்கும் எங்களைக்
கண்டதும்அதிர்ச்சி அந்த அதிர்ச்சிய
எங்களிடம்வெளிக்காட்டிக் கொள்ளா
மல் அழைத்துச்சென்ற தோழரிடம்
ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தார்
சிறிது நேரத்தில் பேசிக்கொண்டே
மருத்துவ கருவிகளை ஒதுங்க வைப்
பதில் தனது கவனத்தை செலுத்தினார்
அவர் கருவிகளை ஒழுங்கு படுத்துவ
தைக் கண்டதும் வளைத்தை கழட்ட
போகிறார் என்றே நானும் என் மரு
மகனு்ம நம்பினோம்..அந்த மருத்து
வன் மருமகனைப் பார்த்து சரியாய்
விடும் என்று திரும்பவும் பொருப்
பற்ற பதிலைத்தான் சொன்னார்.
கடைசியாக முடியாது என்று கை
விரித்துவிட்டு கன்சல்பீஸ் 100ரூ
பாயை வாங்கிக்கொண்டார்.
கொடுக்க வேண்டாம் என்றுதான்
முதலில் நினைத்தேன். தோழர்
அழைத்து சென்றதால் அவரின்
நன் மதிப்புக்காக அந்த நாயிக்கு
விட்டறிந்தேன். வெளியில் வந்து
அந்த கிளினிக்கின் விளம்பர போர்
டை பார்த்தபோது ஆர்தோ அரசு
மருத்துவர். உதவி பேராசிரியர்
என்று இருந்தது.நாய்க்கு பேரு
முத்துமாலையாம் அது மாதிரி
தெரிந்தது.

வேறு ஒரு தோழரின் மூலமாக
அவருக்கு தெரிந்த நன்கு பழக்க
மான அதே அரசு மருத்துவ மனை
யில தலைமை மருத்துவராக பணி
புரியும் மருத்துவரை அனுகியபோது
எக்ஸ்ரே படத்தையும் காலில் வளை
யம் மாட்டியிருப்பதையும் கண்டு
அறுவை சிகிச்சை செய்தவர்களை
கண்டபடி திட்டி தீர்த்தார்.முன்னமே
அனுகியிருந்தால் முறையாக சிகிச்
சை செய்து இருக்கலாமே என்றார்
இனி இங்கு சிகிச்சை செய்ய முடியாது
என்றும் எனக்கு தெரிந்த தனியார்
மருத்துவர் மூலம் சிகிச்சை செய்து
சரி செய்யலாம். அதற்கு நாற்பதாயிரம்
செலவாகும். பணம் செலவழிக்க
முடியுமா என்று என்னிடமும்
தோழரிடம் கேட்டார்..தோழர் என்
னைப் பார்த்தார். நான் சரியென்று
தலையாட்டினேன்.

மேஜையிலிருந்த லெட்டர் பேடில்
எழுதி கவரில் கொடுத்து மருத்துவ
மனை இருக்கும் இடத்தை விவ
ரித்தார்.எங்களுடன் உடன் வந்த
ஆட்டோ ஓட்டுநரிடம் திசையை
விவரித்தார். நானும் மருமகன்
கால் சுகமாக வேண்டும் என்ற
வைராக்கியத்தில்  இருந்ததால்
பணத்தைப் பற்றி அப்போது
கவலைப்படாமல் இருந்தேன்


அடுத்து ............

6 கருத்துகள்:

  1. படிக்கும் போதே வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. கொடுமை தான், இது மருத்துவ துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது, சில விதி விளக்கும் உள்ளது

    பதிலளிநீக்கு
  3. ச்சே படிக்கும் போதே கஷ்டமா இருக்கு,

    பதிலளிநீக்கு
  4. அரசுத் துறை(ரை) அலட்சியத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்களே அங்கு பணியில் இருப்பவர்கள்...

    மிக வருத்தமாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  5. can you pls make the fonts smaller and a good template.

    பதிலளிநீக்கு
  6. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
    வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...