சனி, மார்ச் 16, 2013

பின்னாலே மீசை வச்சவரு.................சிறுகதை..

பஸ்ஸை விட்டு இறங்கியதும் மண்ணுமுட்டிக்கு தெக்கு வடக்கு எதுவும் தெரியவில்லை. சிறிது நேரம் சூரியனையும் தரையையும் பார்த்தான் ஒன்னும் திசை தெரிகிறமாதிரி தெரியவில்லை.

இருக்கி கட்டிய வேட்டியை அவிழ்த்து திரும்பவும் கட்டிக்கொண்டான். வேட்டியின் முனையில் கட்டி இடுப்பில் சொருகியிருந்த தாளை எடுத்து காற்றில் பறக்கா வண்ணம்பிடித்துக்கொண்டு,ஒவ்வொரு கடையாக,  கடையில் நிற்கும் ஒவ்வொரு மனிதராக பார்த்துக்கொண்டே வந்தான்.
நகரத்தைப்பற்றி. நரகத்தில் இயங்கும் மனிதர்களைப்பற்றி அவன் புரிந்து கொண்டது இது.“ பொல்லாப் பயல்க..., கொஞ்சம் அசந்தா கோவணத்தை உருவி, அந்தக் கொவணத்தையே அம்மணமாக்குற பயல்க...... நரகத்து சனங்களிடம் எச்சரிக்கையாக............இருப்பதற்க்காக....... பார்ப்பதற்கு சுமராகவும் பேசும்போது அமைதியாக கேட்டு பதில் சொல்பவராக இருப்பவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கிராமத்து பெரியவர்கள் சொன்னதை நிணைத்துக கொண்டே .........வந்தான்.

அவன் நிணைத்ததுபோல்  மாட்டுத்தீவணம் விற்கும் கடையில் ஒருவர். அவரிடம் அருகில் சென்று கையெடுத்து கும்பிட்டு துண்டுச் சீட்டை நீட்டி வழி கேட்டான்.

அவர்,அந்த சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு எந்த ஊருன்னு கேட்டார்.

“ இவன் தன் ஊரைச் சொன்னான்”..

இவன் பெயரைக்கேட்டார்”.

இவன் தன் பெயரைச் சொன்னான். “என்பேரு மண்ணுமுட்டிங்க”!

“ஒங்கப்பேரு என்னங்க? அவர் பெயரைக்கேட்டான்.

“ புன்னாக்கு என்று சொன்னதும் நல்லதுங்க- என்றபடி தலையாட்டினான்.

“ புன்னாக்குகாரர் , வழியைச் சொன்னார்.

வடக்குப்பக்கம் கையை காட்டி,“அந்தா..........அங்க...தலயில உருமா கட்டி நாற்காலியில ஒக்காந்து இருக்காருல..............

“ஆமா, ஒக்காந்து இருக்காரு........

அவருக்கு பின்னால,மீசை வச்சவரு இருப்பாரு.....அவர்கிட்ட இந்த சீட்ட காண்பிங்க..........அவருதான் சீட்டுல குறிப்பிடப்பட்டதுக்கு சொந்தக்காரரு..ஃ

“நல்லதுங்க, அப்படியே! செய்றேன்ங்க

 தலையில் உருமா கட்டியவரை நோக்கி வந்தான். அவருக்கு அருகில் வந்ததும் சற்று தயங்கி உருமாகாரர்க்கு பின்னால் பார்த்தான் பின்னால் மீசை வச்சவரை காணவில்லை. வழி சொன்ன புண்ணாக்குவைப் பார்த்தான். புன்னாக்கு அங்கு இல்லை.

சிறிது நேர தயக்கத்துக்குப்பின் தலையில் உருமா கட்டியவரிடம் கேட்டான். அய்யா......ஒங்களுக்குப்பின்னால மீசை வச்சவரு இருந்தாரே அவரு........... என்று இழுத்தான்.

உருமா,இவரைப் பார்க்காமல் பேசா...மடைந்தையாக இருந்தார்.
மண்ணுமுட்டி. திரும்பவும் முயற்சித்தான்.அய்யா,ஒங்களுக்கு பின்னாடி மீசை வச்சவரு...............

அப்போதும்,உருமா பேசாமல் அமைதி காத்தார்.
சுற்றும் முற்றும் பார்த்த மண்ணாங்கட்டி, “ அய்யா.......... ஒங்களுக்கு பின்னால மீசை வச்சவரு இருந்தாருல, அவரு எங்கங்கய்யா......உரத்தக் குரலில் கேட்டதுதான்.

உருமா, கோபம் கொண்டது. “யோவ், ஒனக்கு அரிவு இறக்கா,எவனாவது பின்னால மீசை வப்பானா............மீசை என்னா பின்னாலியா மொழைக்கும் அவனவன் முன்னால மொளைக்குற மீசையை  வலுச்சுவிட்டுட்டு மழுக்குன்னு திரியுறானுங்க..................... இந்த லட்சனத்துல நீ...........வேற ,பின்னால மீசை வச்சவன கேட்க வந்துட்ட.........

மண்ணுமுட்டியால் பேசமுடியவில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக