வெள்ளி 03 2017

சி்ந்தித்தால் கோபம் வரும்....




்அ்ணணே.... அறிவாழி அண்ணே...வணக்கம் அண்ணே.....

வணக்கம் தம்பி இன்னிக்கு என்ன வில்லங்கமான  கேள்வி  கொண்டு வந்திருக்க....

பயப்படாதிங்கண்ணே......சிந்தித்ததால் உங்களுக்கு சிரிப்பு வர்ர மாதிரிசெய்தி கொண்டு வந்திருக்கண்ணே..... சொல்ரேன் கேளுங்க.....

.....................................

தினமும் பால் அருந்தினால் உடல் என்னாகும்ண்ணே.....

உன் உடல் வலிமை பெறும் தம்பி......
அப்படியாண்ணே.......அப்போ..பூனை ஏண்ணே இன்னும் வலிமை பெறவில்ல..

டேய்...... நான் செத்தேன்டா......!!

அட போங்கண்ணே.... இதுக்கு போயி  சாவாங்களா....???

சரி, அடுத்த கேள்விய கேளு....


தினமும் நீண்ட தூரம் நடந்தால் எடை குறையும்ன்னு சொல்றாங்களே... நிஜம்மாண்ணே.....

ஆமாடா.....வயிறு பெறுத்தவுக..உடம்பு பெறுத்தவுக  காலையில வாக்கிங் போறது எதுக்குன்னு நிணச்ச.......

யானையுந்தான் நீண்ட துதூரம் நடக்குதுலண்ணே அதுக்கு மட்டும் ஏண்ணே எடை குறையல......

ஏலே.....நீ வில்லங்கமாவுல கேள்வி கேட்குற......

இல்லண்ணே... நா..படிச்சத உங்கட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேணாம்ம்மண்ணே..

சரி சரி.....

அப்புறம்ண்ணே...தினமும் ரெண்டு மணி நேரம் நீச்சடித்தால் உடம்பு ஸ்லிம்மா ஆகுமாண்ணே.......

அது எப்படிடா ஆக முடியும்.....சென்னையே வெள்ளத்துல மிதக்குது...அங்க குந்தியிருக்கிற திமிலங்கலம் எல்லாம் ஸ்லிம்மா ஆகியில இருக்கனும்லடா 

அண்ணே..உங்களுக்கும் இருக்குதுண்ணே......

என்னாதுடா...... கொழுப்பு இருக்குதுங்கிறியா......

ஆமண்ணே... புல்லை மட்டுமே திண்ணும் ஆட்டுக்கு எப்படிண்ணே கொழுப்பு வந்திச்சு......

அத நம்ம நாட்டுல புல்லட் ரயில் விடப் போகும் புல்லட் பாண்டிகிட்டதாண்ட கேட்டு தெரிஞ்சிகினும்....சரி இன்னும் இருக்கா...அவ்வளவுதானா...?

ஏண்ணே...போர் அடிக்குதா......???

இல்லடா..... வயித்த கலக்குதுடா......

கடைசியா ஒண்ணே ஒன்னுண்ணே.......

சரி...சொல்லு......டா

தினசரி சூரியன் வருவதற்கு முன் எழுந்து எழுந்தால் சகல தெய்வங்களும்  நம்மல தேடி வருமாம்லண்ணே.....

போடா வெண்ண   ..தினமும் டீ கட திறப்பதற்கு முன்னமே வந்து குந்தியிருக்கிறமோ..... எந்த செல்வம்டா வந்திருக்கு  ஒன்னச் சொல்லுடா...
சரி..நம்மல விடு..... நியூஸ் பேப்பர் போடுறவன் நமக்கு முன்னாடி எழுந்து வீடு வீடா...கட கடையாய் ஏண்டா அலையுறான்....


ஏன்னு..சிந்திக்கனும்ண்ணே........

நீ சொல்றத..கேட்டு சிந்தித்தால்.....சிரிப்பு வருவதற்கு பதிலா.... கோபம்தாண்டா வரும்.......



இப்படியெல்லாம் சொல்லி நம்மல ஏமாத்திகிட்டு இருக்காங்கே..இல்லயாண்ணே......


சரியா..சொன்னேடா.......

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...