சனி 04 2017

வந்ததும் போனதும்...

அம்மா போயி
மம்மி வந்த
கதை மாதிரி


அம்மி போயி
மிக்ஸி வந்தது
உரல் போயி
கிரைண்டர்ரு வந்தது


மண்பானை மறைந்து
குக்கர் வந்தது

விறகு மறைந்து
கேஸ் வந்தது

மண் குடம்
தண்ணி போயி
பிரிட்ஜ்  பாட்டில்
தண்ணி வந்தது

மொத்தத்தில் இயற்கை
போய்...... மனிதனுக்கு

சர்க்கரை நோய் வந்தது
இரத்த கொதிப்பு வந்தது
மாரடைப்பு வந்தது
புற்று நோய் வந்தது
ஆஸ்துமா வந்தது
அல்சர் வந்தது

ஏமாளிகளின் நாட்டில்
கோமாளிகளின்  ஆட்சி
வந்தது..பின்
சாராயம் வந்தது.
ஒட்டுக்கு பிரியாணியும்
இரண்டயிரம் பணம்
வந்தது..இவ்வளவு
வந்தும் புத்தி
என்ற ஒன்று
மட்டும் மறைந்தே
போய்   விட்டது

6 கருத்துகள்:


  1. மோடி போய் யோகி வருவார் டும் டும் டும்

    பதிலளிநீக்கு
  2. ஏமாளிகளின் நாட்டில்
    கோமாளிகளின் ஆட்சியா
    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. ஒட்டுக்கு பிரியாணியும்,பணமும் வாங்கும் ஏமாளிகளின் நாட்டில் அம்மா வந்து பின்பு கோமாளிகள் ஆட்சி செய்வது உண்மை தான்.
    //சர்க்கரை நோய் வந்தது
    இரத்த கொதிப்பு வந்தது
    மாரடைப்பு வந்தது
    புற்று நோய் வந்தது
    ஆஸ்துமா வந்தது
    அல்சர் வந்தது//
    இந்த நோய்கள் எல்லாம் தங்களுக்கு வந்ததே கூட தெரியம முன்னோர்கள் அந்த நோய்களினாலேயே பாதிக்கபட்டு குறைந்த வயதில் முன்பு இறந்திருக்கலாம்.இப்போது தமிழகத்தில் உள்ள மக்கள் நீண்ட காலம் உயிர் வாழுகிறார்கள் பழைய காலத்தைவிட.
    பணத்திற்கும் பிரியாணிக்கும் ஓட்டு போடுவதை கைவிட்டால் தங்களது வாழ்கை தரத்தையும், வாழும் காலத்தையும் அதிகரிக்கலாம்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...