சனி 28 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-20

கிணற்றில் மின்சாரம் பாய்ந்து க்கான பட முடிவு





என்னது என்றைக்கும் இல்லாம  நிழலே  இல்லாத மரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறீர்கள்  அடிக்கிற வெயிலில் மண்டை எதுவும் குழம்பி போச்சா-என்று கேட்டபடி என் முன் வந்து நின்றார் அவர் ஒரு கணம் அமைதியாக அவரை ஏறிட்டு பார்த்துவிட்டு... அது ஒன்றுதான் குறை என்றபோது...“ ரெம்ப துயரம் அதிகமோ...என்றார்..

“ உங்களுக்கு தெரியாதா???ஃ 

“ தெரியும் , தெரிஞ்சும் என்னால் ..உனக்கு தெரியாதத என்னத்த சொல்லிட போறேன். உன் அனுபவத்துக்கு முன்னால் என்னால்  நிற்கக்கூட முடியாதுப்பா...”

“ இப்ப..என் முன்னாடிதானே நின்னுகிட்டு இருக்கிறீங்க.......”

இவ்வளவு நொம்லத்திலேயும் எப்படித்தான் உன்னால இப்படி பேச முடியுதோ  தெரியலப்பா....”

“வர்ர ஒவ்வொரு நொம்லத்தையே நிணச்சிருந்தா.... எனக்கு நொம்லம் வராமல் இருந்திடும்மா...அல்லது நொம்லம் கொடுக்கிறவன்தான்.. கொடுக்காமல் இருந்திடுவானா...???

“ மனுச பய இருக்கிறவரை நொம்பலம் இருக்குமப்பா......கோர்ட்டுக்கு போயியும்  உன் வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முடியவில்லை.பாத்தியா....???

என்ன செய்ய எனக்கு தீர்ப்ப தமிழில கொடுத்திருந்தன்னா.... என்ன உத்தரவுன்னு தெரிஞ்சு..அதற்கேற்ற மாதிரி போராடியிருப்பேன்.... இப்பத்தான் இங்கிலிசிலே இருக்கிறத தமிழ் படுத்தி வாங்கியிருக்கிறேன்.. அத படித்த பிறகுதான்  என்னவென்றே எனக்கு தெரிஞ்சு இருக்கு.... தீர்ப்புக்கு மாறா  மாநகராட்சி காரன்.... ் மேற்படி தெரு, மாநகராட்சி தெரு என்று தீர்ப்பாகியுள்ளது. தாங்கள் பாதாள சாக்கடை இணைப்பதற்கு எந்த தடையும்மில்லை.. மாநகராட்சி  உரிமம் பெற்ற பிளம்பர் மூலம் தாங்கள் சொந்த செலவில் இணைப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பறான்.... அவன் எப்பாடா  அந்த தெருவில் பாதாள சாக்கடை குழாய் பதித்து செப்டாங்கி கட்டி சிமெண்ட் தளம் போடுவேன்  என்று சிறப்பு மனு நீதி நாளில் மனு கொடுத்தா.....  முதல்லசொன்னதையே திரும்பவும் சொல்றாங்கே......சரி.. நமாலாச்சும் இணைப்பு கொடுக்கலாம் என்று குழாய் பதிக்க தோண்டினால்   பூசாரி மக. மருமக... அவனின் வப்பாட்டிக. மக மருமக, என் சித்தப்பனின் பொண்டாட்டி அவ மக மருமக...ன்னு பெறுங் கூட்டமே  கூடி வேல செய்யிறவன  பெரும்படியா பச்சை பச்சையா பேசி..அவர்களையும் மிரட்டி  100க்கு போன் செய்து இணைப்ப கொடுக்க முடியாம தடுத்துவிட்டாள்க..

தீர்ப்ப வந்த போலீஸ் காரன்கிட்ட காட்ட வேண்டியதானே.....

வந்த பொறுக்கி மகன்... கூட்டமாக நின்ற பொம்பளக மார்பகத்த பாத்து சொக்கி போயி..... போலீஸ் ஸ்டேசன்ல உத்தரவு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னான்

 அவன் சொன்ன கேட்டு போலிஸ் ஸ்டேசன்ல போயி ..தீர்ப்ப காட்டி பாதுகாப்பு கொடுங்கன்னு கேட்டா... கோர்ட்ல இருந்து பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி உத்தரவு வாங்கிட்டு வா..ன்னு விரட்டினான்.

, அடுத்தும் கோர்ட்டுதானா.....??

வேற வழி.... நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடனுமாம்.....

‘ஹா......ஹா....ஹா.....

ஏங் சிரிக்கிறீங்க..........இந்த அதிகாரிங்க மேல ஏகப்பட்ட அவமதிப்பு  வழக்கு இருக்கு   ..எந்த வழக்குக்கும் அவன் குஞ்சு பயந்து போக மாட்டுது.... உன் அவமதிப்பு வழக்குக்கா.....அவன் குஞ்சு பயப்படபோகுது...... இன்னக்கு  பேப்பர பாத்தியா.......இன்னிக்கு பேப்பர்ல... உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதிக புதுச்சேரி சபா நாயகருக்கு ஒரு தீர்ப்பாகவும், தமிழ் நாட்டு சபா நாயகருக்கு ஒரு தீர்ப்பாகவும் மனசாட்சிபடி தீர்ப்பு சொல்லியிருக்காங்க.....இந்த லட்சணத்தில உன் வழக்குல தீர்ப்பு சொல்லி... மாநகராட்சி அதிகாரிகள தண்டிச்சிருவாங்க..... அத நிணச்சுதான் சிரிச்சேன்......


ஆமாம்... நீங்க சிரிச்சது சரிதான்.....ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவனையே ஒன்னும் செய்யமுடியல...... இதுல் ஆளுகிற அதிகாரகள.... என்ன செய்யமுடியும்... அநியாயத்த எதிர்த்து நீதிக்காக போராடுபவர்களை அடக்கி ஒடுக்கத்தானே.. நீதிமன்றம் போலீசு, சிறைச்சாலை, எல்லாம் இருக்குது....

புலி பசிச்சா தான்யா மான்களை வேட்டையாடும்... நீ சொல்ற மனுச பயல்க... இருக்கான்னுங்களே.....அவிங்க  இருபத்தி நாலுமணி நேரமும்  வேட்டையாடுறாங்கே.....

உண்மைதான்..... சொந்த அனுபவமே அப்படித்தான் இருந்து வருகிறது....

்சரி..சரி......இந்த வேகாத வெயில்ல தனியா உக்காந்து என்னத்த யோசித்திட போற...வா..வீட்டுப்பக்கம் போகலாம்.....அப்படியே உனக்கு ஒரு எச்சரிக்கை செய்றேன்... போற பக்கம் கிணத்து தண்ணிய கண்டு  உடனே குதிச்சிடாத...உன்ன மாதிரி.. கிணத்தில குதித்து குளிச்சவங்கே ரெண்டு பேரு கரண்ட் அடிச்சு செத்து போனாங்கே..... நிதானமா... கவனமா ..தண்ணியல கரண்ட் பாயுதா பாத்திட்டு  அப்புறம்  குளிக்கப்பாரு.... வா...போகலாம்....

இவர் எச்சரிக்கை  செய்ய வில்லை என்றால்........நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்...


1 கருத்து:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...