புதன் 09 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-25

Related image




  காலையில்  எழுவதற்கு முன்னமே..என் வீட்டு வாசலில் சண்டையிடும் வசவு சத்தம் கேட்டது.  ஒருவித பதட்டத்தோடு எழுந்து வெளியே வந்தேன். என் தந்தையின் உடன் பிறந்த சகோதரன் என்னை வசை பாடிக் கொண்டிருந்தான். என் மருமகள், மருமகன்களை போகச் சொல்லி விட்டு.என் தந்தையின் தம்பியிடம் என்ன விசயம் என்றபடி வாசல் பகுதியிலிருந்து என் வீட்டை ஒட்டியுள்ள காலி இடத்து பக்கம் நகர்த்தி சென்று பேசினேன்.தெருவில் உள்ளவர்கள் அவரவர் வீட்டு வாசல்களில் நின்றபடியே எங்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.

இடத்து வழக்குதான் முடிந்து விட்டதடா.... எங்களுக்குரிய பங்கை பிரித்துக் கொடுடா...? என்றார். 

வழக்கு முடிந்துவிடவில்லை... என் மேல் வழக்கு போட்டவன் வாய்தாவிற்கு ஆஜராகததால் வழக்கு டிஸ்மிஸ் ஆகியிருக்கிறது. அவன் மாதிரிதானே நீயும்  இந்த வழக்கில் ஊடே புகுந்து என் மேல் வழக்கு போட்ட...... அவனுக்கு டிஸ்மிஸ் ஆன மாதிரிதான் உன் வழக்கும்..   டிஸ்மிஸ் ஆன வழக்கில். வழக்கு இடத்தை பங்கிட்டு தரச் சொல்லி தீர்ப்பு சொல்லியிருக்கா... உன் வக்கீல்கிட்ட விபரத்த கேட்டுட்டு வந்து அதன்படி பேசனும் ??அத விட்டுபுட்டு காலங்காத்தால வந்து  இம்சை  தரக்கூடாது..யா...... 

என்னடா...உங்கொப்பன் சம்பாரித்த சொத்தாடா......??

சரி, நீ சம்பாரிச்ச சொத்தாயா.....? நீ சம்பாரிச்ச சொத்தா இருந்தா..அதற்க்குண்டா ஆவணங்கள்  வச்சிருயிப்பேயில.... அத வச்சு வழக்கு போட்டு எடுத்துகய்யா.... உங்களுக்குன்னு ஒரு தடவ தீர்ப்பானா.... உங்கள மாதிரி ஆப்பீல் கிப்பில் எல்லாம் பன்னமாட்டேன்.. தீர்ப்பு வந்த மறுநிமிடமே துண்டக் காணோம் துணியக் காணோம்ன்னு  எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிப் போயிருவேன்...உங்களமாதிரி, இந்தக் தெருக்காரன் மாதிரி இம்சையெல்லாம் கொடுக்கமாட்டேன்..இத பலதடவ சொல்லிட்டேன்... கேட்க மாட்டுறிங்க....

அப்ப இடத்த பங்கிட்டு தரமாட்ட...

யோவ்..இது உங்கப்பன் சம்பரிக்கலையா.... என்அப்பன் சம்சாரித்ததுய்யா...எங்கிட்ட இவ்வளவ வீரா்ப்பா பேசுறீயே... உன் மூத்த பொண்டாட்டிய இந்த தெரு கோயில் பூசாரி வச்சிருந்தான்னு.. அந்த பூசாரிப்பயல. லேசாய கையில கீரிட்டு வந்ததுக்கு  திருச்சி ஜெயில இருந்தப்போ.... கடன்பட்டு வழக்கு நடத்தி உன்னய மீட்டு வந்தாரு பாரு... அந்தக் கடன கட்டமுடியாம செத்துப் போனவருதாய்யா எங்கப்பன்... ரெண்டாவது பொண்டாட்டியும் வேறு ஒருத்தனுடன் ஓடிப்போனப்ப.... என்வீட்டில வச்சு.. நா. சொன்னதையும் கேட்காமா உனக்கு சோறு  போட்டுச்சே...என் அக்கா. அத சொல்லனும்... என் அம்மாவின் இடுப்புல அடிச்சு கூனியா ஆக்கினேயே... அதச் சொல்லனும்..... என் அப்பன் கூட பிறந்தவன் என்ற காரணத்திற்காக.... அந்த பூசாரிக்காரனோட சேர்ந்துகிட்ட எனக்கு பல வகையிலும் இம்சை தந்தியே..அதுக்காக உடனே எங்கப்பன் சொத்த உடனே..உனக்கு பிரிச்சு கொடுத்திட்டுதான் மறு வேலை பாக்கனும் அப்படித்தானய்யா.... போய்யா......

டேய்... உன்ன வெட்டி கூறு போட்டுவேண்டா...?

மொதல்ல அதச் செய்.... உன் பொண்டாடிய கூட்டிட்டு ஓடினவனுக வெட்டி சாய்.... அது முடியலையா... ஓடிட்டு போயி  திரும்பி வந்து ஒன்னயும் உன் குடும்பத்த பத்தியும் தரக்குறைவா பேசி  சந்தி சிரிக்க வைக்கிற அந்தம்மா வெட்டிட்டு வா.... அப்புறமா வந்து உன் சொத்த புடுங்கின என்னய வெட்டி சாயி..... பொய்யா.....

டேய்  இந்த சொத்து உங்கப்பனோ..உங்கம்மாவோ... சம்பாரிக்கல....

சரிய்யா... நீ சம்பாரிச்சா வச்சுக்கோவோம்....  உன் சகல பூசாரி  உள்பட மூனு பக்கமும்  ஆக்கிரமிப்பு செய்திருக்காங்கல... அவிங்கல... என்ன செய்யப் போற... நான்தான் உனக்கு கிடைச்சேனா...... போய்யா..... உம் பொண்டாடி உனக்கு கஞ்சி ஊத்திரதுக்காக இப்படியெல்லாம் இம்சை கொடுக்காதிய்யா...
 நீங்க மூனு பேரும் சேந்து என் மேல வழக்கு போடுங்க.....உங்களுக்கு தீர்ப்பாகி நானு ஓடலேன்னா.... உன் தம்பி மகன் மாதிரி வீடு புகுந்து என்னை கொல்லுய்யா...  போதுமய்யா.... இதுக்கு மேல பேசுவதற்கு ஒன்னுமேயில்ல...
உன் பொண்டாட்டியும் மகனும் வந்தபிறகு.. நீ என்னிடம் சண்டை போட்டதை பாக்குறவங்க... சொல்லாமலா இருந்திருவாங்க.....

டே.ய்... ரெம்ப..ராங்கா  போர.... செத்து அழிஞ்சுிடுவ....

சரி..நா.. செத்து அழிஞ்ச  பொறவு..இந்த வீட்டையும் இந்த இடத்தையும் நீயே வச்சுக்க.... இதுக்கு மேல... என்னய்யா.... சொல்லனும்...

பெரிய வெண்ண மாதிரி பேசாம போடா......

சரிய்யா பேசலைய்யா..... போய்யா...


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...