செவ்வாய் 08 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-24


Image result for ஒரு வழிப்பாதை விபத்து


ஒரு வழி பாதையாக இருந்தாலும் இரு பக்கமும் பார்த்து செல்ல வேண்டும் என்ற புத்தி எனக்கு பட்ட பின்புதான் என் மண்டைக்கு உரைத்தது. இனி என்ன செய்ய  அதை கடை பிடித்துதான் ஆக வேண்டும்..இல்லையென்றால் அவர்களே! நல்லவர்களாக இருந்தால்..இழுத்துக்கோ...பறித்துக்கோ என்றில்லாமல் ஒரேடியாக மேல அனுப்பி வைப்பார்கள்.. கொடூரமானவர்களாக இருந்தால் உயிர் போகும்வரை நம்மை  அவதிப்பட வைத்து விடுவார்கள்... இந்த இம்சையையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் நாளை பின்னக்கி   நீங்கள் கவனமாக இருக்க இந்த இம்சைகள் உங்களுக்கு உணர்த்தும்.....

எனது தொழில் நிறுவனத்திற்கு வேலை செய்த கூலியாக காசோலை தருவார்கள் அதை வழக்கம்போல.. நடப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் உள்ள பெட்டியில் போடுவது வழக்கம்

அந்த வழக்கத்தின் படி  வங்கிக்கு சென்ற போது... ஒரு வழி பாதையில் இடை வெளியில்லாமல் வாகனங்கள் வந்த வண்ணமாய் இருந்தன...நான்தான் ரெம்ப பொறுமை சாலியாச்சே..... அதற்கேற்ப கிடைக்கும் இடைவெளியல் பதறியடித்து ஓட பிடிக்காமல்...வாகனங்கள் சென்று முடியும்வரை காத்திருந்தேன்... கடைசியாக காத்திருந்து அடுத்த பக்கம் செல்வதற்காக வண்டி வரும் திசையை பார்த்தபடியே சாலையை கடக்க முயன்போது எதிர் திசையில் இருசக்கர வாகனக்காரர் வந்தவர் கண் இமைக்கும் நேரத்தில் என் மீது மோதிஎன்னை கீழெ தள்ளிவிட்டு  ஓடி மறைந்து விட்டார்.

கீழே விழுந்து கிடந்த என்னை அருகில்உள்ளவர்கள் தூக்கி என்னை ஆசுவாசப்படுத்தி, ஒரு ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோவில் வரும்போதே... ஆட்டோகாரர் பேசியது எனக்கு சுத்தமாக கேட்கவில்லை... நான் வழக்கமாக சிகிச்சை எடுக்கும்  மருத்துவரிடம் சொன்னபோது காதில் பலமாக அடி பட்டு இருக்கலாம் ஊசி போட்டு மருந்து மாத்திரை தருகிறென் காதை அவர் சொன்ன மருத்துவரிடம் சோதனை செய்து  கொள்ளுங்கள் என்று சொன்னதை ஒரு வழியாக  சிரமமப்பட்டு புரிந்து கொண்டேன். வலது கண்ணம், வலது தாடை. மற்றும் வலது காதில் பலமான அடி விழுந்ததால் வலது பக்கமே பயங்கரமாக விங்கி இருந்தது. இதுவும் ஒரு வகை இம்சை என்பதால்...ஏற்றுக் கொண்டு.... இரண்டு நாட்கள் கழித்து  காது மூக்கு தொண்டை நிபுணரை சந்தித்தேன்.  

அவர் காதுக்குள் ஒளி விட்டு பார்த்தார்..  பிறகு ஒரு தனி அறையில் இரு காதகளிலும்  ஒலி வாங்கியை மாட்டி என்னை ஒலி பரிசோதனை செய்தார்.
பின் என்ன விபரம் என்று கேட்டதற்கு எனக்கு கேட்கும் திறன்  மோசமாகிவிட்டது. காதொலி கருவி வாங்கி பயன்படுத்துகள் என்று விட்டு காதொலி கருவி விற்கும் கடைக்கு ஒரு சீட்டு எழுதி கொடுத்தார்.


ஏற்கனவே, நான் செய்யும் தொழிலில் ஏற்படும் சத்தத்தின் காரணமாக எனக்கு எனக்கு கேட்கும் திறன் அரைகுறையாக இருந்தது... இப்பொது சுத்தமாகிவிட்டது. நான் தனியாக தொழில் தொடங்குவதற்கு முன்பு வேலை செய்த நிறுவனத்தில் என்னோடு வேலை செய்தவர்களை சந்தித்த போது அவர்களுக்க கேட்பு திறன் முக்கால்வாசி போய்விட்டது. என்னைப் பார்த்து பொறாமை பட்டார்கள்  .உனக்கு மட்டும் எப்படி காது கேட்கிறது என்று...

இப்போது அவர்கள் பொறாமை பட்டதுக்கு மாறாக எனக்கும் போச்சு... என்றாவது சந்திக்கும்போது...உன்க்கு முன்னே..எனக்கு பின்னே.. என்று ஊமை யாய் சொல்ல வேண்டும் என்று நிணைத்திருக்கிறென்.....

இனி என்ன என் வீட்டில்... அக்கா குறுடு.... தம்பி செவிடு என்று ஏளனமாக பேசுவார்கள்... பேசிக் கொள்ளட்டும் அவர்கள் யாரும் எனக்கு படி அளக்கவில்லையே....ஒரு வகையில் எனக்கு நிம்மதி... இந்தக் குறைகள் பிறவியிலிருந்து வரவில்லை.......இடையில் வந்தவை அதுவும் அறுபது வயதை நெருங்கிக் கொண்டு இருக்கிற போது வந்தவை... வயதான கோளாறு என்று  எனக்கு நானே  என் மனதுக்கு சொல்லிக் கொண்டேன்... 

அடுத்து என்ன இம்சை பட வேண்டியிருக்கிறதோ.... அதையும்தான் ஒரு கை இல்லை..இரு கையில் பார்த்து விடுகிறேன்  ...

3 கருத்துகள்:

  1. காலம் முழுவதும் தொடரத்தான் செய்கிறது என்ன செய்வது...

    பதிலளிநீக்கு
  2. இழப்பையும் வேதனையையும் எங்கள் கண் முன்னே வழக்கமான பாணியில் காட்டினாலும் அதை மிக எளிமையாக கடந்து செல்லும் உங்களின் புரிதல் வியக்க வைக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...