சனி 30 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-41



Related image







நிலக் கடலைக்கு
மடித்து கொடுத்த
துண்டு காகித்தை
படித்து அறிவாளியான
நண்பர்  தன்
அறிவை பரிசோதிக்க
எண்ணி என்னிடம்
அறிவை விரித்தார்

அய்...ரோப்பியர்களும்.
அமெ.....ரிக்கர்களும்
சன்பாத் என்ற
பெயரில் கடற்கரையில்
அரை அம்மணமாக
படுத்து கிடப்பது
ஏன்? எதற்கு?
என்பது தெரியுமா,,,?
எனக் கேட்டார்

பல தடவை
யோசித்தேன் அய்யாக்
கண்ணுவின் அரை
நிர்வாண போராட்டம்
தான் வந்தது
சொன்னால் என்
அறிவை மட்டம்
தட்டினால் என்ன
செய்வது... என்
அறிவை சோதிக்க
இப்படியொரு இம்சையா...?


 நான் கூ முட்டையாக
இருந்தாலும் நான்
அதை வெளிக்
காட்ட கூடாதல்லவா..

அதனால...நீங்கள்
 ஏன் ? எதற்கு?...
என்று தெரிந்தால்
தெரிவியுங்கள் தெரியாத
கூ........முட்டைகள்
தெரிந்து கொல்லட்டும்
என்றேன்...அவர்
என்ன சொன்னார்


Image result for அரை நிர்வாண போராட்டம்

4 கருத்துகள்:

  1. எனக்கூ.... தெளியாது நண்பரே... ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
  2. நான் தெரிந்து கொண்ட அளவில் அய்ரோப்பியர்களும் அமெரிக்கர்களும் சன்பாத் என்ற பெயரில் கடற்கரையில் இருக்க விரும்புவது, அவர்களது கால நிலை. பெரும்மளவு காலம் கடும் குளிரில்வாழும் அவர்கள் தங்களது வெள்ளை தோலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். வெள்ளை தோல் தான் உயர்வானது என்பது தமிழர்களின் பழமையான மூடநம்பிக்கை மட்டுமே.
    அய்யாக்கண்ணு போராட்டும்.
    அய்யாக்கண்ணு நடாத்திய அரைநிர்வாண போராட்டம் கண்டிக்கபட வேண்டியது அநாகரிக செயல்.
    அரபு நாடுகளில் கடற்கரையில் பெண்கள் பர்தாவுடன் தானாம் செல்ல வேண்டும். பர்தா இல்லாவிட்டால் ஆண்கள் பார்த்துவிடுவார்கள் அதனால் அது தடை செய்யபட்டது என்று கடவுள் அல்லாஹ் அறிவுறுத்தல் தந்து இருக்கிறாராம், அதனால் அய்ரோப்பிய அமெரிக்க பெண்கள் கடற்கரையில் அனுபவிக்கும் சுதத்திரம் தங்களுக்கு வேண்டும் என்பதிற்காக ஆண்கள் அற்ற கடற்கரை பகுதி ஒன்றை தங்களுக்கு ஒதுக்கி தரும்படி இஸ்லாமிய அரபு பெண்கள் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகளின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ்உடலுக்கு தேவையான வைட்டமின் டீ உணவுப் பொருள் மூலம் கி டைக்காது என்பதால்..வெட்டமின் டியை சூரிய வெளிச்சம் மூலம் உடலில் பட்டால் அன்றி வேறு எந்த வகையிலும் வைட்டமின் டி பெற முடியாது என்பதால் அதனை ப் பெற அய்ரோப்பியரும் அமெரிக்கரும் வைட்டமின் டியை பெறவே.. கடற்கரையில் அரை அம்மணமாக படத்துக்கிடக்கிறார்கள் என்றார். பின் நண்பர்

      நீக்கு
    2. தகவலுக்கு நன்றி வலிப்போக்கர்.
      சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாக பெறும் ஐரோப்பியர்கள், கடற்கரையில் வெயிலில் காய்ந்து வைட்டமின் டீ யை பெற்று கொள்ளும் தேவை ஒன்று இருக்கிது தான்.ஆனால் அவர்கள் அதை மிகவும் விரும்பி செய்கிறார்கள்.அதை இப்படியும் சொல்லலாம் எனக்கு பழங்களில் நம்பர் ஒன் பிடித்தது மாம்பழம். நாம்மவர்கள் பலர் மாம்பழம் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். மாம்பழத்தில் நல்ல வைட்டமின்கள் உண்டாம். ஆனால் அந்த மாம்பழத்தில் வைட்டமின்கள் இருக்கின்றன என்பதிற்காக தான் நாம் பலர் மாம்பழம் சாப்பிடுவதில்லை.
      ஆஸ்திரேலியாவில் போதுமான வெயில் இருந்தாலும் காடுகள் எரியுமளவிற்கு இருந்தாலும், அங்கே ஐரோப்பியர்கள் கடற்கரையில் படுத்து வெயில் காய்கிறார்கள்.

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....