திங்கள் 16 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-46




Image result for சேலை கட்டிய மாதர்
படம் மாதிரிக்காக




அவரை யாரென்று
தெரியவில்லை ஆனா
பார்த்த முகமாக
தெரிகிறது .எங்கே
என்பது மட்டும்
உடனே நிணைவுக்கு
வரவில்லை. சில
மணி நேரமோ
அல்லது சில
நாட்கள் கழித்தோ
அவர் இன்னாரென்று
தோன்றும் போது
அய்யோ நான்
பேசாமல் இருந்து
விட்டேனே என்று
ஒரு பரிதவிப்பு
வந்து குடையும்
பிறகு அதுவும்
மறந்து போகும்

அந்த பேருந்து
நிறுத்த இருக்கையில்
அமர்ந்து இருந்த
போது என்னருகில்
 வருவதற்கு சற்று
முன் தன்மாறாப்பை
சரி செய்து கொண்டபடியே
புன்னகைத்தார் யாரென்று
புரியாத நிலையில்

அவரின் புன்னகை
எனக்குத்தான் என்று
தெரிந்த  அடுத்த
நொடியில் நானும்
இயல்பாக புன்னகைத்தேன்.

அருகில் வந்தவுக
நல்லா இருக்கீங்களா?
என்ற வினாவுக்கு
சட்டென்று  நல்லா
இருக்கிறேன் என்று
பதிலுரைத்த பின்
நீண்ட மவுணம்.

அந்த மவுணத்தின்
இடை வெளியில் வந்து
நின்ற  பேருந்தில்
ஏறி இருக்கையில்
அமர்ந்து கையையும்
தலையையும் ஒருசேர
ஆட்டி போய்
 வருகிறேன் என்று
விடைபெற்றார் அவுக
தலை மறைந்த
பிறகு என்தலை
இப்படி உருண்டது

அவுக யாரா..
இருக்கும் நம்முடன்
வேலை பார்த்தவுகளா?
உறவுக்காராங்களா..?இல்ல
நண்பர்களின் துணையர்களா.??
அவுங்களா இருக்குமோ..???
இவுங்களா ...இருக்குமோ...????

அய்யோ....அய்யோ...!!!!!!!!!!!

2 கருத்துகள்:

  1. வந்தவுக போயிட்டாக நீங்கதான் தலையை பிச்சுக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  2. யார் யாரோவாக நகரும் உலகில்..
    யாரென்றே அறியாதவராகினும் சிரித்து வழியனுப்பி வைப்பது நல்லதே...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...