வியாழன் 25 2021

முதல் சந்திப்பும்..கடைசி சந்திப்பும்.............

 



 முதல் சந்திப்பு- 

 ஙே....அய்யா....உங்கம்மா...நல்லாயிருக்காங்களா...?

அம்மாவா...!  நல்லா இருக்காங்க அம்மா... நடமாடிகிருவாங்க.... எனக்கு அவுங்கதான் சமைச்சு  போடுறாங்கம்மா...  எங்கம்மாவ உங்களுக்கு எப்படி தெரியும்....


நல்லா கேட்டடீய்யே அய்யா... உங்கம்மாவும்..நானும் ஒரே இடத்தில வேல பார்த்தோம் அய்யா...  உன்னையும் தெரியும் அய்யா.... நீதான் என்ன மறந்திட்ட.. பாவம்..உனக்குதான் கல்யாணம் முடிக்கா விட்டிருச்சு. அது ஒரு குறைதான் மற்றபடி. தங்கமான அம்மாவுக்கு தங்கமான மகன்ய்யா நீ....... நானும் மூனு பெத்து போட்டு இருக்கனே.......

 ஏன்? என்னாச்சும்மா...!!

 மகன்க ரெண்டு பேரும் பொண்டாட்டி பேச்சக் கேட்டு என்னோட சண்டைக்கு நிக்கிறானுங்க.... மகளோ...  காசு..காசுன்னு கேட்டு படுத்தி எடுக்குறா.....

உங்களுக்கு என்னம்மா... வருமானம் வருது...? 


என் வீட்டுக்காரரின் குடும்ப பென்சன்  வாங்குறேன்ய்யா....


ஆ....மகன்கள் சண்டை செய்வதும், மக ..படுத்தி எடுப்பதும் உங்க பென்சன் பனத்துக்குத்தான் அம்மா.... கடைசி காலத்துல நிம்மதியாக இருக்க விடமாட்டாங்க.... உங்க நிம்மதிக்கு நான் ஒரு வழி சொல்லட்டும்மா அம்மா...?

” ஆ...ஆ...சொல்லுய்யா.....!  


வேற ஒன்னும் இல்லம்மா...நீங்க கொஞ்சம் தியாகம் பன்னனும். வாங்குற பென்சன்ல.. பாதிய நீங்க  மகன்களுக்கும் மகளுக்கும் கொடுத்து பாருங்கம்மா.. கடைசி காலமாச்சு... பெத்து போட்டு வளத்து ஆளாக்கியாச்சு...அதுகட்ட போயி இனி வசவ வாங்கிட்டு .......யோசித்து பாருங்கம்மா......


சரி..... பாக்குறேன்... உங்கம்மாகிட்ட பாக்கியம் கேட்டேன்னு சொல்லு... ஒரு நாளைக்கு வீட்டுக்கு.... வந்து பாக்க வர்ரேன்னு சொல்லு...மறந்திடாதய்யா....


சரிம்மா..கண்டிப்பா  சொல்றென்ம்மா.....


இரண்டாவது சந்திப்பு-

யேய்..... அய்யா... இங்க வாங்க..... அன்னிக்கு உங்கம்மாவு பத்தி கேட்டதுக்கு என்ன சொன்ன.... நடந்துகிரவாங்க... உனக்கு சமைச்சு போடுறாங்கன்னு சொன்னயில்ல..... ஏய்யா.. பொய்... சொன்ன.......

அம்மா கோவிக்காதீங்க...... ஒங்க மனசு வருத்தப்படக்கூடாதுன்னுதான் அப்படி சொன்னேன்.. வயசான காலத்துல...கவலைப்படக்கூடாதல்லவா...!! ஆமா.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சது....ம்மா.....


என் மகனும் மருமகளும்தான் சொன்னாங்க.... உங்கம்மா   தங்கமான மகனான உன்னை விட்டுட்டு செத்து போயிட்டாங்கன்னு.....


என்ன செய்யிறது அம்மா.... பிறந்ததலிருந்து சாகிற வரைக்கும் ஓடா உழைத்து தேஞ்சு போனவங்க... என்னைய மாதிரியே.. என் அம்மாவும் அவுங்க அப்பா என் தாத்தா இறந்திட்டாங்க...என் அம்மாச்சியும் என் அம்மா  என் அப்பாவ கல்்யாணம் முடிக்கிறதுக்கு முன்னமே இறந்திட்டாங்க....அதோடு கட்டிக் கொடுத்த மக...  என் அக்காவுக்கு..பாதி வாழ்க்கையில கண் தெரியம போச்சு.. என் அம்மாவுக்கு ஒரே  ஆறுதல், வாழ்க்கை பிடிப்பு  நான்தானம்மா..  . நானும் உங்க மகன மாதிரி கல்யாணம் பன்னியிருந்தா.... தங்கமான அம்மாவுக்கு தங்கமான மகனாக இருந்திருக்க முடியாதில்லம்மா....... கவலப்படாதிங்கம்மா..ரேசன் கடையில மண்ணெண்ண ஊத்துறாங்க.. அத வாங்க போயிட்டு வர்ரேன்ம்மா.............

கடைசி சந்திப்பு-

ஒரு மாதம் கழித்து ரேசன்கடையில் மண்ணெண்ண வாங்க  செல்லும்போது.. போன மாதம்  தங்கமான தாயின் தங்கமான மகனை சந்தித்த பாக்கியம் அம்மாவின் படம் போட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கண்ணில் பட்டது.அன்று மாலையில்  ஐஸ் பெட்டியில் உறங்கி கொண்டிருந்த பாக்கியம் அம்மாவின்  பூத உடலுக்கு மலர்மாலை வைத்து கால் பாகத்தில் நின்று வணங்கி இடுகாடு வரைக்கும் சென்று வழியனுப்பி வைத்தான் தன் தங்கமான தன் அம்மாவை சந்திக்க......


3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...