ஞாயிறு 11 2021

கோபத்தை அடக்கிய விதம்...!!!!




 அடங்காப்பிடாரி குப்பையை எரித்து கொல்ல முயன்ற நிகழ்ச்சியால் பயங்கரமான  ஆத்திரமும் கோபமும் வந்தது. சங்கி போலீசுகிட்ட புகார் செய்தால் ஞாயம் கிடைக்காது. என்பது அப்பட்டமாக தெரிந்த போதிலும் கோபமும் ஆத்திரமும் நோஞ்சானாக ஆகிப்போன என் மனதில் எரிந்து கொண்டு இருந்தது. போதாக்குறைக்கு ..நாலாயிரம் ரூபாய் பெறுமான வேலையை ஒருவாரமாக செய்து கொண்டு இருந்தார்கள் மூத்த மருமகனும் வேலை செய்து வருபவரும்....

அடுத்த வேலைக்கு பேப்பர் வாங்க மூத்த மருமகன் காசு கேட்டு  நசச்சரித்தவரிடம்..பணம் எதுவும் என்னிடமில்லை. எல்லாம் மருத்துவ செலவுக்கே போய்விட்டது... கடன் எதுவும் கிடைக்காது. அதனால் செய்யிற வேலையை விரைவாக முடித்து. அதில் வரும் பணத்தை அடுத்த வேலைக்கு பயன் படுத்திக் கொள் என்று சொல்லியும்.. நச்சரித்த கோபமும். வீட்டுக்கு அரிசியில்லை சிலிண்டர் இல்லை என்று மருமகளின் புலம்பலும் சேர்ந்து என் மனதில் கோபத்தையும் ஆத்திரத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.


இந்த நிலையில் பல தடவை கீழே விழுந்து பழுதாகிபோன போனும் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு காதும் சரியாக கேட்கவில்லை..உடலும் வேலை செய்யும் நிலையில் இல்லை... 

அந்தப் பக்கம் கொலை வெறி, 

இந்தப் பக்கம் நச்சரிப்பு.

இன்னொரு பக்கம் புலம்பல், 

என் பக்கம் ஆத்திரமும் கோபமும் கூடவே மன உளச்சல்.,அழுத்தம் 

  என்ன செய்ய......??? ரெம்ப நேரமாக யோசித்தேன் மன அழுத்தம் அதிகரித்ததே ஒழிய மன அமைதி பெறுவதற்கு வழி தெரியவில்லை..


திடிரென்று எந்த முன் யோசனையுமில்லாமல்........


யாருக்கும் பாதகமில்லாமல்  ..பழுதாகி போன செல்போனை ஆத்திரமும் கோபமும் தீரும்வரை  யாரும் பயன்படுத்த முடியாத  அளவிற்கு சுக்கு சுக்காக உடைத்து விட்டேன்..

.இதுவரை என் பக்கம் நச்சரிப்பு, புலம்பல்..ம்ம்.. மூச்சு இல்லை.....

அந்தப் பக்கம் அடங்காபிடாரிதான் போன் பேசியபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள்.....விக்கிரமாதித்தி...போல........


இப்ப வரைக்கும் மனம் அதைியாக இருக்கிறது. இப்படியே இருக்க கூடாதா ஒரு வித ஏக்கமும் வந்து போகிறது.




4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...