செவ்வாய் 13 2021

நலம் விசாரிக்க வந்தவர்களிடம்

 


எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்துவிட்டது... உடம்புக்கு முடியாமல் இருந்ததும் ஓடுகாலியின் கொலை வெறியும்...  வந்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரிடமும்  எனக்கு 12 சென்ட் சொத்து வந்த விதமும். என் தந்தையின் சகோதரர்களுக்கு எந்தவித பாத்தியமும் இல்லை ஆக்கிரமிப்புதான் என்பதை விளக்கிவிட்டேன். எவரும் மறுத்து பேசவில்லை...

அந்த விபரம் தங்களுக்கும்.

நான் குடியிருக்கும் வீடும். என்தந்தையின் சகோதரர்கள் இருக்கும். வீடும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடமும் என் தந்தையை பெற்ற தாத்தாவுக்கு சொந்தமானதல்ல... பிள்ளையில்லாத தூரத்து உறவினரான தாத்தாவின் சொத்து. அவர் என் தந்தையை மட்டும் மகனாக வளர்த்து ஆளாக்கியதால்...அதன் மூலமாக வந்த சொத்து.... என் தந்தையின் பூர்வீகம் கோவில் பாப்பாகுடி.... என் தந்தைக்கும் என் தந்தையின் சகோரதரர்கள் மூவருக்கும் அடிக்கடி சண்டையிட்டு என் தந்தையையும் என் தாயையும்அடித்து விரட்டி விடுவார்கள். புதிதாக திருமணமான என்தந்தையும் தாயும்  உறவினர்கள் வீட்டு திண்ணையில் படுத்து உறங்குவார்கள்.  இதை கேள்விப்பட்ட  12 செண்ட்க்கு சொந்தக்காரான ..ஜமீனுக்கு குதிரை வண்டி ஓட்டியதால் குதிரைக்காரர் என்று பெயர் பெற்ற குதிரைக்கார தாத்தா வந்தவுடன் என் தந்தையின் தம்பிமார்களிடம் சண்டையிட்டு.... 

என்தந்தையையும் தாயையும்  ” நான் அப்பவே சொன்னேன். . கேட்டிங்களா” என்று தந்தையையும் தாயையும் கையோடு கூட்டிவந்து இப்போது நான் இருக்கும் இடத்தில் கூரை வீட்டைக்கட்டி...என் தந்தையிடம் ”இனிமேல் நீ எங்கேயும் போகவேண்டாம் இந்த பனிரெண்டு செண்ட்டும்  உனக்குதான் உன் பெயரிலே கிஸ்தி வரியும் போட்டுவிட்டேன்.  கிடைக்கிற வேலைய பார்த்து கஞ்சிய குடித்து காலத்தை ஓட்டுடா என்று கண்டிப்பா” சொல்லிட்டு போயிட்டார்..

சில காலத்துக்குபின் என்தந்தையின் சகோதரர்கள். “ அண்ணன் மதுரையில நல்லா இருக்கான்டா....வாங்கடா நாமும் அங்க போயி அண்ணனிடம் மன்னிப்பு கேட்டு அங்க இருக்கலாம் என்று வந்தார்கள்.


என் தந்தை இரக்ககுணமுடையவர் என்பதால்.. வந்தவங்களை எப்படி விரட்டுவது..என்றும் விரட்டிவிடுவதற்கு  குதிரைக்கார தாத்தாவும் இல்லாததால்  அடங்காப்பிடாரின் கனவனை மட்டும் சிறு குடிசை போட்டு தனிக்குடித்தனமாக இருக்க வைத்தார். அப்போது  அடங்காப்பிடாரின் உடன் பிறந்த அக்காதான் முதல்  மனைவி . அக்கா போய் தங்கை மனைவியானது  அசிங்கமான கதை . நான் பிறந்து சில வருடங்களில் என் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து போக என் அம்மா அவர்களிடம் பயந்து பயந்து அடி மிதி வாங்கி என்னையும் என் அக்காவையும் வளர்த்து ஆளாக்கிவிட்டார்கள்.

நான் தலையெடுத்து பத்தாவது படித்து மேற்கொண்டு படிக்க முயலும்போதுதான் என் அப்பா வேலை பார்த்த பண்ணையார், 12 செண்டில் 6 செண்ட் இடத்தை அவர் கிரையம் முடித்துவிட்டதாகவும் என் தாய் வாடகைக்கு இருந்ததாகவும் இரண்டு வருடமாக வாடகை கொடுக்கவில்லை என்றும் வீடு ஓலை குடிசை வீடு என்பதால் இடித்துவிட்டு வீட கட்டவேண்டும் என்று விளிம்புகை பரிகாரம் வேண்டி வழக்கு தொடுத்தார் அந்த வழக்கு பத்துவருடம்  கழித்து தள்ளுபடியாகியது. அப்பீல் சென்றார். அங்கும் தள்ளுபடி ஆகியது. அடுத்து உரிமையில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்குதான் இழு இழு வென்று இழுத்துகொண்டே  இருந்த பொழுதான் தந்தையின் உடன் பிறந்தவர்கள் .தங்களுக்கும் வழக்கு சொத்தில் உரிமை இருப்பதாக சொல்லி அவர்களும் வழக்கில் சேர.... அவர்கள் தொடுத்த வழக்கு தள்ளுபடியாக அவர்கள் உயர்நீதிமன்றத்தில்  உத்தரவு வாங்கி மிண்டும் வழக்கில் சேர்த்து கொள்ள.. என் தாயும் இறக்க.. என் சகோதரியை வாரிசாக சேர்க்க நான் மனு போட..அந்த மனுவுக்கு  தற்போது வழக்கு தொடுத்த பண்ணையாரின் மகன் பல தடவை விசாரணைக்கு ஆஜராகதால் வழக்கு தள்ளுபடி  செய்யப்பட்டது.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட  சில மாதங்களில்  என் தந்தையின் இரண்டாவது சகோதரரின் மகள் வயிற்றுப்பேரன்  . வக்கீலாக இருப்பவன். மாமா என்று முறைசொல்லி வந்தவன். தன் தாய்க்கு வழக்கு நடந்த இடத்தில் பங்கு கேட்டு வந்தவனிடம்.

வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. நீங்களும் சரி, வழக்கு தொடுத்த பண்ணையாரும் சரி , கோர்ட்க்கு போகவில்லை. அதனால..இந்த ஆறு செண்ட் இடத்த எனக்கு விட்டுறுங்க.... இத என் அக்கா பிள்ளைக வச்சுகிரட்டும்.... பின்னாடி இருக்கிற இடத்த நீங்க மூனு பேரும் சம அளவாக பங்கிட்டு எடுத்துகுங்க ..தானசெட்டில் மெண்டாக பதிந்து தர்கிறேன். பத்திர செலவ  மூனு பேரும் ஏத்தூங்க என்றபோது....

அதெல்லாம் வேண்டாம் மாமா. வடக்கே இருந்து தெற்க்காக நாலு பங்காக பிரித்து கொடுங்க என்றான்... அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீ வக்கில்தானே அவர்கள் சார்பாக என் மேல் வழக்கு தொடு என்று அன்பாக பேசி வழி அனுப்பிவைத்தேன். இதற்கிடையில் ஒடுகாலியான அடங்காப்பிடாரியவள் என் மீது  பொய்யாக புகார் செய்து எகப்பட்ட செலவையும் மன உளச்சலையும் ஏற்படுத்திட்டா....... இப்படியே விட்டா போச்சுன்னுதான் அவுக மூன்று பேர் மீதும் இடத்தைவிட்டு காலி பன்ன் வேண்டி நான் வழக்கு தொடுத்து இருக்கிறேன். நம்பர் ஆகிவிட்டது.  இனி சமாதான பேச்சுக்கே இடமில்லை...


 ஆகா ஒட்டகம் புகந்த  கதையாக என் வீட்டை தவிர மற்ற எல்லா இடத்ததையும் ஆக்கிமித்து என்னையே விரட்டும் கதையாக மாறிப்போச்சு...நிலம...

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...