![]() |
திரு. அம்மனாடி. ம. பெரியசாமி |
என் தாயின் சகோதரரும், என் சகோதரியின் மாமனாருமான, மாமா தனது 104 வயதில் நேற்று ( 30.08.2021) காலமானார்.. அவர் என் தாயின் சகோதரர் என்பது என் சகோதரியை அவர் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களை பெற்றெடுத்து. என்சகோதரிக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறி போன சில ஆண்டுகளுக்கு பின்புதான் எனக்கு தெரிந்தது..
அந்தத் தாய் மாமானுடன் அவ்வளாக நான் உரையாடினது இல்லை.பெண்ணை கட்டி கொடுத்ததினால் மாமாவாக ஆனவர் என்றே நிணைத்து இருந்தேன். என் சகோதரிக்கு கண் பார்வை இல்லாமல் போனதால் ..எங்கே தன் மகளின் வாழ்வு பறி போய்விடுமோ என்றஞ்சிய என் தாய்க்காக... என்தாயின் அழுகைக்காக. என் தாயின் வேண்டுகோளுக்காக, என் சகோதரின் மேல் உள்ள அன்புக்காக, என்னை விட்டால் என் சகோதரிக்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையில்தான் .அந்த நால்வரையும் வளர்த்து ...........
பெண்கள் இருவரின் திருமணத்தை பார்த்த என் தாய் ஆண்களின் இருவரின் திருமணத்தை பார்க்காமல் கடந்த ஐந்து வருடத்துக்கு முன் காலஞ்சென்று விட்டார். ஐந்து வருடத்துக்குப்பின் என் தாயின் சகோதரர் காலமாகிவிட்டார்.
கரேனாவிலிருந்து தப்பித்த நான் சூலையில் இரண்டு வாரங்கள் அவருடன் தங்கியிருந்தேன். அந்த இரண்டு வாரங்கள் மெலிந்ருந்த என்மீது மிகவும் .. பரிதாபப்பட்டார். அவர் சித்த வைத்தியர் என்பதால் மூலத்திற்கு வைத்தியம் சொன்னார். அந்த வைத்தியத்தை தன் மகனிடம் ( மச்சான்.. என் அக்காவின் கனவர்,) சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்..அந்த சமயத்தில் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தான் இறந்துவிட்டால் கொட்டு மேளம் எதுவும் வைத்து செலவு செய்ய வேண்டாம். மிகவும் எளிமையான முறையில் என்னை அடக்கம் செய்தால் போதும் ..கடன் பட்டு அல்லல் படவேண்டாம். என்றார். உங்கள் மகனிடமும் பேரன்களிடம் சொல்லுங்கள் என்றேன். சொல்லி விட்டேன் என்றார்.அப்போதைக்கு சரி என்றேன். என் மூத்த மருமகனிடம் “உன் தாத்தா இப்படி சொல்கிறாரே என்றுகேட்டபோது, ஆமாம் மாமா..எங்களிடமும் அப்படித்தான் சொன்னார் என்றார். பாவம் ..தங்கச்சி மவனுக்கு தானும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று நினைத்து இருப்பார். என்று நினைத்தேன்.
ஆனால் அவர் இறந்த போது.. இரண்டு கொட்டும் ஆட்டக்காரர்களும் ரேடியோ செட்களும் அமர்களப்படுத்தி கொண்டு இருந்தன... ஐஸ் பெட்டியில் உறங்கி கொண்டு இறந்தவரை பார்த்துவிட்டு.. ,இறந்தவரின் கடைசி மகளிடம் விசாரித்தேன். மேளம், ஆட்டம் இவைகளுக்கான செலவுகள் யார் என்று கேட்டபோது, தானும் தன்மகன்களும் ( மக பிள்ளை வழி பேரன்கள்) பொறுப்பு என்றும் தன் இளைய மகனின் மாமனார் பொறுப்பும் என்றார்.
மனதில் இருந்த ஒருவித அச்சம் விலகியது.... ஆனால் இறந்தவரின் கோரிக்கைகளில் ஒன்றான நாகர் பாடை ஒன்றைத்தவிர மற்றவை எதுவுமே நிறைவேறவில்லை... முடிவு எடுப்பதும் செயல்படுவதும் அவர்கள்.என்பதும்,.. செலவு செய்வது நான் என்பதும் என்ற நிலை தற்போது முதல் முறையாக நிகழ்ந்துள்ளது ..இந்நிலையால் .எனக்கும் எந்தச் செலவும் ஏற்பட வில்லை. செலவு செய்வதற்கும் வழியில்லை.. எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த பிறகு பூசல்கள் வெடிக்கும்.அப்போது தெரிந்துவிடும் நிலவரம். என்ற நிணைப்பில் ..........கவலைகள் துறந்து.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை