திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஆவூர் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்வரின் மகள் S.அமுலு. வயது 29,இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டம் பெரியபாளையம் அருகாமையில் உள்ள காரணி என்ற கிராமத்தில் வசிக்கும் அண்ணாமலை என்பவரின் மகனான A.கௌதமன்,வயது 32, என்பவரும் ரயிலில் பணிக்கு வரும் போதும் செல்லும் போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறி கிட்டதட்ட எட்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலிப்பதை அறிந்து கேள்விப்பட்ட கவுதமனின் பெற்றோர். கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கவுதமன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் அமுலு தலித் சமூக பிரிவை சேர்ந்தவர் இதனால் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் கவுதமன்.
இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் 29.03.2019,-அன்று இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சென்னையிலேயே தேனாம்பேட்டை DMS அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் கவுதமன் சொந்த ஊரான காரணி சென்று வருவார்.
இந்த சூழலில் தான் கவுதமனிடம் அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் சீனிவாசன் மற்றும் அக்காக்கள் மணிமேகலை,கோமதி இருவரும் நீ அவளை விட்டு, விட்டு வந்து விடு உனக்கு வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி வந்துள்ளனர். மிகவும் வற்புறுத்தியும் இருக்கிறார்கள். இதன் காரணமாக கவுதமன் கடந்த ஒரு வருடமாக தன் வீடான காரணிக்கு போவதை நிறுத்திக்கொண்டார்.
2020,-ல் கருவுற்ற அமுலுக்கு 18.08.21'ல் அன்று சென்னை RSMS. என்ற மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் குடும்ப சூழலின் காரணமாக கடந்த ஜனவரியில் 2021,ல் இருந்து ஆவூர் கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர் இந்த தம்பதிகள்.
17.09.21, அன்று காலையில் 06, மணிக்கு கவுதமனின் செல் போனுக்கு அவரின் தாத்தாவான ராதா ரெட்டியார் இறந்து விட்டார் என்று தகவல் வருகிறது இதை கேள்விப்பட்டவுடன் கடந்த ஒரு வருடமாக ஊருக்கு போகாத அவர் தன் பைக்கை எடுத்துக் கொண்டு காரணி கிராமம் நோக்கி போகிறார். அன்று போனவர் தான் ,கவுதமன் இன்று வரை வீடு திரும்பவில்லை.
20.09.21- இரவு அன்று அமுலுவின் அண்ணன் பிரவீண் என்பவர் தன் தங்கையின் கணவரான கவுதமனை காண்பதற்காக தேடிச்சென்ற போது அந்த ஊரில் கவுதமனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர், பேனர்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறார். தன் தங்கைக்கு தகவல் தெரிவிக்கிறார். கணவர் இறந்ததை கூட மனைவியான அமுலுக்கு தெரிவிக்காமல் கவுதமனின் சடலத்தை எரித்து விட்டனர்.
அவனுடைய பெற்றோர்கள் எதற்காக உடனே கவுதமனை எரித்தார்கள் அவர்கள் செய்த கொலைக்கான ஆதாரங்கள், தடயங்களை அழித்திடவா என்று கேள்வி எழுப்புகிறாள் அந்த பெண்.கையில் கைகுழந்தையுடன் கண்ணீர் வழிய காத்திருக்கிறாள் அந்த இளம்பெண். அமுலு. சாதி ஆணவக் கொலை செய்து என் கணவரை கொன்று விட்டனரே .இனி எனக்கு யார்? என்று அந்த பெண் கதறும் போது நம் கண்கள் குலம்மாகி விட்டது. ஒரே மாதமான குழந்தை தன் தந்தையின் முகம் காணாமலேயே தாயின் கரங்களில் அனாதையாக தவழ்கிறது.
இந்த கொடூரமான சம்பவம் சம்மந்தமாக 21.09.2021, தேதி இரவு 21.30 மணிக்கு ஆரணி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது எண்.259/பிரிவு174, குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 201,இதவி- வில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட நபர்களை விசாரிக்க வேண்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்மமான முறையில் சாதி ஆணவக் படுகொலை செய்யப்பட்ட கவுதமன் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்.
கவுதமனின் அன்பு மனைவி அமலுக்கும் அந்த குழந்தைக்கும் நீதி கிடைத்திட வேண்டும். என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது .தொடர்ந்து நடைப்பெறும் சாதி ஆணவக் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து களத்தில் நிற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
சாதி ஒழிப்பே ! சமூக விடுதலை !!
சமூக சீரழிவு...
பதிலளிநீக்குசமூக சீரழிவு...-வாழ்க! வளர்க!!
நீக்கு