புதன் 10 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -9

 அக்டோபர் முதல் “ ஐடியாக்கல்” கிடையாது    அமைப்பை திறந்தவுடன் இதுதான் கண்ணில்பட்டது. “ஐடியாக்கள் என்ன என்பது எனக்கு தெரியாது.. சரி போகட்டும்...

 சரி.. சரடு கதைக்கு வருவோம்.


அந்த தெருவுக்கு அவன் நாட்டாமை, தலைவர், தெரு கோயில் நிர்வாகி, இப்படி பல பதவிகள். அதோடு சின்னபயல் என்ற பட்டப் பெயரும் அவனுக்கு உண்டு.  அந்தத் தெருவில் குடியிருப்போர்களின் முக்கால் வாசி  வீடுகள் அவனுடையதான். குடியிருக்கும் வீடுகளில்  பாதி பெண்கள் அவனின் வலையில் விழுந்தவர்கள்.அல்லது அவனை தங்கள் வலையில் வீழ்த்தியவர்கள். அதற்கு பிரதிபலனாக அவன் வாடகை வாங்காமல் விடுவது. புதிய துணிமணிகள் வாங்கி கொடுப்பது  அவர் வழக்கம்.

அப்படி புதிதாக அவனது வீட்டிற்கு புதிதாக வந்தவள் ஒருத்தி.சிவத்த மேனி, அழகான நாட்டுக்கடடை அவள். அவளின் கனவனும் அவனும் நெருங்கிய நண்பர்களாயினர். அவளின் கனவர் இல்லாத நேரத்தில் அவளின் கனவர் அவன்தான். அவனை காணவில்லை என்றால். எங்கும் தேடி அலைய வேண்டாம் அவளின் வீட்டிற்கு சென்றால் பார்க்க முடியும்.  அவளின் கனவர் போக்குவரத்து துறையில் பணி புரிகிறார். வெளியூர்களுக்கு மாற்றலாகி சென்றால் .தன் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு தன் நண்பரிடம் சொல்லிவிட்டத்தான் செல்வான் அவனின் நண்பன். அப்படி ஒரு நட்பு..

அவனின் தாலிகட்டிய மனைவிக்கு நாண்கு ஆணும், இரண்டு பெண்களும், நாண்கு ஆண்களும் அவனைப்போலவே தப்பாமல்  பிறந்திருக்கின்றன.... அவனுடைய காதல் லீலைகளை பற்றி மனைவியோ பெத்துப்போட்ட பிள்ளைகளோ எதுவும் கண்டு கொள்வதில்லை...  அவர்களுக்கு எந்தக் குறையும் .அவன் வைத்ததில்லை. ஆசை நாயகிகளுக்கும், வைப்பாட்டிகளுக்கும் தலா நாலு, மூனு.இரண்டுக்கு குறைவில்லை, ஒரே ஒரு வைப்பாட்டிக்கு மட்டும் குழந்தையே இல்லை...அந்த வைப்பாட்டி இன்னும் குமரியாகவே இருக்கிறது.

பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்த அவனுக்கு எந்த நோயும் இதுவரை வந்ததில்லை... 80 வயதை கடந்தும் இன்னும் ஆள் திடமாகத்தான் இருக்கிறான். அவனின் சில ஆசை நாயகிகள் வைப்பாட்டிகள்தான்  நோக்காடு வந்து கிடக்குதுக. அவனுக்கு வீட்டு வாடகை வருமானத்தோடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்ததால் பதிணைந்தாயிரத்துக்கு மேல் பென்சன் வாங்குகிறான்.... இப்போ மூத்த மகள் வீட்டில்தான் சாப்பிடுகிறான்.... 


அவன்.தன் ஆசை நாயகிகள். மற்றும் வைப்பாட்டிகளுக்குள் எந்த முட்டல் மோதல் வராமல் பாரத்துக் கொண்டான். எப்படி சமாளித்தான் என்று கேட்டால் அந்தத் தெருவின் இளைஞர்கள்  கதை கதையாக சொல்வார்கள்.  அந்தக் கதைகளிள் அறுபதாயிரம் பொண்டாட்டிகளை கட்டிய தசரதன்  தோற்றுப் போய்விடுவான்.

தனக்கு பிடிக்காதவர்களை. தன் எதிர்களை, தன் ஆசை நாயகிகள் மற்றும் வைப்பாட்டிகள்  அவள்களின் பிள்ளைகள் மற்றும் தன் வீட்டு ஆட்களை சேர்த்து  பெரும் கூட்டமாக ஏவி..அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.   இன்றும்  அந்த தெருவில் அவன் வைத்ததுதான் சட்டம்...

அவன் எப்போ சாவான்.. என்று அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒன்றிடம் அனுதினமும் வேண்டுகிறார்கள். அந்தத் தெருவில் உள்ள இளைஞர் அணியினர் சொல்கிறார்கள்.  அவனுக்கு என்ன கவலை..என்ன குறை ,நூறு வயது கழித்துதான் சாவான்.என்று.....


2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...