புதன் 07 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -14

 அவர் வீட்டு உபயோக பொருள்களை தவனைக்கு விற்பனை செய்யும் வியாபாரி . அவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ள குடும்பம் உள்ளது.தன் வியாபாரத்துக்கு சில புதிய பொருள்களை வாங்க முதலீடுக்காக  கடன் கேட்டு திரிந்தார். தவனைக்கு வாங்கியவர்கள் வாராவாரம் பணத்தை கொடுத்திருந்தாலே  புதிய பொருட்களை சிரமம் இல்லாமல் வாங்கியிருப்பார். ஒட்டு மொத்தமாக எல்லோரும் தவனைத்தொகையை கட்டாமல் குரோனாவை காட்டி கை விரித்துவிட்டனர். 

ஒருநாள் புதிதாக பழகிய நண்பரிடம் கடன் கேட்டபோது..அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பார்ப்பதாக சொன்னார். அதை அந்த வியாபாரி கெட்டியாக புிடித்துக்கொண்டு அவரை அடிக்கடி சந்திக்கலானார்.  வழக்காமாக கூடும் இடங்களில் நண்பரை காணாவிட்டால் நண்பரின் வீட்டுக்கே சென்று சந்தித்துவிட்டார்.

அந்த வியாபாரி அந்த நண்பரை சந்திக்கும்போதெல்லாம் அப்போதைக்கு தோன்றிய  நம்பும்படியான தகவலை சொல்வார்.

“ஒருத்தரிடம் கேட்டேன்...அவருக்கு வரவேண்டிய பணம் ..ரெண்டு நாள்ல வந்திடும். பணம் கைக்கு வந்ததும். தனக்கு போன் பன்னி விடுவதாக சொல்வார்.... இப்படியாக பல பொய்கள்.


ஒருநாள் வியாபாரியின் நண்பரிடம் நண்பரின் மனைவியானவர் சொன்னார். “இந்தா..பாரு..நாளைக்கு குழுக்கடன் ஐம்பாதயிரம் வந்திடும்.. பத்தாயிரம் நான் எடுத்துக்கிடுவேன்...மீதி நாற்பதாயிரத்தை அவரிடம் கொடுத்தால் அவர் ஐம்பாதாயிரம் கட்டனும் ..சரி என்றால் அவரிடம் இந்த நாற்பாதியிரத்தை கொடு.... வாரா வாரம் ஐய்நூறு கொடுத்திடனும்... சொல்லு.... என்ன ... கணவனும் மனைவியும் பேசி உறுதி படுத்திக் கொண்டனர்.


மறுநாள் காலையில் மகளிர் குழு பணம் கையில் கிடைத்ததும். நண்பர் வியாபாரிக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரச் சொன்னார். கடனுக்காக தவித்த வியாபாரி  சிறிது நேரத்தில் வந்தார்.

நண்பரின் மனைவியானவர் நேரிடையாக வியாபாரிடம் பேசினார். “உங்களுக்காக என் கணவர் பல பேரிடம் கடன் கேட்டு பார்த்தார். இந்தா தர்ரேன்..அந்தா தர்றேன்னுதான் சொல்கிறார்களே! தவிர யாரும் பணம் தந்தபாடில்லை... உங்களுக்காக பணம் கேட்டு ஒரு த்தரும் தரவில்லையே  என்று புலம்பியத பார்த்துதான் உங்களுக்காக மகளிர் குழுவில் இருந்து அம்பதாயிரத்துக்கு லோன் போட்டு பத்து ரூபா பிடித்தது போக  மீதி நாற்பாதாயிரம் இந்தாங்க என்று பணத்தை வியாபாரிடம் நீட்டீ.... வாரா வாரா ஐநூறு வந்து கொடுத்துடுங்க ...

வியாபாரி மெச்சி பணம் கிடைத்த மகிழ்ச்சியில் கண்டிப்பாக வாராம் தவறினாலும் நான் தவறாமல் வந்து கொடுத்து விடுறேன்ம்மா ...உறுதி சொல்லி விட்டு பணத்தை பெற்றுக் கொண்டார்...நண்பர்க்கு ஒரு  ”புல.்” சரக்கு வாங்கி  கொடுத்துவிட்டு விடைபெற்று சென்றார்.


ஒரு வாரமாக வியாபாரி அந்தத் தெரு பக்கமே வரவில்லை... நண்பரின் மனைவி வியாபாரிக்கு போன் செய்து கேட்டபோது வேறு தெருவில் வியாபாரம் செய்து கொண்டு இருப்பதாகவும்.. நாளைக்கு  வந்து வாரப் பணம் தருவதாகவும்.. 

வியாபாரி வரும் நேரத்தை தெரிந்து கொண்ட மனைவியானவர் தன் கணவனை வெளியே அனுப்பி வைத்தார்.  வெளியே சென்ற நண்பரை வியாபாரி வழியில் சந்தித்த போது நண்பர் அவசர வேலையாக போய்விட்டு வருவதாகவும் தான் வரும்வரை வீட்டிலே இருக்கும்மாறும் தெரிவித்துவிட்டு சென்றார்.

வியாபாரி வீட்டுக்கு வந்தார். கதவு சாத்தியிருந்தது. நண்பரின் பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்தார் பதில் இல்லை. வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்தார். யாரும் கதவை திறந்து உள்ளே போனார். நண்பரின் மனைவியானவர்.. கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தார்.  பெயரைச் சொல்லி அழைத்தார். பதில் இல்லை. மெதுவாக காலைத் தொட்டார். நண்பரின் மனைவயிானவர் விழித்துப் பார்த்து...“ ஒ...நீங்களா..எப்ப   வந்தீங்க.. இலேசா படுத்தேன் நல்லா தூங்கிவிட்டேன். கட்டிலிலே சுவர் ஓரமாக சாய்ந்து கொண்டு கட்டிலிலே உட்காரச் சொன்னார்.

வியாபாரி உட்கார்ந்ததும் உங்க நண்பர் அவசர வேலையாக போயிருக்கார் என்று சொன்னார். வியாபாரி ..பேசிக்கொண்டே பையில் கட்டையாக மடித்து வைத்திருந்த பணத்தில் ஒரு ஐய்நூறை கொடுத்தார். அதை வாங்கிய அவர் ..வியாபாரி பார்க்குபடியாக தன் சட்டை மார்புக்குள் வைத்தார். பணத்தை பையில் வைத்துக் கொண்டு குடிக்க தண்ணீர் கேட்டார் வியாபாரி,. அவரை உரசியபடியே கட்டிலிருந்து இறங்கி  அடுப்பாங்ரைக்குள் சென்று தண்ணீர் வந்து கொடுத்தார்.

வாரத்துக்கு  ஐய்நூறு ஐய்நூறாக கொடுப்பதைக் காட்டிலும் இரண்டாயிரமாக கொடுத்தால் ஒரு மாதத்துக்கு அடச்ச மாதிரி இருக்குமே ஒரு பிட்டை எடுத்து போட்டார். வியாபாரி நல்ல ஐய்டிவாக இருக்கே என்று பையிருந்த நோட்டு கட்டைஎடுத்து மூன்று ஐய்நூறை கொடுத்தார்...

கணவனும் மனைவியுமாக சேர்ந்து போட்ட திட்டப்படி வியாபாரி அவர்கள் வலையில் விழுந்துவிட்டார். நண்பர் மனைவி தந்த சுகத்தில் மெய் மறந்துவிட்டார். இப்படியாக வாரந்தோறும் வியாபாரி வருகின்ற நேரத்துக்கு முன்பாகவே வேலைக்கு செல்வதும் நண்பரின் மனைவி வியாபாரிக்கு போன் போட்டு வரவழைப்பதும் அழைப்பதும், சுற்றியுள்ளவர்களுக்கு வட்டிப்பணம் தர வந்ததாக கதை அளப்பதும்.  இப்படியாக அவர்களின் காதல் நடப்பு எந்த வில்லங்கம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

வியாபாரி உழைத்த பணம் முக்கால்வாசி  அவரின் நண்பர் மனைவியின் உடலில் அலங்கார நகைளாக காட்சியளித்தது.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...