பக்கங்கள்

சனி 31 2011

ஆங்கில புத்தாண்டே உன் வரவு எனக்கு போராட்ட நாளே...!!!


















வா...என்றால் வந்து விடுவாயா?
போ..என்றால் போய் விடுவாயா?
நில்..என்றால் நின்று விடுவாயா?
ஆங்கில புத்தாண்டே?????????????

பகல், இரவு என்று..............................
வருவதும் போவதும் உன் வேலை
நீ வராமல் போனால் என்னாகும்?
கடல்அலை நின்றால் என்னாகும்?

கடல்அலை நின்றால் என்னாவேன்
தெரிந்தும அனுபவத்தில்லை!
 நீ எப்பொழுது தோன்றினாய்?
நீ எந்நேரம் பிறப்பிக்கபட்டாய்?

ஜனவரி ஒன்னு நள்ளிரவு பணிரெண்டு
மணிக்கு பிறந்ததாக.................சூரியன்
அஸ்தமிக்கும்முன் தோன்றியவர்கள்
கண்டு சொன்னார்கள்............................

ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்
(பல நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டவர்கள்)
 அடக்கியாண்ட வெற்றி களிப்பை
கொண்டாட உன்னை பிரசவித்தார்கள்

வருவதும் போவதும் உன் வேலை
ஒழுங்காக நீ செய்கிறாய்............

குரங்கிலிருந்து தோன்றி ஆறறிவு
ஒன்றைப்பெற்று ஏழாவது அறிவுக்கு
அலைபவர்கள.....புதியன கழிதலும்
பழையன புகுதலுமாக வழமையாகக்
கொண்டு வாழ்கிறார்கள்.

உன் பிறப்பு எப்படியிருந்தாலும்
உன் வரவு எனக்கு போராட்ட நாளே..!!
கடல்அலையும் ஓயப்போவதில்லை
சமத்துவத்துக்கான போராட்டமும்
ஓயப்போவதில்லை.....எப்படியிருந்தாலும்
உன் வரவு எனக்கு போராட்ட நாளே......!!!


வெள்ளி 30 2011

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?

அடேங்கப்பா,.........கூடங்குளம் அனு உலையை திறக்கச் சொல்லி கூப்பாடு போடும் ஆதரவாளர்களே!

இதுக்கு என்னையா பதில் வச்சுருக்கிங்க, சப்பான் நாட்டில் புகுஷிமா நகரில் ஆழிப் பேரலையால் சிரழிந்து போன அனுஉலையில் சிக்கியுள்ள எரி பொருளை பக்கவமாக வெளியெ எடுப்பதற்கு 40 ஆண்டுகளும். 78,400 கோடிகளும் தேவைப் படம் என்று அனுஉலை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சுற்றுபுறத்துக்கு ஆபத்தில்லாமல் அப்புறப்படுத்துவதற்கு இனிமேல்தான் வழி வகைகள் கண்டுபிடிக்க வேண்டுமாம். கண்டபிடிப்பதற்க்கான ஏற்ப்பாடுகளை   செய்வதற்கே. பத்து ஆண்டுகள் ஆகுமாம். அந்த வேலையைச் செய்வதற்கு இனிமேல்தான் ரோபட்டுகளை தயாரிக்க வேண்டுமாம்.

கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளக்கு மேலும் நீடிக்குமாம். அதிலும் 78,400 கோடியானது அனுஉலை எரிபொருளை எடுப்பதற்கு மட்டும்தானாம். மற்ற செலவுகளெல்லாம் தனியாம். என்னங்கப்பா....இதெல்லாம் .......
.சொல்றதெல்லாம் சுரைக்காய்க்குஉப்பு இல்லைங்கிறகணக்கா........
அனுஉலைக்கு ஆபத்து இல்லை.அனுஉலை மின்சாரம் மலிவானது.கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்து தடுத்துவிடலாம் என்றும்...அண்டப்புளுகு,ஆகாசபுளுகுன்னு புளுகித் தள்ளிவிட்டு “ முளச்சா முளைக்கட்டும் முளக்காட்டி போகட்டும்” என்ற கணக்கா இன்னமும் விதைக்கிறேங்களப்பா?.

சாதாரன காய்ச்சலுக்கே தர்ம ஆஸ்பத்திரியில மருந்து இல்ல,ஊசி
இல்லேன்னு சுகப்படுத்த முடியல, இதுல கதிர்வீச்ச சிகிச்சை செய்து தடுத்துவிடலாமுன்னு காதுல ஒரு முலம் புவ வேற சொருகிறிங்களேய்யா?

இதுல. எங்க சூத்து காயுது, குண்டி குறையுதுன்னு அனு உலையை திறக்கச் சொல்லி உண்ணாவிரதம் வேறு,  நேர்மை திறன் எதுவுமில்லாம.போராட்ட
உறுப்பினரை கைது செய்ய சொல்லி வழக்கு வேறு.இந்த வழக்கு பேரு பொது
நலவழக்குன்னு பெத்த பேரு வேறு.................

இந்த எழவுல,டீ.வியில “ கூ்டங்குளம் அனுமின் திட்டம் நாட்டுக்கு நல்லதோர் திட்டமுன்னு” விளம்பரம் மற்றும்“ பிரபஞசத்தின் பெருமை கூடங்குளம்” பத்திரிக்கையில புளுகினித்தனம் வேறு இதுக்கெல்லாம் பஞ்சமேயில்லப்பா?

 சுனாமி வந்த பாதிப்பையே சரி செய்ய முடியாம வக்கத்து இருக்கிற நீங்க....
அனுஉலையைப்பத்தி எப்படியெல்லாம்  என்னனென்ன வழிகளெல்லாம்புளுகித் தள்ளுங்க..இந்த கெட்டிக்கார புளுகு எத்தனை நாளைக்கு??தான்னு நிலைக்குன்னு பார்க்கத்தானே போறோம். நீங்க இல்லேன்னாலும் உங்க வாரிசுக பாக்கத்தானே போகும்..

புதன் 28 2011

மொட்டை போட்டு நாமம் போடுவது எப்படி?




 நாமம் , காந்தி கணக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமால் இருக்காது. அதிலும் மொட்டையும் போட்டு நாமம் போடுவது எப்படி என்று சேது- பாலாவிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னனியாக வைத்து சைக்கோ பாலா புதிய படத்தை இயக்கப்போகிறாராம்.இந்தப் படத்திற்க்காக 200 துனைநடிகைகளை தேர்ந்தெடுத்து அனைவரையும் மொட்டையடிக்கச் சொல்லி படம் முடியும்வரை மொட்டைத்தலையுடன்தான் இருக்க வேண்டும் என்றாராம்
(தேயிலை தோட்ட முதலாளிகள் தொழிளாலர்களுக்கு நாமம் போட்ட மாதிரி)

எற்கனவே. பாலா.பல நடிகர்களுக்கு மொட்டைபோடாமல் நாமம் போட்ட கதையை தெரிந்து கொண்ட 200 துனை நடிகைகள்,ஆகா.......நமக்கு மொட்டையும் போட்டு நாமம் இல்ல போடப்போறாரு என்று சுதாரித்துக் கொண்ட துனை நடிகைகள்.

மூன்று படங்களுக்கான. சம்பளத்தை மொத்தமாக தந்து விடுங்கள். படம் முடியும்வரை நாங்கள் மொட்டையுடன்  இருக்கிறோம் என்று துனை நடிகைகள் சங்கத்தின் மூலமாக கேட்டுள்ளனர்.

பாலாவும் வழியில்லாமல் மொட்டையுடன் நாமம் போடுவதற்கு வேறு வழியில் யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.

செவ்வாய் 27 2011

எட்டாவது அதிசியம் என்னான்னு தெரியுமா?





என் நண்பர் பேச்சின் ஊடே உலக அதிசியம்
ஏழு என்னான்னு தெரியுமா? என்று கேட்டார்.
நான் முழித்துக்கொண்டு இருக்கையில்
இன்னொருத்தர் இடையில் புகுந்து,  

ஓ......ஓ...... தெரியுமே, தாஜ்மகால்,
சீனப்பெருஞ்சுவர்,சாய்ந்தகோபுரம்,
பிரான்ஸ் டவர்,எகிப்து பிரமிடு............
இப்படி வரிசையாகஓப்புவித்தார்.

நண்பர்,அவரிடம் எப்படித் தெரியும்.
எங்க பார்த்திங்க என்று கேட்டார்.
அவரும் கே.டீவியிலதான் பார்த்தாகவும்.
 டைமன்முத்துவின் “அதிசியமே அசந்து
 போகும் அதிசியமே” என்ற பாடலில்
“.வந்ததே மூத்தரம்” என்று ஓலமிட்ட
 ரகுமான் இசையில் ஏழு ஒலக
அதிசியத்தை பார்த்த அதிசியத்தை குறிப்பிட்டார்.

என்னைப் பார்த்த நண்பர்., என்ன.
 பாத்தீங்களா? என்றார்.அந்த ஏழு அதிசியத்தை
பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.
இனி கே.டீவியில் போடுவார்கள்ள
அப்போது பாத்துக்கலாம். என்றேன்

ஏழு அதிசியத்தை சொன்ன நண்பரோ,
எனக்கு கேட்காதளவுக்கு நக்கல் அடித்து
 ஏளனமாக பார்த்தார்.இருவரையும்
 பார்த்து ஏழாவது அதிசியம் என்னனென்பது
தெரியவில்லை என்பதை ஒத்தக்கொள்
கிறேன் என்றேன்.

ஏழு அதிசியங்கள் தெரிந்திருக்கிற
 உங்களுக்கு. “எட்டாவது அதிசியம்
” என்னான்னு தெரிஞ்சு இருக்கனுமே,
அது என்னான்னு சொல்லுங்க என்றேன்.

நண்பர்கள் இருவரும். வேறு எதை
எதையோ சொன்னார்கள். அவர்களுக்கு
எட்டாவது அதிசியம் என்னாதுன்னு
தெரியவில்லை.அந்த அதிசியம்
உங்களுக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. நானே சொல்லவா? என்றேன்.

நண்பர், எட்டாவது அதிசியம் ஒன்னு
 இருப்பதாக தெரியவில்லையே என்றார்.

இருக்கு என்றேன். உலகத்திலுள்ள எல்லா
 ஊடகங்களும் சொல்லியிருக்கிறது
எழுதியிருக்கிறது. அந்த அதிசியத்தை
பார்ப்பதற்காக தவமும் இருக்கிறது என்றேன்.


அப்படியென்ன, அதிசியமுன்னு,
எங்களுக்கு தெரியலையேன்று,யார்
யாருக்கோ செல்- அடித்துக்கேட்டார்கள்.
யாரும் சரியாக எட்டாவது அதிசியத்தை
சொல்லவில்லை..

படிக்கும் நீங்களாவது அந்த எட்டாவது
 அதிசியம் என்னான்னு சொல்லுங்க
பார்க்கலாம்.

ஞாயிறு 25 2011

தேனி மாவட்ட வானிலை அறிக்கை!

முல்லை பெரியாறு அணைக்காக ஒரு லட்சம் பேர் பேரணி

தமிழகத்தின் மேற்கு எல்லைகளான லோயர்கேமப்,கூடலுார், கம்பம் போன்ற பகுதிகளில்,சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் ஜார்ஜ் என்ற கேரள சனி பகவானும், தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஸ்தாஸ் என்ற வடமாநில சனி பகவானும் பெரும் எண்ணிக்கையில் தடி, கண்ணீர்புகைக்குண்டுகள்,துாப்பாக்கி போன்றவற்றுடன் மையம் கொண்டுள்ளதால்  பெரியாறு அணைக்காக போராடும் மக்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே, பரமக்குடியிலிருந்து நகர்ந்து கேரள எல்லையை ஒட்டி நிலை கொண்டுள்ளதால் பொது மக்கள் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

சனி 24 2011

அஞ்ஞானத்தை பறைசாற்றும் ஊடகங்கள்



பகுத்தறிவு பெரியாரை சந்தித்த தொண்டர் ஒருவர். தன்னுடைய கலப்பு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி தரும்படி பெரியாரிடம் கேட்டார்

பெரியார் வியப்படைந்து , கலப்பு திருமணத்திற்கெல்லாம் நான் தலைமை தாங்கி நடத்திக்கொடுக்கமுடியாது என்று மறுத்தார்.அனுமதி கேட்ட தோழர்க்கு மன வருத்தம் உண்டாகியிருந்தது. அதைக் கவனித்த பெரியார்.

தோழரை அருகில் அழைத்து.கலப்புத்திருமணம் என்பது மனிதனுக்கும் வேறு
பிராணிகளுக்கும்அதாவது வேற்று உயிரினங்களுக்கு நடப்பதுதான் கலப்பு திருமணம்.

நீங்கள் நடத்தும் திருமணம் சாதிமறுப்பு திருமணம்.,சுயமரியாதைத்திருமணம்
இவற்றை கலப்பு த்திருமணம் என்று கூறியதால்தான் நான் தலைமை தாங்க முடியாது என்றேன், என்றார்.

தோழர்கள் சாதிமறுப்பு திருமணத்தை,சுயமரியாதை திருமணத்தை கலப்புத்திருமணம் என்று கூறக்கூடாது என்றார்.

வந்திருந்த தோழர் தன்தவற்றை திருத்திக்கொண்டு,மீண்டும் பெரியாரிடம் சாதி மறுப்பு திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி கேட்டது போது சந்தோசமாக ஒப்பதல் அளித்தார்.

இந்த சுயமரியாதை திருமணத்தையும்,சாதிமறுப்பு திருமணத்தையும் இன்றைய வேசித்தனம் நிறைந்த ஊடகங்களால் கலப்பு திருமணம் என்றே பறை சாற்றி வருகின்றன. இந்நாளில் பெரியாரை நிணைப்பதோடல்லாமல் அவருடைய சிந்தனை.செயல்முறைகளை நினைவுகூர்ந்து அவர் வழி நடப்பதே. பெரியாருக்கு ஒடுக்கபட்ட,தாழ்த்தப் பட்ட மக்கள் நிணைவு கூர்வதற்கான வழி.

வியாழன் 22 2011

கேரள அவியல் கூட்டு தின்றால் புத்தி அதிகமாகுமாம்.


கேரள மக்களின் உணவு பண்பாடு அவியலாம். அவியல் என்பது காய்கறிகளின் கூட்டு.

காய்கறிகள் சாப்பிட்டால் உடம்பில் எந்த நோயும் தங்காது என்றும் தொப்பை குப்பை எதுவும் வளராதாம்.காய்கறிகளை அதிகம் சேர்த்தக்கொண்டால் புத்தியும் அதிகரிக்குமாம்.
இந்தக் காய்கறிகள் நிறைந்த அவியல் கூட்டுவை தின்றதால் என்னவோ, உம்மன்சாண்டிக்கும்.அச்சுதானந்தனக்கும் அவர்களின் வால்களுக்கும்,தோலுகளுக்கும் புத்தி அதிகமாகி விட்டதால் பெரியாற்று பிரச்சினையான முல்லைப்பெரியாறு அணைக்கான.
நடப்பு நிகழ்வுகளை வைத்துப்பார்த்தால் ஒத்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது புத்தி அதிகரித்தால் ஆசையும் ஊற்று எடுக்கலாமா இருக்கும்.ஆசையினால் கொழுப்பும் அதிகமாகிவிட்டது..அந்தக் கொழுப்பினால்தான் இடுக்கி அனையை கட்டி.மின்சாரம் தயாரிக்க தண்ணீர் இல்லததால் முல்லைப்பெரியாறு பிரச்சினையை கிளப்பிவிட்டு 999
என்ற கிராபிக்ஸ் படமும் எடுத்து ரீல் விட்டு அதிபுத்திசாலித்தனமாக நடந்தகொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுக்காரன் கேனையனாக இருந்தாலும் இந்திய தேசியத்துக்கு எந்தவித பாதகமும் ஏற்படாமல் நடந்து வந்திருக்கிறார்கள்.தமிழனின் இந்திய ஒருமைபாட்டுக்கு அதரவாக இரண்டு எடுத்துக்காட்டுகளை சொல்ல்லாம். 1.எம்ஜியார் கேரளத்துக்காராக இருந்தாலும் தமிழ்நாட்டை சாகும்வரை ஆண்டார்.2 ஜெயலிதா கன்னடத்துகாராக இருந்தாலும். அவர்தான் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இப்படி பல சொல்லலாம்.தமிழ்நாட்டை தமிழன் ஆண்டாலும் காட்டிக் கொடுத்த கூட்டிக்கொடுத்த தமிழனாகத்தான் ஆட்சி செய்தான்
கேரளக்காரான எம்ஜியாரின. வார்த்தையில் சொல்வதென்றால். அவியல்கூட்டு தின்ற கேரளாக்காரனுக்கு பல்பு இருக்கு பம்பு இல்ல.என்பதுதான் உண்மை.. அதாவது கேரளாகாரனுக்கு புத்தியிருக்கு ஆனால் பண்பு இல்ல என்பதுதான்.
இந்த பண்பு இல்லாத்தால்தான் 1975 வருடத்திலிருந்து செக்ஸ்படமா எடுத்து தமிழ்நாட்டில் ஓடவிட்டு தமிழனை சீரழித்தான். இன்னும் கூடுதலான புத்திக்கு அவியல்கூட்டு என்ன?மத்திய கூட்டு,ஆட்சிக்கூட்டு என்னனென்ன கூட்டு இருக்கிறதோ எல்லாத்தையும் சாப்பிட்டாலும் அந்தப்புத்தியானது கிரிமினலுக்கு பயன்படுமே ஒழிய நல்ல பண்புக்கும்
சமத்துவத்துக்கும் நேர்மையான கூட்டாட்சிக்கும் ஒருபோதும் பயன்படுமா?
சம்பந்தபட்டவர்கள்தான் நேர்மையாக பதில் சொல்லவேண்டும்

புதன் 21 2011

டாஸ்மாக் குடிமகனின் உளரல் தீர்ப்பு..!!

அடேய்,வெண்ணெய்களா?என்னங்கடா? வெளையாடுகிறிங்களா? அங்க ஒருத்தன் அனை உடையப்போகுதுன்னு ஔருறான். இங்க இருக்கறவனெல்லாம் அனையை பாதுகாப்போமுன்னு கூவுறான். என்னங்கடா

இந்தத் சத்தத்த கேட்காமா உருமாக்காரன் நாடு நாடா பறக்குறான்.டேய்,
உருமாக்கார என்னடா நெணச்சு இருக்கிற ஒம் மனசுல. சொல்லித் தொலைடான்னா. சொல்லமாட்டுறான்

கேனப்பயலே.உருமாக்காரா, நான் சொல்றேன்டா தீர்ப்பு....................................

சேட்டன்காரனான் மின்சாரத்துக்கு தானடா அனை உடயப்போகுதன்னு உதார் விடுறான்.  செட்டன்னுக்கு கூடங்குள அனு நிலயத்த அவனுக நாட்டு
கடலோரமா வச்சு கொடுத்துடுடா. இன்னு ரெண்டு உல வாங்குவிலடா அதையும் சேட்டனுக்கே கொடுத்திடுடா..

எங்களுக்கு மின்சாரம் வேனாண்டா, நாங்க காத்தாடிய சுத்தவச்சு மின்சாரம்
எடுத்துக்கிறோம்டா?

டேய், சேட்டன்காரா,உருமாக்காரனும்.நாரயாண கருப்பணசாமியும்தான்
அனுஉல வெடிக்காது பாதுகாப்பா இருக்குன்னு சொல்றான்ல, பேசாமா வாய
மூடிக்கினு ஓஞ் சோலியப்பாரு. அனை உடயப்போகுதுன்னு ரீல் விட்டு என்
கோபத்தை கிளராதே..................

என்னடா, பேச மாட்டுன்கிறிங்க,  பேச்சு வார்த்தைக்கு வா.வான்னு முச்சந்தியில கூப்பாடு போட்டீங்க. பேசுனா......... பேசாமா.....இருக்கீங்க.....

.ஊம...ஊருக்கெடுக்குமடா.....நீ எங்க ஊரகெடுக்குற.....
உருமாக்காரன் நாட்டயே கெடுக்குறான்.....................

என்னய குடிகாரன்னு  நிணைக்காதிங்கடா........நான் இந்திய(டாஸ்மாக) குடிமகன்டா .......,,,,,.......எனக்கு குடிமகன்என்ற பட்டமே வேணான்டா                        .........

செவ்வாய் 20 2011

முன்னால் முதல்வர் இன்னால் முதல்வராகிறார்!!!



கர்....நாடக மாநிலத்தின் முன்னால் முதல்வர் அரசு நிலங்களை தனது குடும்பத்தினருக்கு ஒதுக்கிய முறைகேட்டில், நிலமோசடி வழக்கில் லோக் அயுக்தா போலிசால் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் ஓய்வு எடுத்து ஜாமினில் வெளிவந்தார்.

வெளியே வந்ததும் சில நாளில் தனக்கு 72 எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் மீண்டும் முதல்வர் பதவியை தனக்கே வழங்கும்படி உத்தமசிகாமணிகளின் தலைமை பா.ஜா தலைவர்களை சந்தித்து வலியுறுத்தி யுள்ளார்.

இதற்கு ஆதரவாக இரு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். வெளியுறைவு அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா மீதும் லோக் அயுக்தாவில் வழக்கு பதிவாகியுள்ளது. இருந்தும் அவர் அமைச்சராக இருக்கிறார்.

தமிழகத்து ஆத்தா ஜெயலலிதாவின் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாக வழக்கு நடக்கிறது. அவரும் பதிவியில் இருந்துகொண்டு வலம் வருகிறார்.இவர்களே! எந்தவித குற்றணர்வு இல்லாமல் பதவியில் இருக்கும்போது. இவர்களையே முன்னுதரமாகக் கொண்டு என்னையும் முதல்வராக்க வேண்டும் என்று யுத்தத்தை தொடுத்துள்ளார்.

முன்னால் முதல்வர் எடியுரப்பா,இன்னால் முதல்வராவதற்கு அவர் காட்டும் ரோல் மாடல்களேஇதற்குசாட்சி.

திங்கள் 19 2011

ரிலையன்ஸ் அம்பானி கைது செய்யப்படுவாரா?????........

ஜோசப்,கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்திடம் 24 ஆயிரம் ரூபாய் விலையுள்ள செல்போன் ஒன்றை வாங்கினார்

அந்தச் செல்போன் இணைப்புக்கு குறிப்பிட்ட காலம் வரை ஏராளமான வெளி  அழைப்புகளும் எஸ்எம்எஸ்களும் இலவசமாக பெறலாம் என்று ரிலையன்ஸ் கூறியிருந்தது.

அவர் பலமுறை முயற்சி செய்தும் எதுவும் கிடைக்கவில்லை.கடைசியாக திருச்சூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில்(2005-ல் ) வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில்,செல்போன் விலையான 24 ஆயிரத்தையும் அய்ந்து ஆண்டுக்கான 12 சதம் வட்டி தொகையையும் சேர்த்து ஜோசப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்குமாறு உத்திரவிட்டது.

ரிலையன்ஸ் நிறுவனமோ, இந்த உத்திரவை மதிக்கவில்லை. ஜோசப் விக்கிரமாதித்தானாக திரும்பவும் கோர்ட்டையே நாடினார். நுகர்வோர் கோர்ட் நீதிபதியான பத்மினி, பதில் அளிக்காத ரிலையன்ஸ் அதிபரை கைது செய்ய உத்திரவு பிறப்பித்தார்.

ரிலையன்ஸ் அதிபர் இந்தியாவின் பெரும் பணக்காரர் தொழில் அதிபர் என்பது நீதிபதிக்கு தெரியாமலா இருக்கும். அதனால்தான் என்னவோ,2012 வருடம் பிப்ரவரிக்குள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்ய உத்திரவிட்டார்

ஏற்கனவே,முல்லை பெரியாறு வழக்கில் உச்ச.....நீதி.........மன்றமே உத்திரவிட்டும கேரள அரசு அமுல்படுத்தாமல் சண்டித்தனம் செய்யும்போது ஜோசப்க்காக மாவட்ட நுக்வோர் கோர்டடுஉத்திரவுதானாஅமுல்படுத்தப்படும்

ரிலையன்ஸ் அதிபரோ.பொதுத்துறையான பிஎஸ்என்எல்க்கு பட்டை நாமாம் போட்டு கொட்டைபோட்டு கொழுத்தவர் அவரைப்போயி கைது செய்ய முடியமா??ஃ

இந்திய ஸனநாயக நாட்டில் சட்டத்தின்முன் அனைவரும் சமமுன்னு எப்படியெல்லாம் பாமரனை ஏமாத்துறாங்க. பாருங்க!!!!!!!! 

சனி 17 2011

எங்களை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே இல்லே.....!

இவரை விட்டா தமிழகத்திற்கு வேற ஆளே கிடையாதம்ப்பா?

திராவிடக் கட்சிகளால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.திமுக
அதிமுகவுக்கு மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாம்

இதனைக் கரத்தில் கொண்டு புதிய அரசியல்,புதிய நம்பிக்கையை அடுத்த வாரம் வெளியிடப்போகிறாராம். கிளைக்கு கிளை தாவியதில் ஓய்ந்து போன மருத்துவர் அய்யா இஇஇ.....ராமதாசு.

இந்தப் புதிய மொக்கையைக் காண வரிசையில் நில்லங்க..ஓட்டு போடும் மக்கா!!!!!.......


கிடப்தெல்லாம் கிடக்கட்டும் கிழவனை துாக்கி மடியில் வை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அனுஉலை பிரச்சினை,பால்,பஸ் விலை உயர்வுபிரச்சனை இப்படி பல பிரச்சனையில் சிக்கி தவித்துகிட்டு இருக்கையில்

சென்கையில்சர்வதேசதிரைப்படவிழாநடக்குதாம்அதிலஆத்தாரங்கநாயகியையும் கலந்தக்கசொல்லி அழைப்பு விட்டு இருக்காங்கலாம்.இந்தகூத்துல தமிழக அரசின் நிதி 25 இலட்ச ரூபாயைபெற்றுக்கொண்டு தேசிய விருதுகளை பெற்ற
படங்களை புறக்கணித்துவிட்டு பாப்புலாட்ரி அடிப்படையில் தேர்தெடுத்தது ஒருவருக்கு ரெம்ப வருத்தமளிக்குதாம்

அவரின் வருத்தத்தை போக்கவதற்கு இ னி வரும் காலங்களில் இந்த மாபெரும் தவறை விழா கமிட்டி செய்யக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டாராம்.

இது எப்படி இருக்கு?........................

வெள்ளி 16 2011

ஆத்தாவின் புத்தி.....பின்புத்தியா?...முன் புத்தியா?....




ஆத்தா.......ஆத்....தா.... எனக்கு
 ஒருஉண்மை புரிஞ்சு ஆகனும்

மூவரை துாக்கில் ஏற்றக்கூடாது
இதே சட்டசபையில் தீர்மானம்
போட்டீயே...........ஆத்தா.................
பின்புத்தியிலா?.....முன் புத்தியிலா...?

மூவர்க்கு துாக்கு விவகாரம்
நீதி மன்ற விசாரனைக்கு
வந்தபோது அடித்தீரே...ஆத்தா
அந்தர் பல்டி குந்தர் பல்டி.......!!!
பல்டியடித்தது பின் புத்தியிலா...?
இல்ல.  முன்புத்தியிலா...?

பரமக்குடி துப்பாக்கி சூட்டில்
பலியானவர்களுக்கு..நிவரணத்
தொகை கூடுதலாக கேட்டு
போராடியபோது.........ஆத்தா..
இருமாந்துவிட்டு.....ஞானம்
பெற்றவராக நிவராணத்தொகை
கூடுதலாகக் கொடுத்தது......பின்
புத்தியிலா....?   முன் புத்தியிலா...?

ஆத்தா......எனக்கு ஒரு
உண்மை புரிஞ்சாகனும்...

சேட்டன்கள் மட்டும் 2006-ன்
தீர்ப்பை எதிர்த்து தீர்மானம்
போட்டு இன்றுவரை............
மறாமல் புளுகி திரிகிறார்களே..!!
முன் புத்தியிலா...? பின் புத்தியிலா...?

முல்லைப் பெரியாற்றின் தமிழகத்து
உரிமையை ஒரு பொதும் விட்டுக்
கொடுக்க மாட்டோம் தீர்மானமும்
மலம் துடைக்கும் பேப்பராக.............
மாறப்போவது.. .................................
பின்தேதியிட்ட புத்தியிலா????????
முன் தேதியிட்ட புத்தியிலா??????


ஆத்தா.......ஆத்..........தா.....எனக்கு
உண்மை தெரிஞ்சாகனும்.....

புதன் 14 2011

வெண்ணெ திண்ணிகளும்,அவர்கள் வழங்கிய வௌக்கெண்ணெய் தீர்ப்பும்

முல்லை பெரியாறு போராட்டத்தில் தற்போது வழங்கிய உச்சிகுடுமி தீர்ப்பு உம்மன்சாண்டி,அச்சுதானந்தன் மற்றும் அவர்களின் வகையறாக்கள் நிறைந்த கேராளாவுக்கே சாதகமாக உள்ளது.

இந்த வெண்ண திண்ணிகளின் தீர்ப்பானது. தமிழனை இளிச்சவாயன்களாக, கேனையனாக, சுயமரியாதை இல்லாதவனாக நிணைத்துவழங்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால். அக்கம் பக்கம் பார்க்காமல். மிரண்டு ஓடாமல் இருப்பதற்க்காக குதிரையின் கண்களை மறைக்கும் மறைப்பாக உள்ளதுபோல் கேராளாவை மனதிற்க்கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய தீர்ப்பில், 2006-ல் இதே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கணக்கில் சேர்க்காமல்.பரிசீலிக்காமல் .அந்தத்தீர்ப்பை நிறைவேற்றாமல் இருந்தற்கககான காரண காரியங்களைஆராயாமல்.142 அடி வரை தேக்கலாம் என்பதை இந்த வெண்ண திண்ணிகளே .கம்பக்கூட்டு மயிறுக்குகூட மதிக்காமல் ,2006ல் கூறிய தீர்ப்பை மறைத்து ,136 அடிவரை தேக்கலாம் என்ற வௌக்கெண்ணெய் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்

இவர்கள் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல் வியாபாரிகளாக நடந்து கொண்டு உள்ளார்கள். இனவெறி பிடித்த கேராளாவின் தேசியகட்சிகள் கூறியமாதிரி 120 அடிக்கு சொன்னாதாண்டா.142 அடிக்கு போகாமல் 136 அடிக்கு வருவான் என்ற அடிப்படையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

கேரளாவுக்கு ஏற்றமாதிரிதான் உச்சி குடுமி மன்றமும் 136அடிவரை தேக்கலாம் என்று தீர்ப்பு கூறிவிட்டு, 142.152அடியைப்பற்றி எதுவும் மூச்சுவிடாமல் திரும்பவும் ஆய்வு ,மட்டை,மண்ணாங்கட்டி என்று முதல் இடத்துக்கே தள்ளி விடுகிறார்கள்.  இந்த வௌக்கெண்ணெய் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என்று சட்த்தையும் நீதியையும்,மனித உரிமையை
மதிக்காத புடுங்கிகள் கூறுகிறார்கள்.

தேசியக்கட்சிகளும், மாநில கட்சிகளும் மத்திய அரசும்,உச்சிகுடுமி நீதி மன்றமும் தமிழனக்கு தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல் படுகின்றன.

136அடி தேக்கலாம் என்ற இந்த தீர்ப்பையே பின்னாளில்,142அடி 152அடி தேக்க தமிழகம் முயலும்போது நீதியை மதிப்பது போல் வேஷம்கட்டி கேரளாக்காரன் ஆடவும் வாய்ப்பிருக்.கிறது. அத்தகைய வாய்ப்பைதான் இந்த வெண்ணெய்
திண்ணிகள் வழங்கியிருக்கிறார்கள்

இறுதியாக,தமிழன் 2006-ல் வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ப்படி 142அடியை
தேக்கவும்,தமிழக அரசு செலுத்திவரும் பெரியாற்றில் நீர் தேக்கும் பகுதியில்
முதன்முதலில் தன் சுய நலத்துக்காக பொய் செய்தி வெளியிட்ட மனோரமா, மணப்புரம்,முத்துாட் போன்ற முதலாளிகளின் மற்றும் கேரள அரசு உள்பட
ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பெரியாற்றில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வும் ,தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க மத்திய பாதுபாப்பு படையை நிறுத்தமறுத்தால் அணையை கைப்பற்றவும். 2006-ல வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அரசு அமுல்படுத்துமவரை கேரள எல்லைகளை மூடவும்போராடவேண்டும். தண்ணீரின்றி(அனுஉலையாலும்) சாவதைவிட போராடி சாவோம்.

முல்லை பெரியாற்று போராட்டம் அய்ந்து மாவட்டங்களின் பிரச்சனை என்று
தமிழர்கள் இளிச்சவாயன்களாகாமல்,இனவெறிக்கு பலியாகமல் போராட வர
வேண்டும். இனியும் போராட மறுத்தால் ஒதுங்கி கொண்டால்.நாயைவிட
கேவலமான நிலைக்கு ஒவ்வொரு பிரச்சினையிலும் அடக்கி ஒடுக்கப்படும்
நிலையே ஏற்ப்படும்

நம்ம வீட்டு சோற திண்று நம்மலையே கடிக்கும் நாயாக தமிழ்நாட்டு பேலீசும் அடக்கி ஒடுக்கும். நாயைப்போல் வாழப்போறோம்மா?  சுயமரியாதையுள்ள மனிதநேயமுள்ள உரிமையை மீட்கும் அஞ்சாத தமிழனாக வாழப்போறேம்மா
ஒவ்வொரு தமிழனும் செயலாற்ற வேண்டிய நேரமிது!!!!!!!!.

.

செவ்வாய் 13 2011

ஜெயாவின் போலீசும்,உம்மன்சண்டி போலீசும்

கேராளவின் உம்மன்சண்டி போலீசு தன் மக்களை காப்பதற்காக கேரள எல்லைக்குள் அத்துமீறுபவர்கள் சுட்டு தள்ள்படுவார்கள் என்று உத்திரவு போட்டு சுடுவதற்கு தயாராக இருக்கிறது.

இங்கே.ஜெயாவின் போலீசோ,உரிமையுடன் எதிர்த்து ஞாயம் கேட்ப்பவர்களை தடியடி அடித்து விரட்டுகிறது. இனமானமற்ற போலீசை திருத்த முடியுமா?
இந்த போலிசு தமிழ் மக்களை காக்கும் போலீசா,கேரளாவுக்கு செம்பு துாக்கி போலீசா?.

பெரியாறு அனை யின் தமிழகத்தின் நியாய உரிமைகூட தெரியாத ஜெயாவின் போலீசா தமிழக மக்களுக்கு உறுதுனையாக இருக்கப்போகிறது. பெரியாற்றின்
தமிழக உரிமைக்காக உதவி செய்யவில்லையென்றாலும்.உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை நிறைவேற்ற முடியாத போலீசே, உபத்திரம் கொடுக்காமல் வெந்த புண்ணில் வேல் பாயச்சாமல்.இருந்தாலே போதும்

சனி 10 2011

தெரிந்த உடம்பும்,தெரியாத ஆன்மாவும்....

வலிகளை போக்குபவனுக்கு
 வலி ஒரு சான் வயிற்றுக்குள்
 இவ்வளவுகொடூரம் வலியினை
உணர்ந்ததால் துடிக்கிறேன்.

இந்த வலியினை எனக்கு
உணர்த்தியது எது?
சத்தியமாக ஏழாவது
அறிவு இல்லை!
அப்படியென்றால்
ஆறாவது அறிவா
கத்தான் இருக்குமோ?

ஆறாவது,ஏழாவது
எண்க்கும் அறிவுக்கும்
என்ன தொடர்பு என்பது
எனக்கு தெரியாது.

ஆதாரத்தைக் கொண்டு
அறிவதுதான் பகுத்தறிவு
 என்பது உங்களுக்கு
தெரியுமா? பராவாயில்லை
அறிந்து கொள்ளுங்கள்

மூடநம்பிக்கை என்பது என்ன?
ஆராயாமல் ஏற்றுக்கொள்வது
ஆராய்ந்து ஆதாரத்தை ஏற்றுக்
கொள்வது பகுத்தறிவுதானே!!

பகுத்தறிவு பெற்ற ஒரே
உயிரினம் மனிதான்.
பகுத்தறிவு பெற்ற மனித
மிருகங்கள் செய்யும்
அடாவடித்தனங்களை

சொல்லாலும் சொல்லி மாளாது
ஏட்டில் எழுதினாலும் தீராது

மனிதர்களில் ஒரு பிரிவினரை
தீண்டாமையில் ஒதுக்கி வைத்தாரே!

உடலில் தோன்றும் வலிகளும்
தீண்டாமை உடலென்று ஒதுங்கி
தான் போவதுயில்லையே............

அழியும் உடல் நிலையற்றது
நிலைக்கும் ஆன்மா என்பாரே!1

வலி எப்படியிருக்கும் தெரிந்த
உடம்புக்கு தெரிந்தது.தெரியாத
ஆன்மா எப்பிடி இருக்கும்
பகுத்தறிந்து சொல்வீரா,,,,,,,,,,,,???



வியாழன் 08 2011

இருக்கிறவன் செம்மையா இருந்தா..... சிரைக்கிறவன்.நல்லா சிரைப்பான்ல.

மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடியென்றால்தமிழனுக்கு நாலு பக்கமும் இடி,.இடைவெளி இல்லாமல் எட்டு திசையிலும் இடி என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.

தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளும் சரி.ஆளாத கட்சிகளும் சரி.எல்லாமே கஞ்சிக்கு செத்த தமிழனுக்கு துரோகமே செய்துள்ளன. செய்து வருகின்றன.

நீதி.நேர்மை,தியாகம்.ஒப்புக்குக்கூட. இல்லை மாநில கட்சிகளும் சரி,
தேசஒற்றுமை,தேசப்பற்று வெண்ணெய்.வௌக்கெண்னெய் என்று சொல்லு
கின்ற தேசிய கட்சிகளுக்கும் மயிரளவு இல்லே என்பதுதான் உண்மை.

முல்லைபெரிய ஆறு பிரச்சினையில் அகில இந்திய கட்சிகளான காங்கிரசு,பிஜேபி,இடதுவலது கடசிகளின் பித்தலாட்டமே அதற்கு
சாட்சி. சாட்சியாவது புடலங்காயாவது எல்லாம் உங்களுக்கு தெரியும் என்றாலும் தெரிந்தும் மௌனமாக இருந்து மறந்து விட்டுறாங்கள
அவுகளக்கு சொல்லித்தானே ஆகனும்.

கேரள மக்களுக்காக.தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றக்கு தேவையான
நீரின்அளவையாவது தமிழகத்துக்குதரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட  தேசியம் பேசும் கட்சிகளிடம் இல்லை.

மிகப்பெரிய வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிக்கை கொடுத்தும் அனையில் நீர்கசிவுக்கான ஆதாரத்தை விளக்கி
யும் நான் பிடித்த முயலுக்கு மூனு காலுன்னு வாதம் செய்வதுதான்  இவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இவர்களே,ஏற்றி பாடும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கூறிய பின்னரும் இரு மாநில அரசுகளும் இனைந்து இணக்கமாக பேசி தீர்க்கவேண்டும் என்று உபதேசம் செய்வது.எவ்வளவு பித்தலாட்டம். அலுத்து செலுத்து
வந்தவன,இழுத்து போட்டு சிரைப்பானாம் அந்த பழமொழிமாதிரிதான் இருக்குது. தேசியக்கடசிகள் சொல்லுவது.

ஊருக்கு இளைத்தவன் தமிழனாக இருப்பதால்தான் எட்டுதிக்கும்குத்துபட்டு.அல்லல் படுற நிலமை எற்பட்டுருக்குது. கல்தோன்றி
மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழினம் என்ற வீண் பெருமையில்தான் முக்கி இருப்பதால்தான் எட்டுதிசையிலிருந்தும இந்த லொள்ளு,

பச்சைதமிழன்.செந்தமிழன்.வீரத்தமிழன்புரட்டுதமிழன்.சாதிவெறித்தமிழன்.சுயநலத்தமிழன்.சிந்திக்க மறுக்கும் தமிழன். ஓட்டு போடுவதைத்தவிர வேறு எதையும் அறியாத தமிழன்.ஏமாற்றுவதையே தொழிலாக் கொண்ட
தமிழன்.ஏமாறுவதே தன் பிறப்புரிமை கொண்டதமிழன். இவற்றையேல்லாம் மூட்டைக்கட்டி இந்தீய பெருங்கடலில் பெட்ரோல் ஊற்றி
எரித்துவிட்டு.......உதப்பானுக்கு உதப்பனாக இருந்தா...உடனே வெளுப்பான்.. கோடி வெள்ளை என்பது மாதிரி.............................................

இருக்கிற நாம செம்மையாக இருந்தால்தான சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான் என்பதை நெஞ்சிலேற்றி.....நமது நியாய உரிமைகளை
மறுக்கிற கேரள மாநிலத்திற்கெதிராக.............

பரம்பிக்குளம்-ஆழியாறு-மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரள்த்துக்கு செல்லும் தண்ணீரை மறுப்பது..தமிழகத்து வழியாககேரளத்துக்கு
செல்லும் சாலைகள் சபரிமலை உள்பட மற்றும்  இரயில் போக்குவரத்தை மறிப்பது

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் எவ்வளவு நமக்கு முக்கியமோ அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம்
அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை இனவெறியில் முழ்கிய கேரள மக்களுக்கு உணர்த்தவேண்டும்

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்த மறுக்கிற,வக்கற்ற மத்திய அரசின் எந்த அதிகாரத்தையும் ஏற்காமல் மத்திய அரசின் அனைத்து அலுவலங்களையும் நீதிமன்றங்களையும் இழுத்து மூடவேண்டும்

மத்திய அரசுக்கான வரிகளை செலுத்த மறுப்பதன் மூலம் நாம் செம்மையாக
இருந்தால்தான். சிரைக்கிறவன் நல்லா சிரைப்பான் மாதிரி தமிழகத்தின் நியாய உரிமையை நிலை நாட்ட முடியும்

திங்கள் 05 2011

ஆசையே....அலை..போலே...,நாமம்தான் அதன் வேலே.....

பஜாஜ் ஆலியன்ஸ் இன்ஸ்சுரன்ஸ் 
கம்பெனிக்குஉழைத்த பணத்தையெல்
லாம் கட்டி.அக் கம்பெனிபோடும் நாமத்தைப்
பெற்று கவலையின்றி வாழ்வீர்என்று பணம் 
கட்டி ஏமாந்த அன்பர்களுக்கு பஜாஜ்
அலியன்ஸ் நிறுவனம் கூறும் அறிவுரை.

எனக்கு தெரிந்த ஒருவரு, அவரு,
அவருக்குதெரிந்தஒருவரின் மூலம் 
பாஜாஜ் ஆலியன்ஸ்முகவர் மூலம்அந்த
 முகவர் சொன்னதில் ஆசை கொண்டு.
வருடத்திற்குபணிரெண்டாயிரம் வீதம் 
எட்டு வருடத்திற்கு கட்டினால் முதிர்வு
 தொகைஒருலட்சத்து அய்ம்பது ஆயிரம்
கிடைக்கும் என்றார்.

எனக்கு தெரிந்தவரும் உழச்சு என்னத்த
கண்டோம்இதையாவது சேமிப்போம்.
ஆசையில் அடித்துசெல்லப்பட்டு,கஷ்டத்
தோடு மூன்றுவருட்ம்தொடர்ச்சியாக பாலிசி 
பணத்தை கட்டிட்டு வந்திருக்காரு.

இடையில் விலைவாசி ஏற்றம் ,வருமானம்
குறைவு போன்ற காரணங்களால் இரண்டு
வருடம் பாலிசி தொகையை கட்டாமல்
விட்டுட்டாரு,

குடும்பத்தில் செலவும் வறுமையும் அதிகரித்த
படியால். கட்டியவரையில் உள்ள பணத்தை
வச்சு சமாளிக்கலாம் என்ற திட்டத்துடன்
பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்தை அனுகி
இருக்கிறார்.பாலிசி எடுத்த பாண்டு பத்தரத்தை
 சரண்டர் செய்தார்.காசோலை வீட்டிற்கு
வரும் என்று சொல்லியதைக்கேட்டு காசோலை
யை எதிர்பார்த்து காத்திருந்தார்.

ஒரு நாள் காசோலையும் வந்தது. மகிழ்ச்சிடன்
வாங்கிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி.பண்ணிரெண்
டாயிரம் வீதம் மூனறு வருடத்திற்கு கட்டிய
தொகைமுப்பத்தியாறாயிரம். காசோலையில்
வந்ததோ.பத்தாயிரம். அதிர்ந்து போயி,நிறு
வனத்தில் கேட்டபோது

தொடர்ச்சியாக கட்டாததாலும்.உங்க சேமிப்பு
பணம் சேர் மார்கெட்டில் டவுணாகி விட்டபடி
யாலும்.அதெல்லாம் போக மீதியை அனுப்பி
யிருக்காங்க என்றார்கள்

இவரும் விடாமல் சேர்மார்கெட்டப்பத்தி
புரிந்து கொண்டதால் பஜாஜ்ஆலியன்ஸ்
தமக்கு நாமம் போட்டதை புரிந்து கொண்டார்

பாலிசியில் சேரும் பணம் சேர்மார்கெட்டில்
இறக்கி விடப்படும்போது வீழ்ச்சியடைந்தால்
நிறுவனம் பொருப்பேற்காது என்றும் அந்த
விதிமுறையை ஏற்றுக்கொண்டு கையெழுத்தும்
போட்டுள்ளதால் தன்னால் ஒன்றும் செய்ய
முடியாது என்று தெரிந்து கொண்டார்.

நாமம் பெற்ற விபரத்தை என்னிடம் கூறி எதுவும்
செய்யமுடியாத என்று கேட்டார்.

போலீஸ் நிலையத்தில் அடித்து உதைத்து பெற்ற
வாக்குமூலமே செல்லாது என்று நீதீ மன்ற சட்த்
தில் இருந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை
சட்டமே இப்படிபட்ட கம்பெனிகளுக்கதான் இருக்
கிறது என்றும் அரசு துறையான எல்.அய்.சி 
கொள்ளைக்காரன் என்றால் தனியார் துறைகள்
பகல் கொள்ளைக்காரர்கள் என்று எடுத்துரைத்தேன்

தாராளமயமும்,தனியார்மயமும் எப்படியெல்லாம்
ஏழை,எளிய,நடுத்தர மக்களை ஆசை வலையில்
சிக்க வைத்து ஏமாற்றி கொள்ளையடிக்கின்றன
நாமும் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும்
ஏமாறாமல் இருக்க முடியாது..ஒரு தடவை
ஏமாந்து அனுபவப்பட்டவுடன் சுதாரிக்கமுடியும்
நீங்கள் மட்டும் ஏமாறவில்லை.பலர் ஏமாந்திருக்
கிறார்கள்.அதைக்கண்டு ஆறுதல் அடையலாம்
என் சொந்த பிரச்சினைகளில் நான் ஏமாந்த
விபரத்தை கூறினேன்.

முகவரரை தேடி விசாரித்தபோது முதலில்
சேர் மார்கெட் பற்றி எனக்கு எதுவும்.தெரியாது
பின்னர்தான் தெரிந்து கொண்டேன் என்றார்

நான் எதுவும் பாலிசி போட்டு ஏமாந்திருக்கனா
என்று கேட்டார்.

நான் பிறந்ததலிருந்து என் வாழ்க்கையே போராட்டம்
தான். நாளைய வாழ்க்கையை எண்ணி என்னால்
சேமிக்க முடியுமா? என் பிரச்சனையெல்லாம்
உங்களுக்கு தெரியுமே! எப்படிடா சமாளிக்கிற
என்று எத்தனை தடவை என்னை கேட்டு இருப்பீங்க
என்றேன்.

அவர் எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் தன் நெற்றியை
பலமாக துடைத்துக்கொண்டார்....

ஞாயிறு 04 2011

தனுஷ்மதியின் இறப்புக்கு காரணமானதை தண்டிக்க முடியுமா???

பரவை முனியம்மாவின் ஊரைச் சேர்ந்தவர்
சரவணன். இவரது எட்டு மாத குழந்தை மீது
புானை ஒன்று ஜன்னல்வழியாக புகுந்து
டீவி மீது தாவி குதித்ததால் டீவியானது
ஸ்டாண்டுடன் அருகில் படுக்க வைக்கப்
படடுருந்த குழந்தையின்மீது விழுந்தது
அலறி துடித்த குழந்தையின் சத்தத்தைக்
கேட்டு ஓடிவந்த பெற்றொர்கள் குழந்ததை
யை துாக்கிக்கொண்டு அரசு மருத்துவ
மனைக்குகொண்டு சென்றனர். வழியிலே
குழந்தை இறந்தது.அந்தக்குழந்தையின் 
பெயர் தனுஷ்மதி.

மனநிலைமற்றும் வலிப்பு நோய்பாதிப்பு 
உள்ளவர்கள் கொலையே செய்தாலும்
தண்டிக்கமுடியாது என்று உச்சநீதி மன்றம்
ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியிருக்கிறது.

எட்டுமாத குழந்தை தனுஷ் மதியின் 
இறப்புக்கு காரணமான புானையை(cat)
தண்டிக்கமுடியுமா????

சனி 03 2011

வள்ளலுக்கு பிச்சையிட்ட மடா அதிபதிகள்!!!

மதுரையில் தமிழ் சங்கம் நிறுவி
தன் வாழ்நாளை தமிழ் வளர்ச்சிக்கு
அர்ப்பனித்த வள்ளலை-மறக்கா
திருக்க நினைவு மணி மண்டபமும்
அவரின் பெருமைக்கு தபால் தலையும்
நுாறு வயதுக்கு அரங்கமும் வேண்டி
ஆத்தாவிடம் வரம் கேட்டு நிற்க............

வள்ளலுக்கே இந்தக் கதியென்றால்
மதுரையும் திருவாடுதுறையும்
தனித்தனியாக ஒரு லட்சமும்
திருவாடுதுறை அட்வான்சாக
பத்து ஆயிரமும் வழங்கி......“தமிழ்
வளர்ந்தால் தமிழன் வளருவான்”
எனமடஅதிபதிகள் செப்புரைத்த
செப்புக்கு என்ன கதியோ?????

தமிழ் வளர்ந்தால் எந்தத் தமிழன்
வளருவான் என்றன் வினாவில்
வினவியபோது உரைத்தார் ஒருவர்

கஞ்சிக்கில்லா தமிழனை வளர்த்து
செய்த பாவ கருமங்கள் தொலைய
தான தருமங்கள் பல செய்து அதனால்
வள்ளலு பெயர் சூட்டப்பட்டதென்றார்.

காலை மாலை இரவு மூன்று வேளை
ஓதி இடைவெளியில்லாமல் உண்டு
கொழுத்த உடலை குறைக்க யோக
ஆசனம் செய்து ஞானம்பெற்று அதனால்
விழாவில் கலந்து செப்புகிறார்கள்
மடஅதிபதிகள்............................................

ஏழைத்தமிழனை சாதி வெறியில்
தள்ளிகூறுபோட்டு ஆதிக்கத்தை
 நிலை நாட்டும் சாதி வெறித்தமிழன்.

சாதிவெறி குலதெய்வத்தை தேசிய
குலதெய்வாக உயர்த்த அரும்பாடு
படும் அருந்தமிழன்............................

இச்சகம்பேசி அகம்வளர்க்கும் தமிழன்
தானுண்டு தன் குடும்பமுண்டு உயர்ந்து
வாழும் அண்டாத தமிழன்..........................

தமிழ் வளர்ந்தால்.இந்தமிழன்தான்
வளர்வான்....என்றாரே அவர்!!!!...................

வெள்ளி 02 2011

பெட்ரோல் விலை குறைப்பு!! அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

பெட்ரொல் விலை குறைப்பு
 அய்யயோ! எனக்கு பயமாக
இருக்கிறதே !!

எண்ணெய் நிறுவணங்களும் சரி
பாழாய் போன அரசாங்கமும் சரி
அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

இந்த அரசும் எண்ணெய் நிறுவணங்களும்
கந்து வட்டிக்காரர்களின் பங்காளியாச்சே!

குறைத்ததை வட்டி முதலுமாய் எப்போ?
ஏத்துவாங்கன்னு தெரியலையே ?
அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

விலை ஏத்தினதை குறைக்க மாட்டோ
முனு சொன்னவங்களாச்சே!

பால் விலை ஏறிப்போச்சு!
பஸ் டிக்கெட்டும் ஏறிப்போச்சு!
அடுத்து கரண்ட்டும் ஏறப்போகுது
வீட்டுவரியும் ஏறப்போகுது.

எனக்கு வரு மானமும் குறையுது
பிரச்சினையும் பெருகுது. அய்யயோ!
எனக்கு உதறல் தானா எடுக்குதே!

குறைத்த பெட்ரோல் விலையை
ஏத்த மாட்டோம்முனு சொல்லலையே!
சில்லரை வணிகமும் அன்னியனுக்கு
போகுதே! இனி நான் எப்படித்தான் வாழ்வது?

முல்லை பெரியாறு உடையப்போகுதுன்னு
கேரளாக்காரனும் புளுகுறானே!!

சிலர் போராடுகிறார்கள்
பலர் என்கென்னனு இருக்கிறார்களே!

நான்வாழ என்னதான் செய்வது????



வியாழன் 01 2011

யார்ரா.........இவன்....சுத்த..........???

எங்கம்மா காய்கறி வித்து
இம்புட்டு படிப்பு படிக்க
வச்சு உலகத்துக்கே
பெரிய வங்கியான
அய்.எம்..எப்ல வேல
பாக்க வச்சாங்க.அதுல
வேல பாத்ததுனால
இந்தியாவுக்கு பிரதமரா
ஆக்குனாங்க...நான்
நன்றி மறந்தவனாக
இருக்கலாமா???

அதலாதான் எங்கம்மா
மாதிரி யாரும் காய்கறி
வித்து யாரையும் படிக்க
வச்சிறக்கூடாதன்னு நல்ல
எண்ணத்தில்தான் சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீடு
ஈட்டை அனுமதித்து உத்திரவு
இட்டேன்.......................................

இம்புட்டு பதவி வகித்தவன்
நான் சட்டுபுட்டுன்னு எந்த
முடிவும் எடுக்க முடியுமா?
கோர்ட்ல தீர்ப்பு சொல்வதற்கே!
அம்புட்டு காலம் ஆகும்போது
அதனால நிதானமா எடுத்த
முடிவு தான் இது......................

எனக்கு அன்னிய நிறுவனங்களாக
தெரியல. எனக்கு வாழ்வு கொடுத்த
 தெய்வங்களா தெரியுது..
தெய்வங்களை ஏமாத்தலாமா???


வீனாகும் சேமிப்பையே தர மறுத்தவன்
அதனால்தான. சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீடு....................இதனால்
விளை பொருள் வீனாகாது.
விலையும் கூடுதலாக கிடைக்கும்
யாருக்குன்னு கேட்கக்கூடாது.
சரக்கு,சேமிப்பு,போக்குவரத்துகளில்
வேலை வாய்ப்பு கிடைக்கும்..



இம்புட்டுவிவரத்தை கிளிபிள்ளைக்கு
சொல்ற மாதிரி சொல்றேன்............
ஊல்..ஊலுன்னு கேட்காம........?
யார்ர...........இவன்..............சுத்த.............
கேனையனா.............,இருக்கான்...

திங்கள் 28 2011

உண்மையில்லை! வதந்தியை நம்பாதீர்கள்!!!

ஓட்டு போட்டு ஓய்ந்து போனவர்களுக்கும்
ஓட்டு போட ஓயாமல் இருப்பவர்களுக்கும்
ஒட்டு போட காத்து இருப்பவர்களுக்கும்
ஓர் அறிவிப்பு!!!.............................................

இந்திய நாட்டிற்கு பொதுவுடமை
அப்பத்தை குறைந்த விலையில்
பாதிப்பு இல்லாமல் வாங்கித்
தருவதாக வேஷம் போட்டு
இதுநாள் வாங்கித் தராமல்
காலம் கடத்தி வந்த சாயம்
வெளுத்த இடது.வலது
பட்டாதாரர்களில் ஒருவரான
பீமன் போஸ்-என்பார்

மக்கு அவையில் இடது பட்டா
தாரர்கள் எண்ணிக்கை குறைவாக
இருந்ததால் “சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்”
துணிச்சலான முடிவை மத்திய அரசு
மேற்க் கொண்டதாகவும்.......

குறைவான பட்டாதாரர்களைக் கொண்டு
மத்திய அரசின் துணிச்சலை கட்டுப்
படுத்த முடியவில்லையெனவும்
இருந்தாலும் “உள்ளேயும்-வெளியேயும்”
எதிர்ப்போம் என்றும்....................................

இடது,வலது பட்டாதாரர்களின்
ஆதரவு இல்லாமல் மத்திய அரசு
ஆளுவதால்.......... இந்நிலையாம்

இந்த அண்டப்புளுகு மற்றும் ஆகாயப்
புளுகை நம்பி ஏமாற வேண்டாம்
இது உண்மையில்லை!!! வதந்தியை
நம்பாதீர்கள்!!! நம்பி ஏமாறதீர்கள்!!1

வெள்ளி 25 2011

அண்ணே! கேப்பு .டண்ணே! அடுத்து நீங்கதானே.....முதல்வரு?...

காலை எட்டு மணிமுதல்
மாலை அய்ந்து மணிவரை
உண்ணாவிரதம்......................

செமியாக் கோளாறை
தீர்த்ததுமாச்சு...............
மக்களுக்காக................
போராடியதுமாச்சு

உண்ணாவிரதத்தில்
முடிவில் அண்ணன்
தமிழகத்து கேப்டன்

மக்கள் கேட்டுக்
கொண்டதால்
பத்திரிக்கைகள்
எழுதியதால் கூட்டணி
வைத்தோம்.............
சொந்த ப(ண)லத்தினால்
வெற்றி பெற்றோம்.

உள்ளாட்சியில் எப்படி
வெற்றி பெற்றார்கள்
அம்மையார்க்கு தெரியும்
காவல்துரைக்கு புரியும்
தேர்தலில் பணம் கொடுத்து
தொடங்கி வைத்ததே
அம்மையார்தான் அதன்
வழியில் கருனாநிதியும்.

இலவசம் வேண்டாம்
மாறிமாறி ஆட்சி செய்த
இரண்டு கட்சிகளும்
மக்களின் இரத்தததை
உறிஞ்சும் மூட்டைபுாச்சிகள்
இதை அழித்தால்தான் தமிழகம்
முன்னேறும்


ம்மதா போல தைகிரியம்
உண்டா? ஜெயலலிதாவுக்கு
மக்கள் பிரச்சினையில்
தேமுதிக போராடும்
அதற்காக சிறை செல்ல
வும் தயங்க மாட்டேன்

அண்ணே! கேப்புடண்னே!
வருங்கால முதல்வரண்ணணே!
அடுத்த முதல்வர் நீங்க
தாண்ணே! பாழாய் போன
தமிழகம் உங்கத் தகிரியத்தால்
தாண்ணே முன்னேறனும்.

இதை என் ஊத்தவாயால
சொல்லலேண்ணே!
மக்களென்ன அம்புட்டு
அறிவாளிகளாண்ணே!

எத்தனை வாய் சவாடல்கள
 கேட்டு, மதி தெளிந்தா......
போச்சு..அவ்வள சீக்கிரத்துல
தெளியத்தான் விட்டூடுவீங்களா?

தெளியாதுண்ணே! அந்த
தகிரியத்தில் தான் உங்க
தண்ணியடித்த வாயால
இம்புட்டு புர்ட்சி வசனம்
 பேசிபுட்டீங்க.. அடுத்த
முதல்வர் நீங்கதாண்னே!

சீ னிமாகாரன்(காரி)களும்
தான் ஆளனும்னு விதின்ணே!
வாழ்க! கேப்பு டவுனு
வளர்க! சுற்றமும் நட்பும்
வீழ்க! மதி தெளியா மக்கள்கள்

.

புதன் 23 2011

விசாரனை முடிந்தது?

விசாரனை முடிந்தது
நீங்கள் போகலாம்

ஆண்டுக்கணக்கில்
இழுத்தடித்த வழக்கில்

மாட்சிமை தாங்கிய
நீதிமனறத்தை

மயிரின் அளவுக்கு
மதித்த போதும்

நாங்கள் உங்களை
மதித்து..........

ஒரு வழியாக நாளே
நாளில்

விசாரனை முடிந்தது
நீங்கள் போகலாம்

தமிழகத்தில் உங்கள்
திரு விலையாடலைத்
தொடங்கலாம்

காலம் கடந்து வந்த
இந்த வழக்கை

தங்கள் திருவடி பணிந்து
உங்களக்கு ஏற்றபடி

தீர்ப்பு வழங்கப்படும்
அந்தத் தீர்ப்பும்

அடுத்த நுாற்றாண்டில்
வழங்கப்படும்

எதிர்ப்பவர்கள் எல்லாம்
மக்கள் விரோதிகள்

தீய சக்திகள் தீவிரவாதிகள்
பயங்கரவாதிகள் நக்சலைட்கள்

போராடுபவர்கள் உடனே
கைது செய்யப்படுவர்

விசாரனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவர்

மன நிம்மதியுடன் சென்று வருக!
தாயே! தமிழ்நாட்டின் புண்ணியவதியே!

தில்லை நாயகியே! சரணம்!


சனி 19 2011

அதிகாரம் அவர்கள் கையில்!!!

கார்த்திகை மாதம்
பனியும் துவங்கிவிட்டது
அய்யயோ அப்பனுக்கு
விரதமிருக்கும் காலமும்
துவங்கிவிட்டது.

பனிக்கும் விரதத்திற்கும்
கதகதப்பாக தமிழகத்து
ஆத்தா ரங்கநாயகியின்
அருளும் துவங்கி விட்டது

ஆடு மாடு,பேன்,மிக்ஸி
கிரைண்டர் இலவச அரிசி
அருளாக பெற்றவர்கள்
பால்,பஸ் விலை உயர்வை
அருளாக பெற்றனர்.

பெரும்போது இருக்கும் இனபம்
கொடுக்கும்போது இருப்பதில்லை
இது தமிழகத்து மக்களின்
நீங்கா நிலை.

இப்போது குமுறினாலும்
மறித்தாலும் ஒன்னும்
ஆகிவிடப்போவதில்லை
 குமுரலையும் மறியலையும்
விரட்டியடிப்பதற்குதான்
எப்போதும் ஒரு பட்டாளம்
தயராக இருக்கிறது.

ஒவ்வொரு திருவிழாவின்
போது மதி மயங்கித்தான்
போய்விடுகிறீர்கள்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
என்றுலில்லாமல்
மீண்டும் பழையனவற்றையே
புகுத்தி விடுகிறீர்கள்

அய்ந்து வருடத்திற்கோர்முறை
வரும் திருவிழாவில்-அவர்களின்
புாசாரித்தனமும் வேண்டாம்
அவர்கள் கொடுக்கும் பொங்கச்
சோறும் வேண்டாம்- மறுத்திடுங்கள்
என்று புரிந்தவர்கள்.அறிந்தவர்கள்
நல்லவர்கள் சொன்னபோது

ஒருநாள் பொங்கின பொங்கச்
சோற்றுக்காக வரிசையில் நின்று
அங்கீகாரம் கொடுத்தீர்கள்
பெருவெள்ளமாய் இல்லாமல்
சிறுதுளியாய் இருந்தவர்கள்
சொன்னார்களே! அங்கீகாரம்
வழங்குவதை புறக்கணியுங்கள்
என்று ! சொன்னதைபுறக்கணித்ததால்
இத்தனைக் கொடுமைகள்

இன்னும் கொடுமைகள் தொடரும்
அரங்கேரும் அங்கீகாரம் கொடுப்பது
நிறுத்தாதவரை...... இதை புரிந்து
திடமனதுடன் செயலில் இறங்கும்
வரை... அதிகாரம் அவர்கள் கையில்
.............................


வியாழன் 17 2011

நீதி அரசர்களின் உத்திரவை.கப்பல்படை தளபதிகள் நிறைவேற்றுவார்களா?

உச்சநீதி மனற உத்திரவாக இருந்தாலும்சரி உயர்நீதிமனற உத்திரவாக இருந்தாலும் சரி, அந்த உத்திரவு சாமானிய மக்களுக்கானதாக இருந்தால் அந்த உத்திரவு மலம் துடைக்கும் காகிதமாக அரசு அதிகாரிகளால் பாவிக்கப்படும்.அந்த உத்திரவே மேல் சனங்களுக்கோ அல்லது அரசு எந்திரத்துக்கோ சாதகமாக இருந்தால் அந்த காகிதத்துக்கு பெரிய சக்தி இருப்பதாக காட்டப்படும்.அந்த காகிதத்தைக் கண்டு நீதிமனற உத்திரவுக்கு கீழ்படிந்து பயந்து நடுங்குவது போல் ஒரு பம்மாத்து வேலையே நடக்கும் வேசியின் ஊடகங்களும் வானத்துக்கும் எம்பி எம்பி குதிக்கும்.

இவர்கள் சொல்லிக்கொல்லுகிற சனநாயக ஆட்சியில் யார் அதிகாரம் படைத்தவர்கள், ஓட்டு பெருக்கி அதில் வெற்றியடைந்து அதன்மூலம் அமைச்சர்களாக எம்பி,எம்எல்ஏவாக வருகிறவர்களா? தலையாரிலிருந்து மாவட்ட ஆட்சியர்வரை இருக்கும் மாவட்ட நிர்வாகமா? சட்த்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதாக சொல்லும் போலீஸ் துறைய்யா? அல்லது எல்லா பிரச்சைகளுக்கும் ஒரே தீர்வாக தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமா? இவர்களில் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்பது பற்றிய சர்ச்சைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை தீர்வும் ஏற்ப்படுவதாகவும் இல்லை.

இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது அன்றாட நிலைமையாகிவிட்டது.
தமிழகத்தில் ஆத்தாவால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
பிரதமருக்கு பல கடிதங்கள் போட்டும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

தற்போது. மதுரை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக உத்திரவு
பிறப்பிக்கப்பட்டள்ளது. அது இந்திய கப்பல் படையும்,கடலோர காவல்
படையும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று.

இந்த உத்திரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு,மத்திய தேசிய ஆலோசகர் சிவசங்கர்மேனன் மற்றும் 5அதிகாரிகளால் மலம் துடைக்கும் காகிதமாக
பாவிக்கப்பட்டதால். அவர்கள் அடாது இருப்பினும் இவர்கள் விடாது மனு
செய்து நீதி மன்ற அவ மதிப்பு தொடங்கப்பட்டு வழக்கு விசாரனைக்கு
வந்தது.

இந்நிலையில்தான் இந்த உத்திரவை ரத்து செய்யக்கோரி கடலோர காவல்
படை ஜெனரல் மனுதாக்கல் செய்துள்ளார். “ஏனைய்யா,இந்த உத்திரவ அமுல்
படுத்தல என்று கேட்டால்.படகில் கடலில் சுற்றி வருவது மாதிரி தலையை
சுத்தி மூக்கை தொடுகிறார்.

எல்லை தாண்டி செல்லும் மீனவர்களின் படகுகளை பயன்படுத்தி தீவீரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும், எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது.மீனவர்களிடம் அதிநவீன தொடர்பு சாதனங்கள் இந்தபோதும் தங்களை. அழைப்பதில்லை.. எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தக்குதலுக்கு உள்ளாகும்போது இந்திய கடற்படை சென்றால் அது பிற நாட்டின் இறையான்மையில் தலையிடுவதாகும் என்கிறது..இதோடு விட்டார்களா?
என்றால் அதுதான்இல்லை. கடைசியாக முத்தாய்ப்பாக.மீனவர்களின் வாழ்வுதாரங்களிலே கைவைக்கிறார்கள்.. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டுமானால் “மீன்பிடி இல்லாத மண்டலம் உருவாக்கி, மீனவர்கள் நுழைவதை தடுக்கலாம். இது எப்படி இருக்கு.பட்டு.கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டபாக்குக்கு விலை சொன்ன கதை மாதிரி..

அதாவது விவசாயிகளை விவசாயத்தை விட்டு துரத்தியடித்தது மாதிரி மீனவர்களை மீன்பிடி தொழில்ல இருந்து விரட்டியடித்து மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து காப்பாற்றிவிடலாம். இதைத்தான் நரித்தனமுன்னு சொல்லுவாங்க.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ஒரு எல்லைக்கோடு வைத்திருப்பார்கள். அந்த ஊரிலிருந்து இந்த ஊரு வரைக்கும்  இந்த போலீஸ்
நிலையத்துக்குன்னு பிரித்து இருப்பார்கள். ஏதாவது பிரச்சினை என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு சென்றால் இது எங்க எல்லை இல்லை அந்த போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று இரு போலீஸ் நிலையங்களும் அலைய வைத்திருப்பார்கள்.கடைசியாக ஒரு நிலையத்தில் புகாரை பெற்றுக்கொள்வார்கள். மக்களை அடக்குவதில் மட்டும் இந்த எல்லை
பிரச்சனையை தொடமாட்டார்கள்.இதே மாதிரி குடியிருக்கும் வீட்டிற்க்கும் நான்குமால்கள் என்று சொல்லப்படுகின்ற எல்லைக்கல் இருக்கும்.
அடையாளத்துக்காக குத்துக்கல் ஊன்றப்பட்டு இருக்கும் அதற்கான ஆவனம் மற்றும் புலப்படம் இருக்கும். இந்த மண்தரையில் இவ்வளவு அடையாளம் இருந்தும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தீர்க்கப்படாமல் குவிந்து கிடக்கும் நிலையில்

பரந்துவிரிந்த கடலில் எந்த அளவு குத்துக்கல்லை நட்டு வைத்து மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்..ஆளும் கும்பலுக்கும் சாதகமாக இருந்தால் சர்வதேசகடல் பிரச்சினையாவது எல்லை பிரச்னையாவது. எந்த விதியும் கிடையாது. அதுவே சாமானிய மக்களாக இருந்தால் விதி,எல்லை அளவு என்று எல்லா மயிறும் களத்தில் வந்து நிற்க்கும்.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்ப மையம் மதுரை கிளை இதே மன்றத்தில் வழக்கு போட்டது. ஓரிரு விசாரனைக்குப்பின் அவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது சமாதி கட்டுவதுதான் பாக்கி இருக்கிறது. இதே மாதிரி ஒவ்வொரு வழக்கிலும் உத்திரவு போடுவது.அதை அமுல் படுத்தாத அதிகாரிகளுக்கு மறு உத்திரவு போடுவதும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமுல்படுத்த மறுத்து திசை திருப்புவது ஒத்தி போடுவது இப்படியே ஒத்தி போட்டு வழக்குகள் தேங்குவதும்.  பிறகு மலத்தைவிட மலம் துடைக்கும் பேப்பர்கள் பெருகுவதும்தான் தீராத நிலையாக உள்ளது.பிறகு இந்த மலம்துடைக்கும் பேப்பர்களின் எண்ணிக்கையை வைத்து இந்தியா வல்லரசாகிறது என்று கூப்பாடு போடுவதுமதான் நடக்கிறது..

செவ்வாய் 15 2011

டாஸ்மாக்கின் அருமைகளும்,பெருமைகளும்!!!

உறவுக்கார மணமகனுக்கு
பெண் பார்க்க சென்றதில்
மணப்பெணணுக்கு மாப்
பிள்ளையை பிடிக்கலையாம்

எந்த கெட்ட பழக்கமுமில்லாத
நலழொழுக்கம் நிறைந்த மாப்
பிள்ளையை பிடிக்காத காரணத்தை
கேட்டபொழுது நல்ழொழுக்கம்
இருந்தென்ன பயன் டாஸ்மாக்
குடிமகனாக இல்லாதது பெருங்
குறையாம்.

இது கேட்டு விரக்தியடைந்த மாப்
பிளளையோ, வெகுண்டெழுந்து
சென்றார் டாஸ்மாக்கை நோக்கி
குடிமகனாகவதற்க்காக..................

                         ---------------------

அயல்நாடு சென்ற பயணியிடம்
எந்நாட்டு குடிமகன் என்று
வினவினார் அந்நாட்டு அதிகாரி
பயணியோ நெஞ்சை நிமிர்த்தி
சொன்னார் பெருமையாக யாம்
டாஸ்மாக் குடிமகனென்று!!!!
                           ----------------

திருடன் ஒருவன் சக திருடனிடம்
கேட்டான்.அவனை ஏன்?
காவலர்கள் அடித்து இழுத்து
செல்கிறார்கள்.திருடியதில்
பங்கு கொடுக்காததினாலா ?

சக திருடன் சொன்னான்.
இல்ல மச்சி. டாஸ்மாக்
இருக்கும் தெருவில் குடிக்காமல்
நெஞ்சை நிமிர்த்தி சென்றனாம்
அதற்க்காகத்தான் நம் பங்காளிகள்
அடித்து இழுத்து செல்கிறார்கள்

ஞாயிறு 13 2011

முன்னால் உலக வங்கி அதிகாரியின் அறிவுரை

மாணவர்களே!
                              என்னைப் போல் நீங்கள் உலக வங்கியில் பணியாற்றி பின் இந்தியாவில் நிதியமைச்சராக இருந்து பின் பிரதமராக பணி செய்து வருகிறேன்
நான் நிதியமைச்சராக இருந்த காலந்தொட்டே நான் பணியாற்றிய உலக வங்கிக்கும் அதன் தலைமை பீடமான அமெரிக்காவுக்கும் மிகவும் விசுவாவமாக நடந்துள்ளேன்.அப்படி நடந்ததினால் இன்றைக்கு பிரதமராக இருந்து உங்களுக்கு அறிவுரை கூறும் பிரதமராக என் வாழ்க்கையை வளமாக்கியுள்ளேன் .என் விசுவாசத்துக்கு அறிகுறியாக ஒருநல்ல அடிமைக்கு
அறிகுறியாக அமெரிக்காஅங்கு மூச்சுவிட்டால் நான் இங்கு தும்முவேன்.என் பிறந்த நாளை வானிலே கொண்டாடி மகிழ்ந்தேன். மாவீரன் பகத்சிங் பிறந்த
மண்ணில்தான் நானும் பிறந்தேன. அவர் வேறுவழியில் மாவீரானார்.நான்
உலக வங்கிக்கும் அமெரிக்காவுக்கும் நம்பகமான விசுவாசமான அடிமையானேன். ஆகவே,மாணவர்களே! நன்கு படித்து வளமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்ளுங்கள். நான் இந்தியாவின் அனைத்து
வளங்களையும் தனியார்க்கு தாரைவார்த்து உலகமயமாக்கல் எனும் அத்தியாயம் படைத்துவிட்டேன்.

வெள்ளி 11 2011

காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு !

   
பெயர்.  பி.எம்.எல.கல்யாணசுந்தரம்
பதவி.    புதுச்சேரி மாநிலத்தின் கல்வி
.                அமைச்சர்
தகுதி.    பத்தாம் வகுப்பில் தேர்வு எழுத
                 பேனாவில் மை இல்லாததால்
                  வேறு நபரை எழுத வைத்து பெயி
                  லானவர்
இவரைப்பற்றி தகவல் அறிந்தால் அருகி
லுள்ள புதுச்சேரி தலைமை செயலகத்திலோ
அல்லது இவரை தேடி ரீல் விட்டு கானாமல்
போகாமல் தேடி அலைஞ்சு ஓய்வு எடுக்கும்
மூன்று தனித்தனி படையிடமோ தகவல்
தெரிவிக்குமாறு ஓட்டு போட்ட குடிமக்களிடம்
கேட்டுக்கொல்லப் படுவார்கள்.                 

வியாழன் 10 2011

ஏலேய்........ய்......ய்..........மக்கா?








ஏலேய்....ஏத்தின பெட்ரோல் விலய
 குறைக்க முடியாது.பெட்ரோல விலைய
 ஏத்தாமல் இருக்க முடியாது. பெட்ரோல்
விலையை ஏத்தவதற்கு யாரிடமும் கலந்து
ரைக்க முடியாதுலே! ஓட்டு போட்டியாலே!
ஓவ் வேலமுடிஞ்சு போச்சுலே! அடுத்த ஓட்டா?
அத்த அப்போபாப்போம்லே! போராட்டம்,
கீராட்டமுனு வந்தியாலேசுட்டு பொசுக்கி
புடுவேன்.படாவா,உன்னால ஏந் தொப்பிக்
குள்ள இருக்கிற மயிரக்கூட பாக்கமுடியாதுலே!
ராஸ்கல்

பேசாம ஒஞ் சோலிய பாரு!
சொலி இல்லீயா,பேசாம,
டாஸ்மாக் குடிமகனா இருக்கப்பாருலே!

ஏலேய்........ய்......ய்..........மக்கா! என்னலே!
நாஞ்சொல்றது புரியுதாலே!..........

திங்கள் 07 2011

நவம்பர்-7 இரசிய சோசலிசப் புரட்சி நாள் ஓங்குக!!!

நவ-7 நாள் இரசிய சோசலிசப் புரட்சி நாள்!
1917ம் ஆண்டு இரசிய உழைக்கும் மக்கள்
தங்களை அழுத்தி சிதைத்து கொண்டிருந்த
ஜார் ஆட்சியை துாக்கி எறிந்த நாள்
அனைத்துஅதிகாரங்களும் உழைக்கும்
மக்களின்சோவியத்துக்களுக்கே என்று
முழங்கி பாட்டாளிவர்க்கத்தின் சர்வதி
காரத்தை நிறுவிய நாள்!

இன்று இந்தியா எப்படி தெற்காசியாவின்
பிற்போக்கு தனத்தின் கோட்டையாக
இருக்கிறதோ! அதே போல் அன்று
ரசியாவும் பிற்போக்குதனத்தின்
கோட்டையாகவும் விளங்கியது.ஜார்
ஆட்சியில் விவசாயிகளும் தொழிலாளி
களும் கொடுரமாக சுரண்டப்பட்டனர்.
வரிக்கு மேல் வரி விதித்தனர்,ரொட்டிக்
கும் பாலுக்கும் சர்க்கரைக்கும் திண்டாடினர்.
கடுமையான விலைவாசியால் கசக்கி
பிழியப்பட்டனர்.இதோடு அண்டை
நாடுகளுடன் மூலதனப்போட்டியால்
இடைவிடாத யுத்தம் வேறு, இதனால்
நாடே திவலாகிப்போனது.இந்த அநீதிக்கு
எதிராக மக்கள் போராடி ஜார் ஆட்சியை
துாக்கி எறிந்தார்கள். இதை பயன்படுத்தி
ஆட்சிக்கு வந்த கெரன்ஸ்கி ஆட்சியிலும்
ஜார் ஆடசியின் கொடுமைகள் தொடர்ந்தது.

இந்நிலையில்தான் ரசியாவின் பாட்டாளி
களும் விவசாயிகளும் தோழர் லெனின்
தலைமையில் போல்ஷிவிக் கட்சியில்
அணிதிரண்டு ஆயுத எழுச்சிமூலம்
சோசலிசப்புரட்சியை நடத்தினார்கள்.
மக்களின் பிரதிநிதிகளானசோவியத்
துகளின் கையில்தான் அனைத்து
அதிகாரங்களும் அளிக்கப்பட்டன

அதிகாரமுள்ள இந்த சோவியத்துகளை
நிறுவிய பின் நாட்டை தொழில்
மயமாக்கினார்கள்.விவசாயிகளுக்கான
கூட்டுப்பன்னைகளை அமைத்தார்கள்
இரயில்வேக்களை அமைத்தார்கள்.
நாட்டை மினமயமாக்கினார்கள்.இதனால்
மக்களுக்குஅடிப்படை தேவையான
வீடு,கல்வி,மருத்துவம் போன்றவற்றை
இலவசமாக நிறைவேற்றப்பட்டது.
சோவியத்துகளின் அதிகாரத்தின் 70
ஆண்டுகளில்ஒரு முறைகூடவிலைவாசி
உயரவே இல்லை..மலிவான விலையில்
மக்களுக்கு உணவு,உடைகள் வழங்கப்
பட்டன..இவையெல்லாம்பரலோகத்திலோ
அல்லது விட்டலாச்சார்யாவின் ஜிபும்பா
படம் மாதிரிபோல் நடைபெறவில்லை.

ரசிய சோவியத்துகளின் சோசலிச
ஆட்சியில் மக்களுக்கு ஜனநாயகம்
இருந்தது.சுரண்டல்,பேர்வழிகள்
எதிர்புரட்சிகும்பல்கள். மதவெறியர்கள்
கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.தேசிய
இனங்களுக்கு சுயநிர்ணயம் வழங்கப்
பட்டது.ஆட்சியதிகாரத்திலும் கல்வி,
வேலை,சொத்திலும் பெண்களுக்கு சம
உரிமை வழங்கப்பட்டது. எல்லா
வற்றுக்கும் மேலாக கோடிக்கணக்கான
மக்களை பலி கொடுத்து இட்லரின்
பாசிச கொடுமைகளிலிருந்து உலகத்தை
பாதுகாத்தார்கள்.

இந்திய நாட்டிலோ,மக்களைப்பற்றி
கவலைப்படாத ,வல்லரசுகளுக்கு
தனியார்மயம்- தாராளமயம் என்ற
பெயரால் காட்டிக்கொடுக்கும் கூட்டி
கொடுக்கும் ஆட்சியாளர்களால்
மக்களை உணவுக்கும் மருத்துவத்
திற்கும் வக்கற்றவரகளாக
மாற்றியள்ளனர்.பன்னாட்டு
முதலாளிகளுக்கு கோடி கோடி
யாக வரிசலுகைகளும் மானியங்
களையும் வாரி வழங்கிவிட்டு.
சாராயம் காய்ச்சி மக்களை
குடிகாரகளாக்கிவிட்டு பிச்சை
யிடுவது போல்இலவசங்களை
போடுகிறது.கல்வி உரிமைக்கு
போராடினால் தடியடி நடத்தவும்
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
போராடினால் போலீசை ஏவி
சுடவும் செய்கிறது. அத்துமீறும்
போலீசு நாய்களை தண்டிக்க
நீதியும் கிடைப்பதில்லை
அணுஉலை பாதுகாப்பானது
என்று சொல்லிக் கொண்டே
மக்களின் உயிரைபறிக்கிறது அரசு.

இத்தகைய கொடுமைகளிருந்து
நமதுநாடும் விடுதலை அடைய
வேண்டும்என்றால்,அடிமைச்
சங்கிலியை உடைத்தெறிந்து
சோசலிசப் பொன்னுலகை
படைக்க வேண்டுமென்றால்..
முதலில் டாஸ்மாக்கை புறந்
தள்ளி சினிமாவைஒதுக்கி வைத்து .
போலித்தேர்தல்களை புறக்கணிக்க
வேண்டும் மனமுவந்து அமைப்பு
நிறுவன ஒழுங்கமைப்பில் பயிற்சி
பெற வேண்டும.சோசலிச தத்தவத்
திலும் நடைமுறையிலும் கல்வி
ஞானம் உடையவர்களாக மாற
வேண்டும்.

அதற்கு நக்சல்பாரிகளின் தலைமையில்
புதியஜனநாயகபுரடசிக்குஅணிதிரள
வேண்டும். நக்சல்பாரிகளின்றி
வேறுமார்க்கம் எதுவுமில்லை. இந்தப்
போரே இறுதியானதும் முடிவானதுமாகும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...