ஞாயிறு 01 2015

கண்களில் தெரிந்த ஏற்றத்தாழ்வு.......

படம்-malar.tv

தெய்வீகக் கண்கள்
அழகான கண்கள்
காதல் கண்கள் என்று
பார்த்தவர்கள் சொன்னார்கள்

உற்று... உற்று
பார்த்தேன் அந்தக்
கண்களை அதில்
காதல் தெரியவில்லை
காமம் தான் தெரிந்தது

அந்தக் காமம் கூட
ஒரு தலை பட்சமாய்
இருந்தது. இருப்பவனுக்கு
தான் கிடைக்கும் என்று.........................




18 கருத்துகள்:

  1. அருமை நண்பரே வாழ்த்துகள் கவிதையை தொடருங்கள்
    தமிழ்மணம் 1

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நண்பரே!...

    பதிலளிநீக்கு
  3. அதில் வலி தெரியவில்லையா? வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. #இருப்பவனுக்குதான் கிடைக்கும்#
    நீங்களும் சேர்த்து வச்சுகிட்டு பார்க்க வேண்டியதுதானே :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  5. அண்ணே...
    கண்களில் மட்டுமா ஏற்றத்தாழ்வு
    சொல், செயல் என
    எல்லாவற்றிலும்
    ஏற்றத்தாழ்வு தெரியுமே!

    பதிலளிநீக்கு
  6. மூவாயிரம் வருடங்களாக காமம் என்ற ஒன்று மட்டுமே இருந்து வந்துள்ளது. அந்த ஒற்றை வார்த்தயிலேயே அனைத்தும் அடங்கும்..., காதல், கன்றாவி.. மாங்கல்யம், மண்ணாங்கட்டி.. என எதுவுமே இலக்கியங்களில் காணப்படவில்லை...
    எவனோ சந்துல காதல் என்ற வார்த்தையை சொருகி, பின்பு அது உண்மைக் காதல், டைம் பாஸ் காதல், கள்ளக் காதல், பாராக் காதல் என பரிணாம வளர்ச்சியடைந்து இன்று காதல் என்றால் அது இதயம், ஈரல், குடல் என்று வர்ணித்து மேட்டருக்கு முந்தைய நிலை எனவும், காமம் என்றால் மேட்டர் மட்டுமே என மண்டையில் திணிக்கப்பட்டுள்ளது...
    காமத்துப்பால் எழுதியவர் இப்போதிருந்தால் அந்த எழுத்தாணியால் தன் தலையில் "காதல்"முருகன் போல் குத்திக் கொண்டிருப்பார்...!! (பின்னாளில் அதையும் இன்பத்துப்பால் என மாத்தினான் பாரு ஒரு அறிவாளி..)

    பதிலளிநீக்கு
  7. கவிதைப்பரிட்சயம் அவ்வளவாக இல்லாததால் இக்கவிதை என்ன சிறுமூளைக்குப்புரியவில்லை அண்ணா !

    பதிலளிநீக்கு
  8. வலி தெரிந்தது அது ஏற்றத்தாழ்வாக தெரிந்தது. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அந்த கண்களில் படத்த உற்று பார்த்தற்க்கே.....என்னமோ எனக்கு ஆயிபோச்சு.ன்னு பேச ஆரம்பிச்சுடாங்க.....தலைவரே.... இதுல எங்கிட்டு சேத்து வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ஏங்கண்ணு அம்புட்டு துல்லியமா தெரியாதுங்கண்ணா.... ஏற்றத்தாழ்வு மட்டும்தான் தெரிந்தது. திரும்பவும் உற்று பாரத்தால் தாங்கள் சொல்வது மாதிரி சொல் செயல் எல்லாம் தெரிய வாய்ப்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான் தலைவரே... ஒவ்வொரு சமூக நடப்புக்கும் தாங்கள் கூறுவது போல் காமத்துபால், இன்பத்துபால் தயிர் பால் மோர்பால் னு அறிவாளிகள் மாத்திக் கொண்டே செல்வார்கள் தலைவரே....

    பதிலளிநீக்கு
  12. என் மூளை பெரிய மூளைன்னு நிணைத்துவிடாதீர்கள். இணைய தலைவர்கள் தலைவிகள் ஊதி விட்டதில், நான் பிடித்த சிறு துளி அண்ணா....

    பதிலளிநீக்கு
  13. ஒரு தலைப் பட்சத்தில் அதிகம் வெளிப்படுவதே காமம்
    இருதலை பட்சத்தில் வெளிப்படுவது காதல்/சரசம்/சல்லாபம் இன்னும் எப்படி சொல்ல.?...
    கவிஞரே கவிதையாய் சொல்லும் பார்க்கலாம்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  14. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது மாதிரி,. கவிஞர் பட்டம் கொடுத்து கவிதையாய் சொல்லும் பார்க்கலாம் என்றால்..ஆட்டத்துக்கே நான் வரல என்றுதான் சொல்லத் தோன்றும் திரு. நட்புடன் புதுவை வேலு அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. பேருந்துக்கு முன்னால் நின்று கொண்டு பேருந்து வரவில்லை என்று நிணைத்து கொள்வதும் அவரவர் மனதை பொருத்தது என்றுதான் திரு. வலை சித்தர் அவர்கள் சொல்வார் என்று நிணைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  16. காமாலை கண்ணுக்கு பாரப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது மாதிரி.. எனது கண்ணுக்கு இப்படி தெரிந்திருக்கிறது. திரு. ஐயா.....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...