வெள்ளி 24 2017

என் மிதியடிக்கு விடை கொடுத்த கதை,

என் தாயைப்போல்
என் பாதங்களை பாது
காத்த என் மிதியடிக்கு
நான் விடை கொடுத்த
கதை தெரியுமா? உங்களுக்கு

திருமண மண்டபத்தின் வெளியில்
பாதுகாப்பு இல்லாமல் நான்
விட்டுச் சென்ற போது
செருப்பு திருடர்களால் கள
வாடப்  பட்ட போதும்
அவர்களிடம் தப்பித்து என்னிடமே
வந்து என் பாதங்களை
பாது காத்தது எனது மிதியடி

அந்த மிதியடிக்கு எந்த
 தீங்கும் வராமல் நன்றிக்
கடனாக பாதுகாத்து வந்தேன்
 அசுத்தமாக இருக்கும் பஸ்
நிலைய கட்டண கழிப்பறைக்கு
செல்வதில்லை ஏன் என்றால்
என் பாதங்களை சுத்தமாக
பாதுகாக்கும் அதுக்கு அசுத்தம்
ஏற்படக்கூடாது என்பதால்.

கொளுத்தும் வெயில் சூட்டில்
என் தாயைப்போல்
என் பாதங்களை பாதுகாத்த
அந்த மிதியடியை  வீட்டுக்கு
வந்ததும் நன்றி மறந்தவனாக
வாசல்படி வெயிலில் வாட
விடாமல் பாது காத்தேன்.

செய்த வேலைக்கு கூலியாக
அந்த மிதியடியை வாங்கி
வருடங்கள் சில கடந்த
போதும் என் பாதங்களை
என் தாய் போல்
பாது காத்த என்
மிதியடி என் தாயைப்
போல் என்னை தவிக்க
விட்டு எனக்கு விடை
கொடு என்றது மனமில்லாமல்
துக்கத்துடன் என் மிதி
அடிக்கு விடைகொடுத்தேன்.

பல பேரை அம்மா
என்று அழைத்தாலும் என்னைப்
பெற்ற அ்ம்மாவை அழைப்பது
போல் அழைக்க முடியுமா??

அது போலத்தான் என்
பாதங்களை பாது காத்த
இந்த மிதியடியும்..............



9 கருத்துகள்:

  1. பல பேரை 'அம்மா' என்று அழைத்தாலும்
    என்னைப் பெற்ற அம்மாவை அழைப்பது போல்
    அழைக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. செருப்படி சத்தம் எனக்கும் கேட்கிறது :)

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே காலணியை பலரும் உதாசீனப்படுத்தும் கண்ணோட்டத்தில் காணும் பொழுது உங்கள் பார்வை உயர்வானது

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசவரிக்குமகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  5. செருப்படி சத்தம் என் காதில் விழுகிறது :)

    பதிலளிநீக்கு
  6. மிதியடி மீது இததுணை பாசமா

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...