செவ்வாய் 17 2017

"கடவுள் இல்லை” என்றவர்கள் செய்த அரும்பணி....




"கடவுள்  இல்லை என்பவர்களுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளே இல்லை என்ற பகுத்தறிவாளர்கள், இயக்கங்களெல்லாம், ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடணும்ன்னு சொல்றாங்க..?", "சாமிதான் இல்லன்னு சொல்லறாங்களே, அப்புறம் எதற்கு இத பத்தி அவங்க ஏன்? பேசறாங்க..?"

-- சாதி வெறியும், மத வெறியும் கொண்ட சிலர், தாங்கள் என்னவோ சாமர்த்தியமாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.....

கடவுள் இல்லை என்றவர்கள் தான் எல்லா சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார்கள்.

கடவுள் இல்லை என்றவர்கள்தான் சாமியின் பெயரில் நரபலி கொடுக்கும் - எளியவர்களைக் கொலைசெய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

கடவுள் இல்லை என்றவர்கள்தான் பெண்களை தேவடியாக்களாய் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை சட்டம் போட்டு தடுத்தார்கள்...

கடவுள் இல்லை என்றவர்கள் தான் சதி என்ற பெயரில் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், தமிழ் மொழியிலும், கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையை சட்டத்தில்  அளித்தார்கள்...

கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், கோயில் சொத்துக்களும், நிலங்களும் கொள்ளைபோவதை தடுக்க, ஹிந்து அறநிலையத்துறையை ஏற்படுத்தி அவற்றை பாதுகாத்தார்கள்.

இப்படி ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் " கடவுள் உண்டு" என்றவர்கள், மதவெறி கொண்டு, மூர்க்கமான வெறித்தனத்துடன் அத்தனை நல்ல காரியத்தையும் எதிர்த்தார்கள். 

எல்லா சூழலிலும் அவர்கள் உச்சமாய் கத்திய ஒரு சங்கதி என்னவென்றால் "சாமி இல்லை என்பவனுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளை மறுக்கும் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இதில் என்ன அக்கறை" என்பதுதான்.

எல்லாக் கால கட்டத்திலும் இந்த மதவெறியர்களை, சாதிவெறியர்களை மீறித்தான் இதுபோன்ற  காரியங்களை, மக்கள் சமத்துவ செயல்களை, சாதித்திருக்கிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அது போலவே, முறையான பயிற்சி முடித்தவர், எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும், கோயில் அர்ச்சகர் ஆகுவதையும் சாதிப்பார்கள்.....

நன்றி!  ஜே.பி

5 கருத்துகள்:

  1. கருத்துகள் மறுக்க இயலாதவை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. இஸ்லாம் தவிர்ந்த எல்லா மதங்களுமே, தங்களது மூட நம்பிக்கைகளை காலத்திற்கு காலம் தங்களை சிறிது சிறிதாக மாற்றி சீர்அமைப்பு செய்தே வந்திருக்கின்றன.

    //கடவுள் இல்லை என்றவர்கள்தான் சாமியின் பெயரில் நரபலி கொடுக்கும் - எளியவர்களைக் கொலைசெய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.//
    ஆஹா! ஆஹா! மிருகங்களை உயிர்ப்பலி கொடுத்து ஆலயங்களில் வழிபடுவது தமிழகத்தில் தடை செய்யபட்ட போது, அது ஒரு ஏழை மக்களின் நம்பிக்கை, பண்பாட்டின் மீதான தாக்குதல் என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள், திராவிட பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸ்டுகள் ஒரு பகுதியினர்.
    இவர்கள் எல்லாம் அதே போல் அப்போது நரபலி தடை செய்யபட்ட போது ஏழை மக்களின் மரபு சார்ந்த நம்பிக்கைசார்ந் விஷயம் அதில் அரசோ அல்லது சட்டமோ தலையிட முடியாது என்று எதிர்க்காம விட்டார்களே அதற்காக அவர்களின் அர்பணிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    பின் குறிப்பு:
    இந்தியா ஏழை மக்கள் நிறைந்த நாடு. பணம் கொண்டவர்கள் மிகவும் சிறுபான்மையினர். ஆனால் பெரும்பான்மை ஏழை மக்களின் மூடநம்பிக்கைகளை எல்லாம், ஏழை மக்களின் நம்பிக்கை என்பதால் அதை ஆதரிக்க வேண்டும் ஊக்கிவிக்க வேண்டும், என்பது என் ஒரு வினோதமான அழிவு கொள்கை?
    இப்படியான தவறான சிந்தனைகளே இந்தியாவை கொண்டுவந்து பின் தங்கிய நாடுகள் வரிசையில் நிறுத்தியுள்ளது 100 வது இடத்தில்.பாகிஸ்தான் 106 இடத்தில் .

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பெரியார் மட்டும் இல்லையோல்
      தமிழர்களிடையே பகுத்தறிவு பற்றி ஒரு தெளிவான அதிக சிந்தனைகள் ஏற்பட்டிருக்கலாம் ஐயா.
      இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பது, மனிதர்களிடம் ஜாதி பார்த்து ஒரு ஜாதியினரை மட்டும் தாக்குவது பகுத்தறிவு சிந்தனைகளுக்கு உட்பட்டது இல்லை ஐயா.

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...