வெள்ளி 10 2017

நண்பர் சொன்ன பேய்(நீதீ) கதை....................

ஒரு படகில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 

1. இராவணன்

2. இராமன்

3. கிருஷ்ணன்

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. "உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்.

"மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்...
இராமன்  தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.   

கிருஷ்ணன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான்.   பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.....

"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"என்றது

உடனே இராவணன் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு ..."இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான்....

பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

 இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்'க்கே தண்ணி காட்டியவர்  இராவணன்தான்

2 கருத்துகள்:

  1. படிக்கும்போதே நான் நினைத்ததே முடிவில் வந்தது ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. இந்த இராவணன்தான் மிகவும் பெரிய கடவுள் பக்தனாம்.
    பேய் பக்தனாகவே இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...