வியாழன் 09 2017

ஒரு நன்றிக்கடன்..................



நண்பர் வீட்டு
துக்க நிகழ்ச்சியில்
 என்னை கண்ட
நண்பர் ஒருவர்
கேட்டார் என்ன?
தாடி என்று......

மற்றவர்களுக்கு சொன்ன
அந்த ரகசியத்தையே
சொன்னேன் நண்பரிடம்

நண்பரே அந்த
ரகசியத்தை உங்களிடம்
மட்டுமே சொல்கிறேன்
வேறு   யாரும்
கேட்டாலும் சொல்லிடாதிங்க..
அடிச்சு கேட்டாலும்
சொல்லிடாதிங்க  நண்பரே

என் மண்டையில
அறிவு வளரல
நானும் பலமுறை
முயற்சித்தும் முடியல
நான் முயற்சிக்காமல்
உரம் எதுவும்
போடாமல் வளர்வது
இந்தா தாடி
மயிர் மட்டும்தான்
நண்பரே....என்னையும்
மனிதனாக மதிக்கும்
இந்த தாடி
மயிரை நான்
மதிக்க வேண்டாமா
அந்த நன்றிக்குத்தான்
இந்த தாடி


ஆர்வமாய் கேட்ட
நண்பர்க்கு கண்கள்
சிவந்தது வாய்
முனு முனுத்தது.




1 கருத்து:

  1. அரேபியர்கள் தாடி வளர்ப்பதின் இரகசியம் அறிந்து கொண்டேன் நண்பரே

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...