சனி 05 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-23




நீதிபதி அரி பரந்தாமன்


போன வாரம்..அதற்கு முந்தின வாரத்துக்கு முந்தின வாரம்...செய்தி தாள்களில் ஒரே பரபரப்பான செய்தி...உங்களுக் கெல்லாம் தெரியுமே? என்ற போது ..ஆமாம் என்று தலையாட்டியவர்கள்  எல்லாரிடமும் என்ன செய்தி என்று கேட்டபோது.. விழித்தார்கள். பிறகு சுதாரித்துக் கொண்டு நான் சொன்ன விசயத்தை சொல்லாமல் வேறு வேறு விசயத்தை சொன்னார்கள்..

பிறகு நானாக ... நேத்து என்ன சாப்பிட்டோம் என்று நமக்கே தெரியாது.... இதுல முந்தின வாரத்தக்கு முந்தின வாரம் பரபரப்பான செய்தி எது என்று கேட்டால் விழிக்காமல் என்ன செய்வார்கள்.... சரி

விபரத்துக்கு வருகிறேன்... பேராசிரியர் ஒருவர் அதுவும் பெண் பேராசிரியர் தான் பயிற்றுவிக்கும் மாணவிகள் சிலரை  கல்வியை ஆளும் உயர் அதிகாரிகளின் இச்சையை தணிப்பதற்கு அழைத்த விவகாரம்தான் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது... பேஸபுக், வாட்ச் ஆப், டிவிட்டர் என்று ஏககலத்திலும் சின்னா பட்டுக் கொண்டு இருந்தது..


அந்த விவகாரத்தில் யாரையாவது பலிகடாக்கி ஊத்தி மூடுவதற்கு ரெண்டு விசாரணை கமிட்டி போட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்குமே.... தெரியலைன்னா  பின்னோக்கி போய் திரும்பி பாத்திட்டு வாங்க...அடுத்து ரெண்டு விசாரணை கமிட்டிகளும் தங்கள் தங்கள் பங்குக்கு ஆழமாக குழி தோண்டி கொண்டியிருந்தததை கண்டு பிடித்த மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்பு குழுவானது ்  சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஊழல்/,பாலியy;/ /காவி -எதிர்ப்பு   என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடத்தியது.


அந்த கூட்டத்திற்கு புறப்படுவதற்கு முன் என்னை தடுப்பது முகமாக திடிரென்று மழை பெய்தது. இம்சையாக தெரிந்தது. எனக்குத்தான் இம்சைகளை தாங்கி தாங்கி பழக்கமாகி விட்டதால்... மழையில் நணைந்தவாறு எனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன்.... அப்படி புறப்பட்டு செல்லும்போது  நட்ட நடு ரோட்டில் ஒதுங்க கூட இடமில்லாத  வேளையில் சட சட வென்று மழை பலமாக கொட்டி என்னை முழவதுமாக நணைத்து விட்டு “ யாருகிட்டே  என்று கேட்டது போல் இருந்தது....

கூட்டம் நடக்கும் இடத்திற்கும்  என் வீட்டு இடத்திற்கு நடுவில் மதுரை  மொழியில் சொல்வதென்றால் நடு செண்டரில் அந்தப் பக்கமும் போக முடியாம...இந்த பக்கமும் போக முடியாம .... ஒன்னும் செய்யமுடியல....

பிற கு ஒருவழியாக கூட்டம் நடக்கிற அரங்கிற்கு சென்று மின்விசிறி காற்று அதிகமாக  கிடைக்கும் இடத்தை பார்த்து அமர்ந்து விட்டேன். கூட்டத்தில் தலைமை, வரவேற்புரை  போன்றவைகள் முடிந்த பிறகு  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி  திரு. அரி பரந்தாமன் அவர்கள் சிறப்பரை ஆற்றினார்

தமிழகத்தையே அதிர்ச்சியுறவைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று, கருத்துகளைக் கூறிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர்கள் சிலர்மீது நடவடிக்கை எடுத்துள்ளதும், பல்கலைக்கழக ஆசிரியர் அலுவலர் யாரும் இதைப் பற்றி பேசக் கூடாது என்று துணைவேந்தரும், பதிவாளரும் கூறியிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் கூட்டமைப்பு,  4-ம் தேதி மதுரையில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், "உச்ச நீதிமன்ற நீதிபதியின் செயல்பாட்டையே, சக நீதிபதிகள் வெளியில் வந்து ஊடகத்திடம் பேசுகிறார்கள். அப்படியிருக்கும்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசக் கூடாது என்று துணைவேந்தர் செல்லத்துரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்மலா தேவி விவகாரத்தில் பல விஷயங்கள் மறைக்கப்படுகிறது. சமீப காலமாக பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்கள் ஸ்டிராங்காக இல்லை. மாணவர் சங்கங்களின் பவரை குறைத்துவிட்டார்கள். அப்படி இருந்திருந்தால், மாணவிகளுக்கு எதிரான புகார்கள் வராது. ஆசிரியர் சங்கங்கள் பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்" என்று பேசினார்.

கூட்டம் முடிந்து என் ஆடைகளும் நன்றாக காள்ந்திருந்த பின் கடைசியாக ஒரு தோழருடன் பேசிக் கொண்டு அரங்கத்தின் வாசலில் நின்று கொண்டு இருந்தபோது ஒருவர் வந்து நிர்மலா தேவிக்கும் கவர்னருக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.  எனக்கு தெரியாதே என்று பதில் சொன்ன பிறகு.. மீண்டும் என்னை விடாமல்..அவர் உங்களுக்கு எல்லாம் தெரியும் சொல்லுங்கள் ..“ நிர்மலாதேவி விவகாரம் என்ன ஆகும். என்றார்...

கேட்டவர் முத்தாயப்பாக எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி விட்டதால்.. நானும் இனி என்ன  “ ஊத்தி மூடிருவாங்கே..” என்றதுதான் தாமதம் விருட்டென்று சென்றுவிட்டனர்.. பேசிக் கொண்டு இருந்தவரிடம் கேட்டவர் யார் என்றேன்.... உங்களின் இம்சைகார பங்காளிதான் என்றார்.

எங்க போனாலும் இம்சைகள் என்னை விடாது போலிருக்கே....

1 கருத்து:

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...