செவ்வாய், மார்ச் 23, 2021

பிறந்தநாள் காணும் இராவணனுக்கு வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்!!

 


மீ.ப.
என்னாது இராவணனா ? ஏங்க நீங்க யாரு ? புள்ளைக்கு அப்பாவை வரச்சொல்லுங்க ஏதையாவது ஒரு பேர வெச்சுட்டா அப்புறம் மாத்த முடியாது பார்த்துக்கோங்க...!!!
பிறந்த கையோடு மருத்துவமனையில் பெயர் எழுதி கொடுக்கும் படிவத்தை இவன் தந்தை தோழர் பெருமாள் கொடுக்கும்போது மேற்படித்தான் கேட்டார் அந்த பெண் அலுவலர்!!
'மேடம் நான்தான் பிள்ளைக்கு அப்பா '
ஏன் என் பிள்ளைக்கு இராவணன் என்று பெயர் வைக்க கூடாதா என கேட்க,,!
அட என்னங்க நீங்க இராமாயண கதையில சீதையை கடத்திக்கொண்டு போனவன் தானே இராவணன் போயும்போயும் அவன் பெயரை பிள்ளைக்கு சூட்டலாமா??
நல்லது,,!! நீங்களே சொல்லிட்டீங்க இராமாயணம் கதைதான்னு சரி அந்த கதைப்படியே பார்த்தாக்கூட ..!
இராவணன் தன்னை விரும்பாத ஒரு பெண்ணை தொட்டாலே தலை சுக்குநூறாகி விடும் என்று இருக்கிறது..!!
அதன்படி பார்த்தால் சீதையை தொட்டவுடனேயே இராவணன் தலை வெடித்திருக்கவேண்டுமே.!!??
இப்போ சொல்லுங்க சீதையை இராவணன் கடத்தினானா?? இல்லை
இராவணன் மீது மயங்கி சீதையே அவனை கடத்த சொன்னாளா?? அதுபோக இராவணன் அய்யோக்கியனாக இருந்திருந்தால் சீதை எப்படி கற்ப்போடு வந்திருக்க முடியும் ??
என பெருமாள் கேட்க...!!
தேவையில்லாம வாயை கொடுத்துவிட்டோமோ என்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு இருந்த அலுவலரிடம் பெருமாள் சொன்னார்... மேடம்....!!
வாலி'யை பின்னாலிருந்து கொன்ற துரோகி! மனைவியின் கற்பை சோதிக்க தீயில் இறக்கிய கொடுரன் இராமன் கதைதான் இராமாயண கதை..!!
அதுமட்டுமில்லாமல் இராமாயண கதை ஆரிய திராவிட போரின் பிம்பம்தான் என பல்வேறு வரலாற்று ஆராய்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள் எனவே கதை கதையாகவே இருந்திட்டால் பரவாயில்லை , ஆனால் கதையில் வரும் இராமனை கடவுளாக்கி அதையே அரசியலாக்கி இன்றைக்கு வரைக்கும் ஒரு இனத்தின் மீது அட்டூழியத்தை அரங்கேற்றி வரும் நாட்டிலே ...!!
இராமன்கள் ஏராளமாய் பிறக்கிறார்கள் !! அரிதாகத்தான் இராவணன்கள் பிறக்கிறார்கள்!! என சொல்ல,, அலுவலர் கேட்டார் இப்போ நான் என்னங்க செய்ய...!!
என் பிள்ளைக்கு நான் எழுதிக்கொடுத்த #இராவணன் என்கிற பெயரையே பதிசெய்து கொடுங்கள் என்றார் பெருமாள்!!
அப்படி பேரு வைக்கவே பெரும் விவாதம் நடத்தியது இந்த பிள்ளைக்குத்தான்!!
எனவே இன்று பிறந்தநாள் காணும் எங்கள் இராவணனுக்கு
வாழ்த்துக்கள்
,,
வாழ்த்துக்கள்
.!!
குழந்தை மற்றும் நிற்கிறார் இன் படமாக இருக்கக்கூடும்
பீனிக்ஸ் பறவை, Chandran Veerasamy மற்றும் 686 பேர்
157 கருத்துக்கள்
84 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

8 கருத்துகள்:

  1. தங்கள் செல்வன் இராவணனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. இராவணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு