ஏற்கனவே...அவருக்கு அடித்த அடியில் செவிப்பறை கிழிந்ததால் வலது காது கேட்காமல் போய்விட்டது.... தற்போது கொரோனா அழைப்பில் போயி சிக்கி தவித்து மீண்டு வந்ததால் இடது காதும் அவுட்டு ஆகி, பார்வையும் குறைந்தது, ஏதோ ஒரு அனுமானத்தில் பிறர் பேசுவதை புரிந்து கொண்டு இலை காய்ந்து உதிருவது போல தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். இதில் அவர் மூத்தகுடிமக்கள் வரிசையில் சேர்ந்துள்ளதால்.. இனி அவ்வளவுதான் என்ற நினைவில்....அந்த நாளைப் பற்றி நினைவில்லாமல் வருவாய் குறைந்து கடன்கள் பெருகி யுள்ளதை நினைத்து ஓடிக் கொண்டிருந்த வேலையில்...
அவர் வைத்திருக்கும் ஜீ பைவ் செல் போனுக்கு முதல் ஒரு அழைப்பு வந்தது. பேசும் குரல் பெண்ணா..அல்லது சிறு பிள்ளையா என்று அவரால் கணிக்க முடியவில்லை.
சித்தம் கலங்க வைத்த முதல் அழைப்பு:
அண்ணே!...... வணக்கம்ன்ணே.....
ம்..வணக்கம்......
நல்லாயிருக்கீங்களா ...ண்ணே..!
நல்லாயிருக்கேன்.....
சரி்கண்ணே...... அப்புறம் ன்ணே! நீ்ங்க ரெண்டு மாசமா வட்டி கொடுக்கலண்ணே! இந்த மாசத்த சேர்த்துமூனு மாத வட்டிய கட்டுங்கண்ணே...
கேட்றேன்னு தப்பா நினைக்காதி்ங்க.....நீங்க யாரு? உங்க பேர சொன்னா புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்...
என்னாண்ணே... இப்படி கேட்டுடிங்க...என்ன தெரியலையா....? இல்ல வட்டி கேட்டவுடனே... ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறி்யா...? இப்படி நடிக்கிற வேலய எல்லாம் எங்கிட்ட வச்சுகிடக்கூடாது வைய்யடா போன... நாதாரி...
அய்யோ.. யாருன்னே தெரிலைய... யாருண்ணு கேட்டது க்கு நாதாரின்னு ஒரு வசவ வாங்கிக் கொண்டார்.
சித்தம் கலங்க வைத்த இரண்டாம் அழைப்பு :
தம்பி கணேசா....எங்க போயிகிட்டு இருக்க......
பேங்குக்கு போயிட்கிட்டு இருக்கிறேன்.
என்ன பணம் எடுக்கவா......?
ம்ம்.... ஒன்னும் கேட்கலையே......
கொர்.... கொர்இஇ கொர் கிர்்்ர்ரஃ.
அண்ணே... நீங்க பேசுவது கேட்கலைண்ணா... நீங்க ஆப் பன்னுங்க நான் பேசுறேன்
கட் கட்....................
கிர் கிர்..கிர்..... ஹலோ...நா..... தம்பி கணேசன் பேசுறேன்ங்க.....
தம்பி கணேசனா....? எங்கிருந்து பேசுறீங்க...... யாரு நீங்க...?
சார், ஒரு நிமிசத்துக்கு முன்னாடி என்னிடம் பேசுனிங்கல்ல...... நீ்ங்க பேசினது சரியா கேட்காதினால...ஆப் பன்னி...நா பேசுறேன்னு்க......
ஒரு நிமிச்சத்துக்கு முன்னாடி நான் பேசினேனா.....!!! வைய்யா போன....ராங் நம்பர்ய்யா..........
எம்பேர கரெட்டா சொல்றாங்க...யாருன்னு கேட்டா ராங் நம்பருன்னு சொல்றாங்கே சற்று கோபத்துடன் புலம்பினார்.
புலம்பியபடி சற்று தூரம் சென்றவர் திகைத்தபடி நின்றுவிட்டார். என்னடா இங்கிருந்த பேங்க காணோம் - சுற்றும் முற்றும் பார்த்தார் வங்கியை காணவில்லை. எதிரே வந்தவரிடம்.
சார்.., இங்கே பேங்க் இருந்ததே..எங்கே சார், என்று கேட்டார். இவர் கேட்டது அவருக்கு கேட்கவில்லை... சே...ச்சே... எல்லாருக்கும் காது கேட்காமல் போச்சோ..
வேறு ஒருவரிடம் கேட்க..அவர்..இங்க பேங்க் இல்ல..சற்று தூரம் சென்றால் அங்கு ஒரு பேங்க் இருக்கிறது என்றார். பிறகுதான் அவருக்கு தெரிந்தது மறந்துபோய் பேங்க்கை கடந்து விட்டது..திரும்பி பேங்க் நோக்கி நடந்தார்.
சித்தம் கலங்க வைத்த மூன்றாம் அழைப்பு
மூன்றாவது முறையாக செல் ரிங் அடித்தது. ஜீ பைவ் போனை உற்று பார்த்தார். ஒருதடவைக்கு இரண்டு முறையாக உற்று பார்த்தார். யரென்னு பெயரில்லாமல் போன் நம்பர் மட்டும் காட்டியது.. இந்தத் தடவை பேசுபவர் யார் என்று முதல்லே கேட்டுவிட வேண்டும் என்று உறுதி எடுத்து. போன் அட்டென் ஆனார்.
ஹலோ....
வணக்கம்...
நல்லா இருக்கீங்களா..?ஃ
ம் நல்லா இருக்கேன்.....
வீட்டில இருக்கீங்கலா.... வெளியில இருக்கீங்களாஃஃஃஃ
பேங்க்குக்கு போய்கிட்டு இருக்கேன். சார்.. நீங்க யாருன்னு சொன்னா தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
என்னாது.. நா...யாருன்னு தெரியலைய்யா...
தெரியல சார்......
குரலை கேட்டுமா தெரியவில்லை.....
போன்ல கொறன்னு கொறன்னு சத்தம் வருவதால் சரியா கேட்கல சார்,
நா... யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.....
சார்.. ரெண்டு காதும் அவுட்டு, கண் பார்வையும் மங்கல்.... என்னால கண்டு பிடிக்க முடியல சார், செல்வா..வாவா சார்,
செல்வா... யாரது...
நீ்ங்க செல்வா வான்னு கேட்கிறேன் சார்.
இத்தன வருட பழக்கத்தில் என் குரலை கண்டுபிடிக்கமுடிலையா...
முடியலைன்னுதான் சார் யாருன்னு கேட்கிறேன்.
ம.உ.பா.மை மாவட்ட செயலர் பேசுகிறேன்.
.................. ............... ...........................
சாரி தோழர்.. சாரி தோழர்...
இப்ப தெரிந்ததா.......
தெரிந்தது தோழர்.....
...............................................................
அடிக்கிற வெய்யிலும் அழைத்த செல்போன் அழைப்புகளும் அவரை சித்தம் கலங்க வைத்துவிட்டது..அய்யோ பாவம் ...
ஆத்தாடி...
பதிலளிநீக்குஅம்மாடி....நானெல்லாம் அழைப்பு செய்தாலோ..வருகிற அழைப்புக்கோ..முதலில் என் பெயரை தெரியப்படுத்தி விட்டுத்தான் மறு பேச்சே...
நீக்கு