வியாழன் 28 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -6

 

அவரு பத்தாவது படிச்சுகிட்டு இருந்த காலம். அவரும் அவரது சிநெகிதரும்.  வைகை ஆற்றுக்கு குளிக்கப் போனார்கள்.  சித்திரை விழாவுக்காக ஆற்றில் தண்ணிர் திறந்துவிட்டுருந்தார்கள்.. தண்ணீர் அதிகமாகவே இருந்தது. சிநேகிதர்க்கு நீச்சல் தெரியாததால்.  கரையோரமாக குளித்தார். அவருக்கு நீச்சல் தெரியுமாதலால் ஓடும் தண்ணீரை எதிர்த்து நீச்சலடித்து குளித்தார்.

அவரோடு போட்டி போட்டு ஒருவர் குளித்தார். திடீரென்று கவனித்தவர் அது ஒரு பெண் பிள்ளை என்று தெரிந்ததும் சோர்ந்து போனவர் போல் நடித்து தண்ணீரோடு இழுத்து செல்லப்பட்டார். உடன் குளித்த பெண் அவரின் தலை முடியை பிடித்து இழுத்து வந்து கரை சேர்த்தார். 

அந்தப் பெண்  சிநேகிதரிடம் வயிற்றை அமுக்கச் சொன்னார். சிநேகிதர் ஒப்புக்கு சப்பாக அமுக்கியதைக் கண்டு அந்தப் பெண்ணே அவரின் வயிற்றை அமுக்கி தண்ணிரை வாயிலிருந்து அகற்றினார்.

கண் விழித்த அவர் தமிழ் சினமாவில் காட்டுவது போல் லேசாக கண்விழித்து அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறினார் . அந்த நீச்சல் பெண்ணும் அதற்கு பதிலுரைத்தார். அவ்விடத்தைவிட்டு நகரும் வரை அவரும் அந்த நீச்சல் பொண்ணும் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவரின் சிநெகிதரும் அவர்கள் பேசுவதை  வாய் பொத்தி மௌனமாக கேட்டுக் கொண்டே வாந்தார்.

அந்த நீச்சல் பெண் இவர்களிடம் விடைபெற்று சென்ற பிறகு அவர் தன் சிநேகிதரிடம்  அந்தப் பெண்ணை பார்த்ததும் காதலால் மயங்கிவிட்ட கதையை சொல்லி தன் உள்ளத்தை  திறந்து காட்டினார்.

அந்த சிநேகிதரும் அவரின் நடிப்பை  கண்டுதான் ஒப்புக்கு தான் வயிற்றை அழுக்கியதை கண்டு அந்தப் பெண்ணே அமுக்க வைத்தததையும் அவரின் நடிப்பையும் பாராட்டி னார். அந்த பாராட்டுக்கு பிரதிபலனாக... ஒரு டீயும், வடையும் வாங்கிக் கொடுத்துவிட்டு தங்கள் காதல் நிறைவேறும் பட்சத்தில்... தங்களின் சைக்கிளை எனக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரும் தன் காதல் நிறைவேறும் பட்சத்தில் கண்டிப்பாக இந்த சைக்கிளை உனக்கே அன்பளிப்பாக கொடுத்து விடுகிறேன் உறுதி கூறினார்.

நாட்கள் மாதங்களாகின..மாதங்கள்.வருடங்களாகின.... பள்ளிப் பருவ வயதில் வந்தவர் வாழ்க்கை பருவத்தை கடந்த  ஐம்பாதவது வயதில் அவர் மட்டும் ஆற்றுக்கு வந்தார். வைகை ஆறும் எவ்வளவோ மாறி இருந்தது. துணி துவைப்பவர்களே ஆற்றில் அதிகமாக இருந்தார்கள். ஒரு பக்கம். ஆடு,மாட்டை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர். ஆறும் ஆற்றில்  வரும் தண்ணிரும் மக்களின் மனதைப்போல் நிறம் மாறி வற்றி போயிருந்தது.


(அவர் காதல் நிறைவேறியதா..? ஆ... அவரும் சொல்லவில்லை.. நானும் கேட்கவில்லை. முன்ன பின்ன காதலிச்சாதானே தெரியும் எனக்கு)


4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...