பக்கங்கள்

வெள்ளி 21 2012

ஒரு ஏழையின் தம்பட்டமும் ஒரு குயிலின் கூவலும்....




எட்டு முழ ஆடையுடன்
ஆட்டுப்பால் குடித்து
வந்த ஒரு ஏழையை

ஏழையாக காட்டுவதற்கு
நிறையவே செலவு
செய்ய வேண்டியுள்ள
தென்று ஒரு கவிக்
குயில் கூவியது.

இந்த ஏழை ஒருநாள்
மார்க்சின் மூலதனத்தை
அரைகுறையாக படித்து
விட்டு-நான எழுதியிருந்தால்
மார்கசைவிட நன்றாக
எழுதியிருப்பபேனென்று
உளறி கொட்டியது.

கம்யூனிஸ்டுகளின்
சமூகத்தைவிட-என்
சமூகமான
ராமராஜ்ஜியம்
உயர்வானதென்று
தம்பட்டமடித்தது.





திங்கள் 17 2012

தலையும் தலமுடியும்.........




வெட்ட வெட்ட
வளர்வது தலைமுடி
வெட்டினால் வளராதது
முடியள்ள தலை........
       ------------
தொட்டால் அடிப்பது
கரண்ட்..........................
தொடாமல் அடிப்பது
கரண்டபில்...............
       ------------
அடிக்க முயல்வது
கோபம்............
அடக்க முடியாத்து
மூத்திரம்...............
   ----------------
பொய் வழக்கு போடுவது
போலீசு....................................
அதை ஊர்ஜிதம் பன்னாமல்
உள்ளே தள்ளுவது கோர்ட்டு
  ----------------------






சனி 15 2012

ஊழலின் ஊற்றுக்கண்களே அதிகாரிகள்தான்........................




 இந்திய நாட்டின ஊழலை ஒழிக்க வராது வந்த மாணிக்கம் என்று சொல்கின்ற தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பதினோறாவது மாநாட்டில் மத்திய தலைமை ஆணையர் சத்யனந்தா மிஸ்ரா என்பவர் ஊழலுக்கு ஊற்று கண்ணாக விளங்கும் அரசு அதிகாரிகளை பற்றி குற்றஞ்சாட்டினார்.


தகவல் அறியும் உரிமைச்சட்டம்  அமுலுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,அதிலுள்ள நல்ல அம்சங்களை அரசு அதிகாரிகள்  சரிவர செயல்படுத்தவில்லை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நாலாவது பிரிவையே அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்றார்.
தகவல் ஆணையருக்கு,  அமுல்படுத்தும் அணைத்து அதிகாரமும் கொடுத்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை  விதிவிலக்கு இல்லாமல் உண்மையாக முழுமையாக அமுல்படுத்தினால். இந்தியாவின் அரசு அதிகாரவர்க்கத்தின் தூண்கள் அணைத்தும் “டாமால்டுமால்ஆகி காலி பெருங்காய டப்பாவாக ஆகிவிடும்.

65 ஆண்டுகால சுதந்திர நாட்டில் அரசியல் சட்டத்திலும் நீதிமன்ற சட்டத்திலும் இருக்கக்கூடிய சட்டத்தையே அமுல்படுத்தினாலே “ஏழு மலைக்கு அப்பால், ஏழுகடலுக்கு அப்பால் ஊழல் ஓடிவிடும்.
ஆனால், இந்திய சு(சூ) தந்திரம் துரோகத்தினால் விளைந்த காரணத்தினால் இந்திய அரசியல் சட்டங்களும் துரோகத்தனமாக ஓட்டைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.இதேபோல்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் …………

ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாய் இருப்பதும் அரசு அதிகாரிகள்தான், இந்நாட்டை ஆளுவதும் அதிகாரிகள்தான். தங்களுக்கு தேவையான சட்டங்களை மக்களை வாட்டும் சட்டங்களை அமுல்படுத்துவதும் அதிகாரிகள்தான்.

ஊழிலை ஒழித்தால் அதிகாரிகளை ஒழிப்பதற்கு சம்ம். அதிகாரிகளே அதிகாரிகளை ஒழித்துவிடுவார்களா? பேருக்கு சில பூச்சாண்டி காட்டி சில ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிப்பதாக காட்டிக் கொள்வார்கள். ஆகவே, எந்த கட்சி ஆண்டாலும் எந்த அதிகாரி வந்தாலும் ஊழலை ஒழிக்கவும் முடியாது ஊழல் அதிகாரிகளை ஒழிக்கவும் முடியாது. இருக்க கூடிய சட்டத்தை பயனபடுத்தி நல்ல அதிகாரிகளையும் நல்ல கட்சிகளையும் வாயை மூட வைக்கலாம், கஞ்சா கேஸ்,அவதூறு கேஸ் இப்படிபொய் கேஸ்களை போட்டு மற்றவர்களை பயமுறுத்துவதும் அதிகாரிகள்தான.

புதிதாகவரவிருக்க்க்கூடியகொடியசட்டத்தையும்அமுல்
படுத்தக்கூடியவர்கள் அதிகாரிகள்தான். அவர்களால் நல்ல சட்ங்களை அமுல் படுத்தவே முடியாது பத்து பேரில் ஒன்பது பேர் நல்லவராக இருந்தால் கெட்டவரை அடக்கி நல்லவற்றை செய்வார்கள் என்று நம்பலாம். ஆனால் நிலைமை அப்படி இல்லை. பத்துப்பேரில் ஒன்பது பேர் கெட்டவர்கள் ஒருத்தர் மட்டும் நல்லவராக இருந்தால் அவரால் தலைமுடியைக்கூட புடுங்கமுடியாது.

தகவல் அறியும் சட்டம் வருவதற்கு முன் ஏகப்பட்ட ஊழல்கள்.அதிகாரமுறைகேடுகள் வெளி வந்து சந்தி சிரித்தன. அந்த வழக்குகளில் ஒருவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாறு கிடையாது.
 அதே மாதிரிதான் வராது வந்த மாமனியாலும் ஊழலின் ஒரு கிளையைக்கூட ஆட்டவோ. அசைக்கவோ முடியாது.ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் .டிஸ்மிஸ்ஸோ,தண்டனையோ எதிர்பார்க்க்கூடாது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் என்ன பலன் என்றால்.முன்பெல்லாம் மனு போட்டால் மனு என்னாச்சு என்றே தெரியாது. கேட்டாலும் முறையான பதிலும் கிடைக்காது. தகவல் அறியும் சட்டத்தினால் கொடுத்த மனு என்னாச்சு என்று தெரிஞ்சுக்கலாம், பத்து தடவை மனு போட்டு பதினோறாவது தடவையாக ஒரு நடவடிக்கையில் ஒரு  உத்தரவு மூலம் ஆறுதல் அடையலாம்.அவ்வளவே!! நடவடிக்கை சரியில்லையென்று நீதிமனறத்துக்கு போனால் அடுத்த நூற்றாண்டுவரை காத்து இருக்கவேண்டும். 

தகவல் அறியும் சட்டத்தில்கூட முடியும் முடியாது
என்று தகவல் தருவது கிடையாது, காலம் கடந்தது என்றும், 
விதி 8ய் சுட்டிக்காட்டுவதும் தலையை சுத்தி மூக்கை தொடும் தில்லாங்கடி போன்ற திசை திருப்பும் வேலையே அதிகம் நடக்கிறது. 

இரண்டாவது மேல் முறையீட்டில் தகவல் ஆணையரிடம் ஒரு பேச்சும், மனுதார்ரிடம் ஒரு பேச்சுமாக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள்.தகவல்ஆணையரின்உத்தரவை மதித்தாகவோ,
மதிக்காத காரணத்தால் தண்டனை பெற்றதாகவோ ஒரு வரலாறோ, ஒரு துண்டு துக்கானி நடவடிக்கையோ  செய்தியோ இல்லை.

ஒரு நல்லவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால்,.அதில் அதிகாரிகள் பத்து கெட்டவற்றை கண்டு பிடித்துவிடுவார்கள். அந்த நல்லவைகள் இருந்தஇடமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும் இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது இதில் அரசியல் வாதிகளுக்கு ஊழல் வழிகளையும் தப்பிக்கும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதே அதிகாரிகள்தான்,நல்லவற்றை ஒழித்து கட்டுவதில் அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் இரட்டைகுழல் துப்பாக்கிகளாக செயல்படுகிறார்கள்.


 






வெள்ளி 14 2012

அவனொரு.........................

அவன்........

சிரிக்கத்தான்
முயன்றான்
சிரிப்புத்தான்
வரவில்லை

சிந்தித்தால்
வருமாமே...
சிந்தித்தான்
முடியவில்லை!

சிரிக்கவும்
சிந்திக்கவும்
தெரிந்தவன்
மனிதனென்றால்.......

சிரிக்கவும்
சிந்திக்கவும்
முடியாத....

சினிமா,
பொறுக்கிஅரசியல்
போதை மிகுந்த
அவனொரு..........டாஸ்மாக் குடிமகன்



புதன் 12 2012

வல்லரசு கனவு கானும் இந்தியாவில் மாதம் பதிணைந்து ரூபாய் சம்பளம் தரும் மாநில அரசு..??????????





அகில உலகம் மதிக்கும் பேரு பெற்ற பணக்கார சாமி அருள்பாலிக்கும் கர்ர்நாடக மாநிலம். அந்த மாநிலத்தில் உள்ளது. உடுப்பிநகர்நகர். அந்த நகரில் அமைந்துள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக 1971ம் ஆண்டில் அக்கு,லீலா என்ற இரண்டு தாய்மார்கள் வேலைக்கு சேர்ந்தார்கள்

இந்தியா வல்லரசாக நெருங்கி கொண்டு இருக்கும் இருபத்தியோர்ராம் நூற்றாண்டான இன்றுவரைக்கும். அந்தத் தாய்மார்கள் இருவரையும் பணி நிரந்தரம் செய்யாமலும்,அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்தி கொடுக்காமலம். அவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது கர்நாடக அரசு.

அந்த இரு தாய்மார்களும் இந்திய சட்டத்தின்படி தங்களுக்குப தர வேண்டிய ஊதியத்திற்க்காக 2001ம் ஆண்டில் கர்நாடக மாநில நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டனர். அந்த நிர்வாக ஆணையத்திடம் முறையிட்டதினால்  வழங்கி வந்த பதிணைந்து ரூபாய் சம்பளத்தையும், ரவடியைப்போல் மாறி பழிவாங்கும் நோக்கத்தில் நிறுத்திவிட்டது மாநில அரசு.

அக்கு,லீலாவும் தங்களுக்கு கொடுத்து வந்த சம்பளம் நிறுத்தப்பட்டாலும் வேலையை விட்டு விலகாமல்.கடந்த பணிரென்டுகாலமாக தொடர்ந்து சம்பளமில்லாமல் துப்பரவு வேலைகளை செய்து கொண்டு வருகிறார்கள்.
சமூக அக்கறை கொண்ட சிலர் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவ வந்த்தை மறுத்து.பணஉதவியேயா, பச்சாதாபமோ எங்களுக்கு வேண்டியதில்லை எங்களுக்கு தேவை நீதி!! என்றார்கள்.

பணக்கார கடவுளும்,காசுக்கார சாப்டவேர் கம்பெனிகளும் நிறைந்த  கர்நாடகா மாநிலத்தின் அரசின் வக்கிரமும் அற்பபுத்தியும் அடவாடித்தனமும் நிறைந்ததே வல்லரசு கனுவு கானும் இந்தியாவும்........

நன்றி! புதியஜனநாயகம் நவம்பர்2012



செவ்வாய் 11 2012

நிஜ வில்லன்... கதாநாயகனாக.................



 குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலிலும் நரவேட்டையாடிய மோடியே  முதல் அமைச்சராக அமருவதற்கு வாய்ப்பும் வசதியும்  பிரச்சாரமும் இருக்கிறது. அதனால்தான அத்வானி,சுஷ்மா போன்றவர்கள் மோடிக்கு பிரதமராக வருவதற்கு தகுதியும் இருக்கிறது என்று தோசையை மாற்றி போட்டு இருக்கிறார்கள்.

அந்த வாய்ப்புகளின் ஒன்றுதான் நிழலை நிஜமாகக் காட்டும் சினிமா..அந்த சினிமாவை காட்டித்தான் தமிழ்நாட்டை  ஒன்று சாகும்வரைக்கும் ஆண்டு மடிந்தது. மற்றொன்று இரண்டாவதாக இருண்டஆட்சி நடத்திக் கொண்டு  இருக்கிறது .

இந்திய சினிமா படங்களில் வில்லன்களாக நடித்தவர்கள் கதாநாயனக மாறியது மாதிரியே... நிஜத்தில் வில்லனாக இருந்து நரவேட்டையாடிய கொலைகாரர்கள் நல்ல மனிதராக.நிழலை நிஜமென்று காட்டப்படுகின்றன என்பதற்க்கான சான்றுகளில் ஒன்று கோலேகிராப்என்ற தொழில் நுட்பத்தில் உருவானமோடியின் தேர்தல் பிரச்சார வீடியோ”.......

கோலேகிராப் என்ற தொழில் நுட்பமானது 3டியின் அடுத்த கட்டம். இந்த டிஜிடல் கேமராவில் மோடி பேசுவதை படமாக்கி திரையிட்டபோது. மோடியே திரையில் நேரடியாக வந்து வாக்காளரிடம் வாக்கு கேட்பது போல் இருக்கும்.

இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவில் முதன்முறையாக நரவேட்டையாடிய கொலைக்கார மோடிக்காக பயன்படுத்தி உள்ளார்கள். மோடியின் தமிழ்நாட்டு வாரிசுகள்.

குஜராத்தி மொழியில் மோடி பேசியதை படமாக்கி மோடிக்கு திரையிட்டு காண்பித்தபோது மோடியே நம்பமுடியாமல் அசந்து போனாராம். அந்த நர வேட்டையாடிய கொலைக்காரனின் பாரட்டை பெற்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அதன் இயக்குநர்ரும் ஒளிப்பதிவாளரும்.

எல்லாவகை தொழில் நுட்பங்களும் சினிமாநுட்பங்க்களும் ஏழைக்கு 
பயன்பட்டதாக வரலாறு இல்லை. அது கொலைக்காரகளுக்கு கொலைக்கும் கொள்ளைக்குமே பயன்படுகிறது பயன்படுத்தப்படுகிறது.
என்பதே இந்தியாவில் வரலாறு...................


ஞாயிறு 09 2012

பரதேசிக்கு மூன்றாம் உலகப்போரின் பக்கவாத்தியம்.......................




பக்கவாத்தியத்தின் மறுபெயர் ஜால்ரா என்று பெயர். ஜால்ரா எததெக்கு போடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யார்யார் எப்படி பக்கவாத்தியம் செய்தார்கள் என்பதுதான் தெரியாத விசயம் அதில் ஒன்றுதான் கருவாச்சி காவியம் படைத்த ஒலகமகா கவிஞர், மூன்றாம்  உலகப்போர்படைத்தவர்  இந்திய அரசின் விருதுகளை அள்ளிக் குவித்தவர் அவராவது பக்கவாத்தியம் போடுவதாவது  எல்லாரும் அப்படித்தான் நிணைப்பீர்கள் மூன்றாம் உலகப்போரின் வார்த்தை ஜாலங்களை படித்துப் பாருங்கள்

சேது படமெடுத்த பாலா சேது பாலான்னு பேரெடுத்தவர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி “பரதேசிஎன்ற பெயரில் படம் எடுத்து,அந்தப்படத்தின்  பாடல் மற்றும் டிரைலரின் விளம்பர நிகழ்ச்சியின் வெளியீட்டு விழா நடத்தினார். அந்தப்  நிகழ்ச்சியில் மூன்றாம் உலகப் போரின் பக்கவாத்தியம்தான் ரெம்ப ருசிகரமாக இருந்தது.
பரதேசி பாலா படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்ததும் எல்லாருக்கும்போல அல்லாமல்  கவிக்கு மட்டும் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டது அந்த அதிர்விலிருந்து கோல்டன் உதிர்த்த பக்க வாத்தியங்கள்

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம் யாரும் தவறவிட்டுவிடக்கூடாது பஞ்சம் பிழைக்க போகும் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை இதில் பிம்பப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாத்தியத்தோடு நிற்காமல்“ பரதேசி பாலா தன் படங்களில் மனிதனின் மறுபக்கத்தை பார்க்க ஆசைபடுபவர், பரதேசி படத்திலும் அவர் இப்படித்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நீரோட்டத்துடன் ஓடுவது செத்த மீன் (அட) நீரோட்டத்தை எதிர்த்து ஓடுவது உயிருள்ளமீன்(அடடா) அந்த மீன்தான் பரதேசி பாலா, அவரது படத்துக்கு பாடல் எழுதியது வித்தியாசமான அனுபவம் என்று தன் பக்கவாத்தியத்தை  தொடர்ந்தார்.

பஞ்சம் பிழைக்க போகும் கூட்டத்தைப்பற்றிய வலி எனக்கு தெரியும். வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களே எழுத்துகளாக வருகின்றன
சினிமாவில் எழுதி குவித்த காமரசம் சொட்ட சொட்ட ததும்பும் பாடல்கள்  காதல் பாடல்கள் குத்துப்பாடல்கள் எல்லாம் அவருடைய  அனுபவம்தான். ப கவி எழுதிய பாடல்களின் வரிகளை மாற்றாத ஒரே இயக்குநர்ரு பாரதிராஜா மட்டும்தானாம். பரதேசி பாலா கூட பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்றபோது நன்றாக இருந்தால் மாற்றிக் கொல்லுங்கள் என்று விட்டு பாடல் வரியை மாற்றி விட்டால் சொல்ல வந்த கருத்து மாறிவிடும் என்றவுடன் பரதேசிபாலா அதைப்புரிந்து கொண்டு கவியின் பாடல் வரிகளை மாற்றமால் பயன்படுத்தியதில் பாரதிராஜாவக்கு அடுத்த இடத்தில் இருக்கிறாராம்.

 தாம் எழுதும் பாடல்களை தன் அனுபவமாக்கூறும் கவிராயர். தான் பிறந்தமண்ணில்நிலவும்சாதிவெறியையோ,இரட்டைகுவளைப்பற்றியோ,
சாதிமறுப்பு திருமணகொடுமையை பற்றிய அனுபவத்தை பாடவில்லை. இவர் தூக்கி வைத்து ஆடும் இரு இயக்குநர்களுக்கும் அது பற்றி வாயே திறக்கவில்லை   

இதே பரதேசி பாலா  மூன்றாம்உலகப் போரின் பக்கவாத்திப்படி மனிதனின் மறுபக்கத்தை பார்த்த்தினால்தான். நான் கடவுள் படத்தில்   நடித்த மாற்று திறனாளிகளுக்கு பேசியபடி ஊதியத்தை தராமல் பட்டை நாமம் போட்டார்.  பிதாமகனில் நடித்த விக்ரமுக்கு ஊதியத்தை குறைத்து கொடுத்து மொங்கா போட்டார். பரதேசி படம் வந்த பிறகுதான் அதில் நடித்தவர்களில் எத்தனை பேரை பரதேசியா ஆக்கியிருப்பதும் தெரிய வரும்.

முன்னொரு காலத்தில் அரசர்கள் நாட்டை ஆண்டபோது மன்னனின் கொடுங்கோல்  கொடுமையின் அவலத்தை பாடாது  அதை மறைத்து இல்லாததை ஏற்றி போற்றி மன்னனை  புகழ்ந்து வாழ்த்திபா பாடி வயிறு வளர்த்து புகழ் பெற்றார்கள்.  இந்தக் காலத்து கவிப் புலவர்கள்.அவர்களின் அடியோற்றி  சமூகத்தில் நிலவுக்கூடிய உண்மைகளை மறைத்து பொய்யாக திரித்து  நிழலை நிஜமென்று காட்டி மாயையில் ஆழ்த்துபவர்களை வாழ்த்தும்  பக்கவாத்தியங்களாக  புலவர்களும், மூன்றாம்  உலகபோர் கவிராயர்களும்  வாழ்த்துப்பாடி தானுண்டு,தன்கவியுண்டுமாய் சொத்தும் புகழும் சேர்த்து ஒலக பிற்போக்குத்தனமும் சீரழிவும் நிறைந்த கவி உலகில் கவி பேரரசுகளாக.கவி சக்ரவத்திகளாக,காட்டிலே வாழும் சிங்கங்களாக.புலிகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.




உலகப்போர்,பக்கவாத்தியம்,

வெள்ளி 07 2012

யாகமும்.....ஜெப ஆராதனையும்..........





டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை ஒழிப்பதற்க்காக மதுரை அரசு மறுத்துவ மனையில்.........டெங்கு காய்ச்சல் ஒழிந்து நோயாளிகளின் சாவு பயம் நீங்கிட“ மிருத்திஞ ஜெய” யாகமும் நோயுற்றவர்கள் பூரண சுகம் பெற்றிட“ தன்வந்திரி “ யாகமும் நடாத்தப்பட்டது.

இந்த யாகத்தை தொடர்ந்து 5 கலசங்களில் தண்ணீர் வைத்து பூசித்த புனித நீரைக் கொண்டு டெங்குக்கான சிறப்பு வார்டுகள் மற்றும் பல்வேறு வார்டுகளில் தொளிக்கப்பட்டு நோயாளிகள் உயிர் வாழ பிரசாதமும் வழங்கப்பட்டது.

இந்தியாவின் இந்துவின் பராமக்கிரங்களின் அதிகாரமே ஓங்கி இருப்பதால்
இந்து கோயில்கள்ளில் நடத்தாமல் அரசு மருத்தவமனையிலே  பாதுகாவலர்கள் சூழ நடத்தப்பட்டது.

,இந்து ஓதுவார்களின் பராமக்கிரங்களுக்கு நாங்கள் என்ன? சளைத்தவர்களா? என்ற ரீதியாக இயேசு கிறிஸ்துவையே அரசரக நிணைத்து வழிபடும் கிறிஸ்துவ ஓதுவார்களும் டெங்கு மர்ம காங்ச்சல் போன்ற கடுமையான நோய் பாதிப்பிலிருந்து மக்கள் மீளவும்,நோய் விலகவும் கூடவே ஒலக அமைதி ஏற்ப்படவும் 24 மணி நேர ஜெப ஆராதனை நடத்தப்பட்டது

சர்ச்சில் இரவு 7மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 7மணிக்கு முடிந்த்து.
மாத்திரை. மருந்து,சத்தான உணவு, சுகாதாரம் எதுவும் தேவையில்லை தண்ணீரை தெளித்தால் நோய் விட்டுப்போகும். 24 மணிநேரம் இடைவிடாமல் ஜெபித்தாலும் மக்கள் நோயிலிருந்து விடுபடுவார்கள் என்ற அஞ்ஞானத்தை மெய்ஞானமாக பரப்புகிறார்கள் அஞ்ஞானிகள்.

புதுப்புது நோய்களுக்கு புதுப்புது மருந்துகளை  கொடுத்து நலமாக்கும் மருத்துவர்களே  யாகத்தையும் ஜெபத்தையும் முன்னிலை படுத்தும்போது
கம்யூட்டரை உருவாக்கி கம்யூட்டர் சாப்ட்வேரை உருவாக்கியவர்களே!
கம்யூட்டர் மானிட்டரில் சந்தனம் கலந்த குங்கும பொட்டு வைப்பதும், கம்யூட்டரில் அமருவதற்கு முன் ஜெபிப்பவர்கள் இருக்கும்வரை அஞ்ஞானமே குத்தாட்டம் போடும்.இத்தகைய அஞ்ஞானிகள் மூடப்பழக்கத்தை மட்டும் பரப்பவில்லை,  தங்கள் பொருப்பிலிருந்து அடிதட்டு மக்களை கை கழுவி விடும் வேலையையும் திறம்பட செய்கிறார்கள்.

சனி 01 2012

உலகில் அதிகமான பாரத்தை சுமப்பவர்கள்........



அந்தக்காலத்தில் பெண்களில் வயித்துக்குள்ளார இருக்கிற குழந்தை ஆணா? பெண்ணான்னு  விக்கிரமாதித்தனின் மந்திரி பட்டி துல்லியமா சொல்லியிறுவாராம்.அந்த மந்திரி எப்படி துல்லியமா சொல்லியிரப்பாருன்னு ஒரு அய்யாவிடம் கேட்டேன்.

 அவர்-சொன்னார்.

கர்ப்பமா இருக்கிற பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் பெண் என்றும்
சிறியதாக இருந்தால் ஆண் என்றும் இதை அடிப்படையாக வைத்து சொல்லியிருப்பார். இந்தக்காலத்து சென்னை  வானிலை ஆய்வு மைய்யம் சொல்ற மாதிரி மாறி விடுகிற வாய்ப்பெல்லாம் அந்தக் காலத்தில் இருந்திருக்காது அதனால் பட்டி சொன்னது துல்லியமாக இருந்திருக்கிறது என்றார்.

மேலும் உலகத்தில் பெண்கள்தான அதிகமான(எல்லா) பாரத்தை சுமப்பவர்கள்

ஆண்கள் பாரத்தை சுமப்பவர்கள்ளில்லை.அவர்கள் பாரத்தை
ஏற்றுபவர்கள்.  விதவிலக்காக ஒருசிலர் வயிற்றில் ஏற்ப்பட்ட பானையை சுமப்பார்கள் அவர்கள் பாரத்தை சுமந்தவர்கள் அல்ல என்றார்.

வியாழன் 29 2012

”ஆமான்னுதான் சொல்லு மாமா”............!!!


(ஒலகத்த சுத்தி பார்க்க புறப்பட்ட காக்கா!!!..)...........
சிங்காரம் என்ற காக்கைக்கு சிங்காரி என்ற காக்கை பொண்டாடியாக இருந்தது. இருந்தாலும் சிங்கார காக்கைக்கு சபல புத்தி அதிகமாக இருந்த்தினால் பிங்காரி என்ற காக்கையை வைப்பாட்டியாக வைத்துக்கொண்டது.

சிங்கார காக்காவுக்கு இருக்கிறத விட்டுட்டு இல்லாத்திலே ஆசை அதிகம். அந்த ஆசையினாலே,சிங்காரி காக்காவை சரிவர கவனிப்பதில்லை. பிங்காரி உடனே அதிக நேரத்தை கழித்தது..

ஒருநாள் பிங்காரி காக்காவுக்கு ஒரு ஆசை ஏற்ப்பட்டது. தன் ஆசையை
சிங்காரகாக்காவிடம்சொல்லியது.“மாமா,மாமா,ஒங்களுடைய ஆசையெல்லாம் நான்  நிறைவேத்துறமாதிரி என் ஆசையை  நீங்க நிறைவேத்தனும் மாமான்னு கொஞ்சி குலாவியது. பிங்காரிமேல் மோகம் தீராத சிங்காரம் அந்த  ஆசை என்னவென்று சொல்லு.அதை உடனே நிறைவேத்துறேன் என்றது.

இந்த ஒலகத்த ஒரு தடவ சுத்தி பார்க்கனும் மாமா, அதுதான் என்
ஆசை மாமான்னு சொல்லுச்சு,...

சிங்காரமும் பிங்காரியும் ஒலகத்த சுத்தி பாக்க போற விசயம் சிங்காரத்தின் பொண்டாட்டி சிங்காரி காக்காவுக்கு தெரிஞ்சது. .உடனே, சிங்காரி, சிங்காரத்திடமும், பிங்காரியிடம்,  என்னையும் சேத்து கூட்டிட்டு போங்க ஒலகத்த சுத்தி பாத்ததிலாவுது நான் கால்த்த ஓட்டிடுறேன் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொண்டது. சிங்காரம் பிங்காரிய பார்க்க, பிங்காரி வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டது.

நல்ல நாளில். சிங்காரம்காக்கா, சிங்காரியை முதுகிலும் பிங்காரியை வாயிலும் கவ்விய படி ஒலகத்த சுத்திப்பாக்க கிளம்பியது. ஒலகத்த சுத்திக் கொண்டு மகாசமுத்திரத்தின் மேல் பறந்து கொண்டு வந்தபொழுது.
சிங்காரி காக்கா, நான் அப்படி இருந்தேன். இப்படி இருந்தேன் என்று  முன்பு இருந்ததை சிங்காரத்திடம் சொல்லியது. சிங்காரம் காக்காவோ..  சிங்காரியை வாயில் வைத்திருந்ததால் பதில் எதுவும் சொல்லாமல் வெறுமனமே  ம்ம்ம............... ம்ம்ம்................ ம்ம்ம்.......என்றே சொல்லி வந்தது. 

இதைப் பொறுக்காத பிங்காரி காக்கா“ஆமான்னு தான் சொல்லு மாமா”ன்னு சொல்லியது. பிங்காரியின்னு சொல்லுக்கு மறு பேச்சு சொல்லாத சிங்காரம் காக்கா , வாய தெறந்து “ஆமான்னு சொன்னுதான் தாமதம்... சிங்காரத்தின் வாயிலிருந்து நழுவி மகா சமுத்திரத்தில் விழுந்தது பிங்காரிகாக்கா .. 

வைப்பாட்டிய இழந்த சிங்கார காக்கா சிங்காரியிடமே  மீதி வாழ்நாளை கழித்து வந்தது. 

இந்த கதை பட்சி களுக்கு மட்டுமே உரித்தானது. மனிதர்களுக்கு அல்ல.

நீதி--பட்சி சாதி நீங்க. எங்க பகுத்தறியாவதவர்களை பார்க்காதீங்க........


திங்கள் 26 2012

நிணைவோடு …………………….(சிறுகதை)


 
அவர் அழகானவரும் இல்லை, அழகில்லாதவருமில்லை, அவர்கள் பேசிக் கொண்டது என் காதில் விழுந்ததுமே எனக்குள்ஒருபரவசம் அவரை கண் இமைக்காமல் பார்த்தேன். அவர் அரைநூற்றாண்டை கடந்துவிட்டதாக சொன்னார்.ஆனால் பார்ப்பதற்கு முப்பது முப்பத்தைந்து  இளைஞராக தெரிந்தார். என் ஆசைகள் சிறகடித்தது.

பேசிக் கொண்டு இருந்த அவரிடம் அவர் நண்பர் கேட்டார்.

“எப்படிடா, நான் கிழட்டாவா ஆயிட்டேன்,நீ எனக்கு மகன் போல் இருக்கிறாய்

எல்லாம்,“ ரேஷன் அரிசியின் மகிமையிடாஎன்று அவர் சொன்னபோது நண்பர் அதிர் வேட்டு போல சிரித்தார்.நானும் சத்தமில்லாமல் சிரித்தேன்”.

ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகத்திற்கும் சிரிக்காமல் பதில் சொன்னார். அவரின் நண்பரோ அதிர் வேட்டுபோட்டு சிரித்தார்.  அந்த அதிர் வேட்டுடன் நானும் மத்தாப்பு வேட்டுடன் சரித்தேன.. சுற்றியிருந்தவர்கள் அதிர்வேட்டு சத்தம்கேட்டு அவரை பார்த்தபோது அவர்களும் கம்பி மத்தாப்பாக சிரித்து வைத்தார்கள்.

அன்று ஏக்கமும் சோகமும் நிராசையுமான என் மனம் உற்சாகத்தால் நிரம்பியது.அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என  என் மனம் பரபரத்தது. துறு துறுத்தது.

“ நான் எப்படி?...... அறிமுகமில்லதா அவருடன் அறிமுகமாவது. என் பென்மை என்னை பின்னுக்கு இழுத்தது. படித்திருந்தாலும்  பெண்களை அடிமைபடுத்தி வைத்திருத்த அடிமை புத்தியும் தயக்கமும் பயமும்  என்னுள்ளும் மேலோங்கி நின்றது.

அவர் தனியாக இருந்தால் தைரியமாக அவரிடம் அறிமுகமாகி விடுவேன்.

நான் வந்த வேலை முடிந்தும் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையினால் காத்து இருந்தேன். சிறு துப்பு கிடைத்தால் போதும் மனம் நிம்மதி அடைந்துவிடும் பிறகு  எல்லாம் நிதானமாக........................

அவரை, அவருடைய வழுக்கை தலை நண்பர் விட்டபாடில்லை,
அவர் எப்படி விடுவார். பால்ய நண்பர், அதுவும் தொடக்கப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளி வரை ஒன்றாக படித்தவர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள்..

எனக்கே இப்படியென்றால்......................அவர்களுக்கு.....................

என்னை அறியாமல் வழக்கை தலை மீது கோபம் வந்தது.

“அதற்கு இப்படியா?.............. இவ்வளவு நேரமா?.................

பெண் என்பவள் பொறுமைக்காரி என்று என்னைப் பார்த்துதான் சொல்லியிருப்பார்கள்..... பொறுமையாக  அவரின் திரு உருவத்தை
படம் பிடித்து மனதிற் பதிவேற்றிக்கொண்டேன.

பேசிய களைப்புகள் தீர இருவரும் தேநீர் கடைக்கு சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்து தேநீர் கடைக்கு சென்றேன். கடையில் அவர் என்னை பார்க்கும்படியாக நின்றேன். ஒரு கனம் அவர் என்னைப்பார்த்தார்.
மறுகனம் என் கண்கள் அவரின் கண்களுக்குள் ஊடுருவிச் சென்றது. மெய் மறந்து போனேன்.

சில  விநாடிகளா?......நிமிடங்களா? தெரியவில்லை. நிதானித்தபோது அவரும் இல்லை. பேசிப்பேசயே வறுத்தேடுதத வழுக்கை தலை ந்ந்தியையும் காணவில்லை.

அய்யோ!!!........ஒரே பரிதவிப்பு........தவறவிட்ட படபடப்பு.... ஏக்கமும் கவலையும் துக்கமும் மீண்டும் என்னை பற்றிக் கொண்டது.  சுற்றிலும் தேடினேன். தேநீர் கடைக்காரரிடம் விசாரித்தேன்.  அவரைப்பற்றி ஒரு துப்பும் கிடைக்கவில்லை. சோர்ந்து போன மனதுடன்......................

அடிக்கடி தினமும் அந்த இடத்திற்கும் தேநீர் கடைக்கும்  வந்து சில நேரங்கள் காத்துக் கிடப்பேன் அவரை பார்த்து விடமுடியாத  ........என்ற நம்பிக்கையுடன்.

 நாட்கள்  மாதங்களாக வருடங்களாக கடந்து விட்டன. அவரை பற்றி ...
எந்த தகவலுமின்றி  தனி மரமாக காலத்தை கடத்துகிறேன். பகலில் விட்டுவைத்திருக்கும் அவர்............... இரவில் என் நிணைவோடு இருக்கிறார்.


சனி 24 2012

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி,



 

ரஷ்ய நாட்டின் தென்னிந்திய தூதர் நிகோலாய் என்பவர். நிருபர்களிடம் கூறியதாவது.

ரஷ்ய அதிபர் அடுத்த மாதம் இந்தியாவரும்போது கூடங்குளத்து அனுஉலையை திறந்து வைக்கிறார். அனுஉலையின் 3வது 4வது யூனிட் தொடங்குவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக கொண்டுவர பாடுபடுகிறார். அதற்கு மின்சாரம் தேவை என
புரிந்துள்ளார். எனவேதான். கூடங்குளம் அனுமின் நிலையம் செயல்பட துணையாக இருக்கிறார், என்றார்

இதோடு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கொள்ளி வைக்கும் நாளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்களாம். ஒருசிலர்தான் கொள்ளி வைப்பதை எதிர்க்கிறார்களாம்.

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி, அமெரிக்காவா? ரஷ்யாவா? ............


வெள்ளி 23 2012

பரங்கிய வெள்ளக்காரனுக்கு கிடைத்த முதல் சமபளம்




மன்மோகன் ஆளுகின்ற இந்தியாவை கணடுபிடிக்க போறமன்னு, ஓ..பாமா ஆளுகின்ற அமெரிக்காவை கண்டுபிடித்தான் கொலம்பஸ் என்ற வெள்ளையன்

அவனும் அவனது ஆட்களும் கொண்டு வந்த சீக்குதான் பொம்பள சீக்கு.
அந்த சீக்குக்கு  பரங்கியரான வெள்ளக்காரன் வச்ச பேரு சிபிலியஸ். தமிழ் நாட்டுக்காரன் வச்சபேரு பரங்கிப்புண்...........

 அமெரிக்காவை கண்டுபிடித்தவுடன் அங்கியிருந்த செவ்விந்தியரான பூர்வீககுடிகளிடம் வாங்கி வந்ததுதான் இந்த சீக்கு. இதுதான் பரங்கிய வெள்ளக்காரனுக்கு கிடைத்த முதல் சம்பாத்தியம்..............

இன்று, அவன் பெற்ற முதல் சம்பாத்தியத்தின் பலன்தான் மூலதனமாக பல்கி பெருகி எயிட்சாக வலம் வந்துகொண்டு இருக்கிறது.

செவ்வாய் 20 2012

உங்களுக்கு தெரியுமா?............................./???




நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்ட படத்துக்கு அனைவரும் பார்க்கக்கூடிய படம் “யுசானறிதழ் என்று சென்சார்போர்டால் சான்று பெற்ற படத்தின் பெயர் என்ன? சென்சார் போர்டின் தலைவர் பெயர் என்ன?

உலகிலே டாஸ்மாக் குடி மக்களை ஊக்குவித்து அந்த குடிமகன்களின் வருவாய் மூலம் அரசாங்கம் நடத்தும் நாடு எது? அந்நாடு எங்குள்ளது?

உலகத்திலே தெரிஞ்சு நடக்கிற காரியங்களைவிட,தெரியாம நடக்கிற காரியங்கள்தான் அதிகம் அந்தக்காரியம் எது?

விடை தெரிஞ்சும் சொல்லாம இருந்திங்கன்னா? உங்க தல வெடிக்காது.
விடை தெரியாம பதிவு போட்ட என் தலயும் வெடிக்காது.


திங்கள் 19 2012

பாதுகாப்புடன் இருப்பவர்கள்...................................



உணர்ச்சி வயப்பட்டு செய்யும் செயல்களின் குற்றங்களால் தண்டிக்கபட்டும் வாழ்வுரிமைக்காக போராடியதாலும் அநியாயத்தை எதிர்த்தாலும் சிறைபிடிக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பர்கள் இருப்பது சிறைச்சாலை,..................


 அதிபுத்திசாலிதனத்துடனும்,அதிகாரத்துடனும்செய்யும்ஊழல்கள்,கொலைகள் கொள்ளைகள்,நாட்டை விலைபேசி விற்றல்,போன்றபஞ்சமாபாதகங்கள் செய்தவர்கள்.பாதுகாப்பு படையுடன்தண்டனை அனுபவிக்காமல்இருப்பது சட்டமனறம்,பாராளுமனறம்.

ஞாயிறு 18 2012

திலகமிட்ட நெற்றியுடன் ஒரு போலியின் உள்ளேயும்.....வெளியேயும்..............





அனைத்துலகமும் போலிகளின்
மயம்.....................................அதில்

இந்தியப் போலிகளில்
ஒனறான இடது போலியின்
நெற்றியிலே பொட்டு இட்ட
அரசியல் தலைமைக் குழு
உறுப்பிரானவர். அவர்......

நாட்டை ஆளும்...........
காங்கி...ரசும்..........
ஆளத்துடிக்கும் பார
தீய ஜனதாவும்.........
போலி நாணயத்தின்
இரு பக்கங்கள்......

வெளியில் பார்ப்பதற்கு
வித்தியாசங்கள் இருப்பது
போல்..காட்டிக் கொள்கின்றன.

அவைகள்........................
பணக்காரர்களின் ஏவல்
ஆட்காளாகவே........
செயல்படுகின்றன.

எனவே,..
வாக்கு அளிக்கும்
மக்கள்- அந்த இரு
கட்சிகளுக்கும்- வாக்கு
அளிக்காமல்- வாக்கை
புறக்கணிக்க வேண்டும்

அதோடு,...................
நாடாளுமன்றதுக்குள்
உள்ளேயும்- வெளியேயும்
(நாற்க்காலிக்காக)
போராடி வரும் கட்சிக்கு
வாக்கு அளிக்க வேண்டு
மெனறார்....................

புதன் 14 2012

செமிக்காத ரேசன் அரிசியை செமிக்க வைக்கும் ராணி..!!!!!!!!!!!!

ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை வாங்கி அதை தீட்டி ஒருமறைக்கு இருமுறை தண்ணிரில் கழுவி குழைய வேகவைத்தாலும்
கொட்டப் பாக்கு மாதிரி கடினமான பருக்கையாகவே இருக்கும். அதையும்
வேறுவழியில்லாமல் மெண்டும்மெல்லாமல் விழுங்கினாலும் செரிமானம் செய்வதிலும் சிக்கல் ஏற்ப்படுகிறது.
இந்தச் செரிமானக் கோளாறை தீர்க்க வந்த  ஆற்றல் கொண்ட வெப்ப மண்டல நாட்களின் ராணியாக இதைச்சொல்கிறார்கள்.
இந்த ராணியை வெப்ப மண்டல ராணியாக சொல்வதைவிட  இலவச ரேசன் அரிசி வழங்கும் நாடுகளின் அரசியென்று குறிப்பிடலாம்.
எந்த நாட்டு ராணியாக இருந்தாலும் ஏழைக்களுக்காகவா ராணி பயன்படுவாள். சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்குமேதானே பயன்படுவாள்
அந்த வகையில் பரங்கித்தலை.செந்தாழை என்று அழைக்கப்படும் அன்னாச்சி பழம்தான் ரேஷன் அரிசியை செமிக்கும் அந்த ராணி......................


திங்கள் 12 2012

அர்த்தமும் பொருத்தமும் இல்லாத தீபாவளி....



தீபாவளி என்பது வாழ்வில் ஒளி தரும் பண்டிகை என்றார்கள்.பாரத்தேசிகள் அந்த பாரத்தேசிகள் கூற்றுப்படியே,வரிசை வரிசையாய் விளக்கேற்றி., மின் வெட்டாலும்  பிற காரணகாரியங்களாலும் ஏற்ப்பட்ட இருளை போக்கி ஒளி
தரும் பண்டிகையே தீபாவளி என்றார்கள்.

இதில் தீபத்தில் பரமாத் மாவும் நெருப்பில் ஜீவாத் மாவும் ஆக ரெண்டு வெங்காயமும் சேர்ந்து அருள் தறுவதாய் புளுகினார்கள்.
அந்தப்புளுகின் படியா தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்தபண்டிகைக்
கென்றே  உருவாக்கப்பட்ட போனசையும்,அட்வான்சையும் வாங்கிக் கொண்டு இல்லாதவர்கள் கடன்-தவனை வாங்கிக் கொண்டு விளக்கும்,விளக்குக்கு எண்ணெயும் திரியும் வாங்கவா? அலைஅலையாய் பஜாரில் கூடுகிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும்,கடைகளிலும் புறம்போக்கு இடங்களில் குடிகொண்டுள்ள கோயில்களிலும் வரிசையாக விளக்கேற்றுவதும்.நாட்டில் உள்ள இந்துமத பயங்கரவாதிகள் வெள்ளாவி கொளுத்துவதும் கார்த்திகை மாதமல்லவா?

அந்த கார்த்திகையில் விளக்கேற்றும் நிகழ்ச்சியை போயி,புராட்டாசியிலும் அய்ப்பசியிலும் நடக்கிற வணிக நிகழ்ச்சியை போயி ஒளிதரும் பண்டிகை
என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமுமில்லை.ஒரு பொருத்தமுமில்லை
புரட்டாசியிலும்.அய்ப்பசியிலும் வரும் நிகழ்ச்சிகளை ஒலிதரும் பட்டாசுவிழா,

புத்தாடைஅணியும்விழா,ஷாப்பிங்விழா என்று அழைத்தால் அதிலே அர்த்தமும் இருக்கும் பொருத்தமும் இருக்கும்........அதவிட்டுபிட்டு ஒளிதரும் விழா என்று சொல்கிறார்கள். அவர்களை 



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...