ஒரு குருவும் சீடனும் ஒரு ஊரின் கடை வீதியின் வழியாக நடந்து வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது கடை வீதியின் ஒரு சுவற்றில் “இந்துக்களே!1 இந்துக்கடையிலே பொருட்கள் வாங்குங்கள் இப்படிக்கு இந்து முன்னணி விளம்பரத்தை பார்த்தனர்.
குருவானவர் படித்து விட்டு சீடனை பார்த்தார். குரு பார்வையின் எண்ணத்தை புரிந்து கொண்ட சீடன்.
குருவே, தாங்களும் தங்கள் அடியொற்றி தானும் இடுப்பில் கட்டியுள்ள உடையை பல தடவை துவைத்துதால் பழங்கதையாகிவிட்டது. நாமும் சிவனையும் பெருமாளையுமே பூஜித்து வருவதால்.அந்த வாசகத்தினபடி நாம் இந்துக்கள்தான். ஆகையால் விலையில்லாமல் தருவதை இந்துக்கடையிலே வாங்குவோம். என்றான்.
சீடன் சொல்வதை ஆமோதித்த குருவானவர். மெல்ல திருவாய் மலர்ந்தார்..
“நாம் வாங்குவது இந்துக்கடைதான் என்று எப்படி தெரிந்து கொள்வது”.
“குருவே, அது ரெமப சிம்பிள் குருவே”, இந்துக்கள் அல்லாதவர்கள் தலையிலே குல்லா போட்டு இருப்பார்கள் தாடி வளர்த்திருப்பார்கள் குருவே என்றான் சீடன்.
“குருவானவர். சீடனை முறைத்தபடி தன் தாடியை தடவி காட்டினார்.
சுதாரித்த சீடன். தங்களைப்போல் நீண்ட தாடியும் குடுமியும் வைத்திருக்க மாட்டார்கள் குருவே என்றுவிட்டு, அவர்கள் நம்மைப்போல் நெற்றியில்
படடையோ,நாமமோ, பொட்டோ பூசியிருக்க மாட்டார்கள. மேலும் இடுப்பில கருப்பு கயிறு கட்டியிருப்பது மாதிரி வலது கைகளிலே கலரில் சாமி கயிறு கட்டியிருப்பார்கள் குருவே. இதை வைத்து நாம் இந்து கடையை கண்டுபிடித்து விடலாம் குருவே என்றான் சீடன.
இதை கேட்ட குருவானவர் சீடனின் புத்திசாலி தனத்தை மெச்சி சீடனை தட்டிக் கொடுத்தார்.
சீடன் சொன்ன அடையாளத்தின்படி நெற்றியில் பட்டை.பட்டைக்கு நடுவில் குங்குமப்பொட்டு, வலது கையிலே கயிறு கட்டி, கடையிலே அமர்ந்திருந்த இந்துக் கடைக்குள் சென்றனர்.
குருவையும் சீடனையும் கண்ட இந்துக்கடை முதலாளியானவர். என்ன வேனும் என்று கேட்டுவிட்டு கடையின் பிரிதொரு இடத்தை காண்பித்து அங்கு செல்ல பணித்தார்.
வேண்டிய துணிகளை தேடிபிடித்து பெற்றுக் கொண்ட குருவும் சீடனும் முகம்மலர வெளியே வந்தனர்.
அவர்கள் சென்ற பிறகு,கடையின் வாசலில் இருந்த கேசியர். குருவும் சீடனும் துணிகளுக்கு பணம் கொடுக்காமல் செல்வதைக் முதலாளிடம் சொன்னான் . முதலாளியின் கோபத்தில் கெட்ட வார்த்தைகளால் சத்தம் போட்டார்.
முதலாளி சத்தம் போடுவதைக் கண்ட ஊழியர்கள் கூச்சலிட்டவாறு குருவையும் சீடனையும் நோக்கி ஓடி வந்தனர்.
ஆக்ரோஷமாய் கத்திக்கொண்டு வந்த கூட்டத்தைப் பார்த்ததும் சீடன் பயந்து போய் ஓட ஆரம்பித்தான். சீடன் தன்னை விட்டு தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்த குரு. திரும்பி பார்த்தார். கூட்டம் வெறி கொண்டு கத்தி ஓடி வருவதைக் கண்டதும்
அரண்டு போய் அடித்து பிடித்து சீடனை முந்திக்கொண்டு ஓடினார்.
இந்துக்களே! இந்துக்கடையிலே காசு கொடுத்து பொருட்களை வாங்குகள் என்று சிந்தித்து வாசகத்தில் சொல்லியிருந்தால் இந்துக்களான குரு ,சீடனை முந்திக் கொண்டு தலை தெறிக்க ஓட வேண்டிய நிலை வந்திருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை