பக்கங்கள்

புதன் 23 2015

நல்ல மாடுகளுக்கு ஒரு சூடு....சண்டி மாடுகளுக்கு....???

படம்-​முல்லைப்பெரியாறு அணை குறித்து பீதி ஏற்படுத்த கூடாது: கேரள அரசியல்வாதிகளுக்கு கே.டி.தாமஸ் அறிவுரை




முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரள அரசியல்வாதிகள் பீதி ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பெரியாறு அணை உயர்நிலைக் குழு உறுப்பினருமான கே.டி.தாமஸ் அறிவுறுத்தியுள்ளார். 

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்ந்தால் அணை உடைந்து விடும் என கடந்த 35 ஆண்டுகளாக கேரளா கூறி வருவதை சுட்டிக்காட்டிய அவர், தானும் இதனை முதலில் நம்பியதாக குறிப்பிட்டார். 

செவ்வாய் 22 2015

தில் இல்லாத ஜால்ரா டீவிகளுக்கு ஒரு கேள்வி........






படம்.....ஜால்ராவில் நம்பர் ஒன் தந்தி டீவியா..? புதியதலைமுறை டீவியா?


ஜால்ரா அடிப்பதில் முதலிடத்துக்கு
போட்டி போடும் ஜால்ரா டீவிக்களை
பார்த்து கேட்டாராய்யா...ஒரே ஒரு கேள்வி....
குன்கா தீர்ப்பு சரியா...?
குமாரசாமி  தீர்ப்பு சரியா? ன்னு
விவாதிக்க  தயாரா..............???


படம்-
Sivakumar ArumugamDurai Karuppusamy இன் படம் ஐப் பகிர்ந்துள்ளார்.

திங்கள் 21 2015

அமைதிப்படைகள் தேவ தூதர்கள் அல்ல......

கோப்புப் படம்: ஏ.பி.
படம்-ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்'



அதுவும் அமெரிக்க ஐ.நா.வின் அமைதிப் படைகள் தேவ தூதர்கள் அ்லல..

உலகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நாவின் அமைதிப்படைகள்  செல்கின்றதே ..அதன் வேலை என்ன ? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்ப்படுத்த அவர்கள் ஏன்? சிரமப்படவேண்டும்? அப்படி, ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் ? விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம்தான் ”Whistle Blower"..இந்தப்படம் ஐ.நாவின் அமைதிப்படையின்  கோர முகத்தை உரக்கக்கூறும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமாகும்.

ஐ.நாவின் அமைதிப்படைகள் ,வெள்ளை சமாதான புறாக்கள் அல்ல, பணம், அதிகாரம், கேளிக்கை இவற்றை மையமாகக் கொண்டு ஒன்றிணையும் அதிகார முகங்களின் சாத்தான் படை. இந்த படையின் அட்டூழியத்தை எதிர்த்து போராடிய ஒரு சராசரி அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி கேதரின் போல்கோவாக்கின் பயணம்தான் இந்தப்படம்.



                              “The Whistleblower ”

நன்றி! புதியகலாச்சாரம்.:- ஹாலிவுட் கவர்ச்சி ஆக்கிரமிப்பு வெளியீட்டிலிருந்து

ஞாயிறு 20 2015

ஒரு இன்னோவாவுக்காக..ஒரு புல் மப்பின் உளறல்....


Image result for நாஞ்சில் சம்பத்
படம்-www.tamilcnnlk.com

ஒரு பெக்கு சாரயம்  இலவசமாக குடிக்க கொடுத்தற்க்காக..“ அவனப்போல மனுசன் ஒலகத்திலே இல்லே” ங்கிறியே... ஏன்டா...இந்த மப்பு ஒனக்கு...

அடப் போடா...“உலகம் தெரியாதவனாக இருக்கியே...” ஒரு பெக்கு சாராயம் வாங்கித் தந்தான் என்பதற்க்காக  புகழுறேன்னு  சொல்றியே.... நான் எந்த விதத்திலும் போட்டி போட முடியாத ஒரு ஆளு  ஒரு இன்னனோவாவுக்காக  எப்படியெல்லாம் புகழ்ந்து தல்லியிருக்காரு தெரியுமா....????

“அப்படியா..”...??

“என்ன நொப்படியா”...?? அந்தப் புகழ... சொல்றேன் கேளு.............

“பூவின் மெட்டு மலரும்போது.,
ஒரு மெல்லிய சத்தம் வரும்
இதை யாரும் கேட்டதில்லை

ஆனால்,ஒலிப்பதிவு செய்கிற
ஆற்றல் நொம்மாவுக்கு மட்டும்தான்
உண்டு. கடல்  அலை சத்தத்தின்
அகராதி அந்த நொம்மாவுக்கு தெரியும்
அப்படிப்பட்ட..அந்த நொம்மாவை
யாராலும் வீழ்த்த முடியாது....


“டேய்...ஒரு பெக் சாராய மப்பை விட.... புல் மப்பு  ஔறல்டா.......

“ இப்பப் புரிதா.....டா..நான் ஏன்? ஒரு பெக்கு சாராய மப்பில ஔருறேன்னு....








சனி 19 2015

நவீன பங்களா சேரி...!!!!!!!!



சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
மேலும் படிக்க-----செம்மஞ்சேரி அவலம்


சிங்காரச் சென்னைக்கு பொருத்தமில்லாத குடிசை மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி அவர்களை மாநகருக்கு வெளியே தூக்கி எறிந்து கட்டப்பட்டதுதன் இந்த குடியிருப்பு. 

சுமார் 7500-க்கு மேற்பட்ட தீப்பெட்டி போன்று தோற்றமளிக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த நவீன சேரி.

வெள்ளி 18 2015

பீப் பாடல் தொடக்கம் அல்ல...அது கவிகளின் ..தொடர்ச்சி....

படம்-இந்தியாவின் ஏழு அதிசியங்களில் ஒன்று


Solomon Pathipooranam 2 புதிய படங்கள்இணைத்துள்ளார் — Vijayakumar R மற்றும் 39 பேர்பேர்களுடன்

நாடே மழை வெள்ளத்தில் மிதக்கும் போது,செம்பரம்பாக்கம் ஏரித் திறப்பைப் பற்றின விவாதத்தின் போது.உலக வர்த்தக கழகத்தில் நம் தேசத்தின் கல்வி பறிபோகும் அபாயமான இந்நேரத்தில்,மக்களை மீட்டெடுக்காமல் இவ்வரசு அம்பலப்பட்டு நிற்கும் தருவாயில்......

சொம்பு பாடலை ஒலிப்போரின் கவனத்திற்கு....

சொம்புப் பாடல் கண்டனத்திற்குரியதே......

ஆனாலும் சொம்பு தொடக்கம் அல்லஅது கவிகளின் தொடர்ச்சி,.......


“ஊடுதல் காமத்திற் கின்பம்
அதற்கின்பம் கூடி முயங்கிப் பெரின்”

கடா களிற்றின் மேல் கட்படாம்
மாதர் படாமுலை மேல்துகில்”

---திருவள்ளுவர்

தெங்கிடை கொண்ட கொங்கை
தேரிடை கொண்ட அல்குல்
யாரிடத்தும் கண்டொண்ணா பேரழகு
_கம்பர்.


எத்தனைப் பேர் நட்டக் குழி
எத்தனைப் பேர் தொட்ட முலை
எத்தனைப்பேர் பற்றி இழுத்த புல்லிதழ்கள்
_பட்டினத்தார்.


வின் முட்டும் மலை மீது
வின் மாரிப் பொழிகின்ற
கார்காலம் போல்
என் கண்முட்டும் முலை மீது
கண் மாரி பொழிகின்றது
-பொய்யாமொழி

‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னா
முலை கண்டு இடை சோரா 
--ஆதி சங்கரர்

‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
--ஆண்டாள்


”சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது எப்படி”
“டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட-வாலி

நேத்து ராத்திரி யம்மா...முக்கல் முனகலோடு இசையமைப்பு -இளையரஜா.

வாடி வாடி நாட்டுக்கட்ட-கபிலன்

குறியை சப்பக் கொடுத்தாய்”
- லீனா மணிமேகலை.(அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!)

முலைகலை (பெயர் போட்டு) விற்றது?-குட்டி ரேவதி,சுகிர்தா ராணி


படம்-www.tamilspy.com

வியாழன் 17 2015

மீண்டும் “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்”

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
படம்-.அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள்



அன்று
“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். 

இன்று......
சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.


இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட பெரியாரின் வழிவந்த அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்.

புதன் 16 2015

சரக்குக்கு..வாட்ஸ்அப் வடை

படம்-www.iamstranger.com


அண்ணே....சரக்கு
இங்க  இருக்கயிலே
எங்க போறீங்கண்ணே....

டேய்  வெறும்
சரக்கு மட்டும்
போதுமா..இருடா
வாட்ஸ்அப் வடை
வாங்கிட்டு வர்றேன்.


செய்தி:-பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறதல் கூறாமல் ஜெயலலிதா வாட்ஸ்அப்பில் வடை சுடுகிறார்...ஸ்டாலின்தாக்கு

வாயில் வடை சுடுவது போல வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெ. .......ஸ்டாலின் சாடல்


செவ்வாய் 15 2015

நிஜ வாழ்க்கையில் நிழல் உருவங்கள்.......

படம்-www.kovaiaavee.com

நிஜ வாழக்கையில்
நிழல் உருவங்களா..
அது எப்படி?
என்ற போது

அவர் இப்படிச்
சொன்னார் நிழல்
உருவங்கள் நிஜ
வாழ்க்கையில் செலுத்திய
செலுத்திக் கொண்டு
இருக்கிற நிலையைக்
காணும்   போது
விரிவான விளக்கம்
தேவையே  இல்லையே
என்றார் அவர்.

அந்த நிழல்
 உருவங்களில் ஒன்று
மறைந்த எம்ஜியார்.
இரண்டு ஜெயலலிதா...


படிக்க...எம்.ஜி.ஆர் : முழு வரலாறு !

திங்கள் 14 2015

போதையேற்ற அறிவை பயன்படுத்திய விதம்...

படம்-valaiyukam.blogspot.com


அவன் இந்தாண்டு பத்தாவது தேர்வு எழுதப் போகிறவன். யார் கற்று தந்த பாடமோ...,,அல்லது கண்ணால் கண்ட கற்றுணர்ந்ததோ..தெரியவில்லை.

அவனின் நண்பர்கள் குழு ஒன்று போதையேற்றுவதை முன்னிட்டு, சரக்கு வாங்க இவனை அனுப்பி வைத்தார்கள் ...

 சரக்கு கடையான அரசின் டாஸ்மாக்குக்கு வந்த அவனோ.. சர்வ சாதரணமாக ஒரு பிராண்டின் பெயரைச் சொல்லிக் கேட்டான்.

சரக்கு விற்பனையாளன். சட்டென்று அவன் சொன்ன பிராண்ட்-டை எடுத்தவன் திடிரென்று அவன் போதை தெளிந்தவன் போல்..

“ டேய் சின்னப்பயலுக்கு, பள்ளிக்கூடம் போற பயலுக்கு எல்லாம் சரக்கு கொடுக்கக்கூடாதுன்னு உத்தரவு..போடா” என்று சத்தம் போட்டு விரட்ட.

அவனோ.... அண்ணே... எனக்கு இல்லேண்ணே...அதோ..அங்க நிக்கிறாரு பாருங்க..அவருக்குண்ணே... அவருக்கு தெரிஞ்சவுங்க அங்கிட்டு நிக்கிறதால என்னய வாங்கி வரச் சொன்னாருண்ணே....என்று அளந்து விட்டான்.

இவனின் கதையை நம்பிய சரக்கு விற்பனையாளன். தெளிந்த போதை மீண்டும் ஏறியவனாக...“எங்க  அவர. என்னய பாத்து சொல்லச் சொல்லுடா என்று சொல்ல.....

கடையை விட்டு விரைவாக வந்த மாணவன். சரக்கு விற்பனையாளரிடம் சுட்டி காட்டியவரிம் வந்து..“அண்ணே..ஐநூறு ரூபாயக்கு சில்லரை கேட்டேண்ணே...இல்லேண்ணுட்டார்ண்ணே.. நீங்கச் சொன்னா தருவாறுண்ணே....ஒரு கையை மட்டும் ஆட்டிசொல்லுங்கண்ணே என்று சொன்னான்.

மாணவனின் கதை தெரியாத அந்த அண்ணனோ.... தெரிந்த பையன்தான் கொடுங்க என்று  கை அசைத்தான்.....

சரக்கு விற்பனையாளரோ..... தமக்குள் முனங்கியவாரே.... இந்தாடா.... வாங்கிட்டு ..போ.....இனி உன்னய வாங்கச் வரச் சொன்னா...  இனிமேல் எனக்கு தரமாட்டங்கன்னு சொல்லிவிடு என்றபடியே..அவன் கேட்ட சரக்கை எடுத்துக்
கொடுத்தான்

சரக்கை பெற்ற மாணவனோ.... சிட்டாய் ஓடி மறைந்தான்.

மறுநாள் போதையேறி மாணவன் செய்த அளப்பறையில்..மாணவர்களின் பெற்றொர்கள் புலம்பிய புலம்பலில் தெரிந்தது.. மாணவன் போதையேற்ற தன் அறிவை பயன்படுத்திய விதம் தெரிந்தது.


ஞாயிறு 13 2015

பிச்சையும்..இலவசமும் பெற்றால் நரகம்தான்..

படம்-aveenga.blogspot.com
நாலு சந்திப்பு ரோடு
சிக்னலில் நாலு மூனு
ரெண்டு சக்கர வாகனங்கள்
நின்று  இருக்க.. இருவர்
மூவர் ஒவ்வொரு திசையில்
பிச்சை கேட்டு நடக்க...

இரு சக்கர வாகனத்தில்
இருந்த கனவான் ஒருவர்
தன் பனப்பெட்டியை திறந்து
அதில் ஒரு பத்து
ரூபாய் தாளை எடுத்து
தனக்கு பின்னால் அமர்ந்து
இருந்த பெண்ணிடம் நீட்ட

அந்த பெண்ணொ பாதுகாப்புக்கு
கணவனின் வயிற்றை பிடித்து
இருந்த கரங்களால் நீட்டிய
பணத்தை பெற்று பிச்சை
கேட்டவரின் உண்டியில் போட்டார்

இதை சைட் அடித்து
நின்ற மூனு சக்கர
வாகன ஓட்டி ஒருவர்

பிச்சை போட பணத்தை
எடுத்தவன் தான் போடாமல்
தன் மனையாளிடம் கொடுத்து
போடச் சொல்கிறானே இதில்
எதாவது விசயம் இருக்கும்
என நிணைத்து அவன்
சோசியன் ஒருவனிடம் கேட்க.

பெண் பிச்சை இட்டால்
 பாவம் செய்த கணவனக்கு
புன்னியம்  கிடைக்கும் எனறான்

அது கேட்டு சோசியனுக்கு
அறிமுக கார்டு அடித்து
கொடுக்க வந்தவன் கேட்டான்

அப்படி என்றால் ஆளுகின்ற
ஆட்சியாளர்கள் ஓடாத பேன்
 கிரைண்டர் உடைந்து போன
மிக்ஸி கொடுப்பது அவர்கள்
ஊழல் மறைந்து மோட்சம்
கிடைக்கத்தானா..என்று வினவ

ஆம் எனற் சோசியன்
பிச்சை மற்றும் இலவசம்
கொடுப்பது புன்னியத்துக்கும்
மோட்சம் கிடைக்கத்தான் என்றான்

இலவசம் கொடுப்பவனுக்கும் பிச்சை
போடுபவனுக்கும் புன்னியம் மோட்சம்
கிடைக்கும் என்றால் இலவசம்
வாங்குபவர்களுக்கும் பிச்சை கேட்பவர்களுக்கும்
 நரகம்தானே கிடைக்கும் என்றபோது

சோசியன் கண் சிமிட்டினான்...

குறிப்பு :- பிச்சை, இலவசம், அன்னதானம் போன்றவைகள்  வரிசையில் ”உதவி” என்பது  சேராதாம்....



சனி 12 2015

குமாரசாமிக்கு முன் தோன்றிய குமாரசாமி..


புதிய ஜனநாயகம் ஜூன் 2015
படிக்க--புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ்


உங்களுக்கு நிணைவிருக்கும் 4+3=8 என்ற கூட்டல் கணக்கை கண்டு பிடித்து சொன்னவரை...  இந்த குமாரசாமிக்கு முன்னோடியாக ஒரு குமாரசாமி இருந்திருக்கிறார்.. உங்களுக்கு தெரியுமா.....??? தெரியாதவர்கள் குறும்பட வீடியோவை பாருங்கள்.  தெரியும் குமாரசாமிக்கு முன் தோன்றிய குமாரசாமியை...........

2+2=5 | Two & Two - [MUST SEE] Nominated as Best Short Film, Bafta Film Awards, 2012




வெள்ளி 11 2015

“கிளியோ பட்ரா”வின் மூக்கு மட்டும்........



படம்-https://ta.wikipedia.org/s/4m4



படம்-https://ta.wikipedia.org/s/4m4

“கிளியோ பட்ராவின் மூக்கு மட்டும்” ......

“மூக்கு மட்டும்...”???


சப்பையாக இருந்திருந்தால்...”

“ இருந்திருந்தால்”..............

“ஒலக வரலாறே ..வேறு மாதிரியாக இருந்திருக்கும்....”

“அதை எப்படி கண்டுபிடித்தாய்...”

“ கிளியோ..பட்ராவின் மூக்கைப் பார்த்துதான்...”

“ நிஜமாகவா... எப்படி.... கிளியோ..பட்ராவின் மூக்கை   எட்டி பார்த்தாய். ..”

“உஸ்..............ஸ்............ஸ்...........”..


“என்ன....? ..உஸ்.....ஸ்..ஸ்......”

“அது ரகசியம்....”..............

“ ரகசியமா....!!!!!!!”

ஆம்.... கிளியோ..பட்ராவின்     மூக்கை பார்க்க.....நான் மூக்கை நுழைத்தது தெரிந்தால்..........”

“ தெரிந்தால...........”..

”சீசரும்...,மார்க் ஆண்டனியும்...என்னை கொன்று போட்டுவிடுவார்கள்.....”

“அவர்கள்தான் கி்.மு...விலே..இறந்துவிட்டார்களே...!!!”

அவர்கள் இறந்துவிட்டாலும்.. அவர்களுடைய வாரிசுகள் கி.பி.யில் இருக்கிறார்களே...!!!”

“அப்படி என்றால்....... கிளியோபட்ரா......”....

“  உஸ்.....ஸ்...ஸ், “அது ரகசியம்...பரம ரகசியம்”.....

“நானும் ஒன்று சொல்லட்டும்மா.....”

“ம்ம்ம்... என்ன சொல்லப் போகிறாய்.... சொல்லு..”

“ வேறு ஒன்றுமில்லை... கழுத்தில் பாய்ந்த குண்டு”...”......

“ ம்ம்...கழுத்தில் பாய்ந்த குண்டு”....???

“ சற்று கீழே இறங்கி மார்பிலே ..பாய்ந்து இருந்தால்......”

“ மார்பிலே...பாய்ந்து இருந்தால்”.......!!!!

“ தமிழ்நாட்டின் வரலாறும்ம்ம்..... வேறு மாதிரியாக இருந்திருக்கும்”.....

“????????.................................!!!!!!!!!”


 ” என்ன...... புரியவில்லையா.......???”

“ஓ....ஓ.....ஓ...... புரிந்துவிட்டது....நண்பா....புரிந்து விட்டது.............


படம்-www.adrasaka.com4








வியாழன் 10 2015

சென்னை பேரழிவின் சத்ரு..யார்...???

Thaiyur, Maduranthakam lakes are safe: Officials
படம்-tamil.oneindia.com



செம்பரபாக்கம் ஏரியை திறப்பதில் கடைசி வரை தாமதம்

மேலிட உத்தரவுக்காக அதிகாரிகள் காத்துக்கிடந்த அவலம்

முன்னெச்சரிக்கையின்றி 1லட்சம் கனஅடி திறந்த அநியாயம்

உயிர்ப்பலிகளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காத அட்டூழியம்

முடங்கிய நிர்வாகத்தால் “தேசிய பேரிடராக” மாறிய கொடுமை

கடலூரை மறைத்துவிட்டு   சென்னையில் மட்டும் 50 லட்சம் பேரின் வாழ்க்கை உருக்குலைத்த .........

அந்த சத்ரு...யார்...?...யார்  ??  யார்???


புதன் 09 2015

எங்கேயும்... எப்போதும்.......

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்


எங்கேயும் ...எப்போதும்..

ஏதோ......

ஒன்று உருவாகிக்
கொண்டு இருக்கும்.

ஏதோ...

ஒன்று மறைந்து
கொண்டு இருக்கும்

ஏதோ.....

ஒன்று தோன்றி
கொண்டு இருக்கும்

ஏதோ...

ஒன்று அழிந்து
கொண்டு இருக்கும்

புதியதற்கும் பழையதற்கும்
இடையிலான போராட்டம்
நடந்து கொண்டே
இருக்கும்.

செவ்வாய் 08 2015

போதும்மடா ...சாமி.........


படம்www.pathivu.com







வந்தேறிகளான நாங்கள்
இல்லை என்றால்
என்ன .குந்த
வந்தவர்கள் நல்லா
 குந்துங்கடா..போயி

பட்ட துன்பம்
போதும்மடா...சாமி
சென்னையை விட்டு
சொந்த ஊரில்
சாக வழி
காமிடா சாமி......


செய்தி:--_-  சென்னை மழை வெள்ள பாதிப்பு, வதந்தி எதிரொலியால் சென்னையை காலி செய்த 3 லட்சம் பேர்....

 ‘

திங்கள் 07 2015

40 லட்சத்தை 45 நிமிடங்களில் கண்டு களித்தவர்...

படம்-www.dinamani.com

தங்கத் தாரகை
மக்களின் முதல்வர்
புர்ச்சி தல்வி
தமிழகத்தின் நிரந்தர
முதல்வர் அவர்கள்

சென்னை வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட 40 லட்சம்
மக்களை வான்
வழியில் சென்று
45 நிமிடத்தில்
கண்டு களித்தார்.




ஞாயிறு 06 2015

பராசக்தியிடம் மனு போட்ட பாமரனும் ....மகா கவியும்


 தமிழகத்தில் மழை அதிகரிக்கும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

சென்னையே வெள்ளத்தில்(பராசக்தி உள்பட) தத்தளித்தபோது  பராசக்தியின் பக்தனான ஒரு பாமரன் பராசக்தியிடம் போட்ட மனு..

ஆத்தா பராசக்தி..
வருண பகவான்
கொட்டிய மழையில்
எங்களை ஆட்சி
செய்ய கொலு
வீட்டிருந்த திருக்கோயிலான
உன் வீடும்
வெள்ளத்தில் அடித்து
போய்  விட்டது...
உன் கடைக்கண்
பார்வையை வருண
பகவான் மேல்
செலுத்து. உன்
பார்வையால் அவன்
தடுமாறும்  நிலையை
பயனபடுத்தி நான்
வெள்ளத்தில் இருந்து
தப்பித்துக் கொண்டு
உன்னை காப்பாற்றுகிறேன்
 ஆத்தா பரா..சக்தி..............





தாய் நாடே  பிரிட்டிஷ் காரனிடம்( பராசக்தி உள்பட) அடிமைபட்டு தத்தளித்தபோது   பராசக்தியின் பக்தனான   மகாகவி பராசக்தியிடம்  கேட்டது

கானி நிலம்
வேண்டும் பராசக்தி
கானி நிலம்
வேண்டும் பராசக்தி
அந்த கானி
நிலத்திலே ஓர்
மாளிகை கட்டி
தரவேணும்மடி
பரா....சக்தி



சனி 05 2015

கூகுள் பிளாக்கர்க்காக ..தமிழ்மணத்தில் பதிவிட்டது.......

படம்-வினவு..

இந்தீய நாட்டின்
ஒரு சட்ட
மன்றத்தில் ஒரு
மந்திரி ஆரம்பித்தது...

“எதுக்கும் லாயக்கு
இல்லாத என்னை
அமைச்சர்  ஆக்கிய
அம்மாவுக்கு............”

இப்படி எதுக்கும்
லாயக்கு இல்லா
மந்திரிகளை நியமித்தால்
சென்னை  கடலூர்
வெள்ள நிவாரண
பணிகளில் எப்படி
செயல்படுவார்கள்  என்பதை
பாதிப்படைந்த மக்கள்
உணர  வேண்டும்
என்று எதுக்கும்
லாயக்கு இல்லா
மந்திரிகளின் தொண்டர்கள்
கோரிக்கை வைத்தனர்

---------கூகுள் பிளாக்கர்க்காக தமிழ் மணத்துடன் பதிவிட்டது  வலிப்போக்கன்.

வெள்ளி 04 2015

மழை நீரில் கால் பதிக்காத சீமாட்டி...........

படம்-baluspoli.blogspot.com



அந்தச் சீமாட்டியின்
கால்கள் அரியணை
ஏறிய நாளிலிருந்து
மண் தரையை
தொட்டதாக வரலாறு
இல்லாத  போது..
மழை நீரானது
அவர் கால்களை
தழுவிட  முடியுமா..?

வாய் பொளந்து
பல் இளித்து
சிந்திக்க மறந்து
அந்த சீமாட்டியை
அரியனை ஏற்றி
அவதி படும்
வாக்கு  ஆளார்கள்
தான் பதில்
சொல்ல வேண்டும்.


செய்த தவறுக்கு
சட்டத்தின் நீதிபதிகளே
தண்டிக்க மறுத்தபோது
ஆர்.கே..நகரில்
தண்டிக்க மறந்து
வேடிக்கை பார்த்தவர்களையும்
ஒதுங்கி நின்றவர்களையும்
இயற்கை தண்டிக்காமல்
மன்னித்து  விடுமா...??

அல்லது யாகத்தினாலும்
வேள்விகள் செய்வதாலும்
இயற்கையின் தண்டனையிலிருந்து
தப்பித்து விட முடியுமா...???



மறந்து விட்டவர்களின் நிணைவுக்கு.....மக்களே போல்வர் கயவர்
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். 

வியாழன் 03 2015

நொங்கு திண்டவன் ஓடிட்டான்...நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்டான்.

படம்-www.dinamani.com



“டேய்...... எங்கேயடா...அவிங்க....”

“யாருண்ணே...”

“  யாரா......?ஃ..அவிங்க தாண்டா... மழை வேண்டி.. கழுதைக்கும் கழுதைக்கும்  நாய்க்கும் விட்டைக்கும்  கல்யாணம் பண்ணி வச்சவிங்க......”

“அவிங்களாண்ணே.......இன்னவரைக்குமாண்ணே...இருப்பாங்கே... சிட்டா பறந்து  இருப்பாங்கேண்ணே.....”


“ மழை வேண்டி..யாகம் பண்ணினவங்கே.......”

“ அவிங்க எல்லாம்... வெளிநாட்டுக்கு யாகசம் கேட்டு போயிருக்காங்கண்ணே...”

“அப்போ ஒரு பயலும்  வெள்ளத்துல இல்லையாடா.....”

“   கல்யாணம் செஞ்சு வச்சவனும்.. யாகம் பண்ணினவனும் நாசமா போன மழையில சிக்காம  தப்புச்சுட்டுகாங்கண்ணே..... ....

“பாவிகள் தப்புச்சுட்டான்களா...”

“இவிங்க மட்டும்..பாவிங்க இல்லண்ணே..”

“பின்ன..இல்லீயா.டா... நம்ம தலநகரமே..இப்படி  நாசமா..போச்சுடா....”

“ மற்ற ஊர்கள வச்சுதானே தலநகரம்... கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்கண்ணே.....”

“என்னடா...சொல்ற...”

ஒங்களுக்கு தெரியாதது இல்ல..இருந்தாலும் சொல்றேன்.   தல நகருக்குஒரு அரை மணி நேரம் மின்சாரம்  நிறுத்தி வைத்தால்  வெளி நாட்டு, உள்நாட்டு கார்ப்ப ரேட் கம்பெனிகளின் ஊதுபத்தி பாதிக்குமுனு சொல்லி மத்த ஊர்களை எல்லாம் இரட்டுல..முழ்க வச்சங்களே.. ஞாபகமிருக்கா...???... இப்ப அந்த கார்ப்ப ரேட்டு வெண்ணைகளும்..அவிங்களுக்கு ஆதரவாக இருந்தவங்கேதாண்ணே  பாவிகள் ..


 அட, ஆமாடா...“யாகம் செஞ்சவன் பாவின்னா....இவிங்க மகா பாவிங்கடா..””


“அவிங்களும் இப்ப காணோம்ண்ணே...”

”............நொங்கு திண்டவன் ஓடிட்டான். நோண்டி திண்டவன் மாட்டிக்கிட்ட ” கதையாவுல இருக்கு....

அது கதையில்லண்ணே.. அது உண்மையிண்ணே .அந்த நிலமைதான்ண்ணே.....இப்ப  நம்ம தல நகர்ல்ல நடந்துகிட்டு இருக்கு...”

புதன் 02 2015

பேரு...பெத்த..பேரு.....

உட்பொதிந்த படத்தின் நிரந்தர இணைப்பு
படம்- சிந்தனைவாதி

படம்- வெப்துனியா

படம்-






ஆட்சி.....
அதிகாரம்,....
செல்வாக்கு......
படைபலம்......
இவற்றால்
ஒன்னும்
செய்ய
முடியவில்லை
தலை
நகரை
நாசமாக்கிய
மழையை.......

பேரு
பெத்த
பேரு

இந்த
பேரை
கெடுத்து
விட்டதாக

ம.க.இ.க
பாடகர்
கோவனை
கைது
செய்தது
கலைஞர்
மற்றும்
ஆனந்த
விகடன்
மீது
அவதூறு
வழக்கு
போடுவதை
தவிர......

பேரு..
பெத்த...
பேரு...ப்பா.....







                                                         மேலும் பார்க்க....படிக்க....


செவ்வாய் 01 2015

ஒரு காதல் பாட்டில் சொக்கி போன மனது.....

மழை விடுவதாக இல்லை..பஸ்சும் வருவதாக தெரியவில்லை.. ஆட்டோதான் சர்புர்ர்னுஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வந்து நின்றது. அவசரத்துக்கு கூட ஆட்டோவில் பயனிப்பது..இல்லை.. பஸ் அல்லது நடை ராஜாதான் எனது பானி... மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்ததால் நடை ராஜா பானியை தொடர முடியவில்லை.. 

பஸ் நிறுத்தத்தின அருகே உள்ள கடையின் வாசலில்  மழையில் நணையாமல் நின்று கொண்டு இருந்து பஸ் வரும் திசையை நோக்கி பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தேன்.ஒரு பஸ் வந்தது, மழை பெய்வதால் நின்றால் நணைந்து விடுவோம் என்று பஸ் நிணைத்ததோ..அல்லது பஸ் டிரைவர் நிணைத்தாரே... பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விட்டது.

 இப்படியாக  இரண்டு. மூன்று பஸ்கள் சென்றுவிட்டது. நான்தான் மிகவும் பொறுமைசாலி ஆயிற்றே..எரிச்சல்படாமல் முனு முனுக்காமால் அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்தேன். ஒரு பஸ் வந்தது. எனக்காக நிற்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் அந்த நிறுத்தத்தில் இறங்கியதால்  பஸ் மழையில் நிணைந்தவாறு நின்றது.. பஸ்ஸில்உள்ளே நுழைந்த போது பஸ் சீட் எல்லாம் மழையில் நணைந்திருந்தது. 

நிற்க முடியாதவர்கள். எல்லாம்  தலைவிதி என்று உட்கார்ந்து இருந்தனர். உட்கார்ந்தால் நம் அணிந்திருக்கிற உடை நாரிப் போயிரும் என்று நிணைத்த வீராதி வீரர்கள் எல்லாம்  முதுகுக்கு முட்டு கொடுத்தபடி நின்று கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களுள் ஒருவனான எனக்கு  முட்டுக்கொடு க்க இடமில்லாததால் ஓட்டுனர் பக்கத்தில் போய் நின்றேன். பஸ்ஸில் இருந்த எப்எம்  ரேடியோவில் இசைஞானியின் சூப்பர் பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருந்தன... எல்லாப் பாடல்களையும் கேட்டு இரசித்த எனக்கு அதில் ஒரு பாட்டும் மட்டும்  என் மூளையில் பதிவாகியது... அந்தப் பாட்டின் முழுவரிகளும் தெரியாத போதும் ஒலித்த இசையையே  சில நாட்களாக ஒலித்தேன்... அடுத்தப் பாடல்  என் மூளையில் பதிவாகும்வரை இந்தப்பாடல்தான் என்னையும் அறியாமல் ஒலித்தது.

இந்தப்பாடல் வந்த புதிதில் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருந்தாக ஒரு நண்பர் டிவிட்டரில் சொல்லியிருந்தார்...நான் இப்பொழுதான் கேட்டு இருப்பதாக என்னை கிண்டலடித்தார். உண்மைதான்  அன்று எனக்கு இசை ரசனை இல்லை இப்பொழுதான் கொஞ்சம் கொஞ்சமாக.....

அந்தப்பாடல் இதுதான்.. 



Movie: Karumbu Vil (1980) || Language: Tamil || Singer: K.J.Yesudas || Actors: Sudhakar and Subhashini || Music: Ilayaraja

திங்கள் 30 2015

புனிதமற்ற காதல் அநாகரிமான முறையில் கொலை செய்யும்..

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?
படம்--வினவு..



அவன் பெயர் கார்த்திக் ராஜா..11ம் வகுப்பு படித்து வந்தான். அவள் பெயர் லோகேஸ்வரி அவளும் 11ம் வகுப்பு படித்து வந்தாள்... இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தார்கள்.

இவர்கள் நீண்டகாதலர்களாக இருந்ததால் முதல் கர்ப்பத்தை கலைத்த மாதிரி இரண்டாவது கர்ப்பத்தை அவர்களால்  கலைக்க முடியவில்லை... ஏனென்றால் லோகேஸ்வரியின் இரண்டாவது கர்ப்பம் ஐந்து மாதங்களை கடந்து விட்டதால் கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்

இதனால்  காதலன் கார்த்திக் ராஜாவை தன்னை மணம் செய்யுமாறு லோகேஸ்வரி வற்புறுத்தினாள்...

முதலில் தன் பெற்றோர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்று தட்டி கழித்தான்.  உன் பெற்றோரை கேட்டா என்னை காதலித்து என்னைக் கர்ப்பமாக்கினாய் என்று கேட்டு மீண்டும் தன்னை மணம் செய்ய வேண்டும் என்று நச்சரித்தாள்.

காதலி லோகேஸ்வரியின் நச்சரிப்பினால் ஒத்துக் கொண்டவன் ..நம் காதலை என் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்... அதனால் நாம் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றான்.

உண்மையாக அவனை  காதலித்த அந்த பேதைப் பெண்ணும்..தன் காதலனின் சொல்லை வேத வாக்காக நிணைத்து.. அவனுடன் பைக்கில் சவாரி செய்து ஒரு காட்டிற்குள்  சென்றாள்.

காட்டிற்குள் இருவரும் வந்தபின் அந்த பேதைப் பெண்“ எங்கே விசம்” என்று கேட்க... அந்தப் பேதைப் பெண்ணின் துப்பட்டாவைகே் கொண்டு அவளது கழுத்தை நெறித்துக் கொன்றான்.

தான் நேசித்த பெண்ணுடன் முதலில் ஆசையுடனும், பின்னர் வெறியுடனும் உறவு கொண்டு தனது காமத்தை தீர்த்துக் கொண்ட கார்த்தீக் ராஜா என்பவன். ஈவு இரக்கமில்லாமல் அவளது துப்பட்டாவையே சுருக்கு கயிறாக மாற்றி இறுக்கிக் கொன்றிருக்கிறான்.

புனிதமற்ற முறையில் காதலித்து...அநாகரிமான முறையில்  கொலை செய்த அந்தகாதலன் கைது செய்யப்பட்டபோதுதான்... புனிதமற்ற காதலன் ..தன் புனிதமான காதலியைகொலை செய்த விபரம் வெளியுலகிற்கு தெரிய வந்தன..

ஞாயிறு 29 2015

முற்கால காதலும் ....தற்கால காதலும்....







முற்காலத்தில்...

காதலன்  தன்
காதலை நிறுபிக்க
வில்லை முறித்தான்
குதிரையை அடக்கினான்
மாட்டைப் பிடித்தான்.

தற்காலத்தில்...

காதலன் தன்
காதலை நிறுபிக்க
ஒன்றே ஒன்று
மணிப் பர்சில்
பணம் நிரப்பி
இருக்க  வேண்டும்

சனி 28 2015

“காதல்கோட்டை ” படத்தால் வந்த ஒரு விளைவு..

cinema-thirai-copy
படம்-வினவு.



எந்த லட்சியமும் வேண்டாம், அதற்க்காக போராடுவதும் வேண்டாம். காரிய வாதமே சிறந்த பண்பாடு என்ற போக்கு பரவிகிடக்கும்  இன்றைய சூழலில் நோகாமல் லாட்டரி பரிசுப் போல காதலும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்.


அன்று.... “காதல் கோட்டை” என்ற படம் வந்து 100 நாட்களை கடந்து  வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருந்தது.

அப்பொது அந்தப்படத்தை பார்த்த பெண்ணொருத்தி... தன் கைப் பையில் தன் முகவரியை எழுதிவைத்து....

அந்தப் பையை வேண்டுமென்றே பேருந்தில் தவறவிட்டு.... யாராவது ஒரு“ அஜித் ” அதை கண்டெடுப்பான் என்ற கனவில் மிதந்தாள்.

 அந்தப் பேருந்தில் கிடந்த பையை எடுத்தவன் ஒரு ரவுடி.. .பின்  அந்த ரவுடியின் “காதல் கோட்டை”யிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் போலீஸை நாட வேண்டிவந்தது..


ஆகையால் சினிமா ரசிகைகளே.... யாரும் காதலினிடம் சங்கிலியை தவற விடவேண்டாம். சங்கிலி திரும்பாது... ரசிகர்களே!!  யாரும் சங்கிலியை திரம்பக் கொடுக்க “காதலி” வீட்டுக்கு போகவும் வேண்டாம் ஆள் திரும்ப முடியாது..

நன்றி!   சினிமா: திரை விலகும் போது… -- புதிய கலாச்சாரம் வெளியீட்டிலிருந்து..

வெள்ளி 27 2015

ஒரே நாளில் கலைந்த காதல்......

படம்-Tolstoy. After the Ball. Stories.





நடன விருந்தொன்றுக்கு சென்றான் ஒரு இளைஞன். அங்கே ஒரு பெண்ணை பார்க்கிறான். பார்த்தவுடன் அவள் அழகால் கவரப்படுகிறான். அதன் விளைவாக அவளிடமும் அவளது தந்தையிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

அந்த ஆசையுடனே தன் வீடு வந்து சேர்ந்தவனுக்கு அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.

மறுநாள் காலை, அவளைப்பற்றிய நிணைவுடனே.. கடை வீதி வழியே சென்றவன்....

ஒருஅப்பாவி ஒருவரை கதற கதற அடித்து ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ்காரன் ஒருவன் இழுத்துச் செல்வதைக் காண்கிறான்.

பரிதாபத்துடன் நெருங்கிச் சென்று அந்த அப்பாவியை பார்க்கிறான். அது அவனின்  தூக்கதை கெடுத்த..அவனின் மனம் கவர்ந்த மங்கையின் தந்தை.!!!

அந்த ஒரே  நாளில்....... அவள் மீது கொண்ட அவன் காதல் கலைந்து விடுகிறது.

வியாழன் 26 2015

அழகில்லாதவருக்கு இவ்வுலகமில்லை.......சிறுகதை.


Image result for காதல் கோட்டை
படம்- வினவு..
அந்தத் தெருவில் குடியிருக்கும்  தெரு மக்கள் எல்லோரும்   அந்த வீட்டில்  இறந்து கிடந்த பெண்ணைப் பற்றித்தான்  தங்களுக்குள் தங்களுக்கு தெரிந்த விபரங்களை குசுகுசுவென்ற சத்தத்தில் பேசிக் கொண்டு இருந்தனர்.

போலீஸ் வந்ததும் எல்லொரும்  குசு குசுப்பதை நிறுத்திவிட்டு  விழித்த கண்ணை இமை மூடாமல் வேடிக்கை பார்ப்பதில்  செலுத்தினர். ஒருவழியாக போலீஸ் செத்து கிடந்த பெண்ணின் உடலை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி விட்ட பிறகுதான் தெரு வாசிகளின் னண் இமைகள்  மூடி திறந்தன.

தெரு வாசிகளின் குசு குசு பேச்சு சற்று ஓய்ந்திருந்த நிலையில் போலீசு வந்து அந்தத் தெரு வாசிகளிடம் ஒரு பெண்ணின் போட்டோவை காண்பித்து யார்? என்று விசாரித்தவுடன். திரும்பவும் குசு குசுவானது.. சற்று ஒலியுடன்.. கேட்கத் தொடங்கியது.

போட்டோவில் இருக்கும் பெண்.. அந்த வீட்டில்  வாடகைக்கு குடியிருந்தவனுடன் இருந்தவள் என்று தெரு வாசிகள்  சொன்னார்கள்.

சரி. கண்டுபிடிப்பு  முடிந்தது என்று போலீசு இரந்த வேளையில்.. போட்டோவில் இருப்பது நான். தான் சாகவில்லை உயிரோடு இரக்கிறேன் என்று ஒரு செய்தி வந்ததும்... அப்போ.... கொலையுண்ட பெண் யார் என்று தேடுதலில் இறங்கியது போலீசு....

அப்படி தேடுதலில இந்தக் கதையின் கதாநாயகன் பிடிபட்டான்..

கண்ணாலே பார்த்து வந்த காதல் நூறுடா...
விழியில் பார்க்காமல் வந்த கண்ணியமான
காதல் இதுதாண்டா-----.............................................. 
என்று காதல் கோட்டை என்ற படத்தைப்போல்  

அதே காதல் கோட்டைப்படத்தில் கதாநாயகனின் நண்பன் பேசும்..

“நானும் கல்யாணம் பண்ணிக்குவேன், நயன்தராவையும்..அனுஷ்காவையும் காதலிப்பேன்... ஏன்னா..நான் சராசரி இந்தீயன் என வசனம்போல.

 அழகில்லாதவளுக்கு இவ்வுலகமில்லை என்றுதன் பிளாஷ் பேக் கதையைச் சொன்னான் கதாநாயகன்.

ஒரு குழந்தைப் பெற்று  கணவனை பிரிந்த ஒரு பெண்ணை  திருமணம் முடித்தவன்அவன் . அவர்கள் பெண்ணின்  தாய் வீட்டில் வசிக்கிறார்கள். அவன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு  அந்த வீட்டில்வாடகைக்கு குடியிருந்து.. ஒர்க் சாப்பில் வேலை செய்து வந்த நிலையில்......

ஒருநாள் எனது செல்போனுக்கு ஒரு கால் வந்தது. .. அதில் பேசிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. ஆரம்பத்தில் சஜகமாகத்தான்  பேசி பழகி வந்தான். அது ..........

அவனுக்குள் காதலை வளர்த்துவிடடது.  அவள் குரலும் இனிமையாக இருந்ததால் ..அவள் தேவதையாகவோ...பேரழியாகவோ இருக்கலாம் என்று  எண்ணி காதல் கோட்டை திரைபபடம் போல முகம் பார்க்காமல் காதலை வளர்த்து வந்ததால். அந்தத் தேவதையான பேரழிகியின் முகத்தை பார்க்க வேண்டும் ஆவல் மேலிட்டது..

அந்த ஆவலினால் இனிமையான குரலுக்குரியபெண்ணை குடியிருக்கும்  விட்டிற்கு வரவழைத்தான்... 

அந்தப் பெண்ணும்  முகம் காண காதல் கட்டளைக்கு அடிபணிந்து.. எனக்கு நேரில் காட்சியளித்தாள். தேவதையின் காட்சியை நேரில் பார்த்த அனக்கு  பேரதிர்சிசியாக இருந்தது. அவனது காதல் கோட்டை இடிந்தது.

பேரழியாக இல்லாவிட்டாலும் அழகியாகக் கூட இல்லாததால்... அந்தப் பெண்ணை கை கழவ எண்ணினான் . தன்னுடன் நான்கு நாள் தங்கிய அந்த அழகில்லாவளிடம் படுத்து தன் காமம் முழவதையும் தீ்ர்த்துக் கொண்டான்

அவனின் ஆசையயை தீர்த்த அந்த அழகில்லாஅநதப் பெண்... தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவனிடம்  மனு போடடாள்

தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்று மனுவுக்கு பதிலுரைத்தான். அவளின் மனுவையும்  நிராகரித்தான்.

அவனால் தன் மனு நிராகரிக்கப்பட்டதை உணர்ந்த அவள்.  உன்னை நம்பி என்னை கொடுத்தேன.வாழ்ந்தால் உன்னோடுதான் வாழுவேன்.  நீ மறுத்தால்  நான் போலீசிடம் போவேன் என்றாள்.

காமப் போதை தெளிந்தவனுக்கு கோபப் போதை தலைக்கேறியது.....அழகில்லாதவளை அடித்து தள்ளிய போதும் .  கேபப் போதை வெறி யால் கியாஸ்அடிப்பின் டியூப்பால் கழுத்தை இறுக்கி..... அழகில்லாதவளை இவ்வுலகத்தவிட்டு  அனுப்பி வைத்தான்.


அழகில்லாதவளை இவ்வுலகத்தைவிட்டு அனுப்பி வைத்த மகிழ்ச்சியில் ஓடி ஒளிந்து தப்பித்தவன்.. தப்பாமல் பிடிபட்டபோது... அழகில்லாதவளுக்கு இவ்வுலகமில்லை என்ற காதலின் புனிதத்தை வாக்குமூலமாகசொன்னான்.







ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...