பள்ளியில் உடன்
படித்த நண்பன்
ஒருவன் கேட்டான்
நீண்ட நாள்
கழித்து சந்தித்த
சந்திப்பின் போது .....
நண்பா..... திருமணம்
முடித்து விட்டாயா?
குழந்தைகள் எத்தனை?
அவர்கள் எல்லோரும்
நலமாக இருக்கிறார்களா?
என்று...............
மனைவி.குழந்தைகள்
எந்த வாய்ப்பும்
இன்று வரை
கிட்டவில்லை
என்றான் நண்பன்.
கோபம் கொண்டு
நண்பன் சொன்னான்
இயற்கை விதியை
மீறி விட்டாயாடா!!
சமூகம் உன்னை
சின்னா பின்னா
படுத்தி விடும்மடா?
நண்பனுக்கும் நண்பனுக்கும்
தொடர்ந்த வாதங்கள்
முடிவதாய் இல்லை
முடிவாக ...........
நண்பனின் மேல்
வருத்தம் கொண்ட
நண்பனிடம் நண்பன்
இயற்கை விதியை
மீற வைத்ததே
ஏற்றத் தாழ்வாக
நிலவும் சமூகம்தான்
என்றான்.............
கருத்துரைக்கு நன்றி! திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பதிலளிநீக்கு