பக்கங்கள்

செவ்வாய் 26 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்-2


காவல் நிலைய புகார்முடிந்தது என்று அவர் இருமாந்து இருந்த நிலையில் மறுநாள் காலையில் குருசாமியும் அவரின் இரண்டாவது மகன் முருகேசனின் மனைவியுமான கண்ணகியும் இரண்டு வேலை ஆட்களுடன் வந்து  கணேசனின் வீட்டுக்கு அருகில் அவர் இடத்துகுள் ஏற்கனவே பதித்திருந்த பாதாள சாக்கடையை  தோண்ட ஆரம்பித்தனர். அந்த தெருப்பாதையை தனது பாதை என்று அவர் மீது வழக்கு போட்டவர்கள். சிமெண்ட்தளம் பாதாள சாக்கடை குழாய் பதிக்க கூடாது என்று தடுத்தவர்கள். மீண்டும் தோண்டுவதைக் கண்டு அதிர்ச்சியானர்..


பாதாள சாக்கடை குழாய் இணைப்பு கொடுக்கிறேன் என்று பல தடவை தோண்டி , இரு சக்கர வாகனத்தில் அவர் செல்ல முடியாதவாறு தெருவையே பள்ளமாக்கி விட்டார்கள்.. அவரிடத்தில் தோண்டுவதோடு அல்லாமல் மேலும் பள்ளமாக்கி விடுவார்களே என்று பயந்தவர்.. அவர்கள் வேலை செய்வதை படம் பிடித்து மாநகராட்சியின் புகார் தளமான வாட்ச் அப்பில் அனுப்பினார். வேலைக்கு வந்தவர்களிடம்  பிரச்சினையின் விவரத்தை சொல்லிய போது வேலைக்கு வந்த ஆட்கள் அடைப்பு மண்ணை மட்டும் எடுக்க வந்ததாக சொன்னார்கள்.  சரி  என்றவர் மாநகராட்சியின் அனுமதி கடிதம் வாங்கியுள்ளீர்களா? என்று கேட்ட போது இதுக்கெல்லாம் வாங்க அவசியமில்லை என்றார்கள்...அவர்களை செல்போனில் படம் பிடிப்பிதைக் கண்டவுடன் அவர்கள் வேலை செய்யாமல் இடத்தை காலி செய்தனர்...


பின் இரண்டு மணி நேரம் கழித்து வந்த வேலையாட்கள்.. ஏயிடம் அனுமதி வாங்கியதாக சொன்னார்கள். மாநகராட்சி ஏ.யிடம் அவர் போனில் விசாரித்தபோது. அடைப்பு மண்ணைத்தான் அள்ளுகிறார்கள் பள்ளமாக்கவில்லை என்று கூறினார். சரி என்று விட்டு  வேலை விசயமாக வெளியே சென்றுவிட்டு மாலை வரும்வரையிலும் குருசாமியின் மருமகள் கண்ணகி மூத்த மகன் செல்லமணி ஆகியோர்தெருவையே மறித்து அடுத்தவர் இடத்தை ஆக்கிரமித்து முறைகேடான  தங்களது பாதாள சாக்கடையை நன்றாக பாதுகாப்பாக அவருடைய இடத்தில் போட்டுக் கொண்டு இருந்தனர்..அவர் எதுவும் பிரச்சினை செய்யாமல் இருப்பதற்கு அடியாள் படையையும் பாதுகாப்பாக நிறுத்தி இருந்தனர்.


தாம் பிரச்சினை செய்தால் அடிதடியாக மாறும் பிரச்சினை வேறு திசைக்கு போகும் என்பதை ஊகித்த அவர்   பொறுமையை கடைபிடித்து பின் வாங்கி  கண்டும் கானாமல் ஒதுங்கிவிட்டார்..


மண்ணை அள்ள வந்த வேலையாட்கள்( முக்காடு போட்டு இருப்பவர் குருசாமி)



வன்மத்தால் பள்ளமாக்கப்பட்ட  தெரு

  

ஞாயிறு 24 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்..1..

காவல் நிலையத்தில்  சென்று பெயரைச் சொல்லி..புகார் கொடுத்தவனின் பெயரை அவர் சொன்னபோது.... எஸ் ஐ ரவுண்டுக்கு போயிருக்கார் வெயிட் பன்னுங்கள் என்று சொன்தைக் கேட்டு  எதிரே உள்ள கடையில் நின்று கொண்டு இருந்தார் அவர்.

அப்போது அவர் தெருவில் முன்னால் குடியிருந்த ஒருவர்.. அவர் நிற்பதைக் கண்டு ” அண்ணே என்னண்ணே..இங்கே  என்றான்...

அவர், அவனைப் பார்த்து நீய்ய் எங்கய்யா இங்கே என்று அவர் கேட்டார். 

அவன்..புகார் கொடுத்த  குருசாமி மகன் செல்லமணியை  சுட்டிகாட்டி அவர் கூட வந்திருக்கேண்ணே என்றான்...

அவனா...? அவன்தாண்டா என்மேல புகார் கொடுத்து இருக்காண்டா....அதுக்குத்தாண்டா வந்திருக்கேன் என்றார்.

அண்ணே...என்ன மன்னிச்சுடுண்ணே...நீய்யின்னு தெரியாம வந்துட்டேண்ணே என்றான்..

பராவாயில்லடா.....அவன் மூலமாகதான் நீ குட்டியாணை லோன் வாங்கியிருக்க....அவன் கூப்பிட்டு நீ வரலைன்னா..அது நன்றி கெட்ட தனமா போயிடும்..நா....ஒன்னும் உன்னை தப்பா நிணைக்கலடா என்று விட்டு செல்லமணியின் அப்பா குருசாமி ஐம்பது வருடமாக இடத்து பிரச்சினையை காரணமாகக் கொண்டு இரண்டு முறை அவர் வீட்டுக்கு தீவைத்த கதையையும் அவர் வீட்டுக்கு போற தெருபாதையை தனது இடம் என்று சொல்லி சிமெண்ட்தளம் போட விடாமல் தடுத்ததமாக அவர் அவர்களிடம் தோத்த கதை..ஜெயிச்ச கதையை அவனிடம் சொல்லிக் கொண்டு இருக்கும்போது  தகவல் சொல்லி அழைக்க வந்த காவலர் அவரிடம் வந்தார்

சார். எஸ்ஐ வர்ரதுக்கு பதினோறு மணியாகும்... அதனால..நாளைக்கு இதே டயத்துக்கு வந்திருங்க சார்.

அவரும் நல்லது சார் என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டு இருந்தவனிடம் விடை பெற்று வீட்டுக்கு வந்துவிட்டார். மறுநாள் இரவு ஏழு மணிக்கெல்லாம் காவல் நிலையத்துக்கு சென்றபோது... எஸ்ஐ செல் போன் பேசிக் கொண்டு இருந்தார்.அவர்  அவரிடம் தன்னை அறிமுக செய்து கொண்டு தான் கொண்டு சென்ற மனுவை கொடுத்தார்.

எஸ் ஐ வாங்கியவர் மனுவின் முடிவை படித்துவிட்டு, செல்லமணி புகார் மனுவின் விபரத்தை சொன்னார். அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது புகார் கொடுத்த செல்லமணி வந்தான். வந்தவன் எஸ்ஐக்கு வணக்கம் சொல்லி விட்டு அவன் தரப்பை சொன்னான்.

இரண்டு தரப்பு சொல்வதைக் கேட்ட எஸ்ஐ...இது சிவில் சம்பந்தபட்ட வழக்கு இதில் நான் தலையிட முடியாது... இருவரும் நான் சொல்வதைக் கேளுங்க என்று விட்டு செல்லமணியைப் பார்த்து சர்வேக்கு பணத்த கட்டி அளங்க... அதுல ஒங்க இடம் கணேசன் இடத்தில் இருந்தால்  கணேசன் விட்டு கொடுத்திடனும் கணேசன் இடம் உங்க இடத்தில் இருந்தால் நீங்க விட்டு கொடுத்திடனும்.. அளக்கும் போது சொல்லுங்க  காவலுக்கு ரெண்டு பேரை அனுப்புறேன் என்றார்.

கணேசன் சரி என்றார்...செல்லமணி ஒரு பேப்பரை காட்டி 1996லே நாங்க அளந்தோம் . கணேசன்  காசு கொடுத்து அளந்திங்க ஒத்துக்க மாட்டுறான் என்றான்.

அளப்பதற்கு நோட்டீஸ் விட்ட பேப்பரை பார்த்துவிட்டு கணேசன் கையேழுத்து போட்டு இருக்கிறார்.. நீங்க அளந்து கல் ஊண்டியதை படம் பிடித்து வைத்திருக்கலாம்ல  என்றார்.

சார், செல்லமணியின் அப்பா குருசாமி  எந்த சமயத்திலும் அவர் இடத்து பத்திரத்தை காட்டுவதே இல்ல சார்...நீங்க அந்த பத்திரத்தை காட்ட சொல்லங்க சார்... என்றார் கணேசன்... 

எஸ் ஐக்கு போன் வந்தது.சிறிது நேரம் பேசிவிட்டு  கணேசனை மட்டும் வெளியில் சிறிதுநேரம் நிற்கச் சொன்னார். கணேசன் வெளியில் வந்து நின்றபோது.. எஸ்ஐயும் செல்லமணியும் பேசினர். அவர்கள் பேசி முடித்தப்பின் எஸ்ஐ கணேசனை கூப்பிட்டு.... நான் சொல்ற மாதிரி எழுதிக்கொடுங்க என்றார்.

எஸ் ஐ சொல்வதை கேட்டுவிட்டு கணேசன் எழுதினார்.... அனுப்புநர் பெறுநர் அய்யா குருசாமி மகன் செல்லமணி கொடுத்த புகார்க்கு நாளது தேதியில் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனேன். புகார் சம்பந்தமாக சர்வேக்கு பணம் கட்டி அளந்து வரும் முடிவினை ஏற்றுக் கொள்கிறேன் . பத்திரத்தைக் கொண்டு அளக்கும்போது வரும் அளவுகளை ஏற்றுக்கொள்கிறேன். பின் நீதிமன்ற வழி காட்டுதல் படி நடந்து கொள்கிறேன். அதுவரை நான் எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். தங்கள் உண்மையுள்ள என்று கையெழுத்துபோட்டு அதனுடன் தன்னுடைய மனுவையும் பின் இணைப்பாக கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.. இந்த பிரச்சினைக்கு பின் இரண்டு நாள்கள் அமைதியாக இருந்தவர்கள்.. திரும்பவும்  குருசாமி செல்லமணி குடும்பத்தார்கள் தங்கள் இம்சையை தொடர்ந்தார்கள்...

அடுத்த..இம்சைகள் ..............

வியாழன் 21 2017

மீண்டும் தொடரும் இம்சைகள்.....

மாலை மூன்று மணி இரு காவலர்கள் அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வந்தார்கள். வந்தவர்கள் முன் அவர் ஆஜர் ஆன போது வந்தவர்கள் சொன்னார்கள். உங்கள் மீது குருசாமி மகன் செல்லமணி புகார் கொடுத்து இருக்கிறார் என்றார்கள்.. என்னவென்று அவர் கெட்டபோது.. அவர்கள் வீட்டை மராமரத்து செய்வதை நீங்கள் தடுப்பதாக என்றார்கள். அவர் மீது புகார் கொடுத்த தெரு கோயிலின் பூசாரி குருசாமியின் மகன் செல்லமணி மற்றும் அவனின் தம்பியின் இரண்டு மனைவி மார்கள் என்று ஒரே கும்பல் வந்து அவர்கள்  தரப்பு பொய்யை குப்பையாக கொட்டியது...அவர் அமைதியாக இருந்தார். வந்த காவலர்கள் அவரை பார்த்த போது அவர்கள் சொல்வதை முழுமையாக கேளுங்கள் பின் என் தரப்பை சொல்கிறேன் என்றார்.

ஒரு வழியாக புகார் கொடுத்தவனின் வீட்டு கும்பல்களின் சத்தம் சிறிது குறைந்ததும் அவர் சொன்னார். எனது இடம்  அதுவரை இருக்கிறது என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு ஆள்பலமும் பண பலமும் இருப்பதால்  எனது இடத்திற்குள் ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளார்கள்.. நீங்கள் இறங்கி வந்த பாதையை இவர்கள் பாதை என்று என்வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதை தடுத்துவிட்டார்கள். இவர்கள் என் மீது தொடுத்த வழக்கு  எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றதும் பூசாரி சவுண்டு விட்டு தொடங்கி வைத்ததும் எல்லோரும் மீண்டும.. சலசல வென்று பேச ஆரம்பித்தனர்

வந்த காவலர்கள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவரிடம்  நீங்க எட்டு மணிக்கு வந்து எஸ்ஐயை வந்து பாருங்க..என்று விட்டு பூசாரி குருசாமியை பார்த்து நீங்களும் எட்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாங்க என்று  நடையை கட்டினர்
அவர் வந்திருந்த காவலர்களுடன் மெயின் ரோட்டு வரைக்கும் வந்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

அவரைப் பார்த்து சார் நீங்க கம்யூனிஸ் கட்சியா என்று கேட்டார் வந்த இருவரில் ஒருவர் அவர் இல்லை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினர் என்றார்.

நீங்க ..அவுங்க எல்லாம்  ஒரே சமூகமா என்றார்.  இல்ல சார்.. அவுங்க என் சொத்த அபகரிக்கிற சமூகம்..நான் என் சொத்த பாதுகாக்குற சமூகம் சார். என்ற போது இரு காவலர்களும் சிரித்தனர்.. பின் அவரைப்பற்றி கேட்டபோது அங்கு நின்று இருந்த பூசாரியை சுட்டி காட்டி.. அவர் சொன்னார். பெரிய இம்சை சார். அந்தாளு இம்சையினாலயே நான் திருமணம் முடிக்க முடியாமல்...ஆகிவிட்டது என் வீட்டில் இருந்தவர்கள் என் அக்காவின் மகன்கள். இந்தாளுவின் கூட்டத்துக்கு பயந்து..ஊரில் இருந்து வந்து வேலையை முடித்துவிட்டு ஊறுக்கு அனுப்பி விடுவேன் என்றபோது....வந்த காவலர்கள் மேற்க்கொண்டு விசாரணை செய்யாமல்  எட்டு மணிக்கு வந்திருங்க சார் என்று சென்றனர்

திரும்பி அவர் விட்டுக்கு வந்தபோது அவர்களின் வசவு சத்தம் ஒய்ந்த பாடில்லை....எதுவும் பேசாமல் விலகி வந்து வீடு சேர்ந்தார் பேருக்கு அன்றைய மதிய உணவை வயிற்றுக்குள் இறக்கி விட்டு. செய்து கொண்டிருந்த கை வேலையை முடித்துவிட்டு... அவரும்  ஒரு மனு எழுத ஆரம்பித்தார்



பெறுநர்:         காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்,
                             காவல் நிலையம், மதுரை
            
அய்யா,
         நான் மேற்படி முகவரியில் குடியிருந்து வருகிறேன். என் மீது குருசாமி மகன் செல்லமணி புகாரில் கூறப்பட்டுள்ள வீட்டில் செல்லமணி வசிக்கவில்லை அவரது தம்பி முருகன்தான் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.  மேற்படி வீட்டை செல்லமணியின் அப்பா குருசாமி கட்டும்போதே எனது இடத்தை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டுள்ளது  ..குருசாமியின் ஆக்கிரமிப்பை எனது தாயார் தடுத்தும் என் தாயாரையும் மீறி குருசாமி என்பவர் தனது ஆள்பலத்தால் பண பலத்தால் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டைக் கட்டி முடித்தார். .குருசாமியின் ஆக்கிரமிப்பை என் தாயார் எதிர்த்ததால்  குருசாமி  என் வீட்டுக்கு தீ வைத்தார்.இந்த பிரச்சனை நடந்த சிறிது காலத்தில் நான் குடியிறுக்கும் வீடு மற்றும் இடம் சம்பந்தமாக என் மீதும் என்தாயார் மீதும் அய்யணன் அம்பலம் என்பவர் மாவட்ட முன் சிப் கோரட்டில் சிவில் வழக்கு தொடுத்தார்.
         தற்போது  அய்யணன் அம்பலம் தொடுத்த வழக்கானது நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகிவிட்டது. தள்ளுபடியான நீதிமன்ற தீர்ப்பானையின் மூலம் அய்யணன் அம்பலம் பெயரிலுள்ள வீட்டுவரி ரசீது எனது தந்தை நாகன் பெயருக்கு மாற்றப்பட்டது.. மேற்படி எனது  வீடு சேர்த்து மொத்த இடத்தின் அளவு கிழமேல் 93அடியும் தென்வடல்29 அடியும் உள்ளது  இதற்கு ஆதாரமாக அய்யணன் அம்பலம் பெயரில் பதிவு பெற்ற பத்திரம் உள்ளது குருசாமியின் இடமானது   கிழமேல்30ஆகவும் தென்வடல்33ஆகவும் அவருடைய பத்திர ஆவணத்தில் உள்ளது. இந்த உண்மை நிலையை மறைத்து செல்லமணியின் அப்பா குருசாமி  எனது இடத்தின் வடக்கு பக்கத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி எனது இடத்தை ஆக்கிரமித்து  வீட்டை கட்டியுள்ளார். குருசாமியைத் . தொடர்ந்து குருசாமியின் அக்கா மகனும் எனது இடத்தை ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளனர். மேற்படி ஆக்கிரமித்த இடத்தை உறுதி படுத்திட வேண்டும் என்ற காரணத்துக்காவே வீடு பராமரிப்பு என்று சாக்கு போக்கு சொல்லி செல்லமணி என்மீது புகார் கொடுத்துள்ளார். இந்த குருசாமி என்பவர் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே “எனக்கு அங்கு வரை இடமுள்ளது இங்கு வரை இடமுள்ளது என்று பொய்யாக சொல்லி இடப்பிரச்சனையை காரணம் காட்டியே   எனது தாயாருக்கும் எனக்கும் பலவித தொல்லைகள் கொடுத்து  வந்துள்ளார்.
           இந்த நிலையில் எனது வீட்டிற்கு செல்லும் வடக்கு பக்க தெருவிற்கு பாதாளசாக்கடை,சிமெண்ட் தளம் அமைக்க மாநகராட்சியில் அதிகாரிகள் வந்த போது, குருசாமி என்பவரும், காமாயி என்பவரும் ஆளுக்கு ஐந்தடி ஐந்தடி போட்டு இருப்பதால் இந்த தெரு பாதை எங்கள் இருவருக்கும் சொந்தமான பாதை  என்று கூறி பாதாள சாக்கடை, சிமெண்ட்தளம் அமைப்பதை தடுத்துவிட்டனர்.
          இதை எதிர்த்து  எனது வீட்டிற்கு செல்லும்  மேற்படி தெரு மாநகராட்சி தெருவா.? தனியாருக்கு சொந்தமான தெருவா? என்று மாநகராட்சியிடம் மனு செய்து கேட்டபோது.. அது மாநகராட்சி தெரு என்றும் நான் பாதாளசாக்கடை இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று எனக்கு பதில் கடிதம் அளித்தனர்.
          அதைக் கொண்டு நான் எனது வீட்டுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க முயன்றபோது மேற்படி தெரு அவர்களுக்கு சொந்த மானது என்றும் மேற்படி தெருவில் நான் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கு கூடாது என்று  என்மீது வழக்கு போட்டு இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே அந்தத்தெருவழியாக போடப்பட்ட தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் குழாய் இணைப்பு பெற்று உள்ளேன். அதை உடைப்பதற்கு முயற்சி செய்வதை மாநகராட்சி அலுவலரிடம் முறையிட்டு உள்ளேன்.
         மேற்க்கொண்டு குருசாமி என்பவர்  மாவட்ட முன்சிப் கோர்ட்டில்  என்மீது போட்ட வழக்கை எதிர் கொண்ட போது,பல வாய்தா கொடுத்தும் விசாரணைக்கு குருசாமி ஆஜராகததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்த வழக்கை கோப்புக்கு எடுக்கச் சொல்லி வழக்கு போட்டார். அந்த வழக்கின் விசாரணையின் போதும் குருசாமி ஆஜராகததால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
          இந்த நிலையில் நான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடுத்து மேற்படி தெரு  குருசாமிக்கு சொந்தமானதல்ல, அந்தத் தெரு மாநகராட்சி தெரு என்று  உத்தரவு பெற்றேன்.  மேற்படி உத்தரவை குருசாமி என்பவர்  அவர் பெற்றதாக மோசடி செய்து பாதையில்லாத வாடகைக்கு விட்டுள்ள அவர் வீட்டுக்கு பாதை வேண்டும் என்பதற்காக. அவர் வீட்டு பாதாள சாக்கடை இணைப்பு குழாயை நான் இல்லாத நேரம் பார்த்து எனது இடத்தில் பதித்துவிட்டார்.. ஏற்கனவே, சிமெண்ட் தளம் போடாமல் விட்டதால் பள்ளமாக இருந்த தெருவை  பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கிறேன்  என்று திட்டமிட்டு மேலும் பலமுறை தோண்டி நான் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாதவாறு வேண்டுமென்றே தெருவை பள்ளமாக்கி பாதையை சுறுக்கி விட்டார்..
         தற்போது அவர் ஆக்கிரமித்து  கட்டியுள்ள வீட்டின்  எனது  இடத்தை அவர் இடம் என்பதை உறுதி படுத்துவதற்காக வீட்டு சுவர் பராமரிப்பு என்று  பொய் சொல்கிறார்.

         ஆகவே. அய்யா அவர்கள் நான் இணைத்துள்ள எனது இடத்திற்கான பத்திர ஆவணங்களையும். செல்லமணியின் அப்பா குருசாமியின் பெயரில்உள்ள பத்திர ஆவணங்களையும் பரிசீலனை செய்து
குருசாமி ஆக்கிரமித்துள்ள எனது இடம் பத்திர ஆவணங்களின்படி அவர்களுடையதாக இருந்தால் உரிய நீதி மன்றத்தின் மூலம்  உத்தரவு பெற்று பராமரிப்பு வேலை செய்யவும். எந்த உத்தரவும் பெறாமல் ஆக்கிரமித்துள்ள எனது இடத்திற்குள் பராமரிப்பு என்ற பெயரில்  அத்துமீறி மேலும் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்திட வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

மதுரை:                                   தங்கள் உண்மையுள்ள
19/12/2017

இணைப்பு நகல்கள்-
1.   அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள எனது இடத்தின் பத்திரம்
2.   நீதி மன்ற தீர்ப்பானையின்படி அய்யணன் அம்பலம் பெயரில் உள்ள
வீட்டுவரி எனது தந்தை நாகன் பெயரில் மாற்றிய உத்தரவு கடிதம்.
3.    எனது வீட்டுக்கு செல்லும்  தெரு பாதையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி மாநகராட்சி மைய அலுவலகம் அனுப்பிய கடிதம்.



நிணைவுக்கு வந்தவற்றை மட்டும் எழுதி இணைப்புகளை நகல் எடுத்து 
தயார் செய்து முடித்த போது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. பின் முகத்தை கழுவி தயார் படுத்தி ஸ்கூட்டி வண்டியில் சென்றபோது குருசாமியின் மருமகள்கள்.. குருசாமியின் தம்பி பொண்டாட்டி காமாயி போன்றவர்கள் தெருவை ஆக்கிரமித்து கட்டியுள்ள கோயிலின் முன் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள். பல தடவை ஒலி எழுப்பியும் கேட்காதவர்கள் போல் கேட்டு மெதுவாக  ஏதோ அவருக்கு இரக்கப்பட்டு வழி விடுவது போல் வழி விட்டனர்

ஆக்கிரமிப்பு செய்யப்படாத தெரு.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மேற்கூறை அமைக்கப்பட்ட தெரு.

படம்--இரக்கப்பட்டு வழி விடப்பட்ட தெரு.முகப்பு .


தொடரும்....


புதன் 20 2017

கெட்டவர்களுக்கும் நல்லவர்களுக்குமுள்ள வேறுபாடு




கவிதை க்கான பட முடிவு
நன்றி!       




அண்ணே.....  நீங்க கவித எழுதுவீங்களாமே.......?

எவன்டா  சொன்னது......

அதோ அங்கன உக்காந்து இருக்காங்கள அவுங்கதாண்ணே...!!!!!!1

 ஓ...........அந்த கும்பலா..........??

ஆமாண்ணே.... எனக்கு ஒரு கவித எழுதிக் கொடுங்கண்ணே.....

அந்தக் கும்பல் என்னிடம் உன்ன எழுதிச் தரச் சொன்னாங்களா....?

ம்ம்ம்.....ஆமாண்ணே........இன்.....இல்லேண்ணே......

டேய்...பயப்படாத....ரெடிமேடா உனக்கு எழுதி தர்ரேன்.அதை அந்த கும்பலிடம் படித்து காட்டுவியா...?ஃ

சரிண்ணே............

சரி..பேனா..வச்சிருக்கியா...? பேப்பரு.......?

இந்தா வாங்கிட்டு வர்ரேண்ணே......

சரி.....நான்  சொல்லச் சொல்ல  நீயே எழுது..

ம்ம்ம்  சரிண்ணே.............

” கெட்டவர்கள் ஒன்று
சேர்ந்தால் அது
கும்பல் எனப்படும்..

-எழுதிட்டியா..? அடுத்து   எடம் விட்டு எழுதுடா...?

நல்லவர்கள் ஒன்று
சேரந்தால் அவை
அமைப்பு என்றழைக்கப்படும்

- அடுத்து எடம் விடு.....

சரிண்ணே......

கும்பல்களில் ஒருவகை
ஆட்சி செய்தால்
மக்களின் உரிமைகளை
பறிக்கும் ஊழலில்
திளைக்கும் கும்மாளத்தில்
ஆட்டம் போடும்.......

 பல அமைப்புகள்
இருப்பவைகள்  சில
மக்கள் உரிமைக்காக
போராடும் கைது
சிறை என்று
இம்சை படும்

இது நல்லவர்களுக்கும்
கெட்டவர்களுக்கும் உள்ள
வேறுபாடு......

படித்துப் பாருடா......

படிச்சிட்டேண்ணே....

எதுவும் புரியுதா...?

கொஞ்சம் புரியுதுண்ணே....

சரி.... அந்த கும்பல்கிட்ட படிச்சு காமி....அவிங்கிட்டயே அர்த்தம் என்னான்னு கேளு.....மத்தெதல்லாம்  நாளபின்னக்கி பாத்துகிரலாம் போடா...

சரிண்ணே.....

திங்கள் 18 2017

கவிஞரும்..புலவரும்..


ஒரு கவிஞரும்  ஒரு புலவரும் சந்தித்து கொண்டபோது  புலவர் கேட்ட கேள்விகளுக்கு கவிஞர் சொன்ன பதில்...





புலவர்:- ..கவிஞரே! அரசியலில் மதம் கலக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...?

கவிஞர்:- அரசியலை குழி தோண்டி புதைக்க வேண்டும் புலவரே..!

புலவ:ர்- அரசுப்பணியில் சேர்பவர்களுக்கு தங்களின் அறிவுரை...??

கவிஞர்:- ஊழல் செய்யாமல் இருப்பது கட்டாயமில்லை என்பதுதான்....

புலவர்:- உலவு துறையின் தகவல் என்று சொன்னீர.. என்ன தகவல் கவிஞரே?

கவிஞர்:- ஓ ...அதுவா!!.... பேஸ்புக்கில் பயங்கரவாதிகள் ஊடூறுவி இருக்கிறார்களாம்...


புலவர்:.. நம் இளைஞர்கள் சாதிக்க முடியாமா...????

கவிஞ:ர்- நம் இளைஞர்களால் பேஸ்புக்கில் எதையும் சாதிக்க முடியும் புலவரே...!!!

 புலவர்:- கோதார் நாத் எதற்கு அழைக்கிறது  கவிஞரே..???

கவிஞர்::- இது தெரியாத புலவரே.. பரலோகம் செல்வதற்குத்தான்....

புலவர்:-  அயோத்தி யாத்திரையில் யார் கைது செய்யப்பட்டார்கள்???

கவிஞர்:-   ஆயிரத்து அறநூற்றி தொண்ணூறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள் புலவரே...


புலவர்:,-   செலவுகளின் விலை உயர்வால் ஏழைகளுக்கு எது எட்டாது கவிஞரே...???


கவிஞர்:.--  நீ(தி)தான் எட்டாது புலவரே.....!!!

புலவர்:-  நன்றி! கவிஞரே..... தங்களுக்கு கிடைக்காத பொற்கிளி அரச சபையில் எனக்கு தருவதாக சொல்லி இருக்கிறார்கள்... அதை நான் வாங்கிக் கொண்டு வருகிறேன். விடை கொடுக்கவும்.

கவிஞர்:-  இப்பொழுது நான் கொடுத்தது எல்லாம் வடை அல்ல புலவரே!  விடைதான் சென்று வாரும் புலவரே....

ஞாயிறு 17 2017

வேடிக்கையல்ல..வாடிக்கையே அதுதான்...

மழைநீரில் கால்
பதிக்காத சீமாட்டி
 போய் சேர்ந்ததால்
சீமாட்டியின் ஆர்.கே
தொகுதியில் தேர்தல்

முதல் தடவை
வாக்குக்கு பணம்
பட்டுவாடா செய்ததால்
கருணை உள்ளத்தோடு
தேர்தல் ரத்து...

 இரண்டாம் முறை
தேர்தலில் ஒரு
ஓட்டுக்கு ஆறாயிரம்
ஓவா என்று
மற்ற தொகுதி
வாக்காளர்கள் வாய்
பொளந்த நிலையில்

பட்டும் புத்தி
வராமல் ஓட்டுக்கு
துட்டு வாங்குபவர்களை
சுட்டு கொல்லவேண்டும்

வாங்குபவர்களை  விட
பணத்தாசை காட்டி
ஓட்டுக்கு துட்டு
கொடுப்பவர்களை முதலில்
சுட்டுக் கொல்லவேண்டும்

இல்லை இல்லை
வாங்குபவனையும் பணம்
கொடுப்பவனையும் தடுக்காமல்
துணை இராணுவப்
படையும் தேர்தல்
ஆணையமும் நடவடிக்கை
எடுக்காமல் ஆளும்
 கட்சிக்கு ஆதரவாக
வேடிக்கை பார்ப்பதைத்தான்
முதலில் ஒழிக்கனும்

இப்படியாக..பல
விவரம் கெட்டதுகள்

ஆக..தேர்தலோ
இடைத் தேர்தலோ
நடக்கும் போது

ஓட்டுக்கு பணம்
கொடுப்பதும் ஓட்டு
பணம் வாங்குவதும்
பணம் கொடுக்க
இயலா கட்சிகள்
பணம் கொடுப்பதை
தடுப்பதும்  முறையிடுவதும்
ஜனநாயகம் கேலிக் கூத்து
என்று புலம்புவதும்
துணை இராணுவப்
படையும் தேர்தல்
ஆணையுமும் கண்டும்
காணாமல் இருப்பதும்
வேடிக்கை அல்ல
வாடிக்கையே அதுதான்

ஆர்கே நகர் தொகுதி க்கான பட முடிவு

சனி 16 2017

தோல்வி பயத்தில் ஊர் சுற்றியின் புலம்பலும் மிரட்டலும்.....



ஆ....... குசராத்
தேர்தலில் பாக்
தலையிட பார்க்கிறது

குசராத்தில் அகம்மது
பட்டேலை முதல்வராக்க
பாக்--சதி

மணி சங்கர் அய்யர்
வீட்டில் பாக்
முன்னால் இராணுவ
தலைவர் சந்திப்பு

அய்யோ..நான்
ஏழை.....ஆ.....
தாழ்த்தப் பட்டவன்

ஏய்....உங்களுக்கு
என்ன வேண்டும“
ராமர் கோவிலா  !
பாபர் மசூதியா..??
தீர்மானித்து கொள்....










வியாழன் 14 2017

அவன் எனக்கும் மூத்தவன்..



”நாங்க வொயர்லெஸ்ல தொடர்பு கொண்டோம். யாருமே உதவிக்கு வரல்ல படகு கவுந்து போச்சு அதுல கிடந்த கம்பானை பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டிருந்தோம். நாங்க 8 பேர் அதுல எனக்க அண்ணனுக்கு வயது 60க்கு மேல ஆள் நல்ல பலசாலி. ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு அவரோட உயிர் பிரிய ஆரம்பிச்சிட்டுச்சு. என் மகனும்  கம்பானை பிடிச்சிட்டு கிடந்தான்.  “லே பிள்ள பெரியப்பாவ பிடியடா”ன்ணேன். ஒரு கைல கம்பானை பிடிச்சிட்டு இடது கைல அவரை ஏந்தி பிடிச்சிருந்தான். நானும் போய் ஒரு கைய கொடுத்து அவரை ஏந்திக்கிட்டேன். ஆனா அப்படியே உயிர் போயுடுச்சு. மூணு மணி நேரம் மிதந்துக்கிட்டு கிடந்த போட்டு மூழ்க ஆரம்பிச்சுது நான் எங்க அண்ணனை அப்படியே விட்டுட்டேன் (பேச முடியாமல் அழுகிறார்) அவன் முங்கிப் போய்ட்டான். அப்புறம் நீந்த ஆரம்பிச்சோம் ஒவ்வொரு ஆளா செத்தாங்க. கண்ண தொறக்க முடியாது ஒவ்வொருத்தர் பேர கூப்பிட்டு கூப்பிட்டு சவுண்ட் கொடுப்போம் பதிலுக்கு சவுண்ட் வந்தா உண்டு இல்லண்ணா இல்ல.. ஒரு இரவு ஒரு பகல் முடிஞ்ச பிறகு ஒவ்வொரு சவுண்டா இல்லாம போச்சு ஒரு சில போட் வந்துச்சு, ஹெலிகாப்டர் சத்தம் எல்லாம் கூட தூரத்துல கேட்டுச்சு ஆனால் யாரும் மீட்கல்ல. 

மகனுக்கா உதடும் , கண்ணும் உப்பி வீங்கிடுச்சு அப்போ ஒரு கப்பல் சத்தம் கேட்டுச்சு. ஆனால் அது ஆழ் கடல்ல கேட்டுது. அந்த சத்தம் வந்த திசைல தவள மாதிரி நீந்தினோம், நீந்த முடியல்ல. செத்துடோம்ணு நினைச்சோம். ஆனால் அந்த கப்பல் காரங்க எங்கள்ல சிலரை மீட்டாங்க. அது  ஜப்பான் நட்டு கப்பல்.

“என் அண்ணன் என் கைல செத்தாம்லியா அவந்தான் எனக்கு கடத்தொழில் சொல்லிக் கொடுத்தான்.எனக்கு  சொல்லிக்கொடுத்தவன் என் கைல இருந்தே கடலமக்கி கிட்ட போயிட்டான்”...மவுனமாக  அந்த இடது கையை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் எதுவும் பேசவில்லை...!

- அருள் எழிலன்,
பத்திரிக்கையாளர்.

புதன் 13 2017

இது என்ன வகையான விலங்கு....???



இது என்ன
வகையான விலங்கு
என்று நானு
ராத்திரி பகலுமா
யோசித்து யோசித்து
பார்த்தேன் என்
அறிவுக்கு வரவே
இல்லை நீங்களாவது
எனக்கு சொல்லுங்கள்
படத்தில் உள்ளது
என்ன வகையான
விலங்கு என்று...?????????









படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

திங்கள் 11 2017

ஒரு கோடி பரிசு அறிவித்த வீரனின் வீரம்....

Siva Kumar
திருமாவளவரின் தலைக்கு விலை வைத்த  நபரின் வீரம் என்ன தெரியுமா விலை வைத்த கையோடு காரமடையில் உள்ள தன் செட்அப் மனைவியிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான் ...
போதையில் உளறிவிட்டேன் என பொய் பேசியிருக்கிறான் உனக்கு எதுக்கு இந்த வேலை என அந்த செட்ட அப் மனைவியின் கையால் நைய புடைக்கப்பட்டிருக்கிறான் ...
இந்த நிலையில்தான் திருப்பூர் காவல்படை செட்அப் மனைவியின் வீட்டில் வைத்து கைது செய்திருக்கிறது நான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறதா என முதலில் காவல்துறையிடம் எகிறியிருக்கிறான் ..
காவல்துறை அதிகாரி தன் செல்போனை எடுப்பதற்காக முற்பட்டபோது அடிக்கத்தான் தயாராகிறார் என நினைத்து ஆமா ஆமா நான் சொன்னது உண்மைதான் என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் ..
காரமடையில் வேனில் ஏற்றியது முதல் திருப்பூர் காவல் நிலையத்தில் இறக்கப்படும் வரை ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் இருபது முறை சிறுநீர் கழித்திருக்கிறான் 

அவனின் உதறலை பார்த்து எங்களுக்கே சிரிப்பு வந்தது என காவலர் ஒருவர் வேடிக்கையாக கூறினார் ...

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு ..

தன் நாவை அடக்க தெரியாதவன் இந்த கோபிநாத்தை போல அல்லல் பட வேண்டும் என்பது ஒரு பாடமாக அமைந்துவிட்டது ..
தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கோபிநாத் இனிமேல் அப்படி சொல்லமாட்டேன் காலில் விழுகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்ச துவங்கியிருக்கிறானாம் ..
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நபரின் ஆதரவாக அவனின் இயக்கத்தை சேர்ந்தவர்களோ நண்பர்களோ உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது அவனின் திமிரை அடக்கியிருப்பதாக செய்திகள் கூறுகிறது ...
சிபிசந்தர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

ஞாயிறு 10 2017

கூறு கெட்ட ரஜினி ரசிகர்கள்



தம்பி எங்கேயடா
போயிட்டு வர்ர
என்று கேட்டார்
தம்பியின் அண்ணன்

தம்பி சொன்னான்
அண்ணா அண்ணனா
மனிதக் கடவுளை
என் தெய்வத்தை
அரசியலுக்கு வரச்
 சொல்லி  கோயிலில்
குடி கொண்டியிருக்கும்
தெய்வத்திடம் வேண்டி
தங்கத் தேர்
இழுக்கச் சென்றேன்

அது கேட்ட
அந்த அண்ணன்
சொன்னான் இப்படி......
அட கூறு
கெட்ட பயலே
நடிகன மாதிரியே
ரசிகர்களும் இப்படியா.....
எனக்கு தம்பியா
பிறந்து விட்டு
இப்படி செய்யலாமா.?
தங்கத் தேரை
இழுப்பதற்கு பதிலா
காரிய கிறுக்கனான
உன் மனித
கடவுளை இழுத்து
இருக்க வேண்டியதானடா..!!!!

அண்ணன் சொல்
கேட்ட தம்பிக்கு
எங்கயோ உதைத்து
இழுத்த இழுவையில்
தங்கத் தேர
நகரும் போது.......???????


சனி 09 2017

யுனெஸ்கோவின் மடத்தனம்.......


.... என்ன சார் இது... படித்தவன் பாட்டை கெடுத்தான். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்.மாதிரி.. பார்த்தவன் பண்பை  கெடுத்து இருக்கான்....சார்..

இப்படி மூடு மந்திரமா நீங்களே புலம்பினா..என்னான்னு எனக்கு எப்படி சார் புரியும்...விவரத்த சொன்னா நாங்களும் தெரிஞ்சு கொள்வோம்...புரிஞ்சு கொண்டு உங்களோடு சேர்ந்து தோழமையா புலம்புவோம்ல....சார்...

சாரி..சார்..... 4 நதிகள் உள்ள இடங்களில் நடக்கும் கும்பமேளாவை பாரம்பரிய கலாசாரம்ன்னு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி இருக்குது சார்.... இதோ  படிச்சு பாருங்களேன்.....

அட ஆமா சார்... போற போக்க பாத்தா ” இங்கு நாலு வர்ண சாதியையும் ” இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமுன்னு  அங்கீகாரம் பன்னிடுவாங்கே போல பஜனைப்பயல்கா.....சார்... இவிங்க....

அந்த யுனொஸ்கோவில்ல..அவாள்தான் மணியாட்டுவாங்கே..போல சார்...


இருக்கலாம்  சார்....இந்தா இதையும் நீங்க படிங்க  சார்....கட்டுன பொண்டாட்டியோ.... அல்லது....... காதல் மனைவியோ.. செத்து போன பிறகு பொதைத்த சுடுகாட்டையும் ஒலக அதிசியமுன்னு இந்த யுனொஸ்கோ அறிவித்து இருக்கான் சார்.... காலப்போக்கில் மெரினா சுடுகாட்டையும் பாரம்பரியமானதுன்னு அங்கிகாரம் கொடுத்துடுவாங்கே சார்......


அதைத்தானே சார் நான் முன்னாடியே சொன்னேன்... படித்தவன் பாட்டைக் கெடுத்தான்..எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்.. பார்த்தவன் பண்பை கெடுத்தான்னு..............

படித்தவன்..எழுதினவன் பார்த்தவன் அங்கீகாரம் கொடுத்தவன் இவன்களைவிட..  படிக்காத பாமரன் பரவாயில்லைனேன்னுதான் தோனுது சார்.....

அட போங்க...சார்....நீங்க... இவன்களவிட...அவன் ரெம்ப ரெம்ப படா மோசம்  சார்....

எத வச்சு சார் சொல்றிங்க......???

 சொல்வதற்கு நிறைய இருக்குது சார்,... ஆர்.கே தேர்தல் முடிவு வந்த பிறகு யுனொஸ்கோவின் மடத்தனம்  போன்றதை நீங்களே தெரிஞ்சுக்குவேங்க....சார்.  



யுனெஸ்கோ தலைமையகம் க்கான பட முடிவு

வெள்ளி 08 2017

அண்ணல் அம்பேத்கரின் கடைசி செய்தி


பத்து ஆண்டுகளாகவே பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உடல் நல்ல நிலையில் இல்லை. சிறிது காலம் குடல் அழற்சியினாலும், இரத்தக் கொதிப்பினாலும் வேதனைப் பட்டார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் உடல் நிலையை மிகவும் பாதிக்கும் வகையில் நீரிழிவு நோயும் உருவாகியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவரின் நீண்ட நாள் போராட்டங்களும் படிப்பும், எழுத்தும் அவரின் உடல் நிலையை வெகுவாகப் பாதித்தன.


டாக்டர் அம்பேத்கர் நடத்திய இயக்கத்தை அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லுவார்கள் என்று அவர் நம்பியிருந்த துணை நிலைத் தலைவர்களின் நம்பிக்கையற்ற செயல்களினாலும், அவர்களுக்குள் தலைமைப் பதவிக்கு நடந்த போட்டிகளாலும், அவரது போராட்டங்களினால் கிடைத்த அரசு உயர் பதவிகளில் அமர்ந்தவர்களின் வெட்கக்கேடான நடத்தைகளினாலும் அவர் மனம் உடைந்து போனார். ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, அவரது அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களின் நடத்தைகளினால் அவருடைய உடல்நலக் குறைவு இன்னும் தீவிர மடைந்தது.


அவருடைய மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகள், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. சனவரி 1955 முதல் அவர் உடல்நிலை மேலும் கவலையை உருவாக்கியது. அவர் எடை குறைந்து தளர்ச்சியுற்று, சுருங்கிக் காணப்பட்டார். அவரது கோடை மற்றும் பனிக்கால உடைகள், இப்போது அவருக்குப் பெரிதாக இருந்ததால் சுருக்கித் தைக்கப்பட்டன. அவரது கம்பீரமான உடம்பை அவரது மெல்லிய கால்கள் தாங்க முடியாமல் போனதால் உடம்பின் எடை குறைந்தது.

அவரது மிகப் பெரிய நூலகத்தில் நடமாடும் போதும், தோட்டத்தில் உலவும் போதும், காரில் ஏறி அமரவும் - இறங்கவும், நாடாளுமன்றத்திற்குச் செல்லவும், வேறு எங்கேயும் செல்வதற்கும், குளிப்பதற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும், எழுவதற்கும், உடையணிந்து கொள்வதற்கும் அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. சில சமயங்களில் சாப்பிட மனமில்லாமல் அவர் படுக்கையில் படுத்திருப்பார். அப்போது அவருக்கு நான் உதவ வேண்டியிருந்தது.

டாக்டர் அம்பேத்கரின் மகிழ்ச்சியற்ற வாழ்நிலை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. அவ்வப்போது அவர் அழுவது, எனக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. அவரது அழுகைக்கானக் காரணத்தை அறிய நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எதிர் கொள்ள முடியாத எரிமலையின் சீற்றம் போன்ற அவரது கோபத்திற்குப் பயந்து நான் அதுபற்றி கேட்கத் தயங்கினேன்.

சூலை 30 ஆம் நாள், என் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே அம்பேத்கர் மாளிகைக்குச் சென்றேன். அன்றையச் செய்தித்தாள்களையும், நான் கொண்டு வந்திருந்த மாலை நேரச் செய்தித்தாளையும் படித்து எனக்குச் சில குறிப்புகளை அம்பேத்கர் கொடுத்தார். பிறகு கையால் எழுதப்பட்ட, சில புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டிருந்த 50 பக்கங்களைக் கொடுத்துக் கொண்டே “இந்த ஆவணங்கள், புத்தரும் காரல் மார்க்சும், பழைய இந்தியாவின் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் மற்றும் இந்து மதத்தின் புதிர்கள் ஆகிய நூல்களுக்காகத் தயாரிக்கப்பட்டவை. என் வாழ்நாளில் இந்தப் புத்தகங்களை என்னால் வெளியிட முடியாது என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அப்போது அவர் கண்களில் நீர் திரண்டிருந்தது.

மேலும், அவர் என்னைப் பார்த்தபடியே, “நீ எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்காக நிறைய இழந்திருக்கிறாய். வேதனைகளையும் சந்தித்திருக்கிறாய். உனது நலத்தைப் பற்றிக் கூட அக்கறைப்படாமல் புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலைத் தட்டச்சு செய்ததற்கு சிறிதும் பலன் எதிர்பாராமல் முடித்துக் கொடுத்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து துடிப்புடனும், தியாகத்துடனும் செயல்பட வேண்டியிருக்கிற எனது சூழ்நிலையை நீ புரிந்து கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

அடுத்த நாள் செவ்வாய் சூலை 31, 1956. 26, அலிப்பூர் சாலைக்கு மாலை 5.50 மணிக்குச் சென்று வழக்கம் போல, அன்று வந்திருந்த அனைத்துக் கடிதங்களையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றேன். என் அறைக்கு எதிரே உள்ள நடைவெளியில் நாற்காலியின் மேல் உள்ள சிறு மெத்தையில் காலை வைத்துக் கொண்டு அமர்ந்தவாறு குறிப்புகள் சொல்ல ஆரம்பித்தார்.

ஆனால், இடையிலேயே கண்களை மூடி, தலையை நாற்காலியில் சாய்ந்தவாறு கண்ணயர்ந்து விட்டார். நான் அமைதியாக உட்கார்ந்து அவரது களைத்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவர் எழுந்தார். கடிதங்களை நான் வாசிக்க, விரைவாக அடுத்தடுத்து பதில் குறிப்புகள் கொடுத்தார். அதன் பின்னர் என் தோள் மேல் கை போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றார். மறுகையில் உள்ள புத்தகம் கீழே விழ படுக்கையில் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அதற்குள் நான் அவரது தலையையும் காலையும் பிடித்து விட்டேன். அது அவருக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவரிடம் கேட்பதற்கு நான் தயக்கப்பட்ட அந்தக் கேள்வியை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரது படுக்கைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்த படியே அந்தக் கேள்வியைக் கேட்டேன். “அய்யா, கொஞ்ச நாட்களாக ஏன் நீங்கள் அதிக வருத்தத்துடன் இருக்கிறீர்கள். சில சமயங்களில் அழுகிறீர்களே ஏன்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் பாதத்தைத் தொட்டு கொண்டே கேட்டேன்.

கொஞ்ச நேரத்திற்கு அவர் எவ்வித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, எனது கேள்வியால் பாதிக்கப்பட்ட அவர், உணர்ச்சி வயப்பட்ட குரலில் கைகளை உயர்த்தி, அவரது நெற்றியில் வைத்துக் கொண்டு சொன்னார். “இந்தப் பையன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான், ரொம்பப் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்”


அதற்குப் பிறகு கொஞ்ச நேரம் முற்றிலும் அமைதி நிலவியது. நான் அவரது முகத்தை ஆராய்ந்தேன். கண்களை வெறித்தபடி அவர் கூறினார், “நீங்களோ அல்லது வேறு யாருமோ எனது வருத்தத்தைப் பற்றியும், எனது வேதனைகளைப் பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கிருக்கும் முதல் கவலை, என் வாழ்க்கையில் நான் எடுத்துக் கொண்ட சேவையை என்னால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. என் மக்களை ஆளும் வர்க்கமாக, அரசியல் அதிகாரங்களை மற்ற வகுப்பினரோடு சமமான முறையில் பகிர்ந்து கொள்ளும் நிலையில் பார்க்க வேண்டும் என ஆசைப் பட்டேன்.

நான் இப்போது எனது உடல் நலமின்மையால், ஊனமாகிப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறேன். நான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும், வஞ்சகத்தாலும், தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு, ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள்.

அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட சமுகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அழித்துவிடும் பாதையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்போது நான், கிராமங்களில் மாற்ற முடியா வறுமையில் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவற்ற என் மக்களுக்காகப் பாடுபட விரும்புகின்றேன். ஆனால், என் வாழ்நாள் குறுகியதாய் இருக்கிறது.

என் வாழ்நாளில், தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து யாரேனும் ஒருவர் முன்னேறி வந்து அம்மக்களுக்காக நடத்தப்படும் இயக்கத்தில், பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்போது வரை அச்சூழ்நிலைக்கு யாரும் வரவில்லை. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் நம்பிக்கைக்குரியவராகவும், உண்மையானவராகவும் யாரையெல்லாம் நினைத்தேனோ, அவர்களெல்லாம் பதவிக்காகவும், தலைமைக்காகவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் மேல் விழுந்த அந்த மிகப் பெரும் பொறுப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், அப்படி நடந்து கொள்கிறார்கள்” என்றார். இப்படி அவர் பேசுகிற போதெல்லாம் அவரது கண்கள் கோபத்தில் கனன்று கொண்டிருந்தன.


மேலும் அவர் “என் வாழ்நாளுக்குள் எனது எல்லா புத்தகங்களையும் வெளியிட்டு விட வேண்டும் என எண்ணுகிறேன். வரலாற்று முக்கியத்துவமிக்க எனது “புத்தரும் கார்ல் மார்க்சும்”, பழைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்” மற்றும் “இந்து மதத்தின் புதிர்கள்” போன்ற புத்தகங்களை வெளியிட எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை. எனக்குப் பிறகு இவற்றை யாரும் வெளியிடப் போவதுமில்லை என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று மிகவும் உணர்ச்சி பொங்கக் கூறினார். நான் இடையில் பேச முற்பட்ட போதும் அவரே தொடர்ந்து பேசினார்.

அவரது கண்கள் வெறித்த படியிருந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் என்னைத் திரும்பிப் பார்த்த போது, நானும் அழுது கொண்டு அவரைப் பார்த்தேன். இதற்கு முன்னால் பலமுறை அவர் கவலையோடு அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் பார்த்தவை, என் கற்பனைகளையும், கடந்த கால அனுபவங்களையும் தாண்டியதாக இருந்தது.

நான் எழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, களங்கமற்ற முகத்தில் வேதனைகளை வெளிப்படுத்தியபடி, கம்மிய குரலில், “தைரியமாக இரு. மனம் தளர்ந்து விடாதே. ஒரு நாளில்லை ஒருநாள், வாழ்க்கை ஒரு முடிவுக்கு வரும்” என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏன் அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெறுமையோடு அவரை உற்றுப் பார்த்தேன்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர்.


ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.


உண்மையில் எல்லா வகைகளிலும் தீவிரம் மிகுந்த எனது இந்தக் கடைசிச் செய்தி நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. போய் என் மக்களுக்குச் சொல்; போய்ச் சொல்; போய்ச் சொல்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, கண்ணீர் திரண்டு முகத்தில் வழிய தேம்பித் தேம்பி அழுதார். பெரிதும் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். அவரது தாங்க முடியாத அந்தத் துயரத்தை, கசப்பு மிகுந்த நோயின் தீவிரத்தை வெளிக்காட்டிய அவரது முகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அழுகையுடனும் பெரு மூச்சுடனும், தனது ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர் கூறிய, நெஞ்சை உலுக்கக் கூடிய அவரது கடைசிச் செய்தியைக் கேட்டுத் திகைத்து நின்றேன். அதற்குப் பிறகுதான் அதுவே டாக்டர் அம்பேத்கரின் கடைசிச் செய்தி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
- நானக்சந்த் ரட்டு
- தமிழில்: அகன் கிளாடிஸ்
(நன்றி: தலித் முரசு)




புதன் 06 2017

ஏ....ய்.....யப்பே.............




ஏய்..யப்பே.....ய்.. இங்க
 பாருங்கப்பே.....கேளுங்கப்பே......
இந்த..கூத்தப்பே......

தமிழகத்தில் கூத்து
காரியின் கூத்த....

ஜெயலலிதா-சோபன் பாபுவின்
மகளாம்ப்பா..அம்மிருதா..

உயிரோடு இருக்கிறப்பவே
சொல்லாத இந்த
தைரியச் செல்வியை
ஒவ்வொரு நிணவு
நாளோடு இதையும்
நிணைவு கூறுங்கப்பே.....






திங்கள் 04 2017

சேவையா..? திருட்டா...??

குசராத் நாயகன் அண்ணாத்தே
 ஒரு கூட்டத்திலே பேசினாரு
 125 கோடி இந்தியர்கள்
எனக்கு கடவுள்  அந்த
கடவுகளுக்கு நான் சேவை
செய்து வருகிறேன் என்று...


இப்ப நான் உங்களை  கேடகிறேன்..
.

 அண்ணாத்தே .....என்னையும் சேர்த்து
 கடவுளுன்னு சொல்லிட்டாரு.... நான்
 கடவுள்ன்னா அண்ணாத்தே...15
 லட்சத்த காணிக்கையாவுல எனக்கு
  செலுத்தி இருக்கனும் அப்படி
செலுத்தாமல்.. அண்ணாத்தே... அவரே
 எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வது
சேவையா? திருட்டா...??????????????????????

சொல்லுங்க..அப்பு சொல்லுங்க.............!!!!!!!!!!!11

சனி 02 2017

மோடியின் டிஜிட்டல் இந்தியா.....

அண்ணே...அந்தா....அவரு  மோடியின் டிஜிட்டல் இந்தியான்னா.. என்னான்னு கேட்குறாரு.... எனக்கு சொன்ன மாதிரி அவருக்கு சொல்லுங்கண்ணே....

அத நீங்களே...! சொல்லிட வேண்டியதுதானே.......

நான்..சொன்னா..... என்ன கேனப்பய..ன்னு சொல்லுவாங்கண்ணே.....

அப்போ..நான் சொன்னா...என்ன..கிறுக்கு பயல்ன்னு சொல்ல மாட்டாங்களா???

அண்ணே.. சொல்றவங்க  சொன்னாத்தானே..சில மண்டைகளுக்கு   ஏறும்.... நீங்க பாயிண்ட் பாயிண்டா சொல்லுவிங்க.... நா.... சொன்னா  உனக்கு  என்னடா தெரியும்  ன்னு கொக்கி பொடுவாங்கண்ணே..  ???

யாரு....? சரி வா.....!!!!1

சார்..வணக்கம்..... நீங்கதான்  டிஜிட்டல் இந்தியா..ன்னா என்னான்னு கேட்டீங்களா...??

ஆமா..சார்.....உங்களுக்கு தெரியுமா...??

ஏதோ..எனக்கு தெரிஞ்சத  சொல்றேன்....

சரி.. சொல்லுங்க............

சார்... 
மோடியின் டிஜிட்டல்
இந்தியாவில் விவசாயி
எலிக்கறி தின்றான்

விவசாயம் பொய்த்த
நிலையில் வட்டி
கட்ட முடியாமல்
நெஞ்சு வெடித்து
சாகிறான்  விவசாயி

கந்து வட்டி
கொடுமை தாங்காமல்
குடும்பத்தோடு தீயில்
வேகுறான் தொழிலாளி

குடியிருக்க வீடில்லாமல்
குப்பையில் தள்ளப்பட்ட
மக்களிடம் வந்து
 தூய்மை இந்தியான்னு  
டிஜிட்டல் இந்தியான்னு 
வக்கிரத்தை காட்டுறான்

கருப்பு பணத்தை
ஒழிக்கிறேன் பேர்
வழின்னு ஓட்டு
போட்ட மக்களின்
இறுப்பு பணத்தை
ஒழித்து விட்டு

சிறுதொழில் வணிகத்தை
ரத்த ஞாயிறு
ஆக்க கொண்டு
 வந்ததுதான் ஜிஎஸ்டி
வரி  என்ற
டிஜிட்டல் இந்தியா....


முத்தாய்ப்பாக இதைத்தான் டிஜிட்டல் இந்தியாதுன்னு சொல்வது சார்... இன்னும் ஏகப்பட்டது இருக்கு சார்.... சொல்லவா   சார்.....


போதும் சார்...... போதும் சார்..... நீங்க யாருன்னு புரிஞ்கிட்டேன்..சார்....

என்ன புரிஞ்சு என்ன சார். புறயோசனம்.... மோடியின் டிஜிட்டல் இந்தியாவைல நீங்க புரிஞ்சுகிறனும்.....

நீங்க சொன்னப்பவே..புரிஞ்கிட்டேன் சார்........

எப்படி..சார்.......

செல்லாத நோட்டுகளை  மாத்த நானும் வரிசையில நின்னு நொந்தவன் சார்..

புரிஞ்சிகிட்டா மட்டும் போதாது  சார்......!!!!!!!!!!!!!!!!!!!.

வெள்ளி 01 2017

இயற்கையின் கொல வெறி......????


எடுத்தால் மொட்டை
வைத்தால் தாடி
 என்ற கதையாக

வந்தால் புயலும்
மழையுமாக  கொல
வெறியோடு வரும்

இல்லை என்றால்
வறட்சியும்  பஞ்சமும்
கொளுத்தும்  வெயிலுமாக
கொல வெறியோடு
வேடிக்கை பார்க்கும்

இயற்கையே ரெண்டு
கெட்டான நிலையில்
கொல வெறியில்
தோன்றும் போது
அது படைத்த
மனிதனும் அப்படியே
இல்லாமல் வேறு
எப்படி தோன்றுவான்..

செவ்வாய் 28 2017

செத்த பின்தான் வருவாங்க. வருவாங்க.ண்ணே..!!!


ஜெ சகோதரி சைலஜாவுடன் அம்ருதா


என்ன சார் இது..?

எது சார்...??

இந்த பேப்பரை படிங்க.........

மறைந்த  ஏ1 குற்றவாளியின் மகளாக தன்னை அறிவிக்க வேண்டி பெங்களுரைச் சேர்ந்த  பெண் ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


ஏற்கனவே ஒரு பெண் இப்படி தாக்கல் செய்த மனுவை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில்  அம்ருதா என்ற பெண் மனு தாக்கல் செய்துள்ளது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


ஆகா..... சூப்பரு..........

என்ன சார்.... இது சுத்த மானக்கேடாக அல்லவா..இருக்கு....???

ஏ1 குற்றவாளியின் கட்சிக்காரனே இத மானக்கேடாக நிணைக்காதப்போ... நீங்க ஏன்? சார் இது மானக்கேடுன்னு நிணைக்கிறிங்க.........

இப்படி ஒவ்வொருத்தராவா........... செத்த பின்தான் வருவாங்களோ..??

வந்துட்டு போகட்டும்... இதுக்கு முற்றுப்புள்ளி வைக்கனும்முன்னா கறுப்பு அங்கி போட்டு இருக்கிறவுருதான் முடிவு எடுக்கனும்...

..எப்படி முற்றுப்புள்ளி...... வைக்கனும்.........

.... அப்பன் ஆத்தா சொத்துக்கு வாரிசு உரிமை கேட்பது. மாதிரியே...ஏ1ன்னுக்கு நான்தான் வாரிசுன்னு வர்ரவுங்க  வாரிசு  உரிமைப்படி செத்துப்போன   ஏ1  குற்றவாளிக்கு பதிலாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்தால் போதும் ..ஒரு  எந்த ஒரு பய..பிள்ளைகளும்  இப்படி வராது.!!!


ஆ...ஆமா......சார்......!!!!!!!!!!!!!!

i-am-jayalalitha-daughter-amrutha-bengaluru-with-puthiya-thalaimurai

திங்கள் 27 2017

இயக்கம்..மாறுதல் இரண்டும் ஒன்றா....???

தூங்கிக் கொண்டே படித்ததால் வந்த குழப்பம் என்று  தூக்கம் கலைந்த பின்னர்தான்  எனக்கு தெரிந்தது.

படிக்க வேண்டிய காலத்தில்  காலமும் நேரமும் என்னை படிக்க விடாமல் துரத்தியது .....அப்போது விட்டதை இப்போது படிக்கலாம் என்று புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தால்    விட்ட குறை தொட்ட குறையாக வாசித்த சிறிது நேரத்தில்  கண்கள் சொறுக..தலை கோடாங்கி அடிக்க... தொடங்கிவிடுகிறது..  சே  .. இதென்ன  விடாது துரத்தும் கொடுமை என்று நிணைத்து தூங்கிவிட்டு பிறகு படிக்கலாம் என்று படுத்தால்.... அங்கேயும் கொடுமை துரத்துகிறது... படுத்த சிறிது வினாடிகளில்  பல்வேறு  மன குழப்பத்தால் தூக்கம் வர மறுக்கிறது.. 

சே..... என்ன  கொடுமை இது... இந்தக் கொடுமை எனக்கு மட்டும்தானா என்று நிணைத்து வீட்டை அன்னாந்து பாரத்தால் எந்த ஒரு அசீரிரியும் ஒலிக்க வில்லை...

திரும்ப எழுந்து தூக்க கலக்கத்தில் படித்ததை நிணைத்து பார்த்தேன். அடடே“ ன்னு எனக்குள் ஒரு மகழ்ச்சி...ஆகா படித்தது எல்லாம் நிணைவுக்கு வருகிறதே  என்று.....

மறைந்த..மறைந்திருந்தவை எல்லாம் நிணைவுக்கு வந்தால்........ ரெம்பவும்  நன்றாக இருக்கும் என்று நிணைவு வேறு பக்கம் திரும்பிது... இப்படியே  போய் கொண்டிருந்த நிணைவை திரும்ப இழுத்து பிடித்து படித்ததில் கொண்டு நிறுத்துவதற்கு சற்று கடினமாக இருந்தது.

இயக்கம்..மாறுதல் இரண்டும் ஒன்றா..? இல்லை ஒரே அர்த்தத்தை ஒரே செயலை குறிக்கிறதா? இல்லை  தனித்தனியான சொற்களை குறிக்கிறதா..? என்று சந்தேகம்..


ஊடே....பார்ரா அறவியல பத்தி சிந்திக்கிறாண்டா..?ஃ என்று எனக்கு வந்த கிண்டலுக்கு ..ஏயோவ்  பிளஸ் டூவில  இரண்டாவது குருப்பில இயற்பில் படித்தவன்...அந்த பரிட்சையில்... பாஸ் மார்க்கு 69 மார்க்எடுத்தவன்... கேடு கெட்ட இயற்பியல் வாத்தியான்  செய்முறை பயிற்சியில் ஒரு மார்க் போட்டு இருந்தால் நான் பாஸாகி இருப்பேன்.. அந்த வாத்தியான் ஒரு மார்க்  போடாததற்கு காரணம்.... அண்ணா நகரில் வாத்தியான் கட்டும் வீட்டு வேலைக்கு எல்லா மாணவர்களும் சென்றபோது  அதில் நான் மட்டும் மிஸ்ஸிங்..அந்த கோபத்தில்..மார்க் போடாமல் பழிவாங்கி விட்டான்....பாசாகி இருந்தாலும் மேல கிழிச்சிருப்ப...அன்றைக்கு வழியும் வாய்ப்பும் இருந்திருக்காது...மனசு வேறு வழியில ஓடிப் போயிறுச்சு....

இங்குட்டும் அங்குட்டும் மனசு போய்கிட்டும் வந்துகிட்டும் இருந்துச்சு..மறுபடியும் இழுத்து கொண்டு வந்து  இயக்கம்... மாறுதலை பற்றி சிந்திக்க ஆரம்பித்தது. சந்தேகம் தீர்க்க புத்தகத்தை திறக்கலாமா?? என்று யோசித்த போது.....

“ஆத்தாடி... வேணாம்.....தலை  கோடாங்கி அடித்துவிடும்... எதுக்கு வம்பு... இப்பத்தான் மொத..மொதறைய  படித்தது நிணைவுக்கு வந்திருக்கு ...இதப்போயி கெடுத்துகிட்டு.............அப்பாடி......

இயக்கம் என்ற சொல்லுக்கு அகராதியின் படி பார்த்தால் இடம் மாற்றம் என்று பொருள் வருகிறது....ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு நகர்தல், போவது என்பதை குறிக்கிறது...சரி.........அப்ப....மாறுதல் எதைக் குறிக்கிறது..???

உதாரணத்துக்கு.. ஒரு பஸ். பெரியார் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணிக்கு செல்கிறது என்பதை எடுத்துக் கொள்வோம்.

..யோவ்...அது இப்ப மாட்டுத்தாவணி இல்ல...எம்ஜியார் நிலையம்
தெரியுமில்ல..... ்இருக்கட்டும் எனக்கு மாட்டுத்தாவணிதான்னுதான் மனசுல வருது...


மாறுதல்......... மாறுதல்........ம்ம்....மாறுதல் என்பதற்கு இப்படி அர்த்தம் கொள்ளலாம்.... ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாறிக் கொள்வதை மாறிக் கொள்வதை மாறுதல் என்று  சொல்லலாம்...

ஆகா.......ஆகா....உதாரணத்துக்கு.... நெல் .அரிசியாக மாறுவது.....இதையும் கூட சொல்லிக் கொள்ளலாமா...??? புழுவாக  தோன்றி   டெங்கு கொசுவாக மாறுவதையும்  எடுத்து்கொள்ளலாமே....... ஓ..யெஸ.......

இப்ப நல்லா புரிஞ்சு போச்சு......... என்னது   புரிஞ்சு  போச்சா.....இல்லையில்லை புரிந்து இருக்கிறது.

ஆக....இயக்கம்்  என்பது இடமாற்றத்தை குறிக்கிறது....மாற்றம் என்பது வடிவத்தின் நிலையின் மாற்றத்தை.....குறிக்கிறது... ஆகா..... ஆகா எனக்கு
நன்றாக புரிந்தது......  அன்று முழுவதும் மனது சந்தோசமாக இருந்தது...

படித்தது தொடர்ந்து  நிணைவுக்கு வரவேண்டுமே..என்ற ஏக்கமும் தொடர்ந்து வந்தது....

பெரியார் நிலையம் க்கான பட முடிவு

சனி 25 2017

மேற்கில் தோன்றிய அகிம்சையும் தெற்கில் மறைந்த இம்சையும்..

சார்.... வணக்கம் ...

வணக்கம்..சார்.....

நலமா...?சார்.....

நலம் சார்...... நீங்க நலமா சார்..??ஃ

நலம் சார்.....

நல்லது சார்....... ம்.ம்..நாட்டு நடப்பு வீட்டு நடப்பு பற்றிய செய்தி எதுவும் இருக்கா..சார்...

ஓ.......இருக்கே....

அப்ப சொல்லுங்க.....சார்.....

அப்படியே பதிவுல போட்டுவிடுவிங்களே...சார்..

 நாட்டு நடப்பதானே சார்....பரவாயில்ல  சொல்லுங்க......சார்

சரி  சார்.... இதுக்கு பதில சொல்லுங்க...... மாட்டின் லூதர் கிங்குக்கு கொடுத்த நோபல் பரிசு, ஏன் சார்....நம்ம காந்திக்கு கொடுக்கல....

என்ன சார் இது அநியாயமா......இருக்கு காந்திய நம்ம காந்தியின்னு சொல்றீங்க..... ஒங்க காந்தின்னு சொல்லுங்க..... நீங்க தானே  காந்தி மன்றத்தில இருக்கீங்க......

அய்யோ...சாரி சார்......  காந்திக்கு... ஏன்? சார்... அந்த நோபல் பரிசு கொடுக்கல...


நோபல் பரிசு கொடுக்கும் குழுவில நான் இல்லையே சார்......

ஹா...ஹா....ஹா........ஆமா..நீங்க இருந்தாலும்.... காந்திக்கு கொடுத்திட்டுத்தான் மறு வேல பாப்பிங்க..........

தெரியுதுல சார்.... நானே கொடுக்க மாட்டேன்னு  சொல்றேன்..... கொஞ்சம்....அவகாசம் கொடுங்க. அவிங்க..ஏன்? உங்க காந்திக்கு நேபால் பரிசு கொடுக்கலன்னு சொல்லிவிடுகிறேன்....  எனக்கு.சட்டுபட்னு எனக்கு உடனே வராது ?யோசித்துக்கிறேன் சார்......

நல்லாவே யோசிங்க.......அதுவரைக்கும்  வாங்க அந்த டீக் கடையில போயி டீயக் குடிப்போம்.

சார்..ஒரு கன்டீசன்...நான்  டீ குடிப்பதில்லை...உங்க கூட வேனா சும்மா வர்ரேன்... வந்து  நீங்க டீய குடிக்கிறத பாத்துகிட்டு நிக்கிறேன்... நான் பார்க்கிறதனால  உங்களுக்கு வயிறு வலிக்கும் என்று பயந்தால்.... நீங்க டீ குடிச்சுட்டு வர்ர வரைக்கும் இங்கயே நிக்கிறேன்....

அய்யோ....நீங்க டீயே குடிக்க வேணாம்    சும்மா.. வாங்க......சார்...

.அப்ப சரி..சார்..........

வடை, பிஸ்கட் எதாவது.........

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்  சார்.......நீங்க டீய குடிச்சுகிட்டே  நான் சொல்றத கவனிங்க......

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி......   எந்த ஆண்டு என்று .. சரியாக தெரியவில்லை.. அமெரிக்காவின் வாஷிங்டனில்  நடந்த ஒரு அமைதிப்பேரணியில் மார்ட்டின் லூதர் கிங் ஒரு சொற்பொழிவு ஒன்றை ஆற்றினார்..அதில்

“எனக்கு ஒரு கனவு உண்டு. அந்தக் கனவில்.. ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும், அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் இல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவா்கள்.. என்றாவது ஒருநாளில் வெள்ளையின சிறுவர்களும், கறுப்பின சிறுவர்களும் கைகோர்த்து  நடப்பார்கள் ”என்று பேசினார்  சார்...

அந்தசொற்பொழிவானது உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான கறுப்பின மக்களையும்அடிமைத்தனத்தில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டு இருந்த இனக் குழுக்களையும் ஒரு சேர எழுச்சி அடைய செய்து புகழ் பெற்று விளங்கியது சார்.....

அவருடை கால கட்டத்தில் ஆதிக்கம் செய்யும் அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சம உரிமை  இல்லாமல் இருந்தது. உதாரணமாக சொல்வதென்றால்... வெள்ளையர்கள் ஏறும் பேருந்தில் கறுப்பா்கள் ஏறக்கூடாது.பொது இடங்களில் வெள்ளையர்கள் அமரும் இடங்களில் கறுப்பர்கள் அமரக்கூடாது.. கறுப்பர்கள் உட்காருவதற்கு தனி இடங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் இப்படி பல கடுமையான கட்டுப்பாடுகள்... கொடுமைகள்..


கட்டுப்பாடுகளை மீறினால் அடியும் உதையும் கூடவே சிறைத்தண்டனையும் வழங்கினார்கள் வெள்ளையர்கள். கறுப்பர்களுக்கு  சம உரிமை மறுக்கப்கட்ட நிலையில்தான் கிறிஸ்துவ பாதிரியராக இருந்த மார்ட்டின் லூதர் கிங்  கறுப்பர்களின் சம உரிமைக்கான போராட்டங்களில் வன்முறை தலை எடுக்க முடியாதபடி கவனமாக தொடர்ச்சியாக போரட்டம் நடத்தினார். வெற்றியும் பெற்றார்.

அவருடைய போராட்டத்தால் 1965ம் ஆண்டு கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.அதோடு கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் சமம் என்ற மனித உரிமைச் சட்டம் நிறைவேறியது.
கறுப்பினத்தவர்களின் சம உரிமைக்கு பாடுபட்டதால் மார்ட்டின் லூதர் கிங்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  

மார்ட்டின் லூதர் கிங்   சமூக நீதியின் காவலராக  செயல் பட்டதினால் ஆத்திரமுற்ற வெள்ளையின வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அது மாதிரிதானே..சார் ...காந்தியும் இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார்...........


இருங்க...இருங்க....சொல்லிக்கிட்டே வர்றேன்....சார்.....  இதுவரைக்கும் சொன்னது  மேற்கில் தோன்றிய அகிம்சை வாதி மாரட்டின் லூதர் கிங்

இனி. தெற்கில் மறைந்தவரை சொல்கிறேன் கேளுங்கள் .சார்...

ஒரு  பானைக்கு ஒரு சோறு மாதிரி .பலவற்றில். குறிப்பா ஒரு நிகழ்ச்சி மட்டும் சொல்றேன்....இரண்டாம் ஒலகப் போரின் போது . இந்திய மக்களை  ..அடிமை படுத்தி ஆண்ட பிரிட்டீஸ் அரசாங்கம் அந்த போரில் ஈடுபட்டது. அந்த சமயத்தில்  மோகன்தாஸ் காந்தி.. அந்தப் போரைப் பயன்படுத்தி அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களை மீட்காமல்.... அந்த உலகப் போரில் பிரிட்டீஷ் அரசாங்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்க்காக..இந்திய மக்கள் அறுபதாயிரம் பேரை திரட்டி பிரிட்டீஷ. இராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்தார்.சார்

கரம்சந்த் காந்தி ஆள்பிடித்து சேர்த்த 60,000 பேர்களை பெற்றுக் கொண்ட பிரிட்டீஷ் இராணுவம் மற்றும் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள்  ..இந்திய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி அளித்தால் நாளைக்கு நமது ஆட்சிக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்ற பயத்தினால் காந்தி பிடித்துக் கொடுத்து 60,000பேர்களுக்கு பயிறிச்சி எதுவும் கொடுக்காமல் போரில் ஈடுபத்தி அநியாயமாக அவர்களை இட்லரின் நாஜி படைகளுக்கு பலி கொடுத்துவிட்டது சார்....

இதோடு மேற்கில் தோன்றிய அகிம்சையைப்போல்..சம உரிமை காவலராக இல்லாமல் பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சியில் அடிமைபட்டு கிடந்த தன் நாட்டு மக்களின் ஒருப் பிரிவினரைகளை “அரிசன்” என அதாவதுஅரியின் புதல்வர்கள் என்றுபிரித்து வைத்தார்.  ஏற்கனவே இருந்து வந்த இந்துமத தீவிரவாதிகளைப் பிரித்து  இந்து மத காவலானாக தன்னை முன்னிறுத்த முயன்தால்..வெறுப்படைந்த இந்துமத திவிரவாதிகளின் ஒருவன் இவரை சுட்டுக் கொன்றான்.சார்

மேற்கில் தோன்றிய அகிம்சையும்..தெற்கில் மறைந்த இம்சையும் சாவில் ஒற்றுமை இருந்தாலும்...  மேற்கில் தோன்றிய அகிம்சையைப்போல்  தன்நாட்டு மக்களை காப்பாற்றாமல்   அடக்கி ஆண்டவர்களுக்கு பாடுபட்டதால்  தெற்கில் மறைந்த இம்சை வாதிக்கு நோபல் கொடுக்கல சார்...........



நான் சொன்னவற்றை  மனதில் வைத்துக் கொண்டு ..உங்கள்  மன்ற தலைகளிடம் கேளுங்க சார். அவர்கள் சொல்வதையும் கேட்டு எது சரியென்று நீங்கள் முடிவு எடுங்கள்... ஏன்? காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை என்று.. தெரியும் அப்புறம் நாம சந்திக்கும்போது தர்க்கம் பன்னலாம்... சார்

எப்படி சார்....இப்படியெல்லாம் சிந்திக்கிறிங்க...............

அய்யோ....எனக்கு அம்புட்டு எல்லாம் அறிவு இல்லீங்க சார்...  படித்தத...கேட்டத... அப்படியே ஒங்ககிட்ட சொல்றென் சார்...........

வரவா...சார்..............

நல்லது சார்...வாங்க....



வெள்ளி 24 2017

சாதி இழிவை போக்க மறுக்கும் காவிகளின் இந்தீயா..




புல்லட் ரயில்
விடும் புல்லட்
பாண்டியின் ஆட்சியில்

செவ்வாய் கிரகத்துக்கு
ராக்கெட் அனுப்புவதோடு
அந்த ராக்கெட்
செவ்வாய் கிரகத்திற்கு
போன உடன்

ராக்கெட் ஆயி
போவதற்கு கழிவறை
கட்டி அதை
படமெடுத்து  ராக்கெட்
பறக்கும் படத்தோடு
காட்டி தம்மட்டம்
கொள்வார்கள் காவிகள்
 ரயில் வண்டி
நிலையங்களில் வை-பை
புகுத்தி விட்டதாக
மார்தட்டி கொள்வார்கள்

ஆனால்..அந்தநாட்டின்
மலக்குழிக்குள் இறங்கி
மனித மலத்தை
அள்ளும் மனிதனை
காக்க மட்டும்
தொழில் நுட்பத்தை
புகுத்த மாட்டார்கள்
ஏன்? என்றால்
மலம் அள்ளும்
சாதி ஒழிந்துவிடுமாம்........




புதன் 22 2017

ஏமாறுவதில் ஏமாளிகளின் சலிப்பு...........



சார்.........
குசராத் மாடல்
குசராத் மாடல்
என்கிறார்களே ! அந்த
மாடல் எப்படி
சார் இருக்கும்....


ஓ.....மாடலா.....
ஜவுளி கடைகளிலே
பொம்மைக்கு சேலை
 கட்டி விட்டு
உன்னையும் உன்
மனைவியும் வெவ்வேறு
வகையில் வாய்
பொளக்க  வைய்த்திருக்கும்
அனுபவம் உண்டா.....
உங்கள் இருவருக்கும்...


உண்டு சார்....
ஆசை காட்டி
மோசம் பன்னுவது
மாதிரி இந்த.
பொம்மையை காட்டி
ஏங்க வைத்திருங்காங்க
சார்.....
.

ஒரு வகையில்
அது மாதிரிதான்

பொய்யையும் புரட்டையும்
கடை பரப்பி
குசராத் மாடல்
என்று  சலிப்படையாமல்
ஏமாளிகளை ஏமாற்றுவது



ஏமாளிகள் ஏமாறாமல்
இருக்க வழியே
இல்லையா சார்...


பல வழி
அல்ல முத்தான
ஒருவழி இருக்கு
தற்போது ஏமாளிகள்
குசராத் மாடல் என்று
ஏமாறுவதில் சலிப்படைந்துள்ளார்கள்
தெரியுமா..உனக்கு....?????



குஜராத் மாடல் க்கான பட முடிவு

செவ்வாய் 21 2017

ஏமாளிகளை ஏமாற்றிய கோமாளிகள்.....


ஜெர்மன் நாட்டு
ஏமாளிகளை ஏமாற்றிய
கோமாளி இட்லர்

இத்தாலி நாட்டு
ஏமாளிகளை  ஏமாற்றிய
கோமாளி முசோலினி

இந்த வரிசையில்
இந்திய நாட்டு
ஏமாளிகளை ஏமாற்றி
வரும் கோமாளி மோடி

அறிவற்ற இத்தகைய
கோமாளிகளைத்தான் முதலாளி
வர்க்கம் விரும்புகிறது.

ஏன் ? என்றால்
இந்த கோமாளிகள்
அறிவு உள்ளவர்களாக
இருந்து விட்டால்
முதலாளிகளை எதிர்த்து
விடுவார்களே! அதனால்தான்..............

இதனால்தான் அறிவற்ற
இந்த கோமாளிகள்
ஏமாளிகளை ஏமாற்றுகிறார்கள்.

Hitler portrait crop (colorized).jpgமுசொலினி க்கான பட முடிவுCM Narendra Damodardas Modi.jpg

திங்கள் 20 2017

தமிழக மீனவர்களுக்கு எச்சரிகை....!!!!!!!!!


தமிழக மீனவர்கள்
எல்லை தாண்டி
மீன் பிடித்ததால்
இலங்கை கடற்படை
சுட்டதுக்கு காரணம்
சொன்னார்கள்  அந்
நாட்டு அமைச்சர்கள்

தமிழக மீனவர்கள்
இந்திய கடற்
பகுதியில் மீன்
பிடித்தால் சுடப்
படுவார்கள் இது
இந்திய  கடலோர
காவல்படை விடுக்கும்
மறைமுக எச்சரிக்கை

இருந்த போதிலும்
சுடப்பட்ட குண்டு
இந்திய கடற்படையிடம்
இல்லாததது என்றார்
இந்திய ராணுவ
பெண் அமைச்சர்

தமிழக மீனவர்களுக்காக
குண்டைப் பற்றிய
விசாரணை நடத்தப்படுமாம்

வியாழன் 16 2017

கேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...!!!



மனிதன் எப்படி
சிந்திக்கிறான் இது கேள்வி ?

ஆன்மா என்ற
ஒன்று இருப்பதால்
சிந்திக்கிறான் பதில்
ஒன்று- பதில்

இரண்டு மூளை
என்ற உறுப்பு
இருப்பதனால் மனிதன்
சிந்திக்கிறான் இந்த
விடைகள் இரண்டும்
ஒன்றுக்கு ஒன்று
வேறானாவை முழுக்க
முழுக்க எதிரானவை.

செவ்வாய் 14 2017

இதுவும் சர்வாதிகாரம்தான்



ஏய்.......

வேலை நிறுத்தத்தை கைவிடு,

வந்தே மாதரம் பாடு,

நவோதயா பள்ளியை திற,

தேசியக்கொடிக்கு சலாம் போடு

நீட் தேர்வை  நடத்து.......

இதுவும் சர்வாதிகாரம்தான்.......

திங்கள் 13 2017

நான் சொன்னது விளையாட்டுக்கு இல்லை...


எங்க ஊருக்கு அடுத்த ஊரில் வசிக்கும் தெரிந்தவரின் மகன் நான் செல்லும் வழியில் தனியாக அமர்ந்திருந்தான். அவனிடம் பேசலாம் என்று எண்ணி அவனுக்கு அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்தேன்.அவன் முகம் கோபமாகவோ. கடுகடுப்பாகவோ இல்லை.நான் அவனுக்கு அருகில் சென்றதை கவனித்தஅவன் என்னைக் கண்டதும் எழுந்து நின்றான்.

அவனை உட்காரச் சொல்லி.அவனுக்கு அருகில் நான் நின்று கொண்டு அவனை விசாரித்தேன்.பத்தாவதில் பெயிலாகி விட்டதைச் சொன்னான். தந்தை எதுவும் சொல்ல வில்லை. அம்மா மட்டும் திரும்ப படிக்கச் சொல்வதாக சொன்னான்்

சரி, நீ என்ன முடிவு எடுத்து இருக்கிறாய் என்று கேட்டபோது...அவனின் அக்காவின் வீட்டுக்காரர் மாடு மேய்க்கச் சொல்லும்  வேலையைச் செய்வதாக  நிணைக்கிறேன் என்றான்

தண்ணியுமில்ல..வெள்ளாமையும் இல்லாம நிலமெல்லாம் தரிசா கிடக்குதல.நீ எப்படிடா மாடு மேய்ப்ப என்று கேட்டபோது..போது என் மாமான் சொல்லுறாரே...என்றான்.

உன் மாமன் அந்த ரசீனி ரசிகன்தானேடா...அவன்கிட்ட நான் சொன்னதாக சொல்லுடா.....ரசீனியே  அரசியலுக்கு வருவதற்கு தயராக இருகக்கும்போது உன்னை மட்டும் ஏன்டா மாடு மேய்க்கச் சொல்றான்..பேசாம ரசீனி கட்சி தொடங்கும்போது உடனே வட்டச் செயலாலரா ஆகிவிடச் சொல்லு..உன் மாமன் வட்டச் செயலாளராக ஆகிட்டா... நீ உன் மாமனுக்கு வலது கையா ஆகியிருடா..என்று நான் சொன்னபோது... எங்கம்மா படிக்க.சொல்லுதே..என்றபோது


உங்கொம்மாட்ட சொல்றா...அம்மா..நான் படிச்சு முடிச்சாலும் எனக்கு உடனே வேலை கிடைக்கப்போறதில்ல...மாமாவோட தலைவரு ரசினி அரசியலுக்கு வரப்போறாராம்.. அப்படி வந்தால்  மாமா.. வட்டச் செயலாளராக ஆகிடுவார். நானு அவரக்கு வலது கையாக ஆகிவிடுவேன். அதோடு தேர்தல்ல மாமா நின்னா ஜெயிச்சுடுவாரு..ஜெயிச்சிட்டா  மந்திரியா ஆயிடுவாரு..பின்ன அந்த பவரு வச்சு  நானும் டபுள் பட்டம் வாங்கிடுவேன்....டீ ஆத்துனவங்க...டீ வித்தவங்க எல்லாம் எனக்கு முன்மாதிரியாக  அவுங்கவுங்க பவரு வச்சுதான் பட்டம் வாங்கியிருக்காங்கன்னு சொல்லுடா ...இத உன் மாமானிடம் சொல்லுடா அவனுக்கு எல்லாம் தெரியும்...


நிஜமாகத்தானா சொல்றிங்க  விளையாட்டுக்கு சொல்லலியே......

உன் மாமன் உன்னை மாடு மேய்க்க சொன்னது விளையாட்டுக்கா சொன்னான்

இல்லையே........................

அப்ப நான் சொன்னதும் விளையாட்டுக்கு இல்ல..டா....

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...