பக்கங்கள்

சனி 30 2023

நண்பர்களின் நினைவுக்கதைகள்-1

 ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை வரலாறு கதைகள்  இருக்கும். அதிலிருந்து எனக்கும் சில கதைகள் இருக்கிறது.. அதிலிருந்து சில.....

அண்ணன் பேரு முருகன்  அண்ணி பேரு தெய்வானை என்ற வள்ளி அண்ணன் முருகன்  உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து பழக்கம். அண்ணி,.. அண்ணன் மூலம் இங்கு வேலைக்கு வந்த பிறகுதான் தெரியும். ஏற்கனவே முதல் முறையாக வேலை செய்த இடத்தை விட்டுவிலகி, இரண்டாவது இடத்தில் வேலை செய்துகிட்டு இருந்தப்போ..அண்ணன் என்னை பார்த்துவிட்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கே என்னை அழைத்து பணியமர்த்திவிட்டார். அண்ணி அங்கேயதான் வேலை செய்து கொண்டு இருந்தார். நான் முதல் இடத்தில் வாங்கிய சம்பளம் 300 ரூபா, இரண்டாவது இடத்தில் வாங்கியது 1000 ரூபா, அண்ணன் அலுவலகத்தில. வாங்கிக் கொண்டிருபக்கும் சம்பளம் 2500 ரூபா இதோடு கூடுதல் நேரங்களில் வேலை செய்து மொத்தமாக வாங்குவது சுமார் 4000 ஆயிரம்.. நல்லாத்தான் போயிட்கிட்டு இருந்தது.  அமெரிக்காவில் இருக்கும் முதலாளியின் மவன் தொழிலகத்தை மூடிவிட்டு அமெரிக்காவுக்கு வந்துவிடு என்று உத்தரவு போட்டதால் ,வயதான முதலாளி வருத்தத்துடன் தொழிலகத்தை மூடி விட்டார். அதன்பிறகுதான் அந்த முதலாளி  இலவசமாக கொடுத்த சிறு இயந்திரங்களை கொண்டு  சிறிதாக சொந்தமாக  தொழில் தொடங்கினேன்.

இத்துடன் எனது சுய புராணத்தை முடித்துக் கொண்டு நண்பர் அண்ணனின் நினைவுக்கதைகளை தொடருகிறேன்.

ஞாயிறு 24 2023

| வசமாக சிக்கிய நிர்மலா | தமிழ் கேள்வி.....






செவ்வாய் 19 2023

பரிணாம வளர்ச்சி என்பது உண்மை......

 




19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள் தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர்.

பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ்_டார்வின் மக்களுக்கு அறிமுகம் ஆகும் வரை எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர்.

டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.

மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் தான் வரலாற்றில் டார்வினை முக்கிய விஞ்ஞானி ஆக்கியது.

தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22 வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு நீண்ட பயணம் மேற்கொண்டார்.

எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் ஏறி டார்வின் தென் அமெரிக்காவிற்கு பயணித்தார்.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.

டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.

அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.

எங்கெல்லாம் நிறைய உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது கழுத்தை சுருக்கிக்கொண்டன. ஆனால், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடன் காணப்பட்டன.

புதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.

பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.

எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.

தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.

மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.

மாற்றத்தால் புதிய இனமாக மாறாத வரை தங்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.

ஒருபுறம் தீவில், நீண்ட கழுத்துடன் உள்ள உயிரினங்கள், உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மற்றொருபுறம் மிக குறுகிய கழுத்து உள்ள உயிரினங்கள் தரைமட்டத்தில் உள்ள புல் செடிகளை உண்டு, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்.

மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்.

அப்போதிலிருந்து இந்த கிரகத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தது.

டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிரபலம் ஆனார்.

அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது.

பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.

எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார்.

அதே சமயத்தில், பரிணாம வளர்ச்சி நம்பிக்கையோடு தொடர்புடையது என கத்தோலிக்க தேவாலயம் அறிவித்தது.

இன்று, 160 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வினின் கோட்பாடு பரவலாக அறியப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது உண்மை என்பதை நாம் அறிவோம். கிரகம் மாறிக்கொண்டே இருக்கிறது, நாமும் அவ்வாறே பயணிப்போம்.

வெள்ளி 08 2023

..இந்து இன மக்களின் பால் பேரன்பு கொண்டு பார்ப்பணர்களை தண்டித்த ஒளரங்கசீப்

 

ஔரங்சீப்

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட 

ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.


தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. 


நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது


. கோயில் இடிக்கப்பட்டது. 


இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.


மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? 


ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.


முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)


ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71


இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். 


P.N.Pande


“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”


P.N.Pande, Islam And Indian Culture, Page 55


இந்த வரலாறு ஏன் மறைக்கப்பட்டது..இந்து இன மக்களின் பால் பேரன்பு கொண்டு பார்ப்பணர்களை தண்டித்த ஔரங்கசீப்பை கொடுங்கோல் மன்னர் என்று ஏன் யூத பார்ப்பணர்களால் சித்தரிக்கப்பட்டது

வியாழன் 07 2023

இந்து கோயில்களை கொள்ளையடிப்பது யார்...?

இந்து கோயில்களை கொள்ளையடிப்பது யார்..?        

கோயில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவது எப்படி? ?                 

RSS பாஜக தமிழ்நாட்டில் கோயில்களை குறிவைப்பது ஏன்.? ?? 

ஆதாரங்களுடன் தோழர் தமிழ் காமராசன்.



டாக்டர் BR .அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கவில்லை தெரியுமா..??

 டாக்டர் BR .அம்பேத்காரை

மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கவில்லை தெரியுமா..?? 👇 இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து.. தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.! பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்த யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு.!! (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில் உறுப்பினராக முடியாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்க முடியும்.! officer club, அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து... உறுப்பினர் ஆன ஒரே நபர் அம்பேத்கர் மட்டுமே.!! டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும்.! ஆனால் அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.!! அப்படி இருக்கும் போது அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும்.! இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி ஈடுபடும் போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.!! அந்த அதிகாரி உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.. உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான்.! அந்த பிடிவாரண்டை டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்தது ஏன் என்றால் டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகளுக்கான "officer club" சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும்.!! ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே சஸ்பெண்ட் பன்னியது.! உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று.? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.!! இந்தியாவில் இருந்து இதுவரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.! அண்ணல் அம்பேத்கர் வரலாற்று_பதிவு


செவ்வாய் 05 2023

தேவசகாயத்தின் மீசை....


திருவனந்தபுரம் செல்லும் வழியில், நெய்யாற்றின் கரை எனும் ஊர்.....

அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி.... உத்ரம் திருநாள் மன்னரின் ஆட்சி....(1846-1860)

ஒடுக்கப்பட்ட ஆண்கள், மீசை வைக்கக்கூடாது என்பது #சட்டம்.. ஆனால், தேவசகாயத்திற்கு

மீசை வைக்க வேண்டும் என்பது ஆசை..

சட்டத்தை மீறினால் அன்றைய மன்னன் ஆட்சி என்ன செய்யும் என்பதும் அவனுக்கு தெரியும்!

ஆனாலும் இளம் காளையான, தேவசகாயம், இதை எதிர்த்து கலகக்கொடியை, கையில் ஏந்தினான்; தனக்குள் ஒரு சமூகப் போராளி உருவாவதைஅப்போதுஅவன்உணரவில்லை... மீசை வைக்கக்கூடாதுஎன்றசட்டத்தைஉடைக்க, திமிறி எழுந்தான்...

தனக்கு மீசை வைத்துத் தர வேண்டும் என்று, சிகையலங்காரம் செய்பவரிடம், பல முறை கேட்டும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை...

ஒரு வேளை, மீசை வைத்துக் கொடுத்தால், தனது நிலை என்னவாகும் என்ற அச்சம்...

ஆனாலும் விடவில்லை, தேவசகாயம்...


இறுதியில், தேவசகாயத்தின் முகத்தில், முறுக்கு மீசை, குடியேறியது...விடவில்லை ஆட்சியாளர்கள்;துரத்தியது நாயர் பட்டாளம்!

அதே நேரம் மிகவும் ரகசியமாக, தேவசகாயத்தை, திருவனந்தபுரம், திருமலை எனும்இடத்தில்உள்ள,மன்னரின்மாளிகையில், தோட்டக்காரனாக, ஊழியம் செய்ய அழைத்துச் சென்று,ஏற்பாடுகள் செய்தனர் உறவினர்கள்....

ஊழியம் என்பது, திருவாங்கூரின் #தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட்ட மக்கள் எதிர்ப்பு எதுவும் கூறாமல் செய்ய வேண்டிய #கட்டாயமானது;இந்த #ஊழியம் என்பதற்கு #ஊதியம் எதுவும் இல்லை..

அங்கே, அவர்கள், ஊற்றும் #கஞ்சி அல்லது #கூழ் போன்றவை கிடைக்கும் போது குடித்துக் கொள்ள வேண்டும்; அவ்வளவு தான்!

கொஞ்சம் நெல்லும் கொடுப்பார்கள்...


மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில், அவரை, எட்டுவீட்டு பிள்ளைமார், போத்திகள், ஆகியோரிடமிருந்து, காப்பாற்றிய, நாடார் சமூகத்தின், உதவிகளுக்காக, திருமலை மாளிகை அருகாமையில் சில நாடார் குடும்பங்களை, மார்த்தாண்ட வர்மா, வசித்துக் கொள்ள அனுமதித்திருந்தார்...

தேவசகாயம், பூந்தோட்டத்தில், தனது வேலையை செய்து வந்தார்..

ஆனால், அங்கே அவருக்கு, சம்பளம் எதுவும் இல்லை... ஏற்கனவே குறிப்பிட்டது போல் வெறும் கஞ்சியும், நெல்லும் தான் கிடைத்தது..

வெகுண்டெழுந்தான், தேவசகாயம் எனும் போராளி..


"எனக்கு, கஞ்சியும், நெல்லும், தேவையில்லை;எனது, பெற்றோருக்குக் கொடுக்க, எனக்கு சம்பளம் தான் வேண்டும்; அதுவும், மன்னரின், #சக்கரம்(எங்கள் பகுதியில், நாணயத்தை இப்போதும் சக்கரம் என்று சொல்லும் வழக்கு உண்டு; அப்போது, சக்கரம் என்ற நாணயமும் உண்டு) தான் வேண்டும்!வேலைக்கு கூலி வேண்டும்; கஞ்சி அல்ல", என்ற, கலகக்குரல், முதன் முதலாக, திருவாங்கூர் சமஸ்தானத்தில், ஓங்கி ஒலித்தது! தேவசகாயத்தின் கலகக் குரல்,

திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும், இடி

முழக்கமாக ஒலித்தது; ஆடிப் போனது அரண்மனை....


தன்னோடு, வேலை செய்த 5 பேரையும்இணைத்துக் கொண்டார், தேவசகாயம்!

ஆனால், விடவில்லை ஆட்சியாளர்கள்..

தேவசகாயத்தையும், சகாக்கள் 5 பேரையும், துரத்திப் பிடித்து, கண் காணத இடத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்து படுகொலை செய்தது, நாயர் பட்டாளம் ...

தனது மண்ணின் மக்கள், படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, அதற்காக குரல் எழுப்பவோ, ஒரு துளி கண்ணீர் சிந்தவோ கூட, அங்கே அனுமதி இல்லை..


ஆனால், ஜான் காக்ஸ் என்ற கிறிஸ்தவ மிஷனரி, இதை விடவில்லை..

தேவ சகாயத்தின் குடும்பத்தினரையும், சகாக்கள் 5 பேரின் குடும்பத்தினரையும், தனது வீட்டில் பாதுகாப்பாக, மறைத்து வைத்து விட்டு,நேராக,மன்னரிடம்சென்று,நடந்தவற்றை கூறி, தேவசகாயத்தையும், அவரது சகாக்களையும் படுகொலை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்....


அதே நேரத்தில், அரண்மனை அதிகாரிகள், ஆறு உடல்களையும் எடுத்துக்கொண்டு, திருவனந்தபுரம், பொது மருத்துவமனைக்கு சென்றார்கள்....(திருவனந்தபுரத்தில் இப்போதும் இந்த மருத்துவ மனை இருக்கிறது; General Hospital)..

டாக்டர், முல்லர், என்ற ஐரோப்பிய மருத்துவரை சந்தித்து, கொலை செய்யப்பட்ட, ஆறு பேரும், காலரா காரணமாக இறந்து போனதாக, சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்டனர்; நேர்மையான அந்த மருத்துவர், போலி சான்றிதழ் தர முடியாது என்றும், ஆறு பேரும், கொலை செய்யப்பட்டதாக மட்டுமே சான்றளிக்க முடியும் என்று உறுதியாக கூறினார்..

அப்போது, அரச குடும்பத்தினர் சார்பில், அப்போது, Resident பொறுப்பில் இருந்த, Major General: william Cullen(1840-1860),டாக்டர், முல்லர் அவர்களை சந்தித்து, போலி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்டார்...

முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் டாக்டர்; 

விடவில்லை டாக்டர் முல்லர்; தேவ சகாயமும், அவரது சகாக்கள் 5 பேரும், படுகொலை செய்யப்பட்டதாக, மதராஸ் நீதிமன்றத்தில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்..

இறுதியில், கொலையாளிகள்அனைவருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கொலையாளிகள் அனைவரையும், தண்டிக்காமல் காப்பாற்றி விட்டது, திருவாங்கூர் ஆட்சி....


ஆனாலும், தேவ சகாயங்கள், வருவார்கள்...

அனைத்தையும் தகர்ப்பார்கள்..


முகத்தில் முளைக்கும் ரோமத்தைக் கூட, விட்டு வைக்காத,தேவ சகாயத்தின், ரோமத்தைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள், இறுதியில், அதிகாரங்களை இழந்தது கூட, வரலாறு தான்...


நாடுணர்த்திய நாடார் போராட்டங்ஙள்(மலையாளம்)

பக்கம், 214-219..By.Prof.J.Darwin

கவடியார் தாஸ் எழுதிய ஜோலிக்கு கூலி சமரம் 1854 என்ற மலையாள நூல்

செவ்வாய் 28 2023

உலகின் மிகப்பெரிய பனிக்கட்டி நகரத் தொடங்கியது

 உலகின் மிகப்பெரிய பனிக்கட்டி நகரத் தொடங்கியது... டெல்லியைப் போல இரு மடங்கு பெரியது

வேடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்ற டெல்லியைப் போல இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நகரத் தொடங்கியுள்ளது.

வெடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய 'ஏ23ஏ' பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது.


அண்டார்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986-ம் ஆண்டு உடைந்து நகரத் தொடங்கிய ஏ23ஏ பனிக்கட்டி, சிறிது காலத்திலேயே வெடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. அதன் பிறகு அந்தப் பனிக் கட்டி மிகப் பெரிய பனித் தீவாக திகழ்ந்து வந்தது. சுமார் 4,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். டெல்லியைப் போல் இரண்டரை மடங்குக்கும் மேல் பெரிய இந்தப் பனிக்கட்டி, 400 மீட்டர் உயரம் கொண்டது.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் பனிக்கட்டி நகரத் தொடங்கியதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பனிக்கட்டி நகருவதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


தெற்கு ஜார்ஜியா பகுதிக்கு அருகே அந்தப் பனிக்கட்டி தரைதட்டினால் அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், இந்தப் பனிக்கட்டி உருகுவதால் அதிலுள்ள கனிமப் பொருள்கள் வெளிவந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.... டெல்லியைப் போல இரு மடங்கு பெரியது

வேடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்ற டெல்லியைப் போல இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நகரத் தொடங்கியுள்ளது.

வெடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய 'ஏ23ஏ' பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது.


அண்டார்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986-ம் ஆண்டு உடைந்து நகரத் தொடங்கிய ஏ23ஏ பனிக்கட்டி, சிறிது காலத்திலேயே வெடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. அதன் பிறகு அந்தப் பனிக் கட்டி மிகப் பெரிய பனித் தீவாக திகழ்ந்து வந்தது. சுமார் 4,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். டெல்லியைப் போல் இரண்டரை மடங்குக்கும் மேல் பெரிய இந்தப் பனிக்கட்டி, 400 மீட்டர் உயரம் கொண்டது.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் பனிக்கட்டி நகரத் தொடங்கியதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பனிக்கட்டி நகருவதையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தெற்கு ஜார்ஜியா பகுதிக்கு அருகே அந்தப் பனிக்கட்டி தரைதட்டினால் அங்குள்ள கடல்வாழ் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், இந்தப் பனிக்கட்டி உருகுவதால் அதிலுள்ள கனிமப் பொருள்கள் வெளிவந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிறு 19 2023

பைத்தியம் ஒன்று கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருக்கிறது..


அதுக்கு அவர்கள்

வைத்த பெயர்

புளுகுனி சுப்பன்

அந்த சுப்பனுக்கு

ஒரு வாய் இருந்தது 

அந்த வாயில் தினந்தோறும்

கூசாமல் பொய்யைய்யே

கக்கியது.....அந்த

 பைத்தியம் இன்று 

கிரிக்கெட பார்த்துக் 

கொண்டு  இருக்கிறது.



திங்கள் 13 2023

எல்லா மனிதனையும் போல இவர்களும் இறந்தும் போனார்கள்.......

 



ஜெப கூட்டம் நடத்தி பலரின் நோயைப் போக்கிய  DGS தினகரன் பல நாள் மருத்துவமனையில் இருந்து உயிரை விட்டார். 







உலகமே என் கைக்குள் என்று சொல்லி கையை சுழற்றி விபூதியும், வாயிலிருந்து லிங்கமும் எடுத்த புட்டபர்த்தி #சாய்பாபா சுவாசக் கோளாறால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.




நான் கடவுளின் தூதுவர், எனக்கு கடவுளிடமிருந்து நேரடியாக செய்தி வருகிறது எனச் சொன்ன #மிர்சா_குலாம் கடைசியில் கவுந்தடித்து விழுந்து இறந்து போனார்.





இப்போது ...

நானே ஆதிபராசக்தி கடவுளின் மறு உருவம் என ஊருக்கே அருள் வாக்கு சொன்ன #பங்காரு_அடிகள் மாரடைப்பால் உயிரிழந்தார்.




அற்புதங்கள் செய்வதாக மாயாஜால வித்தை காட்டிக்கொண்டு, தன்னைக் கடவுள் என வாதிட்ட இவர்கள் அனைவருமே வயதாகி நோயாலும் விபத்தாலும் இறந்து போனார்கள் .


ஆனாலும் உலகம் அதன் பாட்டுக்கு இயங்குகிறது.

எவ்வித சிறு மாற்றமும் இல்லை.


எல்லா மனிதரையும் போல  பிறந்தார்கள், உண்டார்கள், உறங்கினார்கள், , அதேபோல் எல்லா மனிதனையும் போல  இறந்தும் போனார்கள்.


அப்போ தன்னை கடவுள் என சொல்லிக்கொண்டு இவர்கள் அனைவரும் சாதித்தது என்ன?

ஆம் ஒன்றே ஒன்றுதான் சாதித்தார்கள்

அதுதான் பணம், சொத்து, ஆடம்பர வசதிகள்.

இலகுவாக சம்பாதிக்க இது ஒன்றே வழி என கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். 

பக்தியின் பெயரால் பல கோடிக்கு அதிபதியானார்கள். 

சிந்திக்க மறந்த கூட்டம் சில்லறையை அள்ளி வீசியது.


ஆனால் ....

இறப்பு என்ற ஒன்று வந்து இவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுகிறது. 


கடைசியாக சிந்திக்க ஒன்று..

எந்த மதமாக இருந்தாலும் 

மனிதன் எப்போதுமே கடவுளாக மாட்டான்.

****

ஞாயிறு 10 2023

பரிசிலிக்க வேண்டியவை....

 திருக்குறளில் உள்ள #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் #திருவள்ளுவர்_எழுதியது_இல்லை !

இப்படி சொல்பவர் பெரியாரோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் ஒருவரோ அல்ல.
திருக்குறளை ஆய்வு செய்து திருக்குறளில் உள்ள இடைச்செருகல்களை ஆதாரங்களுடன் நிறுவியவர் #வ_உ_சி அவர்கள்.ஆம் இந்திய சுதந்திர போராட்ட தியாகி என புகழப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களேதான். வ.உ.சி.கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
திருக்குறளில் #கடவுள்_வாழ்த்து எனும் அதிகாரம் மட்டுமல்ல,#வான்_சிறப்பு, #நீத்தார்_பெருமை ஆகிய அதிகாரங்களும் திருவள்ளுவர் எழுதியவை அல்ல.அவை #இடைச்செருகல்களே என்று ஆய்வு செய்து கூறுகிறார் வ.உ.சி.“அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப் பட்டவையென்றும் யான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
பரிமேலழகர் என்பவர் எழுதிய திருக்குறள் உரை ஆரிய சார்பானதாக இருப்பதை ஏற்க மறுத்து (அப்போது சுயமரியாதை இயக்கமோ,பகுத்தறிவு கருத்துக்களோ வீரியமாக பேசப்படாத காலம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.) ஏற்கும்படி இருக்கும் மணிகுடவர் எழுதிய திருக்குறள் உரையிலிருந்து திருக்குறள் அறத்துப்பால் மணிக்குடவர் பதிப்பு எனும் தலைப்பில் 140 பக்கங்கள் கொண்ட நூலை 1917 ஆம் ஆண்டு பதிப்பித்தார் வ.உ.சி.
1930 - 1932 களில் வெளிவந்த ''தமிழ்ப் பொழில்'' (துணர் 5/மலர் 6) எனும் இதழில் பாயிர ஆராய்ச்சி எனும் தலைப்பில் (பக்கம்: 232-237)எழுதியுள்ள கட்டுரையில் வ.உ.சி.அவர்கள் இந்த ஆய்வுகளை தொடராக எழுதியுள்ளார்.
பாயிர ஆராய்ச்சி எனும் ஆய்வு கட்டுரையில் வ.உ.சி அவர்கள் திருக்குறளின் இடைச்செருகல்கள் குறித்து எழுதியுள்ள கருத்துக்களின் சாரம் :
திருக்குறளின் இம்மூன்று அதிகாரங்களும் தற்காலத்தில் மிகவும் புகழ் பெற்றவை. கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய இம் மூன்று அதிகாரங்களிலுள்ள முப்பது குறட்பாக்களையும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது என்பதற்கு ஆறு காரணங்களை முன் வைக்கிறார் வ.உ.சி.
1. கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை பாடல்களில் பிற பாடல்களைப்போலச் சொற்செறிவும் பொருட்செறிவும் இல்லை.
2. கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய பாடல்களின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.
3. மெய்யுணர்தல், துறவு என்ற தலைப்புகளில் நூலின் உள்ளே அதிகாரங்கள் இருப்பதால் இதற்கு முரணான தலைப்புகளான கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை ஆகியவற்றை நூலின் தொடக்கத்தில் அதாவது பாயிரத்தில் வைத்திருப்பது பொருத்தமானதல்ல.
4. மெய்யுணர்தல் எனும் தலைப்பிலுள்ள அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களைக் கொண்டு பார்க்கும்போது அவற்றையும் இம்மூன்று அதிகாரங்களையும் ஒருவரே எழுதியிருக்க முடியாது. (வ.உ.சியின் இக்கருத்து விரிவான ஆய்வுக்குரியது).
5. துறவு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டையும் ஒருவரே இயற்றியிருக்க முடியாது.
6. மழையைச் ‘சிறப்பிற்றணிப்பாருமில்லை, வறப்பிற்றரிவாருமில்லை.” எனவே, ‘வான் சிறப்’பைக் கூறுவதால் பயன் ஒன்றுமில்லை.
7. திருக்குறள் 10 என எண்ணிக்கையில் இருக்கும் போது 10ன் மடங்குகளாக 130 அதிகாரமும் 1300 குறள்கள் மட்டுமே இருந்திருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------
திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தை எழுதி இருக்கிறார் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டார் என ஏமாற்றி வந்தவர்கள் இப்போது திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயலும் அயோக்கியத்தனமான முயற்சியில் இறங்கியிருக்கும் இவ்வேளையில் கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருக்குறளே அல்ல.அவை திருவள்ளுவர் எழுதியவையும் அல்ல.இந்த 3 அதிகாரங்களும் இடச்செருகல்களே என்கிற வ.உ.சி.அவர்களின் ஆய்வுக்கட்டுரையை நாம் மீள வாசிக்க வேண்டியதும் அதனை பரப்புவதும் அவசியமாகும்.
பதிவு தோழர் Parimala Rajan

ஞாயிறு 13 2023

விடியுமா.....?

 

அவன் விடியும் என்றான்

இவன் விடியாது என்றான்

ஏன் விடியாது என்றான் அவன்

 விடிவதற்கு வாய்ப்பில்லை 

 மடிவதற்குதான் வாய்ப்யிருக்கிறது என்றான் இவன்







ஞாயிறு 16 2023

நான் கேட்டவை -1



தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார் சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார் கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார் .. இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் .. இந்தத் திண்ணை… .. பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்த பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் .. இந்த திண்ணை… .. கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; கையாலே முன்னேற்றம் கண்டாகணும் .. இந்த திண்ணை… .. நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும் பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா; நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் .. இந்த திண்ணை…...

ஞாயிறு 21 2023

எளிய சோசலிச உண்மைகள்......

 






எளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே

தொழிலாளி : முதலாளி இல்லையென்றால் எனக்கு யார் வேலை தருவார்கள்?
சோசலிஸ்ட் : என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. இதை என்னவென்று பார்ப்போம். நாம் வேலை செய்ய மூன்று பொருட்கள் தேவை – அவை 1. தொழிற்சாலை 2. சில இயந்திரங்கள் 3. பொருளைச் செய்யத் தேவையான மூலப் பொருட்கள்
தொழிலாளி : சரி.
சோசலிஸ்ட் : தொழிற்சாலையைக் கட்டுவது யார்?
தொழிலாளி : கொத்தனாரும் அவருடன் பணியாற்றும் பிற தொழிலாளிகளும்
சோசலிஸ்ட் : இயந்திரங்களை நிர்மாணித்தது யார்?
தொழிலாளி : இயந்திரப் பொறியாளர்கள்
சோசலிஸ்ட் : நீங்கள் நெய்யும் பருத்தியை யார் விளைவித்தது? உன் மனைவி பின்னுவதற்கு தேவையான கம்பளியை யார் கொடுத்தது? மகன் வார்த்துக் கொண்டிருக்கும் இரும்புக்கான கனிமத்தை யார் தோண்டி எடுத்தது?
தொழிலாளி : என்னைப் போன்ற தொழிலாளர்கள், உழவர்கள், ஆட்டுக்காரர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியோர்.
சோசலிஸ்ட் : ஆக, பிற தொழிலாளர்கள் நீங்கள் வேலை செய்வதற்குத் தேவையான ஆலைக் கட்டிடங்கள், இயந்திரங்கள், மூலப் பொருட்கள் ஆகியவற்றை உங்களுக்கு வழங்கியதனால்தான் உங்களால் வேலை செய்ய முடிகிறது, இல்லையா?
தொழிலாளி : உண்மைதான், பருத்தியோ, தறியோ இல்லாவிட்டால் நான் துணியை நெய்திருக்க முடியாது.
சோசலிஸ்ட் : அப்படியானால், உங்களுக்கு வேலை தருவது உங்கள் முதலாளி இல்லை. கொத்தனார், பொறியாளர், உழவர், சுரங்கத் தொழிலாளி ஆகியோர்தான். நீங்கள் வேலை செய்வதற்குத் தேவையானவற்றை உங்கள் முதலாளி எப்படி பெற்றார் என்று தெரியுமா?
தொழிலாளி : அவரை அவற்றை விலைக்கு வாங்கினார்.
சோசலிஸ்ட் : அவற்றை வாங்க அவருக்கு பணம் கொடுத்தது யார்?
தொழிலாளி : எனக்கு எப்படித் தெரியும்? அவருடைய தந்தை சிறிதளவு சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தார். ஆனால், இன்றைக்கு அவர் ஒரு கோடீசுவரர்.
சோசலிஸ்ட் : அவர் பெற்றுள்ள கோடிக்கணக்கான ரூபாய்கள், அவர் துணிகளை நெய்தோ, இயந்திரங்களில் கஷ்டப்பட்டு வேலை செய்தோ சம்பாதித்தனவா?
தொழிலாளி : அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எங்களை வேலை செய்ய வைத்துத்தான் கோடீசுவரர் ஆகியிருக்கிறார்.
சோசலிஸ்ட் : ஆக, அவர் சோம்பேறியாக இருப்பதன் மூலம்தான் பணக்காரர் ஆனார். கோடிகளை சம்பாதிப்பதற்கு அதுதான் ஒரே வழி. வேலை செய்பவர்களுக்கு தங்கள் வாய்க்கும், வயிற்றிற்கும் தேவையானது மட்டும்தான் கிடைக்கிது. ஆக, நீங்களும் சக தொழிலாளிகளும் வேலை செய்யவில்லையென்றால் , உங்கள் முதலாளியின் இயந்திரங்கள் துருப்பிடித்து விடாதா? பருத்தியெல்லாம் பாழாகி விடாதா?
தொழிலாளி : உண்மைதான்! நாங்கள் வேலை செய்யவில்லையென்றால் ஆலையிலுள்ள அனைத்தும் பாழாய்ப் போய்விடும்.
சோசலிஸ்ட் : ஆக நீங்கள் வேலை செய்வதால்தான் இயந்திரங்களும், உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களும் பாதுகாக்கப்படுகின்றன.
தொழிலாளி : உண்மைதான். நான் இந்த மாதிரி யோசிக்கவே இல்லை.
சோசலிஸ்ட் : ஆலையில் என்னென்ன வேலை நடக்கிறது என்பதை முதலாளி மேற்பார்வையிட்டு கவனித்துக் கொண்டிருக்கிறாரா என்ன?
தொழிலாளி : அப்படியெல்லாம் பெரிதாக ஒன்றும் கவனிப்பதில்லை. நாங்கள் எல்லாம் வேலை செய்கிறோமா என்பதைப் பார்க்க தினமும் ஒரு ரவுண்ட்ஸ் வருவார். ஆனால், அப்படி வரும்போது அசுத்தப்பட்டு விடும் என்ற பயத்தில், கைகளை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுப்பதே இல்லை. என் மனைவியும், மகளும் வேலை பார்க்கும் நூற்பாலையில், நான்கு முதலாளிகளுள் ஒருவரைக் கூட அவர்கள் பார்த்ததே இல்லை. என் மகன் வேலை செய்யும் பவுண்டரியின் கதையே வேறு. அது ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டுப் பங்கு கம்பெனி. அங்கு முதலாளிகளின் நிழலைக் கூட யாரும் பார்த்ததே இல்லை. அவர்கள் யாரென்பது கூட தெரியாது. இப்போது நானும் ஒரு ஆயிரமோ, இரண்டாயிரமோ பணம் சேர்த்து ஒரு ஷேர் வாங்கினால், ஆலைக்குள் கால் எடுத்து வைக்காமலேயே, ஆலை எங்கிருக்கிறது என்பது தெரியாமலே நானும் அந்த ஆலைக்கு முதலாளியாகி விடலாம்.
சோசலிஸ்ட் : ஆக, அது ஒரு முதலாளியின் ஆலையானாலும் சரி, ஒரு கூட்டுப் பங்கு கம்பெனியானாலும் சரி, அங்கு முதலாளிகள் வருவது இல்லை அல்லது அவர் அங்கு இருக்கிறாரா என்பது, ஒரு பொருட்டே இல்லை. அப்படியானால், இந்தக் கம்பெனிகளிலெல்லாம் வேலை வாங்குவது யார்? வேலையை மேற்பார்வை செய்வது யார்?
தொழிலாளி : மேனேஜர்களும் ஃபோர்மேன்களும்தான்!
சோசலிஸ்ட் : ஆலையைக் கட்டியது, இயந்திரங்களைச் செய்தது, மூலப் பொருட்களை தயாரித்தது, இயந்திரங்களை இயக்குவது எல்லாமே தொழிலாளர்கள்தான் என்றால், தொழிலாளர்களை மேற்பார்வையிட்டு வேலை வாங்குவது மேனேஜர்களும், ஃபோர்மேன்களும்தான் என்றால், இந்த முதலாளிகள் என்னதான் செய்கிறார்கள்?
தொழிலாளி : நகம் வெட்டிக் கொண்டிருப்பதைத் தவிர, காலை ஆட்டிக் கொண்டிருப்பதைத் தவிர வேறெதுவும் செய்து நான் பார்த்ததில்லை.
சோசலிஸ்ட் : இங்கிருக்கும் அனைத்து முதலாளிகளையும் ஒரு ராக்கெட்டில் ஏற்றி, சந்திரனுக்கு அனுப்பி வைத்து விட்டால் கூட, இங்கு, எந்தவொரு வேலையும் நின்றுவிடப் போவதில்லை. உங்கள் முதலாளி, கடந்த ஆண்டு எவ்வளவு இலாபம் சம்பாதித்தார் என்று தெரியுமா?
தொழிலாளி : குறைந்தது ஒரு முப்பது கோடியாவது இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
சோசலிஸ்ட் : பெண்கள், குழந்தைகள் உட்பட எத்தனை பேரை அவர் வேலைக்கு வைத்துள்ளார்.
தொழிலாளி : ஒரு ஐநூறு பேர் இருக்கலாம்.
சோசலிஸ்ட் : அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறிராகள்?
தொழிலாளி : மேனேஜர், ஃபோர்மேன்கள் அனைவரின் சம்பளத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், சராசரியாக ஒரு ஆளுக்கு ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாயைத் தாண்டியதில்லை.
சோசலிஸ்ட் : ஆக ஐநூறு தொழிலாளர்களும் சேர்ந்து, சம்பளமாக வருடத்திற்கு ஐந்து கோடி வாங்குகிறீர்கள். அது உங்களின் வாய்க்கும் வயிற்றிற்குமே சரியாக இருக்கும். ஆனால், எதுவுமே செய்யாமல், உங்கள் முதலாளி முப்பது கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு போய் விட்டார். இந்த முப்பது கோடி ரூபாய் எங்கிருந்து வந்ததென்று தெரியுமா?
தொழிலாளி : வானத்திலிருந்து அல்ல! பணம் மழையாகக் கொட்டி நான் எங்கும் பார்த்ததில்லை.
சோசலிஸ்ட் : உங்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளமானாலும் சரி, உங்கள் முதலாளி அடித்த இலாபமானாலும் சரி, இரண்டையும் உருவாக்கியது உங்கள் உழைப்பும், வியர்வையும்தான். அந்த உழைப்பினால் உருவான இலாபத்திலிருந்துதான், முதலாளி இயந்திரத்தையும் ஆலையையும் வாங்குகிறான்.
தொழிலாளி : உண்மைதான். இதை மறுக்கவே முடியாது.
சோசலிஸ்ட் : உங்கள் உழைப்பில் உண்டான பணத்திலிருந்துதான், முதலாளி புதிய இயந்திரங்களை வாங்குகிறான். அந்தப் பணத்திலிருந்துதான் ஆலைகளைக் கட்டுகிறான். அந்த ஆலைகளிலும் இயந்திரங்களிலும் வேலை செய்வது நீங்கள், உங்களை வேலை வாங்கி உற்பத்தியை இயக்குவது, உங்களைப் போலவே கூலி அடிமைகளான மேனேஜர்களும், ஃபோர்மேன்களும்தான்! பின்னர் இந்த முதலாளி எங்கிருந்து வந்தான்? அவன் வேலைதான் என்ன?
தொழிலாளி : தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிவதுதான்!
சோசலிஸ்ட் : தொழிலாளர்களிடமிருந்து திருடுவது என்று சொல்லுங்கள். அப்படிச் சொல்வதுதான் சரியானது. தெளிவானது!
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
பால் லஃபார்கே என்ற பிரெஞ்சு சோசலிச வாதி 1903-ம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...