திருவள்ளுவரை காவியாக்க துடிக்கும் பார்ப்பன பாசிச சங்கிகளுக்கு நக்கலைட்ஸ் -ன் ஆப்பு....
புதன் 27 2019
சங்கிகளுக்கு நக்கலைட்ஸ் -ன் ஆப்பு
திருவள்ளுவரை காவியாக்க துடிக்கும் பார்ப்பன பாசிச சங்கிகளுக்கு நக்கலைட்ஸ் -ன் ஆப்பு....
ஞாயிறு 17 2019
டிஜிட்டல் இந்தியாவில் நடக்கும் /நடக்க போகும் வாய்ப்புகள்,
| காற்று மாசுள்ள டெல்லி |
இப்பொழுதே டிஜிட்டல் இந்தியாவின் டெல்லியில் காற்று மாசுபாட்டால் தனியார் ஆக்சிஜன் பயன்பாடு வரத் தொடங்கி விட்டது.
இனி நாளைக்கு டிஜிட்டல் இந்தியாவில் என்னென்ன கூத்தெல்லாம் வரும்..
ஹலோ ... நாங்க ஜியோ மின்வாரியத்தில் இருந்து பேசுறோம்.நேற்று கடைசி தேதி நீங்க கரண்ட் பில் கட்டவில்லை. ஒரு நாள் தாமதம் ஆனதால் 18சதம் அபராதத்துடன் நாளைக்குள் கட்டிடுங்க..
பயணிகளின் கவனித்திற்கு மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக வரும். இந்த தாமத்திற்கு வருந்துகிறது உங்களின் ரிலையன்ஸ் ரெயில்வே கார்ப்பரேசன்..
சாரி, வண்டி கிளம்புறதுக்கு முன்னாடியே நீங்க வநதிருக்கனும் . அதனால உங்க டிக்கெட்டுக்கு ரீஃபண்ட் இல்லை. சிரமத்திற்கு வருந்துவது அதானி ஏர்லைன்ஸ்.
யப்பா டேய்... ஆக்ஸிஸ் ஹோம் டெவலப்மெண்டில் இருந்து மெசெஸ் வந்திருக்குடா..? வீட்டுவரிய ஒரு வாரத்துக்குள் கட்டணும்மாம்டா...!!
நிலத்தை பதிவு செய்ய 5 நிமிடம் போதும்.. எச் டி எப் சி யின் பத்திரப் பதிவு துறையின் புதிய திட்டம்.
பிஸ்லரி வாட்டர் போர்டின் புதிய அறிவிப்பு... தண்ணீர் தேவைக்கு தயவு செய்து ஒரு வாரத்திற்கு முன்பே பதிவு செய்யவும் குறைந்த கேன்களே கையிருப்பில் உள்ளது.
அனில் அம்பானியின் கேஸ் டிஸ்ரிப்யூஷன்ஸ் இன்றைய சிலிண்டர் விலை 1200 பிளஸ் ஜி. எஸ் டி..
பெரியாரிலிருந்து வாடிபட்டி போறவுக மட்டும் ஓலா மணி வச்சுக்கோங்க... மற்றவங்க ரூபா நோட்டுடன் சில்லரையாக கொடுங்க..- ஓலா டிரான்ஸ்போர்ட்.
காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்கிட பதஞ்சலி கார்ப்பரேசன்.
ஸ்வீகி, சூமோட்டோ உபேர் டிரிங், டாஸ்மாக் ஆர்டர் செய்தால் சரக்குடன் சைட்டிசூம் டோர் டெலிவரி செய்யப்படும். இத்துடன் அட்டகாசமான சலுகை வழங்கப்படும்.
கார் மற்றும் டூவீலர் ரிஜிஸ்ட் பன்ன paytm RTO app-யை டவுன்லோடு பன்னுங்க இருந்த இடத்திலே ரிஜிஸ்டர் பன்னலாம்
மினிமம் பேலன்ஸ் உங்கள் கணக்கில் இல்லாததால்... நீங்கள் மினிமம் பேலன் உடன் ஃ.பைன் 950-யையும் சேர்த்து கட்டவும்.
வியாழன் 14 2019
இனி அடிப்படை தகுதி......../????

உலகம் சுற்றும் கிழவனின்
செகட் இன்னிங்கஸ் ஆட்சியில்
செகட் இன்னிங்கஸ் ஆட்சியில்
நீட் பயிற்சி மையங்களில்
சேர்ந்து படித்து தேர்ச்சி
பெற பணம் வேண்டும்.
அல்லது............
சேர்ந்து படித்து தேர்ச்சி
பெற பணம் வேண்டும்.
அல்லது............
அத்தேர்வில் மோசடி செய்து
தேர்ச்சி பெறுவதற்கும் பணம்
வேண்டும். ஆக... மொத்தத்தில்
இனி மருத்துவராவதற்கு முக்கிய
அடிப்படை தகுதி பணம்தான்...
தேர்ச்சி பெறுவதற்கும் பணம்
வேண்டும். ஆக... மொத்தத்தில்
இனி மருத்துவராவதற்கு முக்கிய
அடிப்படை தகுதி பணம்தான்...
செவ்வாய் 12 2019
" அவாள் "களுக்கு ஆப்பறைந்த கீழடி....
![]() |
| படம்-பிபிசி தமிழ் |
இந்திய துணைக்கண்டத்தின் அறிவுச செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம் வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் ஆகும். எனவே சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கு மூத்த மொழியாகும். ஆகவே சமஸகிருதம் தெய்வீக தன்மை கொண்டது. எனவே, சமஸ்கிருதம் அறிவியல் தன்மை கொண்டது. இதை நாசாவே சொல்லிவிட்டது.
எனவே பிற பிராந்திய மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை வாழ வைத்து கொண்டிருக்கும் ” அரிய வகை அறிஞர்களான அவாள்களுக்கு ” கடன் பட்டவர்கள். ஆகவே, சாதியும்-சாதித்தூய்மையையும் -பேனப்படவேண்டும்.
இப்படி பார்ப்பனிய கும்பலும். அதன் குண்டாந்தடிகளான ஆர்.எஸ்.எஸ், பரிவார அமைப்புகளும் மக்களிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவாள்களுக்கு ஒரே வீச்சில் ஆப்பறைந்துள்ளது கீழடி...
ஞாயிறு 10 2019
அய்யோ...த்தீ்........
அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு.....பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்..தெரியாதவர்கள் இவ்லோகத்தை மறந்து அவ்லோகத்தில் மிதப்பார்கள்.... நல்லது அவர்கள் நன்றாகவே மிதக்கட்டும். இன்னொரு கூட்டம் ஒன்று இருக்கும் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று இருக்கும் இவ்விரண்டு கூட்டத்தை விலக்கி விட்டு..தீர்ப்பை பற்றி தெரிந்தவர்கள் மட்டும் அறிந்து கொள்வது..
இந்திய நாடு இறையாண்மை கொண்ட சமத்துவ, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அது இனி அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இருந்து அய்யோத்தீ தீர்ப்பின் மூலமாக தூக்கிலப்பட்டது.
தொல்லியல் துறை யின் ஆய்வுச் சான்றே போலியானது...எல்லாவித அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் செய்தி நிறுவணங்களும் தங்கள் சொத்தை நிறுவனத்தை பாதுகாத்து கொள்ள தீர்ப்பை வரவேற்று தங்களின் மதப் பற்றை காட்டிக்கொண்டுவிட்டன....
பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எந்தவித தண்டனையும் இல்லை. இதிலிருந்து அறிந்து கொள்வது...
ஆர்எஸ்எஸ்- பாஜ.க-வின் சட்டங்களை மீறி எந்த நீதிமன்றமும் இனி செயல்பட முடியாது.என்பதையே இந்த தீர்ப்பு உணர்த்துகிறது .
![]() |
| படம் -வினவு |
வெள்ளி 08 2019
இனி தகவல்கள் கேட்டால் மொட்டை கடுதாசி பதில்தான் கிடைக்கும்,
தகவல்அறியும் சட்டத்தால் ஆங்கிலேயேனின் வழி வந்த குமஸ்தாக்களின் சிவப்பு நாடா தனம் ஒழியும் என்ற நம்பிக்கையில் சமூக ஆர்வலர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டே இருக்கிறது. மாவட்ட நிர்வாகம், மற்ற அலுவலங்களில் இல்லாத தகவல்கள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் என்பதால்...
தகவல் அறியும் சமூக ஆர்வலர்களின் தகவல் மனுவுக்கு உரிய தகவலை வழங்காமல் மொட்டை கடிதாசியை வழங்கி இருக்கிறது காஞ்சிபுரம் மவட்ட நிர்வாகம்...
அத்திவரதர் மகிமைகள். அத்திவரதரின் வரலாறு குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் நடத்தப்பட்டு பசையுள்ள, பசையில்லாத மக்களை பக்தி போதையில் ஆழ்த்தப்பட்ட நிகழ்வுகளில் சம்பந்தமாக..
அத்தீ வரதர் வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? சிறப்பு தரிசன அனுமதிச் சீட்டுகள் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு?? பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி நகைகள் எவ்வளவு??? என்பன உள்ளிட்ட பல தகவல்களை , தகவல் சட்ட சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல்கள் கேட்டுயிருந்தனர்..
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்காத. மாவட்ட நிர்வாகமோ தகவல் சட்டப்பிரிவின் ஆவணங்களின் பிரிவான 2(F)யை சுட்டிக்காட்டி சட்டப்பிரிவு 2(F)-ன்படி தகவல் அளிக்க முடியாது என்று சட்டப்பிரிவு 8 மற்றும் விலக்களிப்புகளை கூறாமல் மொட்டை கடிதாசியை போல் கொடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்...
இதே போல் கோவில் நிர்வாகம் வாங்கிய பல இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அங்கவஸ்திரங்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அங்கவஸ்திரங்கள் குறித்து காஞ்சி புரத்தை சேர்ந்த டில்லி பாபு என்ற தகவல் ஆர்வலர் கேட்ட தகவலுக்கும் தகவல் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் வரதராஜப் பெருமாள் கோயில் ஆணையர் தியாகராஜன்...
அத்தீவரதர் தரிசனக் கொள்ளையில் ஆதாரமாக இருந்த அத்திவரதர் ஆழ்ந்த சயனத்துக்கு சென்றுவிட்டார்... இந்தக் கொள்ளையைப்பற்றி அத்திவரதர் படுத்தபடியும் கேட்கப்போவதில்லை எழுந்து நின்று கேட்கப்போவதுமில்லை.
பக்தியின் பெயரால் பக்தர்களும் ஏமாறாமல் இருக்கப் போவதில்லை..
இனி சமூக ஆர்வலர்கள் 1952-ல வெளியான பராசக்தி படத்தில் இடம் பெற்ற வசனமான “ கோயிலிலே குழப்பம் விளைவித்தேன், கோயில் கூடாது என்பதற்க்காக அல்ல: கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்க்காக” என்ற வசனத்தை மேடை போட்டு பேசவேண்டிய தேவைதான் உள்ளது.
நன்றி! புதிய ஜனநாயகம்
ஞாயிறு 03 2019
ஞாயிறு 29 2019
அவன் இன்னாளு.......!!!.
அவர்..இன்னாளு என்று தெரிந்து கொள்ளும் அடையாளங்கள்.....!!!!!!!!!!!!!

ஒருவன் தீண்டதகாகவன் என்பதை தெரிந்து கொற்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன...
மகாராஷ்டிரா வில் அவன் கழுத்தை சுற்றியோ.இடுப்பை சுற்றியோ கறுப்பு கயிறு அணிய வேண்டுமென்ற விதி இருந்தது..
குஜராத்தில் ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது..
பஞ்சாபில் தெருக்கூட்டுபவன் தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்..
பம்பாயில் கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும் தீண்டபடாதவர்களுக்கு துணிகள் விற்கும்போது அந்த துணிகளையும் கந்தலாக்கியும் அழுக்கடையச்செய்தும் விற்பனை செய்தார்கள்..
மலபாரில் ஒரு மாடிக்கு மேல் வீடு கட்ட அனுமதிக்கப்படவில்லை.இறந்தவர் களை எரியூட்டவும் குடை எடுத்து செல்லவும் காலணிகள் அணியவும் நகைகள் அணியவும் பசுக்களிடமிருந்து பால் கறக்கவும் தங்கள் மொழியில் பேச கூட அனுமதிக்கப்படவில்லை...
தென்னிந்தியாவில் இடுப்புக்கு மேல் எந்த துணியும் அணியக் கூடாது ,பெண்களுக்கு உடலின் மேல் பகுதியில் மூட அனுமதிக்கப்படவில்லை...
இப்படிப்பட்ட கொடுமையிலிருந்து நீக்கி மனிதனாக மதிக்க வைத்த பட்டியல் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டு தவமிருந்து ஈன்றெடுத்த மாமனிதர் பாபாசாகேப்
#Coming Dr.Babasaheb Birthday April 14
புதன் 25 2019
நாட்டு பற்றாளனுக்கும், மக்கள் விரோதிக்கும் உள்ள வரையறை
காரப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கான அழிவு திட்டங்களை எதிர்த்து போராடுபவன் நாட்டுப்பற்றாளன்.
அத்தகைய அழிவு திட்டங்களை எதிர்த்த போராட்டங்களை காட்டி கொடுப்பவன் அடக்கி ஒடுக்குபவன் மக்கள் விரோதி...
சனி 21 2019
இது ஆசையில்லை பெரும் பேராசை....
வணக்கம் நண்பரே..... என்ன இந்தப் பக்கம்....!!!
உங்களை பார்க்கத்தான்..இந்த பக்கம்..
என்ன விசயம் சொல்லுங்கள்...
ஒன்றுமில்லை.. இந்த செல்லில் வந்த பேச்சைக் கேளுங்கள்..
சரி..கொடுங்கள்...கேட்கிறேன்....
.....................
.......................
.......................
யாரு இது இப்படி வசவு....உங்களுக்காக...??!!!
ஆம்..எனக்குத்தான்.... யாரதுஎன்று எனக்கு தெரியவில்லை... அந்த வசவின் சாரத்தை அதாவது விளக்கத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்.. அதற்குத்தான் உங்களை பார்க்க வந்தேன்.. என்னைப்பற்றி நன்றாக அறிந்தவர்கள் அல்லவா தாங்கள்......!!!!!!!!!
அப்படியா...???? செல்லை கொடுங்கள் திரும்பவும் ஒரு தடவை கேட்டுச் சொல்கிறேன்....
இந்தாருங்கள்.....
............................
..................................
.....................................
நண்பரே..! இந்த வசவு உங்களுக்கு அல்ல.... வேறு ஒருத்தனுக்கான வசவு நம்பர் மாறி வந்துவிட்டது.... மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் அந்த ரிக்கார்டு பதிவை அழித்துவிடுங்கள்.... நானே அழித்துவிடட்டுமா...?
விபரத்தை சொல்கிறேன் பொறுங்கள்...
சரி..அழித்துவிடுங்கள்....
நண்பரே... இது கள்ளக் காதலால் வந்த.... சாரி..சாரி... உங்கள் பாசையில் காதலன் காத்திருந்த காதலியை தவிக்கவிட்டு விட்டதால் வந்த கடுங்கோப வசவு நண்பரே !
அப்படின்னா....!!!
இதுக்குத்தான் நான் உங்களுக்கு அடிக்கடி சொல்றது.... ஒன்னு நீங்க காதலிக்கனும் இல்ல .கலியாணம் பன்னியிறுக்கனும்.. அப்படி பன்னியிருந்தா உங்களுக்கு நான் சொல்வது புரியும்...
உங்களுக்கு கிடைச்ச டிமாதிரியான வாய்ப்பும் வசதியும் எனக்கு கிடைக்கலையே தலீவா....
இப்படிச் சொன்னா எப்படி...நண்பரே!!
உண்மையைத்தானே சொன்னேன்..வயசாயிடுச்சு ...என்னை நம்பி பத்து டிக்கெட் இருக்கு.... தொழில் வேற..அவ்வளவு சிறப்பா இல்ல..இதுல காதல்....கல்யாணமுன்னு ......
இத ஒன்ன சொல்லிருங்க நண்பரே..! அப்ப பாத்திங்க.... இப்பவுமா....???அவுக அவுக சுமைய அவுக அவுககிட்ட ஒப்படச்சிடனும் நண்பரே...!.. உடனே..என்ன உதாரணமா காட்டி சொல்லாதிீங்க....
சரி.சரி...உங்க பாதையிலே வரேன்... வீட்டோட மாப்பிளையாக இருக்கிற மாதிரி ஒரு பொண்ண பாருங்க... என் தொழிலு..வீடு எல்லாத்தையும் அவுக அவுகட்ட விட்டுட்டு போயிடுறேன்...
இது பேராசை நண்பரே.....!!
ஆசையே படதாவனை ஆசை படுங்கன்னு சொல்றிங்க ஆசை பட்டா பேராசைங்கிறீங்க....
இது ஆசையில்ல நண்பரே..! பெரும்.. பேராசை... உங்கள் பேராசை நீராசையாகிடும் நண்பரே...!!!
(எதையோ கேட்க..எங்கயோ போகுதே)
திங்கள் 16 2019
கனவல்ல நிஜம்.....
தொழில் முடக்கம் கடன் பிரச்சினை, இடப் பிரச்சினை,உடல் பிரச்சினை இப்படி.... இப்படி பல பிரச்சினைகளில் அல்லாடி வந்தநிலையில் ஓரளவுக்கு அஞ்சாமல் சிறு நடைபோட்டு தெம்பு வந்த நிலையில்....கணினியை திறந்து என்ன செய்யலாம் எதை பதிவிடலாம் என்று யோசிக்கையில் ஒன்னுமே நினைவுக்கு வரவில்லை..நேற்றைய தினத்திலிருந்து ஒவ்வொன்றாக யோசித்தபோது காலையில் ஊர் பேர் முகம் தெரியாதவரிடம் சம்மதமே இல்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டது வந்து நின்றது... சரி ..அதை எழுதுவோம். என்று தோன்றியது.. தோன்றியதை உடனே செயல்படுத்தினேன். அப்புறம் எழுதுவோம் என்றால். மறந்துவிடும். அதோடு கணினியில் உட்கார இடம் கிடைக்காது.. என்பதால் சூட்டோடு சூட்டாக எழுத ஆரம்பித்தேன்
காலையில் விடாமல் அடித்த செல்போனின் ஒலிகேட்டு கண் விழித்தபோது
சிறுநீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது...எழுந்து அவசரமாக வந்த சிறு நீரை கழித்துக் கொண்டு இருக்கும்போதே சாமி வேறு இரண்டாவதாக அருள் வந்து நின்றது.( சாமி என்பது மலம்) அருள் வந்து சாமி வந்தால் அதை அடக்ககூடாது என்பது ஐதீகம், எந்த சிக்கல் வந்தாலும் மலச்சிக்கல் வரக்கூடாது என்று ஆறு அடி,ஏழு அடி உயரமுள்ளபெரியோர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு... கோயில் கருவறையான கழிப்பிட அறைக்குள் சாமியையும் கும்பிட்டு தண்ணீர் ஊற்றி அலம்பிவிட்டு வருவதற்குள் சத்தம் எழுப்பிய போன் ஒலி நின்றுவிட்டது. செல்போனை நோண்டி பார்த்தால் பத்து தடவை ஒலித்ததை காட்டியது..யாரென்று தெரியவில்லை.யாரா இருக்கும் என்பதும் தெரியவில்லை போனில் சேமிக்காத எண்ணாக இருந்தது..ட்ரு காலர் அப்பீ என் போனில்இல்லை..
பத்து தடவை சலிக்காமல் அடித்திருக்கிறார்கள்... நாம் திரும்ப அடித்து கேட்போம் ஏன்? எடுக்கவில்லை என்று கேட்டால் .இருக்கவே இருக்கிறது..ரெடிமேட் பதில்” எனக்கு காது அவுட்டு ”என்பது, இந்த பதிலை ஏற்கவில்லை என்றால்..போனில் சார்ச் இல்லை என்று இப்படி ஒன்றிரண்டு பதிலை தயாரித்துக் கொண்டு..வந்த மிஸ்டு கால் நம்பரை தொடர்பு கொண்டேன்.
சட்டென்று எடுத்தார் ஒரு பெண்... நான் யாரென்று கேட்பதற்குள் சரமாறியான வசவுகள்... நான் பேசுவதை கேட்க தயாரில்லை...கடைசியாக வசவுகளுக்கு பின் அந்தப் பெண் சொன்னதுதான் என் மண்டைக்குள் நின்றது. அதாவது. உன் உறவும் வேணாம் உன் ஒட்டும் வேணாம்.நான் ஏமாந்தது போதும்.. இனிமேல் என் வீட்டுக்கு பல்ல இளிச்சிகிட்டு வந்திடாதே!... மீறி வந்தே! உன் மானத்த வீதிக்கு வந்து நாறடித்துவிடுவேன்.. .வைய்யிடா போன... என்றுவிட்டு இணைப்பை துண்டித்தார்..
என்னடா..இது.... இருக்கிற உளச்சல்ல . இருந்து இப்பதான் மீண்டு வரேன்.இதுல கண் காணதா உளச்சல் வேறா.... என்று நானும் எனக்குள்ளே சிறிதுநேரம் என்னை திட்டிய பெண்னை நானும் திட்டி புலம்பி என் கோபத்தை அடக்கிக் கொண்டேன்...கோபத்தை அடக்க கூடாது என்பதால் நானாக திட்டிக் கொண்டேன் நல்லவேளை... வீட்டில் உள்ளவர்களுக்கு நான் திட்டியது கேட்கவில்லை... இன்னும் கோபம் அடங்காமல் நம்மளைத்தான் . திட்டுகிறேன் என்று நிணைக்கவில்லை...
கடந்த மாதங்களில் இருந்து அக்கா. மச்சான் மருமகன் மருமகள் எல்லாருக்கும் இறந்து போன என் அம்மாவுக்கும் சேர்த்து டோஸ் விட்டு கோபத்தில் எல்லாரையும் திட்டிக் கொண்டு இருந்தேன்... கடனும் செலவும் அவர்காளல் அதிகமானதால் வந்த ஆத்திரம்......கெட்டு போன பிறகுதான் புத்தி வரும் என்பது மாதிரி வரவு-செலவில் நான் கறார் காட்டாமல் விட்டதால் வந்த வினை...
அதில் ரிலாக்ஸ் ஆகி வந்தால்....கனாக்கடி மாதிரி..கனா வசவு போல......அடுத்த ஒரு உளச்சல்....ஏற்கனவே..மோடி..அமித்சா...ஆட்சியில் பல புற உளச்சலை ஏற்படுத்தியது போல..இது அக உளச்சலு போல............
ப
ஞாயிறு 18 2019
அதிகாலை கனவு-50.
க...க..கதை கேட்பதில் ஆர்வம்தான்...
தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ,
நண்பர்களோ.வேறு சிலரோ..
கதை சொல்லும்
போது,. கதை
கேட்பதில் ஆர்வம்தான். ....
ஆனால் அப்படி
கேட்ட கதைகள்
அதிகாலை கனவில்
வந்து கொல...
கொலய்யா..முந்திரிக்கா...
என்பேரு கத்திரிக்கான்னு
மறக்காமல் வந்து
ஆட்டம் போடுவதிலிருந்து
தப்பிக்க முடியவில்லை..
அப்படி வரும்
கதைகளில் கதாநாயகன்
வேறு நபராக
இருந்தாலும்..ஏதோ.
.நான் அதில்
சம்பந்தபட்டு பக்கத்தில்
இருந்து பார்ப்பது
போல் தோன்றுகிறது....
இதுவும் காலத்துக்கேற்ற.
டிஜிட்டல் கனவோ..!!!!!!!!
என்னவோ...ம்ம்.......
கேட்ட கதை.. கனவில் வந்த நிலை..
நான் நாற்பது வயதில் இறந்துவிட்டேன்... என்னை உலுக்கி ஒரு பெண் அலறுகிறாள். பிற்பாடு தெரிகிறது அது என் மனைவி என்று முகம் யாரென்று தெரியவில்லை.. அருகில் தவழும் வயதில் ஒரு குழந்தை.. அது என் மகனாம்..
முகம் தெரியாத என் அப்பா..முகம் தெரிந்த என் அம்மா... அக்கா மற்றும் மருமகன் மருமகள் உற்றார் உறவினர் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொருத்தாராக வந்து செத்துப் போன என் உடலுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறார்கள்... வந்தவர்களில் ஒருவர் எனது பாஸ் அதாவது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி அவரைக்கண்டதும் என் மனைவியானவள் என் குழந்தையை சுட்டிகாட்டி அழுகிறாள்.. அதிர்ச்சி அடைந்த என் முதலாளி என் உடலருகே வந்து பாவிப்பயலே என்றபடி என் தொடையில் ஊசியால் குத்துகிறார்... தமிழ்மணம் மாதிரி.. செத்துப்போனவன் எப்படி்? கத்திருப்பான்.????
நிஜத்தில் ஆ..ஆ.ஆ..வென்று கதறி சத்தமிட்டுஎ ஊசி குத்தின தொடையை பார்த்தேன்....... நிஜத்தில் எதோ கடித்தது.கனவில் ஊசி குத்தியது.
இது எப்படி...???
செவ்வாய் 13 2019
அதிகாலை கனவு-49.
ஏமாந்த பாதகத்தன்....
பலமுறை கைபேசி மணி அடித்தது. வண்டியில் சென்றதாலும் காது கேட்பு திறன் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் கேட்கவில்லை.. வீடு வந்து சேர்ந்து கைகால் முகம் கழுவி வயிற்றுக்குள் ஆகாரத்தை தள்ளிவிட்டு பின் கைப்பேசியை எடுத்து பார்த்தபோது மிஸ்டு கால் பத்துக்கு மேல் அதில் ஒருத்தர் மட்டும் ஆறுதடவைக்கு மேல் இருந்தது.
முதலில் தெரிந்த நபர்களிடம் இருந்து வந்த கால்க்கு ஒவ்வொன்றாக பேசி முடித்துவிட்டு ஆறு..ஏழுாவது தடவையாக அடித்த தெரியாத நபர்க்கு கால் செய்து சார்..வணக்கம், வண்டியில் போய்க் கொண்டு இருந்ததால் பேச முடியவில்லை மன்னிக்கவும். இனி விபரத்தை சொல்லுங்கள் என்று பேச்சை முடிக்குமுன்....
ஆ...ஆ.... மன்னிப்பா...சே...சே... வேண்டாம் ...இதுவரையில் கேட்டிராத பெண் குரல். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்றது. குரல்... என்ன உதவி சொல்லுங்கள் என்னால் முடியுமா? என்று சொல்கிறேன்.. நீங்கள் அன் மேரிடா என்றது குரல்...ஆமாம் என்றதும்.. ஓ..ஓ... தேங்கஸ் என்றது குரல்.
பின் அந்தக் குரலே..பேசியது.... நான் வீட்டைவிட்டு ஒடி வந்துவிட்டேன்... நான் வைத்திருந்த காசுபணமெல்லாம் செலவாகிவிட்டது..... அதனால....நீங்க
எனக்கு ஒரு உதவி ..?? எவ்வளவு வேண்டும்....அய்யோ..பணம் கேட்கவில்லை ஒரு உதவி மட்டும் வேண்டும்... என்ன உதவி சொல்லுங்கோ...... நீங்க நேரில வரமுடியுமா..? நேரிலா...? எங்க வரணும்... இடத்த சொல்லுங்கள்..
இடத்தை கேட்டபின் தயக்கமாக இருந்தது .. போகவர இருநூறுக்கு மேல் செலவாகும்...பேரு. ஊரு, போன் நம்பரு இடம் எல்லாத்தையும் தப்பு இல்லாம சொல்லுது... உண்மையாகத்தான்...இருக்கும்... எவரிடமும் எதுவும் சொல்லாமல் பஸ் ஏறி... புறப்பாட்டுச்சு.......
பஸ்சில் செல்லும்போது பற்பல நினைவுகள். ஊசலாட்டங்கள். பின் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தக் குரல் சொன்ன இடத்தை அடைந்த போது அந்தத் தெரு திருவாளர் ஏரியாகவாக இருந்தது.. திருவாளர் ஏரியா என்றால்... பக்கத்துவீடடில் யார் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது...
கேட்டை திறந்து வாசல் மணியை அடித்து நின்றபோது..கதவைத் திறந்த பெண்... ஓ...வந்திட்டீங்களா...!!! வாங்க.... வாங்க உள்ளே வாங்க ! என்று அழைத்துப் போனார். வரவேற்பு பலமாக இருக்கிறதே உள் குத்து எதுவும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் உள்ளே போனதும் என் பெயரைச் சொல்லி அழைத்த குரல் .வந்த திசையை பார்த்தவுடன் திடுக்கிட்டு போனேன்...
வெள்ளி 09 2019
அதிகாலை கனவு-48.
சிவப்பு கலர் எனக்கு பிடித்தமான கலர். அந்தக் கலரில் கார் அமைந்துவிட்டதில் மகிழ்ச்சி, அதிலும் அந்தக் காரில் கியர் இல்லாதது பெரு மகிழ்ச்சி.... முன் பணம் கூட வாங்காமல் காரை எடுத்துச் செல்ல அனுமதித்துவிட்டது இன்ப அதிர்ச்சி.. மாதாமாதம் பணத்தை செலுத்தினால் போதும் என்றார்கள்.
கம்பெனி மைதானத்தில் வண்டியை ஓட்டி பார்த்தில் அளவிலா ஆனந்தம். பரம திருப்தி... சும்மா பஸ்ட் கியர் செகண்ட கியர். டாப் கியர் போட வேண்டிய வேலையே இல்லை... ஆக்சிலேட்டரை மிதிக்க மிதிக்க வண்டி தீயாய் பறக்குது... இனி என்ன ? ட்ரெயின். பிளைட்டுன்னு அலைய வேண்டியதில்லை.. வண்டியிலே எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்..
எங்கு செல்லலாம் என்று பட்டியல் போட்டதில் ஏழு அதிசியங்களின் ஒன்றான ஈகில் டவர் முன்னால் வந்தது.
அடுத்த நொடியில் வண்டி பறந்தது. பாரீசை நோக்கி......ஈாகிள் டவர் முன்னால் வண்டியை நிறுத்தி அருகில் விற்றுக் கொண்டிருந்த பாரின் குச்சி மிட்டாயை வாங்கி டவரை அண்ணாந்து பார்த்தபடி சப்பிக் கொண்டே பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.....
அங்கிருந்து இனி எங்கு போகலாம் என்று யோசித்தபோது... செல் போன் மணி அடித்தது.... கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ராசு அங்கு வரும்படி பேசினார்.
மறு வினாடியில் கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி நாலு டயரும் விரைந்தது
கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி செல்லும் வழியில் எனக்குமுன்னால் பல கார்கள் நின்று கொண்டிருந்தன என்னவென்று விசாரித்தபோது ஐந்தாறு சிங்கங்கள் சாலையை மறித்து மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.. பல மணி நேரம் ஆகியும் சிங்கங்களின் அமைதி வழி மறியல் போராட்டம் முடிவதாக இல்லை ..
தமிழ்நாட்டு போலீஸ் மட்டும் அங்கு இருந்திருந்தால்.. குண்டுகட்டாக கட்டியோ, அல்லது லத்தியால் ஓட ஓட விரட்டி அடித்தோ....அல்லது வண்டி மீது ஏறி நின்று அத்தனை மறியல் செய்யும் சிங்கங்களையும் டூமில் ..டூமில் டூடுமில் என்று தூத்துக்குடி மக்களை சுட்ட மாதிரி சுட்டு வழியை ஏற்படுத்தி இருப்பார்கள்..... சே என்ற போது.. சாலையை மறித்து படுத்துகிடந்த சிங்கம் ஒன்று எழுந்து என்னை நோக்கி வந்தது.
பயத்தால் திடுக்கிட்டு விழித்த பின் ....அட அடடா... கிழக்கு ஆப்பரிக்காவில் இருக்கும் ராசுவை பார்க்க முடியாம செய்துவிட்டதே இந்த சிங்கங்கள் என்று நிணைக்காமலில்லை..
வியாழன் 01 2019
செவ்வாய் 30 2019
அதிகாலை கனவு-46.
சந்நியாசிக்கு இப்படியோரு விதிமுறை இருக்கோ...??

அண்ணே...என்னண்ணே இங்க... இது உங்களுக்கான இடம் இல்லையே..
“அய்யோ... நானும் சந்நியாசிதானப்பா...... சந்நியாசி மாநாட்டுக்கு வரக்கூடாத..??
“யாருண்ணே சொன்னா உங்கள சந்நியாசின்னு நீங்க தியாகிண்ணே.... போங்கண்ணே வீட்டுக்கு.....
“யாருப்பா..இவரு......ஆ..ஆ சார்..வாங்க......நல்லாயிருகீங்களா..... வேலை எல்லாம் எப்படி போகுது...”
“அதுவா... தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துகிட்டு அதுபாட்டுக்கு போய்கிட்டு இருக்கு... வேல இல்ல அதான் இங்க வந்து உட்காந்துட்டு இந்த கூட்டத்தை பார்த்திட்டு போகலாம்முன்னு வந்தா..சாரு நானு சந்நியாசி இல்லன்னு சொல்றாரு...
“ உங்களுக்கு கல்யாணம் ஆகியிருச்சா....”
“இல்ல”
“பிள்ள குட்டிக”
“கல்யாணமே ஆகல.. பின் எப்படி புள்ள குட்டி...”
“ உங்களுக்கு கல்யாணமே ஆகலையா..” அப்போ , நீங்க சந்நியாசி லிஸ்ட்ல வரமாட்டிக....”
“பின்ன எந்த லிஸ்டுல வருவேன்”
“ அது தெரியல.... ஒரு சந்நியாசிய கூப்பிட்டு கேட்டுப்பார்ப்போம்.”
கல்யாணம் ஆகாதவுக.... சந்நியாசி லிஸ்டுல வருவாங்கலா.... அந்த விபரத்த சார்க்கு கொஞ்சம் விவரமா சொல்லுங்க ..ஜி”
” நீங்க ஏன்? கலயாணம் செய்துக்கல..?”
“ அது பெரிய கதைங்க..” சுருக்கமா சொல்லனும்னா.? அந்த வாய்ப்பே கிடைக்கலங்க...” இப்ப கிடச்சா செய்விங்கலா.
“ கிடச்சாதானே..? கிடைச்சா செய்துகிறலாம்...”
“ .அப்ப நீங்க செய்த பின் சந்நியாசியா மாறலாம்...”
“ இப்ப நடப்புல..சந்நியாசியாகத்தானே இருக்கேன்”
“ இருக்கலாம் கல்யாணம் ஆகி இல்லற சுகத்தில் முழ்கி..பின் தெளிந்து எல்லாவற்றையும் துறந்து காவி உடையணிந்து இறைவன் மேல் பற்றாகி இருந்தால் ” நீங்கள் சந்நியாசி லிஸ்டுல வரலாம்....”அதன் மோட்சம் பெறலாம்..
“அப்போ காவி உடை அணிந்தால்தான் சந்நியாசி என்று தெரியுமோ..?”
“ காவி உடை அணிவது அது ஒரு படி... முதல்படி, இரண்டாம்படி என்பதுபோல் இது ஒருபடி..”
“அப்போ கல்யாணம் ஆகி இல்லற சுகம் அனுபவிச்ச பிறகுதான்..சந்நியாசி ஆக முடியுமா...?”
“ஆமாம்”
“அப்ப சரிங்க...” சார் இவரு சொல்வதை பார்த்தா... நான் சந்நியாசி லிஸ்ட்டுல வரவே முடியாதுங்க..வர்ரேன் சார்.. சார் வர்ரேன்..
“சரிண்ணே.. ” ...சரிங்க சார்,....
விடிந்த பிறகுதான் புரிந்தது. நான் சந்நியாசி ஆக மாட்டேன் என்று...அதாவது அதாவது வந்து.....
விடிந்த பிறகுதான் புரிந்தது. நான் சந்நியாசி ஆக மாட்டேன் என்று...அதாவது அதாவது வந்து.....
வியாழன் 25 2019
அதிகாலை கனவு-45.
அன்றொரு நாளும் இன்றொரு நாளும்....

அழுக்கான ஒரு மஞ்சள் பை..அந்தப் பைக்குள் ஒரு பழைய சிலெடு மற்றும் கிழிந்த மூலையெல்லாம் மடங்கிய ஒரு புத்தகம் அடியில் சின்னச்சின்னதான சிலெட்டு குச்சிகள்...மேல் சட்டையில் பட்டன் இல்லாததால் ஊக்கால் மாட்டபட்ட சுறுக்கங்கள் நிறைந்த வெள்ளை சட்டை.. கால் சட்டையோ ஒரு கால் பக்கம் ஏற்றமும் இன்னொரு பக்கம் இறக்கமும் உள்ள காக்கி டவுசர்.. 1965-66 ஆண்டில் ஒரு கிராமத்தில் உள்ள ஏழை மாணவன் அரசு பள்ளியில் கல்வி கற்க பள்ளிக்கூடம் சென்ற நிலை..
புதிய கல்வி கொள்ளை என்ற தனியார் தாரள கொள்கையால் புற்றிசீலாக பெருகிவிட்ட ஆங்கில நர்சரி. பள்ளிகளில் படிக்கும்போகும் பிள்ளைகள் காலில் பாலீஸ் போடப்பட்டு பளபளவென்ற சூ சாக்ஸ், அயன் செய்யப்பட்ட சுத்தமான யூனிபாரம். கழுத்திலே..டை... அதி நவீன பேக். அதிலே.. பலவண்ண புத்தகம், புத்தம் புதிய சிலேட், பென்சில் தண்ணீர் பாட்டில்...கைக் குட்டை.. டிபன் பாக்ஸ் உணவு... எண்ணெய் தேய்த்து வாரப்பட்ட தலை.., வெள்ளையாக பவுடர் .பூசப்பட்ட முகம், நெற்றியில் மெல்லிய பொட்டு இத்யாதி இந்த நிலை 2001ம் ஆண்டில் கிராமம் என்றாலும் நகரம் என்றாலும் ப்பிரிகேசி, யூகேசி, எல்கெசி யிலிருந்து...
அடுத்த மாதத்தில் வரப்போகும் தேசிய கல்வி கொள்கையால்.. காசு உள்ளவனுக்கே கல்வி.. அப்படி காசு இருந்தாலும் உயர்மட்ட வர்ணத்தாருக்கே போன்றவர்கேகல்வி.. அதாவது ஓராசிரியர் கல்வியான குலக் கல்வியே. பஞ்சமன் சூத்திரன்கள் அவனவன் குலத் தொழிலையே செய்யும் வகையில் மூன்றாவது வகுப்பில் தேர்வு. ஐந்தாம் வகுப்பில் தேர்வு தேர்வு நடத்தி தேர்வுில் தோல்வியடைய செய்து கல்வியை கற்பதைவிட்டு விரட்டி அவனவன அப்பன் மூதாயையர் செய்த தொழிலை செய்ய வைப்பது
இந்த நிலை2019ம் ஆண்டு ஆகஸ்டில் தொடரும்...
உன் அப்பன் செய்த வேலை என்ன? பன்னையடிமையாக இருந்தது. .. நீ தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாய்... உன் மண்டையில் படிப்பு ஏறாது.. ? போ..போ..... போயி உன் அப்பன் செய்த வேலையை தொடரு.... போடா....
திடுக்கிட்டு விழித்தவன்....சொன்னான்....சரிடா... நான் என் அப்பன் வேலையை செய்வதற்கு... முன்னால் “நீ ஏழைத்தாயின் மகன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்றியே.... நீ டீ விற்கிற தொழிலை முதலில செய்டா .....நான் அப்பன் வேலையை செய்கிறேன்.
.
திங்கள் 22 2019
அதிகாலை கனவு-44.
மதுரை வைகை பெருவிழாவால் நாசமாகப்போகும் தொன்மையான மதுரை
மதுரை நகர் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை அடுத்து கிழக்கு பக்கமாய் போனால் ஆரப்பாளைம் கிராஸ்ரோடு. அதற்கு அருகில் புட்டுத்தோப்பு...புட்டுத்தோப்பில் சிவன் கோயில் உள்ள காலி இடத்தில் பிராண்டமான கொட்டகை..அதில் எப்படியும் ஐய்யாயிரம் பேர் வரை உட்காராலாம்...புட்டுதோப்பை ஒட்டி வறண்டு கிடக்கும் வைகையில் 40 அடி நீளத்திற்கு பெரும் பள்ளம் தோண்டப்பட்டு அதில் துறவியர்கள், பூசாரிகள்,அய்யொ அப்பா பக்தர்கள். வைணவாச்சாரியர்கள், சிவனடியார்கள் பசு பாதுகாப்பு குண்டர்கள்,. குண்டு வெடிப்பு, கொலை வழக்கில் உள்ளே இருக்கும் அபிநவ பாரத், சனாதன சன்ஸ்தா போன்ற இன்னும் பலர்..ஆடிப் பெருக்கு என்று சொல்லி தண்ணியில்லாத வைகையில் புனித நீராடல் செய்யப் போகிறார்கள். இதுக்கு பேரு வைகை பெருவிழாவாம்....பத்து நாட்கள் நடைபெறுமாம்.....
என்னடா....சொக்கா....இது மதுரைக்கு வந்த சோதனை

.ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி கடைசியா மனுசனை கடித்த கதையா போச்சு...
வைகை நதியை காக்க என்று கதைவிட்டு காவி மத அடிப்படைவாத அமைப்புகள் தங்கள் மதவாத கொலை அரசியலை நடத்த முற்படுகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள தலையாரி முதற் மாவட்ட ஆட்சியர் வரைக்கும், கான்ஸ்டபில் தொடர்ந்து நகர போலீஸ் கமிசினர் வரைக்கும், மாநகராட்சியில் பியுன்லிருந்து ஆணையாளர் வரைக்கும் விழா அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்து அதை அவர்களன் முகநூல் பக்கத்தில் போட்டோ பிடித்து போட்டு தங்கள் வலிமை காட்டியுள்ளனர்.
ஏற்கனவே வைகையில் தண்ணீர் கொண்டுவர உண்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள் பாடுபட்டு கொண்டிருக்கும் வேளையில் வைகைநதி பாதுகாப்பு இயக்கம் என்ற முகமுடியில் உள்ள காவி..சங்- பரிவார மத வாத அமைப்புகள் நதியை சாக்காக வைத்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை நாசமாக்காமல் விடாது..
ஏற்கனவே கங்கையை . தாமிரபரணியை நாசமாக்கியவர்கள்.... மோசமாய் கிடக்கும் வைகையை நாசமாக்காமல் விடமாட்டார்கள். மூவாயிரம்ஆண்டுகளுக்கு மேலாகவே “யாதும் ஊரே- யாவரும் கேளிர்” மதச் சார்பின்மை, மதநல்லிணக்கம், மத ஒற்றுமை போன்றவற்றின் சின்னமாக விளங்கிய மதுரையை வட மாநிலங்களில் நடப்பது போல மதக் கலவரங்களை தூண்ட இந்த வைகை பெருவிழா ஒரு காரணியாகும்,
பூகம்பமே வந்தாலும் இடிந்து விழாத கோட்டை கட்டி ஆண்ட மன்னாதி மன்னர்களெல்லாம் இருந்த இடம் தெரியல..போனஇடம் தெரியல....இனி என்ன மாவட்ட நிர்வாகமும் சரி, சாதரண பக்த கோடிகளும் வைகை பெருவிழா என்ற முகமுடி விழாவுக்கு தெரிந்தே போனாலும், தெரியாமல்
போனாலும்.. வடநாட்டில் நடக்கும் கொலை. கொள்ளை..மதக் கலவரங்கள் நடப்பதற்கு முன் தேதியிட்டு அனுமதி கொடுத்ததாகும்...
அய்யோ..அம்மா... பழம் பெருமை வாய்ந்த மதுரை நாசந்தானா..? என்று வாய் ஒழம்பி விழித்தபோது... மதுரை வைகைப் பெருவிழா-வின் அழைப்பிதழ் என் கண்ணில்பட்டது..
சனி 20 2019
அதிகாலை கனவு-43.
அதிசியம்..ஆச்சரியம்..ஆனால்....???


இலேசாக மழை பெய்ய ஆரம்பித்தவுடன். ஒதுங்குவதற்கு தோதான இடத்தை தேடி ஆரம்பித்தேன்.. ஒரு இடத்தை கண்டுபிடித்து இரு சக்கர வாகணத்தை நிறுத்தவதற்குள் பொறுக்கமாட்டாமல் மழை சடசட சட வென பெய்ய ஆரம்பித்தது...
மழை பெய்த சிறிது நேரத்தில் ரோடெல்லாம் பனிக்கட்டி நிரம்பி வழிந்தது..... விழுந்த பனிக்கட்டியிருந்து ஆவி வேறு பறந்தது. நான் மட்டுமே ஒதுங்கியிருந்த இடத்தில் கூட்டம் கூடியது... நான் சுவரோரம் நின்று இருந்ததாலும் என்னை சுற்றி கூட்டம் அரனாக நின்றதால் என் மழையின் சாரலோ் மழையில் தெறித்து விழும் பனி்கட்டிகளோ என் மேல் விழவில்லை..
சரியான மழை.. கொளுத்தின வெயிலுக்கு மேலே நாலு மடங்கு மழை கொட்டியது..வைகையில் ஓட வேண்டிய ஆறு....ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தின் பாதியளவுக்கு மழை தண்ணீர் ஓடியது...
பஸ் உள்ளிட்ட எல்லா வாகனங்கள் தனிறிக்கொண்டிருந்தன... மழையும் விடாது பெய்து கொண்டு இருந்தது. மின்சாரம் எல்லாம் நிறுத்தப்பட்டு மா மதுரையே ஒரு பக்கம் வெள்ளக்காடாகவும் இருட்டாகவும் இருந்தது..
சல்லிகட்டு போராட்டத்தின் வீடியோவில் காண்டதுபோல் எல்லோரும் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்..பலமணி நேரத்திற்கு பிறகு மழை நின்றது ஆனால் மழை நீர் ஆறாக ஓடுவது நிற்கவிலலை....
என்னை சுற்றி நின்றவர்கள் யாரும் இல்லை. நானும் எனது வாகனமும் மட்டுமே நின்றிருந்தோம்.. எனது வாகனத்தின் புகை போக்கினுள் மழை நீர் புகுந்து விட்டதால் இயக்க முடியவில்லை. ஆறாய் ஓடிக் கொண்டிருந்த நீரில் கைகால் விரைத்து போக... குளிரால் ஆடும் தாடை வாய் ஆகியவற்றை பற்களால் கடித்த வண்ணம். உருட்டிக் கொண்டே நகர மத்தியில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் நோக்கி வந்தபோது.. வாகனங்களை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.. என்வாகனத்தை உருட்டி செல்வதற்குகூட வழி இல்லாமல் இருந்தது.
என் திசை நோக்கி வந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டே போனார்கள் சில பேர்களை விட்டுவிட்டு ஒரு சிலரிடம் என்னவென்று கேட்டேன்.
ஸ்மாட் சிட்டிக்காக பல்அடுக்கு வாகன காப்பத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் பெய்த மழை நீரால் நிரம்பி மாடக்குளம் கண்மாய் பொல் காட்சி அளிப்பதாக சொன்னார்கள்...
அட... என்று நானும் வாய் பொளந்து ஆச்சரியபட்டு சென்று கண்மாய் ஆன முன்னால் நகரப் பேருந்தை அதிசியமாய் பார்த்து நின்றேன்.... கூட்ட நெரிசலில் இருந்து தப்பிப்பதற்க்காக பாலத்திலிருந்து இறங்கி கண்மாய் அருகில் நின்றேன்.
போலீஸ் வந்து கூடிய கூட்டத்தை விரட்டியதில் முட்டிமோதி ஓடியவர்கள் தள்ளிவிட்டதில் கண்மாய் கடலில் விழுந்தேன்...
விழுந்ததுதான்..தாமதம் படக்கென்று கண் விழித்து என் இருப்பை உணர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன் மணியைப் பார்த்தபோது ஐந்தை தாண்டிக் கொண்டிருந்தது. எழுந்து கதவை திறந்து பார்த்தபோது என் வீட்டைச்சுற்றி மழைநீர் நின்றிருந்தது...
வியாழன் 18 2019
அதிகாலை கனவு-42.
அப்பவே அப்படின்னா...இப்ப..எப்படி ...???

நேரத்தை பார்த்தபோது அதிகாலை மூன்றரையை காட்டியது.படுத்திருந்த படுக்கையை விட்டு எழுந்தார். பின்பு விரித்திருந்த பாயை எடுத்து சுருட்டி பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளியே வந்து அடக்கி வைத்திருந்த சிறுநீரை வெளியேற்றிவிட்டு மண்ணென்னை விளக்கை பற்ற வைத்து அந்த விளக்கை பிடித்த வண்ணம் வீட்டின்.முன்பு சிறிதாக இருந்த அடுப்படிக்குள் நுழைந்து விளக்கை ஓரமாக வைத்துவிட்டு.. முன்னமே வாங்கி வைத்திருந்த கிழங்கு மாவை ஒரு சட்டியிலே கொட்டி அதில தண்ணிரை ஊற்றி உருண்டை விழாத வண்ணம் நன்றாக கரைத்தார்
பின் தீப்பெட்டியை தேடி பிடித்து எடுத்து அடிப்பின் ஓரமாக வைத்திருந்த எருவாட்டியை இரண்டாக உடைத்து தனியாக சீசாவில் இருந்த மண்ணென்ணையை இரண்டுக்குமாக சிறிது ஊற்றி .தீப்பெட்டி குச்சியை எடுத்து உரசி தீயை எருவாட்டின் மீது வைத்தார். தீ மள மள வென்று எறிந்தது. எருவாட்டின் ஒரு முனையை பிடித்து அடுப்பில்இரண்டையும் உள்ளே வைத்துவிட்டு.. கிழுங்கு மாவை கரைத்த சட்டியை தூக்கி அடுபபில் வைத்து தீ எரிந்து சட்டி சூடாக சூடாக கரண்டியால் கின்டிக் கொண்டே இருந்தார். இடையில் இரண்டொரு எருவாட்டியை உடைத்து அடுப்புக்குள் வைத்தார்.
சிறிது நேரத்துக்கு்பின்.. சட்டியை கிளறுவதை நிறுத்திவிட்டு சொம்பில் வைத்திருந்த தண்ணியில் கையை நணைத்து அந்தக்கையை வெந்து கொண்டிருந்த சட்டியில் ஒரு விரலை மட்டும் முக்கி எடுத்தார்.. கையில் எதுவும் ஒட்டவில்லை என்பதை கண்டவுடன் கூரையில் சொறுகி வைத்திருந்த கரித் துணியை அதாவது அடுப்பு துணியை எடுத்து சட்டியின் சூடு கைகைள தாக்காதவாறு துணியால் சட்டியின் மேல்பாத்தை துணியால் பிடித்து இறக்கி அதை வீட்டு வாசலில் ஆற வைத்தார்...
வீட்டின் உள்ளே படுத்திருந்த அவருடைய அம்மா .சொல்வதை கேட்டு சரிம்மா என்றவாறு... ஒரு கவிழத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஈயச்சட்டியை எடுத்து சிறிது தண்ணிரை ஊற்றி சட்டியின் உள்ளே நன்றாக தேய்த்துக் கழுவி அடுப்படிக்குள் வந்து எரிந்து கொண்டிருந்த அடுப்பில் இன்னும் இரண்டொரு எருவாட்டியை வைத்து கழுவிய ஈயச்சட்டியில் பாதி வரை தண்ணீரை ஊற்றிய ஈயச்சட்டியை அடுப்பில் வைத்து அந்தச் சட்டிக்கு பொருத்தமான ஒரு ஈயத்தாம்பாளத்தை கொண்டு மூடி வைத்துவிட்டு... தன் அம்மாவிடம்
”யம்மா.... உல வச்சட்டேன் ம்மா...என்றார். அவருடைய தாய் மீண்டும் எதோ சொல்ல பதிலுக்கு அவர் “வச்சுட்டேன் அம்மா என்றபடி .. எறிந்தபடியே அடுப்புக்கு வெளியே வந்து விழுந்த எருவாட்டியை எடுத்து திரும்பவும் அடுப்புக்குள் திணித்து மீண்டும் ஒரு எருவாட்டியை இரண்டாக உடைத்து அடுப்புக்குள் திணித்துவிட்டு வாசலுக்கு வந்தார்.
வாசிலில் ஆற வைத்திருந்த சட்டியை தொட்டுப் பார்த்தபோது சட்டியில் சூடு கொஞ்சமாக குறைந்திருந்தது. அதை ஒரு வாளியல் கொட்டினார் கொட்டிய வாளியில் சிறிது தண்ணிரை ஊற்றி ஓரமாக வைத்துவிட்டு.. வாளியில் சிறிதுதாக தண்ணீரை ஊற்றி கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுநிலை பக்குவத்தில் கரைத்தவிட்டு, கடைசியில் தண்ணிர் ஊற்றி ஓரமாக வைத்திருந்த சட்டியில் ஓட்டியிருந்தவற்றை நன்றாக வழித்து எடுத்தவிட்டு நல்ல பக்குவத்தில் கரைத்துவிட்ட திருப்பியுடன் சட்டியையும் கையையும் நன்றாக கழுவி விட்டு மாலையில் மடித்து வைக்கப்பட்டிருந்த போஸ்டரை எடுத்து சைக்கிளின் பின் கேரியல் வைத்துவிட்டு பசை வாழியை சைக்கிளின் ஆன்பாரில் தொங்கவிட்டு அம்மா என்றபடி வீட்டுக்குள் நுழைந்த போது.. அடுப்புகடியில் அமர்ந்திருந்த அவருடைய அம்மா உலையில் அரிசி போட்டுட்டேன். சோறும் உப்பு சாம்பரையும் ஆக்கி வைத்துவிட்டு நான் வேலைக்கு போறேன். நீ வந்து சாப்பிட்டுக்கோ என்று சொன்னபோது.. சரிம்மா என்றுவிட்டு சைக்கிளில் மாட்டியிருந்த பசை வாளியை பிடித்தபடியே சைக்கிளை உருட்டியபடி அவர் தெருவின் விளிம்பை வந்தடைந்தார்.
அவர் எரியாவிலிருந்து ஓட்டத் தொடங்கிய வேலை காலை ஏழு மணிவரை நகர மத்திய பேருந்து நிலையத்தில் முடிந்தது. அவரால் முடித்து வைக்கப்படவில்லை இரண்டு காக்கிகளால் தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது ஒன்றிரண்டு போஸ்டர்களே இருந்த நிலையில் முடிந்திருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்ற வந்த அனைத்து பஸ்களிலும் ஒட்டியதால் போஸ்டரின் வாசகம் பட்டி தொட்டி எல்லாம் தீயாக பரவியது...
போஸ்டரின் வாசகம் தீயாக பரவியதால்தான் அருகில் இருந்த காவல் நிலையத்திக்கு செய்தி “தீ”யாக பரவி நாலைந்து காக்கிகள் படை சூழ சுற்றி வளைத்து ஒட்டிய போஸ்டரை சிலவற்றை கிழித்தும் பலவற்றை கிழிக்க முடியாமலும் தவித்தனர். பெரும்பாலும் பேருந்துகள் பட்டி தொட்டிகளுக்கு சென்று விட்டதால் காக்கிகளால் அவற்றை கிழிக்க வழியில்லாமல் போய்விட்டது .
நகரப்பேருந்தில் ஒற்றையாளக ஒட்டிக் கொண்டிருக்கும்போது உதவிக்கு ஒரு தோழர் வந்து சேர்ந்தார்.... இவர் பசை தடவி கொடுக்க அவர் பஸ்சில் ஒட்ட..அவர் ஒட்டி முடித்து வருவதற்குள் இவர் அருகில் நிற்கும் பேருந்தில் ஒட்ட ..இப்படி பம்பரமாக ஒட்டியதால் காக்கிகள் வருவதற்குள் ஒட்டி முடித்திருந்தார்.
வந்த காக்கிகள் இவரை சுற்றி நின்று கொண்டு இவர் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து காவல் நிலையத்துக்கு வருமாறு கையைப் பிடித்தனர்.. இவர் கையை பிடிக்காதீர்கள் பசை உங்ககள் ஒட்டிக் கொள்ளும். நான் தப்பித்து ஓடிப் போக மாட்டேன் உங்களோடு வருகிறேன். என்ற படி பசை வாளியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் செல்ல ஆரம்பித்தபோது.. இவருக்கு துணையாக ஒட்டிக் கொண்டிருந்தவரை இரண்டு பேர் கூட்டி வந்தனர்
அவரைக் கண்டதும் .“சார். அவருக்கும் போஸ்டர் ஒட்டுனதுக்கும் சம்பந்தமில்லை எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு..சும்மா வேடிக்கை பார்த்தவரை புடிச்சுட்டு வர்றிங்க நான்தான் வர்றேன்ல.. எத்தன தடவ என்ன பிடிச்சுட்டு போயிருக்கிங்க.. எப்பவாவது ஓடியிருக்கேன்னா சொல்லுங்க... அவர விட்டுருங்க என்று சொன்னதும்.இவர் அருகில் இருந்த காக்கி ஒருவர் சொன்னதும் அவரை விட்டுவிட்டனர். உடனே..இவர் அவரிடம் நண்பரே...! பிளாட்பாரத்தில் நடுவே நின்று கொண்டிருந்த சைக்கிளை எடுத்துச் செல்லுங்கள்.. என்று சொல்ல... சுற்றி வளைத்து நின்றிருந்த காக்கிகள் எஸ்ஐ சத்தமிட்டு வருவதை கண்டதும் பதற்றமடைந்து அவரை பர பரவென்று இழுக்க .பசை வாளி , போஸ்டரை எடுக்க இவர் இழுக்க ஒரே தள்ளுமுள்ளாகி கொண்டிருந்தது...
இந்த தள்ளு முள்ளுவை கண்டு .. நான் விழி பிதுங்கி விழித்து பார்க்க படுக்கையைில் விரித்த பாயை விட்டு தரையில் படுத்திருக்க கண்டேன்.. உடம்பெல்லாம் மண்ணாக இருக்கக் கண்டேன். என் அம்மா போட்டோவில் இருந்தபடி என்னை பாரத்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன் பொழுதும் எப்பொழுதும் போல விடிந்திடக் கண்டேன்..
திங்கள் 15 2019
அதிகாலை கனவு-41.
கனவில் வந்த மாட்டுக்கறியின் மகத்துவங்கள்...!!!!!!!!
மேல் சாதி என்ற
வெறும் பீத்துல
அவனால மாட்டுகறிய
தின்ன முடியல....
மத்தவங்கெ தின்றது
பார்த்து பொறாமை
அதனாலதான் மாட்டுக
கறி தின்ன
வக்கத்து போயி
தின்னுறவன சங்கிகள்
பேர்ல பிறாண்டுறான்
நாய்யி தானும்
தின்னாது அடுத்தவனையும்
தின்னவிடாது தேங்காய
உருட்டிகிட்டே திரியும்
அந்த நாலுகால்
நாயோட சேர்ந்ததுக
இந்த இரண்டு
கால் நாய்க.................
சனி 13 2019
அதிகாலை கனவு-40.
ஏம்ப்பா..இப்படி...???

ஊர் சுற்றி..
.
டீ விற்றது பொய்யி
திருமணம் பொய்யி
படித்தது பொய்யி
வளர்ச்சி பொய்யி
வாக்குறுதி பொய்யி
பக்தி பொய்யி
இப்படி பொய்யில
பிறந்து பொய்யில
வளர்ந்த ஊர்
சுற்றியின் வெற்றி
எப்படி உண்மையாக
இருக்கும் சொல்லுங்க.
ஏய்.....ஏம்பா
இப்படி என்...
கனவுல வராதப்பா
அப்புறம் என்
கனவும் பொய்யா
போய்விடும் அய்யோ..

ஊர் சுற்றி..
.
டீ விற்றது பொய்யி
திருமணம் பொய்யி
படித்தது பொய்யி
வளர்ச்சி பொய்யி
வாக்குறுதி பொய்யி
பக்தி பொய்யி
இப்படி பொய்யில
பிறந்து பொய்யில
வளர்ந்த ஊர்
சுற்றியின் வெற்றி
எப்படி உண்மையாக
இருக்கும் சொல்லுங்க.
ஏய்.....ஏம்பா
இப்படி என்...
கனவுல வராதப்பா
அப்புறம் என்
கனவும் பொய்யா
போய்விடும் அய்யோ..
வியாழன் 11 2019
அதிகாலை கனவு-39.
நடப்பும் சிந்தனையும்......
வர வர என் தொழில் நலிவடைந்து வருகிறது..கிடைக்கின்ற ஒன்ரண்டு வேலைகளையும் உடனுக்குடன் முடித்துக் கொடுத்தாலும் உடனடியாக பில்லும் உடனடியாக கிடைப்பதில்லை.. இதனால் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமமாக இருக்கிறது. வேலையாட்களும் இதை உணருவதில்லை.. சென்ற மாதத்திற்குண்டான பில்லுக்கான ஜிஎஸ்டி
வரி கட்டுவதற்கு கூட திண்டாடும் நிலை....
சும்மாவே பகலில் நான் தூங்குவதில்லை... வேலை இல்லாததால். சுத்தமாக தூங்கவதில்லை.... வேலையில்லாததால் படிக்காமல் விட்ட புத்தகங்களை படிக்கலாம் என்று புத்தக்ததை திறந்தால் தலை கோடாங்கி அடித்தாலும் விடக்கூடாது என்று உறுதியுடன் புத்தகத்தை விரித்தால்...கெடுப்பதற்கே சிற்றெறும்புகள் படை வரிசையாக வந்து தொல்லை கொடுத்தன. அவற்றோடு ஒரு சில பெரிய கருப்பு எறும்புகளும் நான் படிப்பதை கெடுத்தன..
ஒரே அடியாய அடித்து போட கையை ஓங்கினாலும். எனக்கு இருக்கும் இரக்க குணத்தால்.. சே.... நாம..யாரு.அதக் கொல்வதற்கு..அது என்ன தெருவில இருக்கிற மனுசி, மனுசன்மாதிரியா நமக்கு தொல்ல கொடுக்குது... அம்புட்டு தொல்ல கொடுத்த அந்த மனிதர்களையே விட்டுவிட்டோம்..இதுகிட்டயா நம்ம வீரத்த காட்டுறது என்ற சிந்தனை வந்தவுடனே... ஓங்கிய கையை மாற்றாமல். அப்படியே அந்த பெரிய கறுப்பு எறும்புகளை பிடித்து வாசல் வெளியே தூக்கி எறிந்து விட்டு புத்தகத்தை பார்த்து படிக்க ஆரம்பித்தால் இன்னொறு எறும்பு... இப்படி நாலந்து தடவை... படிக்கிற சிந்தனை போச்சு..
சிற்றெறும்பு கட்டெறும்பு, கறுப்பு எறும்பு..என எல்லாவற்றையும் அடிக்காமல் டேபில் காற்றாடியை அதி வேகத்தில் ஓடவிட்டு எல்லாவற்றையும் ஓடவிட்டேன். அதை முடித்துவிட்டு கடையப் பக்கம் மற்றும் ரோட்டு பக்கம் சென்று கொஞ்சம் நடை நடைந்து அப்புறம் வீட்டுக்குவந்து.. இருக்கிறதை அதாவது தட்டில் போடுவதை வயிற்றுக்கள் இறக்கிவிட்டு... சிறிது நேரம் செல் போன் நோண்டல் அதுவும் போரடித்துப்போக... தூக்கம்வர மீண்டும் புத்தகத்தை திறந்து ஒரே பக்கம் ஒரு பக்கம்தான் படித்திருப்பேன் கண்கள் சொருக..அப்படியே சாய.....
அப்படி சாய்ந்து தூங்கின தூக்கத்தில் மேற்படி சொன்னவை எல்லாம் நிணைவுக்கு வர திடிரென்று காதுக்குள் எறும்பு புகுந்து விட்டதால் தூக்கம் கலைய காதுக்குள் சென்ற எறும்பு காதை கடிக்கும் வலியை பொறுத்துக் கொண்டே அருகில் வைத்திருக்கும் தண்ணீரை காதுக்குள் விட வலி குறைந்தது.... விபத்தினால் காது சரிவர கேட்பதில்லை.. இந்த லட்சணத்தில் இந்த எறும்பு போயி காதை கடித்தால் காது என்ன கேட்டுவிடவா போய்கிறது என்று சிந்தித்தபடியே சூரிய வெளிச்சம் வருவதற்க்காக ஊறும் எறும்புகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் காத்திருந்தேன்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...




