சனி 26 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -96....
வியாழன் 24 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -95.....
கடந்த 75 நாட்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனைகளில் 33 அரசு ஊழியர்கள் கைது:
தமிழகம் முழுவதும் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.
கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்.
லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் கைது-லஞ்ச ஒழிப்புத்துறை.
புகாரின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.62.82 லட்சமும், திடீர் சோதனைகளில் ரூ.6.96 கோடியும் பறிமுதல்.
7.2 கிலோ தங்கம், 9.8 கிலோ வெள்ளி, 10.52 காரட் வைரமும் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை.
வெள்ளி 18 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -94.....
செவ்வாய் 15 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -93.....
அதானி. அம்பானி..கார்ப்பரேட்டுகளுக்காக
மோடி... ஆட்சி
காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டுகிறது
கடலிலிருந்து மீனவர்களை விரட்டுகிறது
பெருநகர்களிலிருந்து குடிசைவாழ் மக்களை விரட்டுகிறது
டெல்டாவிலிருந்து விவசாயிகளை விரட்டுகிறது
சிறுநகரங்களிலிருந்து சிறுதொழில் சிறுவணிகரை விரட்டுகிறது
மாநிலங்களிலிருந்து மண்ணின் மக்களை விரட்டுகிறது
ஊர்தோறும் சேரிமக்களை ஓடஓட விரட்டுகிறது
காட்டைக் கொளுத்தி! கடலை நஞ்சாக்குகிறது
பூமியின் மறுபுறம் வரை துளையிடுகிறது
வாயு, கரி, எண்ணெய் என எதையும் விட்டு வைப்பதில்லை
அரசுடைமை அனைத்தையும் கார்ப்பரேட் உடைமையாக்குகிறது
பேச்சுரிமை பறி.. எழுத்துரிமையை பறிக்கிறது
வாழ்வுரிமையையும் போராட்ட உரிமையையும் பறிக்கிறது
ஜாதிவெறிக்கு சாம்பிராணி போடுகிறது
மதவெறிக்கு ஊதுபத்தி கொளுத்துகிறது
நாட்டையே கொள்ளையிடுகிறது அதை வளர்ச்சி என்று சொல்கிறது
காவிகள், கார்ப்பேட்டுகளின் கால்களை நக்கிக்குடிக்கிறது
அதை "தேசபக்தி" என்று சொல்கிறது
எதிர்த்துக் கேட்போரை இல்லாமல் ஆக்குகிறது
தீவிரவாதி, நக்சலைட் என்று பரப்புகிறது
ஊடகம் யாவையும் உண்மைக்கு ஊமையாக்குகிறது
அவர்களுக்கு மட்டும் ஊது குழலாக்குகிறது
எல்லா அக்கிரமங்களையும் சட்டப்படி செய்கிறது
சட்டம் இல்லையெனில் புதுச்சட்டம் போடுகிறது
அக்கிரமத்தை வளர்க்கிறது
மோடியின் ஃபாசிசக் கொடுமை தாளாமல் ஒப்பாரி
மரண ஓலமிடும் மக்கள் கூக்குரல் உலகுக்குக்
கேட்காமல் இருக்க ஓவென்ற...
விமானப் பேரிரைச்சலையும் தாண்டி...
இன்னும் அதிகமாய் வெறிப்பிடித்த
மிருகம்போல்கும்பலாகக் கத்துகிறது
பாரத் மாதா கீ ஜெய் ....என்று...!
ஞாயிறு 13 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -92.....
Accused No.1 Jayalalitha|A1
வெள்ளி 11 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -91.....
திங்கள் 07 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -90.....
ஏரோட்டும் உழவர்
போராட்டம் வெல்க !
><><><><><><><><><><><><><><
தில்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக முகங்கள் தெரிகிறதா ?
□ பி. அய்யாக்கண்ணு (தமிழக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்)
□ கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு)
□ பி.ஆர்.பாண்டியன் (விவசாய சங்கத் தலைவர்)
□ என்.எஸ். பழனிச்சாமி
(கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர்)
□ இராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்கம்)
□ கே.பி.இராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
□ ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)
□ அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)
□ இளங்கீரன்
(காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
□ கிருஷ்ணன்
(ஏரிநீர்ப்பாசனச் சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)
□ பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)
□ கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).
□ சரவணன்
(இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)
□ வெங்கடபதி (தனியார் சக்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)
□ விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)
□ நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)
□ இராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)
□ ஜெனார்த்தனன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
□ சுதர்சனம்
(படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
□ சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசனச் சங்கம், இராமநாதபுரம்)
□ செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)
□ அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சக்கரை ஆலை).
□ இராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சக்கரை ஆலை)
□ இரகுபதி
(ஆம்பூர் கூட்டுறவு சக்கரை ஆலை).
□ சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சக்கரை ஆலை).
□ லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்,
திருப்புலிவனம்)
□ திருவேங்கடம் (அனைத்துப் பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).
□ சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சக்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).
□ ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)
□ மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)
□ ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்)
தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இவர்கள் முகம் தெரிகிறதா ? தேடிப்பாருங்கள்.
வெள்ளி 04 2020
கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -89.....
இன்றைய கொள்ளையர்களின் இந்தீயா
ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கிராம அதிகாரியும் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.
மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.
ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. கிராம மக்கள் கோரிக்கையான கிணறு ஞாபகம் வந்தது.
உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து. அந்த இரண்டு லட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.
கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.
முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லட்சம் எடுத்துக் கொண்டதை சொல்லி, தான் செய்த தவறு வெளிவராமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டினார்.
அப்பொழுது புதியவர் அவரை ஆறுதல் படுத்தி, நான் கவனித்துக் கொள்கிறேன்.நீங்கள் தைரியமாகப் போங்கள் என அவரை வழியனுப்பி வைத்தார்.
ஓரிரு வருடங்கள் சென்ற பின் இந்த இரு அதிகாரிகளும் ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது பழைய அதிகாரி, புதியவரிடம் கேட்டார், சார் நமது கிணறு சமாச்சாரம் என்னவாயிற்று?
பிரச்சனை ஒன்றும் இல்லையே என்றார்.
அதற்கு புதியவர் சொன்னார்.
அந்த பிரச்சனை முடிந்து விட்டது, அதை சுமூகமாக முடித்துவிட்டேன் என்றார்.
முதலாமவருக்கு விளங்கவில்லை, ஆர்வம் தாங்காமல், எப்படி சார் என்றார் ?
அதற்கு இரண்டாமவர் சொன்னார், நீங்கள் வெட்டிய கிணற்று தண்ணீர் விஷத்தன்மை கொண்டது என்று Lab அறிக்கை வைத்து.
அதை மூடுவதற்கு 3 லட்சம் செலவு என்று சொல்லி, நான் 3 லட்சம் எடுத்தேன் என்றார்.
இது தான் இன்றைய இந்தீய நாட்டின் அரசியல் நிலை.
யாராவது வருவார்களா?நல்லது செய்ய மாட்டார்களா ?என்று மக்கள் ஏங்கி நிற்க இந்தீய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சி கொண்டு இருக்கிறார்கள்..
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -88.....
Part 1.
சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மோசடி என்ன என்று கேட்டால், அது 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பார்கள். ஆனால் அது ஊழல் இல்லை என்று நீதிமன்றமே கூறினாலும் ஏற்கமாட்டார்கள். "ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அதை உண்மை என்று மக்கள் நம்புவார்கள்" என்ற கோட்பாட்டை ஹிட்லரின் ஆலோசகரான கோயபல்ஸ் நிருபித்து காட்டினார். அவரை விட மிக தீவிரமாக அந்த கோட்பாட்டை பயன்படுத்தி கொள்பவர் இந்திய பாசிச கட்சியின் தலைவர் அமித்ஷா.
November 8, 2016. Demonetization அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் இந்தியாவிலே அதிகபட்சமான பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்குள் ரூ. 745.59 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் அந்த வங்கிக்கு கொடுக்கப்பட்டது. அப்போது நாட்டில் உள்ள வங்கிகளில் அதிக புதிய நோட்டுகள் பெற்ற வங்கி இதுதான். இது நடந்த போது ஏழை மக்கள் எல்லோரும் பணத்தை மாற்ற அல்லாடி கொண்டிருந்த காலம்.
விஷயம் என்னவென்றால், இந்த அகமதாபாத் வங்கியின் அப்போதைய இயக்குனர் அமித்ஷா தான். Demonetization நடந்த பிறகு அமித்ஷா வின் சொத்து மதிப்பு திடீரென்று 81% உயர்ந்தது. எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்.
ஜன்டாவிற்கு மாயாஜாலம் தெரிந்தால் மட்டுமே இது சாத்தியம்.
Demonetization போது குஜராத் மாநில கூட்டுறவு வங்கி வங்கியே 1.1 கோடி தான் பெற்றது. ஆனால் அமித்ஷா வின் அகமதாபாத் மாவட்ட வங்கி 700 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. அதும் ஐந்து நாட்களில்..
பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் கூட்டுறவு வங்கிகளில் தான் அதிக அளவு பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது. அதாவது மற்ற மாநிலங்களை விட 64% அதிகம். ஏனென்றால் தேசிய வங்கிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கும். கூட்டுறவு வங்கிகளை பெரும்பாலும் பாஜக தலைவர்கள் தான் நிர்வகித்தனர். அங்கு பணபரிமாற்றம் சுலபமாக நடந்தது.
உண்மையில் இந்த நாட்டில் நடத்த மிக பெரிய மோசடி என்பது 2கி ஊழல் இல்லை, அது Demonetization தான். அதன்மூலம் தாங்கள் ஊழல் செய்த 'கறுப்புப் பணத்தை' 'வெள்ளை' ஆக மாற்றியது தான் பாஜக வின் திறமை. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று சொன்னார்கள் அல்லவா..அதற்கு அர்த்தம் புரிகிறதா.
இப்படி சட்ட நுணுக்கம் தெரிந்து, சாதகமான நிர்வாக கட்டமைப்பு உருவாக்கி, நூதனமாக மோசடி செய்வதால் தான் மோடி அரசின் ஊழல்கள் வெளியே தெரிவதில்லை. தெரிந்தாலும் ஆதாரம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உயிர் பிழைப்பதில்லை.
2016 ல் Demonetization நடந்தது.
2017 முதல் உலகிலேயே நம்பர் ஒன் பணக்கார கட்சியாக பாஜக மாறியது.
மற்ற தேசிய கட்சிகளின் மொத்த வருமானத்தை விட 66% அதிகம் பாஜக வின் வருமானம்.
எல்லோரும் அருண் ஜெட்லீ யையும், மோடியை யும் திட்டி தீர்த்து கொண்டிருக்கும் போது,
திரைமறைவில் இருந்து கொண்டு மிக பெரிய மோசடிகளை செய்தார் அமித்.
வரும்....
புதன் 02 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -87.....
சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா?
சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்..மத்திய அமைச்சர் நிதின் கட்கரி , சென்னை - சேலம்இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார்..
இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம் அமையவிருக்கும் சாலையானது
கார்ப்பரேட் நிறுவனமான# ஜிண்டாலுக்காக.. ( Jindal steel)
ஆம், ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது. அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.🥱
இரண்டாவது திருவண்ணாமலை மாவட்டம் கல்வராயன்மலையில்
இருந்து இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ,சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.
அது தான் இந்த சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை.இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும். நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது.இதற்கு தமிழக அரசும் உடந்தை. தயவு செய்து தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்த கூடுமானவரை # ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள், எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.தொடர்ந்து வரும் ஆபத்துகள்? தப்புமா தமிழகம்! உயிர்வாழ எங்கே செல்வார்கள் தமிழர்கள்? சேலத்தில் ஏன் விமான நிலையம் இப்போது தொடங்கப்பட்டது. இவையனைத்தும் இந்த பதிவில்...
மூனு மாதத்திற்கு ஒரு செயற்கை கோள் யாருக்காக இஸ்ரோ அனுப்புகிறது?
மிகச்சரியான இடத்தில் எப்படி மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பிளாட்டினம் திட்டங்கள் தொடங்கபடுகிறது.இந்தியாவிலேயே ஏன் உலக அளவில் அதிக அளவு பிளாட்டினம் நமது நாமக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல் மாவட்டங்கள் தான் அடுத்த இலக்கு. குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியில் 27 சதுர கிலோமீட்டர் அளவிலும் மேட்டுப்பாளையத்தில் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ளதாக...இந்திய புவியியல் ஆய்வுத்துறை இஸ்ரோவின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து தமிழக கனிம வளத்துறையுடன் (TAMIN) இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.
மிகக்குறைவாக 30 மீட்டர் ஆழத்திலேயே தாதுக்கள் அதிக அளவாக கிடைத்த நிலையில், 500 மீட்டர் ஆழத்தில் அதிக அளவிலான பிளாட்டினத்தாதுக்கள்கிடைப்பது உறுதி என நம்புகிறார்கள்.இதில் சத்தம்பூண்டியில் கிடைக்கபெற்ற
பிளாட்டினத்தாதுக்கள் 2500 முதல் 2700 மில்லியன் ஆண்டுகள் பழமையானமதிப்புமிக்கதாகும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ள பகுதிகளில் கூடிய விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.கொங்கு மண்டலமும் கொலையாக போகிறது தற்காத்து தப்பி பிழைத்திடு எம் தமிழினமே!
காசுக்கு ஓட்டு போட்டு அழிந்து போகாதே!
கடலுக்குள் போகக்கூடாதென்று! என்று கச்சதீவை விற்றுவிட்டார்கள் .காட்டுக்குள் போகக்கூடாதென்று நீயூட்ரினோக்கு விற்று விட்டார்கள்,காவேரிகரைக்கு போகக்கூடாது என்று மணலை விற்றுவிட்டாரகள்.
விவசாயம் செய்யக்கூடாது என்று ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டார்கள்
மருத்துவம் படிக்கவேண்டமென்று வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டார்கள்.
TNPSC எழுதக்கூடாதென்று தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டார்கள்.
நெல்லைக்கு போகாதே என்று ரஷ்ய அனுஉலைக்கு விற்றுவிட்டார்கள்.
தூத்துக்குடிக்கு வராதே என்று ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டார்கள்,
.இராம்நாடு போகாதே என்று அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டார்கள்,
தஞ்சாவூர்க்கு போகாதே என்று மீத்தேனுக்கு விற்றுவிட்டார்கள்.
நாகை வராதே என்று பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டார்கள்,
மலையேற வராதேன்று க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டார்கள்
வெள்ளயங்கிரி உனக்கில்லை என்று ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டார்கள்,
சதுரகிரி மலை விற்க விலை பேசிக் கொண்டுயிருக்கிறார்கள்,..
எந்த கருமத்தையும் கண்டுக்காமல் உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்...
உன் வாக்கை விலைகொடுத்து வாங்கியதை அவர்கள் லாபத்திற்கு விற்றுவிட்டார்கள்...
திங்கள் 30 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -86.....
சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலையும் போது - தவசி.
சினிமா வாய்ப்பு கிடைத்து புகழ் பெற்றபோது- தவசி தேவர்
மருத்துவமனைக்கு கட்ட பணம் இல்லாமல் உதவி கேட்டபோது- தவசி
மரணம் அடைந்த பின்- தவசி தேவர்
இவ்வளவுதான் சாதி..
கஷ்டப்படும்போது சரியான நேரத்தில் ஓடி வந்துருவாங்கே.......!!!
சனி 28 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -85.....
சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் யாருடைய நலனுக்காக? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan | Sastras
புதன் 25 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -84.....
mathimaran | suriya |
செவ்வாய் 24 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -83.....
#ஆரியம் நான்கு வருணம் என்கிறது....
#குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது....
#ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது....
#குறள் உழவனை போற்றுகிறது....
#ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன....
#குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது....
#பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்....
#இரந்து வாழின் உலகியற்றியவன் பரந்து கெடட்டும் என்கிறது குறள்.....
#மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்....
#மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்....
#ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு....
#குறள் பிரண்மனை நோக்காமையை பேராண்மை என்கிறது....
#வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது.....
#குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது....
#வேதம் விதி வலியது என்கிறது....
#குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது...
#வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது....
#குறள் எல்லோரும் கற்க சொல்கிறது...
#ஆரிய வேதம்=சுயநலம்.
தமிழரின் குறள்=பொதுநலம்
#வேதத்திற்கு எதிரானது குறள்..
#வாழ்க தமிழ்..!
#வாழ்க திருவள்ளுவர்..
#வாழ்க உலகப்பொதுமறையான #திருக்குறள்..
ஞாயிறு 22 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -82.....
சனி 21 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -81.....
[10:30 AM, 11/19/2020] Kaviraj Watsoff: மாட்டுக்கறியை எப்படி ருசியாகச் சமைத்து சாப்பிடுவது என்பதை வேதத்தில் சுலோகமாக எழுதிவைத்துவிட்டு, 'மாட்டுக்கறியைச் சாப்பிடுபவன் இந்துவே இல்லை' என்பது....
பெண்களின் உடைகளைத்திருடி, அவர்களை நிர்வாணப்படுத்திப் பார்த்த கிருஷ்ணனின் செயலை 'கிருஷ்ணலீலா'வாகப் போற்றிவிட்டு, கலாச்சாரத்தை அழிக்கறாங்க என்று Anti-romeo squad அமைப்பது....
கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 பேர்களுக்கும் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாடிவிட்டு, Homosex இந்துமதத்திற்கு எதிரானது என்பது....
தொல்குடிகளின் கடவுள்களையும் கோயில்களையும் திருடி திரிபுபடுத்திக்கொண்டு, அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி "உள்ளே வந்தால் தீட்டு" என்பது....
சூத்திரனுக்கு சொர்க்கமே இல்லை என வேதத்தில் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வருடமும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டு அவனிடம் பணம் சம்பாதிப்பது....
கடவுள…
[10:30 AM, 11/19/2020] Kaviraj Watsoff: #இந்துத்துவாஎன்றால்என்ன
மாட்டுக்கறியை எப்படி ருசியாகச் சமைத்து சாப்பிடுவது என்பதை வேதத்தில் சுலோகமாக எழுதிவைத்துவிட்டு, 'மாட்டுக்கறியைச் சாப்பிடுபவன் இந்துவே இல்லை' என்பது....
பெண்களின் உடைகளைத்திருடி, அவர்களை நிர்வாணப்படுத்திப் பார்த்த கிருஷ்ணனின் செயலை 'கிருஷ்ணலீலா'வாகப் போற்றிவிட்டு, கலாச்சாரத்தை அழிக்கறாங்க என்று Anti-romeo squad அமைப்பது....
கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த 60 பேர்களுக்கும் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாடிவிட்டு, Homosex இந்துமதத்திற்கு எதிரானது என்பது....
தொல்குடிகளின் கடவுள்களையும் கோயில்களையும் திருடி திரிபுபடுத்திக்கொண்டு, அம்மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி "உள்ளே வந்தால் தீட்டு" என்பது....
சூத்திரனுக்கு சொர்க்கமே இல்லை என வேதத்தில் சொல்லிவிட்டு, ஒவ்வொரு வருடமும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டு அவனிடம் பணம் சம்பாதிப்பது....
கடவுளின் பெயரால் வேதங்களிலும் புராணங்களிலும் செக்ஸ் கதைகளை எழுதிவைத்துவிட்டு, அதற்கு ஆன்மீக, அறிவியல் சாயம்பூசி மழுப்புவது....
பெண்கள் பாவ யோனியில் பிறந்ததால் சொர்க்கம் அடையமுடியாத பாவிகள் என எழுதிவைத்துவிட்டு, பெண்களை தெய்வமாகப் பார்க்கிறோம் என்று பெண்ணியம் பேசுவது....
பெண்களுக்குக் கல்வி கூடாது என்று மனுதர்மத்தில் சொல்லிவிட்டு, கல்விக்கு தெய்வம் சரஸ்வதி என்பது....
மதுவை (சோமன்) கடவுளாக வணங்கிக்கொண்டு, மதுவை ஒழிப்போம் என அரசியல் பேசுவது....
இந்துமதம் மற்ற மதங்களைப்போல ஒரு மதமல்ல, அது வாழ்வியல்முறை என்று சொல்லிவிட்டு மதக் கலவரத்தைச் செய்வது...
இதுதான் இந்துத்துவா...!
வியாழன் 19 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -80.....

ஓட்டு போடும் மகா சனங்களே!!
நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததீர்களே!!
பிஜே பி என்ற பயங்கரவாத கட்சி.......
அவர்கள் தங்களுக்கென்று.......
சொந்தமா # ஜனாதிபதி வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #நீதிபதி .! வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #தேர்தல்கமிசன் வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #ஓட்டுமிசினும் வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #சிபிஐ (CBI) வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #NIA அமைப்பினை வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...!
👉சொந்தமா #தலைமைசெயலர் வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா மத்திய #உளவுத்துறை (RAW) (IB) வைத்திருக்கிறார்கள்..!
சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SBI) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வைத்திருக்கிறார்கள்..!
இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வைத்திருக்கிறார்கள்..!
உங்களுக்கு பரிந்து பேச நீங்கள் யாரை வைத்திருக்கிறீர்கள்..
செவ்வாய் 17 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -79.....
ஓட்டு போடும்....மனிதர்க்கு.....
தேர்தல் என்ற பெயரில் தாங்கள்
இனியும் நீங்கள் முட்டாளாக ஆக வேண்டாம்
உங்களின் வரி பணத்தை கோடி
கோடியாக செலவு செய்து
இனி வரும் தேர்தலிலும் செலவு
செய்து வீணடிப்பார்கள் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்......
நீங்கள் ஓட்டு போட்டாலும்
போடா விட்டாலும் EVM மே
ஒருவரை தேர்ந்தெடுக்கும்..
இனியும் இந்தியா ஒரு
ஜனநாயக நாடு என்று
உங்கள் ஜனநாயக கடமையை
ஆற்றுங்கள் என்று ஊதி
பெறுக்கும் செய்தியை
நீங்கள் நம்ம வேண்டாம்
நீண்ட வரிசையில் நின்றாலும்
நீண்ட நேரம் காத்திருந்து
ஓட்டு போட்டாலும் உங்களுக்கு
கிடைப்பது என்னவோ
கையில் கருப்பு மைதான்
பல தேர்தலிலும் ஓட்டு
போட்ட உங்களுக்கு போடப்பட்டதோ
அடக்கு முறை சட்டங்கள்தான்..
நீங்கள் மாற்றத்துக்குதான் ஓட்டு
போட்டேன் என்று சொன்னாலும்
இதுவரை மாறவில்லை என்பதுதான்
உண்மை... அதனால்..
உங்கள் ஓட்டுக்கு எந்த
வலிமையும் இல்லை. அப்படியே
இருந்தாலும் EVM ஆல்
அந்த வலிமை உங்களுக்கு
இல்லாமல் ஆக்கப்படுகிறது..
ஆளுவதோ அதிகாரி
தீர்மானிப்பதோ அதிகாரி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு
என்று சொல்லிக் கொள்ள
இடையில் நீங்களும் உங்களின்
வாக்கு சீட்டும்......
முடிவு எல்லாம் அவர்கள்
கையில் இருக்கும்போது
உங்களுடைய வாக்கு
சீட்டு என்ன செய்துவிட முடியும்...
EVMயை எதிர்த்து................
வெள்ளி 13 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -78.....
| வே.மதிமாறன் பேச்சு | deepavali |
வியாழன் 12 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -77.....
TOTAL RECALL - PART 3|அதிமுக செய்த துரோகங்கள்|துயர சம்பவங்கள்|மெரினா புரட்சி|ஜல்லிக்கட்டு|#AdmkFails
புதன் 11 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -76.....
திங்கள் 09 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -75.....
"அதிமுக அரசின் பத்தாண்டு சாதனைகள்"
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தது.
தமிழ்நாட்டு காவல் துறை தலைவர் டிஜிபி அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்தியது.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி அதிமுக அரசு சாதனை செய்தது.
எட்டு வழிச்சாலை அமைந்த பின்னர் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சாலையை பூட்டு போட்டு பூட்டிவிடுவோம் என்று பேசியது.
எட்டு வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடிய போதும், யாருமே இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அப்பட்டமாக பொய் பேசியது.
நீதிமன்றம் உத்தரவிட்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நீதிமன்றத்தை பல ஆண்டுகள் ஏமாற்றியது.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் அக்கிரமங்களை 7 ஆண்டுகளாக வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது.
தூத்துக்குடியில் தனியார் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது.
தொழில்துறை சீரழிவு
நீட் தேர்வு
பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகளைஅவமதித்து தமிழ்நாட்டின் பொது அமைதியை குலைக்க நினைப்பவர்களுக்கு இடம் கொடுத்தது.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையில் இருப்பது.
குட்கா முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை சிபிஐ விசாரணையில் இருப்பது.
தன் கட்சியின் தலைவி சாவில் இருக்கும் மர்மத்தை விலகாமல் பார்த்துக் கொள்வது.
துணை வேந்தர் நியமனங்களில் கோடி கோடியாக ஊழல் நடைபெற்றுள்ளது என்று மாநில கவர்னரே கூறியது.
சுற்றுச்சூழல் துறை பொது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்று சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் தமிழ் புறக்கணிப்பு செய்யப்பட்டது.
அமைச்சர்கள் நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டது.
அரசு அமைப்புகளில் சாதி, மத போக்கு வெளிப்படும் அளவுக்கு நிர்வாகம் செய்தது.
கஜா புயல் பாதிப்பில் பொறுப்பற்று செயல்பட்டது.
மதிய உணவு திட்டத்தில் ஊழல் செய்தது.
கர்நாடகவில் மேகதாது அணை கட்ட ஒப்புதல் தந்த பாஜகவுக்கு பக்கபலமாக இருப்பது.
உலக முதலீட்டாளர் மாநாடு என்று ட்ராமா போட்டது.
நியாமான கோரிக்கைகளுக்கு போராடிய ஆசிரியர்களை பழி வாங்கியது.
செருப்பு முதல் பருப்பு வரை ஊழல் செய்தது.
முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டது.
⬇️ தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஊழல் செய்தது.
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைத்த பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவது.
பட்டாசு தொழிலை பாதுகாக்க தவறியது.
தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் திட்டமிட்டு புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு துணை போனது. குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வட இந்திய மாநிலங்கள் போல தமிழ்நாட்டை மாற்றியது.
மத்தியில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சியில் இருந்தும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை கேட்டு பெற துணிவு இல்லாமல் இருப்பது.
ஆட்சிக்கு வந்தும் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது.
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவின் அனைத்து தமிழர் விரோத போக்கு க்கும் துணை நின்றது.
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து தமிழர்களின் வேலை வாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்த்தது.
தமிழ்நாடு முழுவதும் ரோடு கான்ட்ராக்ட்டில் உறவினர்கள் மூலம் ஊழல் செய்தது.
தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
தமிழ்நாட்டு சுகாதாரத் துறையை 3 ஆம் இடத்திலிருந்து 9 ஆம் இடத்திற்கு தள்ளியது.
பதவியை காப்பாற்றிக் கொள்ள பாலத்திற்கெல்லாம் காவி நிறம் அடித்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது என்றது.
உலகத் தமிழ் மாநாட்டிற்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய மத்திய அரசின் ஒப்புதலுக்காக கை கட்டி நின்றது.
கோயில் சிலை கடத்தலில் அதிமுக அமைச்சர்களுக்கு சம்பந்தம் உள்ளது என்று சிறப்பு விசாரணை அதிகாரி அறிவித்தது.
முத்தலாக் மசோதாவை ஆதரித்தது.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டது.
பொது மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலையை பலமுறை உயர்த்தியது.
பேருந்து கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியது.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ஹிந்திக்கு வால் பிடித்தது.
கோலம் போட்டதற்கு கூட பொது மக்களை கைது செய்தது.
விலைவாசி உயர்வை ஆண்டவனாலும் கட்டுப்படுத்த முடியாது என்றது.
தமிழ்நாட்டின் நிதி உரிமையை யெல்லாம் மத்திய அரசிடம் அடமானம் வைத்தது.
தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டத்தை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது.
நெசவாளர்களை கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்கு கொண்டு சென்றது.
தமிழ்நாட்டின் கடனை ரூ.4 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உயர்த்தியது.
திமுக ஆட்சிக்கு பிறகு 9 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாதது.
தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களின் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றது.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அழிக்க நினைக்கும் பாஜக அரசின் திட்டத்திற்கு துணை போனது.
மாநிலங்களவையில் ஆதரவாக ஓட்டு போட்டதின் மூலம் சிஏஏ சட்டம் நிறைவேற காரணமாக இருந்தது.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மையை 5.3% உயர்த்தியது.
அண்ணா பல்கலைக்கழகத்தை சூறையாட மத்திய அரசுக்கு துணை போனது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க லஞ்ச் பிரேக்வுடன் உண்ணாவிரதம் இருந்தது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பறிபோனதை வேடிக்கை பார்த்தது.
சுகாதார பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் செய்தது.
இந்தியாவின் மருத்துவ தலைநகரமான சென்னையை கொரோனா வின் கோரப் பிடியில் தள்ளியது.
அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டு இடங்களை பாஜக அரசால் முறையாக ஒதுக்கப்படாத செயலை கண்டு கொள்லாமல் இருந்தது.
வருமானத்திற்காக கொரோனா காலத்தில் டாஸ்மாக்கை திறந்தது.
பள்ளிக்கூடங்களில் மதுபான விற்பனை டோக்கன் கொடுத்தது.
தூத்துக்குடியில் வேனில் ஏறி நின்று துப்பாக்கி சூடு நடந்தது என்பது கற்பனை என்று சொல்லியது.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு வேட்டு வைக்கும் மத்திய அரசின் செயலை வேடிக்கை பார்த்தது.
நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய சொன்ன நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது.
கொரோனா தொற்று தடுப்பு பணியிலும் ஊழல் செய்தது.
ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்து விட்டு விசாரணையே நடக்காமல் பார்த்துக் கொண்டது.
2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியே கேட்காமல் மண்டியிட்டு இருந்தது.
மாநிலத்தில் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.
அரசின் கடமைகளை சரிவர செய்ய முடியாமல் கடவுளை காரணம் காட்டியது.
பாரத் நெட் திட்ட டெண்டர்களை மத்திய அரசே ரத்து செய்யும் அளவுக்கு ஊழல் செய்தது.
காவல்துறையால் ஏற்பட்ட மரணத்தை, மூச்சுத்திணறல் மரணம் என்று பொய் பேசியது.
சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தது - 159 ஆண்டுகால இந்திய காவல் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவமானம்.
நியாமான கோரிக்கைகளுக்கு போராடிய மருத்துவர்களை மிரட்டியது.
கொரோனா காலத்தில் கூட மின்சார கட்டணத்தில் மக்களிடம் கொள்ளை அடித்தது.
கொரோனா பரவல் வேகத்தில் உலகத்திலேயே 2 வது இடம் பிடித்தது.
நாட்டிலேயே மிக மோசமாக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னையை மூன்றாவது இடம் பிடிக்க வைத்தது.
குட்கா புகழ் அதிமுக என்று பெயர் பெற்றது.
தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்களே காரணம் என பேசியது.
புதிய கல்விக் கொள்கை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க மறுத்தது.
7 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தை நடத்தாமல் ஏமாற்றியது.
கொரோனா நோய் தொற்றில் 43 மருத்துவர்கள் மரணத்தை மறுத்து பொய் பேசியது.
எளிதில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டை 14 வது இடத்திற்கு தள்ளியது.
தமிழ்நாட்டை கடுமையான நிதிச்சுமையில் தள்ளியது.
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பிய பாஜக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற மறுத்தது.
கல்வித்துறையில் மாற்றி மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்பியது.
கொரோனா மரணங்களை மறைத்தது.
⬇️ விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களுக்கு ஆதரவாக அதிமுக ஓட்டு போட்டு, அதை சட்டமாக்க பாஜக துணை நின்றது.
தமிழுக்கு துரோகம் செய்து, சம்ஸ்கிருதத்துக்கு பல்லக்கு தூக்குவதில் சரித்திர சாதனை படைத்தது.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டிலேயே கூறிவிட்டு அவர்களுடனேயே கூட்டணி வைத்து ஓட்டு கேட்டு வருவது.
ரேஷன் பொருட்களில் ரூ.1480 கோடி ஊழல் செய்தது.
⬇️ தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அப்பல்லோவில் இட்லி சாப்பிட்டது.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த முன்னாள் முதல்வருக்கு என்ன ஆனது என்றே மக்களுக்கு தெரியாமல் 72 நாளுக்கு பார்த்துக் கொண்டது.
மெரினாவில் மக்கள் கூடக் கூடாது என்று 144 தடை விதித்து பீச்சுக்கு லீவு விட்டது.
ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் அமைதியாக போராடிய இளைஞர்களை தீவிரவாதிகளாக சட்டமன்றத்தில் சித்தரித்தது.
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக செல்லாமல் மாமனார் வீட்டு கிடா வெட்டு விருந்துக்கு சென்றது.
தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வு ஊதியத்தை கேட்டு போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை சிறையில் அடைத்தது.
தமிழ்நாட்டு மக்களிடத்தில் வெறுப்பு உணர்வை தூண்டிய எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களை கைது செய்யாமல் பாதுகாத்தது.
ஒக்கி மற்றும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தர வேண்டிய நிவாரண நிதியை இதுவரை முழுமையாக கேட்டு பெறாமல் இருப்பது.
கலைஞரால் உருவாக்கப்பட்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெட்கமே இல்லாமல் எம்ஜிஆர் பெயரை சூட்டியது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு பணிகளில் மற்ற மாநிலத்தவரும் சேரலாம் என்று விதிகளை மாற்றி ஆணை பிறப்பித்து தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்தது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளி மாநிலத்தவரை துணை வேந்தராக நியமித்தது.
தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வு எழுத குஜராத், கேரளா போன்ற அடுத்த மாநிலங்களுக்கு அனுப்பியது மட்டுமில்லாமல், "கேரளா என்ன அமெரிக்காவிலா இருக்கு?" என்று ஆவணமாக கேள்வி கேட்டது.
பொள்ளாச்சி சம்பவத்திற்கு பிறகு, பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீரழித்து வைத்திருப்பது.
.
அதிமுகவும் திமுகவும் ஒன்னு தான் ன்னு ஒரு குரூப் பும்...
"ஐய்யய்யோ புண்படுத்திட்டாங்க... புண்படுத்திட்டாங்க" ன்னு ஒரு குரூப் பும்...
தமிழ்நாட்டில் கலவரம் பண்ண வேலை இல்லாமல் வேல் தூக்கிட்டு வருவானுங்க. அவனுங்கள பார்த்தால் கண்ட இடத்திலேயே துரத்தி அடிங்க.
எழுத்தாளர் - Babu K --------பாஜக - அதிமுக கூட்டுக்களவாணிகள்...
ஞாயிறு 08 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -74.....
இவாள் பண்ணா "சிலை திருட்டு"
அவா.. பண்ணா "சிலை மாயம்"
இவாள் பண்ணா "படுகொலை"
அவா... பண்ணா "ஜீவ சமாதி"
இவாள் பண்ணா "தீவிரவாத செயல்"
அவா... பண்ணா "கர சேவை"
இவாள் பண்ணா "வன்கொடுமை"
அவா.... பண்ணா "சில்மிஷம்"
இவாள் பண்ணா "ஊழல், வரி ஏய்ப்பு"
அவா... பண்ணா "சொத்து வழக்கு"
இவாள் பண்ணா "நிர்வாக சீர்கேடு"
அவா... பண்ணா "நிர்வாகக் குளறுபடி"
இவாள் பண்ணா "படுபாதக செயல்"
அவா... பண்ணா "சுய மைதுனம்"
ஹி....ஹி......ஹி.....ஹி....
-
வெள்ளி 06 2020
“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -73.....
சங்கரமடம் என்றால் - சல்லாபத்தின் கூடாரம். உபயம்: ஜெயேந்திரர்பற்றி எழுத்தாளர் அனுராதா ரமணன்
கோயில் என்றால் - காமக் களியாட்டப் பள்ளியறை, உபயம்: தேவநாதன்.
ஆசிரமம் என்றால் - ஆணுறைத் தொழிற்சாலை. உபயம்: சாமியார் ஆசாராம் (பகவான் கிருஷ்ணன் செய்ததைத்தான் நான் செய்தேன் என்று நீதிமன்றக் கூண்டில் ஏறி ஒப்புதல் வாக்குமூலம்)
பக்தி என்றால் - மூத்திரக் குட்டையில் குளிப்பது. உபயம்: மகா மகக் குளம் (28 சதவிகிதம் மலக்கழிவு - 40 சதவிகிதம் மூத்திரம் - தகவல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் (DT Next - 23.2.2018).
திருக்குறள் என்றால் - தீயகுறள். உபயம்: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
இதிகாசம் என்றால் - ஒரு பெண் 5 கணவர்! உபயம்: மகாபாரதம் (ஆறாவதாக கர்ணன் மீதும் ஒரு கண்!)
தமிழ் என்றால் - நீஷப் பாஷை. உபயம்: சங்கராச் சாரியார் (பூஜை வேளையில் நீஷ பாஷையாம் தமிழைப் பேச மாட்டார்; ஆதாரம்: ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பேட்டி - உண்மை 15.12.1980).
பகுத்தறிவு என்றால் - பித்தலாட்டம்! உபயம்: ‘துக்ளக்‘ சோ. ராமசாமி (ஆதாரம்: ‘துக்ளக்‘ பதில் 4.3.2009) குறிப்பு; மனிதனுக்குத்தான் பகுத்தறிவு அதா வது - ஆறாவது அறிவு; மிருகங்களுக்குத்தான் அய்ந்து அறிவு!
பிராமணன் என்றால் - பிச்சை எடுத்துச் சாப்பிட வேண்டியவன். உபயம்: காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி (ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரி யார் உபந்நியாசங்கள் - 'கலைமகள்' வெளியீடு)
காணிக்கை என்றால் - கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்பது. உபயம்: உண்டியலில் பணம்போட்டால் கடவுள் கேட்டதைக் கொடுப்பார் என்ற ஏற்பாடு.
ஒரு பிரதோஷ காலத்தில் சிவனுக்குக் கீழ்க்கண்ட பொருள்களால் அபிஷேகம் செய்தால் கைகண்ட பலன் உடனே கிடைக்குமாம்.
நல்லெண்ணெய் என்றால் - பக்தி, சுகம், நலம்தரும்.
திரவியம் பொடி என்றால் - கசடுகள் நீங்கிய நறுமணம் கமழும் (Body Spray).
தண்ணீர் (கங்கா) என்றால் - மனத் தூய்மை.
பச்சையரிசி, மாவு பொடி என்றால் - கடன் தீரும். குபேர சம்பத் கிடைக்கும். (மல்லையாக்களை நினைவு படுத்திக் கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல).
தேன் என்றால் - குரல் இனிமை.
கற்கண்டு என்றால் - ஒற்றுமை (கண்டிப்பாக சங்பரிவார்கள் இது மட்டும் செய்ய மாட்டார்கள்)
கரும்புச்சாறு என்றால் - தோஷம் - பிணி நீங்கும்.
சர்க்கரை என்றால் - பகை - எதிரிகள் ஒழிவர். (ஆம், கடவுள் கருணையே வடிவமானவர்).
பழ வகைகள் என்றால் - வியாபார முன்னேற்றம் (பழக்கடைக்காரர் பழங்களை அன்றே விற்காவிட்டால் நட்டம்தான் - பழம் அழுகிவிடுமே)
பஞ்சாமிர்தம் என்றால் - நீண்ட ஆயுள், உடல்பலம், பெறும். (அய்.பி.எல். கிரிக்கெட்காரர்களின் கவனத் துக்கு...)
தயிர் என்றால் - குழந்தைப் பாக்கியம், உடல் வலு (ஸ்டெரிலிட்டி மய்யங்கள் தேவையில்லை).
இளநீர் என்றால் - ராஜயோகம்.
நெய் என்றால் - முக்தி, சுகவாழ்வு.
விபூதி என்றால் - சகல ஞானமும் கைகூடும் (‘நீட்’ பயிற்சிக்கெல்லாம் செல்ல வேண்டாம்).
சந்தனம் என்றால் - குளிர்ச்சி உண்டாகும்.
பன்னீர் என்றால் - சரும நோய்கள் தீரும். (Skin Speciality Click)
ஸ்வர்ணாபிஷேகம் என்றால் - ஆபரணம் அணி கலன்கள் மற்றும் லட்சுமி கடாட்சம். உபயம்: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் தலைக்காவேரி புகழ் ஜெயேந் திர சரஸ்வதி.
இதோ ஆதாரம் பேசுகிறது:
குமுதம்: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல் கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்க ளுக்குக் கடவுளின் மீது உள்ள பக்தி போய் விட்டதா?
ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அநேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடு கிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவ தற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பண மும் - அதிகரித்துள்ளது. ('குமுதம்', 12.9.1996).
மேலும் ஆதாரம் வேண்டும் என்றால் அதே ஜெயேந்திரரையே அழைக்கலாம். காஞ்சிபுரத்தில் 1976 மே மாதம் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் பேசும்போது ஜெயேந்திரர், பக்தி ஃபேஷனாகி விட்டது. பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது” என்று சொல்ல வில்லையா?
சிவனுக்கு இன்னின்ன பொருள்களால் அபி ஷேகம் செய்தால் இன்னின்ன பலன்கள் கிடைக்கும் என்பது கொடுக்கல் - வாங்கல் பிசினஸ்தானே.
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...









