பக்கங்கள்

செவ்வாய் 31 2013

மரணத்தில் வென்ற மாவீரர்கள்........................



பகுத்தறிவை பரப்பியதற்க்காக நஞ்சருந்தி கொல்லப்பட்டார் சாக்ரடீஸ்
kuttybala4165.blogspot.com -


இந்திய சுதந்திரத்திற்க்காக போராடியதால் தூக்கில் போடப்பட்டார் பகத்சிங்.


www.vinavu.com -












ஆங்கிலேயனை எதிர்த்த போரில் வீரர்களுடன் வீரராக செத்துக் கிடந்தார் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான்
படம் .வினவு.
கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் நக்சல்பாரிக் கவிஞர் சரோஜ் தத்தா
www.luckylookonline.com -





















திங்கள் 30 2013

2013ம் ஆண்டின் இந்திய (அ) நீதிமன்றத்தின் நீதி(பதி)களின் (அ)யோக்கிய சுவடுகள்........



பிப்ரவரி 9. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்பட்டவர் அப்சல் குரு. என்பவர்.

அப்சல் குரு , குற்றவாளி அல்ல என்பதற்க்கான தடயங்கள்.சாட்சிகள், மற்றும் வாக்குமூலங்கள் போன்றவற்றை.எவற்றையுமே பரிசிலிக்காமல்

பினையில் விட்டால் சாட்சியங்களையும் தடங்களையும் அழித்துவிடுவார். என்று கூறி பினை மறுக்கப்பட்டு ஒரே வருடத்தில் விசாரனை நடத்தப்பட்டு   இந்திய நீதி மன்றத்தால் தூக்கிலேற்றப்பட்டவர்.
                                           ------------------------------



நவம்பர் 27. அதே இந்திய (அ) நீதி மன்றம்.  சங்கர மடத்தின் கொள்ளையர்களான  கொலைகாரர்கள். சங்கரராமனை கொலை செய்தற்க்கான  தடயங்கள்,சாட்சியங்கள்,மற்றும் வாக்குமூலங்கள்  போன்றவைகள் ஆனித்தரமான ஆதாரங்கள் இருந்த போதும்.

பினையில் விட்டால் சாட்சிகளை கலைப்பார், தடயங்களை அழிப்பார் என்று கண்கூடாக தெரிந்திருந்தும்  பினை வழங்கப்பட்டது.

கொலைக்குற்றவாளிகள்.தங்கள் வழக்கை புதுச்சேரிக்கு மாற்றக்கோரி மனு செய்தபோது.தலை வணங்கி நமஸ்கரித்து ஏற்றுக் கொண்டு ,புதுச்சேரி  நீதி மன்றதுக்கு மாற்றியது.

  கொலையான சங்கரராமனின் (பாதிக்கப்பட்டவர்கள்) மகள் புதுச்சேரி நீதி மன்றத்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது. அதனால் வழக்கை சென்னைக்கே மாற்றக்கோரி மனு செய்த போது,மனுவை ஊதாசீனப்படுத்தி,நிராகரித்து

கொலைகாரர்களான ஜெயேந்திரன்,விஜயேந்திரன் உட்பட அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின் அனைவரும் சமம் என்று ஊளையிடும் இந்திய (அ)நீதி(பதி)கள் நிறைந்த (அ)நீதிமன்றம்.

2013ம் ஆண்டில் இந்திய நீதியின் சுவடுகள் .................

1.சங்கரராமன் கொலை வழக்கில், கொலை குற்றவாளிகளுக்கு நீதி விற்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகளால் நீதி வாங்கப்பட்டுள்ளது.

2. அப்சல் குரு வழக்கில்,  குற்றமற்றவர் தூக்கலிடப்பட்டு,நீதி மறுக்கப்பட்டுள்ளது.

3. ஜெயலலிதா வழக்கில், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்று மொத்த ஆட்சி காலத்தில் ரூபாய் 60/- மட்டுமே பெற்றவர். 66 கோடி சொத்து சேர்த்த வழக்கில் நீதி தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய (அ) நீதி மன்றத்திலே...................தனியார்மயம்.தாராளமயம்,உலக மயத்தால் நீதியும் வியாபாரமாக்கப்பட்டுள்ளது.





ஞாயிறு 29 2013

யானையை புடுச்சு பானைக்குள் அடக்க முயலும் கேச்ரிவால்....



ஆமஆத்மியின்  டெல்லிமுதல்வர்  ராம்லீலா மைதானத்தில் இருந்து டெல்லி வாழ் மக்களுக்கு யானையை புடிக்க ஒரு வழி சொல்லியிருக்கிறார். இப்படி.................

மக்களே!  உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். லஞ்சம் வாங்குவோரை  திருத்த (தண்டிக்க அல்ல) ஒரு வழி வைத்திருக்கிறோம். நாங்கள் இரண்டு நாளில் போன் நம்பர் தருவோம், அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

எந்த இடத்தில் நீங்கள் போனாலும்.அங்கு யாராவது லஞ்சம் கேட்டால்..உடனே, அங்கேயே உட்கார்ந்து லஞ்சம் தர தயராக இருங்கள். எங்கள் லஞ்ச ஒழிப்பு படை வந்து கையும் களவுமாக பிடித்து விடும்

அப்புறம்........................

அப்புறமென்ன.......................யானையை புடிச்சு பானைக்குள் அடைத்த கதைதான்......................

ஐஐடி யில் மெக்கானிக் படித்த மூளைக்கு ஒரு வழி தெரிந்தால்.......... லஞ்சத்திலே ஊறி கொளுத்து வளர்ந்துள்ள யானைக்கு எத்தனை வழி தெரிந்திருக்கும்.............

லஞ்ச ஒழிப்பு படையே லஞ்சம் வாங்குவது தெரியாத ஐஐடி முதல்வர் லஞ்ச யானையை பிடித்து பானைக்குள் அடைக்க போகிறாராம்.

கேப்பையில் நெய் ஒழுகிறது என்று நம்பும்  கேனையர்களாக இருக்குவரை.இப்படிபட்ட கூத்துகளும் நடக்கும்தான்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாத்துகிறவர்கள் இ.இ..இருப்பார்கள்.இதுவும் ஐஐடி மூளை சொன்னதுதான்....                                                                                                    


சனி 28 2013

99 சதவீத மக்களின் சாவை தீர்மாணிக்கும் மனிதக் கடவுள்கள்..................


கார்லோஸ் சிலிம், பில் கேட்ஸ்
மெக்சிக பெருமுதலாளி கார்லோஸ் சிலிம்மும், அமெரிக்க பெருமுதலாளி பில்கேட்சும் (படம் : நன்றி rt.com).


உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பெரும் கோடீஸ்வரர்களான இந்த மனிதக் கடவுள்கள்களே!!!.......... உலகத்திலுள்ள 99 சதவீத மக்களின் சாவுகளை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்த 99 சதவீத மக்கள் என்ன சாப்பிடவேண்டும், எப்படி வாழ வேண்டும்,  என்ன செய்ய வேண்டும், எங்கே வெளிக்கு போக வேண்டும். எப்படி சாக வேண்டும். என்று அனைத்தையும் பிளான் போட்டு , இந்த கோடீஸ்வரர்களே !தீர்மானிக்கிறார்கள். அன்றி........தங்கத்தேரில் உலாவரும்  ,கற்சிலை கடவுளும் அல்ல..... மனக்கோட்டையில் குடி புகுந்துள்ள கற்பனைக் கடவுளும் அல்ல.

இந்தக் கோடீஸ்வர கடவுள்கள்கள் தங்களிடமுள்ள பணத்தை கஜனாவில் பூட்டி வைப்பதில்லை. கஞ்சிக்கு செத்தவர்களுக்கும் படியளப்பதுமில்லை. தவமிருந்து வேண்டும் பக்தனுக்கு  அவதாரம் எடுத்து அருள் பாவிப்பதுமில்லை

இந்த மனிதக்கடவுள்கள்ர்கள்  மட்டும். உலகில் அனைத்து சுகபோகங்களை அனுபவிப்பதற்கும்  பல அவதாரங்களையும் லீலைகளையும்  எடுப்பதற்கும் அனுபவிப்பதற்கும்  சக்தியும் உரிமையும் பெற்றுள்ளது

பெரிய மாளிகையில் வாழும் கடவுளர்களுக்கு. இந்த மாளிகை போதாதென்று சொந்தமாகவே தீவுகளை வாங்குறது. கப்பல்களிலும்,ஜெட் விமானிங்களிலும் பவனி வந்து குதுகாலிக்கிறது.

,ஏக்கம்,கவலை,இல்லாமை போன்ற எதற்கும் கவலை இல்லாமல் இந்தக் மனிதக் கடவுள்கள்,சாவு வரும்வரைக்கும் திருப்தியான சந்தோசத்தில் மிதக்கிறது.

 உலகத்தையே ஆளும் இப்பேர்ப்பட்ட   முதற்கடவுளர்கள்...........

பெரும்பாலும் நிதி மூலதன பெரு நகரங்களான நியூ யார்க் நகரங்களில் 99 சதவீதமும்,‘ஹாங்காங்கில் 75 சதவீதமும், மாஸ்கோவில் 74 சதவிதமும் லண்டனில் 67 சதவீதமும் .இந்த மனிதக் கடவுள்கள் வசிக்கிறது.

 மேற்கண்ட இடங்களில் வாழும் ஒரு சதவீதம்கூட இல்லாத இந்தக் சனிப் பகவான்கள்தான் உலகத்திலுள்ள 99 சதவீத மக்களை  அவர்களுக்கு தெரியாத,புரியாத வண்ணம் ஆட்டி படைத்து வருகிறது..

நன்றி!! வினவு.

,




வெள்ளி 27 2013

மூக்காண்டியானவர் ஜீவானந்தமாக மாறிய கதை.......



திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த பூதப்பாண்டி என்ற ஊரில் பொதுப்பணித்துறை உள்ள  பாசன துறையில் பணிபுரிந்த பட்டன் என்பவருக்கும் உமையம்மையான என்ற பட்டன் மனைவிக்கும்
மூன்றாவதாக பிறந்ததினால் மத நம்பிக்கையில் மூக்காண்டி என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டார்.

“பரத்வாத்” ஆசிரமத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த காலத்தில்.
பெரியாரின் வர்ணாசிரம போராட்டத்தால் வெளியேறிய மூக்காண்டி

சிறு வயல் செல்வந்தரான காசி விசுவநாதர் உதவியுடன் “காந்தி ஆசிரமம்” என்ற புதிய ஆசிரமத்தை உருவாக்கி,அதன் பொதுச் செயலராக செயல்பட்டு வந்த காலத்தில்தான்

“மூக்காண்டி ”என்ற தனது பெயரை “ஜீவானந்தம்” என்று பெயர் மாற்றிக் கொண்டார். தற்போது இந்திய வலதுகளின் தானைத்தலைவராக கொண்டாடப்படுகிறார்.

புதன் 25 2013

தேநீர் விற்றவர் பிரதமரானால்...நாட்டை விற்கமாட்டார் என்பதற்கு உத்திரவாதம் உண்டா.....??ஃ



veyilaan.com 




















நாட்டை விற்பவர்களை விட தேநீர் விற்பவர் மேல் என்றார் ஒரு கட்சி அறிவித்த பிரதம வேட்பாளர் ஒருவர்.

நாட்டை விற்றவர் யோக்கியதைகள் கொள்ளைக்கு முதலிடமும் கொலைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்கள்

ஆனால், தேநீர் விற்றவர் யோக்கியதைகள் கொலைக்கு முதலிடமும், கொள்ளைக்கு அடுத்த இடமும் கொடுத்தவர்

தேநீர் விற்பவரின்  தொழில் யோக்கியதை என்னவென்று , தேநீர் குடித்த அநேகம் பேர்களுக்கு தெரியும். இருந்தாலும் என் அனுபவத்தை சொல்கிறேன்.

கொஞ்சுன்னு பால், நிறைய தண்ணி,  தேநீரில் அதிக தண்ணீர் இருப்பது தெரியாமல் இருப்பதற்க்காக தேயிலைத்தூள் கலந்த கலவை,இத்துடன்
சிறிது சீனி...........

ஒரு கிளாசில் கால்அளவே உள்ள தேநீரை...சர்ர்ர்......சர்ர்....ரென்று ஆற்றி  நுரையை பெருக்கி முழு கொள்ளவு கொண்ட தேநீரா...........ஆக்குவது.

இதோடு பார்சல் தேநீர் என்றால். சீனியை குறைத்து போடுவது...அல்லது போடாமல் விடுவது. கூடுதலாக சுடுதண்ணிரையும் தேயிலைத்தூள் கலவையை  ஊற்றுவது.

படி அரிசியில் முனி அரிசி சோமாறுவது மாதிரிதான் தேநீர் விற்பதும்.

இப்படி. தேநீர் விற்று கல்லாவை நிரப்பிய வியாபாரி. நாளை பிரதமரானால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற நாட்டையும் விற்க மாட்டார் என்பதற்கு உத்திரவாதம் உண்டா..........???

தேநீர் விற்ற வியாபாரின் குணம்தான் மாறாமல் இருக்குமா.......???

உலக வங்கியில் பண்ணி மேச்ச  அதிகாரியே..........நாட்டை ஏலம் போட்டு விற்ற  வியாபாரியாக மாறிவிட்டபோது...............

வியாபாரி குணமுள்ள தேநீர் வியாபாரி, பிரதமராகி............வியாபாரத்தை வரிவுபடுத்த எண்ணி>  ஏற்கனவே உள்ள  முன்னால் உலக வங்கி வியாபாரியை முந்த வேண்டி அவனுக்கு நான் இளச்சவனா என்ற கோதாவில் இறங்கி..... நாட்டை கூவிக் கூவி விற்கமாட்டார்  என்பதற்கு உத்தரவாதம்தான் உண்டா.................???

குடிகாரன் பேச்சு........விடிந்தால் போச்சு என்பது மாதிரி, தேநீர் வியாபாரி தற்போது பேசிவரும் பேச்சு................. பிரதமராக ஆகி பிரதான வியாபாரியாக மாறிவிட்ட பிறகு முன்ன பேசிய பேச்சும் பின்னதில் இருக்குமா.......??
கானாமல் போகும்மா.............என்பதற்க்காவது உத்திரவாதம்தான் உண்டா.............???


செவ்வாய் 24 2013

தனுஷ்கோடிக்கு மேளம் கொட்டும் பத்திரிக்கை வியாபாரிகள்..........




பிரதமர் வேட்பாளரை, தேர்தல் வருவதற்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே அறிவித்து கல்லா கட்ட முயலும் ஒரு கட்சியான பாரதீய கட்சியின்

தமிழக தலைவரான பொன்னான ராதாவின் கிருஷ்ணன் . விதைத்தா முளைக்காமலா போகும் என்ற ரீதியில்.

அடுத்த பிரதமர் மோடிதான் என்றும், கூடவே மோடி பிரதமரானால் இராமேஸ்ஸ்வரம் புனித தீவாக அறிவிக்கப்படும்.என்ற வாயோடு

மத்தியில் பா...ஜ ஆட்சிக்கு வந்தால்..தனுஷ்கோடிக்கு ரயில் விடப்படும்.மற்றும் நான்குவழிச்சாலை போக்குவரத்து வசதிகள் ஏற்ப்படுத்தப் படும் என்று அள்ளி வீசியவுடனே..................

தமில்நாட்டு செய்தி பத்திரிக்கை நிறுவன வியாபாரிகளெல்லாம் கனஜேராக சேர்ந்து “ 49 ஆண்டுகளாகியும் புதுப்பொழிவு பெறாத தனுஷ்கோடி” என்றும்

“நினைவலைகள்” என்றும்

“இரவில் சூழ்ந்த கொடுங்கதை” என்றும்  தங்களோட பத்திரிக்கையில கொ்ட்டோ கொட்டுன்னு  மேளம் கொட்டிட்டாங்க.........

ஏற்கனவே, சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தாயராக இருக்குது

 இதுல வேற செங்கோட்டை டூ தனுஷ்கோடின்னு எக்ஸ்பிரஸ் விடப் போறாங்க..............

மோட்சத்துக்கு போறவங்க எல்லாம் தயாரா இருங்கன்னு சொல்லாதது ஒன்னுதான்.

 

திங்கள் 23 2013

இப்போது காயம் சூரணம் மாத்திரைகளிலும் கிடைக்கும்.!!!!

ayurvedamaruthuvam.blogspot.com 













அமெரிக்காவை மடக்குவதற்கும்
 பிரச்சனை அடங்குவதற்கும்
சங்கீதாவை அடக்குவதற்கும்......
இப்போது காயம் சூரணம்
மாத்திரைகளிலும் கிடைக்கும்.

ஞாயிறு 22 2013

தூதர் தேவஆனி விவகாரத்தால்,ஜனநாயகமாக நடக்கும் முதல் நாடு அமெரிக்...காவா?இந்தி...யாவா?ஃ




உலகின் ஜனநாயக நாடுகளாக பீத்திக் கொள்ளும் அமெரிக்காவும் இந்தியாவும்

தூதர் தேவஆனி யின்   மறுபக்கம் எதுவாக இருந்தாலும்,
பணிப்பெண் சங்கீதா சிஐஏ எஜென்டாகவே இருந்தாலும்

உலகின் முதல் ஜனநாயக நாடான அமெரிக்கா, பணம்,பதவி,அந்தஸ்து,இனம் ஆகியவற்றுக்கு மசியாமல்,குற்றம் சாட்டப்பட்டவர் எம்மாம் பெரிய்ய்ய ஆளாக இருந்தாலும் தன் நாட்டு சட்டதிட்டபடிதான் நடவடிக்கை எடுக்கிறதா....???

உலகில் பெரிய்ய்ய்யா.....ஜனநாயக நாடான இந்தியா, பிரதமரே.........ஆனாலும், உச்சி குடுமி மன்ற நீதிபதியே ஆனாலும் கஞ்சிக்கு வழியில்லாமல் வாடி வதங்கி வீதியோரம் படுத்திருக்கும் பிச்சைக்காரனே ஆனாலும் “ சட்டத்தின் முன் அனைவரும் சமம.” என்ற தன் நாட்டு சட்டதிட்டபடிதான் நடவடிக்கை எடுக்கிறதா..........???

உலகில் முதல் ஜனநாயக நாடும்,பெரிய்ய்ய..ஜனநாயக நாடும, எந்தவித சுயலாப நோக்கமின்றி,பிளாக்மெயில் திட்டம் எதுவுமில்லாமல் உண்மையாக நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் முதல்நாடு அமெரிக்காவா???இந்தியாவா..?

முதலாளிகளின் ஜனநாயகத்தை உச்சானி கொம்பில் தூக்கி வைத்து உச்சா கொட்டி பஜனை பாடும் அறிஞர்களும்,வல்லுநர்களும்,தாசானு தாசர்களும் முதலாளிகளின் ஜனநாயகத்தை ஏற்றி போற்றி காக்கும் அத்துணை தூண்களும் பதில் சொல்லனும்  அமெரிக்காவா? இந்தியாவான்னு??

சனி 21 2013

இனி, திருமலை ஏழுமலையான் “ஸ்டைல்” காரில்தான் பவனி வருவான்...

திருப்பதி ஏழுமவையான் ,பக்த  கோடிகளுக்கு தேரில் பவனி வந்து அருள் பாலித்தது   சலித்துபோன காரணத்தால்.

ஒரு சேஞ்சுக்கு, ஏழுமலையான்,அசோக்லேண்டுன் துனைத்தலைவர் வழங்கிய 9.5 இலட்சம் பெருமானமுள்ள புதிய தயாரிப்பான “ஸ்டைல்” காரில்தான் பவனி வந்து பக்த கேடிகளுக்கு அருள் பாவிப்பான்.

அவனவன் சர்ர்ர்..........புர்ர்ர்..........னு போயிகிட்டு இருக்கயில............ஏழமலையான் மட்டும் ஆடி அசைந்தா போகனும்.............

ஏழு மலையானே.................ம்ம்ம்................ம்ம்ம.................ம்ம்ம்

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட "ஸ்டைல்' கார்.

வெள்ளி 20 2013

மாடு தின்னும் புலையா.......... உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா.....-? கேட்கிறது ஒரு அறிக்கை

inioru.com 


பரமக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி சம்பத் கமிசன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையானது ஜெயா ஆட்சியின் தேவர் சாதிவெறி பாசத்தை தோலுரித்து காட்டிவிட்டது.

“மாடு தின்னும் புலையா...........உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா” என்று  காலம் காலமாக ஆதிக்கச் சாதியினரால் கேட்கப்பட்ட ,அதே குரலைத்தான் சம்பத் கமிசனும் எதிரோலித்திருக்கிறது.

மேலும் படிக்க.. புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 இதழை பாருங்கள்.

வியாழன் 19 2013

அதென்ன ..லோக்(கு)பால்.................



வாலிபால் -புட்பால்
விளையாடிய வர்களுக்கு
தெரியும்......................

கிரிகெட்பால்-சிக்ஸர்பால்
பார்த்தவர்களுக்கு
தெரியும்......................

மாட்டுப்பால்- ஆட்டுப்பால்
குடித்தவர்களுக்கு
தெரியும்................

“அதென்ன லோக்(கு)பால்”......

பார்ஆளும் மன்றத்திலும்
சட்ட மன்றத்திலும்
சொகமாய் படுத்து
புரளும் பன்றிகளுக்கு
தெரியும்...................

படி அரிசியில் முனி அரிசி
சோமாறும் சோமாறிகளுக்கு
தெரியும்......................

படி அளக்காமல்
மொத்தமாய்  பதுக்கும்
பதுக்கல் பேர்வழிக்கு
தெரியும்................

எல்லாப் புகழையும்
மொத்தமாய் அள்ளும்
பெரிசு அன்னா கசரேவும்
ஆத்மி கேசரி வாலுக்கும்
தெரியும்.................

 “லோகபால் நிறைவேறியது”

புரட்சி திட்டமுனு
சொல்லித் திரிந்த
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்

பல்லு போயி
ஒன்றிரண்டு சொத்தை
பல்லைக்காட்டி.
கொண்டு நிக்க
மாட்டாமல் நிக்குது.

இந்த லோக்(கு) பாலும்
லோக்கு பால் அல்ல
லாக்கு பால்லுன்னு
சந்தி சிரிக்கத்தான்
போகுது...................

செவ்வாய் 17 2013

அதிலிருந்து இதிலோ.............இதிலிருந்து அதிலோ்........சிறுகதை


tamil.yahoo.com 












ஒரு வாரத்துக்கு மேல் கடுமையான வேலை,அந்த வேலையின் காரணமாக நேரத்துக்கு சரியாக உணவு உண்ணமுடியவில்லை,  நல்ல தூக்கமும் இல்லை

வேலையை முடித்த மறுநாள் இரவில் பயங்கரமான.தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வயிற்று வலி.

என்ன செய்தும் வலியை குறைக்க முடியவில்லை.நேரம் இரவு 12 மணிக்கு மேல்,பக்கதில் இருக்கும் கிளினிக் எதுவும் இல்லை. அரசு மருத்துவமனையோ தூரத்தில் உள்ளது.

அப்படியே,அரசு மருத்துவமனைக்கு சென்றாலும்  உடனடியாக கவனித்து விட மாட்டார்கள்.“ இந்நேரத்தில் வந்து ஏன்டா ?எங்க உயிர வாங்குறீங்க!”என்று
திட்டுவார்கள். வேறு வழியில்லை என்றும்  கெஞ்சினால் நோயாளியை  ஓரமாக சாய்த்து வைக்கச் சொல்லுவார்கள்.

காசும்மாச்சு,மயிருமாச்சு, இரவும்பகலுமா வேலை பார்த்த காசைக் கொண்டு.ஆட்டோவைப் பிடித்து, சற்று தூரத்தில் இருந்த 24 மணி நேர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவிர் சேர்த்து சிகிச்சை செய்யப்பட்டது.

உள் நோயாளியாக தங்க வைக்கப்பட்டுதினசரி 3 அல்லது 4 குளுகோஸ் பாட்டிலுடன் ஊசியும் ஏற்றப்பட்டு.மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. வயிற்றை பட்ம் பிடித்து பார்த்தில் குடல்களில அதிகமான புண்கள்., கேன்சராக ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பிவிட்டதாக வழி மொழியப்பட்டது. தினசரி  காலை மாலை மருத்துவரும் செவிலியர்களும் வந்து பார்வையிட்டனர்..

வசூல்ராஜாவானர் ஏழை நோயாளிடம் விசாரனை செய்தார்.

“தண்ணி அடிப்பிங்களா?”

“இல்ல,சார்”

“பாக்கு போடுவிங்களா? ”

“இல்லசார்”

“பீடி.சிகரெட் ..........”

சிறு வயதிலிருந்து எந்தப் பழக்கமும் இல்ல சார்.”

”அன் மேரிடா”

“ஆமாம் சார்”

“ஏன்”

“அது பெரிய கதை சார்,”

வசூல்ராஜாவானர். அந்த நோயாளியை ஆச்சரியமாய் பார்த்தார்.

“தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்திருந்தால்,வெறும் வயிற்றில் தண்ணி அடித்தால் குடல் வெந்து போகும் என்ற பயத்தில் பாரில் விற்கும் சிக்கனையோ,அல்லது முறுக்கையோ ஏதாவது ஒன்றை உள்ளே தள்ளி இருப்பீர்கள்..”

அங்கு கொடுக்க வேண்டியதை , மொத்தமாய் இங்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

“ தண்ணி அடிப்பதெற்கெல்லாம்,  தினசரி வருமாணம் இல்லை.சார்,

“இப்ப மட்டும் பணம் எப்படி வந்தது.” “ எப்படித்தான் நீங்கள்  இருந்தாலும்.
“அதிலிருந்து இதிலோ.........இதிலிருந்து அதிலோ............”தப்பிக்கவே முடியாது என்பதை புரிஞ்சிக்கிங்க.............என்றார் வசூல்ராஜா.


வயிற்றுவலி குணமாகி வீட்டிற்கு வந்த போது, கடன் கொடுத்தவர்கள் நலன் விசாரிக்க வந்தபோது தான் தெரிந்தது. இராப்பகலா உழைத்து சம்பாதித்த பணமும் போயி,மேற்க்கொண்டு கடனும் எகிறி இருப்பது.

இனி, கடனை அடைக்க உழைப்பு, ஆஸ்பத்தரி செலவு, திரும்பவும் கடன்......உழைப்பு.......

இப்போதுதான் எனக்கு புரிந்தது.என் மண்டை தரையில் சாய்கிற வரைக்கும்..“

“அதிலிருந்து இதிலோ......இதிலிருந்து அதிலோ........ .தப்பிக்கவே முடியாது என்று”

திங்கள் 16 2013

மார்கழி மாத யோக்கியர்கள் வருகிறார்கள்...........!!!...

panippulam.com 

மார்கழி மாதம் பிறந்து விட்டாலே.பதினோரு மாத அயோக்கியர்கள் எல்லாம் ஒரு மாத்த்திற்கு யோக்கியர்கள் வேடம் தரித்து விடுகிறார்கள்.

என்னென்ன அயோக்கிய தனங்கள் இருக்கிறதோ அத்துனை தனங்களிலும் புகுந்து விளையாடியவர்கள், புதிய அயோக்கிய தனங்களுக்காக இந்த ஒரு மாதத்தில் யோக்கியர்களாக வலம் வருகிறார்கள்.

அதிகாலையில் எழுந்து குளிரில் நீராடி நெற்றியில் பட்டையிட்டு.மார்கழி மாத சீருடை அணிந்து. காட்சி அளிப்பார்கள். நாங்கள்தான் மார்கழி மாத யோக்கியர்கள் என்று பறை சாட்டுவார்கள்.

சாஸ்திரப்படி பதினோறுமாத பாவம் ஒரு மாதத்தில் தீர்த்துவிடுமாம். பதினோறு மாதம் கடவுளை நிணைக்காதவர்கள். ஒரு மாதத்தில் நிணைத்தால் பதினோறு மாத பலன் கிடைக்குமாம். அந்த ஒரு மாதத்தில் பலன் கிடைத்தவுடன் அடுத்த பதினோறு மாதத்தில் பழைய புதிய அயோக்கிய தனங்களில் ஈடுபாட்டாலும் அதனால் கெடுதல் ஏற்ப்படாதாம்.

கடலில் மீன் பெருக தடைகாலம்  இருப்பது மாதிரி, பதினோறு மாத அயோக்கிய தனங்கள் செய்யும் அயோக்கியர்களுக்கு மார்கழி மாதம் தடைகாலம்.

 சாதராண அப்பிராணி குடுமபங்களைச சேர்ந்தவர்களுக்கு இந்த மார்கழி மாத தடைகாலத்தை பற்றி அவ்வளவாக தெரிய வாய்பில்லை என்றாலும் அவர்களும் இந்த மார்கழி மாத தடைகாலத்தை இப்படி பயன் படுத்துகிறார்களாம்

பதினோறு மாதம் குடியே கதியின்னு கிடப்பவனை,மார்கழி மாத அயோக்கியர்கர்களின் தடைகாலத்தை பயன்படுத்தியவது ,குடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற நப்பாசையில்  பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

பழைய பழமொழியான “யோக்கியன் வாரான், செம்பை எடுத்து உள்ளே வை ”என்பதை

இப்படிக் கூறலாம்............

”மார்கழி மாத யோக்கியன் வாரான். செல்போனை எடுத்து உள்ளே வை” என்று

“ மார்கழி மாதத்து யோக்கியர்கள் வருகிறார்கள்  மாராப்பை  இழுத்து மூடிவை”


தொடர்புடைய பதிவு.http://valipokken.blogspot.com/2013/01/11-1.html
11மாத அயோக்கியர்களும் ஒரு மாத யோக்கியர்களும்

ஞாயிறு 15 2013

நாய்களும் .........மனிதர்களும்.............

www.tamilaustralian.com.au












நாய் ஒன்று பழைய
தெருவிலிருந்து புதிய
தெருவுக்கு வந்தது.

புதிய தெருவில்
பழைய நாயொன்று
புதிதாய் வந்த
நாயை கண்டது

சட்டென எழுந்து
தன் கோரப் பற்களை
காட்டி குரைத்தது.

உர்ர்ர்............உர்ர்ர்...
லொள்ள்ள்.....லொள்

ஒரு நாய் குரைத்ததும்
பல நாய்களும்..........
சேர்ந்து குரைத்தது.

லொள்.லொள் லொள்
லொள்..லொள்..லொள்

வந்த நாயோ சற்று
பலமுள்ளது அதுவும்
தன் வீரத்தை காட்டியது

உர்ர்ர்ர்ர............உர்ர்ர்ர்ர்
உர்ர்ர்ர்ர.............உர்ர்ர்ர்ர்

புதிய தெருவிலே
இருந்த பழைய
நாயும்-பழைய
தெருவில் இருந்து
வந்த புதிய
நாயும் ஒன்றுடன்
ஒன்று மோதின.

பழைய தெருவில்
இருந்து புதிய
தெருவுக்கும்
புதிய தெருவில்
இருந்து பழைய
தெருவக்கும்
போய் கொண்டும்
வந்து கொண்டும்
 இருந்த மனிதர்கள்

நாயின் சத்தத்தை
கேட்டும் அதன்
பற்களை கண்டும்
எட்டடி தள்ளி
சென்று பதினாறு
அடி வேகத்தில்
கடந்தார்கள்........

டாஸ்மாக் குடி
மக்களோ போதை
தெளியாத சாக்கில்
தூரத்தே நின்றனர்.

பழைய தெருவென்ன
புதிய தெருவென்ன
நாய்களை ப் போல
மனிதர்களும் குரைப்பதால்
தானே, “நாயே”
நாய்களே...........
என்று பட்டம்
வாங்குகிறார்கள். 

சனி 14 2013

அதிகாரி வீட்டு கோழி முட்டை,ஏழை வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்!!!

ta.wikipedia.org -

tamilvelibkp.blogspot.com
சென்னை திருவானமியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குநர்(ஏ.டி.ஜி.பி) வெங்கடேசன் என்பவர்.இவரது மனைவி ராணி முன்னால் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர். இவர்களின் மகள் பியூலா உயர் போலீசு அதிகாரி, மருமகன் சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர். ராஜேஸ்தாஸ்.- இவர்கள பங்களா வீட்டு முன் இருந்த முருங்கை  மரம் ஒன்று மழையால் ஒடிந்து கீழே விழுந்துள்ளது.

 அதே திருவானமியூலுள்ள சேரிப்பகுதியைச் சேர்ந்த செல்வம் அவரது மனைவி சக்தி. இவர்கள் இருவரும், அந்த முறுங்கை மரத்தில் இருந்த முருங்கை காயையும் கீரையையும் கொஞ்சம் பறித்தற்க்காக.........

மேற்படியான  முன்னாள் போலீசு குடும்பம் கொடுத்த புகரால்..“ பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டி தாக்கி காயப்படுத்தும் பிரிவான 385-ல் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை பெறக்கூடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உயர் போலீசினால் அழுத்தம் தரப்பட்டதால், இன்ஸ்பெக்டர்,2 எஸ்ஐ,10 போலீசு கொண்ட படையே  இருவர் மீது நடவடிக்கையில் இறங்கியது.

ஓட்டு கேட்டு வாங்கி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணி வெங்கடேசனோ, “நூறு கோடி திருடினாலும்,முருங்கைக்காய் திருடினாலும் திருட்டு திருட்டுதான் என்று முழங்குகிறார்..........


அதே சென்னையில்.அடகுக்கடைக்காரான நிக்ஷாசந்த் என்பவரிடமிருந்து ,திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி 203 கிராம் தங்கத்தை பறித்து சென்றார்  போலீசு தலைமைக்காவலர் சம்பத் என்பவர்.

 தங்கத்தை பறித்து சென்ற மயிலாப்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சம்பத் மீது அடகுகடைக்காரர் புகார் செய்தார். பாசக்கார போலீசோ சம்பத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனால் அடகுக்கடைக்காரர் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். உயர் நீதி மன்றமோ வழக்கு பதியச்சொல்லி உத்தரவிட்டது.. அந்த உத்தரவை மதிக்கவில்லை அதனால் அடகு கடைக்காரர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தொடுத்தார்.

 வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றமோ, தலைமைக்காவலர் ஓய்வு பெறும் வயதை காரணம்காட்டி  அவரை மன்னித்துள்ளது.


சில முருங்கைகாயையும் முருங்கை கிரையையும் பறித்ததற்க்காக இருவருக்கு  இரண்டு வருட வழக்குப்பிரிவில்  சிறை,  203 கிராம் தங்கத்தை பறித்தவரான போலீசுக்கு மன்னிப்பு

இதுதான் சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லுகின்ற ஜனநாயகத்தின் மகிமை..

இதுமாதிரியான ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அதிகாரி வீட்டு கோழி முட்டை ஏழை வீட்டு அம்மிக்கல்லை இப்படித்தான் உடைக்கின்றது.


நன்றி! புதியஜனநாயகம் டிச.2013 இதழ்





வெள்ளி 13 2013

இவரு வேற மாதிரி.....................




நிழலில் நல்லவராக,
கெட்டவர்களை அழிக்கும
வல்லவராக,அநியாயத்தை
தட்டிக் கேட்கும் உத்த
மனாக நடித்தவரு................

நிஜத்தில். ........
குடி குடியை மட்டுமா
கெடுக்கும். குடிப்பவரும்
அல்லவா குடிக்காத
மக்களையும்  குடிக்க
சொல்லி குடியை
கெடுக்கிறார்....

தெருவுக்கு தெரு
கடையை திறந்து
இருக்கும்போது
குடிப்பதில் என்ன
தப்புன்னு குடிப்பதை
நியாயப் படுத்தும்
முற்போக்கு கட்சி
அதுக்கு ஒரு தலைவர்............

வருபவனுக்கெல்லாம்
ஓட்டு போடு வதையே
உரிமையாக கொண்டாடும்
பரதேசிகளுக்கு எப்போது
தான் புரியும்.. ............................

இவரு வேற மாதிரி என்பது.

புதன் 11 2013

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் இடையில் குல்லாக்கண்டனும்

படம் இந்நேரம்காம்.











முன்னோரு காலத்திலே்
நடாறுமாசம்...........
காடாறு மாசம்முன்னு
நாட்டை ஆண்ட.
பட்டி விக்கிரமாதித்த
ராஜா கதையைப்போல.

இருபத்தியோராம்
நூற்றாண்டில்-கார்பரேட்
இந்திய நாட்டை விடாக்
கண்டன் காங்கிரசு
அஞ்சு வருசமும்
கொடாக்கண்டன்
பிஜேபி அஞ்சு வருசமும்
மாறிமாறி ஏலம் போட்டு
ஆண்டு வந்த காலத்திலே.....

விடாக்கண்டன் ஆண்ட
போதும்சரி........கொடாக்
கண்டன் ஆளும்போதும்
சரி,நாட்டில் பாலாறும்
தேனாறும் ஓடவில்லை.

இவ்விரு கண்டன்களுக்கு
மத்தியில் நாட்கள் ஓடிக்
கொண்டு இருக்கையில்
இடையில் ஒரு குல்லாக்
கண்டன் வந்தாலும்..........

தண்ணிரின்றி வற்றிப்
போன நாட்டில் தேனாறும்
பாலாறும் சர்ரென்று
பாய்ந்துதான் வந்திடுமா..........????.....

திங்கள் 09 2013

வர்னாசிரமத்தை எதிர்த்த பெரியாரும், பாதுகாத்த அரைஆடை பக்கிரியும்,

படம். மதிமாறன்.



















நெல்லை மாவட்டம் சேரன் மாதேவியில் “பரத்வாஜர் ஆசிரமம்” என்ற பெயரில் ஒரு குரு குலத்தை நடத்தி வந்தார் வா.வே.சு.அய்யர் என்பவர்.

காங்கிரஸ் கட்சி கொடுக்கும் நிதியில் நடத்தப்பட்ட ஆசிரமத்தில் பிராமனாள் சாதியை சேர்ந்த மாணவர்களுக்கு தனியாகவும், மற்ற சாதியை சேர்ந்தவர்களுக்கு தனியாகவும் வர்னாசிரமத்தின் அடிப்படையில் தனித்தனியாக உணவு பரிமாறப்பட்டு வந்தது.

இதைக் கேள்விப்பட்ட ,அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார். இந்த அநீதிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தினார்.

பெரியார் நடத்திய போராட்டம் விஸ்வருபம் எடுத்ததை சரி கட்டுவதற்க்காக அரைஆடை பக்கிரியானவர். ஒரு சமரசத் தீர்வை முன் வைத்தார்.

“ஏற்கனவே,அதாவது முன்பே  குரு குலத்தில் சேர்ந்திருந்த மாணவர்களுக்கு தனித்தனியாகவும்,இனிமேல் சேருகின்ற மாணவர்களுக்கு ஒன்றாகவும் உணவு பறிமாறலாம் என்பதே அந்தத் தீர்வு”

அரை ஆடை பக்கிரியின் இந்தத் தீர்வானது. வர்னாசிரமத்தை பாதுகாக்கவே பயன்படும். வர்னாசிரமத்தை ஒழிக்காது  சம தர்மத்தை படைக்காது என்று பெரியார் ஏற்றுக் கொள்ள மறுத்து , அரை ஆடை பக்கிரியின் தீர்வைஎதிர்த்தார்.

இந்தியாவில் வர்னாசிரமத்தை பாதுகாத்தவர்தான் இந்தியாவின் மகா ஆத்மாவாம்.

உள்ளங் கையிலே சீனி என்று எழுதி  வைத்து,அதை நக்கி பார்க்கும்போது இனித்தால் மகாஆத்மா என்று நம்பலாம்.




சனி 07 2013

பயபுள்ள இப்பவாவது களத்துல குதிக்குமா குஜராத்தீ...............???

370வது பிரிவு குறித்து மோடியை விவாதத்துக்கு அழைக்கும் ஒமர் அப்துல்லா
இந்நேரம்காம்






பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சமீபத்தில் பொதுகூட்டம் ஒன்றில் 370 பிரிவின் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரியிருந்ததை தொடர்ந்து அப்பிரிவு சம்பந்தமாக சர்ச்சை வெடித்தது.
மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 370 பிரிவு குறித்து மோடியுடன் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் தாம் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ளார். மோடியை நோக்கி ஒமர் அப்துல்லா பகிரங்க விவாத அழைப்பு கொடுத்துள்ளார்.

பயபுள்ள சவாலை ஏத்துகிட்டு களத்துல குதிக்குமா??????????ஓடி ஒளியுமா..........?????

வெள்ளி 06 2013

“தெரு மறிச்சான்” என்னவென்று தெரியுமா..............???

கிராமங்களில் உள்ள ஊர்க்கோயில்களில் திருவிழா கொண்டாட தொடங்குவார்கள்.

அந்த ஊர்க்கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய வீதிகளை மறித்து தடுப்பு ஒன்று வைக்கப்படும். அந்த தடுப்புகளுடன் கூடவே ஒரு அறிவிப்பும் செய்யப்படும்

“திருவிழா முடியும் வரை,தீண்டத்தாகதவர்களும்,தாழ்த்தப்பட்டவர்களும் இந்தப் பகுதிக்குள் நுழையக்கூடாது. மீறினால் தண்டனை நிச்சயம் .என்று.

இதைத்தான் “தெரு மறிச்சான்” என்பார்கள்.

“இப்படி ஓர் அறிவிப்பை பகிரங்கமாக வைக்கும் அளவுக்கு”, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்தது.

 இன்றும்  அதன் தொடர்ச்சி, பல்வேறு வடிவங்களில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


பூரிக்கட்டை அடி வாங்கும் பிரபல பதிவர்......???

அவர் தமிழில் பிரபல பதிவர்.  வெளி உலகத்தில்.அதாவது வெளி நாட்டில் ஒர்க் செய்கிறார். நகைச்சுவைக்கும் மகிழ்ச்சிக்கும் ஒன்றும் குறைவில்லை.

இருப்பினும் அந்த பிரபல தமிழ்பதிவர்க்கு ஒரே சிறப்பு அப்பப்ப பூரிக்கட்டையால் அடிவாங்குவதுதான்.

கவுண்டமணி ஒரு படத்தில் வெளியே உதார்விட்டு,வீட்டிலே மணைவியிடம் கைமுறுக்கப்பட்டு செம அடி வாங்குவது மாதிரி  இல்லாமல்,

தான் பூரிக் கட்டையால் அப்பப்ப அடி வாங்குவதை ஒளிவு மறைவு இல்லாமல் கொட்டி பதிவிடுவதால், இவரைப்போல் அடி வாங்கும் ஆண்கள்  நாம மட்டும் அடி வாங்கவில்லை. பிரபலமே அடி வாங்குது என்று ஆறுதல பட்டுக் கொள்ளலாம்.

வாழ்க! பூரிக்கட்டைகள்!! வளர்க! பிரபலங்கள்.!!!

 இன்னுமா .....அந்தப் பிரபல பதிவர் யாரென்று தெரியவில்லை.........???

தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லூங்கள்.




வியாழன் 05 2013

தீயா பேரு வாங்கனும் ஓம் சக்தி சேகரு.................

சிதம்பரம் நடராஜன் கோயிலை களவானிகள் தீட்சர்களிடம் நோகாமல் ஒப்படைக்க வழிவகை செய்யும்  பார்ப்பன பாசிச ஜெயா அரசையும்.சகுனி சு.சாமி, சோ மற்றும் ஆர்.எஸ்.எஸ. உள்ளிட்ட இந்து பரிவார கும்பல்களை அம்பலப்படுத்தியும்   எதிர்த்தும் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் துண்டு அறிக்கை கொடுத்து பிரச்சாரமும், மனித உரிமை பாதகாப்பு மையம் , உச்ச நீதி மன்றத்தில் நடத்தும் வழக்கு செலவுக்காக மக்களிடம் நிதியுதவி கேட்டும் இயக்க வேலைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த இயக்க வேலையினை புதுச்சேரி புஜதொமு தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பொழுது.புதுச்சேரியின் அகில இந்திய அணைத்து திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் திருடனான ஒம்சக்தி சேகர்.

திடிரென்று பாப்புலராகி அதன் மூலம் அம்மாவின் பாதம் தொட்டு.அம்மா காலால் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்விக் கொள்ள வேண்டும் என்ற எச்சிகலை தனத்தினால் தன் பரிவாரங்களுடன் வந்து அடாவடி செய்துள்ளான்.


பார்க்க   http://www.vinavu.com/2013/12/05/admk-mla-attacks-ndlf-workers/


ஆத்தாவே.......ஒவ்வொரு ஊர்லேயும்,ஒவ்வொருத்தரு மேலேயும் ஒன்னுக்கு முக்காலா அவதூறு வழக்கு போட்டு இருக்கு............ புதுச்சேரி திருடனோ.அது தெரியாமல்..............

தீய்யா பேரு வாங்கனும் ஒம்சக்தி சேகரு...................ஆத்தா..
போடும் எலும்பு துண்டை மொத ஆளா கவ்வனும் செகரு............என்ற புது தெனவெட்டுல  மப்ப காட்டுறாரு...........................

புதன் 04 2013

அதிக நாள்வாழ ஆசையா....?



என் போன்றோர்க்கு அம்மாவாகவும்,  இளைஞர்-இளைஞிகளுக்கு பாட்டியாகவும் 93 வயதிலும் 50 வகையான  யோகாசனங்களை செய்து வியக்க வைக்கிற  கோவை கணபதியை  சேர்ந்த நானம்மாளை கேளுங்கள். அதன் இரகசியத்தை,............

செவ்வாய் 03 2013

ஊருக்கு இளைத்த ஆண்டிமடத்து பிச்சைகாரர்களுக்கு எச்சரிக்கை!





சகல விதமான ஊருக்கு இளைத்த ஆண்டிமடத்து பிச்சைகாரர்களுக் கு  இந்தீய ஜன்நாய்க தேர்தல் கமிஷன் மண்டி எச்சரிக்கை!!!

நடக்க இறக்கும் ஸனநாயக ஏற்க்காட்டுத் தேர்தலில் ஓட்டுப் பட்டனை பார்ப்பதற்கும் தொடுவதற்கும் , பணமாகவோ.பொருளாகவோ, பிச்சை பெற்றாலோ...............வாங்கினாலோ............ அடுத்து பிச்சையே எடுக்க முடியாதபடியும்  ஒரு வருட ஜெயில் தண்டனையும் வழங்கப்படும்

ஆளும் கட்சியோ,ஆளாத கட்சியொ பிச்சையிடுவதற்க்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 5கோடிக்கும் மேலான பணம்,தங்கம்,வெள்ளி பொருட்கள் பறி முதல் செய்யப்படும்

அவர்கள் மீது வழக்கு தொடர,முதலில் ஓலை அனுப்பி, பிறவு ஒரு வருடம் கழித்து பதில் ஓலை வராததை தெரிந்து, பத்து வருடங்கள் கழித்து வழக்கு தொடர்ந்து, இரண்டு நூற்றாண்டுகால அளவில் வாய்தா போட்டு, மூன்று நூற்றாண்டுகால அளவில் விசாரனை நடாத்தி, நான்காம் நூற்றாண்டில் சொல்லும் தீர்ப்பீன் அடிப்படையில் .ஓட்டு போடுவதற்க்காக ஆண்டிமடத்து பிச்சைக்காரர்களுக்கு பிச்சையிட்ட கட்சியின் மீது ஜன்நாய்க பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, கொள்ளையடிக்க வள்ளல்கள்  பிச்சையிடும்போது,அதை ஆண்டிமடத்து பிச்சைக்காரர்கள் பெறுவது தெரியவந்தால், அதுபற்றி 0000000
கட்டணமில்லா தொலை பேசியில் தெரிவிக்கலாம்.


(குறிப்பு..தகவல் தெரிவித்தவர் மேல் வழக்கும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படாமாட்டது)

திங்கள் 02 2013

பெரியாரின் புத்திசாலியானசிஷ்யரும்...பின் கூமுட்டைகளும்.............

படம்.மதிமாறன்
















ஒரு மாநாட்டில் பெரியார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது ஒரு பேச்சாளர். அடுக்கு சொல்லில் அலங்கார வார்த்தைகளில் பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கி போய்விட்டார்.

அந்த பேச்சை கேட்ட பெரியார். தன் சிஷ்யர் சங்கரய்யாவை அனுப்பி,அந்தத் தம்பியை அழைத்து வாரும் என்றார்.

சிஷ்யர் சங்கரய்யவோ. தேடித்தேடி அலுத்து போயி, பெயரை மட்டும் தெரிந்து கொண்டு பெரியாரிடம் வந்து நின்றவர் “ அய்யா, அந்த இளைஞன் யரென்று தெரியவில்லை,அவன் பெயருகூட... மறந்து விட்டது .மன்னிக்கனும் என்றார்.

அது கேட்ட,பெரியார்.“ நாசமா போச்சு,....ஏன்யா......பேர கேக்கவா,இவ்வளவு நேரம். அலைஞ்ச? கூட்ட அமைப்பாளரிடம் கேட்டா தெரிஞ்சு போகுது.!! என்றார்.

பெரியார்  இருந்தப்பவே..... அம்புட்டு அறிவாளிக இருந்தானுக...........

இன்னிக்கு அவர் பெயர சொல்லியும் சொல்லாமலும்.வசதியாக அவர்  போராட்டத்தை மறைத்துவிட்டு  அவர் சேர்த்து வைத்த சொத்துக்கும் பேருக்கும் உரிமை கொண்டாடியும்  பார்ப்பானின் காலை நக்கி கழுவுறதுல புத்தி கெட்ட சிஷ்யர்களும் குட்டி குழுமானுமாக பெருகிட்டானுங்கப்ப்பா............

அதுக்கு அச்சராமா..காஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னாவும்,தில்லை நடராஜர்கோயிலை தீ்ட்சர் வசமும் வழங்கப் போறாங்கே

  சொன்னா .. முறத்தால புளியை விரட்டிய கூமுட்டைகளுக்கு கோபம் வேறு வருது.............................

ஞாயிறு 01 2013

“அண்ணாச்சி நீங்களா..!..!!, நல்லா இருக்கியளா”.....???...........


மேடைtuticorin-meeting-against-sand-mafia-11



கடலோர கிராம மக்கள் நீண்ட தொலைவிலிருந்து பொதுக் கூட்டத்தைக் காண வந்து கொண்டிருப்பதால், அவர்களின் வசதி கருதி கூட்டம் 5:30 மணிக்குத் துவங்கும் என்றது அறிவிப்பு. சரியாக 5:30 மணிக்கு கூட்டம் துவங்கியது.
7000 பேர் கூடிய அந்தக் கூட்டத்தில் ஒரு காட்சி...........
நாங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த கும்பலை நோக்கிச் சென்றோம். எப்படி கோஷம் போடுவது, என்ன கோஷம் போடுவது என்று திட்டமிடாமல் வந்திருந்தனர். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் கத்தித் தீர்த்தனர். சிலர் வைகுண்டராசன் வாழ்க என்றனர், சிலர் நாடார்களைப் பற்றிப் பேசாதே என்றனர், மொத்தம் 40 பேர் வரை இருக்கலாம். தினத்தந்தியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பொறுப்பாக வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் – புரிந்து கொள்ள முடிந்தது. அந்த கும்பலில் நின்று ஆவேசமாக கத்திக் கொண்டிருந்த ஒருவரை ஏட்டு ஒருவர் விளித்தார்,
“யேல நீ இங்கெ என்னலெ செய்த?”
“அண்ணாச்சி நீங்களா, நல்லா இருக்கியளா” என்று அவரை நெருங்கியவன், தன் கையிலிருந்த செல்போனில் எதையோ காட்டி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பின் மீண்டும் கூட்டத்தோடு சேர்ந்து ஆவேச முகம் காட்டத் துவங்கினான். தொழில்முறை நெருக்கமாக இருக்கலாம்; நமக்குத் தெரியவில்லை.
 மீண்டும் மேடையை நோக்கித் திரும்பினோம். மேடைக்கு வலது பக்கவாட்டில் சிறு கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், “இன்னிக்கு நல்லா வசமா மாட்டுவானுவனில்லா பாத்தேன், ஓடிட்டானுவளே” என்ற தேனீர் கடைக்காரரிடம் மளிகைக் கடைக்காரர்.
 பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தோழர்களை சுட்டிக்காட்டினார், “அந்தா பாருவே கைல எந்தாம் பெரிய கம்பு வச்சிருக்காவன்னி… அந்த தெள்ளவாரிப் பயலுவ மாட்டியிருந்தா பல்லைக் களத்தி கையில குடுத்து அனுப்பியிருப்பாவ” என்று சிரிக்கத் துவங்கினார். பக்கத்திலிருந்த பலரும் அதை ஆமோதித்து சிரித்துக் கொண்டனர். மேடையில் வெவ்வேறு கடற்கரை ஊர்களைச் சேர்ந்த கமிட்டி பிரதிநிதிகளும் தலைவர்களும் உரையாற்றத் துவங்கியிருந்தனர்.

மேற்கண்டவைகள் .
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை அம்பலப்படுத்தும் போஸ்டர்கள் தூத்துகுடி நகரத்தின் சுவர்களெங்கும் முற்றுகையிட்டிருந்தன. “தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்!” – என்கிற முழக்கங்களோடு

வி.வியை எதிர்த்து வி.வியின் கோட்டையான தூத்துக்குடியில்  நடந்தஒரு பொதுக்கூட்டத்தில் நடந்த கதையில் சிறு காட்சி.

நன்றி! வினவு.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...