பக்கங்கள்

ஞாயிறு 28 2025

வாழ்வும் பரிதாபத்துக்குரிய மரணமும்

 



எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.


இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும். ஆனால் நேரம் சீக்கிரம் கடந்து விடும்.


வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது. கொல்ல முடியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும், உறுமும். இறுதியில் கழுதை புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும்.


அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கங்கள் உயிரோடு இருக்கும் போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்னும் கழுதைப்புலிகள்.


பொதுவாக  இள வயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும்.


இதுதான் உலகம் இது தான் வாழ்க்கை.மிகவும் குறுகிய காலக்கட்டமான, இந்த வாழ்க்கை மிகவும் தற்காலிகமானது.


அந்த தற்காலிகத்தை சிங்கங்களில் மட்டுமல்ல. வயதான மனிதர்களின் வாழ்க்கைகளிலும் பார்க்கலாம். நீண்ட காலம் வாழ்ந்து இறுதியில் வலிமையற்று வீழும் ஒவ்வொரு உயிரிலும் பார்க்கலாம். 


இந்த உலகில் நிரந்தரம் என்று ஒன்றுமில்லை. காதல், ஆற்றல், தகுதி, திறமை ஆகிய அனைத்தும் காலத்தால் அழியும்..அல்லது  காணாமற் போகும்.


 இது இயற்கையின் விதி.....

ஞாயிறு 21 2025

ஹிட்லருக்கு முன்பே ஆப்பிரிக்காவை நரகமாக்கிய இரண்டாம் லியோபோல்ட்!

 

வரலாறு மன்னிக்காத கயவன் இரண்டாம் லியோபோல்ட்




உலக வரலாற்றில் மிகக் கொடூரமான சர்வாதிகாரிகள் யார் என்ற கேள்வி எழுந்தாலே, நம் நினைவுக்கு வருவது ஹிட்லர், முசோலினி அல்லது போல் பாட் போன்றவர்கள்தான். ஆனால், இவர்களுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு முழு தேசத்தையும் தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றி, அங்குள்ள மக்களை அடிமைகளாக நடத்தி, சுமார் ஒரு கோடி பேரை கொன்று குவித்த ஒருவனைப் பற்றி வரலாறு பெரிதாகப் பேசுவதில்லை. 


அவன் பெயர் இரண்டாம் லியோபோல்ட் (Leopold II). பெல்ஜியம் நாட்டின் மன்னன்.


ஐரோப்பாவில் ஒரு நாகரிகமான மன்னனாக வலம் வந்துகொண்டே, ஆப்பிரிக்காவின் இருதயப் பகுதியான காங்கோவை ஒரு ரத்த பூமியாக மாற்றிய அவனது கதை, மனித குலத்தின் மீதான அழியாத கறை.


1880-களின் காலகட்டம். ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளைப் போட்டிப்போட்டுக்கொண்டு ஆக்கிரமித்த காலம் அது. ஆனால், லியோபோல்ட் கையாண்ட முறை வித்தியாசமானது. அவன் போர் செய்து காங்கோவைக் கைப்பற்றவில்லை; மாறாக, நயவஞ்சகமான பேச்சுக்களால் உலகத்தையே ஏமாற்றினான்.


1884-1885 இல் பெர்லினில் நடந்த மாநாட்டில், உலகத் தலைவர்களிடம் லியோபோல்ட் ஒரு வாக்குறுதி அளித்தான். 


"ஆப்பிரிக்காவின் காங்கோ மக்களிடம் நாகரிகம் இல்லை, அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நான் அவர்களுக்குக் கல்வி தருகிறேன், மருத்துவ வசதி செய்கிறேன், கிறிஸ்தவ மதத்தைப் பரப்பி அவர்களை நல்வழிப்படுத்துகிறேன். எனக்கு லாபம் எதுவும் வேண்டாம், இது ஒரு அறக்கட்டளை போன்றது," என்று நாடகமாடினான்.


இதை நம்பிய உலக நாடுகள், காங்கோவை அவனிடம் ஒப்படைத்தன. இங்குதான் மிகப்பெரிய கொடுமை நடந்தது. பொதுவாக ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பிடித்தால் அது அந்த நாட்டின் காலனியாக இருக்கும். ஆனால், லியோபோல்ட் காங்கோவை பெல்ஜியம் நாட்டின் காலனியாக ஆக்கவில்லை. ஒட்டுமொத்த காங்கோ தேசத்தையும், அதாவது பெல்ஜியம் நாட்டை விட 76 மடங்கு பெரிய பரப்பளவு கொண்ட ஒரு தேசத்தை, தனது ‘தனிப்பட்ட சொத்தாக’ அறிவித்தான். அதற்கு அவன் வைத்த பெயர் 'காங்கோ சுதந்திர அரசு' (Congo Free State). ஆனால், உண்மையில் அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியது.


ஆரம்பத்தில் யானைத் தந்தங்களை வேட்டையாடி கொள்ளையடித்த லியோபோல்ட், 1890-களின் இறுதியில் தனது கவனத்தைத் திசை திருப்பினான். காரணம், உலகம் முழுவதும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. டயர் தயாரிப்பதற்கு 'ரப்பர்' அத்தியாவசியமானது. அதிர்ஷ்டவசமாக காங்கோ காடுகள் ரப்பர் மரங்களால் நிரம்பியிருந்தன. உலகச் சந்தையில் ரப்பரின் விலை தங்கத்தை விட வேகமாக ஏறியது.


லியோபோல்டுக்கு காங்கோ மக்கள் மனிதர்களாகத் தெரியவில்லை; பணம் சம்பாதித்துக் கொடுக்கும் இயந்திரங்களாகவே தெரிந்தார்கள். அவனது பேராசைக்கு ஈடுகொடுக்க, காங்கோ மக்கள் ஒவ்வொருவரும் தினமும் குறிப்பிட்ட அளவு ரப்பரைச் சேகரித்துத் தர வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.


ரப்பர் சேகரிப்பது எளிதான காரியம் அல்ல. அடர்ந்த காட்டுக்குள் சென்று, மரங்களில் ஏறி, அந்தப் பாலைச் சேகரித்து, உடம்பில் பூசிக்கொண்டு, பின்னர் அதை உரித்து எடுப்பது என்பது வலி மிகுந்த செயல்முறை அது.


இதை மக்கள் செய்ய மறுத்தால், லியோபோல்டின் தனியார் ராணுவமான 'ஃபோர்ஸ் பப்ளிக்' (Force Publique) களமிறங்கும். அவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து, பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடிப்பார்கள். ஆண்கள் காட்டுக்குள் சென்று நிர்ணயிக்கப்பட்ட அளவு ரப்பரைக் கொண்டுவந்தால் மட்டுமே, அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள். இல்லையெனில், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்.


கட்டளையை மீறுபவர்களுக்கு 'சிக்கோட்' எனப்படும் நீர்யானையின் தோலால் செய்யப்பட்ட சவுக்கடியால் தண்டனை வழங்கப்படும். இந்தச் சவுக்கு ஒரு மனிதனின் சதையைக் கிழித்து எலும்பு வரை ஊடுருவக்கூடியது.


லியோபோல்டின் ஆட்சியில் நடந்த மிகக் கொடூரமான விஷயம் ஒன்று இருக்கிறது. அவனது ராணுவத்தில் பணிபுரிந்த வீரர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் வழங்கப்படும். ஆனால், கிளர்ச்சி செய்யக்கூடும் என்ற பயத்தில், "ஒவ்வொரு தோட்டாவிற்கும் கணக்குக் காட்ட வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருந்தது.


அதாவது, ஒரு வீரன் ஒரு தோட்டாவைச் செலவழித்தால், அவன் ஒரு எதிரியைக் கொன்றுவிட்டான் என்பதற்கு ஆதாரமாக, கொல்லப்பட்டவனின் வலது கையை வெட்டிக்கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.


பல நேரங்களில், வீரர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடத் தோட்டாக்களைப் பயன்படுத்திவிடுவார்கள். பிறகு மேலதிகாரிகளிடம் கணக்குக் காட்டுவதற்காக, உயிரோடு இருக்கும் அப்பாவி கிராம மக்களின் கைகளை வெட்டி எடுத்து வருவார்கள். இதில் பச்சிளம் குழந்தைகள் கூடத் தப்பவில்லை. 


"என் தோட்டாவிற்கு கணக்குக் காட்ட வேண்டும், உன் கையைக் கொடு" என்று உயிரோடு இருப்பவனின் கையை வெட்டுவது என்பது மனிதத்தன்மையின் உச்சகட்ட வீழ்ச்சி.


பல கிராமங்களில், கூடைக் கூடையாக வெட்டப்பட்ட கைகள் அதிகாரிகளின் மேஜையில் குவிக்கப்பட்டன. ஒரு தந்தை, தனது ஐந்து வயது மகளின் வெட்டப்பட்ட கை மற்றும் காலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி, பிற்காலத்தில் உலகத்தையே உலுக்கியது குறிப்பிடத் தக்கது.


இந்தக் கொடுமைகள் பல ஆண்டுகளாக வெளியுலகிற்குத் தெரியாமலே இருந்தன. ஆனால், இ.டி. மோரல் (E.D. Morel) என்ற பிரிட்டிஷ் கப்பல் போக்குவரத்து எழுத்தர் இதைக் கண்டுபிடித்தார். காங்கோவுக்குச் செல்லும் கப்பல்களில் துப்பாக்கிகளும், வெடிமருந்துகளும் மட்டுமே போவதையும், அங்கிருந்து திரும்பும் கப்பல்களில் ரப்பரும், தந்தங்களும் மட்டுமே வருவதையும் கவனித்தார். 


"பணம் பரிமாற்றம் நடக்கவில்லை என்றால், இது வர்த்தகம் அல்ல; இது அடிமை முறை" என்பதை உலகுக்கு உரக்கச் சொன்னார்.


அதன்பின், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் (மார்க் டுவைன், ஆர்த்தர் கோனன் டாய்ல் போன்றோர்) லியோபோல்டின் முகத்திரையைக் கிழித்தனர். சர்வதேச அழுத்தம் தாங்க முடியாமல், 1908-ம் ஆண்டு லியோபோல்ட், காங்கோவை பெல்ஜியம் அரசாங்கத்திடம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு விற்றுவிட்டு விலகினான்.


லியோபோல்டின் இந்த 23 ஆண்டுகால (1885-1908) தனிப்பட்ட ஆட்சியில், பசி, நோய், மற்றும் படுகொலைகளால் உயிரிழந்த காங்கோ மக்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி (10 Million) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது அன்றைய காங்கோ மக்கள் தொகையில் பாதிக்கும் மேல்.


இவ்வளவு பெரிய இனப்படுகொலையைச் செய்த லியோபோல்ட், எந்தச் சிறைத் தண்டனையும் அனுபவிக்கவில்லை. மாறாக, தான் கொள்ளையடித்த பணத்தில் பெல்ஜியத்தில் பெரிய அரண்மனைகளையும், பூங்காங்களையும் கட்டினான். அவன் இறக்கும்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவனாகவே இறந்தான். தான் செய்த குற்றங்களுக்கான ஆவணங்கள் அனைத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு, "அவர்கள் காங்கோவை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் என் ரகசியங்களை அல்ல" என்று திமிராகச் சொன்னான்.


இன்று பெல்ஜியத்தில் அவனுக்கு வைக்கப்பட்ட சிலைகள், "இனப் படுகொலையாளன்" என்று வர்ணம் பூசப்பட்டும், உடைக்கப்பட்டும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து வருகின்றன. அதிகாரமும், கட்டுப்பாடற்ற பணத்தாசையும் ஒரு மனிதனை எந்த அளவுக்கு மிருகமாக மாற்றும் என்பதற்கு இரண்டாம் லியோபோல்ட் ஒரு ரத்த சாட்சி.


ஹிட்லரின் வதைமுகாம்களைப் பற்றிப் பேசும் நாம், ஆப்பிரிக்கக் காடுகளில் அமைதியாக நடத்தப்பட்ட இந்த நரவேட்டையை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏனெனில், மறக்கப்பட்ட வரலாறு மீண்டும் நிகழும் ஆபத்து எப்போதும் உண்டு. 


வரலாறு மன்னிக்காத கயவன்: ஹிட்லருக்கு முன்பே ஆப்பிரிக்காவை நரகமாக்கிய இரண்டாம் லியோபோல்ட்! 


#வரலாறு #காங்கோ #லியோபோல்ட் #இனப்படுகொலை #பெல்ஜியம் #ரத்தவரலாறு #அடிமைத்தனம் #மனிதஉரிமைகள் #கருப்புபக்கங்கள் #தமிழ் #வரலாற்றுச்சுவடுகள் #உண்மைசம்பவம் #LeopoldII #CongoGenocide #History #DarkHistory #Colonialism #Belgium #KingLeopoldII #CongoFreeState #HumanRights #TamilPost #HistoryInTamil #RedRubber #ScrambleForAfrica #TamilHistory #FactCheck #Awareness #SocialJustice 


சி.வெற்றிவேல்,

சாளையக்குறிச்சி.

வெள்ளி 19 2025

ஏ1 குற்றவாளி நினைவிடம் காறி உமிழ்ந்த உயர்நீதிமன்றம்.


ஏ1 குற்றவாளி நினைவிடம் காறி உமிழ்ந்த உயர்நீதிமன்றம்.

மக்களிடம் தகவலை மறைத்த ஊடகங்கள்…


“ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடம் ஆக்கும்

சட்டத்தை இரத்து செய்த நீதிமன்றம், வீட்டை 

தீபா & தீபக் வசம் ஒப்படைக்கச் சொன்னதை 

மட்டுமே ஊடகங்கள் வெளியிட்டன.


ஜெயலலிதா அத்தகு நினைவிடத்திற்குத் 

தகுதியற்றவர் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டி

இருப்பதைக் கூறவில்லை.


குறிப்பாக,

1. "தொழில்முறையில் சாதித்ததாலேயோ, 

அரசியல் பிரபலம் என்பதாலோ, திட்டமிடப்பட்ட

அலங்கரிப்பின் மூலம் செயற்கையாகக் 

கவர்ச்சியைப் பெற்றதனாலேயோ அல்லது 

தேர்தல் பெரு வெற்றிகளாலோ ஒருவருக்கு

நினைவில்லம் பொதுமக்கள் பணத்தில் 

அமைக்க முடியாது."


2. "இங்கே அரசு வழக்கறிஞர் 1969ம் ஆண்டு

அலகாபாத்தில் மகாத்மா காந்தி நினைவிடம்

சம்பந்தமான தீர்ப்பைச் சுட்டிகாட்டினார். அரசு

பணத்தில் நினைவிடம் அமைக்க மகாத்மா காந்தி

வழக்கைக் காரணம் காட்டும் நீங்கள், நினைவிடம்

அமைக்கப்படும் நபர் காந்தியின் வாழ்க்கையை

வாழ்ந்தவரா அல்லது குறைந்தபட்சம் காந்தியின் உணர்வையாவது கொண்டவரா? என்று

யோசித்தீர்களா?"


3."ஏற்கனெவே மக்கள் வரிப்பணம் ரூ80 கோடியைக் கொட்டி மெரினா கடற்கரையில் சம்பந்தபட்டவருக்கு நினைவிடம் கட்டியாயிற்று. வேதா நிலையத்திற்கு

வெகு அருகில் இருக்கும் இந்த  நினைவிடம் வெளிப்படுத்தாததை இந்த இல்லம் என்ன வெளிபடுத்தப்போகிறது ?"


4."மக்கள் வரிப்பணம் பாழாவதை 

மகாபாரதத்தின் திருதிராஷ்டரை போல 

கண் மூடிப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது."


5."அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயின் 

பயனும்  மக்களைச் சென்றடையும் வண்ணம் உறுதிபடுத்தவேண்டும். இது எதுவுமே தராத 

இந்த நினைவிட திட்டம் ரத்து செய்யப்படுகிறது. 

இதற்கு ஒதுக்கப்பட்ட ரூ50 கோடியை உடனே

கஜானாவில் சேர்க்க வேண்டும்."


இவ்வளவு அசிங்கத்தின் ஒரு வார்த்தையைக் கூட வெளியே கசியவிடாத ஊடகங்கள், வழக்கறிஞர்கள்,

சமூக ஆர்வலர்கள்  அனைவரும் வெட்கப்பட 

வேண்டும்.

நன்றி தோழர் Sugumar Munirathinam

வெள்ளி 05 2025

இது எனக்கு தேவையா...?







 வேலையும் இல்ல

அதனால்..

தூக்கமும் இல்ல

சிறிது நேரம்

நடந்து வரலாம்

என்றால்

வெளியில் போக

அச்சமாக இருக்கிறது

ஆங்கங்கே நாலு

கால் படைகள்

கூட்டம் கூட்டமா

உலாவிக் கொண்டு

 இருக்கின்றன....

எவன் வந்து

மாட்டுவான் என்று

காத்துகிட்டு இருக்கின்றன..

வயதான காலத்தில்

இது எனக்கு

தேவையா....??????

ஞாயிறு 30 2025

இந்தியா திருடர்களாலும் சாதிவெறியர்களாலும் ஆளப்படுகிறது..

 



மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா். ”வங்கியில் உள்ள பணம் அரசுக்கு சொந்தமானது, ஆனால், உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்! அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள்.

அனைவரும் படுத்துவிட்டார்கள்..இதை மனதை மாற்றும் முறை என்றார்கள் . 

அதில் ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையாகளில் ஒருவன் இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி,, அமர வைத்தான். 

இதைத் தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறார்கள் 

கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்" என்று. மற்றொருவன் சொன்னான், பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்.

 இதைத் தான், படிப்பை விட அனுபவம் சிறந்தது என்பார்கள்

கொள்ளை நடந்த போதே ,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார். வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்

 "காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ''என்பது இது தான்

.இதை கேட்ட மற்றொரு அதிகாரி" வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் என்றார்.

 இது தான் சுயநலமான உலகம்! என்று சொல்வது.

மறுநாள் செய்திகளில் வங்கியில் 111 கோடி, 

கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி. கொள்ளையாகள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர் .எவ்வளவு எண்ணியும்,அவர்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை 

கொள்ளையர்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து " நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். 

படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது. இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் என்றான்.


இந்தியா இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும்  (கொலைகாரர்களாலும், சாதி மத வெறியர்களாலும் தான் ஆளப்படுகிறது!) 

பாவம் ஓட்டு போடும் அப்பாவி மக்கள் ( என்னையும் சேர்த்து)

செவ்வாய் 25 2025

ஆங்கிலேயனிடம் லஞ்சம் பெற்ற கடவுளர்கள்..

 இந்த நாட்டில் நல்ல தங்காள் என்ற பெண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பச்சை மட்டையை வைத்து நெருப்பு எரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது. 

இப்படிப்பட்ட பத்தினிதான், தனது நாட்டில் பன்னிரண்டு வருட வரையில் மழையில்லாததால் பட்டினியாகத் தனது குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் மாண்டதாகச் சொல்லப்படுகிறது. 

பச்சை மட்டையில் நெருப்பு எரித்த பத்தினி, இந்த நாட்டின் மழையில்லாமையையும் போக்கி இருக்கலாமே! அப்பொழுதெல்லாம் நாஸ்திகம் பரவவில்லையே. ஏன் அந்தப் பத்தினியார் மழையைப் பொழியும்படி செய்யவில்லை?


நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில்தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். 

ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குத்தானே தோன்றியிருக்கின்றனர். மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக, இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான். 

ஒன்று இந்தக் கடவுள்கள் திறமையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலேயனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும்."


                                                                       எழுதியது


.

சனி 22 2025

புரட்சி மனப்பான்மையை எழுத்தாயுதம் கொண்டு தோற்றுவித்த படைப்பாளர்..

 







புரட்சி மனப்பான்மையை எழுத்தாயுதம் கொண்டு தோற்றுவித்த படைப்பாளர்களில் #கார்க்கிக்கு நிகர் யார் என்றிருக்கையில் வாழ்ந்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் போர்முனையில் ஏற்பட்ட காயத்திற்குப்பின் பார்வையிழந்து, கால்களும் பூர்த்தியாக ஸ்தம்பித்து விட்ட நிலையிலும் ஒருவனால் 

"தாய்" நெடுங்கதைக்கு நிகராக, பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் எழுத்தாளர் #கார்க்கியின் பாராட்டுதலுக்குரிய ஒரு படைப்பை படைக்க முடிந்தது என்றால் அவர்தான் "வீரம் விளைந்தது" என்ற புரட்சி காவியம் தந்த #நிகோலாய் ஓஸ்திரோவஷ்கி.


இந்த புத்தகத்தின் அட்டைப் படமே அந்த நெடுங்கதையின் பிரதான பாத்திரமான பாவெலின் புரட்சி வெறி ஊறிய கண்களையும், போல்ஷ்விக்குகளின் போராட்டக்களம்  பற்றியும் ஆயிரம் கதைகள் சொல்லும். 📕📕


பாவெல் கார்ச்சாகின் என்ற பிரதான பாத்திரம் மூலம் தனதும் தன் நண்பர்களினதும் போல்ஷ்விக்குகான 15வருட போராட்டமயமான வாழ்வை சித்தரித்துள்ளார். இதில் தங்களின் வீரக்கதையை இளமை, காதல், போராட்டம் என்பவற்றை சுவை, சோகம், புரட்சி மனப்பான்மை போன்ற உணர்வுகளை தட்டியெழுப்பும் வகையில் எடுத்துக் காட்டியுள்ளார்.🔥✌️


தவறிழைத்து பாதிரியின் தண்டனைக்குள்ளாகும் பாவெலின் வாழ்வுடன் ஆரம்பமாகும் இந்த நெடுங்கதை எல்லாவிதமான போராட்ட களங்களிலும் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்ட் ஒருவன் கால்களையிழந்து, கண்பார்வையிழந்து தனது 30வது வயதில் 

#" உங்கள் நாவல் மனப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்டது, உங்கள் வெற்றிக்கு பாராட்டுக்கள்"  என்ற இலக்கிய வெற்றியுடன் முற்றுப் பெறுகிறது.✌️📝


"வாழ்வு சகிக்க முடியாததாக ஆனபிறகும்  எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்" என்ற தன் இலக்கிய வசனத்திற்கேற்பவே தன் வாழ்வையே இந்த நெடுங்கதையில் பாடமாக  கொடுத்துள்ள தோழர். ஓஸ்திரோவஷ்கி தன் எழுத்தாயுதத்தால் என் மனதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி விட்டார்.


    "#முழு சமுதாயத்தின் வாழ்வுக்காக 

       சொந்த வாழ்வை தியாகம் செய்வதே 

         புரட்சி பண்பாகும்."


  "#அழகு முகத்தில் அல்ல 

   அது மூளையின் தன்மையை

     பொறுத்தது."

சனி 15 2025

உங்கள் ஆட்டமும் ஒருநாள்...

 ஓட்டு போட்டா என்ன..

ஓட்டு போடலைன்னா என்ன

ஓட்டு போட்டா மட்டும்

 ரோட்டுல தேனாறும் பாலாறும்

ஓடிடுமா என்ன..

 ஓட்டு போடலைன்னாலும்

நாட்டுல மாற்றம்தான்

வந்துரும்மா என்ன..


எஸ்அய் ஆர் படிவம் 

கொடுத்தால் என்ன

படிவத்தை நிரப்பி 

கொடுக்கலைன்னா என்ன

அதிகாரமில்லா அந்த

ஓட்டுக்கு வேட்டு 

 வைத்தால் என்ன.........

செத்துப் போனதை

எரித்தால் என்ன

புதைத்தால் என்ன

பிணம் முழித்தா

பார்க்கப்போகிறது.

ஆடுங்கள் ராஜாக்களே

ஆடுங்கள் உங்கள்

ஆட்டமும் ஒருநாள்

முடிவுக்கு வராமலா

போகப்போகிறது.





புதன் 05 2025

வல்லரசு இந்தியாவின் திரு மகனார்....???

 கும்புடுறேன் சாமி...


கும்மிடுவது இருக்கட்டும்.

ஒங்கொப்பன் வாங்குன

கடன கட்டுறா.....


சாமி எங்கப்பன்

இல்லிங்க  சாமி...


ஒங்கொப்பன் இல்லின்னா

என்னா நிய்யி இருக்கேல்ல

கடன கட்டுறா...வென்......





ஞாயிறு 02 2025

பந்தியில் பின்னால் நிற்பதற்கு தடை

 


 தொழில் ரீதியான நண்பர் ஒருவர்.. ஒரு நிகழ்ச்சியில் ரூபாய் ஆயிரம் மொய் செய்கிறேன். என்னுடன் நீங்களும் வாங்க இருவரும் நிகழ்ச்சியில் சாப்பிட்டு வரலாம் என்றார்

 வேலை இருக்கிறது. தாங்கள் மட்டும் சென்று வருக என்று மறுத்தேன்..

அய்யோ நண்பா... நான் செய்யப் போகும் மொய் எனக்கு திரும்ப வராது. நாம் இருவரும் சென்றால் மொய் செய்யும் எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கும் நாம் இருவரும் அவ்வளவா சாப்பிட போகிறோம்.  நீங்கள் எதிலும் ஈகோ பார்க்கமாட்டீர்கள்  வாங்க நண்பா என்று வலுக்கட்டாயமாக அழைத்தார்.


நிகழ்ச்சியில் 12 மணிக்கு மேல்தான் பந்தி நடக்கும் காலை ஒன்பது மணியிலிருந்து எனக்கு பசி எடுக்கிறது  அதனால் சிறிது டிபன் சாப்பிட்டு விட்டு போகலாமே என்றபோது...

 வேண்டாம் நிகழ்ச்சியில் போய் சாப்பிட்டுக் கொள்வோம் என்று இழுத்துச் சென்றார். 

நண்பரின் பேச்சை தட்ட முடியமால்.. அவருடைய இரு சக்கர  வாகணத்தில் சென்று நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு சென்றோம். நிகழ்ச்சி நடத்துபவரும் எனக்கு தெரிந்தவராக இருந்துவிட்டதால் அவர்க்கு கை குலுக்கி விட்டு அமர்ந்தோம்.

நாங்கள் இருவரும் சென்றது 11 மணி  நண்பர் பல தடவை உணவு கூடத்திற்கு சென்று வந்தார். பந்தி தொடங்கவில்லை.. வந்திருந்த பார்வையாளர்கள் பலர் உணவு கூடத்திற்கு சென்று உதட்டை பிதுக்கிய வண்ணம் வெளியே வந்தனர்.  மணி பணிரெண்டரை ஆகியது.

வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற நண்பரிடம் பந்தி என்னாச்சு என்றேன். இன்னும் தொடங்கவி்லை்லை  என்றார். அந்த சமயம் என்பகுதியை சேர்நத நண்பர் ஒருவர் நிகழ்ச்சி கலந்து கொண்டவர். பொருமை இழந்தவராக எழுந்து சென்று நிகழ்ச்சி நடத்துபவரிடம்  மொய்யை செக்காக கொடுத்துவிட்டு என்னிடம் விடை பெற்றார். நான் சாப்பிடவில்லையே என்றபோது. கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு..  எனக்கு புரியும் வகையில் செய்கை காட்டிவிட்டு சென்றார்.

மணி ஒன்றாகியது  நண்பரிடம்  போகலாம் என்றேன்.  அவரும் பொறுமை இழந்தவராக ஆயிரத்துக்கு பதில் 500யை மொய் செய்து விட்டு வாங்க போகலாம் என்றார்

நண்பரின் அலவலகத்தை அடைந்து எனது வண்டியை எடுத்தபோது நண்பர் அருகில் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது   கொல பட்டினியா போனோம். வெறுப்பு பட்னியா வந்துவிட்டோம். இனிமேலும் என்னை கூப்பிடுவிங்க.. என்றேன்.

 திரும்பவும் நண்பர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்

பராவாயில்லை என்றுவிட்டு நிகழ்ச்சி நடத்துபவரை சந்திக்கும்போது  ஏன் ஒருமணிவரை பந்தி போடவில்லையே  ? என்று கேளுங்கள் அவர் அதற்கு என்ன காரணம் சொல்கிறார் என்று தெரிந்து கொள்வோம் என்றேன்.

அதுவும் ஒரு அனுபவமாக இருக்கட்டும்.


இந்த நிகழ்வில் எனக்கு வெறுப்பைவிட சிரிப்புதான் வந்தது...பந்தியில்  பின்னால் நிற்பதற்குதான தடை.. ஆனா..இங்கே பந்தியே நடக்கலயே....



வெள்ளி 24 2025

திரில்லர் கதையை மிஞ்சும் இரண்டு உண்மை திரில்லர் கதை

 



திரில்லர் கதை- 1

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 45 நாட்களே ஆயிருந்தன. அது 2001 ஆம் ஆண்டு. ஜூன் 29-ம் தேதி. மாலையிலிருந்தே காவல்துறை தலைமையிடத்தில் ஒரு இனம் புரியாத பதட்டம்.

நேரம் ஆக, ஆக கீழ்மட்ட அதிகாரிகளுக்கு ஆணைகள் பறக்கின்றன. ஏதோ ஒரு நெருக்கடி போல தோற்றம். சென்னை மாநகரம் மெல்ல மெல்ல காவல்துறையின் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருந்தது.

என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் புரியவில்லை. மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருந்தனர். இரவு வளர்ந்துக் கொண்டிருந்தது. மர்ம நாவலின் காட்சிகள் போல் திக்திக் என காவல்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஆச்சர்யாலு ரகசியமாக சி.பி.சி.ஐ.டி அலுவலகம் செல்கிறார். ஒரு புகார் கொடுக்கிறார். காவல்துறை தலைமையிடத்தில் இருந்து உத்தரவு வருகிறது. உடனே எப்.ஐ.ஆர் போடப்படுகிறது. மணி இரவு 9.00.

பத்து மணிக்கு மேல் எல்லா நடமாட்டங்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டன. காவல்துறை உயரதிகாரிகள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருந்தனர். எந்த எந்த இடங்களில் காவல் பலம் அதிகரிக்கப்பட வேண்டுமென திட்டமிட்டனர்.

இரண்டு போலீஸ் படைகள் கிளம்பின. ஒன்று மயிலாப்பூர் நோக்கி விரைந்தது. மற்றொன்று கோபாலபுரம் நோக்கி விரைந்தது. விடியற்காலை மணி 1.30-ஐ தாண்டியது. அப்போது தான் சில போலீஸ் அதிகாரிகளுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.

யாரையும் அனுமதி கோராமல் வீட்டுக்குள் போலீஸ் அத்துமீறி நுழைகிறது. மாடிக்கு ஏறிச் சென்று கதவை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். கட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்  தி.மு.கழகத் தலைவருமான தலைவர் கலைஞர். அப்போது அவருக்கு வயது 78.

பதறி எழுகிற அவரை கைது செய்வதாக அறிவிக்கிறார்கள். என்ன வழக்கு, எதற்கு என்றெல்லாம் பதில் இல்லை. மற்றவர்களுக்கு தகவல் சொல்ல அனுமதிக்கவில்லை. அப்படியே பிடித்து தூக்குகிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அப்போது ஒரு காவல்துறை அலுவலருக்கு செல்லில் அழைப்பு வருகிறது. பயந்து பயந்து பேசுகிறார் அதிகாரி. “கைது செய்து விட்டோம். உடனே கொண்டு செல்கிறோம்” என்று பதிலளிக்கிறார். பக்கத்திலிருந்தவருக்கு கண்ணை காட்டுகிறார். உடனே கலைஞரை தரதரவென இழுத்து செல்கிறார்கள்.

கைது காட்சியை வீடியோவில் பார்த்திருப்பீர்கள். செல் லைவில் இருக்கிறது. அந்த முனையில் இருப்பவர் இங்கு நடப்பதை கேட்டு ஆனந்தப்படுகிறார். கலைஞர் அலைகழிக்கப்படுகிறார். போலீஸார் எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு வழியாக அங்கு இங்கு சுற்றி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். நீதிபதியிடம் அழைத்து செல்கிறார்கள். நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞரும், காவல்துறை அதிகாரிகளும் தடுமாறுகிறார்கள். 

15 நாட்கள் ரிமாண்ட். “உங்கள் இதயம் தசையாலனதா, இரும்பாலனாதா” என்ற புகழ்ப் பெற்ற கமெண்ட் நீதிபதியிடமிருந்து வருகிறது.

சென்னை நகரில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் என முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது 2001 ஜூன் 29. கடும் விசாரணை எல்லாம் செய்து  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 2005 ஆம் ஆண்டு. ஜெயலலிதா ஆட்சி எவ்வளவோ முயற்சி செய்தும் வழக்கை ஜோடிக்க முடியவில்லை. வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

திரில்லர் கதை -2

காட்சி மாறுகிறது...  2014 செப்டம்பர் 27 சனிக்கிழமை.

பூஜை புனஸ்காரம் முடிந்து ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து கிளம்புகிறார். மதிய உணவுக்கு வீடு திரும்பி விடுவதாகத் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட 14 கி.மீ தூரத்தில் உள்ள விமான நிலையம். பத்தடிக்கு ஒரு போலீஸ் நின்று காவல் காக்கிறார்கள். 

முதல்வர் கான்வாய்க்காக சிக்னல்கள் நிறுத்தப்படுகின்றன். ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. முதல்வரின் கான்வாய் பறக்கிறது. சிகப்பு விளக்கு சுழல முதல்வர் கார் கடக்கும் போது, காவலுக்கு நிற்கிற காவலர்கள்  காருக்கு இயந்திர கதியில் வணக்கம் வைக்கிறார்கள், 

விமானநிலையம். அரசின் உயரதிகாரிகளும், காவல்துறை அலுவலர்களும் பூங்கொத்து கொடுத்து வணக்கம் வைக்கிறார்கள். வழக்கமான பெருமிதப் புன்னகையோடு எதிர்கொள்கிறார் ஜெயலலிதா. தனி விமானம் காத்திருக்கிறது.  சென்னையிலிருந்து  கிளம்பிவிட்டார்.

பெங்களூரு. பார்ப்பன அக்ரஹார சிறை வளாகம். விடியற்காலை முதலே அதிமுக தொண்டர்கள் குவிந்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய ஊடகங்கள் குவிந்துக் கொண்டு இருக்கின்றன. அமைச்சர் பெருமக்கள் வரிசையில் நின்று கர்நாடக போலீஸ் அனுமதியோடு கோர்ட் வளாகத்தை நெருங்குகிறார்கள்.

தமிழகத்திலிருந்து சென்றிருந்த காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் மப்டியில் இருந்தவாறு சூழ்நிலை குறித்து மேலிடத்திற்கு தகவல்  கொடுத்துக் கொண்டிருந்தனர். விமானநிலையத்தில் இருந்து கோர்ட்டிற்கு செல்லும் பாதையை கர்நாடக போலீஸ் ஒருபுறமும், மப்டியில் இருந்த தமிழக போலீஸும்  டிரையல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெயலலிதாவின் தனிவிமானம் தரை இறங்கியது. ஹெலிக்காப்டரில் ஏறினார்.  பின் அதிலிருந்து தரை இறங்கினார். ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தார். தேசியக் கொடி கட்டப்பட்ட காரில் ஏறினார். 23 வாகனங்கள் கொண்ட கான்வாய் கிளம்பியது. 

பார்ப்பன அஹ்ரகார கோர்ட் வளாகம்.

கோர்ட் உள்ளே செல்கிறார் ஜெயலலிதா. நீதிபதி குன்ஹா வருகிறார். “நீங்கள் குற்றவாளி” என தீர்ப்பளிக்கிறார். முகம் இருண்டு போகிறார். ஜெயலலிதா வந்த காரில் பறந்த தேசியக் கொடி அகற்றப்படுகிறது சாதாரண கான்ஸ்டபிளால்.

மாலை தீர்ப்பின் முழு விவரத்தை படித்த நீதிபதி குன்ஹா, காவல்துறை இன்ஸ்பெக்டர் பாதுகாப்பில் ஜெயலலிதாவை குற்றவாளியாக ஒப்படைத்தார். முதல்வராக உள்ளே நுழைந்தவர், நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியாக வெளியே வந்தார்.

காலை தமிழகக் காவல்துறையின் தலைமையதிகாரியின் சல்யூட்டை அலட்சியமாக ஏற்றுக் கொண்டு வந்தவர், என்.எஸ்.ஜி பாதுகாப்பு படையிடமிருந்து தள்ளுமுள்ளுக்கு பிறகு கர்நாடகக் காவல்துறையின் கடைநிலை காவலர்களால் அழைத்து செல்லப்பட்டார்.

18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, 160 வாய்தா வாங்கி சாதனை படைத்த  ஜெயலலிதா ஊழல் (கொள்ளை) வழக்கு முடிவுக்கு வந்தது. 

கலைஞர் மீது போடப்பட்ட வழக்கிற்கு காரணமான மேம்பாலங்கள் உறுதியாக நின்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது.  ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை அவரது அடையாளமாக திகழ்கிறது...

நேர்மையான  நீதிபதியால்  நீதி நின்று ஆடுகிறது !

ஞாயிறு 19 2025

நினைவலைகள்.101

 அன்றும் இன்றும் தீபாவளி!!


1995-ம் வருடம் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு முதன்முதலாக என் வீட்டிற்கு மின் இணைப்பு பெற்ற நேரம்... மின் இணைப்பு பெற்ற பிறகு வரும் முதல் தீபாவளி..

பொதுவாக என் அம்மா  தீபாவளியை கொண்டாடுவதில்லை..அது செலவு பிடிக்கும் விழா என்று கூறுவார். எனக்கு புது சட்டை எதுவும் எடுக்கமாட்டார். என் அம்மா வேலை பார்க்கும் வீட்டிலிருந்து எனக்கும் என் அம்மாவுக்கும் புது துணிகள் கொடுத்துவிடுவார்கள். அந்த புது துணியை தீபாவளியன்று உடுத்தமாட்டார். புதிய துணியை தண்ணரில் நனைத்து காய்ந்த பின் பின்னொரு நாளில் உடுத்துவார். என் தாயின் பழக்கமே என்னையும் தொற்றிக் கொண்டது. எப்போதும் புது சட்டை எடுத்தாலும் தண்ணிரில் நணைத்து அலசிய பிறகே உடுத்துவேன்.

மின் இணைப்பு பெற்ற சில நாட்களில் பழைய தொலைக்காட்சி பெட்டி கருப்பு. வெள்ளை ஒன்றை குறைந்த விலையில் வாங்கி  .டீ டீ என்ற சென்னை தொலைக்காட்சி தமிழ் ஒளிபரப்பை மட்டும் விடுமுறை நாட்களில் பார்ப்பது. வழக்கம்

அன்று தீபாவளி  என் அம்மா கறி வாங்கி சமைத்து கொண்டு இருந்தார். அன்று சென்னை தொலைக்காட்சியில் இரவு பதினோரு மணியளவில் மாயபஜார் படம் ஒளி பரப்பினார்கள்..காலையில் இந்தி நிகழ்ச்சி ஒளி பரப்பி விடுவார்கள் என்பதால் தூங்காமல் என் அம்மாவுக்கு துனையாக விடிய விடிய முழித்து பார்த்த நினைவலைகள் இன்றைய தீபாவளியல் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தபோது நினைவுக்கு வந்தது.

செல்போன் வந்து விட்டதால் தொலைக்காட்சி பார்ப்பதை அடியோடு மறந்துவிட்டேன். தூக்கம் வராமல்   தவித்தபோது படுத்தபடியே போட்டோவில்  இருந்த என் அம்மாவை பார்த்தபோது அன்றைய தீபாவளி நினைவலைகள் வந்தது.காலையில் மறந்து விடும் என்பதால் இப்போதே பதிவிட்டேன்.

புதன் 08 2025

ஒரு நேரந்தான் பலிக்கும்...!!!

 





க்க்...க்க்....க்க்      க்க்   க்க்     ..............


“ சார் ..ஏன்? இப்படி விக்கல் எடுத்துகிட்டே இருக்கீங்க...தண்ணிய குடிங்க சார்”..


“ சார்.... இப்படி விடாமா விக்கல் எடுத்தா  அவருக்கு வேண்டியவங்க நிணப்பாங்க..சார்..!!”


“ என்ன சார்... நீங்க...அவருக்கு வக்காலாத்தா..??”


“இல்ல சார்.,  என் அனுபவத்த சொல்றேன்.”..ஃ


“ அவருக்குத்தான்  துணையுமில்லே.., இணையுமில்ல.. குடும்பமுமில்ல.      பிள்ளையுமில்ல..குட்டியுமில்ல... அவர..போயி யாரு சார்.. நிணப்பாங்க  ???”


“சார்.. நீங்க சொல்ற மாதிரி இல்ல சார்..., என்ன நிணக்கிறதுக்கு என் அக்கா இருக்காங்க... அக்கா வீட்டுக்காரர் என் மச்சான் இருக்காரு.... அக்கா பிள்ளைகளான மருமக....மருமகன்கள் இருங்காங்க சார். பத்தில் ஒன்பது தடவை நிணைக்காவிட்டாலும் ..ஒரு தடவையாவது நிணப்பாங்க சார்,...”

“ அப்படியா...!   அந்தக் கதை அங்கிட்டு .இருக்கட்டம் சார்.., இப்பா யாரு சார்.. நிணைக்கறாங்க...?”


“ என் அம்மா சார்  ”... 


“ என்னாது.  ஒங்க அம்மாவா”  ... சார்..காமெடி பன்னாதீங்க சார்.., அவுங்க இறந்து பத்து வருடத்துக்கு மேலாகுது....அவுங்க எப்படி உங்கள நிணப்பாங்க..கத விட்டாலும் பொருத்தமா  விடுங்க  சார்”..


“ என் அம்மா சாகும் தருவாயில் இருக்கும்போது..என்னை நினச்சுதான் கவலபட்டு ... “ என் புள்ளய தனியா விட்டுட்டு போறனென்னு” புலம்பி இறந்தாங்க சார்...”


“ பரவாயில்லையே.., சாகப்போற நேரத்திலாவது உங்க அம்மா..உங்களபத்தி நினச்சாங்களே..!!!”


“ அப்ப மட்டும் இல்ல சார், எப்பவுமே என் அம்மாவுக்கு என்மேல் ரெம்ப பாசம்  சார்.”  நானும் என் அம்மாவுக்கு எந்த இம்சையும் கொடுத்ததில்லை...சார்...” விக்கல் வந்தால் என் அம்மாதான் நினப்பாங்க..... தண்ணிய குடித்து விக்கல நிறுத்த மாட்டேன்...சார்... சிறிது நேரங்கழித்து தானா விக்கல் நின்று விடும் சார்...”


“ சார்.., அவரு சொல்வது உண்மைதான்... எனக்கும் அவரு மாதிரி விடாமல் விக்கல் வந்தது.... “உடனே  நான் எங்கம்மாவுக்கு போன் செய்து  “ என்னம்மா செய்யிற ..ன்னு கேட்டதுக்கு ”  “ உன்னத்தாண்டா நிணச்சுகிட்டு இருக்கேன்னு சொன்னாங்க சார்..”


“ என்ன சார்..நீங்க.. உங்கம்மா உயிரோடு இருக்காங்க... அவருடைய அம்மா இறந்து பத்து வருடமாச்சு ...  நீங்க சொல்வது மாதிரி பாத்தாக்கூட .  அவரு அம்மா மேல அளவுக்கதிமாக   பாசம் வைத்தததால்தான் அவரு விக்கல் எடுத்தால் அம்மா நிணைக்கிறாங்கன்னு நம்பலாம்.. எதுவும் ஒரு நேரந்தான் பலிக்கும் எல்லா நேரமும் பலிக்காது சார்  ” முதல்ல அத புரிஞ்சுக்கங்க சார்..

சனி 06 2025

பொய், களவு, ஊழல் போன்ற மகா பாதகங்கள் இல்லாமல் பற்றற்ற வாழ்வு வாழ்ந்த தியாகிகள்..

 

விளாதிமிர் லெனின் என்பவர் சோவியத் யூனியன் என்ற பேரரசை கட்டியெழுப்பிய ரஷ்யப் புரட்சியாளர். ஆனால் அவர் இறக்கும் போது அவரது சட்டைப் பையில் சில ரூபிள்கள் மாத்திரமே இருந்தன.


ஜோசப் ஸ்டாலின் ஜேர்மனிய நாஜி படைகளை தோற்கடித்த ரஷ்ய தலைவர். 20,000 யுத்த டாங்கிகள் கொண்ட ஒரு நாட்டை ஆட்சி செய்தார். சோவியத் யூனியன் சரிந்த பிறகு அவரது மகள் வாடகை வீடுகளில் வசித்து வந்தார். ஏனெனில் ஸ்டாலினுக்கு சொந்தமாக வீடு இருக்க வில்லை.


பிடல் காஸ்ட்ரோ நவீன கியூபாவை நிறுவியவர், நிலப்பிரபுத்துவ சலுகைகள் அனைத்தையும் தேசியமயமாக்கினார். ஹவானாவில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அவருக்கு இரண்டு நவீன மெர்சிடிஸ் கார்களை பரிசளித்தார். அவற்றை அவர் தனக்கு சொந்தமாக்காமல் ஏலத்தில் விற்று நாட்டின் கருவூலத்தில் சேர்த்தார்.


ஹோ சி மின் வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர். நவீன வியட்னாமை கட்டியெழுப்பியவர். காலனித்துவத்துக்கு எதிராக களத்தில் இறங்கி போர் புரிந்தவர். கடைசி வரை அவர் தனது விடுதலைப் போராட்ட வீரர்களுடன் குடிசை வீட்டிலே வாழ்ந்து, அதிலே இறந்து போனார்.


மா சே துங் நவீன சீனாவை நிறுவினார், ஐந்து ஆண்டுகளுக்குள் சீனாவை வளர்முக நாடாக மாற்றியமைத்தார். அவர் பல சமயம் பாதை சுத்திகரிப்பாளர்களுடன் இனைந்து பாதையை சுத்தம் செய்பவராக இருந்தார்.


இவர்கள் யாருமே இறை நம்பிக்கையாளர்கள் அல்ல, இவர்கள் அனைவரும் இறை மறுப்பாளர்கள். இவர்கள் இறைவனையோ மறு உலகத்தையோ நம்பி வாழ்ந்தவர்கள் அல்ல.


ஆனால் இவர்களிடம் சமயங்கள், அறநெறிகள் அனைத்தும் போதிக்கும் பற்றற்ற வாழ்வு இருந்தது. மக்களுக்காக வாழ வேண்டும் என்கிற தியாக சிந்தனை இருந்தது. மதங்கள், நீதிநெறிகள் கண்டிக்கும் பொய், களவு, மற்றும் ஊழல் போன்ற மகா பாதகங்கள் இருக்கவில்லை.


இன்று மதங்களின் பெயரால் ஆட்சி பீடம் ஏறி, நாட்டு மக்களுக்கு வஞ்சகம் செய்து சொத்துக்கள் குவித்து ஆடம்பரமான வாழ்க்கை வாழும் ஆத்திக ஆட்சியாளர்கள் இந்த நாத்திக ஆட்சியளர்களுக்கு முன்னால் வெட்கித் தலை குனிய வேண்டும்.

வியாழன் 14 2025

மீள்பதிவு...

நடுநிசியில் வாங்கிய போலி சுதந்திரத்தின் கதை.........!!!



ஆங்கிலேயன். இந்தியாவுக்கு   1947ம்ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரம் தருவதாக அறிவித்தான். அன்றைய தினம் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ளும்மாறு தெரிவித்தான்.

அன்றைய இந்தியாவின் இந்துத்துவ வாதிகள், ஆகஸ்டு 15ந்தேதி அஷ்டமி நாள்  சுதந்திரத்தை வாங்கினால் ,அபசகுனம் ஆகும். அதனால் இரண்டு நாள் கழித்து 17ந்தேதி சுதந்திரத்தை வாங்கினால் நல்ல சகுனம் உள்ள நாள் என்றும் பொருத்தது பொருத்தோம். இன்னும் இரண்டு  நாள் கழித்து சுதந்திரத்தை வாங்கலாமே என்று அங்கலாயித்தனர்.

இது பற்றி ஜவகர்லாலுவிடம் முறையிட்டனர். ஜவகர் லாலுவும் அஷ்டமி-நவமி போன்ற பஞ்சாஙக்கத்தில் நம்பிக்கை இல்லையென்று வெளியில் பீத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் இந்துத்துவாதிகளின் வேண்டு கோளுக்கு இணங்கி ஆங்கிலேயனை அனுகினார்.

ஆங்கிலேயரோ, சட்டம் இயற்றியாகிவிட்டது, இனி மாற்ற முடியாது என்று மறுத்துவிட்டனர்.

மெத்த தெரிந்த பூனூல்களும்,  கடவுளுக்கு மேலானவர்களாக பீற்றிக் கொள்ளும் உச்சி குடுமிகளும், அனைத்து வகையான பஞ்சாங்கங்களை கொண்டு நாள் நட்சத்திரங்களை கணக்கீடு செய்து அந்த நாளுக்குரிய பரிகாரம் செய்வதற்கு வழிவகைகளை  தீவிரமாக ஆராய்ந்தனர்.

அப்படி ஆராய்ந்து ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்தனர்...

இந்தியனுக்கு அதாவது  பூனூல்களுக்கும் உச்சி குடுமிகளுக்கும் மறுநாள் என்பது அதிகாலை 5மணிக்கு தொடங்குகிறது.

ஆங்கிலேயனுக்கு மறுநாள் என்பது நடுநிசி 12 மணிக்கு தொடங்ககிறது. இதனால் அஷ்டமி- நவமி கேடுகள்-மற்றும் அப சகுணங்கள் இல்லாது போகிறது என்று கண்டுபிடித்தனர்.

இதன் காரணங்களை கொண்டுதான். 1947ம்ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி முடிந்து  ஆங்கிலேயனின் மறுநாளான  ஆகஸ்டு 15ந்தேதி நடுநிசி  12 மணிவாக்கில் ஆங்கிலேயனிமிருந்து   போலிச் சுதந்திரத்தை பெற்று  15ந்தேதி அதிகாலை 5மணியில்  இந்தியா சுதந்திரம் பெற்றதாக சொல்லி 79 வருடமாக சுதந்திர தின திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.






ஞாயிறு 20 2025

இரும்பு பெண்மணி அல்ல..ஊழல் பெண்மணி...A1-ன் குற்றவாளி.

 



பாலு ஜுவல்லர்ஸை அழித்தது, 


கங்கை அமரனின் வீட்டை ஆட்டைய போட்டது, 


நாட்டாமை படத்தை பார்க்க வேண்டும் என்று கூறி வாங்கிய ஃபிலிமை ரிலீஸான இரண்டாவது நாளே ஜெயா டிவியில் ( அப்போது ஜெ.ஜெ டிவி) போட்டது, 


டான்சி கேஸில் ஆஜரான சன்முகசந்தரத்தை வெட்டியது, 


பரிதி இளம்வழுதியை ஜான் பாண்டியனைவிட்டு ஓட ஓட விரட்டியது, 


சுதாகரனின் ஆடம்பர கல்யாணம் பின் அவர் மீதே கஞ்சா கேஸ் போட்டது, 


சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு பின் அதையே ஓரு கலாச்சாரமாக மாற்றியது..


பாலன் என்ற பினாமியை உயிரோட வைத்து கொளுத்தியது.. 


ஆடிட்டரை வீட்டுக்குள் கூட்டிவந்து துவம்சம் செய்தது..


 தன் கையெழுத்தை தானே போடவில்லை என்று மறுத்தது, 


ஒரே கையெழுத்தில் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ESMA, TESMA சட்டம் போட்டது, 


கலைஞரை நள்ளிரவு கைது செய்தது, 


அதற்கு எதிராக நடந்த அமைதி பேரணியில் வன்முறை வெறியாட்டம் போட்டது, 


அந்த வன்முறைக்கு துணைபோன மீனவ சமுதாயத்தை சேர்ந்த வீரமணியை வளர்த்துவிட்டது பின் காரியம் முடிந்ததும் என்கவுன்ட்டரில் போட்டுத்தள்ளியது..


பால் விலை பஸ் டிக்கெட் விலை ஏற்றம், 


தன் ஈகோவால் கட்டிய சட்டமன்றத்தை பூட்டியது பின் எதிர்ப்பின் காரணமாக அதை மருத்துவமனையாக மாற்றியது, 


அண்ணா நூலகத்தை சீறழித்தது... 


எதிர்த்தவர் மேல் எல்லாம் வழக்கு தொடர்ந்தது,  இப்படிப்பட்ட...


ஜெயாவை எப்படி என்னால் ஒரு சிறந்த முதல் அமைச்சராக, இரும்பு பெண்மணியாக ஏற்றுக்கொள்ள முடியும்??

இது 20 ஆம் நூற்றாண்டின் சாபக்கேடு.

சனி 12 2025

ஆர்.எஸ்.எஸ்- பாஜக எனும் நச்சு வைரிகள்!!! பயங்கரவாதிகள்.!!!

 Comrede Uthman Ali




எந்த ஒரு
மாவோயிஸ்ட்டாவது
மலையை
மொட்டை அடிக்கிறானா?

எந்தவொரு
மாவோயிஸ்ட்டாவது
தனியார்
விமான நிலையம்/துறைமுகம் கட்டி
கொள்ளையடிக்கிறானா?

சுங்கச்சாவடி
வழிப்பறி செய்கிறானா?

பெண்களை
பாலியல் வன்முறை செய்துவிட்டு
சாமியார் வேஷம் போடுகிறானா?

"குன்றிருக்கும் இடமெல்லாம்
குமரன் இருக்கிறான்!"
என்று கூறிக் கொண்டே
இயற்கை வளத்தை
கொள்ளை அடிக்க
வேல் முருகனுக்கே
வெடி வைப்பவன்,
மாவோயிஸ்டா?
குவாரியிஸ்டா?

முல்லைவன
காடுகளை அழித்து
பாக்சைட்டை
தேட்டை போடுபவன்
நக்சலைட்டா?
கார்ப்பரேட்டா?

மண்ணையும் மக்களையும் நேசித்து
உயிரையும் தரும்
நாட்டுப்பற்றுள்ள நல்லவர்கள் நக்சல்பாரிகள்!

முருகனுக்கே மொட்டை அடித்து
பெருமாளுக்கே நாமம் போட்டு
முதலாளிகளுக்கு காவடி தூக்கி
மொத்த நாட்டையும்
கார்ப்பரேட்டுகளுக்கு
பஞ்சாமிர்தம் ஆக்கும்
பயங்கரவாதிகள்

ஆர்.எஸ்.எஸ்- பாஜக
நச்சு வைரிகளே!

- துரை. சண்முகம்
எல்லா உணர்ச்சிகளும்:
7

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...