பக்கங்கள்

ஞாயிறு 18 2022

பயங்கரவாதம்...என்றால்......????




 சென்ற மாதம் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்ற உத்தரவு..

அந்திரா போன்ற மாநிலங்களில் அனல்காற்று வீசியபோது பகலில் வெயிலில் நடமாட வேண்டாம் அறிவுரை..

அடிக்கடி..புயல்,வெள்ளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இவையெல்லாம் என்ன  ??? அவசரநிலை அறிவிப்புகள்!!! இந்த அவசர நிலை அறிவிப்புக்கு காரணம் என்ன?   


 கால நிலை மாற்றம்...சூழலியல் நெருக்கடி.. இவைகள். நாளுக்கு நாள்  தீவிரமடைந்து வருவது...

 அவசரநிலை அறிவிப்புகளை மீறினால் என்னாவாகும்.. உயிரிழப்புகளை சந்திக்க வேண்டும்.. இதற்கு பெயர்தான் பயங்கரவாதமாகும்.

இந்த பயங்கரத்தை மக்கள் மீது திணித்த குற்றவாளிகள் யார்???

 அவர்கள் வேற்று கிரகவாசிகளல்ல...  கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள். இவர்களின் லாப வெறியின் விளைவாகவே சூழலியல் அவசரநிலை என்ற பயங்கரவாதம் மக்கள் மீது திணிக்கப்படுகிறது

வரைமுறையின்றி இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்கள்..

ஏரி குளங்களை ஆக்கிரமிப்பவர்கள், அவற்றை அழிப்பவர்கள், கடற்கரை-காடுகளை அழித்து சொகுசு விடுதிகளை கட்டியவர்கள், பெருகி வரும் வாகன போக்குவரத்தால் சுற்று சூழலை கெடுத்தவர்கள்.


வேலையின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவை மட்டும்மல்ல வரைமுறையற்ற இயற்கை சுரண்டலால், சுற்றுச் சூழல் பேரழிவுகள் அதிகரித்த காரணத்தால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.


வன விலங்குகளின் தாக்குதலால் காட்டோர மக்கள் அச்சதில் வாழ்கின்றனர். பழங்குடியினர் காடுகளைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். வேலை எப்போது பறிபோகும் என்ற அச்சத்தில் உழல்கிறார் தொழிலாளி, படுகொலைகளும், கும்பல் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.. நாள்தோறும் நடக்கும் விபத்துகள், கிரிமினல் குற்றங்கள், பாலியல் அடக்குமுறைகள் போன்ற பயங்கரவாதத்தால்  இந்த சமூகம் வாழத் தகுதியற்றதாக மாறிவருகின்றன். இத்தகைய பயங்கரவாதத்தால்.........


வியாழன் 15 2022

ரத்தசாட்சி- உண்மையும் பொய்யும்.............

 

ஜெயமோகனின் ‘கைதிகள்’ என்ற சிறுகதையை முன்னும் பின்னுமாக நீட்டித்து எடுக்கப்பட்ட படம். நக்சல்பாரித் தலைவரான அப்புவின் தியாக வரலாற்றைச் சொல்லும் படமாக இருக்கலாம் என எண்ணிப் படத்தைப் பார்த்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். ‘வன்முறையின் மூலம் எதையும் தீர்க்க முடியாது; மாறாக அதைக் கைக்கொண்டவர்கள் அழிக்கப்படுவார்கள்’ எனக் காலகாலமாகத் தட்டையாக முன்வைக்கப்படும் காந்தியக் கருத்தியலைக் கதையாடலாகச் சொல்கிறார் இயக்குநர் ரஃபீக். ஆனால், இதை யாருக்கு, எவ்விடத்தில் சொல்லவேண்டுமென்கிற அரசியல் புரிதலில்லாத தன்மையால் இப்படம் வலிமையற்றதாகி விடுகிறது.
நக்சல்பாரி இயக்கம் என்பதைப் பற்றிய தேடல் இயக்குநருக்குத் துளியும் இல்லை என்பதைவிட, அதை அறிந்துகொள்ளும் முனைப்பு இல்லை என்பதுதான் காட்சியமைப்புகளில் தெரிகிறது. ஒருங்கிணைந்த தஞ்சையில் பண்ணையடிமை முறையை ஒழித்தது, நிலப்பகிர்மானம், பண்ணையார் அழித்தொழிப்பு போன்றவற்றின் மூலம் உழைக்கும் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுவித்ததில் நக்சல்பாரிகளுக்குப் பெரும் பங்கு உண்டு. தர்மபுரிப் பகுதியில் நிலவிவந்த கொத்தடிமை முறை, கந்துவட்டிக் கொடுமை போன்றவற்றை ஒழித்து எளிய மக்களின் நம்பிக்கை நாயகர்களாகத் திகழ்ந்தவர்கள் நக்சல்பாரிகள். தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோர் மக்களோடு மக்களாகக் களம் கண்டு தியாகிகளானார்களே தவிர, எந்நேரமும் துப்பாக்கியைச் சுமந்து காட்டுக்குள் திரிந்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, நக்சல்பாரி எழுச்சி அவருக்குப் பக்கபலமாக இருந்த காவல்துறையை செயலிழக்கச் செய்துவிடும் என்பதனால், நக்சல்பாரிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க தேவாரத்தின் தலைமையில் காவல்துறையை ஏவிவிட்டார். அது தனக்கிடப்பட்ட வேலையைச் சரியாகச் செய்து தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரை என்கவுண்ட்டர் செய்துவிட்டு, இன்றளவும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது.
ஆனால், ‘ரத்த சாட்சி’யில் இயக்குநர் ரஃபீக் பதிவு செய்திருக்கும் நக்சல்பாரி அரசியலும், காவல்துறையின் செயல்பாடுகளும் முற்றிலும் வேறாக இருக்கிறது. தோழர் அப்பு அறிமுகமாகும் காட்சியில், யானை ஒன்றை அழைத்துக்கொண்டு, கரும்புக் காட்டுக்கு வருகிறார். கங்கானியைக் கூப்பிட்டு ‘யானை அடி வாங்கி சாவாம இருக்கனும்னா நீயும் உன் கூட்டாளிகளும் போய் ஓரமா நில்லுங்க’ என்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் டீயும், பீடியும்தான் அதிகபட்ச உணவே அக்காலகட்டத்தில். இப்படியிருக்கையில் யானையைக் கட்டித் தீனி போடும் அளவுக்கு வசதி படைத்தவரோ தோழர் அப்பு? யானையை ஏவி எதிரியை அடிக்கச் சொல்வதெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றிய புரிதலில்லாமையே. ‘தாளடி’ எனும் கேவலமான நாவலில், வெண்மணித் தியாகத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பார் சீனிவாசன் நடராஜன் எனும் நபர். அதில், செங்கொடி இயக்கத் தீவிரவாதிகள் பண்ணையார்களின் நிலத்தில் விளைந்திருக்கும் பயிர்களையெல்லாம் தீ வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள் எனப் புளுகியிருப்பார் அந்நாவலில். அதைப்போல இப்படத்திலும், தோழர் அப்பு கரும்புத் தோட்டத்தைத் தீவைத்துக் கொளுத்துவாகக் காட்டப்படுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் பயிர்களை சேதப்படுத்தியதில்லை. ஏனெனில், அது அவர்களின் ரத்தத்தால் விளைவிக்கப்பட்டது.
ஜெயமோகன் ‘துணைவன்’ எனும் சிறுகதையில் நக்சல்பாரித் தோழர் ஒருவரை ‘கோனார்’ என ஜாதியப் பெயரால் அடையாளப்படுத்தியிருப்பார். ஜெயமோகனின் அபிமானியான இயக்குநர் ரஃபீக், இதில் ‘கம்பளராஜு நாயக்கர்’ என்பவரை தீ.கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகச் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல், கம்பளராஜு நாயக்கர் பெரும் செல்வந்தராம்! அவருக்கு எல்லாக் கட்சிகளிலும் செல்வாக்கு இருக்கிறதாம்; ஆட்கள் இருக்கிறார்களாம்! அப்படி இருந்தால் அவர் எப்படி நக்சல்பாரியாக இருந்திருக்க முடியும்?
தோழர் அப்பு மக்களுக்காகச் செய்யும் செயலாக இரண்டு நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. ஒன்று, சாராயம் காய்ச்சும் முதலாளி ஒருவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு சரியான கூலி வாங்கிக் கொடுக்கிறார் (!). இன்னொன்று, கரும்புத் தோட்ட முதலாளியைக் கொலை செய்கிறார். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் கூலிப்பிரச்சனைக்காகப் போராடுபவர்கள் என்பதை மட்டும் இயக்குநருக்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சாராயம் காய்ச்சும் தொழிலிலும் கூலிப்பிரச்சினை இருக்கக் கூடாது எனத் தன் பரந்துபட்ட சிந்தனையை தோழர் அப்புவின் மீது சுமத்தியிருக்கிறார் இயக்குநர். இதன் பின்னர், படம் முழுக்க காவல் துறைக்கும், நக்சல் போராளிகளுக்குமிடையேயான மோதலாக மட்டுமே மாறிவிடுகிறது.
சக தோழனை லாக்கப்பில் கொலை செய்த காவல்துறை அதிகாரியை, பழிக்குப் பழி வாங்குறார் தோழர் அப்பு. ஆனால், அதன்பின்னர் அதை நினைத்து மருகி மருகி குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். இறுதியில், தனக்காக பிறர் துன்பப்படக் கூடாது என முடிவெடுத்து காவல்நிலையத்தில் சரண்டர் ஆகிறார். அதற்கு முன்னதாக, ஓலைக்குடிசையில் இருக்கும் அம்மா, அப்பாவைச் சந்திக்கிறார். அம்மா கையால் கருவாட்டுக் குழம்புச் சோறு உண்ண விரும்புகிறார். அம்மா மகனை ஆசீர்வதித்து நெற்றியில் சிலுவையிடுகிறாள். பின்னணியில் கருணை ததும்பும் முகத்துடன் யேசுநாதர் படமாகத் தொங்குவது தெரிகிறது. இயக்குநர் அரசியல் படம் எடுக்க நினைத்து, வழமையான சென்ட்டிமெண்ட் குடும்பக் கதையாக்கியிருக்கிறார். தோழர் அப்புவின் குடும்பம் ஏன் கிறிஸ்துவக் குடும்பம்? ஒன்றும் புரியவில்லை.
கொல்லப்படும் முன் இறுதியாக, நல்ல போலீஸ் ஒருவரிடம் ‘உங்க வேலையும் கஷ்டம்தான் இந்தக் காட்டுல’ என்கிறார் ஜெயமோகன்…இல்லை இல்லை தோழர் அப்பு. காவலர்கள் படும் பாட்டை அவர்களால் கொல்லப்படுபவர்களை வைத்தே சொல்லவைத்து, நம்மை காவல்துறை மீது பரிதாபம் கொள்ளச் செய்யும் குயுக்தியெல்லாம் ஜெயமோகனுக்கு கைவந்த கலை. பாவம், அதை அப்படியே இயக்குநரும் படத்தில் வைத்திருப்பது அவரின் போதாமை.
ஒரு படைப்பாளி எதை படைப்பாக்க வேண்டும், எப்படிப் படைப்பாக்க வேண்டும் எனச் சொல்வதெல்லாம் கருத்தியல் வன்முறை. ஆனால், மாபெரும் மக்கள் எழுச்சி இயக்கமாகத் திகழ்ந்த ஒரு அமைப்பைப் பற்றி படமாக்கும்போதும் வரலாற்று நேர்மை கட்டாயம் வேண்டும். அதை இப்படத்தில் முழுமையாக தவறவிட்டிருக்கிறார் இயக்குநர்.
கருத்தியல் ரீதியாகப் படம் பலவீனமாக இருக்கிறது. படம் மிக மெதுவாக நகர்கிறது. வசனங்கள் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். ஆனாலும் சில காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. புதிதாக ஒரு ஊருக்குள் நுழைந்த தோழர் அப்பு, அங்கிருக்கும் மக்களுடன் இணக்கமாவதற்காக வெற்றிலை கொடுத்து பேச்சில் கலக்கிறார். இதேபோல, இன்னொரு காட்சி. தலைமறைவுத் தோழர்களுக்கு அரிசி கொண்டுபோகும் பெண்ணை காவலர்கள் அடித்த பின், நல்ல போலீஸ் அப்பெண்ணுக்கு தண்ணீர்க் கேனைக் கொடுக்கிறார். அவளோ இரண்டு கைகளையும் குவிக்கிறாள். போலீஸ் அதில் ஊற்றாமல், தண்ணீர்க் கேனை கைகளில் வைக்கிறார். தமிழ் சினிமாவில், இதுவரை காட்டப்படாத ஒரு காட்சியும் படத்தில் உண்டு. முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. அவர்கள் பேசப்பேச, அதைக் கவனிக்காமல், தன் வலதுகையில் கட்டியிருக்கும் கடிகாரத்தைக் கழற்றி சாவிகொடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு அதிகாரி ‘நக்சலைட்டுகளை அடக்காம விட்டா, மக்கள் ஹீரோவா அவதாரம் எடுத்துருவாங்க’ என்கிறார். இதைக் கேட்டதும், சட்டென எம்.ஜி.ஆர். சாவி கொடுப்பதை நிறுத்திவிட்டு, ‘நக்சலைட் வாசனையே தமிழ்நாட்டுக்குள்ள இருக்கக் கூடாது’ என்கிறார். உழைக்கும் மக்களுக்காகப் பாடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களைக் கொன்ற கொலை பாதகர் எம்.ஜி.ஆர்.தான் என்பதை திரை வரலாற்றில் துணிச்சலாகப் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் இறுதிக் காட்சியில் தோழர் அப்புவின் கொலையும், அதன் வலியும் நம்மை கலங்கடிக்கச் செய்கிறது. அப்படியொரு காட்சிப்படுத்தல்.
இறுதியாக ஒரு கேள்வியும், ஒரு ஆச்சரியமும். தோழர் அப்புவைக் காட்டிக் கொடுக்கும் பள்ளி ஆசிரியரின் பெயர் ஏன் புவியரசு எனவாக சூட்டப்பட்டிருக்கிறது? ஆச்சரியம் என்னவெனில் ‘நக்சல்பாரிக்கு மரணமில்லை; நக்சல்பாரிக்கு அழிவில்லை’ எனக் கோஷம் எழுப்பும் தலைவராக நடித்திருக்கிறார் சாம்ராஜ். சில வருடங்களுக்கு முன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் கூட்டத்தில், நக்சல்பாரிகளைப் பற்றி எள்ளலாகப் பேசி, ஜெயமோகனைக் குளிர்வித்த சாம்ராஜை எப்படி இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தார் இயக்குநர்!
வரலாற்றைப் புனைவு கலந்து படைக்கலாமே தவிர, வரலாற்றையே தன் விருப்பத்திற்கு ஏதுவாக, தன் புரிதலின் போதாமையில் படைத்தால் அது என்னவாக இருக்கும் என்பதற்கு ‘ரத்த சாட்சி’ ஒரு பரிதாபமான உதாரணம்.

வெள்ளி 18 2022

புவி கோளத்தின் முக்கிய வில்லன் ????

 




ஒரு பக்கம், புயலும் வெள்ளமும்..இன்னொரு பக்கம் வறட்சியும் கடும் வெப்பமும் மனித இனம் கண்டிராத அளவுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்தி இந்த  புவி கோள உலகத்தின் அழிவு தீவிரமாக போய் கொண்டு இருக்கிறது.


இது மனிதர்களால. ஏற்பட்டதல்ல... இதற்கு காரணம் ஜீ கூட்டமைப்பு நாடுகள் என்று சொல்லப்படுகின்ற   G20  என்ற நாடுகள்தான் 80%  பசுமை இல்லா வாயுக்களை வெளியிடுகின்றன அதிலும் குறிப்பாக ஓசோணை ஓட்டை போட்டு வருவது  G8 கூட்டமைப்பில் உள்ள ஏகாதிபத்திய நாடுகள்தான்.

 இப்படியான புவிகோளத்தின் நாசத்திற்கு முக்கிய வில்லன் யார் என்றால் அது அமெரிக்காதான். அதற்கு முக்கிய ஆவணம் இதுதான் அமெரிக்காவின் மேலே உள்ள ஓசோனில்தான் ஓட்டை விழுந்துள்ளது.


ஆனால் அமரிக்காவோ...அதை ஒத்துக் கொள்ளாமல் இந்தியாவில் இந்தியர்கள் வீட்டில் சமைக்க விறகை எரிப்பதால்தான் கார்பன் உமிழ்வு அதிகமாகிறது என்று நாக்கூசாமல் புளுகியது.

அமெரிக்க  மற்றும் இந்திய அதிபர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பூமியின் அழிவை சந்திக்கும் மக்களை நினைத்து  மீடியாக்களின் முன் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். வெற்று அறிக்கையை வாசிக்கிறார்கள். மன்வைக்கிறார்கள்.

இதுதான் பூமியின் இறுதிக்காலம் என்று சூழுலியல் விஞ்ஞானஅறிஞர்கள்  எச்சரித்துவிட்டனர். கரிமில வாயுவைவிட ஆபத்தானது மீத்தேன்.

பூமியின் கனிம வளங்களை கொள்ளையிட்டு சூறையாடும் மேல்நிலை வல்லரசுவின் கார்ப்பரேட் கும்பல் பூமிக்கு ஆபத்து வந்தால் வேறு கிரகத்திற்கு சென்று விடுவார்கள்.

அவர்கள் செல்வதற்க்குத்தான் வேறு கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறார்கள். பெரும்பாண்மை மக்களுக்கு மரணம் நிச்சயம்.

 இதையும் கொஞ்சம் படித்து விட்டு போங்கோ....

வியாழன் 03 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -19

 காலம் செய்த கோலம்


அவள் பெயர் கண்ணகி

அவளின் கோவலன்

உயிருடன் இருக்க....

இரண்டாவதாக.. காவலனை

கரம் பிடித்தாள்.......

 

(மனுசாஸ்திரத்துக்கு எதிராக)

ஞாயிறு 23 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -18

 செனட்சபையின் உறுப்பினர் ஒருவர் உடல்நலமில்லாமல் தர்ம ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதால்... செனட் சபை சரிவர கூடவில்லை எனக்கும் அவர்கள் கூடும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வரும் சிலரும் என்மேல் சந்தேகம் கொண்டு எனக்கு தெளிவில்லாமல்  கசுமுசு.ன்னு பேசிக் கொள்கிறார்கள். நானும் அவர்களிடம் கேட்க விரும்பாததால் தொடர்ந்து அந்தக் காதலர்களின் சரடு கதைகளை எழுத முடியவில்லை....

தினசரி நாளிதழ்கள்  படிக்கும் பழக்கமும் அடியோடு நின்றுபோனதால் அதில் வரும் சரடு கதைகளை படிக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை... எதையாவது எழுதலாம்தான்..... என்னத்தை எழுதுவது.

எழுதினவன் ஏட்டை கெடுத்தான்..

படித்தவன் பாட்டை கெடுத்தான்--

----------------------------------------------


ஓய்வும் சலிப்பும் எனக்கு ஏற்படவில்லை  ..என்பதை தெரியப்படுத்துகிறேன்

ஞாயிறு 02 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -17

 அண்ணன் எலக்ட்ரிசன்..அண்ணி சூப்பர்வைசர்..அண்ணனுக்கு உதவியாளர் இந்தக்கதையை சொன்னவர். அண்ணன் இந்த தொழிற்கூடத்தில் சிறுவயதிலிருந்தே வேலை பார்த்து எலக்ட்ரிசனாக உயர்ந்தவர் அண்ணி நிறைய படிப்பு படித்து அதன்மூலமா சூப்பர்வைசராக பதவிக்கு வந்தவரு.. ஆரம்பத்தில் அண்ணனோட வேலையில குற்றம் கண்டுபிடிக்கிறதையே வேலையாக வச்சிருந்தாங்க.. அண்ணன் அந்த தவறை எல்லாம் பொறுமையாக இருந்து திருத்திக்கிட்டாங்க...அதோடு தன்னோட உதவியாரும் அந்த தப்ப செய்திடக்கூடாதுன்னு தொழில் நுணுக்கத்தை சொல்லி தந்தாங்க

அண்ணன் அண்ணி மேல கோபம் கொள்ளாமல் அவுக சொல்றத யெல்லாம் கேட்டு சரி செய்ததால் அண்ணன் மேல் ஒரு பிரியம் வந்து அது காதலாக மாறிவிட்டது. 

அண்ணன் வேலைக்கு தாமதமாக வந்தாலோ... லீவு போட்டாலோ அண்ணி .. உதவியாளரைத்தான் மொதல்ல கேட்பாங்க....உதவியாளர் தெரியல என்று சொன்னால் அவரைத்தான் கோபிப்பாங்க.. அவுங்க இருவரின் காதலுக்கும்  தபால்காரர் அந்த உதவியாளர்தான்.


நாளாடைவில் உதவியாளர் இல்லாமலலே கோயில், சினிமா தியேட்டர்போன்ற இடங்களுக்கு அவர்களே தனியாக சென்றுவர பழகி விட்டார்கள்... இப்படியே நாட்கள் சென்றன.

அந்த உதவியாளரும் பதவி உயர்வு அளிக்கபட்டு வேறு ஒரு பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஒரு நாள் அந்த முன்னால் உதவியாளரை தேடி அண்ணி வந்தார். அண்ணனை பற்றி விசாரித்தார். தான் பிரிவுக்கு மாற்றப்பட்டதிலிருந்து அண்ணனிடம் சரியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.  இரண்டு வாரங்களாக வேலைக்கும் வரவில்லை தொடர்பும் கொள்ளவும் முடியவில்லை. என்ன ..எது என்று விசாரித்து வா என்று கேட்டார். சரி என்றுவிட்டு அண்ணன் வீட்டுக்கு சென்று விசாரித்து வந்த விபரத்தை  வேலை  பளுவினால் உடம்புக்கு முடியாமல் போனதினால் அண்ணியிடம்    சொல்லாமல் மறந்துவிட்டார்  முன்னால் உதவியாளர்.

உடம்பு தேறி வேலைக்கு வந்த போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சி செய்தி தெரிந்தது. அண்ணி  தற்கொலை செய்து கொண்டார் என்று..அன்று எல்லா தொழிலாளர்களுடன் சேர்ந்து மருத்துவமனை சென்று   துக்க நிகழ்வில் கலந்து கொண்டார் உதவியாளர்.


ஒரு மாதம் இரு மாதம் வரை தற்கொலை செய்து கொண்ட சூப்பர்வைசர் அண்ணியை பற்றித்தான் தொழிற்கூடத்தில் பேச்சாக இருந்தது. அண்ணி கரப்பமாக இருந்ததும். அண்ணியின் வீட்டில் கர்ப்பத்துக்கு காரணமானவரை தேடியதும். அந்த நிலையில் அண்ணன் கானாமல் போனதும்.. அண்ணி தனக்குதானே தீ வைத்துக் கொண்டதும்தான் செய்தியாக இருந்தது.


ஆனால், உண்மை அந்த உதவியாளருக்குத்தான் தெரியும். அண்ணன் தாய் தந்தை எந்த உறவும் இல்லாதவர்.  அண்ணியோ தொழிற்கூடத்தின் முதலாளியின் உறவுக்காரர். தாய்தந்தை அண்ணன்.தம்பி போன்ற எல்லா உறவும் பெற்ற வசதியான இடத்தை சேர்ந்தவர்.  அண்ணி அண்ணனைத்தான் கட்டிக்கிடுவேன் என்று உறுதியாக பிடிவதாமாக இருந்ததால்... முதலில் அண்ணனை கானாத பொணமாக்கினார்கள்.... பிறகு தங்களின் கௌவரத்ததையும்  காப்பாற்றிக் கொள்ள அண்ணியின்மீது பெட்ரோல் ஊற்றி சாகடித்தார்கள்.  ரெண்டு கொலைகளை செய்தது பெரிய இடமாதலால் கேள்வி கேட்பார் யாருமில்லாததால்  கொலை தற்கொலையாக ஜோடிக்கப்பட்டது. 

 தற்போது. அந்தக் தொழிற்கூடத்தில் வேலை செய்த பெரும்பாலானவர்கள் ஆட்குறைப்பினால் வெளியேற்றபட்டார்கள் .அவர்களில்  உதவியாளரும் ஒருவர் அவருக்கு வயது எழுபது...


புதன் 28 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -16

ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டீர்கள். எனக்கு எந்த அனுபவமும் தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்லத் தெரியாத முட்டா பீசாகத்போனோன் என்று நொந்து கொண்டு தன் காதல் கதையை சொன்னார் அவர்.


 சிறுபிள்ளையிலிருந்து சர்ச்சில்தான் வளர்ந்து வந்தான். சர்ச்தான் அவனுக்கு எல்லாமே... சர்ச்சில் இருப்பவர்கள் மட்டுமே அவனுக்கு உறவுக்காரர்கள்.  வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வரும் பகதர்கள்தான் அவனின் வெளி உலகம், இப்படித்தான் வாலிப வயதுவரை இருந்துவந்தான். விசேச நாட்களில்  சர்ச்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில்  இளம் பெண் தேவதைகளின்  நிகழ்ச்சிகளில் போது தேவதைகளின் உதவியாளர்களாக  பணி செய்த போது பல தேவதைகளின் ஒரு தேவதை இவனிடம் அன்பு செலுத்தியது.

அன்பா. அம்பா என்று அப்போது அவனுக்கு தெரியாது. சர்ச்சுகளில் பணிபுரிந்த ஆண்ட்னி. கிருபா இவர்களின் எபிசோட்களின் மூலம்தான் தேவதை அவனிடம் காட்டியது காதல் என்று தெரிந்தது.

சான்சன்...அவனது பெயர் சர்ச்சுகளின் பாதர் முதற்கொண்டு எல்லோரும் அழைப்பது ஜான்.

ஒரு நாள் அந்த ஜானை ..தேவதை தனியாக அழைத்தது. பாதர் இட்ட வேலையை செய்ததினால் தேவதையின் அழைப்பை மறந்து போனான் கோபம் கொண்ட தேவதை அவனிருப்பிடம் வந்து அவனை திட்டி அவ்விடத்தின் ஒரு மூலைக்கு அழைத்து சென்று  முத்தம் கொடுத்து தன் காதலையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது.  நடுங்கிப்போன அவன் அந்தத் தேவதையிடம் சொன்னான்

தாய் தந்தை யாரென்று அறியாதவன். சர்ச்சே கதியென்று இருப்பவன். படிப்போ கம்மி..நனோ அனாதை  இதில் நீயோ தேவதை... நான் எப்படி உனக்கு ஈடாவேன் என்றான். தேவதைக்கு கோபம் வந்தது. அவன் கன்னத்தில் அறைந்தது.. சத்தம்  கேட்டு புளோரினா அக்கா வந்தது.

தேவதையை கண்டதும் புன்முறுவல் பூத்தது. நிலமையை புரிந்து கொண்டு ,ஃபாதரிடம் பேசு என்று தேவதையிடம் கூறியது.


ஒரு நாள் ஃபாதர் ஜானிடம் தேவதையை விரும்புகிறாயா..? னு கேட்டார். பதில் சொல்ல முடியாமல் திணறினான். புளோரினா அக்காவிடம்  பேசினார்.


கா்த்தர் பிறந்த நாள். அன்று சர்ச்சுக்கு போலீஸ் ஆய்வாளர் வந்தார். ஜான் என்பவனைப்பற்றி விவரம் கேட்டார். தேவதையின் ஒன்றுவிட்ட உறவு ஒன்று ஜான் மீது புகார் தெரிவித்ததாக தெரிவித்தார். .பாதர் பேசிய பேச்சுகளுக்கு பணிந்து வணக்கம் செலுத்திவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் ஜானை சரச்சைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று ஃபாதர் உத்தரவிட்டார். ஆண்டனி, கிருபா இவர்களை கூப்பிட்டு.. ஜானுக்கு இரண்டாயிரம் அபதாரம் விதித்து இருக்கிறார்கள். கட்டிவிட்டு வரவும் என பணித்தார்.


ஜானுக்கு  ஒன்றும் புரியவில்லை. .பாதரிடம் கேட்கவில்லை, மற்றவர்களும் சொல்லவில்லை...ஒரே குழப்பத்துடன் இருந்துவந்தான்.  தனியாக உட்கார்ந்து இருந்தவரை சுட்டிகாட்டி அவரைப்போலவே நானும் திருமணம் ஒன்று இல்லாமலே சர்ச் ஊழியனாகவே காலத்தை கடந்து விட்டேன் என்றான்.


அந்த தேவதை ..ன்னு இழுத்தார் ஒருவர்.  தெரியவில்லை என்று கையை விரித்தார்.சில வருடங்களில் .பாதர் இறந்தவிட்டார் என்றார்.


இதையும் கொஞ்சம் படியுங்கள் 



ஞாயிறு 18 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -15

 இவன் பேரு முத்து  இவன் மனைவி பேரு ராக்கு.. ரெண்டு பெயரும் சேர்ந்து முத்துராக்கு ஆனது.

சிறு வயதிலிருந்தே முத்துவுக்கு குறைபாடு, அதற்கு காரணம்...சிறுவயதில் ஏற்பட்ட கஞ்சா. மற்றும் தண்ணி போன்ற போதை பழக்கத்தால்  “செல்ப்” எடுக்காத நிலை.

அவனது மனைவிக்கு கருப்பை கோளாறு அதனால் பிள்ளை பெறும் தகுதியை இழந்தவர். இவர்கள் இருவரையும் அவர்களின் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

கொஞ்ச நாள் பிரச்சினை இல்லாமல்தான் அவர்கள் வண்டியும் ஓடியது. என்றைக்கு தெரு நாட்டாமையின் வீட்டுக்கு குடிபோனார்களோ.. அன்றிலிருந்து  நாட்டாமைக்கும் ராக்குக்கும்  பத்திகிருச்சு... நாட்டாமையின் வைப்பாட்டியான “தீ கொளுத்தி” நோய்வாய்ப்பட்டு செத்துபோனதால் அடுத்தாக நாட்டாமை ராக்குவை கைவசப்படுத்தினான் .

தெருவுக்கே எல்லாம் தெரிந்தும் முத்துவுக்கு மட்டும் தெரியவில்லை... பந்தல் அமைப்பு வேலை செய்பவர்கள் யாராவது ராக்குவிடம் சும்மா பேசினாலும் முத்து சந்தேகப்பட்டு   ராக்குவிடம்  சண்டை போடுவான்.

ஒருநாள் ராக்கு கையாலதவனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று எண்ணினாள். அந்த நாளும் வந்தது. இரவு ராக்கு முத்துவை அனைத்து உறவு கொள்ளுமாறு வற்புறுத்தினாள். அவனால் முடியவில்லை. அவளிடமிருந்து தப்பித்துவர  அவனால் முடியவில்லை. அந்த இரவில் கத்தி கூப்பாடு போட்டான். அவள் அவனை விடுவதாக இல்லை. ஏண்டா..ஒன்னாலதான் முடியலையே...இதுல.. சந்தேகப்பட்டு சண்டை வேறு போடுறியா..  இப்ப  செய்யிடா... செய்யிடா... என்று அவனை பிதுக்கி எடுத்துவிட்டாள்.

அவனின் அலறல் சத்தம் கேட்டு தெருவே அவன் வீட்டு முன் கூடியது. அவள் பெயரைச் சொல்லி  வெளியிருந்து சத்தம் கேட்டதும் அவளின் ஒரே  உதையில் கதறியபடியே வெளியில் வந்து விழுந்தான்.

வௌியில் நின்ற  பெண்கள் ஆண்களை கண்டதும்.. அய்யோ என்னை காப்பாத்துங்க  காப்பாத்துங்க என்று கத்தினான். அவனுக்கு ஆதரவாக சில பொம்பளைகள் பேசியபோது.. அவள் விவரத்தை அவர்களிடம் சொன்ன போதுதான் அவனின் கதறுக்கு காரணம் தெரிந்தது.

விசயத்தை கேள்விப்பட்டதும் சிறுகூட்டத்தில் பாதி கலைந்தது.. ஒன்றிரண்டு பெர் அவனுக்கு புத்தமதி சொன்னார்கள்

“உன்னாலதான் முடியலையே..வாய பொத்திகிட்டு இருக்க வேண்டியதானே” ஒழுங்கா  அவ ஊத்துற சொத்த தின்னபிட்டு கிடய்யா...!! என்றார்கள்.. நாட்டாமை வருவதைக் கண்டதும்  அந்த ஒன்றிரண்டு பேரும் கழண்டனர்.


இப்போ..அவன் ட்ரை சைக்கிள் ஓட்றான் ..அவள் ஓட்டலில் வேலை செய்கிறாள். நாட்டாமைக்கு வயதாகிவிட்டாலும்... தொடர்பில் இருப்பதாக செய்தி...


அட..சண்டாளா.... இப்படியுமா...? என்றுதான் கதை கேட்டவர்களுக்கு தோன்றியது.

.கதை சொன்னவரையும் அவன் சந்தேகப்பட்டு..அவளிடமும் கதை சொன்னவரிடமும் சண்டையிட்டானாம்.  ஆக.. அந்தக் கடுப்பில் மேற்படி கதையை அவிழ்த்துவிட்டார்.

புதன் 07 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -14

 அவர் வீட்டு உபயோக பொருள்களை தவனைக்கு விற்பனை செய்யும் வியாபாரி . அவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ள குடும்பம் உள்ளது.தன் வியாபாரத்துக்கு சில புதிய பொருள்களை வாங்க முதலீடுக்காக  கடன் கேட்டு திரிந்தார். தவனைக்கு வாங்கியவர்கள் வாராவாரம் பணத்தை கொடுத்திருந்தாலே  புதிய பொருட்களை சிரமம் இல்லாமல் வாங்கியிருப்பார். ஒட்டு மொத்தமாக எல்லோரும் தவனைத்தொகையை கட்டாமல் குரோனாவை காட்டி கை விரித்துவிட்டனர். 

ஒருநாள் புதிதாக பழகிய நண்பரிடம் கடன் கேட்டபோது..அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பார்ப்பதாக சொன்னார். அதை அந்த வியாபாரி கெட்டியாக புிடித்துக்கொண்டு அவரை அடிக்கடி சந்திக்கலானார்.  வழக்காமாக கூடும் இடங்களில் நண்பரை காணாவிட்டால் நண்பரின் வீட்டுக்கே சென்று சந்தித்துவிட்டார்.

அந்த வியாபாரி அந்த நண்பரை சந்திக்கும்போதெல்லாம் அப்போதைக்கு தோன்றிய  நம்பும்படியான தகவலை சொல்வார்.

“ஒருத்தரிடம் கேட்டேன்...அவருக்கு வரவேண்டிய பணம் ..ரெண்டு நாள்ல வந்திடும். பணம் கைக்கு வந்ததும். தனக்கு போன் பன்னி விடுவதாக சொல்வார்.... இப்படியாக பல பொய்கள்.


ஒருநாள் வியாபாரியின் நண்பரிடம் நண்பரின் மனைவியானவர் சொன்னார். “இந்தா..பாரு..நாளைக்கு குழுக்கடன் ஐம்பாதயிரம் வந்திடும்.. பத்தாயிரம் நான் எடுத்துக்கிடுவேன்...மீதி நாற்பதாயிரத்தை அவரிடம் கொடுத்தால் அவர் ஐம்பாதாயிரம் கட்டனும் ..சரி என்றால் அவரிடம் இந்த நாற்பாதியிரத்தை கொடு.... வாரா வாரம் ஐய்நூறு கொடுத்திடனும்... சொல்லு.... என்ன ... கணவனும் மனைவியும் பேசி உறுதி படுத்திக் கொண்டனர்.


மறுநாள் காலையில் மகளிர் குழு பணம் கையில் கிடைத்ததும். நண்பர் வியாபாரிக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரச் சொன்னார். கடனுக்காக தவித்த வியாபாரி  சிறிது நேரத்தில் வந்தார்.

நண்பரின் மனைவியானவர் நேரிடையாக வியாபாரிடம் பேசினார். “உங்களுக்காக என் கணவர் பல பேரிடம் கடன் கேட்டு பார்த்தார். இந்தா தர்ரேன்..அந்தா தர்றேன்னுதான் சொல்கிறார்களே! தவிர யாரும் பணம் தந்தபாடில்லை... உங்களுக்காக பணம் கேட்டு ஒரு த்தரும் தரவில்லையே  என்று புலம்பியத பார்த்துதான் உங்களுக்காக மகளிர் குழுவில் இருந்து அம்பதாயிரத்துக்கு லோன் போட்டு பத்து ரூபா பிடித்தது போக  மீதி நாற்பாதாயிரம் இந்தாங்க என்று பணத்தை வியாபாரிடம் நீட்டீ.... வாரா வாரா ஐநூறு வந்து கொடுத்துடுங்க ...

வியாபாரி மெச்சி பணம் கிடைத்த மகிழ்ச்சியில் கண்டிப்பாக வாராம் தவறினாலும் நான் தவறாமல் வந்து கொடுத்து விடுறேன்ம்மா ...உறுதி சொல்லி விட்டு பணத்தை பெற்றுக் கொண்டார்...நண்பர்க்கு ஒரு  ”புல.்” சரக்கு வாங்கி  கொடுத்துவிட்டு விடைபெற்று சென்றார்.


ஒரு வாரமாக வியாபாரி அந்தத் தெரு பக்கமே வரவில்லை... நண்பரின் மனைவி வியாபாரிக்கு போன் செய்து கேட்டபோது வேறு தெருவில் வியாபாரம் செய்து கொண்டு இருப்பதாகவும்.. நாளைக்கு  வந்து வாரப் பணம் தருவதாகவும்.. 

வியாபாரி வரும் நேரத்தை தெரிந்து கொண்ட மனைவியானவர் தன் கணவனை வெளியே அனுப்பி வைத்தார்.  வெளியே சென்ற நண்பரை வியாபாரி வழியில் சந்தித்த போது நண்பர் அவசர வேலையாக போய்விட்டு வருவதாகவும் தான் வரும்வரை வீட்டிலே இருக்கும்மாறும் தெரிவித்துவிட்டு சென்றார்.

வியாபாரி வீட்டுக்கு வந்தார். கதவு சாத்தியிருந்தது. நண்பரின் பெயரைச் சொல்லி அழைத்துப் பார்த்தார் பதில் இல்லை. வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்தார். யாரும் கதவை திறந்து உள்ளே போனார். நண்பரின் மனைவியானவர்.. கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தார்.  பெயரைச் சொல்லி அழைத்தார். பதில் இல்லை. மெதுவாக காலைத் தொட்டார். நண்பரின் மனைவயிானவர் விழித்துப் பார்த்து...“ ஒ...நீங்களா..எப்ப   வந்தீங்க.. இலேசா படுத்தேன் நல்லா தூங்கிவிட்டேன். கட்டிலிலே சுவர் ஓரமாக சாய்ந்து கொண்டு கட்டிலிலே உட்காரச் சொன்னார்.

வியாபாரி உட்கார்ந்ததும் உங்க நண்பர் அவசர வேலையாக போயிருக்கார் என்று சொன்னார். வியாபாரி ..பேசிக்கொண்டே பையில் கட்டையாக மடித்து வைத்திருந்த பணத்தில் ஒரு ஐய்நூறை கொடுத்தார். அதை வாங்கிய அவர் ..வியாபாரி பார்க்குபடியாக தன் சட்டை மார்புக்குள் வைத்தார். பணத்தை பையில் வைத்துக் கொண்டு குடிக்க தண்ணீர் கேட்டார் வியாபாரி,. அவரை உரசியபடியே கட்டிலிருந்து இறங்கி  அடுப்பாங்ரைக்குள் சென்று தண்ணீர் வந்து கொடுத்தார்.

வாரத்துக்கு  ஐய்நூறு ஐய்நூறாக கொடுப்பதைக் காட்டிலும் இரண்டாயிரமாக கொடுத்தால் ஒரு மாதத்துக்கு அடச்ச மாதிரி இருக்குமே ஒரு பிட்டை எடுத்து போட்டார். வியாபாரி நல்ல ஐய்டிவாக இருக்கே என்று பையிருந்த நோட்டு கட்டைஎடுத்து மூன்று ஐய்நூறை கொடுத்தார்...

கணவனும் மனைவியுமாக சேர்ந்து போட்ட திட்டப்படி வியாபாரி அவர்கள் வலையில் விழுந்துவிட்டார். நண்பர் மனைவி தந்த சுகத்தில் மெய் மறந்துவிட்டார். இப்படியாக வாரந்தோறும் வியாபாரி வருகின்ற நேரத்துக்கு முன்பாகவே வேலைக்கு செல்வதும் நண்பரின் மனைவி வியாபாரிக்கு போன் போட்டு வரவழைப்பதும் அழைப்பதும், சுற்றியுள்ளவர்களுக்கு வட்டிப்பணம் தர வந்ததாக கதை அளப்பதும்.  இப்படியாக அவர்களின் காதல் நடப்பு எந்த வில்லங்கம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

வியாபாரி உழைத்த பணம் முக்கால்வாசி  அவரின் நண்பர் மனைவியின் உடலில் அலங்கார நகைளாக காட்சியளித்தது.

..

சனி 03 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -13

இதன் முன்கதையை படித்தால் விவரம் புரியும்.. படிப்பதும் படிக்காமல் இருப்பது தங்களின் விருப்பம்..

தொடர்ச்சி.....

இரவு ஏழு மணிக்கு காவல் நிலையம் சென்ற போது இரண்டு பேரும் எஸ்எஸ்அய்யிடம் அதாவது சிறப்பு எஸ்அய்யிடம் தங்கள் தரப்பு ஞாயத்தை விளக்கி சொல்லிக் கொண்டிருந்தனர். நான் விசாரித்துக் கொண்டிருந்த எஸ்எஸ்அய்யிடம் வந்து நின்றேன். அவர் அந்தப் பெண்களுக்கு ஆதரவாக என்னை சத்தம் போட்டார்.


ஆடு,மாடு, நாய், பூனை வளர்க்கிறவனலெல்லாம் கட்டிபோட்டு வளக்கனும்டா....அடுத்த வீட்டுக்கு போகவிடலாமா?? என்னை பார்த்து சொன்னார்.நான் பேச வாயெடுத்த போதெல்லாம் நீ..எதுவும் சொல்ல வேனாம்..நான் சொல்றத நீ கேளு....

“ அந்தப் பூனையை நீ வளத்தியோ...வளக்கலையோ  அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்று இரவு அந்தப் பூனையை பிடித்து எங்கிட்டாவது விட்டுறனும்.. அப்படி விடலைன்னா..நீ தண்டம்கட்டனும் ஆமா சொல்லிப்புட்டேன்... பூனையை பிடித்து விட்டுபுட்டு  நாளைக்கு வந்து சொல்லனும். ரைட்டர கூப்பிட்டு இவனிடம் எழுதி கையெழுத்து வாங்கு என்றார்.

 ரைட்டரிடம் எழுதி கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது.. அந்த இரண்டு பேருக்கு ஆதரவாக   தெருவில் உள்ள சிலர் வந்திருந்தனர். புகார் கொடுத்த மற்றும் உதவிக்கு வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. அவர்களின் பேச்சிலும் நடையிலும் செய்கையிலும் தெரிந்தது... அன்றியிரவே.. கூலிக்கு  பேசி இரண்டு பேரைக் கொண்டு கறி திண்டதாக சொல்லப்பட்ட பூனையை பிடித்து மாடக்குளம் கன்மாயை ஒட்டியுள்ள பகுதிகளில் விடப்பட்டது..

அப்படி விடப்பட்ட பூனை மறுநாள் காலையில் தீ கொளுத்தி மகளின் வீட்டில் உலாவிக்கொண்டு இருந்தது. என்னடா செய்வது என்ற யோசனையில் இன்று இரவு காவல் நிலையத்தில்  நடந்தவற்றை சொல்வது என்று முடிவெடுத்து  ஏழு மணிக்கு முன்னமே காவல் நிலையம் சென்று ரைட்டரிடம் விபரத்தை சொன்னோன்.

அந்த ரைட்டரோ சிரித்துக் கொண்டே... சரியான லூசுய்யா... ரெண்டு சிரிக்கிக..உம்மேல புகார் கொடுக்குதுன்னா என்னா அர்த்த்முன்னு தெரியாத ஆளா இருக்கியே.... அந்த ரெண்டு சிரிக்கிக ..உன்ன படுக்க கூப்பிடுறாளாக....நீ என்னமோ..உத்தம ராஜாவாட்டம் நியாயம் பேசிக்கிட்டு இருக்க.....  அவரு வந்த பிறகு சொல்லு...போ....


என்னடா..இது அவளுகளைவிட..இந்தாளு இப்படி குண்ட தூக்கி போடுறாரு... அவளுக நோக்கமே.. எதிலாவது என்னை மாட்ட வைத்து செலவ இழுத்துவிடுறதுதான்...இதுல இவளுக படுக்க கூப்பிடுகிறாள்களாம்..நல்ல இம்சையாகத்தான் இருக்கு........ இனி எஸ்எஸ்அய் நாம சொல்றத கேட்கவில்லையென்றால் இன்ஸ்பெக்டரை பார்த்து  முறையிட்டுட வேண்டியதுதான் என முடிவெடித்து  எஸ்.எஸ்.அய்..வருகைக்காக காத்திருந்தேன்.


புகார் கொடுத்த அவள்கள் தங்கள் பரிவாரத்துடன் ஆட்டோவில் வந்து இறங்கினாள்கள்.. இப்போது அவள்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு சிங்கார சீமாட்டிகளாக வந்தாள்கள்.

எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.. வாழைப்பழம் தின்னாத குரங்கு ஒன்று உண்டா? என்று கேட்ட கேள்வியைப்போல் சிங்காரிகளின் அழகுக்கு மயங்காத காவலர் உண்டா?? என்ற கேள்வியே... என் மனதில் ஓடியது... என்னநடந்தாலும் இன்ஸ்பெக்டரிடம் முறையிடுவது என்ற முடிவோடு இருந்தேன்.

நெடுநேர காத்திருப்புக்கு பின் விசாரித்த எஸ்எஸ்அய் வந்தார்.. காவல்நிலைய வாசலில் நுழையும்போதே..“ என்னய்யா..பூனையை புடுச்சு விட்டாச்சா.... என்று கேட்டுக் கொண்டே அவர் இருக்கையில் அமர்ந்தார். நானும் தன்னியல்பாக... புடுச்சு விட்டுட்டேன் சார், என்றேன்.

முதலில் என்னை விசாரித்தார்... விபரத்தை கூறினேன்.“ நீங்க  சொன்ன உத்தரவுப்படி  அன்றிரவே பூனையை புடுச்சு... மாடக்குளம் கன்மாய்க்கு அருகில் விட்டுட்டு வந்திட்டேன்... ஆனா..பூனை மாறுநாள் காலையில  வந்துவிட்டது. இவுக வீட்டுக்குள்ள இருந்து,அந்தப்பூனை வெளியே வந்ததைப்பார்த்தேன். நான் பூனையை வளர்க்கவில்லை.. எனக்கும் அந்தப்பூனைக்கும் எந்த சம்பந்தமில்லை.. தெருவில் திரிந்த பூனை பொய்யாக என் மேல் புகார் கொடுத்திருக்கங்க.... உங்க உத்தரவுக்கு கீழ்படிந்து கூலி ஆட்கள் மூலம் பூனையை பிடித்து வெகுதூரத்தில் விட்டு வந்தும்..அந்தப் பூனை திரும்பவந்துவிட்டது.. இனிநான் என்ன செய்யட்டும்.. நீங்கதான் சொல்லனும்.. நான் அந்தப் பூனையை பிடித்தது. ஆட்டோவில் கொண்டு சென்றது... எல்லாமே புகார் கொடுத்த இரண்டு பெண்களுக்குமே தெரியும் சார் என்றுவிட்டு  ஓரமாக நின்றேன்.


புகார் கொடுத்த இரண்டு பெண்களிடம் என்னம்மா பூனையை பிடித்தது உங்களுக்கு தெரியுமா..என்றார். தெரியும்சார்.. பூனையைின் கண்ணை பொத்திக் கொண்டு போகம...போனதால் அந்தப்பூனை திரும்பவும் அந்தாளு வீட்டுக்கே வந்திருச்சு சார்...

“ஏய்யய்யா...பூனை கண்ணபொத்தாம போயிட்ட.. சாக்குல கட்டி போய் விட்டுருந்தா...திரும்ப வந்திருக்குமாய்யா...??”

“ சார்..அரிசி சாக்குலதான்..ஒரு பூனைக்கு இரண்டு பூனையை புடுச்சு ஆட்டோவுல போயி விட்டுட்டு வந்தேன் சார்.. என்றேன்.

திரும்பி வந்த பூனை ..திரும்ப அவுங்க வீட்டு கறிய திங்காம்ம இருக்குமாய்யா...???

“சார்..என் பூனை இல்லையே சார்.? ”

எஸ்எஸ்.அய் என்னை வெளியே..நிற்கச் சொன்னார்... வந்து நின்றேன்

பத்தரைக்கு மணிக்கு மேல் என்னை அழைத்தார். உன் மெல் புகார் கொடுத்த பெண்களை சமாதனம் செய்து அனுப்பிவிட்டேன்.. இனிமே பூனை. நாய் எதுவும் வளக்காதே!.. அப்படியே வளத்தால் கட்டிப்போட்டு வளக்கனும் புரியுதா” என்றார்.

“சார், நான் வளக்கவே இல்லை..சார்.”

“ சொன்னா கேளுய்ய... ம்ம்ம்... நீ..எதுவுமே வளக்காமலா...அதுக..உன் பேர்ல புகார் கொடுக்குதுக..”..

“ என் இடத்த..பாதையாக பயன்படுத்திட்டு வராக...அதை எதிர்த்ததால்..இப்படி பொய்யா...புகார் செய்கிறார்கள்...”

“ உன் இடம் என்றால் வேலி போட்டுக்க...”

“ அந்த இடத்து உரிமை சம்பந்தமாக வழக்கு நடந்து வருது சார்”


“ சரிசரி....புலம்பாதே!....  செலவுக்கு கொடுத்துட்டு போய்யா”

“சார். பூனையை பிடிக்கிறதுக்கும், ஆட்டோவுக்கு இருந்த காசை செலவழித்துவிட்டேன். இப்போதைக்கு காசில்லை ...நாளபின்னக்கு இந்தப் பக்கம் வந்தால் தருகிறேன்.

“ஆமா.  இப்படித்தான் எல்லா பயல்களும்.. சொல்றான்... நாளைக்கு கண்டிப்பா வந்து தருவியா...???”

“ இல்ல..சார்..கண்டிப்பா வந்து தர்ரேன்... எவ்வளவு சார் வேணும்....”

“ ஒன்னு ரெண்டு வந்து கொடு..”.......

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தபின் நான் புலம்பினேன்.. ஆயிரம் ரெண்டாயிரம்மா... வேணும்” முதல்ல உனக்கு கொடுத்துட்டுதான் மறு வேல பார்க்கனும்...”

“ நான் வீட்டுக்கு வந்தபிறகு ..ரெண்டு சிறுக்கிகளும் கைதட்டி. கும்மாளமிட்டு சிரித்துக் கொண்டு இருந்தனர்.  நல்லாயிருங்கடி என்று மனத்துக்குள் திட்டிக் கொண்டு...இரண்டு வாரத்துக்குமேல் அவள்கள் கண்ணில் எனது இடத்தில் எத்தகைய ஆக்கிரமிப்பும் செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவந்தேன்.

பூனை கதை முடிந்தது.


செவ்வாய் 30 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -12

 செனட் சபையில் கூடியிருந்த காதலர்களில் ஒருவர்.. நமக்கு தெரிந்தது. அறிந்தது போன்றவற்றை எல்லாரும் சொல்லிவிட்டோம். ஒருத்தர் மட்டும் எதுவும் சொல்ல வில்லை.. இந்த முறை அவரு அறிந்தது..தெரிந்தததை இந்த சபையின் முன்னே சொல்ல வேண்டும் என்றவுடன் எல்லோரும் என்னை பார்த்தார்கள். 

ஒருவாறு உடம்பை நெளித்து  எனக்கு எந்த அனுபவமும் இல்லையே என்று சொல்லி பார்த்தேன்.

அவர்கள் விடுவதாக இல்லை.. எந்தவொரு விசயத்திலும் அனுபவப்படாதவர்கள் யாருமே..இல்லை என்றார்கள் பலர்.  ஒருவர் சரி விடு அந்த அனுபம் இல்லை என்றால். உன் வீட்டு இடத்து பிரச்சினையில் என் தெருக்காரர்கள். உனக்கு கொடுத்த தொல்லைகளை கூறலாமே என்றார் . ஆமா சொல்லலாமே என்றார்கள் மற்றவர்கள்

சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. சற்று யொசிக்கிறேனே என்றேன்... உடனே ஒருவர் ஏ.ப்பா... தீ கொளுத்தி மக.. உன்ன டார்ச்சர் பன்னின பூனை கதை ஒன்னு இருக்குல்ல... ரெம்ப நல்லா இருக்கும் சொல்லுப்பா என்றார். உடனே நிணைவுக்கு வந்துவிட்டது  ...  சம்பவத்தை சொல்ல தொடங்கினேன்

 நான் இப்ப சொல்கிற கதையானது ..ஏற்கனவே தாங்கள் சொல்லிய, சொல்லப்போற சரடு கதையல்ல.... இது முழுக்க முழக்க உண்மை சம்பவம் என்ற முத்திரையுடன் ஆரம்பித்தேன். எல்லோரும் நான் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.


என் தெருவில் ஒரு நாட்டாமை அவனுக்கு ஒரு வைப்பாட்டி,  அவளுக்கு பெயர் தீ கொளுத்தீ... தீ கொளுத்தீ பெயர் எப்படி வந்தது என்றால் அவளுடைய காதலன் நாட்டாமைக்கும் அவளுக்கும் பணம் பிரச்சினையில் அவர்களுக்குள் முட்டல் மோதல் நடந்தது. அவளுடைய வப்பாட்டன் அவளிடம் பேச மறுத்தால்...இவள் அவனை வரவழைப்பதற்க்காக ..அவர்கள் சண்டையில் சம்பந்தமே இல்லாத பக்கத்து வீடுகளில் தீ வைத்துவிடுவாள்.  இப்படித்தான் அவளின் வப்பாட்டானை எதிர்த்த ஒரே காரணத்தக்காக என் வீட்டிற்கு இரண்டு தடவை தீவைத்து அவளின் வப்பாட்டனின் மனதை குளிர்வித்தால்...இதே மாதிரிதான் சில வீடுகளுக்கும் தீ வைத்ததால் அந்தத் தெருக்களில் உள்ள பொம்பளைகள் வைத்த பெயர்தான் தீ கொளுத்தீ என்பது...

அந்த தீ கொளுத்தீ ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதன் பலனாக சீக்கு பிடித்து குறுதி வழிந்து வீச்ச மெடுத்து நாறிப்போய் செத்தாள். அவள் செத்த பிறகு அவளுடைய மகளுக்கும் தீ கொளுத்தீ மகள்னு பேரு நிலைத்து விட்டது.

தீ கொளுத்தி மக  திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளையை பெற்றும் ஊதி விட்டாள் காற்றினிலே பற்ந்து போகும் அளவுக்கு அநியாயத்துக்கு ஒல்லியாக இருந்தால்..... என்ன மாயமோ ..அவளுடைய ஆத்தா செத்து ரெண்டு வருசத்துல   இல்லாத அளவுக்கு ரெம்ப குண்டாகி விட்டாள்.. மார்பகமே இல்லாது இருந்த அவள்..தமிழ் சினிமாவில் வரும் அரக்கிகளைப் போல் கொளுத்த மார்பகளுடன் காட்சியளித்தாள்.

ஆள் குண்டானவுடன் அவள் அம்மா விட்டுச் சென்ற  இடத்து பிரச்சினையில்  என்னுடன் போட்ட சண்டையை தீ கொளுத்தீ மகள் தொடர்ந்தாள்

அன்று ஞாயிற்று கிழமை எல்லா வீடுகளில் தொலைக்காட்சியில் படம் பாரத்துக் கொண்டுயிருந்ததால் தெருவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது. நான் தொலைக்காட்சி பார்க்க விரும்பாமல் என் வீட்டு மேற்கு திண்ணையில் அமர்ந்திருந்தேன். எதிர்த்த வீட்டில் தீ கொளுத்தீ மக... என்னைக்கண்டதும் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு சுத்தமாக இருந்த தெருவை புழுதி பறக்க கூட்டினாள். அவளுடன் சண்டை போட மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு எழுந்து மெயின் ரோட்டிற்கு வந்து அடைத்திருந்த கடைகளின் திட்டில் அமர்திருந்து அரைமணிநேரம் கழித்து  திரும்பினேன். கூட்டியதால் பரவிய புழுதி மறைந்து விட்டது. அவள் கதவை அடைத்து இருந்தாள்.. அவள் வீட்டில் வாடகைக்கு இருந்தவள் மட்டும் வாசல் படியில் அமர்ந்து ..அவள் மார்பகம் முழு அளவில் காட்டியபடி தன் குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தாள் ... நான் அதை பார்க்காமல் சென்றது என் குத்தமாம்

என் வீட்டு திண்ணையில் நான்  அமர்ந்த சிறிது நேரத்தில்  மார்பகம் தெரிய குழந்தைக்கு பால்  கொடுத்து கொண்டிருந்தவாள்.. தீ கொளுத்தி மகளை கூப்பிட்டாள்.

கதவை திறந்து வெளியே வந்த தீ கொளுத்தி மகள்... அணிந்திருந்த சாக்கெட்டின் பட்டன்களை அவிழ்த்து விட்டு கொளுத்து தொங்கிய மார்பகங்களை  காட்டியபடி..குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தவளின் அருகில் அமர்திருந்தாள். சிறிது நேரத்தில் யாரையோ திட்டுவது மாதரி என்னை திட்டினாள்...


அவன் அம்பள இல்லடி..பொண்டுகன்டி... பொட்டப்பயதாண்டி இப்பிடி இருப்பாங்கே.....என்று திட்டினாள்.... எனக்கு புரிஞ்சு போச்சு ரெண்டு சிரிக்கிகளும் ஏதோ பிளான் பன்னுறாள்கள் என்று தோன்றியவுடன் எழுந்து வீட்டுக்குள் வந்து படுத்து தூங்கிவிட்டேன்.


மறு நாள் காலை பத்து மணிக்கு மேல் என்னை தேடி போலீஸ்காரர் வந்தார். என் பெயரைச் சொல்லி கேட்டு ஊறுதிபடுத்திக் கொண்டு விபரத்தை சொன்னார். தீ கொளுத்தி மக பெயரைச் சொல்லி மேகலா என்பவளும் தனம் என்பவளும்  என் விட்டுப் பூனை அவள் வீட்டில் வைத்திருந்த சிக்கன் கறியை தின்று விட்டதாக என்மீது புகார் கொடுத்து இருக்கிறாள் விசாரணைக்கு ஸ்டேசன் வரச் சொன்னார்


வந்த காவலரிடம் .அய்யா நான் வீட்டில் பூனை வளர்க்கவில்லை. சிக்கன் கறியை திண்டதாக சொல்லப்படும் பூனை என் வீட்டுப் பூனை இல்லை.என்றபோது ஸ்டேசன் வந்து சொல் என்றார். அவருடன் ஸ்டேசனுக்கு சென்றபோது  ரைட்டரிடம் இரண்டு பெண்களும் என்னை சுட்டிகாட்டி அடுக்காக புகார் கூறினார். அவர்கள் இருவரும் கூறியதை கேட்டுவிட்டு என்னிடம் விசாரித்தார்.

பூனை அவர்கள் வீட்டு கறியை தின்றது பொய், என் வீட்டில் பூனையை வளர்க்கவில்லை. அந்த பூனை எனது பூனை இல்லை என்றேன். இருவரது பேச்சை கேட்டுவிட்டு எஸ்ஐ  இரவுதான் வருவார் இரவு ஏழு மணிக்குத்தன் வருவார் அப்போது வாங்கன்னு இருவரும் சண்டை போடக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவைத்தார்.

அடுத்து இரவு ஏழு மணிக்கு தொடரும்.......................

செவ்வாய் 23 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -11

 அவன் பேரு...என்னவோ.........ம்ம்ம்  சட்னு ஞாபகத்துக்கு வரமாட்டுது சரி, பேரா முக்கியம் நடப்பு தானே முக்கியம்  டெயிலர் கடை வச்சிருக்கான்.  அழகான மனைவி, குழந்தை குட்டி எல்லாம் இருந்தும் சின்ன வீடு, அதாவது காதலி  இருப்பது.. அவுக சமூகத்துல கௌவரமாம்

அதுக்காக டெய்லர் கடைக்கு எதித்தாப்புல தொடக்கபள்ளி கூடத்தில் டீச்சர் எல்லாம் வேறு வேறு ஆட்களுக்கு புக் ஆகிவிட்டதால் கடைசியாக.. அந்த பள்ளி கூடத்தில்  ஆயா வேலை பார்க்கும் குண்டம்மாவை ரெம்பா நாளா.. வாட்ச் பன்னி என்னன்ன தூது இருக்கோ அத்தனை தூதுக்களையும் அனுப்பி வெற்றி அடைந்த நேரத்தில்...


அந்த பள்ளி வளாகத்தில் இயங்கும் பலசரக்கு கடைகளுக்கு பலசரக்குகள்  சப்ளை செய்யும் மார்க்கெட் கடையில் வேலை பார்க்கும் ஒருவனுக்கும் டெய்லர்க்கும் பயங்கர சண்டை நடந்தது. எதுக்குடா சண்டை? ஏன்டா சண்டை என்பது பக்கத்திலுள்ள கடைகாரர்களுக்கும் குடியிருப்போர்களுக்கும் எதுவும்  தெரியவில்லை. தைக்க கொடுத்த துணிகளை சரியாக தைக்கவில்லை என்ற சண்டையாகத்தான் எல்லாருக்கும்  தெரிந்தது.

சண்டை சற்று வலுக்க வார்த்தைகள் தடிக்க,  அடிதடி நடக்க.. பிறகுதான் உண்மை புரிந்தது. காதலுக்கான சண்டை என்று

ராமராஜன் நடித்த படமொன்றில் கவுண்ட் மணி செந்திலை அடிப்பார். அதைப்பார்த்த ராமராஜன் ஏண்ணே! அடிக்கிறிங்கன்னு கேட்பார். அதற்கு கவண்ட மணி சொன்னதுான்... ஆயா குண்டாவை மார்க் கெட் கடையில் வேலை பார்க்கிறவன் வச்சிருந்து அதாவது காதல் கொண்டு, குண்டாமாவுக்கு நிறைய செலவு  செய்து ஓய்ந்த நிலையில்  ஆயா குண்டாம்மா.. கடைக்காரனை கழட்டிவிட்டு டெய்லரை செட்டப்பாக்கியது.. தெரிந்தவுடன் கொந்தளித்துவிட்டான்


பெரிய பிரச்சினை ஆகி காவல் நிலையம் சென்ற பின்தான் பிரச்சினை முடிந்தது. ஆயா குண்டாம்மாவை பள்ளியை விட்டு தூக்கிவிட்டார்கள். மார்க்கெட் கடையில் அவனையும் தூக்கிவிட்டார்கள். 

பின் டெய்லர் மூலம் ஆயா வேறு இடத்தில் வேலை பார்த்து வருகிற நிலையில் மார்கெட் கடைக்காரன்  மாதிரியே டெய்லரும் குண்டாம்மாவுக்கு நிறைய செலவு செய்கிறான்.

ஆயா..குண்டாம்மாவுக்கு தாலி கட்டிய கனவன் ஒருவன். அவன் கொத்தனார் வேலை செய்கிறான். அவன் டாஸ்மாக் குடிமகனாக இருந்து சிறுசு..பெறுசு என்று வித்தியாசம் பார்க்காமல் சித்தாள்களை மேய... குண்டம்மாவோ இப்படி..

.குண்டம்மாவுக்கு இரண்டு ஆண்பிள்ளை, ஒரு பெண் பிள்ளை. பையன் காலேஜ படிக்கிறான் பெண் பிள்ளை +2 படிக்குது.. கடைசியாக உள்ளவன் பத்தாவது படிக்கிறான்.....

குண்டம்மாவின் மீதான காதல் டெய்லர்க்கு பெரிய கௌவரமாகிவிட்டது. குண்டாம்மாவுக்கு காதலால் வருமானம் தடை படாமல் இருக்கிறது.


ஞாயிறு 14 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -10

 அவன் பட்டப் பெயரு வீரப்பன். அந்த தெருவுக்கு அவன்தான் சண்டியர். முன் பதிவுல சொன்ன தெரு நாட்டாமை கூட இவனுக்கு பயப்படுவான்..... அப்பேர்பட்ட சண்டியர் பொண்டாடிய  தெரு நாட்டமை லவட்டிக்கிட்டான். அரசல்புரசலாக சண்டியர்க்கு தெரியவந்தது. இருந்தாலும் தன் கண்ணால பாத்தாதான் நம்புவேன்னு உறுதியாய் இருந்தான். ஒருநாள் தெரு நாட்டாமையும் சண்டியர் பொண்டாட்டியும் ஒன்னா இருந்தத பாத்துட்டான் சண்டியர்


கோபம் கொப்பளிக்க  நாட்டாமைய  காலி பன்னுவதற்க்கு சரியான நேரத்துக்காக காத்திருந்தான்...“ தெரு சண்டியர் பொண்டாட்டிய  தெரு நாட்டாமை லவட்டிக்கிட்டாரு” என்ற விபரம்  அந்தத் தெருவுக்கு பரவி கொஞ்சமாக உற்றார் உறவினர்க்கு எல்லாம் தெரிந்துவிட்டதால் சண்டியர் பரபரப்பாய் இருந்தான். அவன் பொண்டாடி இவனுக்கு பயந்து போய் அவுக அம்மா வீட்டுக்கு ஓடிப்போய்விட்டது. சண்டியர்   அவளை வெறுத்து வேண்டாமுன்னு  தீத்துவிட்டார்.

சண்டியரால் நாட்டாமைக்கு ஏதாவது தீங்கு வந்துவிடாமல் இருப்பதற்கு நாட்டாமை  விவரமாக முன் கூட்டியே போலீசில் சண்டியர் மேல் புகார் கொடுத்து வைத்தான். தெரு சண்டியர்க்கு இது தெரியவில்லை. மற்றவர்களுக்கும் தெரியவில்லை

சண்டியர்க்கு எதிர்பார்த்த நேரம் கிடைத்தது. உடலில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓங்கி வெட்டினான். நாட்டாமை சுதாரித்து வலது கையால் தடுத்துவிட்டான். திரும்பவும் வெட்ட சண்டியர்  முயலும் போது நாட்டாமை பயங்கரமான ஊளையிட்டு தன் உறவினர்களையும் தன் குடும்பத்தாரையும் அழைத்து அய்யோ..அய்யோ என்று மேலும் மேலும் ஊளையிட்டு செத்து போனவன்போல் கீழே விழுந்து கால்களை துடிதுடிக்குமாறு ஆட்டினான்.

நாட்டாமையின் ஊளையிட்ட பங்கரமான சத்தத்தாலும் கால்கள் இரண்டும் துடிதுடிப்பதைக் கண்ட சண்டியர் வெலவெலத்துபோயி  பயந்து ஓடி விட்டான்.  தெருவே கூடியது சண்டியர்.... நாட்டாமையை வெட்டிபுட்டான் என்ற செய்தி தெருவை தாண்டி  வெகு தூரத்தில்  உள்ள போலிசு நிலையத்துக்கு. பரவியது.

வந்த போலீசு சல்லடை போட்டு தேடி சண்டியரை கைது செய்து திருச்சி ஜெயிலில் அடைத்தது. அப்போ புது ஜெயில் மதுரையில் இல்லை. வலது கையில் வெட்டுபட்ட நாட்டாமை தர்ம ஆஸ்பத்திரியில் சகிச்சை முடிந்து சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தபோது தெருவே மாலை போடாத குறையாக வரவேற்றது. நாட்டாமையால் பதிக்கபட்டவர்கள்தான்

சண்டியர் பொண்டாட்டியை லவட்டிய வெற்றி திருமகனே வருக!! சண்டியரால் வெட்டுபட்டு உயிர் பிழைத்த  வீரம் விளஞ்ச மண்ணே வருக!!  வருக!! என்று  மனதுக்குள் போஸ்டர் ஒட்டாத குறையாக  புழுங்கினர்.


நாட்டாமையை வெட்டிய குற்றத்துக்காக சண்டியர் இரண்டு வருடம் திருச்சி ஜெயில் தண்டனை அனுபவித்து விடுதலையாகி வந்தான். ஒரு வருடம் சுற்றி திரிந்தவன். சோரம் போன முன்னால் பொண்டாட்டியின்  பத்தாவது படித்து கொண்டிருந்த தங்கையை மனமுடித்தான்.  அக்காவே பராவயில்லை என்று சொல்லுமளவுக்கு தங்கையின் நடத்தை இருந்தது. வெகுண்டெழுந்த... அந்தத் தெரு

     அவளுக்கு ஓடுகாலி என்று பட்டம் வழங்கி கௌரவித்தது.



புதன் 10 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -9

 அக்டோபர் முதல் “ ஐடியாக்கல்” கிடையாது    அமைப்பை திறந்தவுடன் இதுதான் கண்ணில்பட்டது. “ஐடியாக்கள் என்ன என்பது எனக்கு தெரியாது.. சரி போகட்டும்...

 சரி.. சரடு கதைக்கு வருவோம்.


அந்த தெருவுக்கு அவன் நாட்டாமை, தலைவர், தெரு கோயில் நிர்வாகி, இப்படி பல பதவிகள். அதோடு சின்னபயல் என்ற பட்டப் பெயரும் அவனுக்கு உண்டு.  அந்தத் தெருவில் குடியிருப்போர்களின் முக்கால் வாசி  வீடுகள் அவனுடையதான். குடியிருக்கும் வீடுகளில்  பாதி பெண்கள் அவனின் வலையில் விழுந்தவர்கள்.அல்லது அவனை தங்கள் வலையில் வீழ்த்தியவர்கள். அதற்கு பிரதிபலனாக அவன் வாடகை வாங்காமல் விடுவது. புதிய துணிமணிகள் வாங்கி கொடுப்பது  அவர் வழக்கம்.

அப்படி புதிதாக அவனது வீட்டிற்கு புதிதாக வந்தவள் ஒருத்தி.சிவத்த மேனி, அழகான நாட்டுக்கடடை அவள். அவளின் கனவனும் அவனும் நெருங்கிய நண்பர்களாயினர். அவளின் கனவர் இல்லாத நேரத்தில் அவளின் கனவர் அவன்தான். அவனை காணவில்லை என்றால். எங்கும் தேடி அலைய வேண்டாம் அவளின் வீட்டிற்கு சென்றால் பார்க்க முடியும்.  அவளின் கனவர் போக்குவரத்து துறையில் பணி புரிகிறார். வெளியூர்களுக்கு மாற்றலாகி சென்றால் .தன் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு தன் நண்பரிடம் சொல்லிவிட்டத்தான் செல்வான் அவனின் நண்பன். அப்படி ஒரு நட்பு..

அவனின் தாலிகட்டிய மனைவிக்கு நாண்கு ஆணும், இரண்டு பெண்களும், நாண்கு ஆண்களும் அவனைப்போலவே தப்பாமல்  பிறந்திருக்கின்றன.... அவனுடைய காதல் லீலைகளை பற்றி மனைவியோ பெத்துப்போட்ட பிள்ளைகளோ எதுவும் கண்டு கொள்வதில்லை...  அவர்களுக்கு எந்தக் குறையும் .அவன் வைத்ததில்லை. ஆசை நாயகிகளுக்கும், வைப்பாட்டிகளுக்கும் தலா நாலு, மூனு.இரண்டுக்கு குறைவில்லை, ஒரே ஒரு வைப்பாட்டிக்கு மட்டும் குழந்தையே இல்லை...அந்த வைப்பாட்டி இன்னும் குமரியாகவே இருக்கிறது.

பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்த அவனுக்கு எந்த நோயும் இதுவரை வந்ததில்லை... 80 வயதை கடந்தும் இன்னும் ஆள் திடமாகத்தான் இருக்கிறான். அவனின் சில ஆசை நாயகிகள் வைப்பாட்டிகள்தான்  நோக்காடு வந்து கிடக்குதுக. அவனுக்கு வீட்டு வாடகை வருமானத்தோடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்ததால் பதிணைந்தாயிரத்துக்கு மேல் பென்சன் வாங்குகிறான்.... இப்போ மூத்த மகள் வீட்டில்தான் சாப்பிடுகிறான்.... 


அவன்.தன் ஆசை நாயகிகள். மற்றும் வைப்பாட்டிகளுக்குள் எந்த முட்டல் மோதல் வராமல் பாரத்துக் கொண்டான். எப்படி சமாளித்தான் என்று கேட்டால் அந்தத் தெருவின் இளைஞர்கள்  கதை கதையாக சொல்வார்கள்.  அந்தக் கதைகளிள் அறுபதாயிரம் பொண்டாட்டிகளை கட்டிய தசரதன்  தோற்றுப் போய்விடுவான்.

தனக்கு பிடிக்காதவர்களை. தன் எதிர்களை, தன் ஆசை நாயகிகள் மற்றும் வைப்பாட்டிகள்  அவள்களின் பிள்ளைகள் மற்றும் தன் வீட்டு ஆட்களை சேர்த்து  பெரும் கூட்டமாக ஏவி..அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.   இன்றும்  அந்த தெருவில் அவன் வைத்ததுதான் சட்டம்...

அவன் எப்போ சாவான்.. என்று அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒன்றிடம் அனுதினமும் வேண்டுகிறார்கள். அந்தத் தெருவில் உள்ள இளைஞர் அணியினர் சொல்கிறார்கள்.  அவனுக்கு என்ன கவலை..என்ன குறை ,நூறு வயது கழித்துதான் சாவான்.என்று.....


வியாழன் 04 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -8

 அந்தப் பெண்ணும் அவரும் ஒரே சாதியாக , ஒரே நிறமாக  உறவு முறையாக இருந்தாலும் வசதி வாய்ப்பில் ஏற்றத்தாழ்வுகள் மலைக்கும் பள்ளத்துக்குமாய் இருந்ததினால். இருவரும் உருகி உருகி காதலித்தாலும் பெண்ணின் வீட்டார்கள் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.தங்களின் வசதிக்கு மேல் உள்ள வரனாக பார்த்து சட்டுபுட்னு திருமணத்தை முடித்துவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னரே காதலர்கள் இருவரும் ஓடிப்போகும் முடிவை கைவிட்டனர். காதலரோ எங்கிருந்தாலும் வாழ்க! என்ற பாணியிலான மன நிலைக்கு வந்துவிட்டார். காதலியோ என்றும் உன்னை மறவேன். காலம் என்றைக்காவது கை கொடுக்கும் என்ற உறுதியில் இருந்தார்.

தன் காதலிக்கு திருமணம் முடிவானதற்கு முன்பே காதலர் பெண்ணின் அப்பா, அம்மா மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களிடம் காதலியை தனக்கு மணமுடிக்க வேண்டினார். பலகட்டமாக போராடினர். அவரின் போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது.அவரின் காதலியும் காதலருடன் சேர்ந்து தன் வீட்டாரிடம் போராடிப் பார்த்தார். ஒன்றும் காரியம் நடக்கவில்லை.. அப்பவே மனதில் கருவிக் கொண்டார். பின்னாளில் வருவிங்கடா அப்ப..உங்கள வச்சுகிறேன்டா..என்று

தன் காதலரை திருமணம் முடிக்க காதலி பல தடவை  வற்புறுத்திய போதும் காதலர் . “உனக்காவே நான்” என்று மறுத்துவிட்டார்.

காலங்கள் சென்றது காதலிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை காதலரின் சாயலில் இருந்ததால்.. காதலியின் கன்வர் சந்தேகப்பட்டு கேட்டபோது  ..காதலி அவரிடம் எல்லா உண்மையையும் சொல்லி விட்டார். கனவர் நொந்து நூல் நூலாகிவிட்டார்.  ஏற்கனவே இருந்த நோயோடு  இந்தக் கவலையும் ஒன்று  சேர செத்தும் போனார்.

காதலரின் நண்பர் ஒருவர் சொன்னார். உன் காதலியின் கனவர்தான் இறந்தவிட்டாரே! இப்போது உன் காதலியை நீ திருமணம் செய்து கொள்வாயா? என்று...

காதலர்க்கு சிறு நம்பிக்கை வந்தது.. காதலியை சந்தித்து இந்த விசயத்தை சொல்லி ஒப்பதல் பெற்றார். ஆனால் .பிறந்த வீடும் புகுந்த வீடும்  சம்மதிக்கமாட்டார்கள். கொலை வெறியில் இருப்பார்கள். வேண்டாம் நாம் எப்போதும் காதலர்களாக இருப்போம். இதோ உன் குழந்தை. இந்தக் குழந்தையை பார்த்து அவர்கள் காண்டாகட்டும். என்று காதலர்க்கு சொன்னார்.

காதலர் திரும்பவும் காதலியின் பெற்றொர்களை அனுகினார். அவர்கள் மறுத்தபோது  என்காதலியின் வாழ்வை நாசமாக்கி விட்டீர்களே! என்று சண்டையிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. தன் காதலி சொன்னதுதான் நடந்தது.

காதலி சொன்னபடியே காதலர்  சம்மதித்து  காதலர்களாகவே வாழ முடிவு எடுத்தார்.. காதலர்களின் நண்பர் நண்பிகளின் ஆதரவுடன் அவர்கள் காதலர்களவே  தங்கள் காதலை தொடர்ந்தனர்.. காதலியின் புகுந்த வீட்டார்க்கும் பிறந்த விட்டார்க்கும் அரசல் புரசலாக செய்தி வந்து கண்ணக்கோல் வைத்து இருவரையம் பிடிக்க முயற்சி செய்தும். முயற்சி பலிக்கவில்லை..காரணம்

காதலியின் உபயத்தால் காதலர்  காசு பணம் என்ற சமூக அந்தஸ்தில் உயர்ந்தவிட்டதால் யாரும் கேள்வி கேட்க இடமின்றி காதலர்கள் காதல் தொடர்ந்து  கொண்டு இருக்கிறது.

ஞாயிறு 31 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -7

 வழக்கம் போலவே  காதலர்கள் கூடும் செனட் சபைக்கு சென்றேன். கூட்டத்தில் புதியவர்கள் சிலர் இருந்தனர். அந்தப்புதியவர்களிடம் பழையவர் ஒருவர் காதில் கிசு கிசுத்தார். நான் கவனித்தேன் ..ஆனால் சொன்னார் என்று தெரியவில்லை. நார்மலாக பேசினாலே எனக்கு கேட்காது.. இதில் கிசு கிசுத்தால் சுத்தமாக கேட்காது..

அவர்கள் கிசு கிசுப்பதை பார்த்தபடியே.. செனட் சபையின் கூட்டத்தில் உட்கார குனிந்தேன். புதிய காதலர்களில் ஒருவர் என்னிடம்  சில கேள்விகள் கேட்டார். உட்காருவதை தவிர்த்து நின்றபடியே அந்தக் காதலர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்.

“உங்களுக்கு டீ குடிக்கிற பழக்கம் இருக்கா...”?

“இல்லை”  ...

“புகை பிடிக்கும் பழக்கம்”....??

“ இல்லை”..

“ தண்ணி அடிக்கிற பழக்கம்”...???

“ இல்லை..”

“ திருமணம்....செய்து......

“ இல்லை”......

“காதலிச்சு இருக்கீங்களா...????”...

“ இல்லை”....

“ சரி., பெண்களை சைட்டாவது அடிச்சிருக்கீங்களா...”??????

“ இல்லை..”

“ யோவ்... அப்ப என்னதாய்யா வாழ்க்கையில செய்திருக்க..”...

“ எதுவும் இல்லை”


“எதுவுமே செய்யாமல் இருக்கும் நீவீர் காதலர்கள் கூடும் இந்த செனட் சபைக்கு என்னா மயித்துக்கு வர்ரீரு.... போய்யா...போயி தனியாக உட்காரு ” என்று செம கடுப்புல..கையை நீட்டினார்

அந்தக் காதலரின் கோபத்தை அறிந்த நான் அவர் கை நீட்டிய இடத்தில் போயி அமர்ந்தேன்.  என்னைப பற்றி கொச்சையாக பேசினார். அதைக் கேட்ட பழைய காதலர்களில் இருவர் என்னைப் பற்றி கொச்சையாக பேசுவதை கேட்டு.. கொச்சையாக பேசாதே என்று தடுத்தனர். புதிய காதலரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

 நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை..  ஒருவரை சுட்டிக்காட்டி இவரது பார்வையில் தியாகி.... எனது பார்வையில்  கேனயன்...,ஏமாளி... உங்களது பார்வையில்....நையன், ஓம்போது ..... இவரின் சித்தப்பனின் மனைவி. இவர்மீது  மானபங்கம் செய்ததாக புகார் கூறியபோது... இவர் ஆண்குறியை ஒன்னுக்கு இருக்க மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறேன். வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை. நம்பவில்லை என்றால் பரிசோதிக்கலாம் என்றார் பாருங்களேன்... ஆண்மையற்றவன் மலடாக இருக்கிறவன்கூட ஆசை இல்லாமல் இருப்பதில்லை. நானே பலமுறை கோளாளாறு எதுவும் இருக்கலாம் பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன் . பாத்துக்கலாம் என்று சொன்னாரே தவிர பரிசோதனை செய்தாரா என்று தெரியவில்லை. அவரை தனியாக உட்கார வைக்க வேண்டாம். அவருக்கு காது கேட்காது அருகில் உட்கார வைக்கலாம் என்றபடி  கை சைகையால் என்னை அழைத்து அருகில் வந்து அமரும்படி செய்தார். புதிய காதலர்களும் வியப்புடன் பார்த்து அனுமதித்தனர்.

நிற்க.... காதலர்கள் சொன்ன சரடு கதைகள் என்பது  காதலர்களின் செனட்  சபையில் காதலர்கள் சொன்னவைதான் அந்தக் கதைகள் எனது பாணியில்  எழுதியவைகள்தான்.. படிப்பவர்களின் புரிதலுக்காக..................



வியாழன் 28 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -6

 

அவரு பத்தாவது படிச்சுகிட்டு இருந்த காலம். அவரும் அவரது சிநெகிதரும்.  வைகை ஆற்றுக்கு குளிக்கப் போனார்கள்.  சித்திரை விழாவுக்காக ஆற்றில் தண்ணிர் திறந்துவிட்டுருந்தார்கள்.. தண்ணீர் அதிகமாகவே இருந்தது. சிநேகிதர்க்கு நீச்சல் தெரியாததால்.  கரையோரமாக குளித்தார். அவருக்கு நீச்சல் தெரியுமாதலால் ஓடும் தண்ணீரை எதிர்த்து நீச்சலடித்து குளித்தார்.

அவரோடு போட்டி போட்டு ஒருவர் குளித்தார். திடீரென்று கவனித்தவர் அது ஒரு பெண் பிள்ளை என்று தெரிந்ததும் சோர்ந்து போனவர் போல் நடித்து தண்ணீரோடு இழுத்து செல்லப்பட்டார். உடன் குளித்த பெண் அவரின் தலை முடியை பிடித்து இழுத்து வந்து கரை சேர்த்தார். 

அந்தப் பெண்  சிநேகிதரிடம் வயிற்றை அமுக்கச் சொன்னார். சிநேகிதர் ஒப்புக்கு சப்பாக அமுக்கியதைக் கண்டு அந்தப் பெண்ணே அவரின் வயிற்றை அமுக்கி தண்ணிரை வாயிலிருந்து அகற்றினார்.

கண் விழித்த அவர் தமிழ் சினமாவில் காட்டுவது போல் லேசாக கண்விழித்து அந்தப் பெண்மணிக்கு நன்றி கூறினார் . அந்த நீச்சல் பெண்ணும் அதற்கு பதிலுரைத்தார். அவ்விடத்தைவிட்டு நகரும் வரை அவரும் அந்த நீச்சல் பொண்ணும் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவரின் சிநெகிதரும் அவர்கள் பேசுவதை  வாய் பொத்தி மௌனமாக கேட்டுக் கொண்டே வாந்தார்.

அந்த நீச்சல் பெண் இவர்களிடம் விடைபெற்று சென்ற பிறகு அவர் தன் சிநேகிதரிடம்  அந்தப் பெண்ணை பார்த்ததும் காதலால் மயங்கிவிட்ட கதையை சொல்லி தன் உள்ளத்தை  திறந்து காட்டினார்.

அந்த சிநேகிதரும் அவரின் நடிப்பை  கண்டுதான் ஒப்புக்கு தான் வயிற்றை அழுக்கியதை கண்டு அந்தப் பெண்ணே அமுக்க வைத்தததையும் அவரின் நடிப்பையும் பாராட்டி னார். அந்த பாராட்டுக்கு பிரதிபலனாக... ஒரு டீயும், வடையும் வாங்கிக் கொடுத்துவிட்டு தங்கள் காதல் நிறைவேறும் பட்சத்தில்... தங்களின் சைக்கிளை எனக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரும் தன் காதல் நிறைவேறும் பட்சத்தில் கண்டிப்பாக இந்த சைக்கிளை உனக்கே அன்பளிப்பாக கொடுத்து விடுகிறேன் உறுதி கூறினார்.

நாட்கள் மாதங்களாகின..மாதங்கள்.வருடங்களாகின.... பள்ளிப் பருவ வயதில் வந்தவர் வாழ்க்கை பருவத்தை கடந்த  ஐம்பாதவது வயதில் அவர் மட்டும் ஆற்றுக்கு வந்தார். வைகை ஆறும் எவ்வளவோ மாறி இருந்தது. துணி துவைப்பவர்களே ஆற்றில் அதிகமாக இருந்தார்கள். ஒரு பக்கம். ஆடு,மாட்டை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர். ஆறும் ஆற்றில்  வரும் தண்ணிரும் மக்களின் மனதைப்போல் நிறம் மாறி வற்றி போயிருந்தது.


(அவர் காதல் நிறைவேறியதா..? ஆ... அவரும் சொல்லவில்லை.. நானும் கேட்கவில்லை. முன்ன பின்ன காதலிச்சாதானே தெரியும் எனக்கு)


சனி 23 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -5

 அவர் பேரு பரமசிவம், வீட்டுக்காரம்மா பெயரு..அதாவது அவரு வொய்ப் பெரு ஈஸ்வரி, பரமசிவத்தின் உடன் வேலை பார்ப்பவர் பெயரு மோகனு அவருடைய வொய்ப் பேரு கனி, இரண்டு வருடத்துக்கு முன்புதான் கலியாணம் ஆச்சு.. ஒரு குழந்தை உள்ளது. பரமசிவத்தின் மூலமாகத்தான்  பரமசிவம் குடியிறுக்கும் தெருவுக்கு பக்கத்து தெருவுக்கு புதுசா குடி வந்திருக்காங்க... மோகனு அப்பாவும். பரமசிவமும்  ப்ரண்ட்.. மோகனு அப்பா திடிரென்று செத்துப்போனாரு..

அவருடைய வேலையைத்தான் மோகனு பார்க்கிறாரு.... பரமசிவத்துக்கு ஒரே பையன் அவன் பேரு குமாரு... பத்தாவது படிச்சுகிட்டு இருக்காரு...  மோகனு  வேலைக்கு  சென்று வீட்டிக்கு வரும்வரை  பெரும்பாலான நேரங்களில்  கனி  குழந்தையுடன்  ஈஸ்வரி வீட்டிலதான் இருக்கும், ஈஸ்வரி குழந்தையை பாரத்துக்கொள்ள..கனி வீட்டு வேலையை எல்லாவற்றையும் செய்து முடிக்கும்,

 வாழ்க்கை நிகழ்வு  இப்படித்தான் போய்கிட்டு இருந்தது. ஒரு நாள் மோகனுக்கு இரவு ஷிப்டு போட்டுட்டாங்க.... பகல்ல வீட்டிலேயே இருந்திட்டுது..ஈஸ்வரி வீட்டுக்கு வரல...  மோகனு இரவு ஷிப்டு வேலைக்கு சென்ற முதல்நாள்... கனி வந்து ஈஸ்வரிகிட்ட  இரவு தனியாக இருக்க பயமாக இருப்பதால் குமாரை துனைக்கு அனுப்புமாறு கேட்டது.  ஈஸ்வரி குமாரை அழைத்து மோகனுக்கு இரவு ஷிப்டு முடிகிறவரைக்கும் கனிக்கு பாதுகாப்பாக இரு என்றனர்.

குமாரு மொதல்ல மறுத்தாரு   அய்யோ ..நம்ம சுதந்திரம் பறி போகுதேன்னு நினச்சாரு.. அவருடைய அப்பாவும் அம்மாவும் இரக்கப்படச் சொன்னதால சரின்னுட்டாரு.....


இரவு பத்துமணிக்கு மேல குமாரு போவாரு.... கனி இவரு வரவ எதிர்பாத்துகிட்டு இருக்கும்... குமாரு வந்தவுடன் குழந்தையை குமாரு கிட்ட கொடுத்தட்டு அடிப்படி மற்றும் சிற்சில வேலைகள முடித்தகிட்டு வந்திரும். அப்புறம்கனி பள்ளிக்கூடம், படிப்பு இன்னும் சிலவற்றை விசாரிக்கும். அப்புறம் தூங்கிடுவாங்க...பெரும்பாலும்  குமாருக்கு இரவு உணவு கனி வீட்டிலதான். நல்லா ருசியா சமைச்சு போடும்  ..


ஒரு நாள் நடு இரவு குழந்தை அழுதது. கனி எழுந்து குழந்தையின் அழுகையை நிறுத்த பால் கொடுத்து கொண்டிருந்தது. கண்விழித்த குமாரு  பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வந்தாரு ..படுக்கையில் குழந்தை ஆயி போயிட்டது என்று சொல்லி படுக்கையை சுறுட்டி சுவரின் மூலையில் போட்டு இருந்தது. கட்டில் மெத்தையில் படு என்றது. குமாரும் சரி என்று மெத்தையில் படுத்தாரு. சிறிது நேரத்தில்  கனியும் குழந்தையுடன் கொமாரு கிட்ட படுத்தது.

கனிக்கும் குமாருக்கும் ஆறு வருடம் வித்தியாசம், கனிக்கும் குமாருக்கும்  அந்த இரவே புதிய உறவாக மாறியது. குமாருக்கு கலியாணம் நடந்து பிள்ள குட்டி இருந்தும் கனிக்கும் பிள்ள குட்டி இருந்தும் அதுகளுக்கு திருமணம் காட்சி  எல்லாம் நடந்தும் கனிக்கும் குமாருக்கும் உள்ள உறவு அதாவது காதல் உறவு இன்று வரை எந்தவொரு பிரச்சினை இல்லாமல்  தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது.

(இதை யாரு சொன்னா.. குமாருதான். சொன்னாரு)

ஞாயிறு 17 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -4

 அன்று ஞாயிறு கிழமை ஆறு மணிக்கெல்லாம் மழை  பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஆனால் மழை வழக்கத்துக்கு மாறாக மேற்கிலிருந்து பெய்யாமல் கிழக்கிலிருந்து பெய்ததால் அவர் படுத்துறங்கும் இடமெல்லாம் தண்ணீர் தேங்கிவிட்டது. படுக்க என்ன செய்வது என்று தவித்திருந்த வேலையில் தெரிந்தவர் ஒருவர் குடிசையை காட்டி அங்கு படுத்துக் கொள்ளலாம். யாரும் இல்லை என்று சொல்லி விட்டுப்போனார். ஒன்பது மணிவரை காத்திருந்த அவர் மெதுவாக அந்தக் குடிசையை நொக்கிப் போனார்.


இடுப்பை வளைத்து தலை தாழ்த்தி குடிசைக்குள் நுழைந்தார். ஈரம் இல்லாமல் இருந்தது. மூலையின் ஓரத்தில் இருந்த வௌக்கு மாற்றால் சுத்தம் செய்துவிட்டு, லுங்கிக்கு மேல் சட்டைக்குள் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தரையில் விரித்து படுத்தார். சற்று நின்றிருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துவிட்டது..  வாசலில் மழை தெளித்தால் சற்று தள்ளி படுத்து கொண்டவர் நன்றாக தூங்கியும் விட்டார்.

அதிகாலை விழிப்பு வந்தவுடன் வெல வெலத்து போனார் என்ன நடந்தது என்றே அவருக்கு புரி படவில்லை. சட்டைப்பையை பார்த்தார் அதில் உள்ள பணம் அப்படியே இருந்தது. அணிந்திருந்த டவுசரை பார்த்தார். சுவரில் உள்ள ஆணியில் பாதுப்பாக மாட்டப்பட்டு இருந்தது. நாம டவுசரை கழட்டலியே எப்படி ஆணியில் யோசித்தார். படுத்திருந்த இடத்தை நோட்டம் விட்டார். மல்லிகைப்பூ ஒன்றிரண்டு சிதறிக் கிடந்தன... விரிந்திருந்த துண்டு சுருங்கி போயிருந்தது.  அவரின் ஆண்குறி வீங்கி இருந்தது.  சுவரில் சாய்ந்த வண்ணம் யோசிக்க ஆரம்பித்தார். தன்னை கற்பழித்தவள் யார்...என்று......


கண்ணம் வீங்கியிருந்தது. பல் பட்ட அடையாளம் இருந்தது. கைகால் எல்லாம் வலி எடுத்தது. ஒரு நிணப்பும் தோன்றவில்லை மயக்க மருந்த நுகரவிடப்பட்டமோ.... 

இன்பக்கேனியை..துன்பக்கேனியாக்கிவிட்டது யாரோ.....

அவரின் நண்பர்களிடம் கூறியபோது. அவருக்கு அடித்த அந்த அதிர்ஷ்டம் . தங்களுக்கும் கிடைக்க வேண்டிய ஆசையில்..

அந்தக் குடிசை வீட்டில் இரவு படுப்பதற்கு வரிசை கட்டி நின்றார்கள்,


"சரடு விடுதல்" என்பதன் தமிழ் விளக்கம் ... பொய் : புனைந்துரை. 

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...