பக்கங்கள்

சனி 31 2016

இரு பெண்கள் நிலை.......


பணக்கார பெண்
ஒருத்தி ஏழைப்
பெண்ணாக நடித்தாள்
காண வந்திருந்த
பணக்காரர்கள் எல்லோரும்
ஆகா..ஓகோ வென
புகழ்ந்து தள்ளினர்.

அதே மேடையில்
ஏழைப் பெண்
ஒருத்தி பணக்காரியாக
நடித்து காட்டினாள்
பணக்காரர்கள் எல்லோரும்
முனு முனுத்தார்கள்
காறித் துப்பினார்கள்.

வெள்ளி 30 2016

புல்லரிப்புக்கு.. ஒரு புல்லு வாங்கித் தரட்டுமா..தலைவரே..?

“என்ன தலைவா..நேற்று..ஆளையே  காணோம்“....

“எப்போதிலிருந்து..................

“யாரையோ  கேக்கிற மாதிரி கேட்கிற“......

“நீங்கதானே தலைவா, நேற்றிலிருந்து ஆளையே..காணோமுன்னு சொன்னீங்க..”


“நா...ன்..சொன்னது..ஒன்னத்தான்  தலைவா...”

“ சே.....என்னத்தானா......  உங்களுக்குத்தான்..தெரியுமே..? கழுத கெட்டா..கம்யூட்டருன்னு”


“ அங்கத்தான் காணோமே....”

“ஓ..... பதிவு போடாததப்பத்தி சொல்றீங்களா...தலைவரே...”

“யப்பா.....புரிய வைக்கிறதுக்குல்ல   தொண்டைத்தண்ணி போயிரும்போல...”

“ தலைவரே... நீங்க... தலைய சுத்தி மூக்க தொடாம....நேரிடியா... மூக்கத் தொட்டுயிருந்தா...இந்த மரமண்டைக்கு சட்டென பதிவாயிருக்கும்”


“ சரிச்சரி...இப்போ பதிவாகியிருக்குல்ல.... சொல்லுங்க..தலைவரே...”

“ சாமி ...கும்பிட கோயிலுக்கு போனதால..... பதிவு போடல..தலைவரே...”


“ என்னது.... சாமி  கும்பிட  கோயிலுக்கு போனீங்களா...!ஹா....ஹா.....ஹா...ஹா.ஹா.......ஹா.....” என்னா தலைவரே... எங்கிட்டயே ரீல் விடுறிங்களா...”

“ உண்மையைத்தான் சொல்றேன் தலைவரே...! இதுக்கெல்லாமா பொய் சொல்வாங்க...தலைவரே...”


“அது இல்ல தலைவரே..உங்களுக்குத்தான்..சாமி கும்பிடுவது, கோயிலுக்கு போவது பிடிக்காதே..!பொண்டாட்டி .....இருந்தாலாவது... அவுகளுக்கு துணைக்கு போனேன்னு சொல்லி தப்பிக்கலாம்..ஒங்களுக்கு அந்த கொடுப்பினையும் இல்ல... அதான் தலைவரே.....”

“ தலைவரே...நீங்க  எதை.. சாமி. கோயிலுன்னு சொல்றீங்க.”

“ஆகா....தலைவரு..கேட்கிற  ..கேள்வியப்பாரு...?????”

“ தலைவரே.... நீங்க.. மார்கழி மாத முருகன் அடிமை, அய்யப்பன் விசுவாசிகள்  கும்பிடும் சாமிகளையும். அவர்கள் செல்லும் கோயில்களை பத்தி நிணைக்கிறேன்”..


“ ஆகாகா..... தலைவரு..கரக்கெட்டா... கண்டுபிடிச்சட்டாருப்பா....”

“அடடா.., தலைவருக்கே...புரிய வைக்கனும் போலிருக்கே........”

“ என்ன..தலைவரே....யோசனை...குட்டு வெளிப்பட்டு போச்சுன்னா...”

“அது..இல்ல.. தலைவரே... நான் சொல்றத கோபப் படாம கேளுங்க..தலைவரே..”

“ சரி, சொல்லுங்க... கோபப்படல....”

“ நான்  கோயிலுன்னு சொல்வது கழிப்பறை,..சாமி கும்பிடுவது..என்பது கழிப்பறையான கோவிலுக்குள் சென்று அமர்ந்து கழிவுகளை கழிப்பதுதான் சாமி கும்பிடுவது....... நேற்று இன்னொரு தலைவர் வீட்டில் கொடுத்த விசிடேபிள் பிரியாணியை உண்டதால்  வயிற்றுக் கோளாறாகி அது பக்தியாக..சிறு நேரத்தில் பக்தி முக்தியாகி... பதிவு போடும் வேளையில் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டதால்  நேற்று பதிவு எதுவும் போடவில்லை. தலைவரே... அதனால்தான் நேற்று என்னை தாங்கள காணமுடியவில்லை...தலைவரே..........


“ அடப்பாவி ..தலைவரே..... உங்க மரமண்டைக்குள்..இவ்வளவு  ஞானம் இருக்கிறதா...  தலைவரே...!!!!”

“ ஏதோ..காலம் போன வேளையிலாவது... எனக்கு இப்படியோரு ஞானயோதம்
தோன்றுகிறதே.... அத..நிணச்சு பெருமைப் படுங்க  தலைவரே.....”


“ உடம்பெல்லாம் புல்லரிப்பதோட, ரெம்பவும் பெருமையாக இருக்குது தலைவரே..”..

“ புல்லரிப்புக்கு.. ஒரு புல்லு வாங்கித் தரட்டுமா.... தலைவரே.....”


” அத்தாடீ...... அதுக்கும்..எதாவது வச்சிருப்பிங்க  தலைவரே.....”

“ அப்ப..வரட்டுமா.... தலைவரே......இப்ப நாம..பறிமாறிக் கொண்ட அறிவ ... ..நாளை பதிவுல... பாருங்க....தலைவரே......”

”!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...............................”


புதன் 28 2016

எனக்கு மட்டும் தானா....? இப்படி....!!!!!!

பார்க்கும் ஒவ்வொரு
தடவையும் அந்த
தொலை காட்சியில்
எம்ஜியாரும் ஜெயலலிதாவும்
ஆட்டம் போட்ட
மனியம்மாகவே காட்சி
அளிக்கிறார்கள் இது
எனக்கு மட்டும்
 தானா  இப்படி.....

செவ்வாய் 27 2016

உண்மையான கலைஞன்..


............................................

......................................
...................................











சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்..



சபையே சிரிப்பாய் அதிர்ந்தது 

கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்.

.பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் 

அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற

 அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் 


நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!



அப்பாேது சார்லி சாப்ளின் சொன்னார்


ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் "என்றார்

திங்கள் 26 2016

பாரதியைப் பற்றி இவர்கள்..கூறியது..




மருதையன்--

பாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.
“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.
“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.
“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.
–மருதையன்


மேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.
அப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.
நம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்
–வே.மதிமாறன்




ஞாயிறு 25 2016

காந்தியின் இரட்டை நாக்கு பற்றி பெரியார்



நேரு ஒரு லண்டன் நிருபருக்கு அளித்த பேட்டியில்  பொதுவுடைமை கொள்கையை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடைமை எனக் கருதும் கொள்கையை தான் ஆதரிக்கவில்லை என்றும் அத்தகைய பொதுவுடைமை கட்சியை தான் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்ததை சுட்டி காட்டி பின்வருமாறு எழுதுகிறார் தந்தை பெரியார்

“இது உண்மையானால் தோழர் ஜவஹர்லாலுக்கு இந்த குணம் காந்தியாரின் சகவாசத்தால் ஏற்பட்ட குணம் என்று தான் சொல்ல வேண்டும். தோழர் காந்தியார் தான் இரு கூட்டத்தாடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ்வித தந்திர மொழிகள் கூறி இரு கட்சியாரையும் ஏமாற்றி பெருமை அடைவதை அனுசரித்து வருகிறார். உதாரணமாக
“வர்ணாசிரம தர்மம் வேண்டும் அனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,
“ராம ராஜ்யத்க்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்
“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு”  என்பார்,
“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,
“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,
“ஏழைகள்,  தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது”  என்பார்,
“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவரகள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டும்” என்பார்,
தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும்” என்பார்
இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.
- ஜவர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் –    17.12.1933


நேரு, காந்தி, பட்டேல்

சனி 24 2016

திருத்தவே முடியாத மூடர்கள்....



இன்று விவசாயிகள்
தினம் என்றார்கள்
அவர்கள்...........

விவசாயிகளா..யார்
அவர்கள் என்றார்கள்
இவர்கள்..............

விவசாயிகள் இந்த
நாட்டுக்கே சோறு
போட்டவர்கள என்றார்கள்
அவர்கள்...........................

எங்களுக்கு விவசாயியும்
தெரியாது சோறும்
தெரியாது எங்களுக்கு
தெரிந்தது எல்லாம்
பாட்டில் சாராயம்
ஒரு பிரியாணி
பொட்டலம் கொடுக்கும்
அந்த அம்மாவத்தான்
தெரியும் என்றார்கள்
அவர்கள்...................

அது உங்களை
பெற்ற அம்மா
இல்லை அவள்
உங்களை கெடுக்கும்
சதிகாரி என்றார்கள்
அவர்கள்...................

வாயை மூடு
பாட்டில் சாராயமும்
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கைச்
செலவுக்கு இரு
நூறு ரூபாய்
கொடுக்கும் தெய்வத்தை
பழிக்காதே என்றார்கள்
இவர்கள்....................

பெறாத பிள்ளைகளான
உங்களுக்கு சாராயத்தை
ஊத்தி கொடுத்த
புன்னியவதி  செத்து
விட்டார் என்பது
தெரியுமா? என்றார்கள்
அவர்கள்....................

அந்த அம்மா
செத்து போனால்
என்ன எங்களுக்கு
இன்னொரு சின்னம்மா
வந்து விட்டார்கள்
என்றார்கள் திருத்தவே
முடியாத மூடர்களான
இவர்கள்....................



வெள்ளி 23 2016

செக்கிழுத்த செம்மலுக்கு வந்த கவலை..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ














மரணப் படுக்கையில் இருந்தார்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
அவருக்கு தன் பிள்ளைகளைப்
பற்றிய கவலை வந்தது........

தன் பிள்ளைகளை அருகே
அழைத்து சொன்னார் அய்யா
உங்களுக்கு எதுவும் சேர்த்து
வைக்க வில்லையே என்று
கவலைப் படவில்லை அய்யா

இந்த அடிமை இந்தியாவில்
உங்களை விட்டு விட்டு
சாகப் போகிறேனே என்ற
கவலைதான் அய்யா என்று
தன் கவலையைச் சொன்னார்.

வியாழன் 22 2016

ஏய்....நீ............

.................................................
..................................................
..................................................
...................................................

ஏய்...நீ....கணேசன் தானே...



நல்லா  பாருங்க  நான்
கணேசன்  மாதிரியா  இருக்கிறேன்.


ஆமாப்பா..நீ கணேசன் மாதிரியே
இருக்கேப்பா................


சரியாப்  போச்சு..... மேடம் உங்க
கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க
நான் முருகன் மாதிரி தெரியல.....


ஏய்.... என்ன ஏமாத்த முடியாதுப்பா..
நீ.......கணே....சனே....தான்......


மேடம்...கண்ணாடிய  நல்லா...துடச்ட்டு
போட்டு பாருங்க.....நா...ன்  முருக..னாட்டம்
தெரிவேன்............


ஏய்...நீ...கணேசன்...தானே.....

இல்ல மேடம்  நா..... முருகன்
கணேசன்னா.. யானைத் தலை
இருக்கும்...மூக்கு நீ......நீளமாக இருக்கும்
பெரிய வாயி இருக்கும்..நா...ன் அப்படியா
இருக்கேன்...... போங்க மேடம்  போயிஅரவிந்
ஆஸ்பத்திரில  கண்ண டெஸ்ட் பண்ணுங்க  மேடம்.....................


டேய்“..... படவா..... நீ..நிச்சயமாக
கணேசன்...தாண்டா..............


அய்யோ..ராமா.... சார் என்ன சார் நீங்க
என்னய்ய்யே பாத்துகிட்டு நிக்கிறீங்க..
மேடத்த கூட்டிட்டு போங்க..சார்...


அப்போ...நீ..கணேசன் இல்லிய்.ய்.யா...
அய்யய்யோ..சார்.... உங்களுக்குமா................

புதன் 21 2016

அந்த நிகழ்வுக்குப்பின்.............











எங்கள் தெருவுக்கு
அடுத்த தெருவில்
இரண்டு பணம்
கொடுக்கும் இயந்திரங்கள்
அதில் ஒன்று
சென்ற மாதத்திற்கு
முன் மாதத்தில்
இருந்தே பகலும்
இரவுமாய் ஓய்வறியாமல்
வந்தவர்களுக்கு பணம்
கொடுத்து சிவந்த
கரமாய் காட்சி
அளித்த வேளையில்

திடிரென்று  கொடுக்கும்
பணத்தை வாங்க
எங்கள் தெருவரை
வரிசை வரிசையாய்
மக்கள் கூட்டம் .
ஜெ..ஜெவென்று
இருந்தது தெரு

ஒருநாள் பணம்
கொடுக்கும் இயந்திரம்
இறந்துவிட்டது என்று
துக்கத்துடன் அழுது
மாலை அணிவித்தனர்
தெரு மாதர்கள்.

அந்த நிகழ்வுக்குப்பின்
தெரு வாசிகளும்
துக்க முகத்துடனே
காட்சி  தருகிறார்கள்


கடந்த ஒருவாரமாக
அந்த இயந்திரம்
குந்தியிருந்த இடம்
பூட்டியே கிடப்பதால்
தெருவே வெறிச்
சோடி கிடக்கிறது..




செவ்வாய் 20 2016

மோதல்...மோதல்...மோதல்....

???????????????????????????????
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!















இந்தியாவும் இங்கிலாந்தும் மோதல்
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதல்
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதல்
இலங்கையும் இந்தியாவும் மோதல்
இந்தியாவும் பாக்கிஸ்தானும் மோதல்.
லாரியும் பஸ்சும் மோதல்
ஓபிஎஸ்ஸூம் சகிகலாவும் மோதல்
மோதல்..மோதல்.....மோதல்....

திங்கள் 19 2016

அப்ப..தெரியும் அவன் யாருன்னு


..................................
....................................
.....................................
















4ஜீன்னு வாயப் பொளந்து
அந்த சிம்ம வாங்கி
நல்லா பயன்படுத்தி விட்டு
பிறகு வேண்டாம் என்று
 மறந்து விட்டு இருக்கும்
போது உங்க பேர்ல
ஜியோ சிம்மு பயன்படுத்தியாக
45 ஆயிரம் பிலலு வரும்போது
அய்யோ! நான் பயன்படுத்தவே
இல்லையே என்று பதறும்போது
அப்ப..தெரியும் அவன் யாருன்னு

சனி 17 2016

மடப்பய திருடன்கள்.......

....................................
..................................
..................................









சிறையில் அடைப்பட்ட
திருடன் ஒருவன்
கிளி ஜோசியம்
பார்க்க ஆசைப்
பட்டான் தான்
எப்போது விடுதலை
ஆவோம் என்று.....


மற்றொரு திருடன்
நிணைத்தான் மார்கழி
மாத யோக்கியனாக
மாறினால் உடனே
விடுதலை கிடைக்குமென்று

வெள்ளி 16 2016

புரிந்தது போல் இருந்தது.

...........................
.............................
...............................












பெண் பார்க்கும்
படலத்தின் போது
மாப்பிள்ளையின் புகைப்
படத்தை பார்த்த
பெண்ணின் பார்வையை
கவனித்த  வேளையில்
ஒன்னும் புலப்படாமல்
தவித்த போது
பெண்ணின் தகப்பனார்
மாப்பிள்ளையின் வீட்டைப
பார்க்க வருகிறோம்
என்ற பிறகு
புரிந்தது போல்
இருந்தது மாப்பிள்ளை
வீட்டாருக்கு.............

புதன் 14 2016

அது ஏன்? சாமி..........

........................
......................
................

செத்தவர்கள் எல்லாம்
பேயாக உலா
வருவதில்லை நாண்டு
கிட்டு செத்தவர்கள்
மட்டும்   தான்
பேயாக உலா
வருகிறார்கள் என்றால்
போலீசால் சுடப்
பட்டவர்கள்  அவர்களால்
தூக்கில் இடப்
பட்டவர்கள் பேயாக
உலா வருவதில்லை...யே
அது   ஏன்?..சாமி.

செவ்வாய் 13 2016

கரையை கடந்தவள்கள்......

 கடந்த வாரம் வந்தவள்
பெயர் நாடாவாம் அவள்
கரைக்காலில் கரையைக்
கடந்தாளாம் அவள் போகும்
போது மோகப் பார்வையை
மறைத்து  விட்டு இது
என்ன “நாடா”டா என்று
கேட்டு கனமழையை வீசி
விட்டு சென்றாளாம் அவள்.

நாடாவுக்கு பின் வந்தாள்
வர்தா என்பவள் அவள்
வரும்போதே நானென்ன
 நாடாவைப் போல் வக்கத்தவளா
என்று கேட்டு 120 கிமீ வேகத்தில்
வந்தவள் ஒரு லட்சம்
மரங்களை வேரோடு முறித்தாள்
போன வருடம் செம்பரம்
பாக்கத்தை மறந்தவர்களுக்கு பாடம்
புகட்ட எண்ணி பத்தாயிரம்
பேரை வீட்டை விட்டு
வெளியேற வைத்தாள் அவர்களில்
ஏழு பேரின் உயிரை பறித்தாள்
வக்கத்த சிரிக்கி  “நாடா”வை
விட நான் ஒசத்திடா என்று
களி நடனம்  என்ற
அழுகுனி ஆட்டத்தை ஆடினாள்

போடி விறுதா சிரிக்கி
வர்தா...  உனக்கு முன்னாலே
தமிழகத்தின் தலைநகரான
சென்னை சமஸ்தானத்திலே
ஆறு முறை  முதல்
அமைச்சராக பதவி வகித்து
தமிழ் சமூகத்தை சீரழித்த
சதிகாரி   என்று பெயரெடுத்த
ஒருத்தி உன் சக்களத்தி
நாடாவுக்கும் உனக்கும் முன்னாடி
1991ன்னிலே வந்து ஆடாத
ஆட்டம் எல்லாம் போட்டு
விட்டு கரையை கடந்தாள்
என்பது ஒனக்கு தெரியுமாடீ....
ரெம்பவும் தான் பீத்தாா டீ





திங்கள் 12 2016

தீர்க்கதரிசி பாரதி........

.................
...................
.....................

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்
என  போயஸ்
கார்டன் சகோதரிகளை
பற்றி அன்றே
பாடி வைத்து
தீர்க்கதரிசி என்று
பெயரெடுத்தான் பாரதி..

ஞாயிறு 11 2016

பாரதி 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால்...

கொண்ட கொள்கைக்காக நஞ்சு
அருந்தி செத்தார் சாக்ரடீஸ்
தூக்கில் தொங்கினார் பகத்சிங்
போர் வீரர்களுடன் வீரராக
செத்துக் கிடந்தார் திப்பு சுல்தான்
கண்ட துண்டமாக வெட்டிக
கொல்லப்பட்டு கிடந்தார் நக்சல்பாரி
கவிஞர் சரோஜ் தத்தா..


“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”
– மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.
. பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.
மேலும் படிக்க............பாரதி அவலம்

வியாழன் 08 2016

புல்லட் ரயிலில் பறந்த புல்லட்பாண்டி...









என்னடா..மச்சான் இப்படி இழவு விழுந்த மாதிரி மூஞ்சிய இப்படி வச்சுகிட்டு இருக்க.....இப்படி இருந்தா..எப்படிடா வரிசை நகலும்... நமக்கும் சோர்வா இருக்குமுடா...ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும்டா....

டேய்... மச்சான்..நீ வேற..ஏன்டா கோபத்த கிளறுறே...... எனக்கு  அந்தாளு மேல கோபம் கோபமாக வருது....

நீ...மட்டும் கோபப்பட்டு..அந்தாளு மயிரக்கூட புடுங்க முடியாதுடா மச்சான்.. .என்னால பேசாம..உம்முன்னு வரிசையில நிக்க முடியாதுடா... பின்னாடி திரும்பிப்பாரு...  எவ்வளவு கூட்டம் வரிசசையில நிக்கிதுன்னு

அடேய்......என்னடா.இது....இவ்ளோ கூட்டம்.......

இங்கே நாம.... நடுவிதியில அல்லாடிக் கொண்டு இருக்கிறோம்.... அந்தப் ஆளு....ஜப்ப்பனில் புல்லட் ரயில்ல  ஜாலியாக   பறந்து  புல்லட்பாண்டியாக சந்தோசமா  திரியிறாப்ல்லடா  மச்சான்......


...நம்மல நடுவீதியில நிக்கிவச்சு புலம்ப விட்டுட்டு புல்லட் ரயில்ல பறப்பது புல்லட் பாண்டியின் கொழுப்புடா  மச்சான்......



இது. புல்லட் பாண்டியின் கொழுப்பு இல்லடா மச்சான் .... நம்ம தோழர் ஒருவர் சொன்ன அந்தப் புல்லட்பாண்டியின் பாசிச திமிருடா.....


..........................................

புதன் 07 2016

பல நாள் சாபம்..ஒருநாள் பலித்தது...

..................................
..................................
..................................





தங்களின் குடும்பத்தை
வாழ்வை சாராய
போதையால் சீரழித்து
வந்த ஒரு
ஜந்துக்கு தாய்
மார்கள் பலர்
அந்த ஜந்துக்கு
சாவு ஒன்று
வந்து சேராதா
என்று  புலம்பி
பலநாள் சாபம்
இட்டு வந்தபோது


சிலரின்  சில
நாள் வேண்டுதல்
களையும்  மீறி
பல நாளில்
ஒரு நாள்
அந்த ஜந்துக்கு
பலநாள் இட்ட
சாபம் ஒரு
நாள் பலித்தது.



திங்கள் 05 2016

சட்டென்று தோன்றி மறைந்த பனிக்கட்டி மழை.

...............................





அன்னிக்கு சாயந்தரம்
ஐந்து மணி இருக்கும்
ஒரு வழியாக
அந்த வேலைய
முடித்து விட்டு
மதியச் சாப்பாட்டை
தொலைக் காட்சியை
பார்த்துக் கொண்டே
சாப்பிட்டுக் கொண்டு
இருந்த நேரம்

 சட்டென்று சட சட
வென்று ஒவ்வொரு
சேனலும் போட்டி
போட்டுக் கென்று
அந்த எழவுச்
செய்தியைச் சொல்லின.

பசியால் சாப்பாட்டை
அவசரம் அவசரமாக
முடித்துக் கொண்டு
ஆர அமர உட்கார்ந்து
பார்க்க அமர்ந்தால்
சட்டென்று தோன்றி
மறைந்த பனிக்கட்டி
மழையைப் போல்
மறைந்து விட்டது
அன்னிக்கு எல்லா
தொலைக் காட்சிகளும்
சொன்ன சேதி....

என்னது நான்
சொன்னது புரியலையா

அன்னிக்கு சாயந்தரம்
ஐந்து மணி இருக்கும்
ஒரு வழியாக.......
...........................
..........................
.......................


ஞாயிறு 04 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்?.

ஒன்பது முட்டாள்கள்
நிறைந்த கூட்டத்தில்
ஒரே ஒரு
அறிவாளி இருக்க முடியுமா?

முடியாது என்கிறார்
ஒரு முட்டாள்


ஒன்பது அறிவாளிகள்
உள்ள இடத்தில்
ஒரே ஒரு
முட்டாள் இருக்க முடியுமா..??

முடியும் என்கிறார்
ஒரு அறிவாளி

எது சரி?
தவறு எது??

சனி 03 2016

நான் ஒரு மாத யோக்கியன் அல்ல....

........................
..................
.....................






டேய் தலைவா
என்னைப் பார்த்தா
கேட்டாய்  முருகாவா
அய்யப்பாவா என்று
 நான் மற்றவர்களைப்
போல ஒரு
மாத யோக்கியன்
அல்லடா வாழ்
நாள் யோக்கியன்டா
இப்போது பார்
என்னை தாடியை
வழித்து விட்டேன்.
புரிந்து கொள்
நான் நாத்திகனா..
ஒரு மாத
பக்த வேசம்
போடும் ஆத்திகனா
என்று...........


படிக்க........
கார்த்திகை, மார்கழி மாத யோக்கியர்கள்....

வியாழன் 01 2016

எழுந்து நிற்பது சீமான்களின் கடமை,




சார்... சேதிய
படிச்சிங்களா சார்
என்று கேட்கும்
போதே தெரிந்து
கொண்டு விட்டேன்

தியேட்டர்களின் தேசீய
கீதம் கட்டாயம்
என்று உச்சா
நீதிமன்றம் சொன்னதைத்
தான் அவர்
சொல்ல வருகிறார்
என்று...அவரிடம்
நான்  ஏன்?
கோர்ட்டுகளில் அலுவல்
ஆரம்பிக்கும் முன்
பாடக் கூடாது
என்று சொன்ன
போது..சே..
இதை எஜமான்
எப்படி சிந்திக்காமல்
விட்டார் என்றார்

தியேட்டரில் நான்
எழுந்து நிற்க
வேண்டிய அவசியமே
இல்லை ஏனென்றால்
பத்து பதினைந்து
ஆண்டுக்கு மேலாக
மழைக்குக் கூட
ஒதுங்கியது இல்லை.
தேசீய..கீதத்துக்கு
எழுந்து நிற்பது
படம் பார்க்கும்
சீ...மான்களின் கடமை..
அது நமது
கடமை அல்ல..
                                                     இந்...தீய..தேசீ..ய ..கீதத்தை தெரிந்து கொள்ள

புதன் 30 2016

சிட்டாய் ஓடி மறைந்த பெண்.......

அண்ணே.. வேல இல்ல
உங்க ஆபிசில எனக்கு
ஒரு வேல போட்டு
கொடுங்கண்ணே எனறு அந்த
பெண் கேட்ட போது....

உனக்கு என்னம்மா குறைச்சல்
கணவரோ கொத்னார் நீயோ
சீத்தாள். உன் மகனோ
ஆங்கில வழி பயிலும்
மாணவன் வேலை முடிந்த
உடன் கையில் கூலியை
பெறும் நீ எங்கே...

வரும் வேலையை அவசர
அவசரமாக முடித்துக் கொடுத்து
கூலிக்காக மாதக் கணக்காக
எதிர் பார்த்துக காத்திருக்கும்
நான் எங்கே என்
ஆபிசிலா  உனக்கு வேலை
வேண்டும் வேலை தருகிறேன்
ஆனால் ஒரு கண்டிசன்
செய்த வேலைக்கு எனக்கு
எப்போது கூலி கிடைக்கிறதோ
அப்போது தான் உன்
கூலியும் கிடைக்கும் என்ற
போது......அந்தப் பெண்
சிட்டாய் ஒடி மறைந்தாள்.....

செவ்வாய் 29 2016

கொத்தவரங்கா ஒன்று பூசனிக்காவா ஆகியது..

.....................................



இருபத்தி யோராம் ஆண்டை
நிறைவு செய்யும் விதமாக
நடந்து வரும் என்
இடத்து வழக்கு விசயமாக
நண்பர் ஒருவர் அறிமுகப்
படுத்திய அண்ணனை பார்க்க
அவர் வீட்டுக்கு போனேன்

வெளியில் நின்ற என்னை
அண்ணனின் துணைவியார் ஒரு
மாதிரியாக பார்த்து விட்டு
விசாரித்தார் யாரு நீங்க
என்று ..மறந்து விட்ட
அவருக்கு நான் யார்
என்று நிணைவு படுத்திய
போது ஆச்சசரியமாக என்னை
பார்த்து வியப்பு அடைந்தார்.

கொத்தவரங்கா போல இருந்த
அவரா  நீங்க என்றார்.
வெளியில் நின்ற படியே
அண்ணனுக்கு குரல் கொடுத்தார்.
ஏங்க..இங்க வாங்களேன்

வந்தவர் என்னைப் பார்த்து
கேட்டாரே ஒரு கேள்வி
நான் அப்படியே அசந்து
போய்  விட்டேன.என்னடா
வாயும் வயிறுமா வந்து
நிக்கிற.....என்று  நானு
என்னத்த சொல்ல முன்
தள்ளிக் கொண்டு நின்றதை
கைகளால் மறைத்து கொள்ள
கை கட்டிக் கொண்டு
நிற்க அண்ணனுக்கும் அக்காவுக்கும்
சிரிப்பு  பொருளாக ஆனேன்.

ஒரு காலத்தில் கொத்தவரங்காவா
இருந்த நான் இன்று
 பூசனிக்காவா ஆகி  விட்டேன்..........

இந்தீய தேசீ..ய கீதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள


திங்கள் 28 2016

செருப்பால் விளைந்த செருக்கு.....

????????????????
????????????????????????
??????????????????????????????






ராமனின் ...சீ...தையாக
நடித்தற்க்காக அமைச்சர்
பதவி பெற்ற
அந்த ராணியின்
செருப்பும் அல்லுமா...?

அறுந்து போன
அந்த செருப்பை
தைத்த கூலிக்கு
மேல் கூடுதலாக
கல்லா பெட்டியில்
திணித்து சென்றது
சீ..தையின் குணமா..?

அல்லது உணவுக்
கடையில் சாப்பிட்ட
பில்லு போக
மேற்க் கொண்டு
டிப்ஸ் தருவது
போல் தந்த
 சீ..மாட்டியின் குணமா??

இங்கீலிசுல டஸ்சு
புஸ்சுன்னு பேசியதால்
தையல் தொழிலாளி
புரியாமல் விழித்ததால்
கண்டு பெருமிதத்தால்
பத்துக்கு நூறு
கொடுத்த ஓட்டு
சீட்டு அரசியல்
வாதியின் குணமா???

சீதையை மீட்க
கடலில் ரோடு
போட்ட குரங்குகள்
புடை சூழு
வந்த  செருக்கால்
அளித்த  பணமா....???

இருந்தாலும் சீதையான
ராணி நடக்கும்
போது எப்படி
திடிரென்று செருப்பு
அறுந்து போகும்.....????

இராவணனின் சூது
எதுவும் இருக்குமோ????

அடேய்..கம்பா..
நீ...தாண்டா..
பாடிச் சொல்லனும்........



.

ஞாயிறு 27 2016

பயம்மா..சே..சே...அது....






அப்பேர்...பட்டவரே
போயிட்டாரு
இம்மாம் பேரு
பட்ட ...இந்த
சிங்காரி மவ
மட்டும் சீக்கிரமா
போய் தொலைய
மாட்டுறா அய்யா

..............................................

தாயி ஒன்ன
சொல்லல நாயி
பேப்பரில வந்த
செய்திய சத்தம்
போட்டு படிக்கிறேன்.
நீதான் கஞ்சி
குடிக்கிற எழுந்து
நடக்கிற ஓடுற
ஒன்ன சொல்வேனா
தாயி என்னாது..
இதுக்கு எல்லாமா
என் மேலே
டம்ளர கொண்டு
எறிவாங்க தாயி..


..........................

பயமா..சே..சே...
அது எங்க
வ்ம்சத்திலே..கிடையாது
இந்த நாயி
கிட்ட  மட்டும்
தான் கொஞ்சுன்னு
பயம்...கடிச்சா
வலிய தாங்கினாலும்
ஊருக்கு தெரியக்கூடாதுல.......



சனி 26 2016

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ்வ்வுவுவும்

.........................................
..........................................
............................................








டேய்..தம்பி..... அங்க என்னடா..பார்க்கிற.....

பாக்கலணே்ணே.... படிக்கிறேண்ணே........

என்ன படிக்கிறிய்யா... அப்படி என்னத்தடா..படிக்கிற.....

தர்மத்தின் வாழ்வு  தன்னை சூது கவ்வு..ம்.. தர்மம் மறுபடியும் வெற்றி பெருமுன்னு கடையில  எழுதி இருக்கிறத படிச்சண்ணே....

அந்த ஜெராக்ஸ் கடை யாருதுன்னு தெரியுமாடா..???

 தெரியாதுண்ணே... ஆமா..யாருதுண்ணே......


முன்னால் மாநகராட்சியில மண்டலத் தலவராயிருந்த முனியாண்டியுடையதுடா.....

ஓ.... அவரா....ஆமாண்ணே... இந்த முனியாண்டி..மீண்டும் மண்டலத் தலைவரா வந்திருவாரா ..ண்ணே.........

ஏ....ஏன்டா   கேக்கிறடா............

 அவர் கடையிலதான் தர்மம் மீண்டும் வெற்றி பெறும்ன்னு எழுதியிருக்காருலே..அதப் படிச்சதுனால கேக்குறேண்ணே........

சரியாய்..போச்சுடா..... ஒனக்கு அம்புட்டு..அறிவா..... நீயெல்லாம் இங்கு இருக்கிற ஆளே  இல்லடா...நீ......

அப்போ நா.....அமெரிக்காவுல இருக்கிற ஆளாண்ணே.....

அங்க இல்லடா..வெண்ணே..............

அப்போ..எங்க  இருக்க வேண்டியவன்ணே.......

அப்பல்லோ..ஆசுபத்திரியில  இருக்க வேண்டியவன்டா வௌக்கண்ணே..

அங்க போயி இறக்கிறது... அம்புட்டு காசோ..செல்வாக்கோ  இருந்தா...நா.... ஏண்ணே..... தர்மம் மீண்டும் வெல்லுமாண்ணே ன்னு உங்ககிட்ட கேட்கப்போறேன்........

அய்யோ...சாமி...... என்ன ஆள விடுறா........

இப்போ என்ன ..சொன்னிங்கண்ணே.....

நா........ ஒன்னுமே  சொல்லலடா..சாமி........

என்னண்ணே..என்னைய போயி...சாமி..பூமின்னு.......

 டேய்..... தம்பி..... என்ன விட்டுறா...... ஒரே ஒட்டமா போயிடறேன்டா.....

எங்கண்ணே...ஓடப் போறீங்க.......

வீட்டுக்குடா.....................

அண்ணே....... அண்ணே.........



வெள்ளி 25 2016

சார்...உங்களுக்கு நான்தான் கிடைச்சேனா....

............................
.........................
...........................










சார்..என்ன
சார் இது

ஐநூறு ரூபாய
கொடுக்குறிங்க...ஏன்
சார்  இப்படி
உங்களால மாத்த
முடியலான உங்களுக்கு
நான்தான் கிடைச்சேனா..
இன்றில்  இருந்து
ஐநூறு ஓவா
செல்லாதுன்னு ஒங்க
பங்காளிக சொல்லிடாங்கே
சார்  போங்க
ஐநூற உங்க
மியூத்துல வச்சுகிட்டு
எனக்கு வேற
நூறு ரூபாயா
கொடுங்க சார்..

வியாழன் 24 2016

கோபம் கம்யூட்டரை உடைக்கும்.........


........................
...........................
..........................
.........................





நான் பிறந்து
நடந்த பின்
என் தாயருக்கு
பயந்தேன்.அடுத்து

என் தெருவின்
நாட்டாமை காரனின்
வைப்பாட்டிகளுக்கு பயந்து
இருந்தேன். பெரிய

ஆளாக அதாவது
அய்ந்தடியாக வளர்நத
பின் தெருவில்
உள்ள சிறிய
பெரிய பொம்பள
ரவுடி மார்களுக்கு
பயந்து இருந்தேன்.

இடப் பிரச்சினையால்
தொடர்ச்சியாக பொய்
வழக்கு போடும்
போலீசுக்கும் பயந்து
கொண்டு இருந்தேன்

கடைசியாக என்
அம்மாவின்  மகள்
வழி பேரன்களுக்கு
அதாவது என்
சகோதரியின் மகன்கள்
அதாவது என்
மருமகன் மருமகளுக்கு
பயந்து கொண்டு
இருக்கிறேன் ஏன்

என்றால் மோடியால்
ஏற்பட்ட பண
நெருக்கடியால் கோபம்
கொண்ட என்
மருமகன் நான்
பயன் படுத்தும்
கம்யூட்டரை உடைத்து
விட்டார்.வெளியே

சென்ற நான்
வந்து பார்த்த
போது நான்
இல்லை நரி
இல்லை என்ற
கதையாகி போனது...

இதிலிருந்து நான்
தெரிந்து கொண்டது
கோபம் கம்யூட்டரை
உடைக்கும. என்று

செவ்வாய் 22 2016

கம்யூனிசம் வந்தால் யாருக்கு ஆபத்து???






கம்யூனிசம் வந்தால்
யாருக்கு ஆபத்து?

கம்யூனிசம் வந்தால்
பலர் உழைக்க
கோடி கோடியாய்
சுரண்டி சமூக
சொத்துக்களை திருடி
வைத்திருக்கும் பெரு
முதலாளிகளுக்கும் முதலாளித்துவ
வர்க்கத்துக்கும்தான் ஆபத்து.


கம்யூனிம் வந்தால்
அந்த முதலாளி
வர்க்க ஆட்சியால்
மறுக்கப் பட்டிருக்கும் அனைத்து
உரிமையுடன் கூடிய
சுகவாழ்வு சகலருக்கும்
கிடைக்கும் என்பதுதான்.



திங்கள் 21 2016

ஜோதிடத்தை எதிர்க்கும் இந்திய அரசமைப்பு சட்டம்...

நண்பரின் குடும்பத்தில பணக் கஷ்டம்.... அந்தக் கஷ்டம் மோடியால் ஏற்பட்டதென்று நண்பரின் குடும்பத்திற்கு தெரிந்திருந்தும்..  


நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் வேலைக்கும் கல்விக்கும், தொழிலுக்கும் திருமணத்திற்கும் ஜோதிடத்தை நம்பும்போது, நாம் . இந்தக் கஷ்டத்திற்க்கான காரணத்தை அறிந்து களைவதற்க்காகவும்  புலம்பிய மனைவிக்காகவும்  மனைவியை அழைத்துக் கொண்டு  தன் பிள்ளையின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு பால குருசி ஜோதிடரை காணச் சென்றார்.

.  அந்தச் ஜோதிடர்  இவர்களைின் மனநிலை அறிந்து அதற்கேற்ப ஆறுதலும் மனநிறைவையும் தன்னுடைய சொல் சாமர்த்தியத்தால் இவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியை கொடுத்து. அதற்கான பரிகாரம் செய்யச் சொல்லி இவர்களிடம் அவருக்கான தொகையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த நண்பரை சந்திக்க சென்ற போது... அவர் வீட்டில் சில பரிகாரங்களை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு. விசாரித்த போது  மேற்கண்ட விபரத்தை சொன்னார்....அவரிடம் நான் வந்த விபரத்தை சொல்லிவிட்டு திரும்பி விட்டேன்.

சில நாட்கள் கழித்து என்னை பார்க்க வந்தபோது... அவரிடம் சொன்னேன்.

அய்யா...தாங்கள் என்னைவிட  கல்லூரி படிப்பு படித்தவர். ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கை என்பது தெரியாதா....ஒரு தகவலைச் சொல்கிறேன் கேளுங்கள் . 

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்பு சட்த்தின் பிரிவு 51A(h) கூறுகிறது. அரசியல் சாசனத்திலேயே, அறிவியல் மனப்பான்மை வளர்க்கச் சொல்லும் ஒரே நாடு இந்தியாதான்..

ஆனால் நாட்டை ஆளவந்தவர்களோ..இந்த விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு உறுப்புகளோ...சடங்கு, சம்பிரதாயம், நாள் , நேரம், நட்சத்திரம் பார்த்து அரசு வேலைகளை செய்யம்போது... உங்களை மாதிரியான படித்த ஆட்களால் எப்படி விஞ்ஞானம் வளரும்...

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு..ஜோதிடம், ஜாதகம் கணிப்பவர்கள் மிகவும் நாட்டுக்கே ஆபத்தானவர்கள் என்று பேசி இருக்கிறார். அப்படிபட்ட நாட்டுக்கே ஆபத்தானவர்கள்  உங்க வீட்டுக்கு  மட்டும் எப்படி ஆபத்தானவர்களாக..இல்லமால் இருப்பார்கள்...

இன்னும் ஏன், ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை, என்று பார்ப்பன ராஜகொபால யச்சாரியும், “ ஜோதிடந்தனை இகழ்” என்று பார்ப்பன பாரதியும் பாடியும் எழுதியுள்ளனர்....பார்ப்பன பண்டாரங்களே ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் நிறைந்ததுதான் ஜோதிடமும் ஜாதகமும்..


500 ரூபா 1000ரூபா செல்லாதுன்னு அறிவித்த மோடியின் சதியால்தான்... இந்தக் கஷ்டம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரிந்திருப்பது தங்களுக்கு தெரியாமல் போன தேன் .. என்று கேட்டபோது...

நண்பர் எதிர்த்து எதுவும்  கேள்விக்கனை கொடுக்காமல்  மௌனமாக இருந்தார்.

பிறிதொரு நாளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என் மீது அம்பு எய்துவார்...

ஞாயிறு 20 2016

இழிபிறவியை தேர்ந்தெடுத்த அதி மேதாவிகள்...








அந்த தொலைக்காட்சியை
பார்த்த போது
ஒரு அமெரிக்கத்
தாய் அழுது
கொண்டு இருந்தார்
அந்தத் தாய்
அழுத காரணம்
அப்போது எனக்கு
 புரியவில்லை  இந்திய
பாராளுமன்ற மூலம்
புரட்சியை விரட்டிச்
சென்று பிடித்து
விடலாம் என்று
பாடம் நடத்தும்
கட்சியை சேர்ந்த
நண்பர் ஒருவர்
அமெரிக்க மேதாவிகளை
விட இந்திய
பாமரர்கள் பரவாயில்லை
என்று சொன்ன
பிறகுதான் புரிந்தது.

120  மில்லியன்
அமெரிக்கர்கள். தங்கள்
சனநாயக கடமையை
செவ்வனே ஆற்றி
முடித்து விட்டார்கள்

வெளி வந்த
முடிவைக் கண்டு
உலகம் மட்டும்
அல்ல வாக்களித்த
அமெரிக்கர்களே அதிர்ந்து
போய் நிற்கிறார்கள்
ஒரு வக்கிரமான
பாலியல் வெறி
பிடித்த அதிபரை
தேர்ந்து  எடுத்து
இருக்கிறோம் என்று..



வெள்ளி 18 2016

கொள்ளைக்காரனை ஆள வைக்கும் தேசம்........


..................................
...............................
...............................







அவன்  ஆட்சியாளன் அல்ல
அவன் ஒரு கொள்ளைக்காரன்
நல்லவன் போல் வேடமிட்டு
வழியில் போவோரை வருவோரை
வழி மறித்து  வழிப்பறி
செயயும் அவன்  கொள்ளைக்காரன்

அய்யோ..வழிப்பறி செய்யும்
கொள்ளைக்காரன் யார் என்று
தெரிந்தும் ஏமாளிகளை விட
அறிவில் சிறந்தவர்கள் அமைதி
காப்பது ஏனோ.... இந்த
பேரமைதி பெரும் ஆபத்துக்கு
அறிகுறி என்று சொல்வது
உன்மைதானோ.....இதை விட
இன்னொரு ஆபத்தா..அப்படி
என்றால் இந்நாடு வழிப்பறி
கொள்ளைக்காரனை ஆள வைக்கும்
தேசம்..இதுவும் தேசமா......


வியாழன் 17 2016

ரத்தக்காட்டேரியின் வாய்ஸ்.....

..........................................



........................................

.........................................









ஒரு நாட்டில் மனிதர்களை அடித்து தின்னு உயிர் வாழும் ரத்தக்காட்டேரி ஒன்று இருந்து வந்தது.

அந்த ரத்தகாட்டேரி பெரிய பெரிய கடவுள்களுக்கு பூஜையும் தவமும் செய்து “கேட்டதெல்லாம் கிடைக்கும் வரம் ” பெற்று இருந்தது.

இப்படி பெரிய கடவுளிடம் வரம் பெற்று இருந்தாலும் அந்தக்காட்டேரி மக்களை அடித்து தின்பதை நிறுத்தவே இல்லை. ஏனென்றால் அந்தக் ரத்தக்காட்டேரி பிறவிக் குணமே  அதுதான்...

இப்படி இருந்த கா்டேரியிடம் இன்னொரு காட்டேரி அதனிடம் கேட்டது. “உனக்குத்தான் கேட்டதெல்லாம் கிடைக்குதே, அப்புறம் ஏன்? மனிதர்களை  அடித்து சாப்பிடுகிறாய் என்று கேட்டது.

அதற்கு அந்த காட்டேரி சொன்னது.” எனக்கு தெரிந்த ஒரே வேலை மனிதர்களை அடித்து தின்பது மட்டும்தான்.....என்றது...பெருமையாக....

நன்றி!............


புதன் 16 2016

பாத்தியாக்கா அந்தாளு... கொழுப்ப.....

...........................................
..........................................
.........................................









என்னக்கா  அதிகாலையில இங்க வந்து படுத்துகிட்ட.......

அத ஏன்டா கே்க்கிற தம்பி.....வியாபரத்துக்கு காசில்ல..இருந்த காசெல்லாம் இந்த மூனு நாளு சாப்பாட்டுக்கு சரியாப் போச்சு  .அடுத்து வியாபாரத்துக்கு போக காசில்ல.. காதுல போட்டு இருக்கிற நகையை வச்சு கடன் வாங்கப்போனா.....வெறும் 500 ரூபாகத்தான் இருக்குனு சொல்லிப்புட்டான். வேற வழி எதுவும் இல்லமா அந்த பணத்த வாங்கிட்டு  இங்க வந்து மாத்துறதுங்க அதிகாலையில வந்து படுத்துட்டேன்டா............

நீ..இந்த பேங்க் முன்னால படு்த்து இருந்ததை...பத்தி  அந்தாளு சொன்னத  கேட்டியாக்கா.........

என்னடா சொன்னான் அந்த ஆளு......

நீ...நிம்மதியாக தூங்குறியாம்.... கருப்பு பணத்த வச்சிருக்கவனெல்லாம் தூக்கமில்லாம  திண்டாடுறிங்களாம்க்கா.............பாத்தியாக்க அந்தாளுக்கு இருக்கிற கொழுப்ப.....

ரெம்பத்தாண்டா அந்தாளுக்கு ஏறிப்போச்சு.... நாளைக்கு என்ன செய்யிறது..இன்னிக்கு என்ன செய்யிறதுன்னு தவியாய் தவிச்சுகிட்டு இருக்கிறது தெரியாம.... அந்தாளு தோசையை திருப்பி போடுறாண்டா .... நாசாமா போக........






திங்கள் 14 2016

தொடரும் அவதியும்..வில்லனின் கொடூரமும்........


.......................
.....................
..................








என்னங்க  பிரதர்...இப்படி சலிச்சுகீறிங்க.....ஒருநாள்ல வந்து நிக்கிறதுக்கே..இப்படின்னா... பிறந்ததிலிருந்து சாகுர வரைக்கும் காத்திருப்பேதே பொழைப்பா போன.. நாங்களெல்லாம் எங்கே போயி யாரிட்ட போயி சலிச்சுகிறது  பிரதர்.....

வரிசையிலே நிக்கிறதப் பத்தி சலித்துக் கொள்ளவில்லை பிரதர்....இப்படி என் பொழப்ப அந்தர கோலமாகிவிட்ட சன்டாளப்பயல்கள நிணச்சு பொருமுறேன் பிரதர்......

நிஜமாகவா..பிரதர்...

ஆமாம் பிரதர். இந்தப் பேப்பரை பாருங்கள் பிரதர்.


மக்களுக்காக உயிர் தியாகம் செய்யத் தயார் மோடி ஆவேசப்பேச்சு.......இந்த பேச்சு அந்தாளுக்கு கைவந்த கைலையாச்சே பிரதர்...


அது இல்ல பிரதர்... நம்ம உயிர வாங்கிபுட்டு இவரு பெருசா உயிர்விடத்தயார்ன்னு ஆவேசமா பேச்சு-இத படிச்சுபுட்டுத்தான் பொருமினேன்...பிரதர்.

உண்மைதான் பிரதர்..உங்க வாயிலிருந்தே...அந்த நாறுன கெட்ட கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்திருக்கன்னா.....நீங்க திட்டுன அந்த ஆளு மகா கொடூரமானவன்தான்.. பிரதர்.


இன்னொன்னு பிரதர்.. இந்தக் கொடுமை இன்னும் நீடிக்குமாம் பிரதர்.....


கள்ள பணத்த...கருப்பு பணத்த ஒழிக்கிறாங்கோலோ இல்லீயோ.... அந்த ஆளு சொல்லிக்கிற இந்துக்களையும் சேர்த்து ஒழிப்பாங்க பிரதர்...


புலம்பாத என்னையே புலம்ப விட்டவரு...வில்லாதி வில்லன் பிரதர்.

அந்த வில்லாதி வில்லனும் ஒருநாள் துண்டக் காணோம் துணியக் காணோம்முண்ணு ஓடுற காலம் ஒன்று வரும் பிரதர்....



அந்தக் காலம் எப்போ வருமோ...பிரதர்...


அந்தக் காலம் வர லேட்டாசுன்னா... நாமெல்லாம் கூடி தேர் இழுத்து வருகிற மாதிரி இழுத்து கொண்டு வருமோம் பிரதர்.


வெள்ளி 11 2016

மோடியின் புதிய 2000ரூபாயின் சாதனை




இன்று மதியம்
பாக்கிஸ்தான் இராணுவ
வீரன் சுட்டதில்
இந்திய ராணுவ
வீரரின் நெஞ்சில்
 பாய்ந்த குண்டு
ஒன்று அவர்
பாக்கெட்டில் சிப்ஸ்
பொருத்தப் பட்ட
புதிய 2000
ஓவாயில் பட்டு
திரும்பி பாக்கிஸ்தான்
வீரனின் உடலை
துளைத்து சல்லியாக
ஆக்கியது நும்மில்
எத்துனை பேருக்கு
தெரியும்................


வியாழன் 10 2016

மோடி என்றால் மோசடி என்று அர்த்தம்




நண்பா..ரெம்ப சிரமாம இருக்கு .வேலை கூலிய வாங்கின பிறகுதான் 500ரூபா செல்லாதுன்னு தெரிஞ்சுச்சு....கடையில வாங்க மாட்டுறாங்கே...அட  ஏன்? கேட்குற அரசாங்க சாராய கடையில.. வாங்கினவன்..இப்போ வாங்க முடியாது .செல்லாதுன்னு சொல்லிட்டான்... என்ன செய்வது தென்று தெரியவில்லை... உங்கள மாதிரி எனக்கு  பேங்க் கணக்கு எதுவுமில்ல.. தயவு செய்து  இந்த 500ரூபாய வச்சுகிட்டு ஒரு முன்னூறு ரூபா கொடுங்க  மீதிய நாள பின்னக்கி வாங்கிக்கிறேன் நண்பா....

அதுசரி, நண்பா... ஏன்? 500ரூபா செல்லாதுன்னு தெரியுமா...?..நண்பா...


என்னமோ  கருப்பு பணத்த ஒழிக்க போறதுக்காக  500,1000ரூபாக்களை செல்லாதுன்னு அறிவிச்சு இருக்காங்கேகளாம்...நண்பா....

அப்போ..நீ வச்சு இருப்பது கருப்பு பணம் ...நண்பா...?

இல்ல நண்பா.... அன்றாட கூலி வேலை செய்து  சம்பளம் வாங்கி வருவது உனக்கு தெரியாத நண்பா.....!!!!!இது எப்படி நண்பா கருப்பு பணமாகும்


எனக்கு தெரிஞ்சு என்ன நண்பா.... செல்லாதுன்னு அறிவிச்சவன்னுக்கு தெரியவில்லையே...? இந்தப்பணம் கருப்பு பணமுன்னு சொல்லிட்டாங்க..நண்பா.....

கோபமும் ஆத்திரமும்தான்  வருது  என்ன செய்வது...நண்பா.. நான் உன்னிடம் கேட்டுவிட்டேன் நீயும்  உன் நண்பர்கள் யாரிடம் கேட்பீரு்கள்...

நீ..நான்..மற்ற நண்பர்களின் குடும்பமும் மற்றும் நம்மைப் போன்றவர்களின் குடும்பம்தான் கருப்பு பண முதலைகள் என்று கணித்து நமக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்..... வங்கிகளில் மாற்றிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.. வங்கிகள் உடனே பணத்துக்கு பணம் என்று மாற்றி உடனே தருவதில்லை.. எங்கும் ஒரே பரிதவிப்பும்  படபடப்பும் வேதனைதான். நானும் என் நண்பர்களும்தான் வங்கிகளில் காத்து கிடக்கிறோம் நண்பா..

உண்மையான கருப்பு பண முதலைகள் யார் நண்பா....? அவர்கள் நம்மைப் போன்று உங்களைப் போன்று வங்கி வாயில் காத்துக் கிடந்து திண்டாடுவார்களா..??

அம்பானி. அதானி, ரஜினி, நத்தம். ஓபிஎஸ், இவர்களைப் போன்றவர்கள் .யாரும்  வங்கிகளில் வரிசையில் நின்று காத்து கிடக்கவில்லை நண்பா...

அப்படியா....அப்போ...இந்த 500,1000த்தை செல்லாதுன்னு  அறிவிச்ச மூஞ்சி யாரு நண்பா.........??

உன் கூலிப் பணத்தை மாற்ற முடியாமல்... அல்லாடும் நாட்டில் பத்து இலட்சத்துக்கு உடை உடுத்தி பகட்டாக வலம் வந்த மோடி தான் நண்பா....அதோடு கருப்பு பணத்தை கண்டுபிடித்து அந்த பணத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் எனக்கும் உனக்கும் ரூபா 15இலட்சத்தை கொடுப்பேன் என்று சொன்ன வீராதி வீரர் சூராதி சூரர்தான்  நண்பா....

என்னது  பிரதமர்ர்ர் மோடியா...???

ஆம் நண்பா... இனிமேல் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..... மோடி என்றால் மோசடி என்று அர்த்தம்   ......நண்பா...

...........................!!!!!!!!!!!!!!!!




புதன் 09 2016

மாப்பு...எத்தனை ஆப்பு வச்சாலும்.....

................





மாப்பு......நேத்து  இந்தீயாவுக்கே  ஆப்பு வச்சது  தெரியுமா....?

இந்தியாவுக்கு தானே..மாப்பு...

ஒனக்கு சேத்துதான் ஆப்பு மாப்பு...


மாப்பு.... எப்படித்தான் எனக்கு எத்தனை ஆப்பு வச்சாலும் என் மண்டை மயிற ஒன்னக்கூட  புடுங்க முடியாது... தெரியுமா மாப்பு..

ஆ.... உண்மைதான்  மாப்பு... ஒனக்கு மண்டையிலே ஒத்த பொட்டு முடி இல்லேங்கிறது.. ஆப்பு வச்சவனுக்கு எங்கே தெரியப் போகுது......

ஆனாலும் மாப்பு... ஆப்பு வச்சவனைத்தான் ஆப்பு வாங்கினவிங்க பெருமையா பேசுவாங்க....மாப்பு.

உண்மைதான் மாப்பு.. அது இந்த நாட்டோட பிறவிக்குணம்.மாப்பு  ஆப்பு வச்சவனையே ஒலக ரேஞ்சுக்கு தூக்கி வச்சு பேசுறது அவ்வளவு சீக்கிரத்தில் போகாது மாப்பு...

ரெண்டு நாளைக்கு ஆப்பு வச்சத பத்தி பொங்குவாங்கே.. மூனா நாத்து ஆப்பு வாங்கினதே தெரியாமே.. பீத்துவாங்க..மாப்பு... இவிங்கள பத்தி நமக்கு தெரியாதா மாப்பு....

...............





செவ்வாய் 08 2016

அறிந்து கொள்ளுங்கள்-1

இரசியப் புரட்சியின் நூற்றாண்டு..

1917ஆம் ஆண்டு நவம்பர் 7ல் இரசியாவில் மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு தோழர் லெனின் தலைமையில் சோசலிச புரட்சி வெற்றிடைந்தது. அந்த இரசியப் புரட்சியின் நூற்றாண்டு 2017ஆம் ஆண்டு.

இரசியப் புரட்சி பூமிப் பந்தின் 5ல் ஒரு பகுதி மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைத்தது. சமத்துவமான ஒரு சோசலிச கட்டமைப்பை உருவாக்கியது. மக்களின் அணைத்து தேவைகளையும் பெறுவதற்க்கான ஒரு சமூக அமைப்பை உருவாக்கியது.

இப்படியான ஒரு  சொர்க்கத்தை, சோசலித்தை இரசியாவில் படைத்துக் காட்டுவதற்கு வழிகாட்டியாக இருந்த மார்க்சியத்தை நடைமுறைக்கான சித்தாந்தம் என நிருபித்துக் காட்டினார் தோழர் லெனின்.

பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமான மார்க்சியத்தை பூமாலை தொடுப்பது போல இலகுவாக  தொடுக்கவில்லை.

இந்த மார்க்சிய சித்தாந்த்தை உருவாக்குவதற்கு தோழர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஜென்னி மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பு ஈடு இணையற்றது.

மார்க்சுக்கு முன்னால் இருந்த சித்தாந்த வாதிகள்? அறிஞர்கள், உலக சமூக பிரச்சினைகளுக்கு விளக்கம் தந்தார்கள், வியாக்கனம் செய்தார்கள்.. அதன் மூலம் கற்பனையான சோசலித்தை மக்களுக்கு போதித்தார்கள், முதலாளிகளின் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் ஒடுங்கி ஒன்றி வாழ்வதற்கே  வழிகாட்டியாக அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் பாட்டாளி வர்க்க சித்தாந்த ஆசான் மார்க்ஸ் முதலாளிய தத்துவ சமூகத்தை தலைகீழாக  புரட்டி போடும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வழிகாட்டினார். அவர் உருவாக்கிய சித்தாந்தமே மார்க்சிய சித்தாந்தம். அந்த பேராசான் 1818-ம் ஆண்டு மேமாதம் 5ந்தேதி பிறந்தார். அவர் பிறந்து2017ம் ஆண்டுவரை இரு நூற்றாண்டாகிறது.

இவற்றோடு, 1949ம்ஆண்டு அக்டோபரில் தோழர் மாவோவின் தலைமையில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்து மலர்ந்தது மக்கள் சீனம். 1966-ல் சோசலித்தை நோக்கி முன்னேறிய செஞ்சீனத்தை முதலாளிய தத்துவ பாதைக்கு இழுத்து செல்ல முயன்ற அதிகார வர்க்கத்தின் கம்பலை முறியடித்த சீனப் பண்பாட்டுப் புரட்சிக்கு ஐம்பதாமாண்டு..

1967ம் ஆண்டு இந்திய புரட்சி வானில் சிவப்பு நட்சத்திரமாய் தோன்றியது நக்சல்பாரி எழுச்சி. அது போலி கம்யூனிச இயக்கத்தை அம்பலப்படுத்தி இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு பாதை வகுத்து கொடுத்தது. வசந்தத்தின் இடி முழக்கமாக தோன்றிய நக்சல்பாரி எழுச்சிக்கு ஐம்பதாமாண்டு.


இந்தாண்டு..,


பேராசான் மார்க்ஸ் பிறந்த தின இரு நூற்றாமாண்டு
இரசியப் புரட்சியின் நூற்றாண்டு
மக்கள் சீனத்தின் பண்பாட்டு புரட்சிக்கு ஐம்பதாமாண்டு
இந்திய புரட்சியின் விடிவெள்ளி சிவப்பு நட்சத்திரம் தோன்றிய நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாமாண்டு..



ஞாயிறு 06 2016

மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!

மாமேதை மார்க்ஸ் பிறந்தநாள் 200-ஆம் ஆண்டு !
ரசியப் புரட்சியின் 100-ஆம் ஆண்டு !!


முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே!
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. பஞ்சைப் பராரிகளின் ஆத்திரப் பெருமூச்சு. வரலாறு தலைகீழாய்க் கவிழ்த்துப் போடப்பட்ட நாள் சவுக்குகளின் பிடி கைமாறிய நாள். நூற்றாண்டுகால அந்தகாரத்தினுள் கோடி நட்சத்திரங்கள் மலர்ந்த நாள். வீழ்த்தப்பட்டவர்கள் வர்க்கமாய் எழுந்த நாள். கையேந்திக் கேட்டவர்கள் கைநீட்டி எடுத்துக் கொண்ட நாள். உரிமைக்காக ஏங்கியவர்கள் அதைப் பறித்துக் கொண்ட நாள். அதிகாரம் செலுத்த ஆண்டைகளும் அதிகாரிகளும் தேவையில்லை என நிரூபித்த நாள். முடியாதென அறிஞர்கள் நகையாடியதையெல்லாம் மக்கள் முடித்துக் காட்டிய நாள். அதிகாரத்தின் இறுமாப்பு தகர்த்தெறியப்பட்ட நாள். மேகங்களுக்கு மேல் வாழ்ந்து பழகிய மத பீடங்கள் தரையிறக்கப்பட்ட நாள்.
1917 நவம்பர் 7 என்பது வெறும் தேதியல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்ற பழைய சரித்திரம். மக்களே அரசாங்கம் எனத் திருத்தி எழுதப்பட்ட நாள். ஆலைகளில் சிறைப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தில் அமர்ந்த நாள்.விவசாயிகளின் வியர்வையால் வளம் பெற்ற நிலங்களெல்லாம் அவர்களுக்கே சொந்தமான நாள். சம்மட்டி ஏந்திய கைகள் அரசியல் சட்டம் வரைந்த நாள். ஏர் கலப்பை ஏந்திய கைகள் பூமிப் பந்தின் ஆறில் ஒரு பங்கைத் தாங்கிய நாள். மனிதனின் பேராற்றல் கட்டவிழ்த்து விடப்பட்ட நாள். கூட்டுத்துவம் என்கிற ஓவியம் உயிர்பெற்று சட்டகத்தினுள்ளிருந்து எழுந்து வந்த நாள்.
1917 நவம்பர் 7ம் தேதியில் அரங்கேறியது வரலாற்றின் மற்றுமொரு நிகழ்வு அல்ல. பரிணாம வரலாற்றில் மனிதக் குரங்கிலிருந்து மனித மூதாதை உருவானதற்கு இணையான நிகழ்வு. நிதி, நீதி, காவல், படை, நிர்வாகம் என அரசின் அனைத்து அலகுகளையும் மக்களே செலுத்த முடியும் என்பதை நிரூபித்த நிகழ்வு. பராரிகள் பாராள முடியும் என்பதை பறைசாற்றிய நிகழ்வு. செல்வத்தைப் படைத்தவர்கள் அதன் எஜமானர்களாகவும் முடியும் என்பதை உணர்த்திய நிகழ்வு. நூற்றாண்டுகளாய் அறிவு மறுக்கப்பட்டவர்கள் மனித குலத்தின் மொத்த அறிவையும் சில நாட்களிலேயே சுவீகரித்துக் காட்டிய நிகழ்வு.மனித வாழ்க்கை வாயில் துவங்கி வயிற்றைக் கடந்து ஆசண வாயில் முடியும் ஒன்றல்ல என்பதை உணர்த்திய நிகழ்வு. கட்டளையிடும் படைத்தலைவன் மேல் களமாடும் வீரனுக்கு பதிலளிக்கும் கடமை உண்டென்பதை நிறுவிய நிகழ்வு.
வரும் திங்களன்று 7.11.2017 அன்று சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா துவங்குகிறது. இந்த ஆண்டு முழுவதும் சோவியத் யூனியன் குறித்த கட்டுரைகள், கதைகள், விவாதங்கள், வீடியோக்கள் அனைத்தும் வெளியிடுவோம். மேற்குலகிலேயே பொதுவுடமை வேண்டும் என்று இளைய தலைமுறை முழக்கமிடும் நாளில் இந்த நூற்றாண்டு விழா இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டி, உலக மக்களை விடுவிக்கும் கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்றும்.
– வினவு

சனி 05 2016

உலக வரலாற்றில் பாட்டாளி வர்க்க ஆசான்.

Pravin Kumar

காரல் மார்க்ஸ் வாழ்க்கை சுருக்கமாக இதனை வாட்சாட் குழுவிலிருந்து எடுத்துள்ளேன்; மிகவும் அற்புதமான வரலாற்று நிகழ்வு ஆகவே இங்கே பதிவிட்டுள்ளேன்



பிறப்பு: 1818 மே 5-


தந்தை: ஹெர்ஷல் மார்க்ஸ்.

தாய்: ஹென்ரிட்டா.

பிறந்த இடம்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் நடுவில் உள்ளது ரைன் நதிக்கரை. அந்த நதிக்கரையின் அருகில் உள்ள ட்ரையின் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதி – 664 இலக்கமிட்ட வீடு.

மதம்: யூத மதம்.

சொந்த நாடு: பிரெஞ்சு.

பிறந்து வளர்ந்தது: ஜெர்மன்.

உடன் பிறந்தவர்கள்: 8 பேர்.

தந்தையை பற்றி: சாதாரணமான வக்கீலாக இருந்து குடும்ப வறுமை காரணமாக ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மதம் மாறியவர்.

பள்ளி படிப்பு ஆரம்பித்த காலம்: 12 வயது.

பள்ளி படிப்பு முடித்த காலம்: 25-08-1835.

கல்லூரி வாழ்க்கைத் தொடக்கம்: பான் பல்கலைக்கழகம், வக்கில் படிப்பு(தந்தையின் விருப்பத்திற்காக)

கல்லூரி வாழ்க்கை: பான் நகரில் சமூக ஒழுக்கக்கேடாக கருதப்படும் குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, ஒரு கட்டத்தில் அந்தச் சங்கத்துக்கே தலைவராகவும் மாறினார்.

கல்லூரி இறுதி வாழ்க்கை: தனது ஒழுங்கீனமான வாழ்க்கைக்கு காரல் மார்க்ஸின் தந்தையால் முடிவு எழுதப்பட்டது.
காதல் வாழ்க்கை:

காதலியின் பெயர்: ஜென்னி வான் வெஸ்ட் ப்ளான்.

காதலியிடம் இரசித்தது: உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அது கூட தோற்றுப்போகும் அவளிடம்! ஓர் எரி மலையின் இதயத்தில் வாடாத மலராக…

காரல் மார்க்ஸின் தோற்றம்: காணச் சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி அவரது கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

ஜென்னியின் தோற்றம்: ரைன் லாந்தின் மிகச் சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானிய பெண்.

காதல் உருவாக்கம்: ஷேக்ஸ்பியரின் இரசிகரான இவர் அவரது கவிதைகள் அனைத்தையும் மனனம் செய்தவர். ஜென்னியின் தந்தை லுட்விக் மற்றும் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து பேசுவார்கள். ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பும். தன்னையும் மீறி மார்க்ஸினுலிருந்த கவிதாவேசம் பீறிட்டெழும். இதுவே ஜென்னி மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

ஜென்னி இரசித்த ஆணின் அழகு: அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் அழகு!!!

மார்க்ஸின் கூற்று: ஜென்னி எனும் ஒரு அசாதாரணமான பெண் தன் வாழ்வில் வர வேண்டுமென்றால், தானும் தனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்க வேண்டும் எனும் எண்ணம். இதுவே அவர் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்கான மூல காரணம்.

இரண்டாவது கல்லூரி வாழ்க்கை:

ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் படிக்க ஆரம்பித்தார். அந்த பல்கலைக் கழகத்தில் “ஆய்வு மாணவர்கள்” என்ற ஒரு சங்கம் நிறுவி காரசாரமாக வரலாறு மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதித்தார். முதல் நாள் சங்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மறுநாள் அவரின் பதிலால் எதிரிகள் வாயடைத்து நின்றனர். தொடர்ந்து அவருக்குள் பெரும் அறிவுத் தீ, படித்து களைத்து உறங்காத விழிகள், வாராப்படாத கேசம், தாடியை நீவி விட்டுக் கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது, பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது போன்றவை பல்கலைக்கழகமே அவரைப்பற்றி பேச வைத்தது. தொடர்ந்த படிப்பின் ஆர்வம் காரணமாக ஜென்னியைப் பற்றியே மறக்க வைத்தது.

ஜென்னியின் காதல்:

“என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல” மற்றும் “நீ அவனை மறந்து விடு” போன்று மார்க்ஸின் பெற்றோர் கூறிய வார்த்தைகள் அவளை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது. இந்த சூழ்நிலையில் அவருக்கு ஒரு காதல் கடிதம் மார்க்ஸிடம் இருந்து வந்தது. அதை அவள் தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள். கண்ணீர் ததும்பியதால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. அவள் கண்களில் இருந்து “மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுத்தன” . அவற்றிற்கு காரணமான வரிகள் “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….”

தொழில்:

பட்டப்படிப்பை முடித்து ரைன் கெஜட் என்ற பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்நது பத்தே மாதத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மார்க்ஸின் எழுத்துக்கள் ஜெர்மானியரின் மத்தியில் நம்பிக்கையின் வெளிச்சத்தை ஏற்றத் துவங்கின. பத்திரிக்கையின் வியாபாரமும் சடசடவென எகிற ஆரம்பித்தது.
திருமண வாழ்க்கை:

ஜென்னிக்கு 29 வயதாகி விட்டது. தனது இளமையின் பாதி வாழ்க்கையை தூய காதலின் பொருட்டும், அவரது கனவாம் உலக மக்களின் நன்மைகளின் பொருட்டம் தியாகம் செய்து இருந்தாள். அதன் முடிவாக 1843ம் ஆண்டு ஜீன் 19ம் நாள் காரல் மார்க்ஸ் ஜென்னி என்ற இரு இதயங்கள் இணைந்தன. அந்த திருமணம் எளிமையுடனும், அழகுடனும் நடந்தேறியது. அவர்கள் திருமணத்துடன் அவர்கள் அறியாமலேயே இன்னும் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1உலகின் தலைசிறந்த காதலுக்கான இலக்கண புத்தகம் மூடிவைக்கப்பட்டது.

 உலகின் தலைசிறந்த குடும்ப வாழ்க்கைக்கான புத்தகம் திறக்கப்பட்டது.

தொழில் புரட்சி: உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் என்பவன் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவனே! அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தொழிலாளர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும் என மார்க்ஸ் ஆணித்தரமாக கூறியதோடு இல்லாமல், அவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார். இதைப்பற்றி அவர் எழுதிய பத்திரிக்கையின் பெயர்தான் “முன்னேற்றம்”. இதன் காரணமாக “முன்னேற்றம்” பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. ஜெர்மன் அரசு மார்க்ஸை நாடு கடத்த உத்திரவிட்டது. அப்போது அவருக்கு “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. ஒரே ஒரு வார்த்தை… அந்த வார்த்தையை மட்டும் அவர் சொல்லிவிட்டால் போதும் அவர் எந்தத் தடையும் இல்லாமல் வாழலாம் அந்த ஒரு வார்த்தை… மன்னிப்பு”!!!

நாடு மாற்றம்: சீறிப்பாயும் ஏவுகணைக்குப் பின்னால் பாயும் நெருப்பைப் போல், மார்கஸின் பின்னிருந்து இயக்கிய சொல் புரட்சி. சில நாட்களிலேயே மார்க்ஸ் குடும்பத்துடன் பெல்ஜியம் வந்து குடியேறினார். “பெல்ஜியம் அரசு நடுங்க ஆரம்பித்து. --அந்.த இளைஞன் ஒருவனைப் பார்த்து ஒரு நாடே பயந்தன என்றால் இந்த இளைஞனின் எழுத்தும் சிந்தனையும் எத்தகைய வீரம் உடையதாக இருக்கும். “நீங்கள் பேனாவைத் தொடக்கூடாது மீறினால் சிறையில் தள்ளுவோம்” என எச்சரித்தது.

கம்யுனிஸ்ட்கள்::;: இந்த சூழ்நிலையில் ஒத்த கருத்துக்களை உடைய நெசவுத் தொழில் அதிபர் மகனான ஏங்கல்ஸ் மார்கஸ் உடன் சேர்ந்தார். இவர்கள் இருவரின் இணைவு “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதாலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது”. அதன் பெயர் தான் “பொதுவுடமைச் சங்கம்”. இதில் தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக் கொண்டனர்.

இதன் பிண்ணனியாக “லண்டன் மாநகரத்தில் பிரமாண்டமான நட்சத்திரமாக உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த முதல் கம்யூனிஸ்ட் சங்கம் உதயமானது”. அதைத் தொடர்ந்து ஐரோப்பா முழுக்க தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய கம்யுனிஸ்ட் அடுத்த வருடமே இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தங்களது புரட்ச்சிக்கர எண்ணங்களால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின இதயங்களில் மார்க்சும் ஏங்கல்சும் பிதாமகன்களாக உருவெடுத்தனர்.

இதன் விளைவாக, 1848ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று பாரீஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்னன் லூயி பிலிப் தப்பியோடினான். அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் நாட்டின் மன்னன் தன் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டான். அதே நேரத்தில் மார்க்சும் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜென்னியை அந்த நாட்டின் “தேக விற்பனை பெண்” கைதிகளுடன் அடைத்தனர். அந்த இரவு அவளுக்கு நரகமாக இருந்தது. 24மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு பல முறை பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி என்று நாடு கடத்தப்பட்டார். அப்போது அவர் கூறியது,

“எல்லா நாடும் என் நாடே!
எல்லா மக்களும் என் மக்கள்!!
நானோர் உலக மகன்

சோதனைக் காலம்: வாழ்க்கையில் சோதனைகள் வரும். ஆனால், சோதனைகளிலேயே வாழ்க்கை ஓடினால் என்ன ஆகும்? மார்க்ஸின் வரலாற்றுப் பாதையில் என்றேனும் ஒரு அடி… ஓரே ஒரு அடி… “சலிப்பின் காரணமாக ஜென்னி பின் வாங்கியிருந்தால் கூட உலக வரலாறே திசை மாறியிருக்கும்”.

இறுதியாக மார்க்ஸ் தனது புகலிடமாக இலண்டன் வந்தார். உலகின் பணக்கார நாடான இலண்டனில் அவர்க்கு பிரச்சனை வீ்ட்டுக்குள்ளயே முளைத்தது. பசி என்ற இரண்டு எழுத்து அவரது வீட்டினுள் நுழைந்தது. அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பசி என்றால் நன்கு அறியும் வயது. குழந்தைகளுக்கும், மார்கசுக்கும் பரிமாறி விட்டு பட்டினி கிடக்க ஆரம்பித்தாள் ஜென்னி. இதனால் ஜென்னியின் தனங்களில் பால் வற்றத் துவங்கியது. ஒரு காலக் கட்டத்தில் தனங்கள் சுருங்கி இரத்தம் கசிய ஆரம்பித்தது. அன்று இரவு மார்க்ஸின் வீட்டில் குழந்தை அழும் சத்தம் மட்டும் இல்லாமல் பிரபு குடும்பத்தில் பிறந்த ஜென்னியின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

இதற்கிடையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கொடுமைக்கார எஜமானியால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் ஜென்னியின் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் அபகரித்தனர். இந்த “பெருங்கொடுமை கொலை வெறியோடு அவர்களது மூன்று குழந்தைகளையும் தின்று தீர்த்தது”. இதை விட ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு மனிதருக்கும் நேர்ந்திராது. இந்த கொடுமையான சமயத்தில் ஜென்னி கூறிய வார்த்தை, என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை”.

தன் குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் துயருற்ற இந்தக் காலக்கட்டத்தில் தான் உலகத்தின் பொருளாதாரம்” பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வந்தார் மார்க்ஸ். 1867 செப்டம்பர் 14, உலகத் தொழிலாளர்களின் வாழ்வில் நிரந்தர விடிவெள்ளி முழுமையாக உதயமான நாள். மார்க்ஸ் எனும் இயந்திரத்தின் 15 ஆண்டுகளின் வியர்வை துளிகள் எழுத்துருக்களாகி காகிதங்களில் பிரசுரமாகி “மூலதனம்” எனும் புத்தகமாக வெளிவந்தது. வெளியான நாள் முதலே “மூலதனம்” உலகமெங்கும் பெரும் வரவேற்பைப்பெற்றது. இதைத் தொடர்நது மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் வெளியாயின. இன்றளவும் உலகின் தலைச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக “மூலதனம்” கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் ஜென்னி தன் தாயின் இறப்பு காரணமாக ஜெர்மன் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் மனைவியின் பிரிவை இவ்வாறு கூறினார்.

உன் பிரிவு எனக்குள் மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்து போவதை கண் கூடாகக் பார்க்கிறேன். ஒரே ஒரு முறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும் என் இதயம் அமைதியாகி விடும். அதன் பிறகு எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது.

மூலதனம் நூல்: உதாரணமாக நமக்கு ஒரு பென்சில் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாமே சுயமாக உற்பத்தி செய்ய நீண்ட நேரமும் கடும் உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த தொல்லையே இல்லாமல், ஒரு விலை கொடுத்து அந்தப் பென்சிலை கடையிலிருந்து நாம் வாங்கிக் கொள்கிறோம். உண்மையில் நாம் பென்சிலை வாங்கவில்லை. அந்த பென்சிலை தயாரிக்கத் தேவைப்படும் “நம் உழைப்புக்கு பதிலாக இன்னொருவருடைய உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். அவ்வளவு தான்!!!”. ஆனால் நாம் கொடுக்கும் இந்த விலை அந்தத் தொழிலாளிக்குச் சென்று சேர்கிறதா என்றால், இல்லை!!! பென்சில் தயாரிக்க மூலதனம் போட்ட காரணத்தால் பெரும் இலாபத்ததை அந்த முதலாளியும், பெரிய உழைப்பு இல்லாமல் அதை வாங்கி விற்கும் வியாபாரிகளுமே அதன் பலனை அனுபவிக்கினறனர்.

இது குறித்து எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அந்தத் தொழிலாளி அற்பப் பணம் கொடுத்துத் தன் உழைப்பைச் சுரண்டிக் கொடுக்கும் முதலாளியை கடவுளாக நினைத்து வணங்குகிறான். அதோடு மட்டும் இல்லாமல் குறிப்பிட்ட பென்சிலை பலரும் உற்பத்தி செய்து, வியாபாரத்தில் போட்டி ஏற்படுகிற போது அதைச் சரிகட்ட பென்சிலின் விலையைக் குறைக்கிறான் முதலாளி. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தொழிலாளியின் தோளில் அதிகப்படியான உழைப்பை சுமத்தி அவர்களை முழுவதுமாக நசுக்க அரம்பிக்கிறான். இதைத்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” எனும் நூலில் தெளிவுபடுத்தி தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்தார்.

பிடித்த விஷயம்: புகைப்பிடிப்பது, பால் கலக்காத கருப்பு காபி குடிப்பது மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி.

பிடிக்காத விஷயம்: பிச்சைப் போடுவது. “பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது எவ்வளவு மேலான விஷயம்”.

மனைவியின் இறப்பு: 1881ம் அண்டு, இரக்கமற்ற டிசம்பர் மாதத்தில், உலகத்துக் காதலையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்த ஜென்னி எனும் மலர் பூமியில் உதிர்ந்தது.

மார்க்ஸின் இறப்பு: 1883ம் ஆண்டு மார்ச் 14ம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு படுக்கை அறையிலிருந்து படிக்கும் அறைக்கு நடந்த சென்று தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது கைகளில் தந்தை, மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு கடைசி வார்த்தைகள் என எதுவும் சொல்லாமல் தனது 61வது வயதில் மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி பூரண அமைதிக்குள் ஆழ்ந்தார்.
யூதனாகப் பிறந்தார்!
மனிதனாக இறந்தார்!!!

காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்…………….”. உலக வரலாற்றில் இவருக்கு ஈடு இணை வேறொருவர் இல்லை..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...