பக்கங்கள்

வியாழன் 27 2018

நினைவலைகள்-39.

ஒரு கண்டத்துக்கே..........





நீளம் தாண்டுதல் வரலாறு க்கான பட முடிவு



ஒரு கண்டத்தை
தாண்டுவதற்கே முப்பத்தி
ஐந்து வருடங்களாகி
விட்டது இன்னும்
 எத்தனை கண்டத்தை
 தாண்ட வேண்டுமோ
ஒரு கண்டதுக்கே
இந்த பாடு
என்றால் இனி
அடுத்த கண்டத்தை
தாண்டுவதற்கு எப்படியும்
அறுபது அறுபது
நூற்றி இருபது
ஆகிவிடுமே..அதுவரைக்கும்
நான் இருப்பேனா...
இல்ல மற்றவர்கள்
தான் இருப்பார்களா?????????????

வெள்ளி 21 2018

நினைவலைகள்-38.

ஆகையால்.. நான் எட்டிப் பார்க்கவில்லை.....


breaking news க்கான பட முடிவு





புதிய காற்றழுத்தமும்
பழைய காற்றழுத்தமும்
ஒன்றாக சேர்ந்து....
அதாவது என்
எதிரிகளும் உறவுக்கார
துரோகிகளும் ஒன்றாக
சேர்ந்து குடியிறுக்கும்
வீடும் அதனுடன்
சேர்ந்த இடத்தையும்
அபகரிக்க என்
தந்தை காலத்திலிருந்து
எனது காலம்
வரை அவர்களின்
விடாப்பிடியாக முயற்சி
கிளைமேட்ச்க்கு வந்து
விட்டது. அவர்களுக்கு
ஆயிரம் கெட்டவர்கள்
துனை நின்ற
போதும் நானும்
தளராத மனதுடன்
போராடிக் கொண்டு
இருந்ததால் நாலு
நல்லவர்கள் எனக்கும்
உதவி புரிந்தார்கள்

அவர்களின் உதவியுடன்
தெரு எதிரிகளும்
உறவு துரோகிகளும்
சேர்ந்து உருவாக்கிய
புயல் சின்னம்
கரையை கடக்காமலே
எல்லையை கடந்து
சென்றுவிட்டது

ஒரு வாரமாக
கோர்ட்க்கும் வீட்டுக்கும்
அலைந்து கொண்டு
இருந்தேன்  ஆகையினால்

 நான் இந்தப்
பக்கம் எட்டிப்
பார்க்க முடிய வில்லை


புதன் 12 2018

நினைவலைகள்-37.

காலம் கடந்த மன்னிப்பு...

தொடர்புடைய படம்


அவருடன் எட்டாம் வகுப்பு வரை படித்த ரவி என்பவர் தன் ஒரே மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து கண்டிப்பாக தனது  மகள் திருமணத்திற்கு    வர வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அன்று கண்டிப்பாக  வருகிறேன் என்றவர்.  மறந்தே போய்விட்டார்.. திடிரென்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் புது உடை உடுத்தி அலங்காரம் செய்து கூட்டமாக சலசலவென்று பேசிக் கொண்டு அவர்களின் உறவுக்கார திருமணத்திற்கு சென்றதைப பார்த்ததும் அவரு,க்கு நண்பரின் மகள் திருமணம் நிணைவுக்கு வந்தது.

அவசரமாக  திருமண பத்திரிக்கையை தேடி பிடித்து  நேரத்தை பார்த்த போது  முகூர்த்த நேரம்  நெருங்கி கொண்டிருந்தது. செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தி ஒதுங்க வைத்துவிட்டு..தயராகிக் கொண்டு திருமண மண்டபத்தை  நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார் .

அரை மணி நேரத்துக்கு குறைவான பயணத்தில் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்ட மண்டபத்தை கண்டுபிடித்து வாகனத்தை நிறுத்திவிட்டு, தான் வாங்கி வந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தார்.

 மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் மணமக்களுக்கு பரிசு பொருள் வழங்கியும் அவர்களுடன் சேர்ந்தும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு இருந்ததை கண்டார். வரிசை அதிகமாக இருப்பதால் நண்பரை தேடினார். அவரின் கண்களுக்கு நண்பர் அகப்படவில்லை... நண்பரின் மனைவி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டு .அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு நண்பரை கேட்டார்..

நண்பரின் மனைவி, அவரின் வணக்கத்தை ஏற்று முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு , நண்பர் இருக்கும் பகுதியை கை நீட்டிக் காட்டினார். அந்தத் திசையை  பார்த்ததும் திடுக்கிட்டார். பின்னர் சமாளித்து நண்பரின் மனைவியிடம் விடைபெற்று  பெண்கள் சூழ மையத்தில் அமர்ந்து
சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டும் நண்பர்க்கு இடைஞ்சலாக நண்பர் போய் அருகில் நின்றதும்.  நண்பர் வந்திருந்த நண்பரின் பெயரைச் சொல்லி அழைத்து வரவேற்று... சூழ்ந்து நின்ற பெண்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.


“ ஏய்....சுப்பு...இது யாரு  தெரியுமில.....”

“சுப்பு என்ற பெண் தன் உதட்டை பிதுக்கி தனக்கு தெரியாது என்றார்.

“செம்பு...இவரு யாருன்னு பாரு....?”

”செம்பு என்ற பெண்மணி..“ நம்ம ஏரியாவுல அடிக்கடி பார்த்திருக்கேன் ” என்றார்
“ சுமதி   உனக்குமா தெரியல....”

” சுமதி என்பவர்  சற்று நெளிந்தார்... இப்படி அவரைச் சூழ்ந்திருந்த பெண்களிடம் வந்திருந்தவரை  காட்டி...யாருன்னு வினாவை எழுப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் நண்பரின் மனைவி தனியாக அமர்திருந்திருப்பதற்க்கான காரணம் விளங்கிவிட்டது. நண்பர் கட்டையனாகவும் குட்டையாகவும்... இருந்தார்  தேவையில்லாமல் வந்திருந்த நண்பருக்கு நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது என்ற சொல்வடை வந்து போனது..

நண்பரை சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு. இவர்களுடன் பேசிக் கொண்டு இரு... இந்தப் புத்தகத்தை மணமக்களிடம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மணமக்களிடம் வந்து  குறிப்பாக மணமகளிடம் அவரின் தந்தையின் பள்ளித்தோழன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு நேரம் இருக்கும்போது இந்த  புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள் என்ற அறிவுரையுடன் அன்பளிப்பாக வழங்கினார்.

தங்களைத் தெரியும் சார்,...அப்பாவை காண பல தடவை வீட்டிற்கு வந்ததை நினைவுப்படுத்தினார் மணமகள். மணமகனும் கண்டிப்பா படிக்கிறேன் சார்,    ஒளிப்படம் எடுப்பவரை தேடினார்கள்.  நண்பர் பரவாயில்லை என்று அவர்களை வாழ்த்திவிட்டு நண்பர்க்கு அருகில் வந்தார். இப்போது நண்பர்க்கு அருகில் அவரது மனைவியும் சில உறவுக்கார பெண்கள் மட்டுமே இருந்தனர்.

அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தபோது... நண்பரும் மனைவியும் சாப்பிட்டு வருமாறு வற்புறுத்தினார்  மெதுவாக சாப்பிடுவோம் என்று விட்டு சிறிது நேரம் ஓய்வாக அமர்திருந்தார்..

நண்பர்க்கு அருகில் ஒரு குண்டம்மா வந்தமர்ந்து..  வெற்றிலையை மடித்து வாயில் தள்ளியபடி.....என்ன.........கணேசா...நல்லாயிருக்கியா...?? என்று கேட்டது... தூக்கத்திலிருந்து விழித்தவர் போல... நல்லாயிருக்கேன் என்று பதில் சொல்லிவிட்டு யாரென்று தெரியாமல் நண்பர் ரவியை பார்த்து “ யாரென்று கண்களால் விசாரித்தார். நண்பர்  சொல்ல வாய் திறந்த போது குண்டம்மா ரவியை தடுத்து...நீ ஒன்னும் சொல்லத ரவி அவனா கண்டுபிடிக்கட்டும் என்றார். ரவி சிரித்தபடியே வாயை பொத்திக் கொண்டார்.

தன்னுடன் படித்தவராகத்தான் இருக்கும் இவ்வளவு உரிமையா  ”டா” பேசுவதிலிருந்து தெரிந்து கொண்டார்... யோசிக்கத் தொடங்கினார்...யோசனை வந்தபாடில்லை.... என்ன செய்வது என்று அந்த குண்டம்மாவை பார்த்தபடியே இருந்தார்.     சிறிது அவகாசத்துக்கு பிறகு அந்தக் குண்டம்மா.. ஒருவரை அழைத்து இவன்(ர்) என் வீட்டுக்காரர்  இவனைப் பார்த்தாவது  நான்..இவன் யாரென்று தெரிகிறதா என்று கேட்டார்.. மௌனமாக  தெரியவில்லை என்று தலையை ஆட்டினார்

அந்தக் குண்டம்மாவுக்கு கோபம் பொத்துகிட்டு வந்தது.. “அட..மக்கு கணேசா... இவன் கொடுத்த லவ் லெட்டரை என்னிடம்  கொடுத்து, நான் நீ கொடுத்ததாக நிணைத்து டீச்சரிடம் செமையா அடி வாங்க வைத்ததுகூட மறந்து போச்சாடா என்றபோது.....

சட்ரென்று நினைவுக்கு வந்தது. நண்பர்க்கு     ஆ......ஆ.....நீய்யா.....???.






திங்கள் 10 2018

நினைவலைகள்-36.

படித்தவர்களும்- படிக்காதவர்களும்.....


ஆர்ட் படம் க்கான பட முடிவு

படித்தால் அறிவு வளரும் என்றார்கள்.
அப்படி படித்தவர்களில் பெரும்பாலானவர்கள்
மூடநம்பிக்கைகள் நிறைந்த சுயநலக்காரர்களாகவும்
உலக நிலையை அறியும் சக்தியற்றவர்களாவும்
நாய் நரி, கழுதைகளிலும் கீழனாவர்களாக
நடந்து கொண்டு இருக்கிறார்கள்..............


அன்று படிக்காதவர்களை விட
இன்று படித்தவர்கள் நாயாகவும்
கழுதையாகவும் இல்லாமல் மலம்
தின்னும் பன்றியாகவும் புழுத்த
நாய் மலத்திலும் கேவலமாய்
நடந்து கொண்டு இருக்கிறார்கள்

ஞாயிறு 09 2018

நினைவலைகள்-35.

 திட்டும்  பின்அறிவுரையும்.




யாரைப் பற்றியும் பொருட்படுத்தாமல் அவர். அவனை திட்டிக் கொண்டு இருந்தார். சமாதனம் செய்யப்  போகிற வரையும் திட்டி தீர்ப்பதோடு சில கேள்வியோடு உத்தரவாதம் கேட்ப்பதால்  ..அவர் திட்டும்போது யாரும் ஊடே போவதில்லை.. அவராக பார்த்து எதாவது கேட்டால் என்னவென்று எதுவும் புரியாமல்  அவருக்கு சார்பாக தலையை ஆட்டிவிட்டு ஒதுங்கி கொண்டனர்.

இது வழமையாக நடந்து கொண்டிருக்கும்போல....அன்று நடந்த திட்டில் நான் மாட்டிக் கொண்டேன்..அவர் கேட்ட எல்லாவற்றுக்கும் சளைக்காமல் பதில் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டவர். அவர் தன் மகனை அன்றிலிருந்து தன் மகனை திட்டுவதையே விட்டு விட்டார்.

என்னைப்பற்றி விசாரித்தவர்...நான் என்னைப் பற்றி உள்ளதை சொன்னதைக் கேட்டு வியப்பால் ஆச்சரியமானார்.. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா...? என்று நம்ப முடியாமல் வியந்தார். என்னைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்தாரோ அல்லது நான் சொல்லியது உண்மைதான் என்று நம்பிக் கொண்டாரா..என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால்  ...திட்டுவதை குறைத்துக் கொண்டு..நிறுத்தியே விட்டார் என்றே எனக்கு தோன்றியது... நான் அந்தப் பக்கம் செல்லும் போது அவரின் குரல் கேட்பேதில்லை என்பதிலிருந்து அறிந்து கொண்டேன். நேரில் பார்க்கும்போது என் நலன் பற்றி விசாரிப்பார். தேநீர் அருந்தும் பழக்கம் இல்லை. கடையில் சாப்பிடும் பழக்கம் இல்லையென்று சொல்லி மறுத்துவிடுவதால் அவருக்கு சிறிது வருத்தம்.

அவர். அவர் மகனை திட்டுவிட்டு அறிவுரை சொல்வதை கேட்ட நான்.. அதிலிருந்து நானும் சில வற்றை தெரிந்து கொண்டேன்..

சிக்கனத்திற்கும் கஞ்சனத்திற்கும் உள்ள வித்தியாசம் என்றால்

 தேவைகள் அதிகமா இருந்தாலும் சிறிதளவு உண்பது சிக்னம். அதையும் உண்ணாமல் இருப்பது கஞ்சத் தனம் ( கிடைக்காமல் அல்லல்படுவது வேறு)

ஒரு வேலையை முன்னிட்டு செல்லாமல்.. கூடவே  போகிற வழியில் ஆகிற சில வேலையை முன்னிட்டு செல்வது..-- இது மாதிரியாக சில ..

தும்பை விட்டுட்டு வாலை பிடிப்போம் என்ற எண்ணத்தில் வாலையும் பிடிக்க முடியாமல் விட்டகதையாக..எந்த பிடிமானமும் இல்லாமல் இருக்கும்  எனக்கு சற்று  ஆறுதலை தந்தது...

சுற்றி இருப்பவர்களாலும்  உறவுக்காரர்களாலும்  எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும்  பொருள் சேதத்தையும் சற்று குறைக்கும் வழியாக  அவர் அறிவுரை தெரிந்தது.




யாரிடமும் எவரிடமும் யோசனை கேட்பதில்லை...இதுவரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை.  அப்படியே சில நேரங்களில், சில சம்பவங்களில் , மன உளச்சலில் இருக்கும்போது தெரிந்தவரிடமோ. அல்லது வேறு யாரிடமோ, இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால் “ அடே அப்பா..உனக்கு தெரியாத யோசனையா  ” என்று என்னை திருப்பி கேட்பார்கள்..


உண்மையில் என் வாழ்நாளில் இன்றுவரை எவ்வளோ இம்சைகளையும் துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்தபோதும் நான் இன்று வரையில் அழுதது இல்லை. என் தாய் இறந்தபோதும் சரி என் நண்பர்கள் இறந்த போதும்சரி, போலீஸ்காரன்கள் என்னை சரமரியாக அடித்து வெளுத்த போதும் சரி அழுததில்லை. என் கண்ணில் ஒரு சொட்டு கண்ணிர் வந்ததில்லை.. அதற்கு பதிலாக என்னவோ  இரு சக்கர வாகனத்தில்  மூப்பதை கடந்து நாற்பது வேகத்தில் செல்லும்போது என் கண்களிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. யாருக்கும் பயன்படாமல்.........

உண்மையில் “ எல்லாம் தெரிந்தவனுமில்லை.. எதுவுமே தெரியாவனுமில்லை” என்ற சொல்லாடல்தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று நிணைக்கிறேன்.   வருடம் அறுபதை நெறுங்கும் என்னை பார்ப்பவர்கள் பொறாமைதான் படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பதாக... தலையும் மீசையும் தாடி முடியெல்லாம் நரைத்து இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்களோ அல்லது அவர்களின் கண்களுக்கு தெரியவதில்லையோ..? தற்போது   விபத்தொன்றில் நான்  செவிடானாக போனது  உள்பட...

சிலர் வயது ஆக ஆக..எல்லாம் வரும் என்று பய கொள்ள வைக்க முயலுகிறார்கள். நானும் பயந்தவன்தான் ஆனால் சாவதற்கு பயப்படவில்லை.. எப்போதோ தொலைந்திருக்க வேண்டியவன். எப்போதும் தொலையாதிருக்க முடியுமா...??








வெள்ளி 07 2018

நினைவலைகள்-34.

மதம் எதற்கு ஏற்றது அல்ல....
மதம் க்கான பட முடிவு




அந்த மதம்
பகுத்து அறிவதற்கு
ஏற்றது அல்ல..

இந்த மதம்
சுய மரியாதைக்கு
ஏற்றது அல்ல..

கட்டுக் கதைகள்
நிறைந்த மதம்
கல்வி அறிவிக்கு
ஏற்றது அல்ல..

மொத்தத்தில் எல்லா
மதமும் சிந்திக்க
வைக்கவோ மனிதர்கள்
விடுதலை பெறுவதற்கே்கோ
ஏற்றவை அல்ல..

வியாழன் 06 2018

நினைவலைகள்-33.

நீ..கருப்பு சட்டை............


தொடர்புடைய படம்







நட்ட சென்டர்
ராத்திரி  சாதரண
செல்போன்  ஒளியில்
அவசரத்துக்கு  ரோட்டின்
ஓரமாக நிற்கும்
 மரத்துக்கு அருகில்
 அமர்ந்து ராம்சேட்
சொக்கலால் பீடியை
பற்ற வைத்து
ஒரு சுண்டு
இழுத்து விட்டு
நிம்மதியாய் வாய்
மூக்கு  வழியாய்
புகை விட்ட
போது மரத்திலிருந்து
ஒரு குரல்..........

“அண்ணே எனக்கு
ஒரு பீடி
கொடுங்கன்ணே” என்று 
சுற்றும் முற்றும்
பார்த்தவர் வாயில்
புகைத்த பீடியை
புகைக்க மறந்து
விட்டு ஒரே
ஓட்டமாக வீடு
வந்து சேர்ந்தார்.

மறுநாள் காலை
அவரின் அனுபவத்தை
மற்றவரிடம் சொன்ன
போது  கேட்டவர்
அந்த மரத்துல
ஒருத்தன் தூக்கு
போட்டு செத்திருக்கான்
அண்ணே   அவன்தான்
அண்ணே போரவுங்க
வாரவுங்கிட்ட எல்லாம்
பீடி கேட்டு
நச்சரிக்கிறான் அண்ணே
என்ற  போது

கேட்டுக் கொண்டு
இருந்த இன்னொருவர்
நான் வேன்னா
ஒரு கட்டு
பீடி வாங்கித்
தருட்டுமா என
கேட்ட போது..

நீ கருப்பு
சட்டை உனக்கு
எடக்கு மடக்குதான்
வாயில வரும்
 போப்பேய்.. அங்கிட்டு.........




புதன் 05 2018

நினைவலைகள்-32..

கன்னத்தை வீங்க வைத்தவன்...!!!


சேர் ஆட்டோ க்கான பட முடிவு



மேடும் பள்ளமும்
இல்லா வழு
வழுப்பான ரோட்டிலே
வேகமாய் வந்து
என் கன்னத்தை
இடித்துவிட்டு சிக்னலில்
நின்று இருந்த
எனக்கு முன்னால்
வந்து நின்றான்
சேர் ஆட்டோகாரன்

நான் சத்தமிடுவதற்கு
முன்னால் அவன்
 என்னை சத்தமிட்டான்
வீட்டில் சொல்லிவிட்டு
வந்தாயா என்று...

இதைதான் காலக்
கொடுமை என்பார்களோ..??

செவ்வாய் 04 2018

நினைவலைகள்-31.

தூக்கமில்லா இரவு..!!!


9985 ஆப்செட் பிரிண்டிங் மிஷின் க்கான பட முடிவு





அந்தோ பரிதாபம்
எட்டுமணி நேர
வேல நேரம்
போயி எட்டுமணி
நேர தூக்கம்
போயி எட்டு
மணி நேர
பொது வாழ்வு
சிந்தனையும் போயி

பெரும்பாலும் எனக்கு
தூக்கமில்லா இரவுதான்
வாங்கி இருந்த
அவசர வேலையை
முடிக்க விடிய
விடிய முழிப்பு...
பொழப்பு அப்படி
இருக்குதுங்க .அய்யா...........

திங்கள் 03 2018

நினைவலைகள்-30.

 பூமியைப்போல நிலவு...!!!!!!!

நிலவு க்கான பட முடிவு




நேற்று இரவு
நிலவை பார்த்தேன்
அழுக்காய் தெரிந்தது

பூமியில் வாழும்
மனிதர்களின் மனங்களின்
அழுக்கை போல...

ஞாயிறு 02 2018

நினைவலைகள்-29.

உங்களுக்கு தெரியுமா...???


மீனாட்சி கோயில் கருவறை க்கான பட முடிவு



அந்தக் கோயில்
இல்லை இந்தக்
கோயில் எந்தக்
கோயிலாக இருந்தாலும்


பிராமணர் பூசாரியாக
இருக்கும் கோயில்

அந்தக் கோயிலின்
கருவரைக்குள்  பெருச்சாளிகள்
 வேண்டமானால் போகலாமே
ஒழிய பிராமணர்
அல்லாத பூசாரிகள்
ஓதுவதற்கு பயிற்சி
எடுத்தாலும் உள்ளே
போக  முடியாது
என்பது தெரியுமா....?????


நினைவலைகள்-28.

அந்தக் குரங்கு தலித்தாக இருக்க கிஞ்சித்தும் வாய்ப்பே இல்லை..
Lord hanuman singing bhajans AS.jpg
அந்தக்கால குரங்கு
அனுமான் குரங்கு க்கான பட முடிவு
இந்தக்கால குரங்கு







அழகர் மலையில்
இருந்து தப்பி
வந்த குற்றலாத்து
குரங்கு அல்ல..

அந்த குரங்கு
கடலையே தாண்டிய
குரங்கு இது
மட்டுமா.. ஒரு
மலையையே பெயர்த்து
எடுத்த குரங்கு

ஒருத்தியை சிறை
எடுத்து சென்றவரின்
நாட்டையே தீ
வைத்து கொளுத்திய
அந்தக் குரங்கு

அந்தக் குரங்கு
எப்படி தலித்திய
குரங்காக இருக்க
 முடியும் நிச்சயமாக
இருக்க முடியாது

 யோகி ஆதித்யா
தெர்மால் கோல்
அஞ்ஞானியாக மாறலாம்
ஒழிய   ராமர்
பாலம் கட்டிய
குரங்கு தலித்
குரங்காக மாற
வாய்ப்பே இல்லை

உண்மையில் அது
தலித் குரங்காக
இருந்தால் சாதிவெறி
ஆண்டைகளும் காவி
மத வெறியர்களும்
இப்படி பொய்யையும்
 புளுகு மூட்டையையும்
அவிழ்த்து விட்டு
ஆணவக் கொலைகளும்
 பல செய்துவிட்டு
பவனி வர
முடியுமா...இந்த
இரண்டு கால்
 குரங்குகளால்.................

 ஆகவே..அந்தக்கால
இந்தக் கால
தடயங்களை வைத்து
பார்த்தால் காவி
வெறியர்களின் வானரக்
கூட்டம் தலித்தாக
இருக்க வாய்ப்பே
இல்லை இல்லை.

வியாழன் 29 2018

நினைவலைகள்-27.





கதை கேளு..கதைகேளு..நாட்டு நடப்பு கதைகேளு....





ஜனநாயகம் க்கான பட முடிவு







உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிக்கு சென்றபோது.. இடைவேளைக்கு பின்புதான் வழக்கு விசாரனைக்கு வரும் என்று வக்கீல் அய்யா சொன்னதைக்கேட்டு... உட்காருவதற்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார் அவர்.

அவரக்கு அருகில் வந்தமர்ந்த இருவர் . இருவரில் ஒருவர் பேசுவதை மற்றவர் ஆர்வமுடன்  கேட்டுக் கொண்டு  இருந்தார்..  அவர்கள் இருவரையும் பார்வையால் ஒரு முறை பார்த்துவிட்டு..தன் பையில் கொண்டுவந்திருந்த ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியவர்.

சிறிது நேரத்தில் வாசிப்பில் மனம் செல்லாமல்  அருகில் அமர்ந்திருந்தவர் சொல்லிய கதையில் கவனம் சென்றது.. அவர்களை பார்த்தும் பார்க்காததுமாக..இடையில். கதையை கேட்கத் தொடங்கினார்..

2014-ல் ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அன்று அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்தி பாருங்கள் என்றவர் தொடர்ந்து அவரே கதையைத் தொடர்ந்தார்.

“ஊழற்றவர்”  “ உறுதியானவர்” விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள். என்ன உடுத்துகிறார்கள். என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்.” என்றெல்லாம்  அனைத்து முதலாளிகளின்  ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட ஏழைத்தாயின் மகனான மோடியின் பிம்பம் காற்று போன பலூனாக மாறி வருகிறது என்று விட்டு அதன் காரணங்களை வரிசையாக பட்டியலிட்டார்.

சி.பி.ஐ.இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள் நோக்கத்தடனும் தன்னை பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” ஏழைத்தாயின் மகன் அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

“ ரிசர்வ் வங்கி யின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போல் பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் ” என்று ஏழைத்தாயின் மகன் அரசை எச்சரிக்கிறார். ரிசர்வ் வங்கியின் தணை ஆளுநர் விரால் ஆச்சார்யா,

“வராக் கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநர்க்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா..... இது போன்ற ஜனநாயகத்தால் தேசத்துக்கு ஆபத்து என்றபோது

 கேட்டுக் கொண்டே வந்தபோது.. கோடாங்கி ஆடிய அவருடைய  தலை ஒரு கனம் ஆட்டத்தை நிறுத்தியது  அடுத்து கதையின் தொடர்ச்சியை  கேட்க ஆவலாக இருந்த போது இடைவேளைக்கு பின் விசாரணை தொடர்வதற்க்கு அறிவிப்பாக மணி ஒலித்தது....

கதை சொன்னவரும் கதை கேட்டவர்களும் பாரபரப்பாக அவ்விடத்தை விட்டு எழுந்தனர்.....



செவ்வாய் 27 2018

நினைவலைகள்-26.

பெண்- விடுதலையை பற்றி சித்திர புத்திரன் சொன்னது.....
சித்திரபுத்திரன் க்கான பட முடிவு




“கற்பு” என்கிற வார்த்தையும், “விபச்சார தோசம்” என்கிற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகிறதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருசர்கள் முழு விடுதலை பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும்,விபச்சாரதோசம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதனாலயே முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்

ஆதலால், பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் , ஆண்கள் போல் நடக்க வேண்டும். மற்றபடி புல் என்றால் புருசன், கல் என்றால் கனவன் என்றோ.. ஆண்கள் தங்கப் பாத்திரம், அதை யார் தொட்டாலும் கழுவ வேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும். என்றும் பெண்கள் மண் பாத்திரம்  வேறு யார் தொட்டாலும் தீட்டு போகாது. அதை உடைத்து  குப்பை தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கிற முறை இருக்கின்ற வரை.... பெண்களுக்கு விடுதலையோ- சுதந்திரமோ கிடையாது.

எனவே, பெண்கள் தங்களை மண் சட்டி என்று எண்ணாமல் தங்களை தங்கப் பாத்திரம் என்று எண்ணிக் கொள்ளவேண்டும்.


என்றோ..படித்தது. பிறன் மனை உறவு குற்றமில்லை என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது... பார்வையாளர்களில் ஒருவர் சொன்னது...

ஞாயிறு 25 2018

நினைவலைகள்-25.

என்னை செத்துப்போ என்றவன்.........!!!!!!!!!!


ஆள் நடமாட்டம் க்கான பட முடிவு




வாரத்தில் மூன்று
நாள் அல்லது
நான்கு நாள்
அந்த வழியே
சென்று வந்தேன்.

எந்த பிரச்சினையும்
இல்லை இன்று
அவ் வழியே
சென்ற போது
நாலு ஐந்துபேர்
வழி மறித்தார்கள்
ஆட்கள் நடமாடிக்
 கொண்ட போது
கடைகள் திறந்து
இருந்த போதும்...

பேண்ட் பையில
பணம் இல்லை
செல்லை தவிர
மறித்தவர்கள் ஒரு
புன்னகையுடன் கை
நீட்டி பின்னால்
 பார்க்கச் சொன்னார்கள்

இரு சக்கர
வாகனத்தின் சைடு
ஸ்டாண்டை போட்டு
நிதனமாக திரும்பி
பார்த்தேன் ஒரு
தடியான ஆள்
கையை ஆட்டி
தன்னருகில் வருமாறு
சைகை செய்தார்

அவர் அருகில்
சென்று நின்றேன்
என் பெயர்
 சொல்லி நல்லா
இருக்கிறாயா என
நலம் விசாரித்தார்

இவர் யாரென்று
தெரியவில்லை ஒரே
குழப்பம்  என்னை
மேலும் கீழும்
பார்த்துவிட்டு ஊதாம
வத்தாம அப்படியே
இ்ருக்கே.. எத்தன
பிள்ள இருக்கு

பிள்ள இல்ல
என்றதும் கல்யாணம்
ஆகி எத்தன
வருசம் ஆச்சு
என்னது கலியாணம்
ஆகலியா  டேய்
என்னவிட மூத்தவன்டா
நிய்யி.... கலியாணம்
முடிக்காம இத்தன
வருசம் என்னடா
செய்து கிட்டு
இருந்த அடப்பாவி.

சின்ன வீடு
பெரிய வீடு
குடி கூத்தி
அதுவும் இல்லயா....
எதுக்குடா இருக்க
செத்துப் போடா

சரி என்ன
யாருன்னு தெரியுதா..
தெரியலையா..நாசமா
போச்சு...நல்லா
என்னப் பாத்து
சொல்லு  யோசன
பன்னி சொல்லுடா..

சுற்றி நின்றவர்கள்
ஹா ஹா வென்று
சிரித்து விட்டு
என்னையே பார்த்தார்கள்
எனக்கு ஒரு
க்ளுவும் கிடைக்கவில்லை





வெள்ளி 23 2018

நினைவலைகள்.24.

பிறன் மனை உறவு குற்றமில்லை...என்ற தீர்ப்பு .......


என்னடா இவிங்க இப்படி தீர்ப்பு சொல்றாங்கே என்று கடுப்பாகினா் செய்தி தாளை படித்தவர்கள்... அவர்களின் நோக்கம் என்ன வென்று எனக்கு தெரியாது ஆனால் நான் குடியிறுக்கும் தெருவின் நாட்டாமையின் மன்மதலீலைகளை சொல்லி மாளாது  எந்தவொரு உறவுமுறையின்றி உறவு கொண்டு தீர்த்தான்.

அவனின் லீலைகளை கண்டு அவனின் மனைவி தற்கொலை செய்து கொண்டது.  அந்த சுதந்திர புருசனுக்கு ரெம்பவும் வசதியாகப் பட்டது. மின்சார வாரியத்தில் வேலை செய்த திமிரும் தெருவின் நாட்டாமை. மற்றும் தெருக்கோயிலின் பூசாரி என்ற கெட்டப்பிலும். தன் லீலைகளை தொடர்ந்து வந்தான். தன் லீலைகளில் பங்கெடுத்த பெண்களை அவன் ஏமாற்றவில்லை காசு பணத்தோடு..நல்ல பல துணிமணிகளை எடுத்துக் கொடுத்து தன் வயப்படுத்தியிருந்தான்....  அதனால் அந்தப் பெண்கள் தன் கணவனைவிட அவன் மேல் நன்கு விசுமாசமாகவும் அவன் இட்ட வேலையையும் செய்யவும் சித்தமாகியிருந்தார்கள்..

அந்த நாட்டாமைக்கும் எனக்கும் இடப் பிரச்சினைபோது....  அவனுக்காக என்னுடன் சண்டைக்கும்  என் மீது பொய்ப்புகார் கொடுக்கவும் செய்தார்கள் இது நான் கண்ட அனுபவம். அந்தப் பெண்களின் புருசமார்களும் தங்கள் மனைவியின் செயல் தவறாக தெரிந்திருந்தாலும் அவர்களுக்காக எனக்கு எதிராக வந்து நின்றார்கள்.

தங்கள் மனைவிமார் அடுத்தவருடன் கள்ளஉறவு கொள்வதையோ.,. தங்கள் புருசமார்கள் அடுத்தவன் மனைவிமார்களுடன் கள்ள ஒறவு கொள்வதையோ..கண்டு கொள்வதுமில்லை.. அது குற்றம் என்று கருதியதுமில்லை....... இது விபச்சாரத்தைவிட பாதுகாப்பாக  ஒளிவு மறைவு இன்றி பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது...

சில படித்த. சொத்துள்ள சில புல்லுருவி புருசமார்கள்தான் தங்களுக்கு மட்டும்தான் கள்ளஉறவு பாத்தியமானது...  தங்களின் மனைவிமார்களுக்கோ...தாங்கள் வைத்துள்ள வைப்பாட்டி மார்களுக்கோ அடுத்தவருடன் கள்ள உறவில் ஈடு பட  அனுமதியில்லை. என்றும் அவர்களால் தங்கள் குடும்பம் சீரழிந்து விடும் என்று கதைவிடுகிறார்கள்.

இந்த நிலையில் நிலவும் சமூகத்தில் கற்பு, கத்திரிக்கா...புடலங்கா எல்லாம் உச்சா மன்ற அறிவித்த  தீா்ப்பினால் கள்ள உறவு குற்றமில்லை என்பது  கள்ள உறவு கொள்வோர்க்கு சிறந்த தீர்ப்பாகவும்... மற்றவர்களுக்கு  மோசமானதாக சமூகத்தை சீரழிப்பதாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்... என்னவோ சமூகம் நல்ல நிலையில் இருப்பதாக இவர்கள் பீத்திக் கொள்கிறார்கள்.

என் வழக்கின் தீர்ப்பே தமிழில் வழங்காமல் ஆங்கிலத்தில் வழங்கியதால் அந்த தீர்ப்பால்  எனக்கு தலையும் தெரியவில்லை .வாலும் புரியவில்லை. இந்த நிலையில்  “ பிறர் மனை கள்ள உறவு குற்றமில்லை” என்ற தீர்ப்பு மற்றும் எனக்கு புரிந்து விடுமா..என்ன? அந்த தீர்ப்பின் சாரம் பற்றி? அந்த தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று அறிய... மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வருகிற ஞாயிற்றுக் கிழமை ஒரு அரங்கக் கூட்டம் நடத்துகிறது. எனக்கும் கள்ள உறவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற போதிலும்.... என் தெரு நாட்டாமையின் மன்மதலீலைகளை தெரிந்து கொள்வதற்காகவாது நான் கலந்தாய்வில் கட்டாயம் கலந்து கொள்வேன்.



படம்

புதன் 21 2018

நினைவலைகள்-23.

வில் வென்ற வீரத்தை  ஒரு புல் பறிமுதல் செய்த  கதை,..





அது என்ன வில்லை வென்ற புல்லுவின் கதை என்று  தலைப்பை படித்ததுமே எனக்கு சற்று சந்தேகம் எழுந்தது. இது  செத்துப் போன நடிகர் சுருளி ராசன் சொன்ன வில்லை எடுத்தவன் வில்லன் என்று  ராமனை சொன்ன கதையாக இருக்குமோ என்று?.பிறகு முழுவதையும் படித்த போதுதான் புரிந்தது.  அந்த வில்லன் அல்ல.. இது

வில்லால் அம்பு எய்வதில்  வீரனான சேர  தமிழ் மன்னன் என்பவன். . கனக விசயன் என்ற ஒரு அரசனை வென்று.. அவன் தலையில் கல்லெடுத்து வந்த மாவீரன் சேரன் செங்குட்வன் என்பவனை பற்றிய சோகக்கதை என்று ..அது என்ன  சோகக் கதை..


 இமயத்தையே வென்ற வீரம் ஒரு வேதியனின் காலடியில் வீழ்ந்து விட்டது.
வேதியன் யார் என்றுதான்  உங்களுக்கு தெரியுமே..... கடவுளுக்கும் கடவுள்

இதைத்தான் “வில் வென்ற வீரத்தை  ஒரு புல் பறிமுதல் செய்த கதையானது






திங்கள் 19 2018

நினைவலைகள்-22.

உலகம்... உருண்டை............


உலகம் உருண்டை க்கான பட முடிவு


உலகம் உருண்டை என்று பள்ளியில் படிக்கும்போது அறிவியல் வாத்தியார் . ஒரு படத்தை காட்டி சொன்னபோது..உலகம் இப்படித்தான் இருக்கும் என்று அப்போது தெரிந்து கொண்டது... பின்  அந்த அவ்ளோ உலக உருண்டையானது. இணையத்தால்   ஒரு கிராமமாக ஆனது என்று சொன்னார்கள்..வல்லுநார்கள்

அப்பேர்ப்பட்ட உலகம்  கிராமமாக  மாறின ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்களை காலை எட்டு மணிமுதல்  மாலை ஆறு மணிவரை நைட்டி என்ற உடை உடுத்தக் கூடாது என்று தடை  விதிக்கப்பட்டது. அந்தத் தடையை அமுல் படுத்தும் விதமாக  மாலை ஆறு மணி முதல் காலை எட்டு மணி வரை பெண்கள் நைட்டி அணிந்து கொள்ளலாம் என்று விதி முறை சற்று தளர்த்தப்பட்டது. ஆனால் தளர்த்தப்பட்ட விதியிலும் ஒரு விதி அமுல்படுத்தப்பட்டது.

அதாவது மாலை ஆறுமணி முதல் காலை எட்டு மணிவரை நைட்டி  அணிந்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி மீறி வந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும்..சட்டத்தை மதிக்கமால் தடை செய்யப்பட்ட நேரத்திலும் நைட்டி அணிந்தாலும் ரூபாய் இரண்டாயிரம் அபதாரம் விதிக்கப்படும்.

விதிமீறி நைட்டியுடன் வெளியே வரும் பெண்களைப் பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும். 

இப்படிபட்ட சட்ட விதிமுறைகளை விதித்தது யாரென்று  பார்த்தால்  உலக உருண்டைக்குள் உள்ள அந்தக் கிராமத்தின் மகளிர் சுய உதவிக் குழு என்று தெரிந்தது.

 இதே உலக உருண்டைக்குள் இருக்கும்  அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற ஒரு தீர்ப்பை மதித்து செல்லும் பெண்களை..அங்குள்ள காட்டுமிராண்டிகள் வழிவிட மறித்து  நிற்கிறார்கள்...

எப்படி எப்படியெல்லாம்  ஒரு கூட்டம் அடக்குது ஒடுக்குது..

குழந்தைகளின் உற்பத்தி பீடமான பெண்கள் காட்சிப் பொருளாகவும், கட்டிலறைப் போகப் பொருளாகவும்.. சமையல்காரிகளாகவும் இருக்குவரை இப்படியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்  உலக உருண்டைக்குள் வந்து கொண்டே இருக்கும்.....


சனி 17 2018

நினைவலைகள்-21.

ஏன்? தமிழ் மீது கோபப்பட்டார்  பெரியார்...




தமிழ்மொழியை சாடிய பெரியார் க்கான பட முடிவு








பார்ப்பனிய சமஸ்கிருத  ஆதிக்கத்தின்  கீழ் தமிழ்மொழி அடிபணிந்து தாழ்ந்து கிடந்த நிலையில்  சமஸ்கிருத பண்டிதர்கள் தமிழை நீச பாசை என்று திட்டினார்கள்.இதைக் கேட்டுக் கொண்டு  இருந்ததோடு இல்லாமல்.. கோயில் கருவரைக்குள் சமஸ்கிருதம் இருக்க... வாசல் ஓரத்தில்  “ இங்கே செருப்புகளை விடவும்” என்ற கேவலமான நிலையில்  புலவன் என்றும்  வித்து துவான் என்றும் பெயர் சூட்டிக் கொண்ட தமிழ் அறிஞர்கள்  சும்மா இருந்த காரணத்ததால்தான் ் தமிழ் மொழி சாதி காக்கும் மொழி, காட்டுமிராண்டிகளின் மொழி  என்று சாடினார் பெரியார்---

  சில விழுதுகள்.. பெரியார் அன்று சொன்னதை..இன்று அதைப்பிடித்துக் கொண்டு  தொங்கோ தொங்கு என்று தொங்குகின்றனர்..

தாய் மொழியில் பற்று இல்லாமல் இருக்கும்வரை..தமிழர்களின் தமிழ்மொழி முன்னேற்றமடையாது..


வெள்ளி 16 2018

நினைவலைகள்-20.

சாதியத்தை தூக்கி பிடித்த   ஈலக்கியங்கள்........



மகாபாரதம் க்கான பட முடிவு






இலக்கியம் என்ற பெயரில் சாதியத்தை தூக்கிப்பிடித்தவைகள் இவைகள்..

இராமாயணம். மகாபாரதம். பெரியபுராணம், தேவாரம், திருவாசகம்,

சமணர்களையும், பௌத்தர்களையும் அன்றே கொடூரமாக தாக்கியவர் சம்பந்தர். அவர் பாடியதுதான் தேவராம்

பிராமணியத்தை எதிர்த்து எழுந்தவைதான் மணிமேகலை, திருக்குறள். நீலகேசி...இவற்றை புகழ்ந்து பேசுவோர் இன்று யாருமில்லை..

புதன் 14 2018

நினைவலைகள்-19.

  தமிழ் மக்களை ஏமாற்றி விட்ட கம்பன்....


கம்பன் க்கான பட முடிவு



முன்னோரு காலத்தில் பசுமலை மேல் நிலைப்பள்ளியில் படித்த போது   தமிழ் பாட நேரத்தில் தமிழ் ஆசிரியர் சொன்னார்... கம்பனின் கவிதைகளில் அய்ம்பதை படித்தால் அவர்கள் ஒரு கவிஞானக ஆகலாம் என்று.

வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் கவிஞனாக ஆகும் ஆசையில் கம்பனின் கவிதையை மனப்பாடம் செய்து கொண்டு இருந்தனர்..அப்போதே அவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் கவிஞர் என்ற பட்டத்தை போட்டுக் கொண்டனர்.  நான் படிக்காமல் இருப்பதை கண்டு பலர் தமிழ் ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்தனர்

 தமிழ் ஆசிரியர் என்னை இரண்டு மொழி பேசுபவன் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு என்னிடம் கேட்டார். உன் தாய் மொழி என்ன என்று தமிழ்தான் என் தாய் மொழி அதில் கூட நான் தேறவில்லை அய்யா என்றபோது நம்ப மறுத்து  ஏன்? கம்பன் கவிதை  உனக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டார்...

பிடிக்கவில்லை என்பதைவிட  கம்பன் கவிதை பாடப்புத்தகத்தில் நாலுவரி, ஐந்து வரியாக இருப்பதால் படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. அய்யா..திருக்குறளை எடுத்துக் கொள்ளுங்கள் ரெண்டே வரி..படிப்பதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது அய்யா.. என்றபோது.. என்னை மேலும் கீழுமாக பார்த்தவர்... சரி..உட்கார் என்றார்.. அதிலிருந்து அவர் வகுப்புக்கு வாந்தால் என்னைத்தான் தமிழ் புத்தக்தை வாசிக்கச் சொல்வார்.. நானும் பிழையில்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்தி அழகாக வாசித்துவிடுவேன்.. இடையிடையே அர்த்தங்களையும் கம்ப ராமாயண கதைகளையும் அவிழ்த்து விடுவார்... தமிழ் பாட வகுப்பு முடியும்வரை.. நானும் தமிழ் அய்யாவும் நின்று கொண்டே  இருப்போம்... பின்னாளில் அது எனக்கு தண்டனை தந்ததாக நினைத்துக் கொண்டேன்...


பிறகு பத்தாவதில் ஆங்கிலத்தில் பெயிலாகி அய்ந்து வருடம் படித்தபோதுதான் கம்பன் என்னை மட்டுமல்ல தமிழ் மக்களை ஏமாற்றியது எனக்கு தெரிந்தது.

திருவள்ளுவருடைய கொள்கைகளையும் அவரின் பாட்டின் அருமையையும், திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்கு (அதாவது சமஸ்கிருதர்களின்)   பலியான கம்பனால்..இந்நாட்டில் நிலவிய திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுவிட்டது.

ஆரியப் பண்புகளையும் ஆரிய நடைமுறைகளையும் போற்றி புகழ்ந்து.. அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுத் தமிழில்பாடி தமிழ் மக்களை ஏமாற்றி விட்டான் கம்பன்..

 தமிழ் மக்கள் அனைவரும் ஒரே சாதி என்கிறது குறள். மக்கள் நாலு வர்ன சாதிகள் என்று சொல்கிறது இராமாயணம் (கீதையும்)

அன்று இயற்கையோடு இயைந்திருக்கக்கூடிய கருத்துக்களை கூறியது வள்ளுவரின் குறள்.. ஆனால். 

இராமாயணமும் (கீதையும்) அறிவுக்கு மாறான பல கட்டுக் கதைகளை காட்டுமிரண்டித்தனமான, நடந்திருக்க முடியாத. நடத்திக் காட்ட முடியாத சாத்தியமற்ற தாறுமறான கதைகளை கூறுகிறது.. நான் படிக்கும் காலத்தில் தமிழ் அய்யா கூறிய கதைகள் இன்றும் என் நினைவுக்கு வருகின்றன.

ஆரியக் கடவுள்கள் எல்லாம் ஒழக்கம் கெட்டவைகள்... பிறர் மனைவி மீது ஆசைப்படுவதும், பின் வஞ்சகமாக அனுபவிப்பதுதான் கடவுளின்  நடவடிக்கைகள். ஆரியக் கடவுள்கள் எல்லாம் முறைகெட்டவைகள்,

கடைசியாக எனக்கு தோன்றியது இதுதான்.

உண்மைத் திராவிடன் தீட்டியது திருக்குறள்
திராவிடத்துரோகி தீட்டியது இராமாயணம்...

அன்று தமிழ் அய்யா என்னை மேலும் கீழும் பார்த்தது... அவர் வரும் எல்லா வகுப்பு  நாட்களிலும் என்னை வாசிக்க சொல்லி என்ற போர்வையில் நிற்க வைத்தது எல்லாம் என் நினைவுக்கு  இப்போது வந்து ஆட்டம் போடுகிறது .

ஞாயிறு 11 2018

நினைவலைகள்-18.

இரு  பார்வைகள்....


மச்சவதாரம் க்கான பட முடிவு








மீன் வியாபாரி
மாரியம்மாள் என்
வீட்டிற்கு வந்தார்
மீன் வாங்கச்
சொல்லி நான்
உத்தரவு விட
வேண்டினார் காசு
இல்லை என்ற
போது பிறகு
தாருங்கள் என்றார்

அய்யோ கடவுளின்
மச்ச அவதாரம்
சாப்பிட்டால் சாமி
குத்தம் ஆகிவிடாத
என்ற போது..

ஒன்றும் ஆகி
விடாது. சாட்சி
தானே என்றார்


பின் ஒரு
நினைவு வந்தது
மீனை வெள்ளக்காரனும்
 தமிழனும் பார்த்த
பார்வை  என்ன....



கடலிலே மீனைப்
பார்த்த வெள்ளைக்காரன்
சப்மரீன் செய்தான்

அதே கடலில்
மீனைப் பார்த்த
தமிழன் மச்சவதாரம்
என்று வணங்கினான்


----கலைஞரின் சந்தனக் கின்னத்திலிருந்து மாற்றி

வெள்ளி 09 2018

நினைவலைகள்-17.

சொன்னவரையே கடவுளாக்கிய   உத்தமர்கள்.......


மகா புத்தர் க்கான பட முடிவு




மக்களை கோவில்களும்
 புராணங்களுமே அறியாமையிலும்
அடிமைதனத்திலும் ஆழ்த்துகின்றன
என்று முதன் முதலில்
 சொன்னவர் அவரையே
கடவுளாக்கி வழிபடுகின்றனர்..
மூட நம்பிக்கையாளர்கள்...

வியாழன் 08 2018

நினைவலைகள்-16.

கருப்பு சட்டைக்கும் ஒரு காரணம்--




கருப்பு சட்டை க்கான பட முடிவு










என்னது தீபாவளி
அதுவுமா..கருப்பு
 சட்டை ய போட்டுருக்க.

என்னாது இதுதான்
தீபாவளி சட்டையா...
யோவ் கருப்பு
சட்டைய போட்டா
என்ன காரணமுன்னு
தெரியுமா? தெரியாதா.

நீ ...விசித்திரமாகத்தான்
இருக்கே..யா..தீபாவளிய
புறக்கணிக்கிறதுக்கு தீபாவளி
அன்னிக்கு புதுசா
கருப்பு சட்டை
எடுத்து போட்டு
கிட்டு தீபாவளிய
புறக்கணியுங்கள் என்று
சொல்லாம சொல்ற
பாத்தியா.....விவரம்ய்யா..

என்னது பழைய
சட்டையா அட
பாக்கிறதுக்கு புதுசு
மாதிரியே இருக்கு.

சரி..உன்
கருப்பு சட்டய
பாத்து தீபாவளிய
கொண்டாடத
வுங்க யாரு
இருக்கா..எங்க
ஒரு நாயக்
காட்டு பாப்போம்..

என்னாது.... நாயி
வேட்டு போட்டத
நான் காண்பிக்கவா
நான் எப்படியா
காட்டுறது..யோவ்
கருப்பு சட்டை

..

செவ்வாய் 06 2018

நினைவலைகள்-15.

 நேரம் ஒதுக்கீடும்...!!!!!!!!!! பூ சுற்றும் வேலையும்

தீபாவாளிக்கு வேட்டு போடும் நேரம் காலை  ஆறு மணி முதல் ஏழு மணி வரையும் பின் மாலை ஏழு முதல் எட்டு மணிவரை நேரம் நிரண்யித்து இருப்பதை  நான் படித்த போது  அம்பேத்கர்  பேசிய பேச்சில்  நடந்த சம்பவம்தான் (படித்தது)  மறதி என்ற பாகுபாடு இல்லாமல்  என் நினைவுக்கு வந்தது.


ஸ்டெர்லைட்டால் காற்று மாசு க்கான பட முடிவு





பேஷ்வாக்கரின் ஆட்சியில், அவர்களின் தலைநகரம் பூனா( புனெ) அந்த நகருக்குள் பகல் ஒன்பது மணிக்கு முன்பும், பிற்பகல் மூன்று மணிக்கு பின்பும் தீண்டப்படாதவர்கள்  நுழையக்கூடாது.

இதற்கு காரணம் என்னவென்றால் காலை ஒன்பது முன்பும் மாலை மூன்று மணிக்கு பின்பும்  தீண்டப்படாதவர்களின் உருவ நிழல் நீளமாக இருக்குமாம்
அந்த நிழல் பார்ப்பனர் மீது பட்டால் அவர்கள் தீட்டாகி விடுவார்களாம்

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறமே நஞ்சாகி. பலவித.. கொடிய நோய்களால் பதிக்கப்பட்டு குற்றுயிறும் கொலயிறுமாக செத்து கொண்டிருப்பவர்களை காக்க  ஸடெர்லைட் ஆலையை இழுத்து மூடு என்று அமைதியாக போராடியவர்களை துப்பாக்கி குண்டுகளால் 14 பேரை சகாடித்து விட்டு  இப்போ அதை திறக்க முயற்சி செய்துகிட்டு இருப்பதை மறைத்துவிட்டு... வேட்டு போடுவதால் காற்று மாசு படுவதாக சொல்லி இரண்டு மணி நேரம் ஒதுக்கினால் மட்டும் காற்று மாசு அடையாமல் நின்று விடுவது போல்  நல்லாவே காதில் பூ சுற்றுகிறார்கள்......

நினைவலைகள்-14.

அவர்கள் என்ன சொல்வது.....
இவர்கள் என்ன கேட்பது..........

வெடி கட்டுப்பாடு க்கான பட முடிவு



உச்ச நீதிமன்றம் சொன்னது
இரண்டு மணி நேரம்
மட்டும்தான் வெடி வெடிக்க
வேண்டும் என்று..........

மாநில ஆட்சியாளர்களும் அதை
வழி மொழிந்தார்கள் காலை
ஆறு டூ ஏழு மாலை
ஏழு டூ எட்டு என்று

சட்டத்தின் காவலர்களும் உறுதி
செய்து  எச்சரிக்கை செய்தார்கள்.
குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பிறகு
 வெடி வெடித்தால் ஆறு
மாதம் சிறை மற்றும்
அபதாரம் அல்லது இரண்டு
சேர்ந்தும் விதிக்கப்படும் என்று
பய முறுத்தினார்கள் .அவர்கள்

யாரும் அவர்களின் எச்சரிக்கைக்கோ
அல்லது பய முறுத்தலுக்கோ
பயந்தவர்களாக தெரியவில்லை நீ
என்ன சொல்வது நான்
என்ன கேட்பது நாளைக்கு
தானே வெடிக்க நேரம்
குறித்தாய் நாங்கள இன்றே
வெடி வெடித்து ஒரு
பயலையும் தூங்க விடாமல்
புலம்பச் செய்து விடுகிறோம்
என்று பறை சாற்றுகிறார்கள்.






ஞாயிறு 04 2018

நினைவலைகள்-13.

 நான் நாத்திகனான கதை............

நான் நாத்திகன் ஏன் க்கான பட முடிவு




பல வேலைகளுக்கு சென்றேன் நான். எந்த வேலைகளிலும் நிலைத்து நிற்க முடியவில்லை அதற்கு காரணம் பல அதில் சில இவை..

வேலை முடிந்தவுடன் கூலி கிடைக்காதது வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் இன்னால்கள். கடைசியாக எனக்கிருக்கும் அறிவுக்கு கேற்றபடி எந்த வேலை கிடைக்கும் யோசித்தபோது...

அச்சாபிசில் பசை தடவுவதற்கும், டீ வாங்கி வரும் உதவியாளராகவும், டெலிவரி பாய் என்ற வேலைக்குத்தான் நான் லாயக்கு என்ற எனது எண்ணப்படி கடைசியாக அச்சாபிசு வேலைக்கு சேர்ந்தேன்.

சில வருடங்களாக உதவியாளர், டெலிவரி பாய் பதவியில் இருந்தபோதிலும். கிடைக்கும் நேரங்களில் கம்பாசிடராக, பைண்டராக...  பிரிண்டிங் மிஷின் ஓட்டுனராக கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்துக் கொண்டேன்.

அந்த அச்சாபிசில் வேலையின் போதுதான் பெரியாரின் சிந்தனையை அறியாமலே வாழ்நிலை நிகழ்வின் மூலம் நான் நாத்திகனானேன். அதில் குறிப்பிடும்படியாக சில...

பொதுவாக அச்சாபிசில் பேப்பர்கள் இருக்கும். அதோடு அந்த அச்சாபிசில் எலித் தொல்லைகள் இருக்கும். கம்போஸ் செய்ய  எழுத்துக்கள் போட்டு வைப்பது மரத்தால் செய்யப்பட்ட பல குழிகள் அடங்கி இருக்கும்

நான் வேலை செய்த மூன்று பிரஸ்களில்...  ஒன்றைத் தவிர மற்ற பிரஸ்களில் தெய்வங்கள் என்று சொல்லக்கூடிய அடையாளங்கள்  சுவர்களில் மாட்டப் பட்டு இருந்தாலும் , சிறிய பூ மாலை மட்டுமே மாட்டப்பட்டு இருக்கும் அதுவும்
செவ்வாய் வெள்ளி நாட்களில் மட்டும்தான்..  சூடம் கொளுத்துவதோ.. வாசனை பத்தி சொறுகி வைப்பதோ சுத்தமாக கிடையாது..

ஏனென்றால்..இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ-க்கு என்ன வேலை என்ற கணக்கு போலவே... பேப்பர். மரப்பலகை.. அட்டை இருக்கும் இடங்களில்  சூடம். வாசனை பத்தி. எலுமிச்சை. தேங்காய், வாழைப்பழம் எதுவும் வைத்து வழிபடுவது இல்லை.. கடவுள் அடையாள படத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டுக் கொள்வதுதான்.



நான் வேலை செய்த இடங்களில்  கடவுள் தொழுகை , வழிபாடு மாதிரியான செய்கைகள் பழக்கங்கள்  இல்லாததால்.. என் வீட்டிலும் கடவுள் அடையாளப் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததும் பெரியாரின் சிந்தனைக்கு முன்பே நான் கடவுள் மறுப்பு காரனாக இருக்க வழி பிறந்தது.   அதற்கு பின்னர்தான்  கடவுள் மறுப்பு கொள்கை உடைய என் பாஸ் -ன்(முதலாளி) நடவடிக்கைகளை கண்டும் வரட்டு தனமான இல்லாமல் அறிவியல் பூர்வமான கடவுள் மறுப்பு காரனாக மாறினேன்.


அதன் மூலம்தான். அன்று முதல் இன்று வரை..(இனிமேலும்)... மத மற்றும் மூடநம்பிக்கைகள் நிறைந்த விழாக்களை கொண்டாடுவதில்லை.. அவைகளை ஊக்கப்படுத்துவில்லை...  அத்தகைய விழாக்களோடு சமரசமும் செய்து கொளவதில்லை.














ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...